அகநானூறு 226-250

  
#226 மருதம் பரணர்#226 மருதம் பரணர்
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊரநாண் இலை மன்ற யாணர் ஊர
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைஅகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின்குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின்
பழன பைம் சாய் கொழுதி கழனிபழன பைம் சாய் கொழுதி கழனி
கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும்கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும்
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறைபல் வேல் மத்தி கழாஅர் முன்துறை
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅயநெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரிவிடியல் வந்த பெரு நீர் காவிரி
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடுதொடி அணி முன்கை நீ வெய்யோளொடு
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவைதித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சிபாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி
போர் அடு தானை கட்டிபோர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதேபொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே
  
#227 பாலை நக்கீரர்#227 பாலை நக்கீரர்
நுதல் பசந்தன்றே தோள் சாயினவேநுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடினதிதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண்என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றிநீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி
இனையல் வாழி தோழி நனை கவுள்இனையல் வாழி தோழி நனை கவுள்
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடுகாய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர்முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர்
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்பபுலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்துசெம் நில படு நீறு ஆடி செரு மலைந்து
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇபல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்
வருநர் வரையா பெருநாள் இருக்கைவருநர் வரையா பெருநாள் இருக்கை
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைதூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்துஇரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து
எல் உமிழ் ஆவணத்து அன்னஎல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரேகல்லென் கம்பலை செய்து அகன்றோரே
  
#228 குறிஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார்#228 குறிஞ்சி அண்டர் மகன் குறுவழுதியார்
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லெனபிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென
வரை இழி அருவி ஆரம் தீண்டிவரை இழி அருவி ஆரம் தீண்டி
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில்தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில்
கண் என மலர்ந்த மா இதழ் குவளைகண் என மலர்ந்த மா இதழ் குவளை
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடிகல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி
பகலே இனிது உடன் கழிப்பி இரவேபகலே இனிது உடன் கழிப்பி இரவே
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்லசெல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின்
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்றுசூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ
புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய்புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலைஇரும் பிடி இரியும் சோலை
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானேபெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே
  
#229 பாலை மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்#229 பாலை மதுரை கூலவாணிகன் சீத்தலை சாத்தனார்
பகல் செய் பல் கதிர் பருதி_அம்_செல்வன்பகல் செய் பல் கதிர் பருதி_அம்_செல்வன்
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து எனஅகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைநீர் அற வறந்த நிரம்பா நீள் இடை
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடிகயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகிநெடும் சேண் இடைய குன்றம் போகி
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள்பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
நம் இன்று ஆயினும் முடிக வல்லெனநம் இன்று ஆயினும் முடிக வல்லென
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள்பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள்
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்பபல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரிபொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி
நன் மா மேனி தொலைதல் நோக்கிநன் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினையஇனையல் என்றி தோழி சினைய
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினபாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்துபோது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைஅம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை
செம் கண் இரும் குயில் நயவர கூஉம்செம் கண் இரும் குயில் நயவர கூஉம்
இன் இளவேனிலும் வாரார்இன் இளவேனிலும் வாரார்
இன்னே வருதும் என தெளித்தோரேஇன்னே வருதும் என தெளித்தோரே
  
#230 நெய்தல் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்#230 நெய்தல் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்தஉறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்
பெரும் தண் மா தழை இருந்த அல்குல்பெரும் தண் மா தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்றுஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள்மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள்
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்தவிளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டுபுன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்
இ மனை கிழமை எம்மொடு புணரின்இ மனை கிழமை எம்மொடு புணரின்
தீதும் உண்டோ மாதராய் எனதீதும் உண்டோ மாதராய் என
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர்கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர்
கைவல் பாகன் பையென இயக்ககைவல் பாகன் பையென இயக்க
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கிஅரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி
சிறிய இறைஞ்சினள் தலையேசிறிய இறைஞ்சினள் தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவேபெரிய எவ்வம் யாம் இவண் உறவே
  
  
  
  
  
  
#231 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்#231 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்குசெறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணிஇல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர்
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கைபடு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇகள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடைஉள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருகவெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக
வருவர் வாழி தோழி பொருவர்வருவர் வாழி தோழி பொருவர்
செல் சமம் கடந்த செல்லா நல் இசைசெல் சமம் கடந்த செல்லா நல் இசை
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
ஆடு வண்டு அரற்றும் முச்சிஆடு வண்டு அரற்றும் முச்சி
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரேதோடு ஆர் கூந்தல் மரீஇயோரே
  
