வௌ – முதல் சொற்கள்

வௌவல் (பெ) கவர்தல், கவ்வுதல், seizing, snatching யாம் பெற்றேம் ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/83,84 நாம் அறிந்தோம், ஒருவரிடத்தும் பொய்க்காத உன் மெய்மை அற்ற சூள் உன்னைக் கவர்ந்துகொள்ளும் என்பதனை; வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50 நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன் முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13 முறை எனப்படுவது வேண்டியவர் என்று பார்க்காமல் குற்றம் இழைத்திருந்தால் அவரின் உயிரைக் கவர்தல் மேல் வௌவு (வி) 1. பறி, கைப்பற்று, seize, snatch 2. வழிப்பறி செய், கொள்ளையடி, rob 1 தெண் திரை பாவை வௌவ உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/2,3 தெளிந்த…

Read More

வை – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வை வைகம் வைகல் வைகல்தொறும் வைகல்வைகல் வைகலும் வைகலுள் வைகறை வைகு வைகுசுடர் வைகுறு வைகுறுமீன் வைகை வைந்நுதி வைப்பு வையகம் வையம் வையை வை  1.(வி) 1. ஏசு, பழிகூறு, scold, abuse 2. கொண்டிரு, உடைத்தாயிரு, possess, have, keep 3. மதித்துப்போற்று, pay due regard to 4. உயிருடன் வை, keep alive 2. (பெ) 1. கூர்மை, sharpness 2. வைக்கோல், straw or hay of paddy or other grains 1.1. அனையன் என்னாது அத்தக்கோனை நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/7-10 அத்தன்மையையுடையோன் என்று கருதாது, அத் தகுதியை உடையோனை அவ்வாறு கருதாத…

Read More

வே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வேங்கடம் வேங்கை வேங்கைமார்பன் வேசரி வேசனை வேட்கும் வேட்குவை வேட்கை வேட்கோ வேட்ட வேட்டது வேட்டம் வேட்டல் வேட்டவை வேட்டனை வேட்டாய் வேட்டார் வேட்டு வேட்டுவன் வேட்டேம் வேட்டேன் வேட்டை வேட்ப வேண்மாள் வேண்மான் வேணவா வேத்தவை வேத்து வேதல் வேதாளிகர் வேதியர் வேதினம் வேது வேந்திர் வேந்து வேப்பு வேம் வேம்பி வேம்பு வேய் வேய்த்திறம்சேர் வேய்தரு(தல்) வேய்வை வேர் வேரல் வேரி வேலம் வேலன் வேலாழி வேலி வேலூர் வேலை வேவது வேவை வேழம் வேள் வேள்வி வேளாண் வேளாண்மை வேளார் வேளாளர் வேளிர் வேளூர் வேளை வேறல் வேனல் வேனில் வேங்கடம் (பெ) பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய திருப்பதிமலை The Tirupati Hills which formed the northern boundary of the ancient…

Read More

வெ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வெஃகு வெக்கை வெகுள் வெகுளி வெட்சி வெடி வெடிபடு வெண்குடை வெண்கூதாளம் வெண்கை வெண்ணி வெண்ணிப்பறந்தலை வெண்ணிவாயில் வெண்ணெல் வெண்பொன் வெண்மணி வெண்மறி வெதிர் வெதிரம் வெப்பர் வெப்பு வெப்புள் வெம்பல் வெம்பு வெய் வெய்து வெய்துயிர் வெய்துறு வெய்ய வெய்யள் வெய்யன் வெய்யார் வெய்யை வெரிந் வெரீஇ வெரீஇய வெரு வெருக்கு வெருகு வெருவரு(தல்) வெருவு வெருவுறு வெருள் வெரூஉ வெல் வெலீஇய வெலீஇயர் வெலீஇயோன் வெவ் வெவ்வர் வெவ்வெம்செல்வன் வெள் வெள்யாடு வெள்ளம் வெள்ளாங்குருகு வெள்ளாம்பல் வெள்ளி வெள்ளில் வெள்ளிவீதி வெள்ளெலி வெள்ளென வெள்ளை வெள்ளோத்திரம் வெளிது வெளிய வெளியது வெளியம் வெளியன் வெளில் வெளிறு வெற்பன் வெற்பு வெற்றம் வெறி வெறிக்களம் வெறிது வெறு வெறுக்கை வென் வென்றி வென்றியர் வெஃகு (வி) 1. மிகவும்…

Read More

வீ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வீ வீங்கு வீசு வீட்டு வீடு வீரை வீவு வீழ் வீழ்க்கை வீழ்வு வீளை வீற்றிரு வீற்று வீறு வீறுவீறு வீ 1. (வி) 1. இற, die 2. அழி, இல்லாமற்போ, perish, cease to be 3. மாறு, பிறழ், change; deviate, as from one’s course 4. நீங்கு, leave, depart 5. மலர், blossom – 2. (பெ) 1. பூ, flower 2. பூந்துகள், மகரந்தம், pollen 1.1 வறம் கொல வீந்த கானத்து குறும் பூ – நற் 238/1 கோடை வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள – கோடைக் காலத்தே வேனில்வெம்மை மிக்குவெதுப்புதலால் புற்பூடுகளும் செடி, கொடிகளும் பசுமையறப் புலர்ந்து கரிந்து கெடுதலால் கானம் வறம் கொல…

