புறநானூறு 1 – 25

மூலம்அடிநேர் உரை
  
# 1 கடவுள் வாழ்த்து# 1 கடவுள் வாழ்த்து
கண்ணி கார் நறும் கொன்றை காமர்தலைமாலை கார்காலத்தில் மலரும் மணமுள்ள கொன்றைப்பூ, அழகிய
வண்ண மார்பின் தாரும் கொன்றைநிறத்தையுடைய மார்பின் மாலையும் அந்தக் கொன்றைப்பூ,
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்தஏறிச்செல்லும் வாகனம் தூய வெண்மையான காளை, சிறந்த
சீர் கெழு கொடியும் அ ஏறு என்பபெருமை பொருந்திய கொடியும் அந்த காளையே என்று சொல்வர்,
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை     5நஞ்சின் கறுப்பு தொண்டையை அழகுசெய்யவும் செய்கிறது, அந்தக் கறுப்புமே
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமேவேதத்தை ஓதும் அந்தணரால் புகழவும்படும்,
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உருபெண்வடிவம் ஒருபக்கம் ஆயிற்று, அந்த வடிவமும்
தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும்தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கவும்படும்,
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறைபிறை நெற்றிக்கு அழகானது, அந்தப் பிறையும்
பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே           10பதினெட்டுக் கணங்களாலும் புகழவும்படும்,
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகியஎல்லா உயிர்களுக்கும் பாதுகாவலாகிய
நீர் அறவு அறியா கரகத்துநீர் இல்லாமல்போவதை அறியாத கமண்டலத்தைக் கொண்ட
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கேதாழ்ந்து விழும் சடையாலும் பொலிந்த, செய்வதற்கு அரிய தவத்தை உடையவனுக்கு
  
# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் திணிந்த நிலனும்மண் செறிவாய் அமைந்துள்ள நிலமும்,
நிலம் ஏந்திய விசும்பும்அந்த நிலம் ஏந்திநிற்கும் ஆகாயமும்,
விசும்பு தைவரு வளியும்அந்த ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும்,
வளி தலைஇய தீயும்அந்தக் காற்றினால் எழுந்த தீயும்,
தீ முரணிய நீரும் என்று ஆங்கு                    5அந்தத் தீயுடன் மாறுபட்ட நீரும் என்று
ஐம் பெரும் பூதத்து இயற்கை போலஐந்துவகையான பெரிய பூதத்தினது தன்மை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்பகைவரைப் பொறுத்தருளுதலும், சிந்திக்கும் அறிவாற்றலில் விசாலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்வலிமையும், பகைவரை அழித்தலும், அவர் வணங்கினால் அவருக்கு அருள்செய்தலும் உடையவனே!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்உன் கடலில் தோன்றிய ஞாயிறு, மீண்டும் உன்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும்              10வெள்ளிய தலை (நுரை) பொருந்திய அலைகளையுடைய மேற்குக் கடலில் மூழ்கும்,
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருநபுதுவருவாயை இடையறாது கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனே!
வான வரம்பனை நீயோ பெருமவானத்தை எல்லையாக உடையவனே! பெருமானே! நீயே 
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇஆடுகின்ற தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பைஅவரின் நிலத்தைத் தம்மிடம் எடுத்துக்கொண்ட பொன்னாலான தும்பைப் பூவினையுடைய
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய            15கௌரவர் நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தில் மடியுமட்டும்
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்பெரும் சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் குறைவின்றிக் கொடுத்தவனே!
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்பால் புளித்துப்போனாலும், சூரியன் இருண்டுபோனாலும்,
நாஅல் வேத நெறி திரியினும்நான்கு வேதத்தினது ஒழுக்கம் மாறுபட்டுப்போனாலும்,
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கிமாறுபடாத அமைச்சர், படைத்தலைவர் முதலிய சுற்றத்துடன் குறைவின்றி நெடுங்காலம் புகழுடன் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து          20மனக்கலக்கம் இன்றி நிற்பாயாக, பக்க மலையில்
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணைசிறிய தலையையுடைய குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள்
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்மாலையில் அந்தணர் தம் அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீ விளக்கில் துஞ்சும்முத்தீயாகிய விளக்கின்கண்ணே தூங்கும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றேபொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதிகை மலையும் போன்றே.
  
# 3 இரும்பிடர் தலையார்# 3 இரும்பிடர் தலையார்
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடைநிறைமதியின் வடிவத்தைப் போன்ற உயர்ந்த வெண்கொற்றக்குடை
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்றநிலைபெற்ற கடலே எல்லையாகக் கொண்ட நிலத்தை நிழல்செய்ய,
ஏம முரசம் இழுமென முழங்கபாதுகாக்கும் வீரமுரசம் இழுமென்று முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்ஆளுகை என்னும் ஆஞ்ஞாசக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்,
தவிரா ஈகை கவுரியர் மருக                 5ஒழியாத ஈகைக் குணத்தையும் உடைய பாண்டியர் மரபினனே!
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவகுற்றமற்ற கற்பினையுடைய சிறந்த அணிகலன் அணிந்தவளுக்குக் கணவனே!
பொன் ஓடை புகர் அணி நுதல்பொன்னால் செய்த முகபடாத்தைப் புள்ளிகளைக் கொண்ட நெற்றியில் கொண்ட,
துன் அரும் திறல் கமழ் கடாஅத்துஅணுக முடியாத வலிமையையும் மணங்கமழும் மதநீரையும்
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅகொம்பினையே படைக்கலமாகக்கொண்டு கோட்டைக் கதவைக் குத்தும்,
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில்   10கயிற்றால் பிணிக்கப்பட்ட கவிழ்ந்த மணிகளைப் பக்கத்தில் கொண்ட,
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்துநீண்ட கையையும் உடைய யானையின் பெரிய கழுத்திடத்தில் இருந்து
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயாவிலக்கமுடியாத யமனின் கொலைத்தொழிலுக்குச் சற்றும் இளைக்காத
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதிவலிமையுள்ள கையில் இருக்கும் ஒளிரும் வாளினையுடைய பெரும் புகழ்வாய்ந்த வழுதியே!
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்நிலமே பிறழ்ந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாதிருக்கவேண்டும்,
பொலம் கழல் கால் புலர் சாந்தின்                  15பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்த காலினையும், பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
விலங்கு அகன்ற வியன் மார்பகுறுக்கே அகன்ற பரந்த மார்பினையும் உடையவனே!
ஊர் இல்ல உயவு அரியஊர்கள் இல்லாதனவும், தப்பிவருவதற்கு கடினமானவையும்,
நீர் இல்ல நீள் இடையநீர்நிலை இல்லாதனவும் ஆகிய நீண்ட வெளியில்,
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின்நெடுந்தூரம் பார்க்கத்தக்க இடத்தில் இருந்து, கையைக் கண்மீது கவிழ்த்துப் பார்த்து
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்           20குறியில் தப்பாத கொடுமை நிறைந்த மறவர்
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கைஅம்பினை ஏவ, அதனால் இறந்தோரின் உடலை மூடிய அண்மைய கற்குவியல்களையுடைய,
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும்திருத்தமான சிறகுகளையும், வளைந்த வாயினையும் உடைய பருந்து இருந்து வருந்தும்
உன்ன மரத்த துன் அரும் கவலைஉன்ன மரங்களையுடைய நெருங்க முடியாத பல்வேறாய்ப் பிரியும் வழிகளில்
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அதுஉன்னை விரும்பிய வேட்கையால் இரவலர்கள் வருவர், அது
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்         25அவரின் மனக்குறிப்பை அவர் முகத்தால் அறிந்து அவரின்
இன்மை தீர்த்தல் வன்மையானேவறுமையைத் தீர்த்துவைப்பதில் நீ வல்லவன் என்பதனால்.
  
