ஐஞ்சிறுகாப்பியங்களிலுள்ள சொற்கள் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்

ஐஞ்சிறுகாப்பியங்கள் சொற்கள் – எண்ணிக்கை

1.உதயணகுமார காவியம்636784472591558861

எண் காப்பியம் காண்டம்/
சருக்கம்
பாடல்கள் சொற்கள் பிரி
சொற்கள்
கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
2. நாககுமார காவியம் 5 170 4251 156 103 4510
3. யசோதர காவியம் 5 330 7876 397 225 8498
4. சூளாமணி 12 2130+1 51819 1603 651 54073
5. நீலகேசி 10 894-7 20051 735 428 21214
மொத்தம் —- 92444 3150 1562
97156

மொத்தம் தனிச்சொற்கள் : 26253

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (அம்_சில்_ஓதி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = அம்_சில்_ஓதி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = அம், சில், ஓதி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2

1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். அணி_இழை, மதி_நுட்பம், பொருள்_பெண்டிர் போன்றன
கூட்டுப்பொருளால் ஒரே சொல் ஆகின்றன. இங்கு, சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும்.
முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, தே மொழி மகளிர் என்ற தொடரில் தே, மொழி ஆகியவை மகளிர் என்ற சொல்லுக்கு அடைமொழிகளாக வருகின்றன. எனவே அவை தனித்தனிச் சொற்களாகக் கொள்ளப்படும். தேமொழி கூறினாள் என்றவிடத்தில் இங்கு தேமொழி என்பது அன்மொழித்தொகை ஆகி ஒரே சொல் ஆகிறது. எனவே இச் சொல் தே_மொழி எனக்கொள்ளப்படுகிறது. இங்கு தே, மொழி, தே_மொழி ஆகிய மூன்று சொற்களாக இது கணக்கிடப்படும். தே_மொழி என்பது தனிச் சொல்லாகவும், தே, மொழி ஆகியவை பிரிசொற்களாகவும் கணக்கிடப்படும். எனவே தே_மொழி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், தே, மொழி, தே_மொழி என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது.
கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்வை கட்டுருபன்கள். அவன்-கண், அணங்கு-கொல், அரியர்-மன், இரவன்-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

நாள்தொறும் என்ற சொல் நாள்-தொறும் எனக் குறிக்கப்படுகிறது. இதில், நாள்-தொறும் என்பது தனிச்சொல்லாகவும், -தொறும் என்பது கட்டுருபனாகவும் கணக்கிடப்பட்டும். நாள்-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நாள்-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும்
உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக்  டுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் காப்பியத்தின் பெயர் குறுகிய அளவில் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தக் காப்பியத்தில்
அச் சொல் இடம்பெறும் காண்டம் / சருக்கம் – எண் கொடுக்கப்படும். அடுத்து அக் காண்டம்/சருக்கம் – இல் அச் சொல் இடம்பெறும் பாடல் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் அப்பாடலில் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல்,
ஒரு காண்டம்/சருக்கம் ஆகியவற்றின் இறுதி அடியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

எ.காட்டு

அகற்றி (5)
தீங்கு எலாம் அகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார் – யசோதர:1 52/4
வெம் சுடர் எஃகம் ஒன்றின் வேந்து கண் அகற்றி நின்ற – சூளாமணி:3 101/3
நொவ் வகை வினை பகை அகற்றி நூல் நெறி – சூளாமணி:11 1888/1
காதலரில் பிழையாராய் கள் ஊன் தேன் கடிந்து அகற்றி
ஈதலோடு இல் இருக்கும் இளம் பிடியர் முதலாயார் – சூளாமணி:11 2047/1,2
முருக்கிய உருவு வேட்கை முனைப்புலம் அகற்றி முற்றி – சூளாமணி:12 2114/3

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் பன் முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

எ.காட்டு

மீட்டு (13)
மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன் – உதயணகுமார:5 292/2
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி – சூளாமணி:6 517/2
மீட்டு அது மெய்ம்மையாக வியந்து உரை விரிக்கல் ஆமோ – சூளாமணி:6 526/4
மெல்லிய மாலை-தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு
மல் உயர் அலர்ந்த மார்பின் மாதவி பேதை ஆர்த்த – சூளாமணி:6 559/2,3
மீட்டு ஒர் சொல் கொடா விம்மிதத்தனாய் – சூளாமணி:7 588/3
மீட்டு இளம் குமரர் கண்டு விடு சுடர் இலங்க நக்கு – சூளாமணி:7 693/1
மேல் அவாம் நெடும் கண் ஓட மீட்டு அவை விலக்க மாட்டாள் – சூளாமணி:8 979/3
வெம்புகின்ற மனத்தினனாய் வெய்யோன் மீட்டு விறலோன் மேல் – சூளாமணி:9 1347/2
மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை – நீலகேசி:5 533/3
மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை – நீலகேசி:5 533/3
மீட்டு அவை ஒன்று என வேண்டல் வேண்டுமே – நீலகேசி:8 808/4
அது என மீட்டு இருந்து ஆறு என்று எண்ணுவாய் – நீலகேசி:8 813/3
கொண்டு மீட்டு அவை கூறுதல் கூறுங்கால் – நீலகேசி:10 873/3