நற்றிணை 251-300

# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்# 251 குறிஞ்சி மதுரை பெருமருதிள நாகனார்
  
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்நெடிதாய் விழும் நீரைக்கொண்ட அருவியையுடைய மிகுந்த ஒலி விளங்கும் இடத்தில் உள்ள
பிணி முதல் அரைய பெரும் கல் வாழைஊன்றிப் பிணிப்புக்கொண்ட அடிப்பகுதியையுடையதும், பெரிய மலையில் உண்டானதுமான வாழையின்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்முழுமையும் கொழுத்த அழகிய பழத்தை குரங்குகள் கவர்ந்துண்ணும்
நன் மலை நாடனை நயவா யாம் அவன்நல்ல மலைக்குரிய நாடனை விரும்பிய நாங்கள், அவன்மீதுகொண்ட
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி       5மிகுந்த பேரளவான அன்பினால், உன்னுடைய கதிர்களைக் கிளிகள் கொத்தாதவாறு ஓட்டி
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்உன்னைப் பாதுகாத்து வருதலைக் காண்கிறாய்! நீ, எனது
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழியதளிர் போன்ற அழகான மேனியின் நெடுநாளைய அழகு அழிந்துபோனதாக,
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்துபலியைப் பெறும் கடவுளைத் தொழுது, ஆரவாரத்துடன் வெறியெடுக்க,
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும்கதிர்களால் ஈர்க்கப்பட்ட பறவைகள் மொத்தமாக இளங்கதிர்களைக் கவர்ந்துபோகும்,
தோடு இடம் கோடாய் கிளர்ந்து      10அதனால் தோடு பொதிந்த உன் கதிர்களை வளைக்காதே! நிமிர்ந்து நின்று
நீடினை விளைமோ வாழிய தினையேநெடுநாள் கழித்து விளைவாயாக, வாழ்க , தினையே!
  
# 252 பாலை அம்மெய்யன் நாகனார்# 252 பாலை அம்மெய்யன் நாகனார்
  
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிகிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்சில்வண்டு ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லதுதிட்டமிட்டுச் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் எனஅரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த    5இதுவரை துணியாத நெஞ்சம் இப்போது முடிவுசெய்ய, ஆராய்ந்து தொடங்கிய
வினை இடை விலங்கல போலும் புனை சுவர்செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும் – தீட்டப்பட்ட சுவரில் உள்ள
பாவை அன்ன பழி தீர் காட்சிசித்திரப்பாவை போன்ற குற்றமற்ற தோற்றத்தையும்,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்துமென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் 10முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்
நன் நா புரையும் சீறடிநல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும்,
பொம்மல் ஓதி புனை_இழை குணனேபொங்கிச் செறிந்த கூந்தலையும், புனையப்பட்ட அணிகலன்களையும் கொண்ட இவளது குணநலன் –
  
# 253 குறிஞ்சி கபிலர்# 253 குறிஞ்சி கபிலர்
  
புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும்பறவைகள் தம் கூடுகளைச் சென்றடைவதைப் பார்த்தாலும், கணவனும் மனைவியுமாய்ச் சேர்ந்திருப்போரைக் கண்டாலும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினைபடுத்திருக்கும் யானையைப் போல பெருமூச்சு விடுகின்றாய்!
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்துமிகுதிப்பட வருத்தமுற்ற துன்பத்துடனே பெரிதும் மனங்குன்றி,
எனவ கேளாய் நினையினை நீ நனிநான் சொல்லுவதையும் கேளாது, வேறு எதனையோ நினைக்கின்றாய் நீ! மிகவும்
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள்   5நினைத்து நினைத்து மனம் நடுங்குகின்ற ஒள்ளிய அணிகலன்களைக் கொண்ட இளையவளான இவள் –
பேர் இசை உருமொடு மாரி முற்றியபெரிய முழக்கத்தைச் செய்யும் இடியுடன் மழை மிகுந்து பெய்யும்,
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரிபலவான பனவோலைக்குடையில் உண்ணும் கள்ளினால் மிகுந்த மகிழ்ச்சியுற்ற பாரியின்
பலவு உறு குன்றம் போலபலாமரங்கள் விளங்கும் பறம்பு மலையைப் போல
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளேபெரும் அழகு வாய்க்கப்பெற்று இப்போது அரிய காவலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறாள்.
  
