ய – முதல் சொற்கள்

யமன் (பெ) வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன், God of death யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை மதியம் மறைய வரு நாளில் – பரி 11/4-10 மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர, மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில் கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன்…

Read More

மௌ – முதல் சொற்கள்

மௌவல் (பெ) காட்டு மல்லிகை, wild jasmine, jasminum officinale மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3 மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும்.

Read More

மோ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மோ மோக்கல் மோகூர் மோசி மோசை மோடு மோதகம் மோரியர் மோரோடம் மோவாய் மோழைமை மோ (வி) முகர், மூக்கால் நுகர், smell நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8 அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்; ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த_காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே – அகம் 5/22-26 (தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை மோந்து…

Read More

மொ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மொக்குள் மொசி மொய் மொய்ம்பன் மொய்ம்பு மொழிபெயர் மொக்குள் (பெ) 1. உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, blister, pustule, boil . 2. நீர்க்குமிழி, bubble 3. மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம், the fruit of the plant called Bowstring hemp. 1 வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் பரல் பகை உழந்த நோயொடு சிவணி மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் பொரு 42-45 ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)- சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால் பரல் கல்லாகிய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி, மரல் பழுத்தாற்…

Read More

மை – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மை மைந்தர் மைந்தன் மைந்து மைப்பு மைம்மீன் மையல் மையாடல் மையாப்பது மை (பெ) 1. அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள், a black pigment applied on the edges of eyelashes by women 2. எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், ink 3. கருமை நிறம், black colour 4. குற்றம், களங்கம், fault,defect, stain, blot 5. ஆடு, goat, sheep 6. எருமை, buffalo 7. கருமேகம், dark clouds 8. இருள், darkness 1 ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9 மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய…

Read More

மே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மே மேஎம் மேஎய் மேக்கு மேகலை மேதி மேதை மேந்தோன்று மேம் மேம்படு மேம்பாடு மேய் மேய மேயல் மேரு மேல்வரு(தல்) மேலோர் மேவரு(தல்) மேவல் மேவன மேவார் மேவாள் மேவு மேழகம் மேழி மேற்கொள் மேற்செல் மேற்படு மேன மேனி மே 1. (வி) விரும்பு, desire 2. (பெ) மேன்மை, உயர்வு, eminence, excellence 1 வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24 அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று கூறுவது போல் காட்டி பின்னர் அவன் விரும்பும் வழியில் விரும்பிச் செல்வாயாக நெஞ்சமே! 2 புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் ஏ…

Read More

மெ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மெய் மெய்ப்படு மெய்ப்பை மெய்ம்மற மெய்ம்மறை மெய்யாப்பு மெல்கிடு மெல்கு மெல்லம்புலம்பன் மெலிகோல் மெழுக்கம் மெழுக்கு மெழுகு மென்புலம் மெய் (பெ) 1. உடல், body 2. உண்மை, truth 1 மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8 (தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க – 2 பொய் படுபு அறியா கழங்கே மெய்யே மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250…

Read More

மூ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மூ மூக்கு மூசு மூட்டு மூட்டுறு மூதரில் மூதா மூதாய் மூதாலம் மூதாளர் மூதில் மூதிலாளர் மூது மூதூர் மூப்பு மூய் மூரல் மூரி மூவர் மூவன் மூவாய் மூவெயில் மூழ் மூழ்கு மூ 1. (வி) முதுமை அடை, மூப்பு எய்து, become old – 2. (பெ.அ) மூன்று, three 1 மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3 முதுமையுற்று, கடற்செலவாகிய வினைக்கு உதவாதாகிய விளிம்பு முரிந்து கெட்ட தோணியை 2 மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11 ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும், ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2 ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று…

Read More

மு – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் முக்கண்செல்வன் முக்காழ் முக்கு முக்கோல் முக முகடு முகப்படு முகம்செய் முகமன் முகவை முகில் முகிழ் முகை முச்சி முசிறி முசு முசுண்டை முஞ்சம் முஞ்ஞை முட்டம் முட்டு முட்டுப்பாடு முடங்கர் முடங்கல் முடங்கு முடந்தை முடம் முடலை முடவு முடி முடிநர் முடியன் முடுக்கர் முடுக்கு முடுகு முடுவல் முடை முண்டகம் முண்டை முணக்கு முணங்கு முணை முத்தம் முத்தன் முத்தீ முத்து முத்தூறு முத்தை முதல் முதல்வியர் முதலாட்டி முதற்று முதாரி முதியன் முதியை முதிர் முதிர்ப்பு முதிரம் முதிரை முதுக்குறை முதுக்குறைமை முதுக்குறைவி முதுகாடு முதுகுடி முதுகுடுமி முதுநீர் முதுநூல் முதுபாழ் முதுமொழி முதுர்வினள் முதுவாய் முதுவெள்ளிலை முதை முதையல் முந்து முந்துறு முந்தூழ் முந்தை முந்நீர் மும்மை முய முயக்கம் முயக்கு முயங்கல் முயங்கு…

Read More

மீ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மீ மீக்கூர் மீக்கூற்றம் மீக்கூறு மீகை மீட்சியும் மீட்டல் மீட்டு மீமிசை மீள் மீளி மீளியாளர் மீன் மீ – (பெ) 1. மிகுதி, abundance 2. மேன்மை, உயர்வு, greatness, eminence 3. மேல், மேல்பரப்பு, upper side, surface 4. மிகுந்த உயரம், great height, 1 இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27 பகைமையை மிகுதியாகச் செலுத்தும் இரு பெரிய அரசர்களின் 2 வென்றி ஆடிய தொடி தோள் மீ கை எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14 வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும், பகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த…

Read More