காசிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 602 4172 88 24 4284 2605

விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2


1. பிரிசொற்கள்


பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக,
மலைமகள் என்ற சொல் உமையைக் குறிக்கும். ஆனால் மலைமகள் என்பதில் மலை, மகள் என்பன தனித்தனிச் சொற்கள். இதனை ஒரு சொல்லாகக் கொண்டால் மலை, மகள் ஆகிய சொற்களின் எண்ணிக்கையில் இது சேராது. எனவே இது மலை_மகள் என்று கொள்லப்படும். இப்போது இது மலை_மகள் என்று ஒரு சொல்லாகவும், மலை, மகள் ஆகிய சொற்களின் எண்ணிக்கையிலும் சேர்க்கப்படும்.
இதற்குரிய பிரிசொற்கள் மலை, மகள் ஆகிய இரண்டும். எனவே மலை_மகள் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் மலை, மகள், மலை_மகள் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

மகள் (3)
மலை_மகள் முலைகள் திளைத்தனை – காசி:2 1/38
பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/3

மலை (7)
மலை_மகள் முலைகள் திளைத்தனை – காசி:2 1/38
மலை பக எறிந்த மழ இளம் குழவியை – காசி:2 1/63
மலை_மகட்கு பாகம் வழங்குவது ஏன் அம்மானை – காசி:7 33/4
மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/2
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3

மலை_மகள் (1)
மலை_மகள் முலைகள் திளைத்தனை – காசி:2 1/38

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

திசை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், திசை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (4)
குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
உரு பாதியில் படைத்து ஓர் பாதியில் துடைத்து ஊழி-தொறும்
விருப்பு ஆர் உயிர்களின் மேல் வைத்து தாம் செயும் வேலை கண்டே – காசி:4 8/3,4
நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
திசை-தொறும் தெறித்த திரள் மணி குலங்கள் – காசி:18 100/8

திசை-தொறும் (2)
நான்றன திசை-தொறும் நறு நிழல் கதலி – காசி:15 57/27
திசை-தொறும் தெறித்த திரள் மணி குலங்கள் – காசி:18 100/8

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால்,
அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

ஒன்று (19)
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
வாழிய கேள்-மதி மாற்றம் ஒன்று யானும் – காசி:15 57/5
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து – காசி:15 61/1
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
வில் ஒன்று கொண்டு அவிமுத்தத்திலே நின்ற விண்ணவனே – காசி:15 68/4
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:1