கம்பராமாயணத்தில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

கம்பராமாயணம் – சொற்கள் – அகர வரிசையில் – எண்ணிக்கையுடன்
கம்பராமாயணம் – சொற்கள் – எண்களின் இறங்கு வரிசையில்
கம்பராமாயணம் – சொல்வள வளர்ச்சி வீதம் – Relative Growth of Vocabulary
கம்பராமாயணம் – சொற்கள் – ABC Analysis
கம்பராமாயணம் – சொற்கள் – ABC Analysis – உக்குரிய முழுப்பட்டியல்

கம்பராமாயணம் – சொற்கள் – எண்ணிக்கை

எண் காண்டம் பாடல்கள் அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்சொற்கள் தனிச்சொற்கள்
1. பால 1236 4944 29707 683 362 30752 11236
2. அயோ 1186 4744 27348 643 338 28329 10836
3. ஆரண் 1188 4752 27841 416 439 28696 11444
4. கிட்கி 1026 4104 24240 460 390 25090 10056
5. சுந். 1258 5032 30632 566 467 31665 11966
6.1. யுத்1 956 3824 22603 408 313 23324
6.2. யுத்2 1280 5120 31476 324 491 32291
6.3. யுத்3 1226 4904 30288 382 580 31250
6.4. யுத்4 702 2808 16431 263 346 17040
6. யுத் 4164 16656 100798 1377 1730 103905 26166
  மொத்தம் 10058 40232 240566 4145 3726 248437 46578

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, வால்_அறிவன், மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன
கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, தே மொழி மகளிர் என்ற தொடரில்
தே, மொழி ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக்
கொள்ளப்படும். தேமொழி கூறினாள் என்றவிடத்தில் இங்கு தேமொழி என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது.
எனவே இச் சொல் தே_மொழி எனக்கொள்ளப்படுகிறது. இங்கு தே, மொழி, தே_மொழி ஆகிய மூன்று சொற்களாக
இது கணக்கிடப்படும். தே_மொழி என்பது தனிச் சொல்லாகவும், தே, மொழி ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும்.
எனவே தே_மொழி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தே, மொழி, தே_மொழி என்ற மூன்று சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின்
போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும்,
ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும்,
-தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும்.
நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் காண்டத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காண்டத்தில்
அச் சொல் இடம்பெறும் படலத்தின் எண் கொடுக்கப்படும். அடுத்து அப் படலத்தில் அச் சொல் இடம்பெறும் பாடலின் எண் கொடுக்கப்படும்.
அதற்கடுத்த / என்ற கோட்டை அடுத்து அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.
இந்தத் தொடரடைவுக்கான கம்பராமாயணப் பாடல்கள் எஸ்.ராஜம் அவர்களால் வெளியிடப்பட்ட கம்பராமாயணம் (இராமாவதாரம்)
(Murray and Company, Chennai) நூல்களினின்றும் தெரிவுசெய்யப்பட்டவை. எனவே, காண்டம், படலம், பாடல் ஆகியவற்றின்
எண்கள் அப் பதிப்பில் உள்ளவாறு குறிக்கப்பட்டுள்ளன. படலங்களின் பெயர்கள் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல்,
ஒரு பாடலின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

பூட்கை (9)
புளைந்த பாய் பரி புரண்டன புகர் முக பூட்கை
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/3,4
புக்கன கடல்-இடை நெடும் கர பூட்கை – சுந்:8 39/4
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/4
புரவி இட்ட தேர் பூட்டின பருமித்த பூட்கை – சுந்:9 8/4
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – சுந்:10 8/1
புரவி மேல் பூட்கை வீழ்ந்த பூட்கை மேல் பொலன் தேர் வீழ்ந்த – யுத்2:15 151/2
புரவி மேல் பூட்கை வீழ்ந்த பூட்கை மேல் பொலன் தேர் வீழ்ந்த – யுத்2:15 151/2
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – யுத்2:18 92/2
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/4

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

நாயகன் (119)
———————————————————————-
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – யுத்1:14 21/1
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – யுத்1:14 21/1
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
————————————————————————-