9. பாடல் 58 – இடிக்கும் கேளிர்

கை இல் ஊமன் ஊருக்கு வெளியிலுள்ள கோயில் மரத்தடியில் வழக்கமாகக் கூடும் இளவட்டங்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களின் தலைவன் மட்டும் இன்னும் வரவில்லை. அவனைத் தவிர எல்லாரும் வந்த பின்னர் பேச்சு அவனைப் பற்றித் தொடங்கியது. “ஏன்டா, அவன இன்னுங் காணோம்” “வருவான்டா, ஆனா அவன ரொம்ப நாளாவே தெருப்பக்கங்கூடப் பாக்கமுடியல. என்னன்னு தெரியல. டே நீ போயி அவன் வீட்ல பாத்துட்டு வர்ரயா?” என்று அவர்களுக்குள் வயதிற் சிறிய ஒருவனை ஏவிவிட்டார்கள். அவனும் தலைவனின் வீட்டுக்குப் போனான். அங்கே அவன் அம்மா இருந்தாள். “வாப்பா, வந்து அவனப் பாரு. எப்படியாவது அவன இழுத்துட்டு வெளிய கூட்டிட்டுப் போப்பா” என்று புலம்பினாள் தலைவனின் அம்மா. பார்த்தவன் திடுக்கிட்டான். முகம் தொங்கிப்போயிருந்தது. ஆடைகள் கசங்கிப்போய் அழுக்கேறி இருந்தன. முடலை யாக்கை என்று அவர்கள் தட்டித் தட்டிப்…

Read More

8. பாடல் 54 – யானே ஈண்டையேனே

மீனெறி தூண்டில் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழைந்தபோது வீட்டில் வேறு யாருமே இல்லை. முல்லை மட்டும் நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். “ஏன்டீ, வீட்ல வேற யாரயுங் காணோம்?” என்று கேட்டாள் பொன்னி. “அப்பா வெளியில போயிருக்காரு. அம்மாவும் முத்தம்மாவும் மூணாவது வீட்ல முனியம்மா பிள்ள பெத்திருக்கா’ல்ல அதப் பாக்கப் போயிருக்காங்க” முல்லையின் அருகில் சென்று அமர்ந்தாள் பொன்னி. “அப்புறம் நீ எப்படி இருக்க?” என்று பொன்னி கேட்டாள். “நான் எங்கடி இங்க இருக்கேன்? என் ஒடம்புதான் இங்க இருக்கு. என் உசுரு, சிந்தன, நன்மை, தீமை எல்லாமே அவருகிட்டப் போயிருச்சுடீ. இது எத்தன நாளக்கிடீ. ஒண்ணு, மொறப்படி பொண்ணுகேட்டு வரணும். இல்லன்’னா வாடீ பாத்துக்கறென்’னு சொல்லணும்.” “ஆனா அண்ணந்தான் பிடிகொடுக்கமாட்டேங்குறாரே” “என்ன பண்ணுறது? நேத்து அப்பா ஏதோ தூரத்துச் சொந்தத்துல ஒரு மாப்பிள்ள இருக்கு’ன்னு…

Read More

7. பாடல் 49 – அணில் பல் அன்ன

நின் நெஞ்சு நேர்பவள் முல்லையின் வீட்டுக்குள் பொன்னி நுழையும்போது மாலையில் விளக்குவைக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. கொஞ்சம் உதிரிப்பூவைத் தன் முன் கொட்டி, பூக்கட்டிக்கொண்டிருந்தாள் முல்லை. அவசரம் அவசரமாக முல்லையின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடையின் ஓர் ஓரத்துக்குச் சென்றாள் பொன்னி. “அண்ணன் வீட்டுல இல்லயே?” என்று கேட்டு முல்லையின் கணவன் வீட்டில் இல்லாததை உறுதிசெய்துகொண்டாள். “என்னடி ஆச்சு ஒனக்கு? இந்தப் படபடப்பு?” என்றாள் முல்லை. “எனக்கு ஒண்ணும் ஆகலிடீ, நாம கவனமா இல்ல’ன்னா தலையே முழுகிடும்போல இருக்கு” “புதிர் போடாம வந்த விசயத்தச் சீக்கிரம் சொல்லுடி, விளக்கேத்தணும்” என்றாள் முல்லை. தன் தொண்டையச் சிறிதளவு செறுமிக்கொண்ட பொன்னி, சற்றுத் தணிந்த குரலில் பேசலானாள். “இன்னிக்கு அண்ணங்கூட அந்தப் பாணன் பேசிக்கிட்டு இருந்ததப் பாத்தேன்.” “இதச் சொல்லவா இத்தன அவசரமா வந்த?” “சொல்றதக் கேளுடீ, அந்தப் பாணன் பொல்லாதவன்.…

