அகநானூறு 51-75

  
#51 பாலை பெருந்தேவனார்#51 பாலை பெருந்தேவனார்
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெறஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டுவழியில், சூரியனின் கதிர்கள் சுடுதலால்
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்துமிக்க வெம்மை பரவிய  – நீண்ட அடிமரத்தை உடைய யா மரத்தில்
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினைபுகுந்துகொண்டு செல்லும் காற்று முழங்கும் பொலிவற்ற உயர்ந்த கிளையில்,
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கிபுலால் விருப்பத்துடன் இருக்கும் தன் பேடையின் முகத்தைப் பார்த்து வரும்
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவிமாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
எருவை சேவல் கரிபு சிறை தீயஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலைவேனில் நீண்டிருக்கும் – மூங்கில்கள் உயர்ந்த – அகன்ற காட்டுவெளியில்
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணிநீ துன்புற்றதால் கிடைக்கும் வேலையினால் அடையும் சம்பாத்தியம்
பல் இதழ் மழை கண் மாஅயோள்_வயின்பூப்போன்ற குளிர்ந்த கண்களையுடைய மாநிறத்தவளைப்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாதுபிரிவதால் பெறுவது என்றால், அவளைப் பிரியாமல்
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ்அவளின் நிமிர்ந்த மார்பகங்கள் விம்ம, பலமுறை
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும்சிவந்த அணிகலன்கள் ஒலிக்க அவளைத் தழுவி, நாள்தோறும்
மனை முதல் வினையொடும் உவப்பதலைவியுடன் இல்வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தேநினைப்பாயாக! சிறந்த நெஞ்சமே! நீ அவளைவிட்டுப் பிரிதலை மறந்து – 
  
#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்#52 குறிஞ்சி நொச்சிநியமம் கிழார்
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்சுற்றிய வள்ளிக் கொடியையுடைய, மரங்கள் உயர்ந்த மலைச் சரிவில்
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர்செழித்தெழுந்த வேங்கை மரத்தின் மிக உயர்ந்த நெடிய கிளையிலுள்ள
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள்பொன்னைப் போன்ற புதிய மலரினைப் பறிக்க விரும்பிய குறமகள்,
இன்னா இசைய பூசல் பயிற்றலின்இனிமையற்ற குரலில் “வேங்கை வேங்கை” என்ற ஆரவாரத்தை அடுத்தடுத்து எழுப்பியதால்
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின்உயர்ந்த பாறைகளின் அடுக்குகளில் இருண்ட குகைகள் கொண்ட மலைச் சாரலில்
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம்பசுவைக் கவரும் வலிய புலியைக் கண்டு எழுப்பிய ஒலி அது என்று எண்ணி, தமது
மலை கெழு சீறூர் புலம்ப கல்லெனமலையை அடுத்துள்ள சிறிய ஊரை விட்டுவிட்டு, பெருத்த ஒலியுடன்
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்இடது கையில் வில்லை உடையவராய் ஓடிவரும் நாட்டினைச் சேர்ந்த நம் தலைவனது
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்குஅகன்ற மார்பில் அடங்கியுள்ளது அவனை விரும்பும் நமது நெஞ்சம் என்பதை அன்னைக்குத்
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் எனதெரிவிப்போமா, தெரிவிக்காமல் இருப்போமா என்று
இரு_பால் பட்ட சூழ்ச்சி ஒரு_பால்இருவகையால் நாம் எண்ணி ஆய்ந்தது, இப்போது (தெரிவிக்கலாம் என்ற) ஒரு முடிவுக்கு
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கைவந்துள்ளது; நீ வாழ்வாயாக தோழியே! நம் உடம்பினின்றும்
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்இனிய உயிர் பிரிவதாயினும் உன் மகளின்
ஆய் மலர் உண்கண் பசலைஆய்ந்தெடுத்த மலர் (போன்ற) மைதீட்டிய கண்களில் படர்ந்துள்ள பசலையானது
காம நோய் என செப்பாதீமேகலியாண ஆசையால் உண்டானது என்று(மட்டும்) உரைத்துவிடாதே!
  
#53 பாலை சீத்தலை சாத்தனார்#53 பாலை சீத்தலை சாத்தனார்
அறியாய் வாழி தோழி இருள் அற(நீ) அறியமாட்டாய் தோழி, வாழ்வாயாக!, இருள் நீங்கும்படியாக
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரிவானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறையகடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய்நீண்ட அடிமரத்தைக் கொண்ட முருங்கையின் வெண்மையான பூக்கள் பரவியிருக்க,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைநீரில்லாமல் வறண்டுபோன முடிவில்லாமற்செல்லும் நீண்ட இடைவெளியில்,
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடுகூரிய பற்களையுடைய செந்நாய் பசியால் வருந்தும் தன் பெண்நாயுடன் –
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்கள்ளிகள் நிறைந்த கட்டாந்தரை நிலத்தில் வாகைமரத்தின் (அடிமரத்தை)
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளைஉள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்பொரித்துப்போனது போலக் கூட்டமாய் மொய்த்திருக்கும் ஆளரவமற்ற வழியில்
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்இழுத்துக்கட்டிய வில்லையுடைய மறவர்கள் அம்பு எய்ய, இறந்து வீழ்ந்தோரின்
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும்பெயரெழுதிய நடுகல்லின்  – இனிய நிழலில் தங்கியிருக்கும்
அரும் சுர கவலை நீந்தி என்றும்அரிய பாலைநிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும்
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல்இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி அவரைப் போலிருந்து மறைத்தலைச்
வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்செய்ய மாட்டாத நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும்
பொருளே காதலர் காதல்பொருளே காதலரின் விருப்பம்;
அருளே காதலர் என்றி நீயே(அதைவிடுத்து, அவரின்) காதல் அருள்மீதுதான் என்கிறாய் நீ.
  
#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்#54 முல்லை மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார்
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்பபுதிதாய் முளைத்த அரசர்கள் அரிய அணிகலன்களைத் திறையாகக் கொட்ட
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்(நம்)வேந்தனும் கொடிய பகைமை தீர்ந்தனன்; இனிமையான மழையைப் பெய்யும்
காரும் ஆர்கலி தலையின்று தேரும்மேகமும் பேரொலி எழுப்புகிறது; தேரை
ஓவத்து அன்ன கோப செம் நிலம்ஓவியம் போன்ற, இந்திரகோபம் போன்று சிவந்த, செம்மண் நிலத்தில்
வள் வாய் ஆழி உள் உறுபு உருளஉறுதியான சக்கரங்கள் பதிந்து உருண்டுவர,
கடவுக காண்குவம் பாக மதவு நடைவிரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியகயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனையல் அம் குரல கால் பரி பயிற்றிகனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர்வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றை அம் குழலர் பின்றை தூங்ககொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
மனை_மனை படரும் நனை நகு மாலைவீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன்தனக்கென வாழாமல் பிறர்க்கு எல்லாம் உரியவனான
பண்ணன் சிறுகுடி படப்பை நுண் இலைபண்ணனின் சிறுகுடித் தோட்டத்திலுள்ள, நுண்ணிய இலைகளையும்
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றிநீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வருகுவை ஆயின் தருகுவென் பால் எனவந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றிஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
திதலை அல்குல் எம் காதலிதேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வன் பொய்க்கும் பூ_கொடி நிலையேபுதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே) 
  