# 4 பரணர்# 4 பரணர்
வாள் வலம் தர மறு பட்டனவாள், வெற்றியைத் தருவதால் குருதிக்கறை படிந்தன,
செம் வானத்து வனப்பு போன்றனசெக்கர் வானத்தின் அழகை ஒத்தன;
தாள் களம் கொள கழல் பறைந்தனகால், போர்க்களத்தைத் தமதாக்கிக்கொள்ள அலைந்ததால் கழல்கள் தேய்ந்துபோயின,
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றனகொல்லும் காளையின் கொம்பினைப் போன்றன;
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ              5கேடகங்கள், தைத்த அம்புகளால் துளையுடன் இருப்பன,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன(பயிற்சியில்)குறிதப்பாமல் அம்புகள் எய்த இலக்குகள் போன்றன;
மாவே எறி_பதத்தான் இடம் காட்டகுதிரைகளோ, எதிரியைத் தாக்கும் நேரம் பார்ப்பவன், இடமும், வலமுமாகிய இடங்களைக் காட்ட,
கறுழ் பொருத செம் வாயான்கடிவாளம் தேய்த்த சிவந்த வாயை உடைமையால்
எருத்து வவ்விய புலி போன்றனதன் இரையின் கழுத்தைக் கவ்விய புலியைப் போன்றன;
களிறே கதவு எறியா சிவந்து உராஅய்         10களிறுகளோ, கதவை முறித்துக் கண் சிவந்து மோதி
நுதி மழுங்கிய வெண் கோட்டான்நுனி மழுங்கிய வெண்மையான கொம்புகளால்
உயிர் உண்ணும் கூற்று போன்றனஉயிரை உண்ணும் கூற்றுவனைப் போன்றன;
நீயே அலங்கு உளை பரீஇ இவுளிநீதான், அசையும் தலையாட்டமுடைய விரைந்து இயங்கும் குதிரைகளுடன்
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி           பொன்னாலான தேர் மீது பொலிவுடன் தோன்றி
மா கடல் நிவந்து எழுதரும்                        15பெரிய கரிய கடல் நடுவே உயர்ந்து எழுகின்ற
செம் ஞாயிற்று கவினை மாதோசிவந்த ஞாயிற்றின் அழகுடன் விளங்குகிறாய்;
அனையை ஆகன் மாறேநீ அத்தன்மையுடையவனாயிருப்பதால்
தாய் இல் தூவா குழவி போலதாயில்லாத உண்ணாத குழந்தையைப் போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடேஓயாமல் அழும் உன்னைப் பகைத்தவர் நாடுகள்.
  
# 5 நரிவெரூஉ தலையார்# 5 நரிவெரூஉ தலையார்
எருமை அன்ன கரும் கல் இடை-தோறுஎருமை போன்ற கரும் பாறைகள் இருக்கும் இடங்கள்தோறும்
ஆனில் பரக்கும் யானைய முன்பின்பசுக்களைப் போலப் பரவிக்கிடக்கும் யானைகளை உடையவனே! வலிமையுடன்
கானக நாடனை நீயோ பெருமகாட்டகத்து அமைந்த நாட்டினையுடையவனே! பெருமானே!
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்நீ ஒருவனே தனித்துச் சிறந்து விளங்குவதால் உன்னிடம் ஒன்று கூறுவேன்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா                   5அருளும் அன்பும் இல்லாமல் நீங்காத
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்நரகத்தைச் சேர்ந்தவருடன் ஒன்றாமல், உன்னால் காக்கப்படும் நாட்டைக்
குழவி கொள்பவரின் ஓம்பு-மதிகுழந்தையைக் கையாள்பவரைப் போல் பேணிப் பாதுகாத்திடுக,
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தேஅத்தகைய காவல் அருளுடையது, பெறுவதற்கு மிகவும் அரியது.
  
# 6 காரிகிழார்# 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்      5கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலதுநீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலை_உலகத்தானும் ஆனாதுஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
உருவும் புகழும் ஆகி விரி சீர்அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க         10சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துபோர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறு கண் யானை செவ்விதின் ஏவிசிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்துபசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்               15அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கிபரிசிலர்க்கு முறையாக வழங்கி,
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கேமுக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்தவணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே          20வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானேநாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழைதணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரேஉன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய       25இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
தண்டா ஈகை தகை மாண் குடுமிகுறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒண் கதிர் ஞாயிறு போலவும்ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானேநிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.
  
# 7 கருங்குழல் ஆதனார்# 7 கருங்குழல் ஆதனார்
களிறு கடைஇய தாள்களிற்றினைச் செலுத்திய கால்களையும்,
கழல் உரீஇய திருந்து அடிவீரக்கழல் உராய்கின்ற திருத்தமான அடியினையும்,
கணை பொருது கவி வண் கையால்அம்புடன் போரிட்டும், பிறர்க்கு அள்ளித்தருவதற்காகக் கவிந்த கொடை பொருந்திய கையில்
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்துகண்ணைப்பறிக்கும் அழகுடைய வில்லையும்,
மா மறுத்த மலர் மார்பின்                 5திருமகள் பிறரை மறுத்து உறையும் அகன்ற மார்பினையும்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்யானையையும் பெயர்க்கும் மிக்க வலிமையினையும் உடையவனே!
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்பகலென்றும் இரவென்றும் பாராமல், பகைவரின்
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலைஊரைச் சுடுகின்ற தீயின் வெளிச்சத்தில் அழுகையும், அரற்றுதலும் கொண்ட ஆரவாரத்திற்கிடையே
கொள்ளை மேவலை ஆகலின் நல்லகொள்ளையிடுதலை விரும்புகின்றாய்; எனவே, நல்ல பொருள்கள்
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ             10இல்லையாகிப்போயின, விரைவாக இயங்குகின்ற தேரையுடைய வளவனே!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்துகுளிர்ந்த நீர் பரந்த ஓசையையுடைய உடைப்புகளை, மண்ணினால் அடைப்பதை விடுத்து
மீனின் செறுக்கும் யாணர்மீனினால் அடைக்கும் புதுவருவாயினையுடைய
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடேபயன் விளங்கும் ஊர்களையுடைய மாற்றாரின் அகன்ற இடத்தையுடைய நாடுகள் –
  
# 8 கபிலர்# 8 கபிலர்
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகஉலகத்தைக் காக்கும் அரசர் உனக்கு வழிபாடு கூறி உன் சொற்படி நடக்க,
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅதுஇன்பத்தை நுகர விரும்பி, நிலம் யாவர்க்கும் பொதுவானது என்ற சொல்லைப் பொறுக்கமாட்டாமல்
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்பதன் நாட்டின் இடம் சிறியது – அதனை விரிவாக்கவேண்டும் என்னும் ஊக்கம் தன்னை உந்துதலால்
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைசோர்ந்து போகாத உள்ளத்தையும், சொந்தமாக எதனையும் வைக்க எண்ணாத ஈகைப் பண்பையும்,
கடந்து அடு தானை சேரலாதனை                        5பகைவரை வென்று அவரைக் கொல்லும் படையையும் உடைய சேரலாதனை,
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்எங்ஙனம் நீ ஒத்திருக்கிறாய், விரைவாகச் செல்லும் இயல்புடைய கதிரவனே?
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்திபகற்பொழுதை உனக்கென வரையறுத்துள்ளாய், நிலவு எழும்போது நீ மறைவதால் நீ புறமிட்டுப்போகிறாய்,
மாறி வருதி மலை மறைந்து ஒளித்திதெற்கென்றும், வடக்கென்றும் மாறிமாறி வருகிறாய், மலையில் மறைந்துகொண்டு ஒளிந்துகொள்கிறாய்,
அகல் இரு விசும்பினானும்அகன்ற பெரிய ஆகாயத்திலும்
பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே           10பகற்பொழுதுமட்டும் ஒளிவீசுகிறாய் உன் பலவான கதிர்களை விரித்து.
  