# 254 நெய்தல் உலோச்சனார்# 254 நெய்தல் உலோச்சனார்
  
வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும்குறுமணலில் வீடுகட்டி விளையாடியும், வருகின்ற அலைகளை எற்றிவிளையாடியும்,
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும்குன்றைப் போல் ஓங்கிய வெள்ளிய மணலில் படர்ந்த அடும்பு மலர்களைக் கொய்தும்,
துனி இல் நன் மொழி இனிய கூறியும்வெறுப்பை விளைக்காத நல்ல மொழிகளை இனிமையாகக் கூறியும்,
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லஅச்சொற்களுக்கு மறுமொழி கிடைக்கப்பெறாதவனாய் மனம்துவண்டு, மெதுவாக
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப 5திரும்பிச் செல்வதற்காகப் புறப்படும், ஒலிக்கின்ற பெரிய கடற்பரப்பினைச் சேர்ந்தவனே!
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லைக் குற்றிச் செய்த
அயினி மா இன்று அருந்த நீலஅரிசிக்குருணையை உன் குதிரைகள் இன்று உண்ண, நீல மலர்களின்
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின்தொகுதி மணக்கின்ற பெரிய பூமாலை புரளுகின்ற மார்புக்குத்
துணை இலை தமியை சேக்குவை அல்லைதுணையில்லாதவனாய் தனியனாய்த் தங்க மாட்டாய்!;
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி 10நேராக அமைந்த இடத்தையுடைய சிறிய பாத்திகளில் கடல்நீரைப் பாய்ச்சி
வானம் வேண்டா உழவின் எம்மழை தேவைப்படாத வேளாண்மை செய்யும் எமது
கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினேகடற்கரைச் சோலையிலுள்ள அழகிய சிறிய ஊருக்கு வந்துசேர்ந்து தங்கிச்சென்றால் –
  
# 255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார்# 255 குறிஞ்சி ஆலம்பேரி சாத்தனார்
  
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றேபேயினங்கள் நடமாடித்திரிய ஊர் துயில்கொள்ளுகின்றது;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடிஅச்சம்பொருந்திய மரபையுடைய குறிஞ்சிப்பண்ணைப் பாடியவாறு
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார்காவலையுடைய அகன்ற ஊரின் கானவர் தூங்கமாட்டார்;
வய களிறு பொருத வாள் வரி உழுவைவலிமைகொண்ட யானையோடு போரிட்ட வாளைப்போன்ற வரிகளையுடைய புலி
கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ       5பாறைக் குகைகள் கொண்ட மலைச்சரிவில் கூடியிருக்கும்; ஐயோ!
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்நமது மென்மையான தோள்கள் தளர்ந்து நாம் வருந்தினாலும், இன்று நம் காதலர்
வாரார் ஆயினோ நன்று-மன் தில்லவராமலிருந்தால் நல்லதுதான் –
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிஉயர்ந்த மலைகளைக்கொண்ட மலைத்தொடரில் ஒளிறும்படி மின்னி,
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்மழை காற்றோடு கலந்தடித்த பொழுது சென்ற நள்ளிரவில்
திரு மணி அரவு தேர்ந்து உழல      10அழகிய மணி கொண்ட பாம்பு அதனைத் தேடி வருந்த,
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறேஇடி சினந்து முழங்கும் உயர்ந்த மலைப்பாதையில் –
  