#55 பாலை மாமூலனார்#55 பாலை மாமூலனார்
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்வெம்மையுடன் செல்லும் ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடைபறக்கும் கொக்குகள் வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில்,
உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின்உளிபோன்ற வாயை உடைய பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால்
விளி முறை அறியா வேய் கரி கானம்உயிர் எப்போது போகும் என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில்
வய களிற்று அன்ன காளையொடு என் மகள்வலிமைமிக்க ஆண்யானை போன்ற தலைவனுடன் என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம்சென்றுவிட்டதற்காக நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇஉலையில் ஊதும் துருத்தி போல பெருமூச்சு விட்டு
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடுதீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்படை பெறேன் கனவ ஒண் படைகண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய
கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலைகரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
பொருது புண் நாணிய சேரலாதன்போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து எனபோர்க்களத்தருகே வாளையுயர்த்தி வடக்கிருக்க,
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்அச் செய்தியைக் கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்சுவர்க்கத்துக்கு அவனோடு செல்வதற்காக
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண்உயிர் நீத்ததைப் போல, என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே
காதல் வேண்டி என் துறந்துஇவ்வுலகத்து ஆசையை விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தேபோகாத என் உயிரை வெறுத்து (அழுகின்றேன்.)
  
#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#56 மருதம் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
நகை ஆகின்றே தோழி நெருநல்சிரிப்பை உண்டாக்குகின்றது தோழி, நேற்று
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்கபளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமைஇரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை
ஆம்பல் மெல் அடை கிழிய குவளைஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, குவளையின்
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரையஅப்போது மலர்ந்த பல மலர்களை நிறைய உண்டு, கரையிலிருக்கும்
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்பகாஞ்சி மரத்துப் பூவின் நுண்ணிய தாதுக்கள் ஈரமான முதுகில் உதிர்ந்து விழ,
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும்மெல்லும் கதுப்புகளையுடையவாய்த் தன் கொட்டிலுக்குள் நுழையும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்குளிர்ந்த துறையினையுடைய ஊரனின் செறிந்த மாலையணிந்த மார்பினில்
வதுவை நாள் அணி புதுவோர் புணரியமணக்கோலத்திலிருக்கும் புதிய பெண்களைச் சேர்க்க
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்ஆசையுடன் வந்த பாணன், தெருவில்
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டுஅண்மையில் ஈன்ற ஒரு தாய்ப்பசு தன்மீது பாய்ந்ததால் கலங்கிப்போய், யாழினைக் கீழே போட்டு,
எம் மனை புகுதந்தோனே அது கண்டுஎமது வீட்டுக்குள் புகுந்துவிட்டான், அதனைக் கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்றுமனத்தில் தோன்றிய மிகுந்த மகிழ்ச்சியை மறைத்து, அவனை எதிர்கொண்டு
இ மனை அன்று அஃது உம் மனை என்றஇந்த வீடு அல்ல , அதுவே உமது வீடு என்ற
என்னும் தன்னும் நோக்கிஎன்னையும் தன்னையும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவேமருண்ட மனத்தினனாய் (என்னைத்) தொழுதுநின்ற நிலையே!
  
#57 பாலை நக்கீரர்#57 பாலை நக்கீரர்
சிறு பைம் தூவி செம் கால் பேடைசிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்திநீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅதுவெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்துஅம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவைஉட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ்குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொரபெரிய சொரசொரப்பான உருண்டைக் கல்லைத் தொட்டுக்கொண்டு, காற்றடிப்பதால்
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்பெரிய துதிக்கையையுடைய யானை உயர்த்தினாற்போன்று ஆடும்,
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடைகுன்றத்துச் சிற்றூர்களைக் கொண்ட கோடைகாலத்து நெடிய வெளியில்
யாமே எமியம் ஆக தாமேயான் தனியனாக இருக்க, தலைவியோ,
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்குளிர்ந்த நிலா விரிந்த பல கதிர்களையுடைய குறைமதியைப் போல,
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்மிகவும் சிறந்த ஆராயத்தக்க அழகு நீங்கப்பெற்று,
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோசிறிய பீர்க்கம்பூவினைப் போன்ற நிறம் கொண்டதோ!
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்கொய்த பிடரி மயிர்க் குதிரைகளையுடைய, கொடி கட்டிய தேரையுடைய பாண்டியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றிபழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து,
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்யானைகளைக் கொன்ற பலத்த ஒலியையுடைய போரில்
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்துவிழுப்புண்பட்டவரைப் போல மிகவும் மனம் நொந்து வருந்தி
பானாள் கங்குலும் பகலும்நடு இரவிலும் பகலிலும் 
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலேநிற்காமல் அழுவோளின் அழகிய சிறு நெற்றியே!
  
#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்#58 குறிஞ்சி மதுரை பண்ட வாணிகன் இளந்தேவனார்
இன் இசை உருமொடு கனை துளி தலைஇஇனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்உலகத்து உயிர்களெல்லாம் துயின்ற பாதியிரவில்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅதுகாட்டில் தேடுகின்ற வேட்டை முடிவடையாமல்
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைபுலித்தோல் விரித்த படுக்கையில், தெரிந்தெடுத்த அணிகலன்களைக் கொண்ட
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தைதேன் மணக்கும் கூந்தலையுடைய குறப்பெண்களின் தந்தையர்
கூதிர் இல் செறியும் குன்ற நாடகுளிரில் தம் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் குன்றுகளின் தலைவனே!
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ்வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகள் அமுங்க, பலமுறை 
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்றமின்னும் வளையணிந்த முன்கை வளைந்து முதுகினைச் சுற்றிக்கொள்ள
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றேஉனது மார்பை அணைப்பதிலும் இனியதாயிற்று –
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும்நீவிர் இல்லாத தனிமையில் நும்மை நினக்குந்தோறும் வருந்தி மெலியும்,
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடைகுளிருடன் அசைந்து வரும் பண்பு இல்லாத வாடையில்,
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடிநீ வரப்பெறாமல் நும் வருகையைப் பார்த்துப் பதனழிந்து,
மனை மரம் ஒசிய ஒற்றிவீட்டு மரத்தில் சாய்ந்து ஒட்டிக்கொண்டு
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையேபலரும் துயிலும் இரவில் நீண்ட நேரம் வெளியில் நின்றுகொண்டிருக்கும் என் நிலை
  
#59 பாலை மதுரை மருதன் இளநாகன்#59 பாலை மதுரை மருதன் இளநாகன்
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்பெரிய அழகினை இழந்த கண்களையுடையவளாய்ப் பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅதுவருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறைவளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில்
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள
மரம் செல மிதித்த மாஅல் போலமரம் வளையும்படி மிதித்துத் தந்த கண்ணன் போல
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழைபுல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படி ஞிமிறு கடியும் களிறே தோழிபடியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை – தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்துசினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரைஅந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்தஇனிய சுவையுள்ள புதிய சுனையில் வழவழப்பான மேற்பகுதியையுடைய
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்குளிர்ந்த மணமுள்ள குவளை போன்ற கொண்டை அசையும் முதுகினை
தாம் பாராட்டிய_காலையும் உள்ளார்தான் பாராட்டிய காலத்தினையும் நினைத்துப்பாராமல்,
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டுபுடைத்த பக்கங்களைக் கொண்ட மூங்கில் போன்ற தோள்கள் மெலிய, தொலைநாட்டில்
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம்அரிய செயலாகிய பொருளிட்டலை நினைத்து, நம்மைப்
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறேபிரிந்து தூரத்தே தங்கியிருப்பவர் சென்ற வழியில்.
  
