அபிராமி அந்தாதி நூலில் உள்ள சொற்களின் எண்ணிக்கை

அடிகள் சொற்கள் பிரிசொற்கள் கட்டுருபன்கள் அடைவுச்
சொற்கள்
தனிச்
சொற்கள்
மொத்தம் 408 2543 19 29 2591 1808

விளக்கம்

சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை

சொல் = இரு_தலை_கொள்ளி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = இரு, தலை, கொள்ளி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2


1. பிரிசொற்கள்

பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், அந்தம்_இல் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, வாணுதல் என்ற சொல் ஒளிமிகுந்த நெற்றியையுடைய ஒரு பெண்ணைக் குறிக்கும். ஆனால் வாணுதல் என்பதில் வாள், நுதல் என்பன தனித்தனிச் சொற்கள்.
இதனை ஒரு சொல்லாகக் கொண்டால் வாள், நுதல் ஆகிய சொற்களின் எண்ணிக்கையில் இது சேராது. எனவே இது வாள்_நுதல் என்று கொள்ளப்படும். இப்போது இது வாள்_நுதல் என்று ஒரு சொல்லாகவும், வாள், நுதல் ஆகிய சொற்களின் எண்ணிக்கையிலும் சேர்க்கப்படும்.
இதற்குரிய பிரிசொற்கள் வாள், நுதல் ஆகிய இரண்டும். எனவே வாள்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வாள், நுதல், வாள்_நுதல் ஆகிய மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

எ.காட்டு

வாள் (2)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:39/4
வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி:40/1

வாள்_நுதலே (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:39/4

நுதலே (1)
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்_நுதலே – அபிராமி-அந்தாதி:39/4

2. கட்டுருபன்

கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. தோறும், கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

எ.காட்டு

திசை-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், திசை-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.

-தொறும் (3)
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே – அபிராமி-அந்தாதி:67/3,4
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளு-தொறும்
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி:82/2,3
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி:85/1

திசை-தொறும் (1)
பார்க்கும் திசை-தொறும் பாசாங்குசமும் பனி சிறை வண்டு – அபிராமி-அந்தாதி:85/1

3. வழக்காறு-1

ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்/அடியின் எண் கொடுக்கப்படும்.

4. வழக்காறு-2

ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு பாடலின் இறுதி அடியின் இறுதியில் இருந்தால் அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.

5. வழக்காறு-3

ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும்.

தரும் (11)
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த – அபிராமி-அந்தாதி:4/3
சித்தியும் சித்தி தரும் தெய்வமும் ஆகி திகழும் பராசத்தியும் – அபிராமி-அந்தாதி:29/1
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி:69/1
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி:69/1
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி:69/2
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா – அபிராமி-அந்தாதி:69/2
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி:69/3
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே – அபிராமி-அந்தாதி:69/3
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி-அந்தாதி:69/4
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற – அபிராமி-அந்தாதி:89/2
தரும் பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே – அபிராமி-அந்தாதி:94/4