# 256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 256 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடிநீதான், புகழ்பெற்ற குற்றம் தீர்ந்த சிறிய அடிகளையும்,
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணைநிலைத்திருக்கும் பெரிதான நலங்கள் உள்ள அமைதிகொண்ட கண்களையும் உடையவள்;
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்தவேனிலின் காடோ, நிழல்தரும் அழகினை இழந்த, வேனில் வெம்மையால் கரிந்துபோன, மரங்களைக் கொண்டு,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவேநடமாட்டமற்ற வெறுமை வீற்றிருக்க பொலிவழிந்து இருக்கும்;
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி5இந்த நிலையில் தவிர்த்துவிட்டோம் பயணத்தை; கூர்மையான நுனியையுடைய
களவுடன் கமழ பிடவு தளை அவிழகளாவின் அரும்பு மலர்ந்து கமழ, பிடவமும் கட்டவிழ்ந்து மலர,
கார் பெயல் செய்த காமர் காலைகார்காலம் மழை பொழிந்த இனிதான மாலைப்பொழுதில்,
மட பிணை தழீஇய மா எருத்து இரலைதன்னுடைய இளம் பெண்மானைத் தழுவிய பெரிய பிடரியைக் கொண்ட ஆண்மான்
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்தவயிரம் பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த
கண் கவர் வரி நிழல் வதியும்      10கண்ணைப் பறிக்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவேகுளிர்ச்சி பொருந்திய கார்காலத்துக் காட்டினிலும் தவிர்த்துவிட்டோம் பயணத்தை.
  
# 257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார்# 257 குறிஞ்சி வண்ணக்கன் சோருமருங்குமரனார்
  
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇகுறையாத முழக்கத்துடன் மழைத்துளி மிகவும் பெய்து பரக்க, 
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்மழை முகில்கள் எழுந்து தங்கிய குளிர்ச்சி தவழும் மலைச் சரிவில்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டுமூங்கில்கள் செறிவாக உயர்ந்துநிற்கும் வானளாவ உயர்ந்த நெடிய உச்சியில்
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன்ஒளிறும் வெண்மையான அருவியையுடைய அகன்ற மலையுச்சியின் சரிவில்,
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை 5அரும்புகள் மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம்பொன்னைப் போன்ற மணமுள்ள பூக்கள் பாறை மீது பரவிக்கிடக்கும்
நன் மலை நாட நயந்தனை அருளாய்நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவனே! எம்மை விரும்பினையெனினும் அருள்செய்யமாட்டாய்!
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிவழிச்செல்வோர் அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில்,
கடு மா வழங்குதல் அறிந்தும்கொலைத்தன்மையுள்ள விலங்குகள் திரிவதை அறிந்திருந்தும்
நடுநாள் வருதி நோகோ யானே 10நடுயாமத்தில் வருகிறாய், வருந்துகிறேன் நான்.
  
# 258 நெய்தல் நக்கீரர்# 258 நெய்தல் நக்கீரர்
  
பல் பூ கானல் பகற்குறி மரீஇநிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுச்
செல்வல் கொண்க செறித்தனள் யாயேசெல்வாயாக, தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்றுகதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த5பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் படகொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகல் அங்காடி அசை நிழல் குவித்தஅகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கைபசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்  10மருங்கூர்ப் பட்டினத்தைப் போன்ற இவளது
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டேநெருக்கமாயுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு –
  
