ஐங்குறுநூறு 451-500

  
# 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து# 46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
# 451# 451
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர்கார்ப்பருவம் தொடங்கிய பொழுதில் நம்மைச் செயலற்றுப்போக விடுத்துச் சென்றவர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவதுதேரால் கொண்டுவரப்படும் விருந்தாளியாய்த் தங்குதல் எப்படி நடக்கும்?
மாற்று அரும் தானை நோக்கிவெல்ல முடியாத படையின் வலிமையைக் கருதி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலேமேலும் நீடித்திருத்தல் வேந்தனது ஆணையாயிருக்குபோது –
# 452# 452
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிவறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றேமுழங்கும் குரலையுடைய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன;
பகை வெம் காதலர் திறை தரு முயற்சிபகையை விரும்பிப் போரிடச் சென்ற காதலர் அவரிடமிருந்து திறையைப் பெற எடுக்கும் முயற்சி
மென் தோள் ஆய் கவின் மறையமென்மையான தோள்களின் சிறந்த அழகு மறைந்துபோக
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றேபொன்னால் செய்யப்பட்டது போன்ற பீர்க்கின் மலர் போன்ற பசலையைத் தோற்றுவித்தது.
  
# 453# 453
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்பள்ளங்கள்தோறும் தவளைகள் ஆரவாரிக்க, மர உச்சிகளில்
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண்இனிய குரலில் பறவையினங்கள் ஒலிக்க, அதோ பார்!
கார் தொடங்கின்றால் காலை அதனால்கார்காலம் தொடங்கிவிட்டது, சரியான பருவத்தில்; அதனால்
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர்நீர் வரத் தொடங்கிவிட்டது என் நெடும் கண்ணில்; அவரின்
தேர் தொடங்கு இன்றால் நம் வயினானேதேர் வரத் தொடங்கவில்லையே, நம் இடம் நோக்கி –
# 454# 454
தளவின் பைம் கொடி தழீஇ பையெனசெம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, மெதுவாக
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணிநிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளைக் கொண்டு
கார் நயந்து எய்தும் முல்லை அவர்கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள்; அவரின்
தேர் நயந்து உறையும் என் மாமை கவினேதேர் வருவதை விரும்பி இருக்கிறது என் மாநிற அழகெல்லாம்.
  
# 455# 455
அரசு பகை தணிய முரசு பட சினைஇஅரசனின் பகையுணர்வு தணியும்படியும், முரசின் ஒலிகள் ஓயும்படியும், சினங்கொண்டு
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றேமிகுந்த முழக்கத்தோடு மேகங்கள் கார்காலத்தைத் தொடங்கிவிட்டன;
அளியவோ அளிய தாமே ஒளி பசந்துமிக மிக இரங்கத்தக்கன அவை – மேனியின் பளபளப்பு மங்கிப்போய்
மின் இழை ஞெகிழ சாஅய்மின்னிடும் அணிகலன்கள் நெகிழ்ந்துபோகும்படி மெலிவடைந்து
தொல் நலம் இழந்த என் தட மென் தோளேதம் பழைய அழகெல்லாம் இழந்த என் பெரிய மென்மையான தோள்கள் –
# 456# 456
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ்நினைத்துப் பார்க்கமாட்டாரோ தோழி! வெண்மையான இதழ்களை உடையதாய்,
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்பகலில் காணப்படும் மதியின் தோற்றத்தில் உள்ள பகன்றையின் பெரிய மலர்கள்
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும்வெண்மையான கொடியைக் கொண்ட ஈங்கையின் பசுமையான புதர்களில் அழகாய் மலர்ந்திருக்கும்
அரும் பனி அளைஇய கூதிர்பொறுக்கமுடியாத பனியோடும் கலந்து வரும் கூதிர்ப் பருவத்தில்
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரேஒன்றாக இங்கே தங்கியிருப்பதை உறுதிசெய்து அகன்றவர் –
  