# 9 நெட்டிமையார்# 9 நெட்டிமையார்
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்பசுக்களும், பசுவைப் போன்ற இயல்புள்ள பார்ப்பன மக்களும்,
பெண்டிரும் பிணி உடையீரும் பேணிபெண்களும், நோயாளிகளும், வழிபாட்டுடன்
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்தென் திசையில் ஆவியாக இருக்கும் மூதாதையர்க்குப் பிதிர்க்கடன் செய்யும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்பொன் போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களும்,
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என   5எம் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம், உம் அரண்களுக்குள் சேர்ந்துவிடுங்கள் என்று
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்அறநெறியைச் சொல்லும் கொள்கையைப் பூண்ட மறத்தினையுடைய
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்கொல்கின்ற யானையின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் விசும்பினுக்கு நிழலைச்செய்யும்
எம் கோ வாழிய குடுமி தம் கோஎம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய முன்னோனான,
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்தசிவந்த தன்மையுள்ள பசும்பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீர் விழவின் நெடியோன்                       10முந்நீராகிய கடலின் தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின்
நன் நீர் பஃறுளி மணலினும் பலவேநல்ல நீரைக்கொண்ட பஃறுளி என்னும் ஆற்றின் மணலைக்காட்டிலும் பல ஆண்டுகள் – 
  
# 10 ஊன் பொதி பசும் குடையார்# 10 ஊன் பொதி பசும் குடையார்
வழிபடுவோரை வல் அறிதீயேஉன்னை வழிபடுவோரை மிகவும் நன்றாய் அறிந்துவைத்திருக்கிறாய்,
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையேபிறர் மீது பழி சுமத்துவோரின் சொற்களை நம்பமாட்டாய்,
நீ மெய் கண்ட தீமை காணின்நீ உண்மையாகக் கண்டறிந்த தீமையை ஒருவரிடம் கண்டால்
ஒப்ப நாடி அ தக ஒறுத்திஅதனை நீதிநூல்களுக்குத் தக்கவாறு ஆராய்ந்து அத் தீமைக்குத் தகுந்தவாறு தண்டிப்பாய்,
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்              5வந்து உன் பாதத்தை அண்டி உன் முன்னே நின்றால்
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதேதண்டனையைக் குறைப்பாய், முன்னிலும் பெரிதாக அருள்செய்வாய்,
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில்சுவையில் அமிழ்தத்தை வென்று மணக்கும் தாளிப்பு உள்ள சோற்றை
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கைவருபவர்க்குக் குறைவில்லாமல் வழங்குகின்ற பழி தீர்ந்த வாழ்க்கையையுடைய
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்குலப்பெண்களுடன் காதற்போரிடுவதேயன்றி, பகைவீரரால்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப          10வீரப்போர் புரிதல் இயலாதாகிய, இந்திரவில் போன்ற மாலையை அணிந்த மார்பினனே!
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ்செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படாத செயல்களையும், சேய்மையில் விளங்கும் புகழினையும் உடைய
நெய்தல் அம் கானல் நெடியோய்நெய்தலங்கானல் என்னும் ஊரையுடைய நெடியவனே!
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவேஉன்னைச் சேரவே நாங்கள் வந்தோம், உன்னைப் பாடிப் போற்றுவோம் பலமுறை.
  
  
  
  
  
# 11 பேய்மகள் இளவெயினியார்# 11 பேய்மகள் இளவெயினியார்
அரி மயிர் திரள் முன்கைமென்மையான மயிரையுடைய திரண்ட முன்கையினையும்
வால் இழை மட மங்கையர்தூய அணிகலன்களையும் உடைய அழகு மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குவண்டல் மணலில் செய்த பாவைக்குச் சூட
குலவு சினை பூ கொய்துவளைந்த கிளைகளில் பூக்களைக் கொய்து
தண் பொருநை புனல் பாயும்                 5குளிர்ந்த பொருநை என்னும் அமராவதி ஆற்று நீரில் பாய்ந்து குளிக்கும்
விண் பொரு புகழ் விறல் வஞ்சிவானை முட்டிய புகழினையும் வெற்றியையும் உடைய வஞ்சி நகரில்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மேபுகழ் வாய்ந்த வெற்றியையுடைய வேந்தனும்
வெப்பு உடைய அரண் கடந்துபகைமையாகிய வெம்மையுடைய அரண்களை வென்று
துப்பு உறுவர் புறம்பெற்றிசினேவலிமையுடன் எதிர்த்தவரைப் புறங்கண்டான்;
புறம்பெற்ற வய வேந்தன்                   10அவ்வாறு புறங்கண்ட வலிமை மிக்க வேந்தனின்
மறம் பாடிய பாடினியும்மேவீரத்தைப் பாடிய பாடினியும்
ஏர் உடைய விழு கழஞ்சின்அழகுடன் விளங்கும் சிறந்த பல கழஞ்சுப் பொன்னால் செய்யப்பட்ட
சீர் உடைய இழை பெற்றிசினேநல்ல அணிகலன்களைப் பெற்றாள்;
இழை பெற்ற பாடினிக்குஅந்த அணிகலன்களைப் பெற்ற பாடினியின்
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே 15ஏழிசையில் முதலாவதாகிய குரலென்னும் தானத்தில் பொருந்தும் பாடலில் வல்ல பாணனும்
என ஆங்கு(அசை நிலை)
ஒள் அழல் புரிந்த தாமரைஒளிவிடும் நெருப்பில் ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய
வெள்ளி நாரால் பூ பெற்றிசினேவெள்ளி நாரால் தொடுத்த பூவைப் பெற்றான்.
  
# 12 நெட்டிமையார்# 12 நெட்டிமையார்
பாணர் தாமரை மலையவும் புலவர்பாணர்கள் பொற்றாமரை மலரைச் சூடவும், புலவர்கள்
பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும்நெற்றிப்பட்டத்தின் அழகு பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரித்த தேரினில் ஏறவும்
அறனோ மற்று இது விறல் மாண் குடுமிஇது அறம் ஆகுமா? ஆற்றலும் மாண்பும் மிக்க குடுமியே!
இன்னா ஆக பிறர் மண் கொண்டுவேற்றரசரின் நிலத்தை அவர்க்குத் துன்பம்வரும்படி கைப்பற்றி
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே                5இன்பமானவற்றைச் செய்கிறாய் உன் பரிசிலரிடத்தில்.
  
# 13 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்# 13 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
இவன் யார் என்குவை ஆயின் இவனேஇவன் யார் என்று நீ கேட்டால், இவன்தான்
புலி நிற கவசம் பூ பொறி சிதையபுலித்தோலால் செய்யப்பட்ட கவசம் சிதையும்படி
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்எய்யப்பட்ட அம்பு கிழித்த அகன்று உயர்ந்த மார்பினையுடையவன்,
மறலி அன்ன களிற்று மிசையோனேகூற்றம் போன்ற களிற்றின் மேலிருப்பவன்;
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்            5அந்தக் களிறோ, கடலில் செல்லும் கப்பலைப் போலவும்,
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும்பல விண்மீன்களின் நடுவே திகழும் திங்களைப் போலவும்,
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்பசுறாமீன் கூட்டத்தைப் போன்ற வாள்வீரர் சூழ்ந்து வர
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றேதமக்குப் பழக்கமான பாகரை அறியாமல், மதம்பிடித்துக்கொண்டது;
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம  கேடு வராமல் இவன் திரும்பிச் செல்லட்டும் –
பழன மஞ்ஞை உகுத்த பீலி                   10வயலில் மயில்கள் உதிர்த்த தோகைகளை,
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்கதிரறுக்கும் உழவர்கள் நெற்கட்டுகளோடு சேர்த்துக் கட்டுகின்ற,
கொழு மீன் விளைந்த கள்ளின்கொழுத்த வயல் மீன்களையும், நன்கு முதிர்ந்த கள்ளினையும் உடைய,
விழு நீர் வேலி நாடு கிழவோனேமிகுந்த நீராகிய கடலையே வேலியாகக் கொண்ட, நாட்டிற்கு உரிமையாளன்.
  