# 259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார்# 259 குறிஞ்சி கொற்றம் கொற்றனார்
  
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீஎன்ன செய்வோம் தோழி? பொன்னிற மலர்களைக்கொண்ட
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்வேங்கை மரங்கள் உயர்ந்துவளர்ந்த தேன் மணக்கும் மலைச்சாரலில்
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கிபெரிய மலைநாட்டினனோடு பெரிய தினைப்புனத்தில் தங்கி,
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய்சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகளை ஓட்டி, அங்கே உள்ள
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி   5பெரிய மலைகளின் மலையிடுக்கில் உள்ள அருவியில் நீராடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவிமலைச்சாரலில் உள்ள சந்தனத்தை வண்டுகள் மொய்க்கும்படி பூசி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனிமிகவும் விரும்பிச் செய்துகொண்ட நட்பு, சிறிது காலத்தில்
அரிய போல காண்பேன் விரி திரைஅரியது ஆகிவிடுவது போலக் காண்கிறேன்; விரிந்த அலைகளையுடைய
கடல் பெயர்ந்து அனைய ஆகிகடல் பின்வாங்கிக் காய்ந்தநிலம் ஆகியது போல ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே    10காய்ந்து புலரும் பருவத்தை எய்தின தினையின் கதிர்கள்.
  
# 260 மருதம் பரணர்# 260 மருதம் பரணர்
  
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமைகழுநீர் மலரை மேய்ந்த கரிய அடியினையுடைய எருமை,
பழன தாமரை பனி மலர் முணைஇபொய்கையில் பூத்த தாமரையின் குளிர்ச்சியான மலரைத் திகட்டும்படி உண்டுவெறுத்து,
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலதுபடையில் சேர்ந்த மறவரைப் போல் செருக்கோடு நடந்து, அருகிலிருக்கும்
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊரகுன்று போன்ற வெள்ளை மணலில் படுத்துறங்கும் ஊரினைச் சேர்ந்தவனே!
வெய்யை போல முயங்குதி முனை எழ    5என்மேல் மிகவும் விருப்பமுள்ளவன் போல என்னைத் தழுவவருகிறாய், முனைப்பு மிக,
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன்பகைவரை அழித்த சிவந்த வேற்படையையுடைய வலிமையுள்ள வீரனுடைய
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்மிகுந்த நீர் அமைந்த வாயிலைக்கொண்ட இருப்பையூர் போன்ற என்னுடைய
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்ததழைத்த பலவான கூந்தல் அழகுபெற அலங்கரித்த
முகை அவிழ் கோதை வாட்டியமொட்டுக்கள் மலர்ந்த பூமாலையை வாடும்படி செய்த
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே  10பகைவனல்லவா நீ? நான் மறக்கமாட்டேன்!
  
# 261 குறிஞ்சி சேந்தன் பூதனார்# 261 குறிஞ்சி சேந்தன் பூதனார்
  
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபுஅருள் இல்லாதவர் அவர், வாழ்க தோழியே! மின்னல் பிளக்க,
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுஇருள் நிலைத்திருக்கும் வானத்தில் அதிரும் இடியுடன்
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்வெம்மையான ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகிநெடிய பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து,
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து       5இடையறவு இன்றி பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில்,
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்யானையை இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்உட்கூடு இல்லாமல் நன்கு வயிரம் பாய்ந்த மரத்தோடு சேர்த்துப் பிணித்து மிகவும் புரண்டுகொண்டிருக்கும்
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகைசந்தன மரங்கள் ஓங்கிவளர்ந்த தேன் கமழும் மலைப்பிளவுகளின் மொட்டுக்களைக் கொண்ட
எருவை நறும் பூ நீடியஎருவையின் நறிய பூக்கள் நெடுக மலர்ந்துள்ள
பெரு வரை சிறு நெறி வருதலானே     10பெரிய மலையில் உள்ள சிறிய பாதையில் வருவதால் –
  