#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்#60 நெய்தல் குடவாயில் கீரத்தனார்
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்கபெரிய கடற்பரப்பில் சிவந்த இறால் மீன் நடுக்கமுறும்படி
கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலைகொடிய தொழிலான (மீனை) முகக்கும் நேரான கோலையுடைய அழகிய வலையைக் கொண்ட
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்குநீண்ட திமிலிலிருந்து மீன்பிடிக்கும் தொழிலில் நிலைத்த தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறுஉப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
அயிலை துழந்த அம் புளி சொரிந்துஅயிரை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பைச் சொரிந்து
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும்கொழுத்த மீனின் துண்டத்தோடே சிறுமி கொடுக்கும் இடமாகிய
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்யஒளிவிடும் தோள்வளையை அமுக்கவேண்டாம்; 
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரைஊதற்காற்று குவித்த உயர்ந்த மணல் மேடாகிய கரையில்,
கோதை ஆயமொடு வண்டல் தைஇமாலையையுடைய தோழிகளுடனே மணல்வீடு கட்டி
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி எனவிளையாடினும் குன்றும் உன் மேனி அழகு என்று,
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல்காரணமின்றியே கோபிக்கும் அன்னை கண்டால், வெல்லும் வேலையுடைய
கொற்ற சோழர் குடந்தை வைத்தஅரசாண்மை உள்ள சோழரின் குடந்தை நகரில் வைத்த
நாடு தரு நிதியினும் செறியபகை நாடுகள் தரும் செல்வத்தின் காவலைக் காட்டிலும், செறிந்த 
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயேகடுமையான காவலில் வைத்துவிடுவாள் அறனில்லாத எம்முடைய தாய்.
  
  
  
  
  
#61 பாலை மாமூலனார்#61 பாலை மாமூலனார்
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்‘புண்ணியம் செய்தவர்கள் அவர்கள், இயமனால்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனகொள்ளப்பட்டு இறக்காமல், பிறரால் கொள்ளப்பட்டு இறந்தோர்’ என்று
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர்முயற்சி வெற்றிசிறக்க, தொலைநாட்டுக்குச் சென்றோர் (சென்ற)
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்துநாள்களைக் குறித்துவைக்கும் நெடிய சுவரை நோக்கி, வருத்தமெனும் துன்பத்துள்
ஆழல் வாழி தோழி தாழாதுஆழ்ந்துவிடாதே தோழி! தாழ்க்காமல்
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்இடியைப்போன்று ஒலிக்கும் ஊக்கத்துடன், புதிய காலும்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇவரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன்அரிய மார்பில் அழுத்தும் அம்பினையுடையவர்கள் பலருடன்,
அண்ணல் யானை வெண் கோடு கொண்டுதலைமை வாய்ந்த யானைகளின் வெண்மையான கொம்புகளைக் கொண்டு,
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும்கள்ளை விற்றுக்கொண்ட நெல்லால் நாளோலக்கச் சிறப்புச் செய்யும்
கழல் புனை திருந்து அடி கள்வர் கோமான்கழலினைப் புனைந்த திருத்தமான அடிகளைக் கொண்ட கள்வர்களின் தலைவன்,
மழ புலம் வணக்கிய மா வண் புல்லிமழவரின் நாட்டை வணக்கிய மிகுந்த வள்ளண்மைகொண்ட புல்லி என்பானின்
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும்,
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅதுஅந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் – மிகப் பழமையான,
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவிமுரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது
ஒண் கேழ் வன முலை பொலிந்தஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும்
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தேநுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து –
  
#62 குறிஞ்சி பரணர்#62 குறிஞ்சி பரணர்
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்னபள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள்மார்பில் அரும்பிய முலைகளையும், பருத்த தோள்களையும்,
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்னகரிய தண்டினையுடைய குவளை மலர்களைச் சேர்த்து வைத்தாற் போன்ற
மா இதழ் மழை கண் மாஅயோளொடுகரிய இமைகளையுடைய குளிர்ந்த கரிய கண்களையும் உடையவளாகிய அவளுடன்,
பேயும் அறியா மறை அமை புணர்ச்சிபேயும் அறியாத காலத்தில் நடந்த மறைவான சந்திப்பினை
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பஒலிக்கும் உடுக்கினைப் போன்று தனித்தும் சேர்ந்தும் பழித்துக் கூறுவதால்
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்மறைவான ஒழுக்கத்தில் இனி நாம் செல்வது அரிதாகிவிட்டது; அதனால்
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்றுகடுமையான வெள்ளம் பெருகிய காவிரி ஆற்றில்
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போலநெடிய சுழியுள்ள நீரில் மூழ்கி எழுபவள் போல,
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல்உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, நேற்று
ஆகம் அடைதந்தோளே வென் வேல்என் மார்புள் புதைந்துகிடந்தாள்; வெல்லும் வேலினையும்
களிறு கெழு தானை பொறையன் கொல்லியானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்பஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற
கடவுள் எழுதிய பாவையின்தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற
மடவது மாண்ட மாஅயோளேபேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.
  
#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்#63 பாலை கருவூர் கண்ணம்புல்லனார்
கேளாய் வாழியோ மகளை நின் தோழிகேட்பாயாக! வாழ்க! மகளே! உன்னுடைய தோழி
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடுஅழகிய இல்லத்தின் இடங்களெல்லாம் வெறிச்சோடிப்போக, தன் தலைவனுடன்
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்பெரிய மலைகளைத் தாண்டிச் சென்றதற்காக வருந்தவில்லை – வருந்துகிறேன்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்திகடுமையான யானை தன் நீண்ட கையைச் சேர்த்து
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழிவளைந்த காலால் உதைத்த பொன்துகள் கிளம்பும் புழுதியை,
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பபெரிதாக விடிகின்ற விடியலின் ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து வெயில் எறிக்க,
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல்கரிய மாலை போட்டது போன்ற கழுத்தையுடைய காடையின் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்தன் சிறிய புல்லிய பெடையுடன் குடையும் அவ்விடங்களையுடைய
அஞ்சுவர தகுந கானம் நீந்திஅஞ்சத் தகுந்த பாலைநிலத்தைக் கடந்து,
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்துதம் கன்றுகளைக் காணாமல் துயரம் மிகுந்தனவாய்ச் செவிகளைச் சாய்த்து
மன்று நிறை பைதல் கூர பல உடன்மன்றத்தில் நெருக்கிநிற்பதால் ஆகும் துன்பம் மிகுந்துபோக, பலவும் சேர்ந்த
கறவை தந்த கடும் கால் மறவர்கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பைமுதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்
மட மயில் அன்ன என் நடை மெலி பேதைஇளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள்
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள்தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி,
வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண்வேட்டையாடும் கள்வரின் வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய,
சே கோள் அறையும் தண்ணுமைகாளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலியினைக்
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சேகேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து அழும் என் நெஞ்சைக் குறித்து –  
  