Read More

வி – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் விக்கு விச்சிக்கோ விச்சியர்பெருமகன் விச்சை விசயம் விசி விசும்பு விசை விசைப்பு விசையம் விட்டம் விடக்கு விடத்தர் விடம் விடர் விடரி விடலை விடியல் விடிவு விடை விண் விண்ட விண்டு விண்ணோர் வித்தகம் வித்தகர் வித்தம் வித்தாயம் வித்து விதலை விதவை விதி விதிர் விதிர்ப்பு விதுப்பு விதும்பு விம்மு விய வியங்கொள் வியம்கொள் வியமம் வியர் வியர்ப்பு வியல் வியலுள் வியலூர் வியன் விரகியர் விரகு விரவு விராய் விராய விராவு விரான் விரி விரிச்சி விரிவு விரீஇ விருந்து விரை விரைஇ வில்லியாதன் விலங்கல் விலங்கு விலைநலப்பெண்டிர் விலைஞர் விலைமாறு விலைவன் விலோதம் விழவு விழவுக்களம் விழா விழு விழுக்கு விழுப்புண் விழுமம் விழுமா விழுமிதின் விழுமிது விழுமிய விழுமியம் விழுமியோர் விழுமுறு விழை விழைவு…

Read More

வா – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வா வாக்கல் வாக்கு வாகுவலயம் வாகை வாங்கு வாசம் வாட்டல் வாட்டாறு வாட்டு வாடல் வாடு வாடூன் வாடை வாணன் வாணிகம் வாதம் வாதி வாதுவன் வாம் வாய் வாய்ப்படு வாய்ப்பு வாய்ப்புள் வாய்பூசு வாய்மை வாய்மொழி வாய்வாள் வாய்விடு வாயடை வாயில் வாயுறை வார் வார்த்தை வாரணம் வாரணவாசி வாரல் வாரலன் வாரலென் வாரி வாரு வால் வாலம் வாலா வாலிதின் வாலிது வாலிய வாலியோன் வாலுவன் வாவல் வாவி வாவு வாழ் வாழ்ச்சி வாழ்தி வாழ்தும் வாழ்நர் வாள் வாளா வாளாதி வாளாது வாளி வாளை வான் வானம் வானம்பாடி வானவமகளிர் வானவரம்பன் வானவன் வானி வானோர் வா (வி) 1. ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழை, come 2. தாவு, leap, gallop 1 வள்ளை…

Read More

வ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் வகிர் வகு வகுந்து வகுளம் வகை வங்கம் வங்கா வங்கூழ் வச்சியம் வச்சிரத்தான் வச்சிரத்தோன் வச்சிரம் வசி வசிவு வசை வஞ்சம் வஞ்சன் வஞ்சி வஞ்சினம் வட்கர் வட்டம் வட்டி வட்டு வடகுன்றம் வடபெருங்கல் வடமலை வடமீன் வடமொழி வடவரை வடக்கிரு வடந்தை வடவனம் வடாது வடி வடிம்பு வடு வடுகர் வண் வண்டல் வண்டன் வண்ணம் வண்மை வணக்கு வணங்கு வணர் வத்தம் வதி வதுவை வந்தனம் வந்தனை வந்தி வந்திகை வந்திசின் வந்தீ வந்தீக வந்தீத்தந்தாய் வந்தீத்தனர் வந்தீமே வந்தீமோ வந்தீய வந்தீயாய் வந்தீயான் வந்தை வம் வம்ப வம்பலர் வம்பு வய வயக்கு வயக்குறு வயங்கல் வயங்கியோர் வயங்கு வயந்தகம் வயம் வயமா வயமான் வயல் வயலை வயவர் வயவு வயா வயிர் வயிரம் வயிரியர்…

Read More

யூ – முதல் சொற்கள்

யூகம் (பெ) கருங்குரங்கு, black monkey வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/12-14 “அகன்ற பாறையில் அமர்ந்திருக்கும் கருங்குரங்கை, மிரட்சியுடன் பார்த்து, கீழே இருண்டுகிடக்கும் செங்குத்தான பள்ளத்தில் ஏறியும் இறங்கியும் ஓடித்திரியும் வருடை மானின் குட்டியையுடைய வளமிக்க மலையைச் சேர்ந்தவனை நாக நறு மலர் உதிர யூகமொடு மா முக முசு கலை பனிப்ப – திரு 302,303 சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, மேல் யூபம் (பெ) 1. வேள்வித்தூண், யூபத்தம்பம், sacrificial post, post to which the sacrificial animalis fastened 2. தலையற்ற உடல், headless trunk of a body…

Read More

யா – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யா யாக்கை யாங்கணும் யாங்கனம் யாங்கு யாங்கும் யாங்ஙனம் யாடு யாண்டு யாண்டும் யாண்டையன் யாண்டோர் யாணது யாணர் யாணு யாத்திரை யாப்பு யாம் யாமம் யாமை யாய் யாரீர் யாரேம் யாவண் யாவது யாவதும் யாழ் யாழ யாளி யாறு யானையங்குருகு யா 1. (வி) கட்டு, பிணி, bind, tie, fasten – 2. (பெ) ஒரு மரம், ஆச்சா மரம், சால் மரம், a tree, Shorea robusta – 3. (வி.பெ) யாவை, what, which things 1 செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் மூதா தின்றல் அஞ்சி காவலர் பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் தீம் புனல் ஊர திறவிது…

Read More