#232 குறிஞ்சி கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்#232 குறிஞ்சி கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
காண் இனி வாழி தோழி பானாள்காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇமாஅல் யானை புலி செத்து வெரீஇ
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும்இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும்
பெரும் கல் நாடன் கேண்மை இனியேபெரும் கல் நாடன் கேண்மை இனியே
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்தமன்ற வேங்கை மண நாள் பூத்த
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்
விரவு பூ பலியொடு விரைஇ அன்னைவிரவு பூ பலியொடு விரைஇ அன்னை
கடி உடை வியல் நகர் காவல் கண்ணிகடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கேபருவம் ஆக பயந்தன்றால் நமக்கே
  
#233 பாலை மாமூலனார்#233 பாலை மாமூலனார்
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின்அலமரல் மழை கண் மல்கு பனி வார நின்
அலர் முலை நனைய அழாஅல் தோழிஅலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம்எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம்
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து எனபீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என
ஊன் இல் யானை உயங்கும் வேனில்ஊன் இல் யானை உயங்கும் வேனில்
மற படை குதிரை மாறா மைந்தின்மற படை குதிரை மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல் இசைதுறக்கம் எய்திய தொய்யா நல் இசை
முதியர் பேணிய உதியஞ்சேரல்முதியர் பேணிய உதியஞ்சேரல்
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல்
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்குகூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்தகுறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனிசுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅமடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅ
பொருள்_வயின் நீடலோ இலர் நின்பொருள்_வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தேஇருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே
  
#234 முல்லை பேயனார்#234 முல்லை பேயனார்
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலைகார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிநிரை பறை அன்னத்து அன்ன விரை பரி
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇயபுல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கியவள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பபல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப
கால் என மருள ஏறி நூல் இயல்கால் என மருள ஏறி நூல் இயல்
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர்
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுநவல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணைததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகளஏறு புணர் உவகைய ஊறு இல உகள
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதிஅம் சிறை வண்டின் மென் பறை தொழுதி
முல்லை நறு மலர் தாது நயந்து ஊதமுல்லை நறு மலர் தாது நயந்து ஊத
எல்லை போகிய புல்லென் மாலைஎல்லை போகிய புல்லென் மாலை
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்
கழி படர் உழந்த பனி வார் உண்கண்கழி படர் உழந்த பனி வார் உண்கண்
நன் நிறம் பரந்த பசலையள்நன் நிறம் பரந்த பசலையள்
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவேமின் நேர் ஓதி பின்னு பிணி விடவே
  
#235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்#235 பாலை கழார்க்கீரன் எயிற்றியார்
அம்ம வாழி தோழி பொருள் புரிந்துஅம்ம வாழி தோழி பொருள் புரிந்து
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும்
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோசிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்துபயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து
விண்டு முன்னிய கொண்டல் மா மழைவிண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்பமங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றிவாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழசுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூசுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணியவிசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய
களவன் மண் அளை செறிய அகல் வயல்களவன் மண் அளை செறிய அகல் வயல்
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூகிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ
மாரி அம் குருகின் ஈரிய குரங்கமாரி அம் குருகின் ஈரிய குரங்க
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றிநனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி
பனி கடி கொண்ட பண்பு இல் வாடைபனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலியமருளின் மாலையொடு அருள் இன்றி நலிய
நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடுநுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
தொல் நலம் சிதைய சாஅய்தொல் நலம் சிதைய சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரேஎன்னள்-கொல் அளியள் என்னாதோரே
  
#236 மருதம் பரணர்#236 மருதம் பரணர்
மணி மருள் மலர முள்ளி அமன்றமணி மருள் மலர முள்ளி அமன்ற
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன்
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்திஅரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றைவெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டுஇடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு
பனி படு சாய் புறம் பரிப்ப கழனிபனி படு சாய் புறம் பரிப்ப கழனி
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூகரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன்
காமம் பெருமை அறியேன் நன்றும்காமம் பெருமை அறியேன் நன்றும்
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்உய்ந்தனென் வாழி தோழி அல்கல்
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பஅணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கைகொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை
அறியாமையின் அழிந்த நெஞ்சின்அறியாமையின் அழிந்த நெஞ்சின்
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தைதோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை
ஆட்டன்அத்தியை காணீரோ எனஆட்டன்அத்தியை காணீரோ என
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று எனகடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்தகலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போலஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலேஏதம் சொல்லி பேது பெரிது உறலே
  
#237 பாலை தாயங்கண்ணனார்#237 பாலை தாயங்கண்ணனார்
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீபுன் கால் பாதிரி அரி நிற திரள் வீ
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்பநுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழதேன் இமிர் நறும் சினை தென்றல் போழ
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்துகுயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
இன்னா கழியும் கங்குல் என்று நின்இன்னா கழியும் கங்குல் என்று நின்
நன் மா மேனி அணி நலம் புலம்பநன் மா மேனி அணி நலம் புலம்ப
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல்இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல்
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறைசெம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடுமென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடுவிளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்துவினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து
ஐய அமர்த்த உண்கண் நின்ஐய அமர்த்த உண்கண் நின்
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரேவை ஏர் வால் எயிறு ஊறிய நீரே
  