#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்#64 முல்லை ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார்
களையும் இடனால் பாக உளை அணிகளைகின்ற காலம் இதுவே! பாகனே! தலையாட்டம் அணிந்த,
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மாஉலகத்தையே கடந்து செல்வது போன்ற, பறவையின் தன்மை கொண்ட குதிரையின்
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியசெம்மையாக அமைந்த அழகினையுடைய கடிவாளத்தை நீ கையிலெடுக்க,
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழிசெம்முல்லை மொட்டுகள் தம் கட்டுகள் அவிழ்ந்த குளிர்ந்த பதத்திலுள்ள பெருவழியில்
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்அழகாக ஒளிறும் அகன்ற இலையையும், எண்ணெய் நிறையப் பூசிய வலிய தண்டையும் உடைய
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுகவெற்றி வேலை ஏந்திய இளைஞர்கள் விரைந்த ஓட்டத்தில் மிகுந்த வேகம் கொள்ள,
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயலபயணத்தை நாம் மேற்கொள்வோமாயின், மழைபெய்த
கடு நீர் வரித்த செம் நில மருங்கின்விரைந்து செல்லும் நீர் வரிவரியாகச் செய்த செம்மண் நிலத்துப் பக்கத்தில்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதரதேர் விடும் தடத்திலுள்ள ஈர மணலைக் காட்டுக்கோழிகள் காலால் கிளற
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்திபாம்புகள் தங்கும் புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தைக் குத்திக்
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறுகொம்பினில் மண்ணைக் கொண்ட தலைமைப் பண்புள்ள காளை
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇதன்னோடு உடனிருப்பதை விரும்பிய இளம் பசுவைத் தழுவிக்கொண்டு
ஊர்_வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன்ஊருக்குத் திரும்பிவரும் பொழுதில், எல்லாம் ஒன்று சேர்ந்து
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்கன்றுகளை அழைக்கும் குரலுடையவாய்த் தொழுவத்துக்குள் நிறையப் புகும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசைபசுக்கள் அணிந்துள்ள தெளிவான மணிகளின் அழகாக எழும்பும் இனிய ஒலியை
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்தனிமையைக் கொண்டுள்ள மாலையில் கேட்கும்போதெல்லாம்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையேகலங்கியவளாய் இருக்கும் நம் தலைவியின் செயலற்ற நிலையை –
  
#65 பாலை மாமூலனார்#65 பாலை மாமூலனார்
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்நமது மனவோட்டத்தை உணர்ந்துகொண்ட அறிவுடன், தன் மனத்தை மறைத்துக்கொண்டிருக்கும்
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்நம் தாயின் கடுஞ்சொற்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வோம்; சிறிதளவும்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிஇரக்கமில்லாத இயல்பினையுடைய பொய்யே பேசும்
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்சேரிப் பெண்களின் பழிச்சொற்களையும் நிறுத்திவிடுவோம்;
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல்தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய உதியஞ்சேரலாதனைப்
பாடி சென்ற பரிசிலர் போலபாடிச் செல்லும் பரிசிலரைப் போல
உவ இனி வாழி தோழி அவரேஇப்பொழுது மகிழ்வாயாக, வாழ்க தோழியே! நம் தலைவர்,
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குஅடர்த்தியான கூந்தலையுடையவளே! நம் கருத்தோடு ஒன்றிய கருத்துடையவராய்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்நம்மை அவருடன் கூட்டிச்செல்ல விரும்பினார் இப்போது – மலைகள்தோறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரிபெரிய மூங்கில்கழைகள் உரசிக்கொள்வதால் ஏற்பட்ட, காற்றடிப்பதால் மிகுந்து எரியும் நெருப்பு
மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர்மீன்பிடிக்கும் பரதவர்களின் வளைந்த படகில் தோன்றும் செறிவான சுடர்கள்
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்குவானளாவிய கடல் அலையின் மீது காணப்படுவது போல்
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலைகாட்சிக்கினியதாய்த் தோன்றும், யா மரங்கள் உயர்ந்து நிற்கும் அகன்ற இடத்தில்
உயவல் யானை வெரிநு சென்று அன்னபசியால் மெலிந்து வருந்திய யானையின் முதுகில் நடந்து போவது போலப்
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிபாறைகளில் ஏறியும் இறங்கியும் செல்லும், மூங்கில்கள் கரிந்து சாய்ந்துகிடக்கும் சிறிய வழிகளையுடைய,
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்காடுகளை உயர்த்திக் கூறுவதற்குக் காரணமான நிமிர்ந்த கொம்புகளையுடைய களிறு
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள்வழியினைக் காவல்கொண்டிருக்கிற கடத்தற்கரிய பாலை வழிகள், மூங்கில் போன்ற தோளினையும்
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலைமணங்கமழும் கூந்தலையும் திரட்சியான தொய்யில் எழுத‌ப்ப‌ட்ட‌ முலையினையும்
நிரை இதழ் உண்கண் மகளிர்க்குவரிசையான இத‌ழ்க‌ளையுடைய‌ நீல‌ ம‌ல‌ர் போன்ற‌ மையுண்ட‌ க‌ண்க‌ளையும் உடைய‌ பெண்களுக்கு
அரியவால் என அழுங்கிய செலவேகடந்து செல்லக் கடுமையானதாகும் என்று சொல்லித் தள்ளிப்போட்டுகொண்டிருந்த உடன்போக்கினை.
  