# 14 கபிலர்# 14 கபிலர்
கடுங்கண்ண கொல் களிற்றால்கடுமை நிறைந்த, கொல்லும் தொழிலையுடைய யானைகளால்
காப்பு உடைய எழு முருக்கிகாவலையுடைய கணையமரத்தை முறித்து
பொன் இயல் புனை தோட்டியால்இரும்பினாலான அழகிய அங்குசத்தால்
முன்பு துரந்து சமம் தாங்கவும்முன்னால் அவற்றைச் செலுத்தி, பின்னர் அவற்றை வேண்டும் அளவில் நிறுத்தவும்,
பார் உடைத்த குண்டு அகழி                 5குந்தாலியால் நிலத்தை அகழ்ந்து குழியாக அமைந்த அகழியின்
நீர் அழுவ நிவப்பு குறித்துநீர்ப்பரப்பின் ஆழத்தின் உயர்ச்சியைக் குறித்து, அதனிடம் செல்லாமல்
நிமிர் பரிய மா தாங்கவும்நிமிர்ந்த ஓட்டத்தையுடைய குதிரைகளைத் தாங்கிப் பிடிக்கவும்,
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைஅம்பறாத்தூணி பொருந்திய முதுகினையுடையவனாய், தேரின் மேல் நின்று
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும்வில்லின் வலிய நாண் வடு உண்டாக்குமளவிற்கு அம்புகளைச் செலுத்தவும்,
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில்               10பரிசிலர்க்குப் பெறுவதற்கரிய அணிகலன்களை அளிக்கவும், தலைவனே!
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கைவலிமையுடையனவாய் இருக்கின்றன, உனது முழங்காலைத்தொடும் பெரிய கைகள்;
புலவு நாற்றத்த பைம் தடிபுலால் நாறும் சிறந்த ஊன் துண்டத்தை
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவைபூ மணம் கமழும் புகையைக் கொளுத்தி, ஊனையும், துவையலையும்,
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லதுகறிச்சோறினையும் உண்டு வருந்தும் தொழிலையன்றி
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும்              15வேறு தொழிலை அறியாதிருப்பதால், மிகவும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்குமெதுவாக இருக்கின்றன, பெருமானே! பெண்டிருக்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்குஆற்றமுடியாத வருத்தம் தரும் மார்பினையும், உன்னுடன் போரிடவருவோர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மைபெரிய நிலம் போன்ற வலிமையினையும் கொண்டு
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையேபோரில் சிறந்து விளங்கும் முருகனைப் போன்றவனே! உன்னைப் பாடுபவரின் கைகள் – 
  
# 15 கபிலர்# 15 கபிலர்
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்விரைகின்ற தேர்கள் குழிகளையுண்டாக்கின தெருக்களில்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டிவெள்ளை வாயினைக் கொண்ட கழுதைகளான அற்ப விலங்குகளை ஏரில் பூட்டிப்
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில்பாழாக்கினாய், பகைவரின் அகன்ற இடங்களைக் கொண்ட நல்ல அரண்வெளிகளை;
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல்பறவைகள் சத்தமிடும் புகழமைந்த விளைவயல்களில்
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள               5வெண்மையான தலையாட்டம் அணிந்த செருக்குடன் இருக்கும் குதிரைகளின் கவிந்த குளம்புகள் தாவ
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்துதேரினை ஓட்டிச்சென்றாய், உன் பகைவரின் நாட்டினில்;
துளங்கு இயலான் பணை எருத்தின்அசைகின்ற இயல்பினையும், பெரிய கழுத்தினையும்,
பாவு அடியான் செறல் நோக்கின்பரந்த அடியினையும், சீறுகின்ற பார்வையையும்,
ஒளிறு மருப்பின் களிறு அவரஒளிவிடும் கொம்புகளையும் உடைய களிற்றை, அவர்களின்
காப்பு உடைய கயம் படியினை                        10காவல் மிகுந்த குளங்களில் படியச்செய்தாய்;
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்அப்பேர்ப்பட்ட சீற்றத்தையும், அதற்கேற்ற செயல்களையும் உடையவன் என்பதால்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடுபளிச்சிடும் இரும்பால் செய்யப்பட்ட ஆணிகளும் பட்டமும் அறைந்த அழகுமிக்க நெடும் கேடகத்துடன்
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார்நிழலுண்டாக்கும் நீண்ட வேலினை ஏந்தி, பகைவர்
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்உனது பளீரென்ற படைக்கலங்களையுடைய விரைவான தூசிப்படையின் வலிமையை அழிக்க எண்ணி
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய         15ஆசையுடன் வரும்போது, அவர்களின் ஆசை பின்பக்கம் ஓட,
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல்பழியுண்டாக வாழ்ந்தவர் பலரோ? குற்றமில்லாத
நன் பனுவல் நால் வேதத்துநல்ல அற நூலிலும், நால்வகை வேதத்திலும் சொல்லப்பட்ட
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறைஅடைவதற்கு அரிய மிக்க புகழையுடைய சமீது, பொரி ஆகிய மேலே தூவப்படும் சிறந்த பொருளுடன்
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண்நெய் மிக்க ஓமப்புகை பொங்கி எழ, பலவாறு மாட்சிமைப்பட்ட
வீயா சிறப்பின் வேள்வி முற்றி                    20கெடாத சிறப்பையுடைய வேள்வியைச் செய்துமுடித்து
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்வேள்வித்தூண்களை நட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?
யா பல-கொல்லோ பெரும வார்_உற்றுஇவற்றில் எது பல? பெருமானே! வார்களைக் கொண்டு
விசி பிணி கொண்ட மண் கனை முழவின்இழுத்துக்கட்டப்பட்ட, வாயில் கரிய சாந்து பூசப்பட்ட முழவையுடைய
பாடினி பாடும் வஞ்சிக்குபாடினி பாடும் வஞ்சிப்பாடலுக்கு ஏற்ப, வஞ்சிப்போரைப் பற்றி
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே          25நினைக்கும் வலிமையினையுடையவனே , உனக்கு.
  
# 16 பாண்டரம் கண்ணனார்# 16 பாண்டரம் கண்ணனார்
வினை மாட்சிய விரை புரவியொடுதன் போர்த்தொழிலில் மாண்புடன் விளங்கும் விரைந்து செல்லும் குதிரைகளுடன்
மழை உருவின தோல் பரப்பிமேகங்களைப் போன்று கேடகங்களைப் பரப்பி,
முனை முருங்க தலைச்சென்று அவர்போர்முனை கலங்குமாறு முன்னேறிச் சென்று, பகைவரின்
விளை வயல் கவர்பு ஊட்டிநெல்விளையும் வயல்களைக் கொள்ளையடித்து,
மனை மரம் விறகு ஆக                       5வீட்டுமரங்களை விறகாக்கி,
கடி துறை நீர் களிறு படீஇகாவல்மிகுந்த நீர்த்துறைகளில் களிறுகளைப் படுக்கவைத்து,
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம்பகல் என்று சொல்லும்படி மூட்டிய சுடு நெருப்பின் வெளிச்சம்
செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்றமறைகின்ற சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் செக்கர்வானம் போல் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானைஎதிரிநாடு அழியுமாறு தங்கும் எல்லையில்லாத படையினையும்,
துணை வேண்டா செரு வென்றி                 10யாரும் துணைக்கு வரவேண்டாத போர் வெற்றியினையும்,
புலவு வாள் புலர் சாந்தின்புலால் நாறும் வாளினையும், பூசிப் புலர்ந்த சந்தனம் கொண்ட மார்பினையும்,
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்முருகனது சீற்றம் போன்ற சீற்றத்தையும் கொண்ட அச்சம் பொருந்திய தலைவனே!
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்ஒன்றோடொன்று கலந்த வள்ளைப்பூவையும், மலர்ந்த ஆம்பல் பூவையும்
பனி பகன்றை கனி பாகல்குளிர்ச்சியையுடைய பகன்றைப்பூவையும், பழத்தையுடைய பாகற்பூவையும் உடைய
கரும்பு அல்லது காடு அறியா                       15கரும்பு தவிர வேறு காட்டை அறியாத
பெரும் தண் பணை பாழ் ஆகபெரிய மருதநிலங்கள் பாழ்படும்படி
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினைகாவலையுடைய நல்ல நாட்டை எரியூட்டினாய்,
நாம நல் அமர் செய்யஅஞ்சத்தக்க நல்ல போரைச் செய்வதற்கு
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறேஉன் எண்ணத்திற்கேற்ப ஒன்றுபட்டுப் போரிட்டன பெருமானே, உன் களிறுகள்.
  