#238 குறிஞ்சி கபிலர்#238 குறிஞ்சி கபிலர்
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து எனஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என
மட மான் வல்சி தரீஇய நடுநாள்மட மான் வல்சி தரீஇய நடுநாள்
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்தஇருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்துபணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து
மட கண் ஆமான் மாதிரத்து அலறமட கண் ஆமான் மாதிரத்து அலற
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறுதட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சிநனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி
இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
பெரும் கல் நாட பிரிதி ஆயின்பெரும் கல் நாட பிரிதி ஆயின்
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்குமருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளிகழல் தொடி தட கை கலி_மான் நள்ளி
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்துநளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்தமென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கேதண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே
  
#239 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்#239 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
அளிதோ தானே எவன் ஆவது-கொல்அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும்மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇயஎல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும்
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்திவேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி
புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின்புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை யாம் இவண் ஒழியபுல்லென் மாலை யாம் இவண் ஒழிய
ஈட்டு அரும்-குரைய பொருள்_வயின் செலினேஈட்டு அரும்-குரைய பொருள்_வயின் செலினே
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் எனநீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என
குறு நெடும் புலவி கூறி நம்மொடுகுறு நெடும் புலவி கூறி நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்தநெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரேசிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே
  
#240 நெய்தல் எழுஉப்பன்றி நாகன் குமரனார்#240 நெய்தல் எழுஉப்பன்றி நாகன் குமரனார்
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினைசெம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரைதனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணி பூ நெய்தல் மா கழி நிவப்பமணி பூ நெய்தல் மா கழி நிவப்ப
இனி புலம்பின்றே கானலும் நளி கடல்இனி புலம்பின்றே கானலும் நளி கடல்
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டியபன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில்
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்திஅணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும்யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவிதேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்துகோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு படஇன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கேவாவே தெய்ய மணந்தனை செலற்கே
  
  
  
  
  
  
#241 பாலை காவன் முல்லை பூதனார்#241 பாலை காவன் முல்லை பூதனார்
துனி இன்று இயைந்த துவரா நட்பின்துனி இன்று இயைந்த துவரா நட்பின்
இனியர் அம்ம அவர் என முனியாதுஇனியர் அம்ம அவர் என முனியாது
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியா காதலொடு உழையர் ஆகியபிரியா காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசைநமர்-மன் வாழி தோழி உயர் மிசை
மூங்கில் இள முளை திரங்க காம்பின்மூங்கில் இள முளை திரங்க காம்பின்
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்துகழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனம் தலைஅருவி ஆன்ற வெருவரு நனம் தலை
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடிபேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலைதாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலைபுலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலைவட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும்செம் முக மந்தி ஆடும்
நன் மர மருங்கின் மலை இறந்தோரேநன் மர மருங்கின் மலை இறந்தோரே
  
#242 குறிஞ்சி பேரிசாத்தனார்#242 குறிஞ்சி பேரிசாத்தனார்
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைஅரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாதுசுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்குமணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலைஅவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை
பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம்பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம்
செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்குமுறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇஅறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ
அறியா வேலன் தரீஇ அன்னைஅறியா வேலன் தரீஇ அன்னை
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்திவெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம்
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளைசெலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள்நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇயநல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ்
முயங்கல் இயைவது-மன்னோ தோழிமுயங்கல் இயைவது-மன்னோ தோழி
நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில்நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில்
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலைபெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை
சாந்த மென் சினை தீண்டி மேலதுசாந்த மென் சினை தீண்டி மேலது
பிரசம் தூங்கும் சேண் சிமைபிரசம் தூங்கும் சேண் சிமை
வரை_அக வெற்பன் மணந்த மார்பேவரை_அக வெற்பன் மணந்த மார்பே
  
#243 பாலை கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்#243 பாலை கொடியூர் கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
அவரை ஆய் மலர் உதிர துவரினஅவரை ஆய் மலர் உதிர துவரின
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்பவாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைஇறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை
கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணியகறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணிய
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்புபெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனிபீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லெனநெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென
கடிது வந்து இறுத்த கண் இல் வாடைகடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கிநெடிது வந்தனை என நில்லாது ஏங்கி
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கைபல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலைநம் வலத்து அன்மை கூறி அவர் நிலை
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்லஅறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல
பனி வார் கண்ணேம் ஆகி இனி அதுபனி வார் கண்ணேம் ஆகி இனி அது
நமக்கே எவ்வம் ஆகின்றுநமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனேஅனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே
  