Read More

6. பாடல் 41 – காதலர் உழையராக

அணிலாடும் முன்றில் அகம் நிறைந்த பூரிப்புடன் முல்லையின் வீட்டுக்குள் நுழைந்த பொன்னி, முல்லையின் பொலிவிழந்த முகத்தைக் கண்டதும் கலங்கிப்போனாள். “என்னடி, இப்படியிருக்க, பொழுது சாயுற நேரத்தில, வீடு மங்கலமா இருக்கவேண்டிய நேரத்தில, ஒரு விளக்கு ஏத்தாம எதையோ வெறிச்சுப்பாத்துக்கிட்டு ஒக்காந்திருக்க” என்று முல்லையைக் கண்டித்தவாறு, மாடக்குழியில் இருக்கும் விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, திரியை நசுக்கிவிட்டு, அடுப்பில் இருந்த கங்கொன்றை ஊதி ஊதி அதில் பற்றவைத்து விளக்கில் வைத்தாள். “வெளியூருக்குப் போன அண்ணங்கிட்ட இருந்து சேதி ஏதும் வந்துச்சா?” என்று வினவியவாறு முல்லையின் அருகில் அமர்ந்தாள் பொன்னி. “ஒண்ணும் இல்லடீ, நடுத்தெரு சாத்தன் அண்ணன்கூட அங்க போயி இருந்துட்டு நேத்து வந்தாரு. ‘வீட்டுக்காரரு ஏதாச்சும் சொன்னாரா’ன்னு கேட்டேன். ஒண்ணும் சொல்லல’ம்மா. அவரு நல்லா’ருக்காரு. வேல முடிஞ்சதும் ஒரு நொடி தாமதிக்காம வந்திருவாரு’ம்மா’ன்னு சொன்னாரு” “அப்புறம் என்ன, அண்ணன் சீக்கிரம்…

Read More

5. பாடல் 40 – யாயும் ஞாயும்

செம்புலப்பெயல் நீர் ஆயிற்று; திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவேறி முடிந்தன. மணமகனின் வீடு பக்கத்தூரில்தான். எனவே வில்வண்டியில் மணமகள் முல்லையின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர். அங்கும் எல்லாப் பேச்சுகளும் முடிந்தபின்னர் பொழுதுசாயும் நேரத்தில் முல்லையின் பெற்றோர் தம் ஊருக்குப் புறப்பட்டனர். வில்வண்டி ஆயத்தமாக நின்றது. முல்லையின் நெற்றியில் கலைந்துகிடந்த கூந்தலைத் தூக்கிவிட்டு வருடியவாறு அவளையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் அவளது தாய். இருவரின் கண்களும் கலங்கின. சமாளித்துக்கொண்ட தாய், “வர்ரோம்’மா” என்று சொல்லியவாறு வண்டியருகே சென்றாள். தந்தையின் பெருமிதத்தோடு நின்றுகொண்டிருந்த முல்லையின் தந்தையும் சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்பட்டார். “வர்’ரோம் மதினி, பாத்துக்கங்க” “ஒண்ணுக்கும் கவலப்படாதீங்க, மதினி, முல்லை இனி எங்க பொண்ணு” என்று சிரித்தாள் முல்லையின் மாமியார். “என்ன மச்சான் இது” என்று முல்லையின் தந்தையின் தோளைத் தழுவினார் முல்லையின்…

Read More

4. பாடல் 27 – கன்றும் உண்ணாது

தீம்பால் மாலைநேரம். பொழுதுசாய இன்னும் சில நாழிகைகளே இருந்தன, இருப்பினும் வெயில் காலமாதலால் இன்னும் வெயில் சற்று ஓங்கி அடிக்கத்தான் செய்தது. வெளியில் சென்றிருந்த முல்லையின் அப்பா இன்னும் வீடு திரும்பவில்ல. முல்லை நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் ஒரு காலை நீட்டியும் ஒரு காலை மடக்கியும் வைத்து, உயர்த்தி மடக்கிய காலில் கைகள் இரண்டையும் சேர்த்து வைத்து அதன் மேல் தலையைச் சாய்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். அப்போது அங்கே அவளின் தாய் வந்தாள். “என்னம்மா முல்லை, பொழுது சாயுற நேரத்தில முகத்த-இகத்தக் கழுவி, தலையைச் சீவி, கொஞ்சம் பூவ வச்சுக்கிட்டு சிரிச்ச மொகமா அங்க இங்க நடமாடிக்கிட்டு இருந்தா என்ன? ஒரு கொமரிப் பொண்ணு இப்படியா ஒக்காந்திருப்பாக” என்று கொஞ்சம் கனிவாகவும் கொஞ்சம் கண்டிப்பாகவும் முல்லையின் தாய் கூறினாள்.“பூவெல்லாம் தீந்துபோச்சு, வீட்லயும் பூக்கல” “ஏன், பொன்னிய வரச்சொல்லி…