# 457# 457
பெய் பனி நலிய உய்தல் செல்லாதுபெய்யும் பனியினால் நலிவுற்று, அதினின்றும் உய்யும் வழியினைக் காணாது
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலைகுருகினங்கள் ஒலியெழுப்பும் பிரிந்திருக்க அரிதான கூதிர்ப் பருவத்தில்,
துறந்து அமைகல்லார் காதலர்பிரிந்து வாழ்தலை ஆற்றார், நம் காதலர்;
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சேமறந்து வாழ்தலை ஆற்றாது என் பேதைமை பொருந்திய நெஞ்சம்.
# 458# 458
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தனகொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன;
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்இடிமுழக்கத்தோடு சேர்ந்த மழையை எதிர்கொண்ட மழைத்துளிகளைக் கொண்ட குளிர்ச்சியான மலர்கள்
பாணர் பெரு_மகன் பிரிந்து எனபாணர் பெருமகனான தலைவன் பிரிந்துசென்றதற்காக,
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவேசிறந்த அழகினை இழந்த என் கண்களைப் போல் ஆயின.
  
# 459# 459
மெல் இறை பணை தோள் பசலை தீரமென்மையாகக் கீழிறங்கும் பருத்த தோள்களின் பசலைநிறம் மாறிப்போகும்படி,
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார்தழுவுவதற்கும் பொருந்திவருமோ? பகைவரின்
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானைகடினமான அரண்களையும் வெற்றிகண்ட சிறப்புப் பொருந்திய படையைக் கொண்ட
வெல் போர் வேந்தனொடு சென்றவெல்லும் போரினையுடைய வேந்தனோடு சென்ற
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பேநல்ல வயல்களைக் கொண்ட ஊரினனின் நறிய குளிர்ந்த மார்பு –
# 460# 460
பெரும் சின வேந்தனும் பாசறை முனியான்மிகுந்த சினத்தையுடைய வேந்தனும் பாசறை வாழ்வை வெறுக்கமாட்டான்;
இரும் கலி வெற்பன் தூதும் தோன்றாபெரிய ஆரவாரத்தையுடைய மலைகளைச் சேர்ந்தவனிடமிருந்து செய்தியும் இல்லை;
ததை இலை வாழை முழு_முதல் அசையசெறிவான இலைகளையுடைய வாழையின் மரம் முழுதும் அசையும்படி
இன்னா வாடையும் அலைக்கும்துன்பத்தைத் தரும் வாடையும் வருத்துகின்றது;
என் ஆகுவன்-கொல் அளியென் யானேஎன்ன ஆவேன், இரங்கத்தக்கவளான நானே!
  
# 47 தோழி வற்புறுத்த பத்து# 47 தோழி வற்புறுத்த பத்து
# 461# 461
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகையமேகங்கள் சிதறிய நீரின் மிகுதியால் பிடவங்கள் அரும்புகளைத் தோற்றுவித்தன;
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றேகானமும் நீர்த்துளிகளைத் தூவிவிட கார்காலம் தொடங்கிவிட்டது;
இனையல் வாழி தோழி எனையதூஉம்வருந்தவேண்டாம், வாழ்க தோழியே! சிறிதளவுகூட
நின் துறந்து அமைகுவர் அல்லர்உன்னைப் பிரிந்து இருக்கமாட்டார் –
வெற்றி வேந்தன் பாசறையோரேவெற்றியையுடைய வேந்தனின் பாசறையிலிருப்பவர்.
# 462# 462
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கியகாலமல்லாத காலத்தில் பெய்த மழையைக் கண்டு கார்காலம் என்று தவறாக எண்ணிய
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கிபேதையாகிய அழகிய கொன்றை மாலையாய்ப் பூத்திருக்கும் நிலையை நோக்கி,
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்_வயின்எதற்காக, இப்போது, மடந்தையே! உன் வருத்தம்? உன்னிடமுள்ள
தகை எழில் வாட்டுநர் அல்லர்மேம்பட்ட அழகினை வாடிப்போகச்செய்பவர் அல்ல அவர் –
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரேமொட்டுகள் மலர்கின்ற முல்லைக்காடுகளைக் கொண்ட நாட்டைக் கடந்து சென்றவர்.
  