#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்#66 மருதம் செல்லூர் கோசிகன் கண்ணனார்
இம்மை உலகத்து இசையொடும் விளங்கிஇப்பிறவியில் உலகத்தில் புகழோடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துபமறுபிறப்புக்குக் காரணமான மேனிலையுலகத்தையும் தடையின்றி எய்துவர்,
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிபகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய
சிறுவர் பயந்த செம்மலோர் எனமக்களைப் பெற்ற திருவுடையோர் என்று
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்பலரும் கூறுகின்ற பழமொழி முழுவதுமாக
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழிஉண்மையாகிப்போவதைக் கண்கூடாகக் காணப்பெற்றேன் தோழியே! 
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடுவரிசையாக மாலைகளைப் போட்டுக்கொண்ட மார்பினையுடைய நம் தலைவன் நேற்று ஒருத்தியை
வதுவை அயர்தல் வேண்டி புதுவதின்மணம் செய்துகொள்ள விரும்பி புதிதாகச்
இயன்ற அணியன் இ தெரு இறப்போன்செய்துகொண்ட அலங்காரனாய், இந்தத் தெருவழியே செல்வோன்
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்துசிறந்த தொழில்நுட்பம் கோண்ட (குதிரையின்) மணி ஒலிக்க, தலைவாசலைக்கடந்து சென்று
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும்(தன்னைப்)பார்க்கும் ஆசையுடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர்பூப்போலும் கண்களையுடைய தன் புதல்வனைக் கண்டு, நம் நெடிய தேரினை
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காதுநிறுத்துவாயாக வலவனே! என்று சொல்லிவிட்டுத் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதியாமல்
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவணபவளம் போன்ற புதல்வனது சிவந்த வாய் தன் மார்பினில் அழுந்த
புல்லி பெரும செல் இனி அகத்து எனஅவனைத் தன் மார்போடு அணைத்து, ஐயா! நீ வீட்டுக்குள் போ என்று
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்தகையைவிட்டு இறக்கிவிட முனைபவனுக்கு உடன்படாதவனாய் அழுவதனால் அவனைத் தடுத்த மகனோடு
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடுபெருஞ்செல்வக் குபேரனைப் போன்றவன் என்று கண்டோர் கூறும்படி், தழுவிய மகனோடு
தானே புகுதந்தோனே யான் அதுதானே வந்து இல்லத்திற் புகுந்தான்; நானே இவ்வாறு நடக்கும்படி 
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்செய்தேன் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று எண்ணி வெட்கப்பட்டு, இடையூறு செய்து இவன்
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்றுகாரியத்தைக் கெடுத்துவிட்டான் போலும் இந்தத் துடுக்குப்பயல் என்று போய்
அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டுஅடிக்கின்ற கோலுடன் நான் அவனருகில் செல்ல, மகனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு,
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைஒலிக்கும் முகப்பினையுடைய முழவின் இனிய ஓசை, மணம் நடக்கும் அவர் வீட்டிலிருந்து
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்அழைப்பது போல வந்து ஒலிக்கவும், நம் வீட்டிலிருந்தும் செல்லாதவனாய்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளியமுன்பொருநாள் கழங்கு விளையாடும் தோழியரிடையே வந்து நம்மை அருள்செய்த
பழம் கண்ணோட்டமும் நலியபழைய அருட்செயல் நினவுக்கு வந்து தன்னை வருத்த
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனேநடப்பதற்கிருந்த தன் மணவிழாவை நிறுத்திவிட்டான்.
  
#67 பாலை நோய்பாடியார்#67 பாலை நோய்பாடியார்
யான் எவன் செய்கோ தோழி பொறி வரிநான் என்ன செய்வேன்? தோழியே! புள்ளிகளையும் வரிகளையுமுடைய
வானம் வாழ்த்தி பாடவும் அருளாதுவானம்பாடிப் பறவை பாடவும், மனமிரங்காமல்
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன்துளிபெய்தலை நீத்து மேகம் அகன்று போனதால், தம் இலைகள் காய்ந்து போனதால்
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலைமரங்கள் பொலிவிழந்து நிற்கும், சரளைக்கற்கள் நிறைந்த மேட்டுநிலப்பகுதி உயர்ந்துள்ள அகன்ற இடத்தில்
அரம் போழ் நுதிய வாளி அம்பின்அரத்தால் கூர்மையாக்கப்பட்ட முனையையுடைய பிறைவாய் அம்பினையும்,
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார்இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையும் உடையவராய்த் தம் ஆனிரையை மீட்கவேண்டி
நெல்லி நீள் இடை எல்லி மண்டிநெல்லி மரங்களையுடைய நீண்ட வழியிடத்தில் இரவிலேயே விரைந்து சென்று
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்வெட்சியாருடன் நடந்த நல்ல போரினை வென்று இறந்த மானம் மிக்க கரந்தை வீரர்களின்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்பெயரினையும், சிறப்பினையும் பொறித்து, மக்கள் வழங்கும் வழிகள்தோறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்மயிலிறகை அணிந்த புகழ் விளங்கும் நடுகற்கள்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்வேற்படையினை நட்டுக் கிடுகுப்படையும் சார்த்தப்பட்டிருப்பவை பகைவரின் போர்முனையைப் போன்றிருக்கும்
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர்வேற்றுமொழி வழங்கும் நாட்டைக் கொள்ளவதற்காக, மன்னர்களது
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்னகழியால் கட்டப்பட்ட கரிய கேடகத்தைக்கொண்ட காலாட்படையை அணிவகுத்துப் பார்த்தாற் போன்ற,
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலைஇறந்தவரின் உடம்பைத் தழை கொண்டு மூடிய கற்குவியல்களையுடைய பாலைப் பரப்பிலே; 
உரு இல் பேஎய் ஊரா தேரொடுஉருவம் இல்லாத, ஊர்ந்து செல்லாத பேய்த்தேர் என்னும் கானல்நீரில்
நிலம் படு மின்மினி போல பல உடன்நிலத்தில் ஊரும் மின்மினிப்பூச்சியைப் போல, பலவாக
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம்ஒளிவிடும் பரல்கற்கள் மினுங்கும் என்று கூறுவர், நமது
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறேபெண்மைநலத்தைத் துறந்து பிரிந்துபோயிருப்பவர் போயிருக்கும் வழி.
  
#68 குறிஞ்சி ஊட்டியார்#68 குறிஞ்சி ஊட்டியார்
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைஅன்னையே! வாழ்க! நான் கூறுவதைக் கேட்க வேண்டுகிறேன். நம் தோட்டத்திலுள்ள
தண் அயத்து அமன்ற கூதளம் குழையகுளிர்ந்த பள்ளத்தில் நெருங்கி வளர்ந்த கூதளம் செடி குழைந்துபோகுமாறு,அதன் மீது விழுந்து
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்இனிய இசையையுடைய அருவி ஒலிக்கின்றது, அதனைச் சிறிதேனும்
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பைகேட்டாயா? இதனையும் கேட்பாயாக! நம் தோட்டத்திலுள்ள
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலைஅரக்கினைத் தேய்த்துவிட்டாற் போன்ற ஒளிவிடும் தளிரினையுடைய அசோகமரத்தின்
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு எனஓங்கி வளர்ந்த கிளையில் கட்டித்தொங்கவிட்ட ஊஞ்சலைப் பாம்பு என நினைத்து
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றேஅந்த மரம் முழுதும் வேரோடு அழிந்துபோகும்படி இடி விழுந்தது அல்லவா,
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள்அதனையும் கேட்டாயா? என்று நான் கேட்டும் அதனை அறியாதவளாய்
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலைஅன்னையும் மிகுந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள், அதைத்தவிர
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்உலகத்து உயிர்களெல்லாம் உறங்கிப்போய்விட்டன அந்த நேரத்தில், நம் காதலர்
வருவர் ஆயின் பருவம் இது எனவந்தால் இது தகுந்த தருணம் என்று
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்_வயின்ஒளிவீசிப் பிரகாசிக்கும் பளபளப்பான வளையல்கள் கழன்றுவிழும்படி மெலிந்திருக்கின்ற நம்மை
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆகநினைந்திருக்கும் தமது நெஞ்சம் சிறிதும் குற்றமற்றதாகும்படி
வந்தனர் வாழி தோழி அந்தரத்துவந்துள்ளார் வாழ்க தோழியே! வானத்திலிருந்து
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூமுழங்கிக்கொண்டு பொழியத்தொடங்கிய கூட்டமான பல மேகங்கள்
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்பஇடைவிடாமல் பெய்தலால் உண்டாகிய வெள்ளம் இடங்களெல்லாம் பெருகிவர
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்யானைக் கன்றின் காலைப் பிடித்திழுக்கும் கடுமையான சுழலினைக் கொண்ட வெள்ளத்தில்
புன் தலை மட பிடி பூசல் பல உடன்புல்லிய தலையையுடைய இளம் பெண்யானைகளின் ஆரவார ஒலிகள் பலவும் சேர
வெண் கோட்டு யானை விளி பட துழவும்வெள்ளிய தந்தங்களையுடைய களிறு பிளிறிக்கொண்டு கன்றினைப் பற்றத் துதிக்கையால் துழாவும்,
அகல் வாய் பாந்தள் படாஅர்அங்காந்த வாயையுடைய பாம்புகள் புதர்களில் படுத்திருக்கும்,
பகலும் அஞ்சும் பனி கடும் சுரனேபகலிலும் வருவதற்கு மனிதர் அஞ்சுகின்ற நடுங்கவைக்கும் கடுமையான வழியைக் கடந்து –
  