Read More

3. பாடல் 21 – வண்டுபடத் ததைந்த

புதுப் பூங்கொன்றை         முன்னுரை: பொருள்தேடிவரச் சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்புவேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். கார்காலம் வந்துவிட்டது. காட்டில் கொன்றை மரங்கள் நிறையப் பூக்க ஆரம்பித்துவிட்டன – ஆனால் தலைவன் வரவில்லை. எனவே, தலைவன் தன் வாக்குத் தவறிவிட்டான் என்று ஆகிவிடுமே என்பதற்காகத் தலைவி கார்காலமே தொடங்கவில்லை என்கிறாள். அதற்கு அவள் நான்கு காரணங்களைச் சொல்கிறாள். ஒரு காரணம் தன் தலைவன் பொய்யுரைக்கமாட்டான் என்பது. மற்ற மூன்று காரணங்களைப் பாடலுக்குள் நுண்மையாகப் பொதித்துவைத்திருக்கிறார் புலவர். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இப் பாடலில் அந்த மூன்று நுண்மைகளை நுழைத்து வைத்திருக்கும் புலவரின் பேரறிவு வியக்கத்தக்கது. பொழுது விடியும் நேரம். வழக்கமாக பொன்னி எழுந்து வீடு வாசல் பெருக்கி, வாசலில் சாணம் தெளிப்பாள். அன்றென்னவோ முல்லை வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டாள். எல்லாவேலைகளையும் முடித்ததுமல்லாமல் குளித்து வேறு உடையும் மாற்றிக்கொண்டாள்.…

Read More

2. பாடல் 18 – வேரல் வேலி

வேர்ப்பலா பொழுதுசாயும் நேரம். முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்றைக்கு அவளின் ‘அவர்’ வருகிற நாள். மாலையில் பூப்பறிக்கப் போகிற சாக்கில் ஊருக்கு வெளியே உள்ள நந்தவனத்தில் முல்லை அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு. முல்லை காலையிலேயே பொன்னிக்குச் சொல்லிவிட்டிருந்தாள் – மாலையில் வீட்டுக்கு வரும்படி. பொன்னி வரச் சற்றுத் தாமதமானதால்தான் முல்லைக்கு வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. குட்டிபோட்ட பூனைபோல் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டும் அடிக்கடி வாசலில் இறங்கி தெருக்கோடிவரை பார்த்துக்கொண்டுமிருந்தாள். வீட்டில் அவரவர் தத்தம் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபடியால் முல்லையின் தவிப்பை அவர்கள் கவனிக்கவில்லை. பொன்னி வந்துவிட்டாள். “ஏண்டீ இவ்வளவு நேரம்?” என்று தணிந்த குரலில் அவளைக் கடிந்தபடியே, வீட்டுக்குள் எட்டிப்பார்த்து, “அம்மா, பொன்னி வந்துட்டா, நானும் அவளும் நந்தவனம் வரைக்கும் போயிட்டு வந்துர்ரோம்” என்று உரக்கக் குரல்கொடுத்தாள் முல்லை. அவள் ஏற்கனவே தன் அம்மாவிடம் மாலையில் பொன்னியுடன் பூப்பறிக்க வெளியில் செல்வதாகச் சொல்லியிருந்தாள்.…

Read More

7. உணவு வகைகள்

சங்கத் தமிழர் ஒவ்வொருவிதமான உணவுக்கும் ஒவ்வொருவிதமான பெயர் வைத்திருந்தனர் என்பது வியப்புக்குரிய செய்தி. இப்பொழுதும் நாம் பொரியல், அவியல், வறுவல், துவையல், புழுங்கல், களி, சோறு என்று பலவிதமான உணவுவகைகளைக் கொண்டிருக்கிறோம். இதுபோன்றே பண்டைத் தமிழகத்தும் உணவுப் பொருள்களுக்குப் பல்வேறு சொற்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை அகர வரிசையில் இங்குக் காண்போம். 1. அடிசில் இன்றைக்கும் நாம் அக்காரவடிசில் என்ற ஒருவகை உணவுப் பொருளை அறிவோம். அதனைச் சிலர் கற்கண்டுச் சாதம் என்பர். அக்காரம் என்பது கற்கண்டு அல்லது கரும்புவெல்லத்தைக் குறிக்கும். இதனைச் சேர்த்து, நெய்யோடு மிகவும் குழைவாகச் செய்யப்பட்டதே அக்கார + அடிசில். சேர்க்கை விதியின்படி அக்காரவடிசில் ஆனது. இந்த அடிசில் ஒரு பழஞ்சொல் ஆகும். சங்க இலக்கியங்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் வெகுவாகக் கிடைக்கின்றன. அடிசில் என்பதற்குக் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு என்பது…

Read More