# 262 பாலை பெருந்தலை சாத்தனார்# 262 பாலை பெருந்தலை சாத்தனார்
  
தண் புன கருவிளை கண் போல் மா மலர்குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வரஆடுகின்ற மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய,
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்துஅத்துடன் சேர்ந்து தூறல்மழையும் கலந்து தூவ, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில்,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்நடுங்கவைக்கும் காதல்நோய் வருத்த, நல்ல அழகெல்லாம் தொலைந்து,
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்    5கசந்துபோன மனத்தினளாய் வெறுப்பும் துன்பமும் வருத்துகின்ற,
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால்பருத்த தோள்களில் அரும்பிய தேமலும், திரட்சியையுடைய தண்டுகளையுடைய
குவளை நாறும் கூந்தல் தே மொழிகுவளைமலர்கள் மணக்கும் கூந்தலும், இனிய மொழிகளும் கொண்ட
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பஇவளை விட்டுப் பிரிந்தும், பொருளீட்டவேண்டும் எனும் ஆர்வம் தூண்டிவிட,
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்பிரிந்துசெல்வோம் என்று நெஞ்சு சொன்னால்
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே 10பொறுத்தற்கரியது நிச்சயமாக, இல்லாமையினால் பிறக்கும் இழிவான நிலை.
  
# 263 நெய்தல் இளவெயினனார்# 263 நெய்தல் இளவெயினனார்
  
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின்பிறை போன்ற தன் வனப்பை இழந்த நெற்றியையும், உனது
இறை வரை நில்லா வளையும் மறையாதுமுன்கையின் இறுதிவரை நில்லாத வளையையும், ஒளிக்காமல்
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டுஊரினர் பழிதூற்றும் அவதூறுகளைம், நாணத்தைவிட்டு
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டுஇவ்வாறாயின என்று அவருக்குச் சொல்லாதுவிட்டாலும், இரையை விரும்பி
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது 5முதிர்ந்த சூல்கொண்ட மசக்கைவிருப்போடு கடற்கரைச் சோலைக்குச் செல்லாமல்
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்குவயற்காடுகளிலேயே தங்கிவிட்ட வளைந்த வாயைக் கொண்ட தன் பெண்நாரைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்உடல்வளைந்த ஆண்நாரை கடலில் மீன்பிடித்துக்கொணர்ந்து கொடுக்கும்
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லாமென்புலமான நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல்,
கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்குமறைக்க மறைக்கக் கட்டுமீறிச்
உரைத்த தோழி உண்கண் நீரே 10சொல்லிவிட்டன தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.
  
# 264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார்# 264 பாலை ஆவூர் காவிதிகள் சாதேவனார்
  
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்புபாம்புகள் தம் புற்றுக்குள் சென்று பதுங்குமாறு முழக்கமிட்டு, வலமாக மேலெழுந்து
வான் தளி பொழிந்த காண்பு இன் காலைவானம் மழையைப் பொழிந்த காண்பதற்கு இனிய பொழுதில்,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்அழகு விளங்கும் தன் தோகையை மெதுவாக விரித்து நடந்துசெல்லும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்நீலமணி போன்ற கழுத்தைக் கொண்ட மயிலைப் போல, உன்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர    5பூச்சூட்டப்பெற்ற கூந்தல் வீசுகின்ற காற்றில் அசைந்தாட,
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதேவிரைந்து நடப்பாய் மடந்தையே!, இருளடையத்தொடங்கிவிட்டது பொழுது;
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்தமூங்கில்கள் நிறைந்த புதர்கள் உள்ள குறுங்காட்டில், மாடுமேய்ப்போர் கட்டிய
ஆ பூண் தெண் மணி இயம்பும்பசுக்கள் பூண்ட தெளிவான மணிகள் ஒலிக்கின்ற,
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரேஇதோ பார் தெரிகிறது, எமது சிறிய நல்ல ஊர்.
  
# 265 குறிஞ்சி பரணர்# 265 குறிஞ்சி பரணர்
  
இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலைசேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை எய்வதற்கு
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான,
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்5பாரம் என்னும் ஊரைப் போன்ற –  ஆத்திமாலை சூடிய
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்னசெங்கோல் ஏந்திய சோழனுடைய சிற்றரசரை உபசரிக்கும் ஆரேற்றினைப்போன்ற –
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிமழை போன்று வளப்பமிக்க கள்ளுணவையையுடைய ஓரியின் கொல்லி மலையிலிருக்கும்
கலி மயில் கலாவத்து அன்ன இவள்செருக்கிய மயிலின் தோகையைப் போன்ற – தலைவியின்
ஒலி மென் கூந்தல் நம்_வயினானேதழைத்த மென்மையான கூந்தல் நம்வசமே!
  