#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்#69 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்ஆராய்ந்து தெரிந்தெடுத்ததைப் போன்ற அழகினைத் தொலைத்த மேனியினையும், பெரிய செந்தாமரையின்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இலசிறந்த அழகினை இழந்த கண்ணினையும், இத்தகையது என்று கூற உவமை வகை இல்லாத
வண்ணம் வாடிய வரியும் நோக்கிதனித்தன்மையுடைய தமது சுணங்குகள் நிறம் மழுங்கிப்போனதையும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின்துன்பத்தில் மூழ்கிவிடாதே! நீ அமைதியாயிருப்பாய்; தனக்கு உரிமையான
ஈதல் இன்பம் வெஃகி மேவரகொடையால்வரும் இன்பத்தையே விரும்பி, அதிலே  மனம் பொருந்தி
செய்பொருள் திறவர் ஆகி புல் இலைபொருளீட்டுவதில் முயல்வாராகி, சிறிய இலையினையும்
பராரை நெல்லி அம் புளி திரள் காய்பருத்த அடியினையும் உடைய நெல்லியின் இனிய புளிப்பினையுடைய திரண்ட காய்களை,
கான மட மரை கண நிரை கவரும்காட்டிலுள்ள இளம் மரைமானின் பெரிய கூட்டம் கவர்ந்து தின்னுதற்குரிய
வேனில் அத்தம் என்னாது ஏமுற்றுவெம்மை மிக்க வழி என்று பாராமல், அந்தத் துன்பத்தையே இன்பமாகக் கொண்டு,
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர்வானளாவிய உயர்ந்த குடையினையும், வேகமாகச் செல்லும் தேரினையும் கொண்ட மோரியர்கள்
பொன் புனை திகிரி திரிதர குறைத்ததமது பொன்னால் செய்த தேர்ச்சக்கரங்கள் தடையின்றிச் செல்ல வெட்டி வழியுண்டாக்கிய
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்பாறைகளைக் கடந்து சென்றாராயினும், சிறிதளவும் 
நீடலர் வாழி தோழி ஆடு இயல்தமது இருப்பினை நீட்டிக்கமாட்டார், வாழ்க தோழியே! ஆடுகின்ற இயல்பினையுடைய
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம்இளம் மயில் உதிர்த்த தோகையை இரண்டாகக் கிழித்துத் தம்முடைய
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண்ஓசை மிக்க வலிய வில்லில் சுற்றி, பலவான, சிறந்த
அம்பு உடை கையர் அரண் பல நூறிஅம்புகளைக் கையில் கொண்டவராய், பகைவரின் அரண்கள் பலவற்றை அழித்து
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்அழகிய அணிகலன்களைக் கொணர்கின்ற வலிமைமிக்க மறவர்களுடைய தலைவனாகிய
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்துசுடரும் மணிகள் பதித்த பெரும் பூண்களை அணிந்த ஆய் என்பவனின் காட்டின்
தலை நாள் அலரின் நாறும் நின்அன்றலர்ந்த மலர் என மணக்கும் உன்னுடைய
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தேபரந்த முலையினையுடைய மார்பினில் துயிலும் இனிய துயிலை மறந்து – 
  
#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்#70 நெய்தல் மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து எனவளைவான படகுகளைக் கொண்ட மீனவர்கள் தம் மீன்வேட்டை நல்லபடியாக வாய்க்கப்பெற்று,
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்துபெரிதும் புலால் நாற்றம் வீசும் சிறிய குடிகளையுடைய கடற்கரையூரில்
குறும் கண் அம் வலை பயம் பாராட்டிகுறுகலான கண்களையுடைய அழகிய வலையின் பயன் கருதி அதற்கு நறும்புகைகாட்டிக் கொண்டாடி
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன்தாம் கொணர்ந்த கொழுவிய கண்ணையுடைய அயிலை மீன்களை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் நம் நெய்தல் தலைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னேநம்முடன் கொண்ட காதல் நட்பு, இதற்கு முன்னர்
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்றதமக்குள் பேசிக்கொண்ட பெண்கள் ஊர்முழுதும் பரப்ப
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியேஊரில் பலரும் அறிவதற்கிடமானது. ஆனால் அது கழிந்தது. இப்போது
வதுவை கூடிய பின்றை புதுவதுநம் தலைவருடன் மணம் கூடிய பின்னர், புதிதான
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்பொன்னிறப் புலிநகக்கொன்றையின் பூக்களோடு, புன்னை மலர்கள் உதிர்ந்து ஓவியமாய்க் கிடக்கும்
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர்கடற்கரைச் சோலையையுடைய அழகிய பெரிய துறைகளின் வயல்களில் கரிய நீரில்
பாசடை கலித்த கணை கால் நெய்தல்பச்சை இலைகளையுடைய தழைத்த திரண்ட தண்டினையுடைய நெய்தல் பூக்களை
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும்விழாவிற்குத் தம்மை அலங்கரிக்கும் பெண்கள் தங்கள் தழையுடைக்கு அழகுசெய்யச் சேர்க்கும்
வென் வேல் கவுரியர் தொன் முது கோடிவெற்றி வேலினையுடைய பாண்டியரின் மிக்க பழமையுடைய கோடிக்கரையின் அருகில்
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறைமுழங்குகின்ற பெரிய கடலின் அருகில் பறவைகள் ஆரவாரிக்கும் துறைமுற்றத்தில்
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்தவெல்லும் போரில் வல்ல இராமன் அரிய வேதங்களை ஓதுவதற்காக அப் பறவைகளின் ஆரவாரத்தை அடக்கிய
பல் வீழ் ஆலம் போலபல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரேபேச்சு மூச்சற்றுக்கிடக்கிறது பெரிதாய்ப் பேசிய இந்த ஊர்.
  