# 463# 463
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின்புதரின் மேல் பூக்கும் நறிய மலர்களை அழகுபெறத் தொடுத்து, உன்
நலம் மிகு கூந்தல் தகை கொள புனையவனப்பு மிகுந்த கூந்தல் பொலிவுபெறுமாறு சூட்டிவிட
வாராது அமையலோ இலரே நேரார்வராமல் இருக்கமாட்டார்; பகைவரின்
நாடு படு நன் கலம் தரீஇயர்நாட்டில் கிடைக்கும் நல்ல அணிகலன்களைக் கொண்டுவருவதற்காகவே
நீடினர் தோழி நம் காதலோரேதம் வரவை நீட்டித்துள்ளார், தோழி, நம் காதலர்.
# 464# 464
கண் என கருவிளை மலர பொன் எனகண் என்னும்படியாகக் கருவிளை பூத்திருக்க, பொன் என்னும்படியாகப்
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும்பற்றியேறும் கொடியினையுடைய பீர்க்கு பெரிய புதர்களில் மலர்ந்திருக்கும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின்முன்பனிக் காலத்தை மறப்பவர் அல்லர், உன்
நல் தோள் மருவரற்கு உலமருவோரேநல்ல தோள்களைத் தழுவுவதற்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்.
  
# 465# 465
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர்நீர் பள்ளத்தில் பாய்வது போல, நிமிர்ந்த ஓட்டத்தையுடைய நெடிய தேரைக்
கார் செய் கானம் கவின் பட கடைஇகார்காலத்தால் அழகுபெற்ற கானம் பொலிவுபெறுபடியாகச் செலுத்தி,
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்கநெருங்கிக்கிடக்கும் மலர்மாலைகள் உள்ள மார்பினை நீ இனிமையுடன் தழுவிக்கொள்ள
வருவர் வாழி தோழிவருவார், வாழ்க, தோழியே!
செரு வெம் குருசில் தணிந்தனன் பகையேபோரை விரும்பும் அரசன் தணிந்துவிட்டான் தன் பகையுணர்வில்.
# 466# 466
வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டுவேந்தன் விடுத்த சிறப்பான கடமையை முடித்து, ஏந்திய கொம்புகளையுடைய
அண்ணல் யானை அரசு விடுத்து இனியேதலைமைப் பண்புள்ள யானையையுடைய அரசனிடமிருந்து விடைபெற்று, இப்போது,
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல்குறித்துச் சென்ற நாளில் வீட்டுக்கு வருவார் என்பதனை – பெண்ணின் நல்ல இயல்புகளுடன்
காமர் சுடர் நுதல் விளங்கும்கண்டோர் விரும்பும் ஒளிவிடும் நெற்றி விளங்கும்
தே மொழி அரிவை தெளிந்திசின் யானேஇனிய மொழிகளைக் கொண்ட பெண்ணே! தெளிவாக அறிவேன் நான்.
  
# 467# 467
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்துபுனைந்திருக்கும் அணிகலன்கள் நெகிழுமாறு மெலிந்துபோய் மிகவும் நொந்து
இனையல் வாழியோ இகுளை வினை_வயின்வருந்தவேண்டாம் வாழ்க, தோழியே! போருக்காகச்
சென்றோர் நீடினர் பெரிது என தங்காதுசென்றோர் மிகவும் நீண்டநாள் தங்கிவிட்டனர் என்று, இனியும் அங்கு இருக்காமல்
நம்மினும் விரையும் என்பநாம் ஆசைப்பட்டதைக் காட்டிலும் விரைந்து வருவான் என்பர் –
வெம் முரண் யானை விறல் போர் வேந்தேகொடிய பகையுணர்வைக் கொண்ட யானைகள் வெற்றியைத் தரும் போரினை மேற்கொண்ட வேந்தன்.
# 468# 468
வரி நுணல் கறங்க தேரை தெவிட்டவரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார் தொடங்கின்றே காலை இனி நின்கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்; இனிமேல் உன்
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆகஅழகாய் இறங்கும் பருத்த தோள்களுக்கு நல்ல விருந்தாக
வடி மணி நெடும் தேர் கடைஇநன்கு வடித்த மணிகள் கட்டப்பட்ட நெடிய தேரைச் செலுத்தி
வருவர் இன்று நம் காதலோரேவருவார், இன்று, நம் காதலர்.
  