# 17 குறுங்கோழியூர் கிழார்# 17 குறுங்கோழியூர் கிழார்
தென் குமரி வட_பெருங்கல்தென்திசையில் குமரி, வடதிசையில் இமயமலை,
குண குட கடலா எல்லைகிழக்கிலும் மேற்கிலும் கடல் ஆகியவையே எல்லையாக
குன்று மலை காடு நாடுஇடைப்பட்ட இடத்தின் குன்றுகளும், மலைகளும், காடுகளும், நாடுகளும் என இவற்றை ஆள்வோர்
ஒன்று பட்டு வழிமொழியஒன்றுபட்டு வழிபாடு மொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி                    5தீய செயலைப் போக்கி, செங்கோலைத் திருத்தமாகக் கொண்டு,
படுவது உண்டு பகல் ஆற்றிநேரிதான இறையால் உண்டு, நடுவுநிலையைச் செய்து,
இனிது உருண்ட சுடர் நேமிஇனிமையாக உருண்ட ஒளியையுடைய ஆட்சிச்சக்கரத்தால்
முழுது ஆண்டோர் வழி காவலநிலம் முழுதையும் ஆண்டோரின் மரபினைக் காப்பவனே!
குலை இறைஞ்சிய கோள் தாழைகுலை தாழ்ந்து கொள்ளத்தக்கதாய் அமைந்த தென்னையையும்,
அகல் வயல் மலை வேலி                      10அகன்ற வயல்வெளியையும், மலையாகிய வேலியையும்
நிலவு மணல் வியன் கானல்நிலவொளி போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரைச் சோலைகளையும்,
தெண் கழி மிசை தீ பூவின்தெளிந்த உப்பங்கழிகளில் தீப்பிடித்தது போன்ற பூக்களையும் கொண்ட
தண் தொண்டியோர் அடு பொருநகுளிர்ந்த தொண்டி மக்களின் வெற்றி மிக்க வீரனே!
மா பயம்பின் பொறை போற்றாதுயானையைப் பிடிக்கும் குழியின்மேல் பரவின பொய்மூடியின் பாரம்தாங்கும் சக்தியை மதிக்காமல்
நீடு குழி அகப்பட்ட                              15நெடிய குழியினில் அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்பெருமையும், மிக்க வலிமையும் உடைய,
கோடு முற்றிய கொல் களிறுமுதிர்ச்சியுற்ற கொம்பினையுடைய, கொல்லும் களிறு
நிலை கலங்க குழி கொன்றுகுழியின் நிலை சரிய அதனைத் தூர்த்து,
கிளை புகல தலைக்கூடி ஆங்குதன் இனம் விரும்ப, அதனோடு சேர்ந்தாற்போல,
நீ பட்ட அரு முன்பின்                            20பொறுப்பதற்கு அரிய வலிமையால் பகைவரை மதியாமல், நீ அடைந்த
பெரும் தளர்ச்சி பலர் உவப்பபெரும் பின்னடைவினை, பலரும் மகிழும்படியாக
பிறிது சென்று மலர் தாயத்துவேறொரு சூழ்ச்சியால்போய் பரந்த உரிமையையுடைய இடத்தின்
பலர் நாப்பண் மீக்கூறலின்உன் சுற்றத்தார் பலரின் நடுவே புகழ்ந்து சொல்லப்படுதலால், 
உண்டாகிய உயர் மண்ணும்நீ சிறைப்படும் முன் உன்னிடம் தோற்றவர்கள் தாம் இழந்த உயர்ந்த தம் நிலத்தையும்,
சென்று பட்ட விழு கலனும்                 25உன்னிடம் சென்ற தம் சிறந்த அணிகலன்களையும், நீ இப்போது வந்துவிட்டதால்
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும்திரும்பப் பெற முடியும் உன் நெஞ்சு தமக்கு உரித்தாகப் பெற்றால் என்று நினைத்தும்,
ஏந்து கொடி இறை புரிசைஉன் வரவை எதிர்பாராமல், தம் அரசைக் கைப்பற்றிய பகைவர் எடுத்த கொடியையுடைய உயர்ந்த மதிலையும்
வீங்கு சிறை வியல் அருப்பம்மிக்க காவலையுடைய அகன்ற தமது அரண்களையும்
இழந்து வைகுதும் இனி நாம் இவன்இனி தாம் உன்னிடம் திரும்ப இழந்துபோவோம், நீ
உடன்று நோக்கினன் பெரிது எனவும்          30வெகுண்டு பார்ப்பாய் மிகுதியாக என்று நினைத்தும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்பகை வேந்தர் உனக்கு ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமான உன்
ஆற்றலொடு புகழ் ஏத்திஆற்றலோடு, உன் புகழையும் உயர்த்திக் கூறி
காண்கு வந்திசின் பெரும ஈண்டியஉன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன், பெருமானே! ஒன்றுசேர்ந்த
மழை என மருளும் பல் தோல் மலை எனமேகங்கள் என்று எண்ணி மருளத்தக்க பல கேடகங்களையும், மலை என்று எண்ணி
தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை         35வண்டுகள் வந்து தங்கும் பெரிய பலவான யானைகளையும்,
உடலுநர் உட்க வீங்கி கடல் எனபகைவர் பயப்படும்படியாகப் பெருத்து, கடல் என்று நினைத்து
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாதுமேகங்கள் நீரினை முகக்க இறங்கும் படையினையும், நீங்காத
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்பநஞ்சு சுரக்கும் பல்லினையுடைய பாம்புகளின் தலை நடுங்க
இடி என முழங்கும் முரசின்இடிக்கும் இடியைப் போன்று முழங்கும் முரசினையும்
வரையா ஈகை குடவர் கோவே                   40குறைவில்லாமல் கொடுக்கும் கொடைப்பண்பையும் கொண்ட குடநாட்டவர் வேந்தனே!
  
# 18 குடபுலவியனார்# 18 குடபுலவியனார்
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇமுழங்குகின்ற கடலால் முழுவதும் சூழப்பட்டு
பரந்துபட்ட வியன் ஞாலம்பரந்து கிடக்கின்ற அகன்ற உலகத்தைத்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇதம்முடைய முயற்சியால் கைப்பற்றித் தம் புகழை நிலைநிறுத்தி
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்தாம் ஒருவராகவே ஆண்ட ஆற்றல் மிக்கோரின் வழியில் தோன்றியவனே!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய             5ஒன்றைப் பத்துமுறை அடுக்கிய கோடி என்னும் எண்ணைக் கடைசி எண்ணாகச் செய்த
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானேபெரிய அளவினதாகுக உன் ஆயுள்,
நீர் தாழ்ந்த குறும் காஞ்சிநீர் மேல் தாழ்ந்திருக்கும் குட்டையான காஞ்சிமரத்தின்
பூ கதூஉம் இன வாளைபூவினைக் கவ்விப்பிடிக்கும் கூட்டமான வாளைமீன்களையும்,
நுண் ஆரல் பரு வரால்சிறிய ஆரல் மீன்களையும், பருத்த வரால் மீன்களையும்,
குரூஉ கெடிற்ற குண்டு அகழி                       10நிறமுள்ள கெடிற்று மீன்களையும் கொண்ட குழிவான கிடங்கினையும்,
வான் உட்கும் வடி நீள் மதில்வானமே அஞ்சும் திருந்திய நெடிய மதிலையும் உடைய
மல்லல் மூதூர் வய வேந்தேவளம்பொருந்திய பழைய ஊரினையுடைய வலிமையுள்ள வேந்தனே!
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும்இறந்தபின் போகும் மறுமை உலகத்தில் நுகரும் செல்வத்தை விரும்பினாலும்,
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கிஉலகத்தைக் காப்பவரின் தோள் வலிமையைக் கெடுத்து
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த                   15நீ ஒருவனே தலைவனாக ஆவதை விரும்பினாலும், மிகுந்த
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன்நல்ல புகழை நிலைநிறுத்த விரும்பினாலும், அந்த விருப்பங்களுக்குரிய
தகுதி கேள் இனி மிகுதியாளதகுதியைக் கேட்பாயாக இப்போது, பெரியவனே!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்நீர் இல்லாமல் வாழமுடியாத இந்த உடம்புகளுக்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஉணவு கொடுத்தவர்கள் உயிரையும் கொடுத்தவர் ஆவர்,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்            20உணவையே முதலாவதாக உடையது அந்த உணவால் ஆகிய உடம்பு,
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரேஉணவு என்று சொல்லப்படுவது நிலமும் நீரும் ஆகும்,
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டுஅந்த நிலத்தையும் நீரையும் ஒன்றாகப் பெற்றவர்கள், இந்த உலகத்தில்
உடம்பும் உயிரும் படைத்திசினோரேஉடம்பையும் உயிரையும் படைத்தவர் ஆவர்,
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன்விதைத்துவிட்டு மழையை எதிர்நோக்கியிருக்கும் புன்செய்நிலம் இடம் அகன்ற
வைப்பு_உற்று ஆயினும் நண்ணி ஆளும்                25நிலத்தையுடையதாயினும், அதனை அடைந்து ஆளுகின்ற
இறைவன் தாட்கு உதவாதே அதனால்அரசனின் முயற்சிக்குப் பயன்படாது, அதனால்,
அடு போர் செழிய இகழாது வல்லேகொல்லும் போரையுடைய செழியனே! இதனைச் சிறிதாக எண்ணாமல், விரைந்து
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகநிலம் நெகிழ்வாக இருக்கும் இடங்களில் நீர்நிலைகள் பெருகும்படி
தட்டோர் அம்ம இவண் தட்டோரேநீரைத் தடுத்து நிறுத்தியவர், இந்த உலகத்தில் தம் புகழையும் நிலைநிறுத்துவார்,
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே                        30அவ்வாறு நிலைநிறுத்தாதவர் தம் புகழையும் நிலைநிறுத்தாதவரே ஆவர்.
  