  
  
  
  
#71 பாலை அந்தி இளங்கீரனார்#71 பாலை அந்தி இளங்கீரனார்
நிறைந்தோர் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்செல்வம் நிறைந்தோரைத் தேடிக்காணும் உள்ளத்துடன், தம்மிடம் நட்புக்கொண்டோர் செல்வத்தில் குறைந்துபோனால்
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்அவர்களால் பயன்பெறுவது இல்லையாதலால், அவர் மேலிருந்த பற்றினை விட்டு அவரை ஒதுக்கிவைக்கும்
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம்பண்பற்ற மக்களைப் போல, வண்டுக்கூட்டம்
சுனை பூ நீத்து சினை பூ படரசுனையிலிருக்கும் பூக்களை விடுத்து மரக்கிளைகளில் இருக்கும் பூக்களை நாடிச் செல்ல,
மை இல் மான் இனம் மருள பையெனகளங்கமில்லாத மான்கூட்டம் மருண்டுநோக்க, (மெதுவாக)
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்பஉலையில் காய்ந்து பின் (மெதுவாக) ஆறிக்கொண்டிருக்கும் பொன்னைப்போல செக்கர் வானம் பூத்திருக்க,
ஐ அறிவு அகற்றும் கையறு படரோடுவியக்கத் தக்க நல்லறிவினையும் போக்கிச் செயலற்றுப்போகச்செய்யும் துன்பத்தோடே
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனஅகன்ற பெரிய வானம் அழகிய பஞ்சுப்பொதிகளான மேகங்களைப் புதிதாய்க் கொண்டுவர
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலைபகலுக்கு வழிவிட்டுநிற்கும் துயரந்தரும் மாலைப்பொழுது –
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தககாதலரைப் பிரிந்த தனிமையால் நொந்துபோயிருக்கவும்,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிமிகுந்த துன்பத்தில் இருப்பவர் ஒருவரின் காண்பதற்கரிய மார்பினைக் குறிவைத்து
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாதுகூர்மையான வேலை எறிவாரைப்போல மேலும் துயரத்தைச் செய்கிறது.
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்துகுற்றம் தீரச் செய்யப்பட்ட உருவம் காட்டும் கண்ணாடியின்
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகிஉட்புறத்தே ஊதிய ஆவி, முதலில் பரந்து பின்னர் மெதுவாகச் சுருங்கி மறைவது போல்
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்துஎன் மனவலிமை சிறுகச் சிறுகக் குறைந்து மாய்ந்துவிடப்போகிறது. பெரிதும் அழிவுற்று,
இது-கொல் வாழி தோழி என் உயிர்சுழன்றடிக்கும் மிகக் கடுமையான சூறாவளி மோதித்தாக்க,
விலங்கு வெம் கடு வளி எடுப்பஅலைமோதும் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் (எந்நேரமும் பறந்துசெல்லலாம் என்றிருக்கும்)பறவையைப் போல
துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுதேஎன் உயிர் என்னைவிட்டு நீங்கும் காலம் இதுதான் போலும், வாழ்க தோழியே
  
#72 குறிஞ்சி எருமை வெளியனார் மகனார் கடலனார்#72 குறிஞ்சி எருமை வெளியனார் மகனார் கடலனார்
இருள் கிழிப்பது போல் மின்னி வானம்கவிழ்ந்திருக்கும் இருளைக் கிழிப்பது போல் மின்னல்வெட்டி, மேகமானது
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்துளிகளாய் ஆரம்பித்து மிகப் பெரிய மழைபெய்யும் நள்ளிரவில்
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
பொன் எறி பிதிரின் சுடர வாங்கிகாய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றைபுற்றாஞ்சோற்றைக் கிளறி எடுக்கும் பெரிய கையையுடைய ஆண்கரடி
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்இரும்பு வேலை செய்யும் கொல்லனைப் போலத் தோன்றும் அந்த இடத்தில்
ஆறே அரு மரபினவே யாறேதலைவன் வரும் வழிகள் செல்வதற்கு அரிய தன்மையுடையன 
சுட்டுநர் பனிக்கும் சூர் உடை முதலையஎண்ணிப்பார்த்தாலே நடுங்கவைக்கும் அச்சந்தரும் முதலைகளையுடையன,
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்கஓடக்கோலையும் மூழ்கவைக்கும் பெருவெள்ளம் பாறைகளை மோதிக்கொண்டு ஒலிக்க,
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்துஅச்சம்கொள்ளாமல், தனித்திருக்கிறோம் என்று எண்ணாமல், மேகமூட்டத்தினைச் சுமந்துகொண்டு
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன்அசைகின்ற மூங்கில்கள் ’நரநர’வென்று ஒலிக்கும் தெய்வங்கள் வாழும் உச்சி மலைச்சரிவில்
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇயகருவுற்றிருக்கும் தன் பெண்புலியின் வேட்கை மிக்க பசியினைப் போக்க
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவைகரிய ஆண்பன்றியினைக் கொன்ற மிக்க சினங்கொண்ட ஆண்புலி
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்தஅச்சம் தரும் நல்லபாம்பு உமிழ்ந்து வைத்து
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்தான் மேய்வதற்குப் பயன்படுத்தும் மணியின் வெளிச்சத்தில் குருதி தோய்ந்து காய இழுத்துச்செல்லும்
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலைகத்தி முனையில் நடப்பது போன்ற நடமாட்டமில்லாத பலவாறு பிரிந்துசெல்லும் வழிகளில்
உள்ளுநர் உட்கும் கல் அடர் சிறு நெறிகடக்க நினைப்பவர் அஞ்சும் கற்கள் அடர்ந்த சிறிய பாதையில்
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆகநமக்கு அருள்புரியவேண்டும் என்ற எண்ணத்துடன், வேலையே துணையாகக் கொண்டு
வந்தோன் கொடியனும் அல்லன் தந்தவந்திருக்கும் நம் தலைவனும் கொடியவன் அல்லன், அவனை இங்கு வரச்செய்த
நீ தவறு உடையையும் அல்லை நின்_வயின்நீயும் தவறுடையவள் அல்லள், உனக்கு
ஆனா அரும் படர் செய்தஇந்த நீங்காத தீர்த்தற்கரிய துன்பத்தினைச் செய்த
யானே தோழி தவறு உடையேனேநானே தவறுடையவள் ஆவேன், தோழியே!
  
#73 பாலை எருமை வெளியனார்#73 பாலை எருமை வெளியனார்
பின்னொடு முடித்த மண்ணா முச்சிபின்னலிட்டு முடிந்துவிட்ட, வேறு ஒப்பனை செய்யப்படாத கொண்டையினில்,
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇநெய் தடவப்பெற்றுக் கீழே விழும் குழலினையும் சேர்த்துக்கட்டி
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபுகாட்டுப்பூனையின் இருளில் மின்னும் கண்களைப் போன்று ஒளிவிடும்
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்கமுத்துக்களாலான ஒற்றை வடம் முலைமேல் கிடந்து திகழ,
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய்வணங்குதற்குரிய கற்புடன், காண்போர் இவள்தான் என்று அறியாமை கொள்ளும்படி பெரிதும் மெலிந்து
நின் நோய் தலையையும் அல்லை தெறுவரநீ எய்துகின்ற நோயினால் மட்டும் வருந்தியிருப்பவளும் இல்லை; அச்சம் வர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் எனஎன்ன ஆகுமோ இந்த இரங்கத்தக்கவளுக்கு என்று
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்என்னுடைய வருத்தத்திற்கும் மனமிரங்கும் உன்னோடு நானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சிஒருவர் செய்வது நல்லதல்ல என்று மற்றவர் சொல்லாத வேற்றுமை அற்ற அறிவினையுடைய
இருவேம் நம் படர் தீர வருவதுநம் இருவருடைய வருத்தமும் நீங்க, நம் தலைவர் வருவதனைக்
காணிய வம்மோ காதலம் தோழிகாண்பதற்கு வருவாயாக, அன்புடைய தோழியே!
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்கொடிகள் பின்னிக்கிடக்கும் சிறு காட்டினில் இருக்கும் இருண்ட நிறத்தையுடைய யானை
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின்சோர்ந்திருக்கும் தகுந்த காலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிங்கத்தின் வலிமையினையுடைய
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதைதினைவகைகளில் ஒன்றாகிய சிறுதினையைக் காக்கும் பரண்மேலுள்ளவனின் கையிலிருக்கும்
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளிகைப்பிடியைக் கொண்ட தீயை உமிழும் கொள்ளிக்கட்டையை
விடு பொறி சுடரின் மின்னி அவர்வீசும்போது எழுகின்ற தீப்பொறியைப் போல மின்னி, நம் தலைவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையேசென்றிருக்கும் நாட்டினில் ஊன்றிப் பெய்கிறது மழை.
  