# 469# 469
பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும்காய்ந்துகொண்டிருக்கும் பசிய தினையைச் செம்பூழ்ப் பறவைகள் கவர்ந்து செல்லும்
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்புகடினமான நிலப்பகுதியைக் கொண்ட நாட்டினனை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதற்காக, வலப்பக்கமாய் உயர்ந்து
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடுஅழகிய பரப்பைக் கொண்ட பெரிய வானம் அதிரும்படியாக, இடியுடன்
பெயல் தொடங்கின்றே வானம்மழையைத் தொடங்கிவிட்டன மேகங்கள்.
காண்குவம் வம்மோ பூ கணோயேகாண்போம்! வா! பூப்போன்ற கண்ணினாய்!
# 470# 470
இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்இந்தப் பெரிய நிலம் குளிர்ந்துபோகுமாறு வீசி, நாள்முழுதும்
அரும் பனி அளைஇய அற்சிர காலைகடுமையான பனியைச் சேர்த்துக்கொண்டு வரும் முன்பனிக்காலப் பொழுதிலும்
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழைநம்மை நினைத்துப்பார்க்கமாட்டார் காதலர் என்றால், ஒளிரும் அணிகலன்கள் அணிந்தவளே!
சிறப்பொடு விளங்கிய காட்சிசிறப்போடு விளங்கும் தோற்றத்தையுடைய
மறக்க விடுமோ நின் மாமை கவினேஉன் மாநிற மேனியழகு அவரை மறக்கவிடுமோ?
  
# 48 பாணன் பத்து# 48 பாணன் பத்து
# 471# 471
எல் வளை நெகிழ மேனி வாடஒளியுமிழும் வளைகள் கழன்று ஓட, மேனி வாடிப்போக,
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்கபல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீரால் அலைப்புண்டு கலங்கிப்போக,
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில்பிரிந்துசென்றான், உண்மையாக, வீரம் பொருந்திய தலைவன்;
அது மற்று உணர்ந்தனை போலாய்அதனைத் தெளிவாக உணர்ந்தவன் போல் இல்லை நீ,
இன்னும் வருதி என் அவர் தகவேஇப்பொழுதும் வந்து நிற்கிறாய்; என்ன ஆயிற்று அவரின் தகுதி?
# 472# 472
கைவல் சீறியாழ் பாண நுமரேசீறியாழை இயக்குவதில் கைவன்மை பெற்ற பாணனே! உன் தலைவர்
செய்த பருவம் வந்து நின்றதுவேதாமே சொல்லிச்சென்ற கார்ப்பருவம் வந்து நிலைபெற்றுவிட்டது;
எம்மின் உணரார் ஆயினும் தம்_வயின்என்னைப் பற்றி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், தம்மிடமுள்ள
பொய் படு கிளவி நாணலும்பொய்பட்டுப்போன சொற்களுக்காக வெட்கப்படவும்
எய்யார் ஆகுதல் நோகோ யானேசெய்யாமல் இருப்பதை எண்ணி வருந்துகிறேன் நான்.
  
# 473# 473
பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிபலரும் புகழ்கின்ற சிறப்பினையுடைய உன்னுடைய தலைவரை நினைத்து
செலவு நீ நயந்தனை ஆயின் மன்றஅவரிடம் செல்பவதற்கு நீ விரும்பினால், கட்டாயமாக,
இன்னா அரும் படர் எம்_வயின் செய்ததுன்பந்தரும் பொறுத்தற்கரிய வருத்தத்தை எனக்குச் செய்த,
பொய் வலாளர் போலபொய் கூறுவதில் வல்லவரான அவரைப் போல,
கைவல் பாண எம் மறவாதீமேதேர்ச்சிபெற்ற பாணனே! என்னை மறந்துவிடாதே!
# 474# 474
மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர்குற்றமற்ற என் ஒளிவிடும் நெற்றி முன்போல் விளங்க, பகைவர்கள்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடுகட்டிய அரண்களை அழித்த போர்வன்மை மிக்க படையுடன்
கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇவிரைவாக ஓடும் நெடிய தேரினைக் காட்டுவழிகள் வருந்துமாறு செலுத்திச்
சென்றவர் தருகுவல் என்னும்சென்றவரை, அழைத்துவருவேன் என்று கூறும்
நன்றால் அம்ம பாணனது அறிவேபாணனது அறிவு மிகவும் நன்றாய் இருக்கிறது!
  
