ஞொ – முதல் சொற்கள்

ஞொள்கு

(வி) குறைவுபடு, சுருங்கிப்போ, இளை, diminish, be abated

நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/1-4

தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் (வெடித்து) நிலைபெயருமோ இன்று என
உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்