#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்#74 முல்லை மதுரை கவுணியன் பூதத்தனார்
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்துதான் மேற்கொண்ட போர்வினையை நிறைவு செய்த வெற்றியுடன் மகிழ்ச்சி மிகுந்து
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்தபோரில் வல்ல வீரர் தனது முயற்சியின் வலிமையினை வாழ்த்த
தண் பெயல் பொழிந்த பைது_உறு காலைகுளிர்ந்த மழை பொழிந்து நிலம் பச்சைப்பசேலென்ற பொழுதினில்
குருதி உருவின் ஒண் செம் மூதாய்இரத்தச் சிவப்பு நிறமுடைய மின்னுகின்ற சிவந்த தாம்பலப்பூச்சிகள்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்பபெரிய வழிகளின் ஓரர்ங்களில் பல சிறிய வரிகளாக ஊர்ந்துசெல்ல
பைம் கொடி முல்லை மென் பத புது வீபச்சைக் கொடிகளைக் கொண்ட முல்லையின் மென்மைப் பதமுள்ள புதிய பூக்கள்
வெண் களர் அரி மணல் நன் பல தாஅய்வெண்மையான களர் ஆகிய அறல்பட்ட மணலில் பரந்து கிடக்க,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்வண்டுகள் அரும்பினை ஊதி மலர்த்தும் குளிர்ச்சியான மணம்கமழும் முல்லைநிலத்தில்
கரும் கோட்டு இரலை காமர் மட பிணைகரிய கொம்பினையுடைய ஆண்மான்களின் அழகிய இளம் பெண்மான்களின்
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்துமருட்சியான பார்வையினைப் பார்க்கும்போதெல்லாம் உன்னை நினைத்து
திண் தேர் வலவ கடவு என கடைஇதிண்ணிய தேரினை ஓட்டும் பாகனே! இன்னும் வேகமாகப்போ என்று அவனை முடுக்கிவிட்டு
இன்றே வருவர் ஆன்றிகம் பனி எனஇன்றைக்கே வந்துவிடுவார் நம் தலைவர், பொறுத்திருப்போம் நம் துன்பத்தை என்று
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்வற்புறுத்தும் இனிய மொழிகளால் நல்லனவற்றைப் பலமுறை திரும்பத்திரும்பச் சொல்லும்
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல்உன் சொல்லைத் துணிந்து கேட்டுக்கொள்வேன் – நாள்தோறும்
புன்கண் மாலையொடு பொருந்தி கொடும் கோல்வருத்தத்தைத் தரும் மாலைப்பொழுதுடன் கூடி, வளைந்த கோலினையுடைய
கல்லா கோவலர் ஊதும்தம் தொழிலேயன்றிப் பிறதொழிலைக் கல்லாத கோவலர்கள் ஊதுகின்ற
வல் வாய் சிறு குழல் வருத்தா_காலேவலிய வாயினையுடைய சிறிய குழல் என்னை வருத்தாமலிருந்தால்
  
#75 பாலை மதுரைப்போத்தனார்#75 பாலை மதுரைப்போத்தனார்
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்அருள் செய்வது என்பதைப் பொருட்டாக எண்ணாமல், பொருளீட்டும் முயற்சியையே ஆண்பிள்ளைகள்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்பொருட்டாக எண்ணித் துணிந்த உண்மையற்ற அறிவினையுடைய
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாதுவலிமை மிக்க உள்ளத்தால், சோம்பியிராமல்,
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல்தீயின‌து வெப்ப‌ம் த‌வ‌ழும் பெரிய‌ பாலை நில‌த்தில், இலை முதலியன
கரி குதிர் மரத்த கான வாழ்க்கைகரிந்து உதிர்ந்த மரத்தையுடைய காட்டினில் வாழும் வாழ்க்கையையுடைய
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்கொல்லுகின்ற புலியை ஒத்த வலிமையையுடைய வீரக் கழல் கட்டிய அடியினையுடைய மறவர்கள்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும்பழையதாய் வருகின்ற சிறிய ஊரின்கண் அமைந்த மன்றத்து நிழலிலே துயிலும்
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்தபெருமையையுடைய நெடிய மலையிலுள்ள நீர் வற்றிக் காய்ந்துபோன
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல்பரல்கற்கள் நிறைந்த வழியில் செல்வாராயின், நல்ல நெற்றியினையும்,
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய்குற்றமற்ற விரதக்கோட்பாடுகளையும், ஒருசில சொற்களையே பேசும் பவளம் போன்ற வாயினயும்
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர்ஒளிரும் வளை அணிந்த முன்கையினையும், ஆய்ந்தெடுத்த அணிகலன்களையுமுடைய பெண்களின்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துமுத்தாரம் தொங்குகின்ற பரந்த முலையையுடைய மார்பினில்
ஆரா காதலொடு தார் இடை குழையாதுதணியாத விருப்பத்துடன் (அணைப்பதால்) தமது மார்பினில் கொண்ட மாலை குழைந்துபோகாமல்,
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்மறைந்துபோன பழைய பேரழகினை நினைத்து, என்றும்
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும்வருத்தப்படுவார்தான் இருப்பாரேயன்றி, யாரேனும்
தருநரும் உளரோ இ உலகத்தான் எனஅவ்வழகினை மீண்டும் கொண்டுவந்து கொடுப்போர் இருக்கிறார்களோ இவ்வுலகத்தில் என்று
மாரி ஈங்கை மா தளிர் அன்னமழைக்காலத்து இண்டைச்செடியின் கரிய தளிரைப் போன்ற
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின்அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும், நுண்மையான இடையினையும்
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்ப‌ல‌ காசுக‌ளை வரிசையாக‌க் கோத்த மேகலையை உடைய‌ பக்கம் உய‌ர்ந்த‌ அல்குலினையும் 
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறிமென்மையான இயல்பினையுமுடைய சிறுபெண்ணே! நீ என்னிடம் பிணக்கம் கொண்டு பலவும் சொல்லி
ஆனா நோயை ஆக யானேகுறையாத துன்பமுடையவளாக இருக்கும்போது, நானோ
பிரிய சூழ்தலும் உண்டோபிரிந்துசெல்ல எண்ணவும் செய்வேனோ
அரிது பெறு சிறப்பின் நின்_வயினானேஅரிதாகப் பெற்ற சிறப்பினையுடைய உன்னை விட்டு –