# 475# 475
தொடி நிலை கலங்க வாடிய தோளும்தோள்வளைகள் தம் நிலையிலிருந்து நெகிழ்ந்துபோகுமாறு வாடிப்போன தோள்களையும்,
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கிமாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன்பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்!
எம் வெம் காதலொடு பிரிந்தோர்எம்முடைய விருப்பமான காதலோடு பிரிந்துசென்ற
தம்மோன் போலான் பேர் அன்பினனேதன் தலைவரைப் போன்றவன் அல்ல இவன்; பேரன்பினன்!
# 476# 476
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்பகூட்டமான மேகங்கள் கருமை மிகுந்து முழக்கமிட
பருவம் செய்தன பைம் கொடி முல்லைகார்ப்பருவத்தைத் தோற்றுவித்தது, பசிய கொடியைக் கொண்ட முல்லை;
பல் ஆன் கோவலர் படலை கூட்டும்பல பசுக்களைக் கொண்ட கோவலர் படலைமாலையைச் சேர்த்துக்கட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோபிரிந்தார் மேல் அன்பு இல்லாத மாலைக்காலத்தையும் உடையதோ,
அன்பு இல் பாண அவர் சென்ற நாடேஎன் மீது அன்பற்ற பாணனே! அவர் சென்ற நாடு?
  
# 477# 477
பனி மலர் நெடும் கண் பசலை பாயகுளிர்ச்சியான மலர் போன்ற நீண்ட கண்களில் பசலைநோய் பரவ,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்பிணக்கம் கொண்ட துயரத்தோடு பொறுத்தற்கரிய துன்பத்தில் வாடுவோளின்
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆகசெயலற்றுப்போன நெஞ்சத்திற்கு ஆறுதலான துணையாகச்
சிறு வரை தங்குவை ஆயின்சிறிது காலம் தங்கியிருப்பாயாயின்
காண்குவை-மன்னால் பாண எம் தேரேகாண்பாய் – நிச்சயமாக, பாணனே! எனது தேரினை.
# 478# 478
நீடினம் என்று கொடுமை தூற்றிபிரிவுக்காலத்தை நீட்டித்துக்கொண்டே செல்கிறேன் என்பதைக் கொடும் செயலாகத் தூற்றி,
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்துவாடிப்போன நெற்றியையுடையவளாய் ஆகி, மனம் மாறுபட்டு
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய்நாம் விரும்பும் என் காதலி பிரிவுநோய் மிகுந்து மெலிந்துபோய்ச்
சொல்லியது உரை-மதி நீயேசொல்லிவிட்டது என்ன என்று கூறுவாய் நீ! –
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கேமுல்லைப்பண்ணை இனிதாகப் பாடும் நல்ல யாழையுடைய பாணனே! மீண்டும் எனக்கு –
  
# 479# 479
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனியசொல்லுவாய் பாணனே! ஒவ்வொருமுறை சொல்லும்போதும் அது இனிக்கிறது!
நாடு இடை விலங்கிய எம்_வயின் நாள்-தொறும்நாடுகள் இடையே குறுக்கிட்டுக்கிடக்கும் – என்னை, நாள்தோறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடைபொறுத்தற்கரிய பனியோடு கலந்துவரும் இரக்கமற்ற வாடைக்காற்று,
தனிமை எள்ளும் பொழுதில்என் தனிமையினை எள்ளி நகையாடும் பொழுதில்,
பனி மலர் கண்ணி கூறியது எமக்கேகுளிர்ந்த மலர்போன்ற கண்ணையுடையவள் கூறியதை – எனக்கு –
# 480# 480
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்குஉனக்கு நாங்கள் பாணர்கள் அல்ல; எங்களுக்கு
நீயும் குருசிலை அல்லை மாதோநீயும் தலைவனும் அல்ல;
நின் வெம் காதலி தன் மனை புலம்பிஉன்னை விரும்பும் காதலி, தன் வீட்டிலிருந்து தனிமைத் துயரில் வருந்தி,
ஈர் இதழ் உண்கண் உகுத்தஈரமான இதழ்களையுடைய மையுண்ட கண்கள் வடித்த
பூசல் கேட்டும் அருளாதோயேஅழுகையைக் கேட்டும் இரங்காதிருக்கிறாய்!
  