# 19 குடபுலவியனார்# 19 குடபுலவியனார்
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கைஒலிக்கின்ற கடல் சூழ்ந்த மண் திணிந்த அகன்ற உலகத்தில்,
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்துதமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்தில்,
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நிலைபெற்ற உயிர்கள் பலவாக இருந்தாலும், அவற்றைக் கொள்ளும் கூற்றுவன் ஒருவனே என்பதை
நின்னொடு தூக்கிய வென் வேல் செழியஉன்னோடு சீர்தூக்கி ஒப்புமை காணும்படியான வெற்றிதரும் வேலையுடைய செழியனே!
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய       5பெரிய புலியைப் பிடிப்பதற்காக வேட்டுவன் எந்திரம் அறிந்து மாட்டிவைத்த
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பிபெரிய கல்லையுடைய அடார் என்னும் கற்பொறியைப் போல் இருக்கும் என்று விருப்பத்துடன்
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கிநான் தழுவினேன் அல்லவா! அச்சத்தால் கலங்கி
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போலமலையிலே தங்கின குருவிக்கூட்டம் போல,
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானைஅம்பு சென்று தைத்த பொறுப்பதற்கு அரிய புண்ணையுடைய யானையின்
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து                10உள்ளே துளையையுடைய பெரிய கையை அதன் வாயோடு சேர்த்துத் துண்டித்து, அந்த யானை
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரளஉழுகின்ற கலப்பையைப் போன்று நிலத்தின் மேல் விழுந்து புரள
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்வெட்டிப் போர்க்களத்தின் மீது வீழ்த்திய ஏந்திய வாளையுடைய வெற்றிவீரர்களாய்
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர்எம் தலைவனுடன் இருந்தார் எமது புல்லிய தலையையுடைய புதல்வர்கள்
இன்ன விறலும் உள-கொல் நமக்கு எனஇப்படிப்பட்ட வெற்றி நமக்கும் உண்டோ என்று
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி         15முதிய மறக்குடியில் பிறந்த பெண்கள் இன்புற்று மனம்கசிந்து அழ, அதைக் கண்டு வெட்கப்பட்டு
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலைகூற்றுவன் இரங்கிய அச்சம்தரும் போர்க்களத்தில்
எழுவர் நல் வலம் கடந்தோய் நின்எழுவரின் மிகுந்த வலிமையை வென்றவனே! உன்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பேகழுவப்பட்டு ஒளிரும் முத்தாரம் கிடந்த உன் மார்பை (- நான் தழுவினேன் அல்லவா!)
  
# 20 குறுங்கோழியூர்கிழார்# 20 குறுங்கோழியூர்கிழார்
இரு முந்நீர் குட்டமும்பெரிய கடலின் ஆழமும்,
வியன் ஞாலத்து அகலமும்அகன்ற உலகத்தின் பரப்பும்,
வளி வழங்கு திசையும்காற்று இயங்கும் திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்குஎந்தவிதப் பற்றுக்கோடுமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப்படுகின்ற
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை    5அவை அனைத்தையும் அளந்து அறிந்தாலும், நீ அளப்பதற்கு அரியவன் –
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும்உன்னுடைய அறிவு, இரக்கம், மிகுந்த பரிவு ஆகியவற்றில்;
சோறு படுக்கும் தீயோடுசோறு ஆக்கும் நெருப்பின் வெம்மையுடன்,
செம் ஞாயிற்று தெறல் அல்லதுசிவந்த ஞாயிற்றின் வெம்மையையும் அன்றி
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரேவேறு பகைமையின் வெம்மையை அறியார் உன் ஆட்சியில் வாழ்வோர்;
திரு_வில் அல்லது கொலை வில் அறியார்              10வானவில்லை அன்றி கொலைசெய்யும் வில்லை அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்ஏர்ப்படையை அன்றி போர்ப்படையை அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அபோர்செய்யும் திறமையை அறிந்த வீரருடனே பகைவர் மாய, அந்தப்
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டுபகைவரின் மண்ணைக்கொண்டு உண்ணும் தலைவனே! உன் நாட்டிலுள்ள
வயவு_உறு மகளிர் வேட்டு உணின் அல்லதுசூல்கொண்ட மங்கையர் வேட்கையினால் உண்டால் அன்றி
பகைவர் உண்ணா அரு மண்ணினையே              15பகைவர் உண்ணாத அரிய மண்ணினை உடையவனே!
அம்பு துஞ்சும் கடி அரணால்அம்புகள் வேலையின்றி இருக்கும் காவல் மிகுந்த அரணையும்
அறம் துஞ்சும் செங்கோலையேஅறம் நிலைபெற்ற செங்கோலையும் உடையவன் நீ;
புது புள் வரினும் பழம் புள் போகினும்புதுப்பறவைகளின் வரவு, பழைய பறவைகள் நீங்குதல் ஆகிய தீய சகுனங்கள் என்ன நேர்ந்தாலும்
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினைமனம் சஞ்சலப்படாத சேமமாகிய பாதுகாவலை உடையவன்;
அனையை ஆகன் மாறே                 20நீ அத்தகையவனாக இருப்பதினால்
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மேஉலகத்து நிலைபெற்ற உயிர் எல்லாம் உனக்கு அஞ்சும்.
  
  
  
  
  
# 21 ஐயூர் மூலங்கிழார்# 21 ஐயூர் மூலங்கிழார்
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல்உன்னைப் பாடுகின்ற புலவர்களின் புலைமையின் எல்லையைக் கடந்த புகழ்மிக்க தலைவனே!
நில வரை இறந்த குண்டு கண் அகழிநிலத்தின் எல்லையைக் கடந்து ஆழமான இடத்தையுடைய அகழி,
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின்வானத்தைத் தொடுவது போன்ற உயர்ந்த மதில், வானத்தில்
மீன் பூத்து அன்ன உருவ ஞாயில்மீன்கள் பூத்துக்கிடப்பதைப் போன்ற வடிவையுடைய சூட்டு என்னும் கோட்டையின் ஏவறைகள்
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை             5ஞாயிற்றின் கதிர்களும் நுழையமுடியாதபடி நெருங்கி வளர்ந்த மரங்கள் செறிந்த காவற்காடு,
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்நெருங்க முடியாத சிற்றரண்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட கானப்பேர் எயில் என்னும் அரணை (நீ கைப்பற்ற)
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டியவலிமையான கைகளையுடைய கொல்லனால் செந்தீயில் இடப்பட்ட
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது எனஇரும்பு தன் வெப்பத்தால் உறிஞ்சிக்கொண்ட நீரினை மீட்பதைக்காட்டிலும் மீட்பது அரிது என்று
வேங்கைமார்பன் இரங்க வைகலும்வேங்கைமார்பன் வருந்தும்படி, ஒவ்வொருநாளும்
ஆடு கொள குழைந்த தும்பை புலவர்           10போரிடும்போதெல்லாம் உடைத்துச்சூடியபின் தழைத்த தும்பையையுடைய, புலவர்கள்
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தேபாடுகின்ற துறைகள் எல்லாம் முழுவதும் முடிந்துவிட்ட, வெற்றியினையுடைய வேந்தனே!
இகழுநர் இசையொடு மாயஉன்னை மதிக்காத பகைவர் தம் பெயருடனே மாய்ந்துபோக,
புகழொடு விளங்கி பூக்க நின் வேலேவெற்றிப்புகழுடனே விளங்கிப் பொலிக உனது வேல்.
  