#244 முல்லை மதுரை மள்ளனார்#244 முல்லை மதுரை மள்ளனார்
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்னபசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவைசேய் உயர் சினைய மா சிறை பறவை
பகல் உறை முது மரம் புலம்ப போகிபகல் உறை முது மரம் புலம்ப போகி
முகை வாய் திறந்த நகை வாய் முல்லைமுகை வாய் திறந்த நகை வாய் முல்லை
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசைகடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலைவண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்குவரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது-கொல் வாழி தோழி என தன்இனிது-கொல் வாழி தோழி என தன்
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்பபல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப
அரும் துயர் உடையள் இவள் என விரும்பிஅரும் துயர் உடையள் இவள் என விரும்பி
பாணன் வந்தனன் தூதே நீயும்பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டிபுல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி
நெடும் தேர் ஊர்-மதி வலவநெடும் தேர் ஊர்-மதி வலவ
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையேமுடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே
  
#245 பாலை மதுரை மருதன் இளநாகனார்#245 பாலை மதுரை மருதன் இளநாகனார்
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் எனநன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கிநீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கைசெல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர் எல் உறவல் வில் இளையர் தலைவர் எல் உற
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலைவரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள்மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள்
கான யானை வெண் கோடு சுட்டிகான யானை வெண் கோடு சுட்டி
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகுறஅரு முனை பாக்கத்து அல்கி வைகுற
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்துநிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூஅழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்புகுறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடும் கவலைய கானம் நீந்திகல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழியஅம் மா அரிவை ஒழிய
சென்மோ நெஞ்சம் வாரலென் யானேசென்மோ நெஞ்சம் வாரலென் யானே
  
#246 மருதம் பரணர்#246 மருதம் பரணர்
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றைபிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆககதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும்நெடு நீர் பொய்கை துணையொடு புணரும்
மலி நீர் அகல் வயல் யாணர் ஊரமலி நீர் அகல் வயல் யாணர் ஊர
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடுபோது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறுதாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு
ஆடினை என்ப நெருநை அலரேஆடினை என்ப நெருநை அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழியஇமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாயபதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றைமொய் வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதேதொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே
  
#247 பாலை மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்#247 பாலை மதுரை மருதம் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலைமண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர்நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர்
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்துஅருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றைஇரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும்
அரிய கானம் என்னார் பகை படஅரிய கானம் என்னார் பகை பட
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்துமுனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
ஊறு படு கவலைய ஆறு பல நீந்திஊறு படு கவலைய ஆறு பல நீந்தி
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின்படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின்
பாறு கிளை சேக்கும் சேண் சிமைபாறு கிளை சேக்கும் சேண் சிமை
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரேகோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே
  
#248 குறிஞ்சி கபிலர்#248 குறிஞ்சி கபிலர்
நகை நீ கேளாய் தோழி அல்கல்நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇவய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடுஇளையர் எய்துதல் மடக்கி கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்துநால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்றஅரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
தறுகண் பன்றி நோக்கி கானவன்தறுகண் பன்றி நோக்கி கானவன்
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழிகுறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாதுமடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் எனஅரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என
எய்யாது பெயரும் குன்ற நாடன்எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்துசெறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலைஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வரஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னைஇல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை
வல்லே என் முகம் நோக்கிவல்லே என் முகம் நோக்கி
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளேநல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே
  
#249 பாலை நக்கீரனார்#249 பாலை நக்கீரனார்
அம்ம வாழி தோழி பல் நாள்அம்ம வாழி தோழி பல் நாள்
இ ஊர் அம்பல் எவனோ வள் வார்இ ஊர் அம்பல் எவனோ வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணைவிசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டிபொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ
நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண்
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார்நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார்
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇபல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ
தோகை தூவி தொடை தார் மழவர்தோகை தூவி தொடை தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்றநாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற
புலவு களம் துழைஇய துகள் வாய் கோடைபுலவு களம் துழைஇய துகள் வாய் கோடை
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்தநீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்துவாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறிவேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும்உழைமான் இன நிரை ஓடும்
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரேகழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே
  
#250 நெய்தல் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்#250 நெய்தல் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னைமல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்பவண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வரமணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாடகணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கிகொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும்
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டுமறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடிஅம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி
வெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கிவெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி
இறை வளை நெகிழ்ந்த நம்மொடுஇறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துறையும் துஞ்சாது கங்குலானேதுறையும் துஞ்சாது கங்குலானே