# 49 தேர் வியங்கொண்ட பத்து# 49 தேர் வியங்கொண்ட பத்து
# 481# 481
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்வளைந்து இறங்கிய பருத்த தோள்களையும், அழகிய வரிகளைக் கொண்ட அல்குலையும் கொண்ட,
சே இழை மாதரை உள்ளி நோய் விடசிவந்த அணிகலன் அணிந்த தலைவியை எண்ணி, அவளின் நோய் தீர,
முள் இட்டு ஊர்-மதி வலவ நின்தார்க்குச்சியின் முள்ளால் குத்தி, விரைவாகச் செலுத்து, பாகனே! உன்
புள் இயல் கலி_மா பூண்ட தேரேபறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.
# 482# 482
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆகதெரிந்தெடுத்த அணிகலன்கள் பூண்ட தலைவிக்குப் பெரிய விருந்தினனாய் ஆகும்படி,
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல்மிகவும் விரைந்து செலுத்துவாயாக, பாகனே! ஒளிபொருந்திய வேற்படையால்
வென்று அடு தானை வேந்தனொடுவென்றழிக்கும் படையினைக் கொண்ட வேந்தனோடு
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதேஒருநாளேனும் இடைவழியில் தங்கினால், அது ஊழிக்கால அளவிலும் நெடியது.
  
# 483# 483
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவேவழியெல்லாம் வனப்பெய்யுமாறு மலர்கள் பரவிக்கிடக்கின்றன;
வேந்து விட்டனனே மா விரைந்தனவேவேந்தனும் தன் வினை முடித்து விட்டுவிட்டான்; குதிரைகள் விரைகின்றன;
முன் உற கடவு-மதி பாகஅனைவரையும் முந்திக்கொண்டு தேரை ஓட்டு! பாகனே!
நன் நுதல் அரிவை தன் நலம் பெறவேநல்ல நெற்றியையுடைய தலைவி தன் பழைய அழகினைப் பெறவே!
# 484# 484
வேனில் நீங்க கார் மழை தலைஇவேனிற்காலம் முடிந்துபோக, கார்காலத்து மழை பெய்யத்தொடங்கியதால்,
காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்துகாடு வனப்புற்ற காலம்; நீ ஓட்டும் தேரின் பெருமை சிறக்க,
கடிய கடவு-மதி பாகவிரைவாக ஓட்டுவாயாக, பாகனே!
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தேமிகவும் நீண்ட காலம் தங்கிவிட்டோம், அழகிய அணிகலன்களை அணிந்தவளை மறந்து –
  
# 485# 485
அரும் படர் அவலம் அவளும் தீரபொறுத்தற்கரிய வருத்தத்தால் அடையும் துன்பத்தை அவளும் நீங்கப்பெற,
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்கபெரிய தோள்களின் அழகு மீண்டும் வரும்படி நாமும் அவளைத் தழுவிக்கொள்ள,
ஏ-மதி வலவ தேரேவிரைந்து செலுத்துவாயாக, வலவனே! தேரினை!
மா மருண்டு உகளும் மலர் அணி புறவேவிலங்குகள் மருண்டுபோய் குதித்தோடும் மலர்கள் அணிசெய்யும் முல்லைக்காட்டில் –
# 486# 486
பெரும் புன் மாலை ஆனாது நினைஇபெரிதாக நிற்கும் இந்தப் புல்லிய மாலையில் ஓயாமல் நினைத்துக்கொண்டு,
அரும் படர் உழத்தல் யாவது என்றும்பொறுத்தற்கரிய வருத்தத்தில் வாடுதல் எதற்காக? எப்பொழுதும்
புல்லி ஆற்றா புரையோள் காணதழுவியிருந்தும் ஆற்றியிராத உயர்குணத்தோளைக் காண்பதற்கு,
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின்வார்களைப் பிடிப்பதின் வகைதெரிந்து செலுத்துவாயாக, வலவனே! உன்
புள் இயல் கலி_மா பூண்ட தேரேபறவைகள் போல் பறக்கும் பாய்கின்ற குதிரைகளைப் பூட்டிய தேரினை –
  
# 487# 487
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதேஇதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
செறி_தொடி உள்ளம் உவப்பசெறிவான வளையல்களை அணிந்தவளின் உள்ளம் உவக்குமாறு
மதி உடை வலவ ஏ-மதி தேரேஅறிவுடைய பாகனே! விரைந்து செலுத்துவாய் தேரினை.
# 488# 488
கருவி வானம் பெயல் தொடங்கின்றேகூடிவரும் மேகங்கள் மழைபொழியத் தொடங்கிவிட்டன;
பெரு விறல் காதலி கருதும் பொழுதேபெரும் உணர்வுகளைக் கொண்ட காதலி நினைத்தேங்கும் பொழுது இது;
விரி உளை நன் மா பூட்டிவிரிந்த தலையாட்டத்தையுடைய நல்ல குதிரைகளைப் பூட்டி,
பருவரல் தீர கடவு-மதி தேரேதலைவியின் துன்பம் தீர விரைந்து செலுத்துவாயாக, தேரினை.
  