# 22 குறுங்கோழியூர் கிழார்# 22 குறுங்கோழியூர் கிழார்
தூங்கு கையான் ஓங்கு நடையதொங்கிக்கொண்டு அசைகின்ற தும்பிக்கையுடனே, தலை நிமிர்ந்த நடையை உடையன;
உறழ் மணியான் உயர் மருப்பினமாறிமாறி ஒலிக்கும் மணியுடனே, உயர்ந்த கொம்பினை உடையன;
பிறை நுதலான் செறல் நோக்கினபிறை போன்று இடப்பட்ட மத்தகத்துடனே, சினம் பொருந்திய பார்வையை உடையன;
பா அடியால் பணை எருத்தினபரந்த அடியுடனே, பெரிய கழுத்தை உடையன;
தேன் சிதைந்த வரை போல                    5தேனடை கலைந்த மலையைப் போல
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்துதேனீக்கள் ஆரவாரிக்கும் மணக்கும் மதநீருடன்
அயறு சோரும் இரும் சென்னியபுண்ணிலிருந்து வடியும் நீருடன் பெரிய தலையை உடையன;
மைந்து மலிந்த மழ களிறுஇப்படிப்பட்ட வலிமை மிகுந்த இளங்களிறுகள்
கந்து சேர்பு நிலைஇ வழங்ககம்பத்தை ஒட்டி நின்ற நிலையிலேயே அசைந்துகொண்டிருக்க,
பாஅல் நின்று கதிர் சோரும்                       10பக்கத்தில் நின்று கதிர்களைப் பரப்பும்
வான் உறையும் மதி போலும்வானத்தில் இருக்கும் திங்கள் போன்ற
மாலை வெண்குடை நீழலான்முத்துமாலையையுடைய வெண்கொற்றக்குடையின் நிழலில்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்கதம் பக்கத்தில் வாள் இல்லாதார் அக்குடையே காவலாக உறங்க;
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்தஅசைந்தாடும் செந்நெற்கதிரால் வேயப்பட்ட
ஆய் கரும்பின் கொடி கூரை                 15மெல்லிய கரும்புகளே கழைகளாகக் கட்டப்பட்ட ஒருங்குபட்ட கூரை
சாறு கொண்ட களம் போலவிழா எடுத்து முடித்த இடம் போல
வேறு_வேறு பொலிவு தோன்றபல்வேறுபட்ட அழகுடன் விளங்க,
குற்று ஆனா உலக்கையால்குற்றிக்கொண்டே இருக்கும் உலக்கையொலியுடன்
கலி சும்மை வியல் ஆங்கண்மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற இடத்தில்,
பொலம் தோட்டு பைம் தும்பை                        20பொன்னால் செய்யப்பட்ட இதழ்களையுடைய பசும் தும்பையுடன்,
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇமேலே ஆடுகின்ற தலையையுடைய பனந்தோட்டைச் செருகி
சின மாந்தர் வெறி குரவைசினம் கொண்ட வீரர் வெறியாடும் குரவைக் கூத்தின் ஒலி
ஓத நீரின் பெயர்பு பொங்கஓதத்தையுடைய கடல் ஒலி போல கிளர்ந்து பொங்க,
வாய் காவாது பரந்து பட்டஇன்ன இடம் என்று பாராமல், எங்கும் பரந்து கிடக்கும்
வியன் பாசறை காப்பாள                     25அகன்ற பாசறையின் காவலனே!
வேந்து தந்த பணி திறையான்பகையரசர் பணிந்து தந்த திறையால்
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்தம்மைச் சேர்ந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்
ஓங்கு கொல்லியோர் அடு பொருநஉயர்ந்த கொல்லிமலையோரின் கொலைத்தொழில் மிக்க பொருநனே!
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய்யானையின் பார்வையைப் போன்ற பார்வையைக் கொண்ட வெற்றியை விரும்பும் சேய் என்பவனே!
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே             30வாழ்க நீ பெருமானே! உன் எல்லையில்லாத செல்வத்தை
நின் பாடிய வயங்கு செந்நாஉன்னைப் பாடியதால் விளங்கிய செம்மையான நா,
பின் பிறர் இசை நுவலாமைபின்னர் பிறர் புகழைச் சொல்லாதவண்ணம்
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோதனக்கென வைத்துக்கொள்ளாது பிறர்க்குக் கொடுக்கும் ஆற்றல் மிக்க எம் வேந்தனே!
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடேமாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து          35தேவர் உலகத்தைப் போன்றது என்று பிறர் சொல்லக் கேட்டு வந்து
இனிது காண்டிசின் பெரும முனிவு இலைஎன் கண்ணுக்கு இனிதாகக் கண்டேன், பெருமானே! வெறுப்பற்ற முயற்சியுடன்
வேறு புலத்து இறுக்கும் தானையோடுவேற்று நாட்டில் சென்று தங்கும் படைகளுடன்
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறேஉன் நாட்டில் சோறு மிகுதியாகச் செயல்படுவாய், ஏனெனில் நீ சோம்பலில்லாதவன்.
  
# 23 கல்லாடனார்# 23 கல்லாடனார்
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇஉள்கூடு இல்லாத வலிமையான வயிரம் பாய்ந்த கம்பத்தில் கட்டிக்கிடப்பதை வெறுத்து
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும்களிறுகள் சென்று படுத்துக்கொண்டதாலும், நீர் உண்பதாலும் கலங்கிய நீர்த்துறையையும்,
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்கார்காலத்து மணமுள்ள கடம்பின் பச்சை இலையினாலான மாலையினையுடைய
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின்சூரபன்மனைக் கொன்ற முருகனின் கூளிச் சுற்றத்தைப் போன்ற உன்னுடைய
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்              5கூர்மையான நல்ல அம்பினையும் வளைந்த வில்லையும் உடைய மறவர்கள்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்தமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, வேண்டாமற்போட்டு மீந்துபோனதைப்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்பகைவர் பயன்படுத்தமுடியாதபடி சிதறிப்போட்ட நிலங்களையும்,
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்நன்றாக வடிவமைக்கப்பட்ட கோடாலி வெட்டுவதால், ஊர்கள்தோறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர்காவல் மரங்கள் சாய்க்கப்பட்ட சோலைகளையும், பரந்த நகரங்களில்
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப                10சிறந்த தொழில்திறம் வாய்ந்த நல்ல இல்லங்களில் விரும்பும் சமையல் தீயைக் கெடுக்க
கனை எரி உரறிய மருங்கும் நோக்கிபெரும் தீ முழங்கிய பக்கத்தையும் பார்த்துப்
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்றுபகைவர் வெட்கப்படும்படியாக நாள்தோறும் அவர் நாட்டுக்குள் முன்னேறிச் சென்று
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும்இன்னமும் இத்தன்மையுள்ள பலவற்றை இவன் செய்வான், எவரும்
துன்னல் போகிய துணிவினோன் எனதன்னை நெருங்கமுடியாத செயல்தெளிவுடையோன் என்று எண்ணும்படியாக,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை            15பாரம் தாங்காமல் நிலமே நெளியும்படியாகக் கூடிய பெரும் படையினையுடைய
ஆலங்கானத்து அமர் கடந்து அட்டதலையாலங்கானத்தின் போரை எதிர்நின்று கொன்ற
கால முன்ப நின் கண்டனென் வருவல்காலனைப் போன்ற வலிமையினை உடையவனே! உன்னைக் காண்பதற்கு வந்தேன்,
அறு மருப்பு எழில் கலை புலி_பால் பட்டு எனகொம்பு இழந்த அழகிய ஆண்மான் புலிவசம் அகப்பட்டதாக,
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணைசிறிய குட்டியை அணைத்துக்கொண்ட துள்ளுகின்ற நடையினையுடைய மென்மையான பெண்மான்
பூளை நீடிய வெருவரு பறந்தலை                      20பூளைச்செடி ஓங்கி வளர்ந்த அஞ்சத்தக்க பாழ்பட்ட நிலத்தில்
வேளை வெண் பூ கறிக்கும்வெண்மையான வேளைப்பூவைக் கொறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடேஆள் நடமாட்டம் இல்லாத அரிய காட்டு வழியில் – (உன்னைக் காண்பதற்கு வந்தேன்,)
  