# 489# 489
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்பஅழகிய சிறகுகளைக் கொண்ட வண்டுகளின் அரித்தெழும் ஓசையினைக் கொண்ட கூட்டம் மொய்க்கும்படி,
மென்_புல முல்லை மலரும் மாலைஉழுது பதமாக்கப்பட்ட நிலத்தில் முல்லைப்பூக்கள் மலர்கின்ற மாலைப்பொழுது;
பையுள் நெஞ்சின் தையல் உவப்பமிகுந்த துன்பமுள்ள நெஞ்சத்தைக் கொண்ட பெண்மணி மகிழும்படியாக,
நுண் புரி வண் கயிறு இயக்கி நின்நுண்ணிய புரிகளைக் கொண்ட தடித்த கயிறுகளைச் சுண்டிவிட்டு, உன்
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தேவளமையான குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைந்து.
# 490# 490
அம்_தீம்_கிளவி தான் தர எம் வயின்அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளை எம்மிடத்தில் தருவதற்கு
வந்தன்று மாதோ காரே ஆ வயின்வந்துவிட்டது கார்காலம்! அங்கிருக்கும்
ஆய்_தொடி அரும் படர் தீரஅழகிய தோள்வளை அணிந்தவளின் பொறுத்தற்கரிய துன்பம் தீர
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தேஅழகிய மணிகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்துவாயாக, விரைவாக.
  
# 50 வரவு சிறப்புரைத்த பத்து# 50 வரவு சிறப்புரைத்த பத்து
# 491# 491
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலியகார்கால மேகங்கள் முழங்குகின்ற பொழுதில், நான் இடையறவின்றி நலிந்துகொண்டிருக்க,
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடுநொந்து நொந்து வருந்தும் உள்ளத்தோடு,
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தேவந்துவிட்டேன் மடந்தையே! உன் அழகு என்னை இழுத்துவர, விரைவாக.
# 492# 492
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின்உன்னைப்போலவே இருக்கும் மயில்கள் களித்தாட, உன்
நன் நுதல் நாறும் முல்லை மலரநல்ல நெற்றியின் மணம் நாறும் முல்லை மலர்ந்திருக்க,
நின்னே போல மா மருண்டு நோக்கஉன்னைப் போலவே அந்த மான்கள் மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்உன்னையே நினைத்து வந்தேன்,
நன் நுதல் அரிவை காரினும் விரைந்தேநல்ல நெற்றியையுடைய அரிவையே! அந்தக் கார்காலத்தைக் காட்டிலும் விரைவாக!
  
# 493# 493
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்கஇடிகள் மாறுபட்டு முழங்க, எருதுகள் அவற்றுக்கு எதிர்முழக்கமிட,
மாதர் மான் பிணை மறியொடு மறுககாதலையுடைய பெண்மான் தன் குட்டியோடு நிலைகுலைந்துபோக,
கார் தொடங்கின்றே காலைகார்காலம் தொடங்கிவிட்டது ஏற்ற காலத்தில்,
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவேஅழகிதாக இறங்கும் முன்னங்கையுடையடைவளே! உன்னை நினைத்து நான் வருவதற்காக.
# 494# 494
வண்டு தாது ஊத தேரை தெவிட்டவண்டுகள் பூந்தாதுக்களை உண்ண, தேரைகள் ஓயாது ஒலிக்க,
தண் கமழ் புறவின் முல்லை மலரகுளிர்ச்சியாக மணங்கமழும் முல்லைவெளியில் முல்லைமலர்கள் மலர,
இன்புறுத்தன்று பொழுதேஇன்பத்தை ஊட்டுகிறது பொழுது;
நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரேஉனக்குக் குறித்துக்கொடுத்துச் சென்ற நேரத்தில் சரியாக வந்துவிட்டேன், தீரட்டும் உன் துன்பங்கள்.
  
# 495# 495
செம் நில மருங்கில் பன் மலர் தாஅய்செம்மண் பூமியின் பக்கங்களில் பல மலர்கள் பரவிக்கிடக்க,
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவேதம் வெறுமை தீர்ந்து இனிய ஆயின முல்லைவெளிகள் –
பின் இரும் கூந்தல் நன் நலம் புனையபின்னப்பட்ட கரிய கூந்தல் மேலும் நல்ல பொலிவு பெறுவதற்காக,
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடுநினைத்து நினைத்துக் கலங்கும் நெஞ்சத்தோடு
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறேமுள் போன்ற கூர்மையான பற்களையுடைய அரிவையே! நான் வந்தபோது –
# 496# 496
மா புதல் சேர வரகு இணர் சிறப்பவிலங்கினங்கள் புதர்களில் ஒதுங்க, வரகுப் பயிர்களில் கொத்தான கதிர்கள் சிறந்துவிளங்க,
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்பபெரிய மலைகள் தனிமையுற்று நிற்க, கார்கால மேகங்கள் முழக்கமிட்டு வருத்த,
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர்பெரிதும் மாறுபட்டிருக்கும் கண்ணையுடையவளே! உன்னைப் பிரிந்திருந்தோர்
தோள் துணை ஆக வந்தனர்உனது தோளுக்குத் துணையாக வந்துவிட்டார்!
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவேஉன் கூந்தலும் மலரும் பருவத்து விரிந்த பூக்களை விரும்பி அணியட்டும்.
  
# 497# 497
குறும் பல் கோதை கொன்றை மலரகுறிய பலவான மாலையாய்க் கொன்றை மலர்ந்திருக்க,
நெடும் செம் புற்றம் ஈயல் பகரநெடிய செந்நிறப் புற்றுகளினின்றும் ஈசல்கள் வெளிப்பட,
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றேவிலங்கினங்கள் தம் பசியை மறக்க, கார்காலம் தொடங்கிவிட்டது;
பேர் இயல் அரிவை நின் உள்ளிபெருமை வாய்ந்த இயல்புகளையுடைய அரிவையே! உன்னை நினைத்து
போர் வெம் குருசில் வந்த மாறேபோரை விரும்பும் தலைவன் வந்த போது –
# 498# 498
தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றனதோள்கள் தம் பழைய அழகை அடைந்தன; தோள்வளைகள் தம் பழைய நிலையில் உறுதியாய் நின்றன;
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றனநீண்ட வரிகளையுடைய நெடிய கண்கள் தம் ஒளியுள்ள வனப்பைப் பெற்றன;
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு எனஏந்திய கொம்பினையுடைய யானைப்படையையுடைய வேந்தன் தன் போரை முடித்துக்கொண்டவுடன்
விரை செலல் நெடும் தேர் கடைஇவிரைவாகச் செல்லும் நெடிய தேரினைச் செலுத்திக்கொண்டு
வரை_அக நாடன் வந்த மாறேமலையகத்து நாட்டினன் வந்துவிட்ட போது –
  
# 499# 499
பிடவம் மலர தளவம் நனையபிடவம் மலர, செம்முல்லைகள் அரும்புகள் விட,
கார் கவின் கொண்ட கானம் காணின்கார்காலத்து அழகைப் பெற்ற கானத்தைக் கண்டால்,
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாதுவருந்துவாள் பெரிதும் என்று அரிய போர்த்தொழிலுக்குச் செல்லாமல்
வந்தனரால் நம் காதலர்வந்துவிட்டார் நம் காதலர் –
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டேஅழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளே! உன் அழகிய பெண்மைநலத்தை மனத்திற்கொண்டு –
# 500# 500
கொன்றை பூவின் பசந்த உண்கண்கொன்றைப் பூவைப் போல் பொன்னிறமாய்ப் பசந்துபோன மையுண்ட கண்கள்,
குன்றக நெடும் சுனை குவளை போலகுன்றுகளின் அகத்தே உள்ள நெடிய சுனையிலுள்ள குவளை மலரைப் போலத்
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்தம் பழைய அழகைப் பெற்றன இவளுக்கு! வெல்லுகின்ற போரையுடைய
வியல் நெடும் பாசறை நீடியஅகன்ற நெடிய பாசறையில் நீண்ட நாள் தங்கியிருந்த
வய_மான் தோன்றல் நீ வந்த மாறேவலிமையுள்ள புலியைப் போன்ற தலைவனே! நீ வந்த போது –