# 24 மாங்குடி மருதனார்# 24 மாங்குடி மருதனார்
நெல் அரியும் இரும் தொழுவர்நெல் அறுக்கும் திறம் மிக்க உழவர்கள்
செம் ஞாயிற்று வெயில் முனையின்எரிக்கும் சூரியனின் வெயிலை வெறுத்தால்
தெண் கடல் திரை மிசை பாயுந்துதெளிந்த கடல் அலைகளின் மேலே பாய்கின்ற – 
திண் திமில் வன் பரதவர்உறுதியான படகினை உடைய வலிமை மிக்க மீனவர்கள்
வெப்பு உடைய மட்டு உண்டு                 5வெம்மையையுடைய கள்ளைக் குடித்து
தண் குரவை சீர் தூங்குந்துமெல்லிய குரவைக்கூத்திற்கு ஏற்ற தாளத்துடன் ஆடுகின்ற – 
தூவல் கலித்த தேம் பாய் புன்னைகடலிலிருந்து தெறித்து விழும் நீர்த்திவலைகளால் தழைத்துவளர்ந்த தேன் சொட்டும் புன்னையின்
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர்மெல்லிய பூங்கொத்துக்களைத் தலைமாலையாய் சூடிய ஆண்கள்
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்துஒளிரும் வளையல்களை அணிந்த பெண்களுக்கு அக் குரவை ஆட்டத்தில் தம் தலைக்கையைத் தருகின்ற – 
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல்                10வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த குளிர்ந்த மணமுள்ள கடற்கரைச் சோலையில்
முண்டக கோதை ஒண் தொடி மகளிர்கடல்முள்ளிப்பூவால் செய்த மாலையை அணிந்த ஒளிரும் வளையல்களை அணிந்த பெண்கள்
இரும் பனையின் குரும்பை நீரும்பெரிய பனைமரத்தின் நுங்கின் நீரும்,
பூ கரும்பின் தீம் சாறும்மென்மையான கரும்பின் இனிய சாறும்,
ஓங்கு மணல் குலவு தாழைஉயர்ந்த மணல்மேட்டில் கூட்டமாக இருக்கும் தென்னை மரத்தின்
தீம் நீரோடு உடன் விராஅய்                        15இனிய இளநீருடன் சேர்த்துக் கலந்து,
மு நீர் உண்டு முந்நீர் பாயும்இந்த மூன்று நீரையும் குடித்து கடலுக்குள் பாய்ந்து விளையாடும்
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇயகொடுத்துத் தாங்கவேண்டாத பல மக்களும் வாழும் நல்ல ஊர்கள் நிறைந்த
ஓம்பா ஈகை மா வேள் எவ்விதனக்கென வைத்துக்கொள்ளாத ஈகைக்குணமுடைய பெரிய வேள் அரசனாகிய எவ்வியின்
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிநீர் பாயும் மதகுகளையுடைய – மிழலைக்கூற்றம் என்னும் ஊருடன், வயல்களில்
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்         20கயல் மீன்களை மேயும் நாரைகள் வைக்கோல்போரில் தங்கும்,
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர்பொன்னாலான முகபடாம் அணிந்த யானைகளையுடைய பழைய முதிர்ந்த வேளிரது
குப்பை நெல்லின் முத்தூறு தந்ததிரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக்கூற்றம் என்ற ஊரினையும் கைப்பற்றிய
கொற்ற நீள் குடை கொடி தேர் செழியவெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும், கொடியால் அழகுபெற்ற தேரினையுமுடைய செழியனே! 
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாதுநின்று நிலைப்பதாக உன் பிறந்த நட்சத்திரம், நில்லாது
படாஅ செலீஇயர் நின் பகைவர் மீனே          25பட்டுப்போவதாக உன் பகைவரின் நட்சத்திரங்கள்,
நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடுஉன்னுடைய பழையதாய் மூத்த உயிரைவிட, உயிருடன் விளங்கி
நின்று மூத்த யாக்கை அன்ன நின்முதிர்ந்த உடலைப் போன்ற உன்
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்தவெற்றியையுடைய குடியின் பழைமையும் சிறப்பும் உடைய குலத்தில் பிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்தவாட்போரால் வாழ்பவர் உன் முயற்சியின் வலிமையை வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல                  30இரக்கும் பரிசிலர் உன் கொடைப்பண்பை எடுத்துச்சொல்ல,
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்தியஒளிரும் வளையணிந்த மகளிர் பொன்னாலான கலங்களில் ஏந்திக்கொணர்ந்த
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்துகுளிர்ந்த மணங்கமழும் மதுவைக் கொடுக்க அதனை உண்டு, மகிழ்ச்சி மிகுந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அதுஅப்படி இனிதாக ஒழுகுவாயாக, பெருமானே! அந்த ஒழுக்கத்தில் நடக்க
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசைவல்லவர்களையே வாழ்ந்தோர் என்று சொல்வர், பழைய புகழுடன்
மலர் தலை உலகத்து தோன்றி                 35பரந்த இடத்தையுடைய உலகத்தில் தோன்றி, (அப்புகழ்)
பலர் செல செல்லாது நின்று விளிந்தோரேபரவும்படி ஒழுகாமல், நின்று மாய்ந்தோர் பலர் – (அவர் வாழ்ந்தார் எனப்படார்)
  
# 25 கல்லாடனார்# 25 கல்லாடனார்
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலமீன்கள் விளங்கும் வானத்தில் பரவியிருக்கும் இருள் அகன்றுபோகும்படி,
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅதுவிரைவுடன் செல்கின்ற முறைமையினையுடைய தன் இயல்பிலிருந்து வழுவாமல்
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறுவலிய வெம்மையைக் கடுமையாகக்கொண்ட அச்சம் பொருந்திய ஞாயிறு
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்குஒளி விளங்கும் திங்களோடு, நிலத்தில் விழுந்ததைப் போன்று
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை           5பகைத்துக்கொள்ளமுடியாத ஆற்றல்கொண்ட வஞ்சினம் கூறும் (இரண்டு பெரிய)வேந்தர்களை
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணிவீரர் புண்படுவதற்கு அஞ்சாத போர்க்களத்தில் மடியச் செய்து,
பிணி உறு முரசம் கொண்ட_காலைஅவர்களின் வாரால் பிணிக்கப்பட்ட முரசங்களைக் கைப்பற்றிய போழுது,
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கிநின்ற நிலையிலேயே உன்னைச் சூழ்ந்த வீரரைத் தாக்கியபோது திண்மையான பொருத்துவாய் கழன்று
சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழியசிதைவுறாமல் பிழைத்தது உன் வேல், செழியனே!
முலை பொலி அகம் உருப்ப நூறி                      10முலைகள் பொலிந்துவிளங்கும் தம் மார்பகம் வருந்துமாறு அடித்துக்கொண்டும்
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல்அறிவு மயங்கியும் அளவற்ற அழுகையால் ஆரவாரித்தும்
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூரபளிச்சென்ற நெற்றியையுடைய மகளிர் கைம்மை நோன்பினை மேற்கொள்ள,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்ஒளிரும் ஆற்றின் கருமணல் போன்ற நெளிவுகளைக் கொண்ட அழகிய மென்மையான
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டேகுவிந்த கரிய கூந்தலைக் கொய்வதைக் கண்டு – (நீ போரை நிறுத்தியதால், சிதைவுறாமல் பிழைத்தது உன் வேல்