# 266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார்# 266 முல்லை கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
  
கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்தபுன்செய்க்காட்டில் வாழும் கோவலருடைய சிறிய புனத்தைச் சார்ந்த
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூகுட்டையான காம்பினையுடைய குராமரத்தின் குவிந்த கொத்திலுள்ள வெள்ளையான பூ
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும்ஆடு மேய்த்தலையுடைய இடையன் சூடிக்கொள்ளுமாறு மலரும்
அகலுள் ஆங்கண் சீறூரேமேஅகன்ற உட்புறத்தையுடைய மனைகளையுடையே சிறிய ஊரில் இருக்கின்றோம்;
அதுவே சாலும் காமம் அன்றியும்    5அதுவே பொருந்தியிருக்கும் எமது விருப்பத்துக்கு; மேலும்
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்றுஎம்மைவிட்டுப் பிரிந்துபோவீர் என்றால், சிறந்த ஒன்றைக்
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டுகூறுவேன், வாழ்க நீவிர் ஐயனே! என்னுடைய பிறந்த வீட்டினின்றும் வேறுபட்டு
இரீஇய_காலை இரியின்எம்மை உம்முடைய வீட்டில் இருக்கவைத்த பொழுது, நான் வருந்தினால்
பெரிய அல்லவோ பெரியவர் நிலையேபெருமை உடையன அல்லவோ பெரிய குடிப்பிறந்தவர் இயல்புகள்?.
  
# 267 நெய்தல் கபிலர்# 267 நெய்தல் கபிலர்
  
நொச்சி மா அரும்பு அன்ன கண்ணநொச்சியின் கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதிமணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்ஒளிரும் பற்களையுடைய அழகிய இனிய நகையினை உடைய மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல்வெயிலில் காயும் தினையைத் துழாவும் கையைப் போல், ஞாழலின்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்      5மணம் கமழும் நறிய உதிர்ந்த பூக்களை வரிகள் தோன்ற இழுத்துச் செல்கிற துறையைச் சேர்ந்தவன்
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்தன்னோடு தலைவியைச் சந்தித்த இனிமை பொருந்திய கடற்கரைச் சோலைக்குத்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து எனதனித்து வருவது மிகவும் வருத்தம் தருவதாம் என்று
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்யவாராதிருந்தேன் நான், உறுதியாக; எனினும் ஒருநாள் அங்கே வந்தேன்;
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்பசிறிய நாவைக்கொண்ட ஒளிவிடும் மணியின் தெளிந்த ஓசை போன்று
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல்      10கூட்டமான மீன்களை உண்பதற்காக, ஒன்று கூடிப் பறவைகள் ஒலிக்கும் குரலைக் கேட்டு,
இவை மகன் என்னா அளவை“இவை தலைமகனின் தேரின் மணிகளின் ஒலி அல்லவா” என்று கூறி முடிக்கும் முன்னர்,
வய_மான் தோன்றல் வந்து நின்றனனேவலிமை மிக்க குதிரைகளையுடைய அவன் தானே அங்கு வந்து நின்றான்.
  
# 268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார்# 268 குறிஞ்சி வெறி பாடிய காமக்கண்ணியார்
  
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்கஅச்சம் பொருந்திய அகன்ற இடத்திலுள்ள சுனையில் நீர் நிரம்பும்படி,
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்துமிகுந்த மழை பெய்த மிகவும் உயர்ந்த குன்றினில்
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூகருத்த காம்புகளைக் கொண்ட குறிஞ்சியின் வலிமையற்ற ஒளிரும் பூவின் தேனைக்கொண்டு
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்தஓவியத்தைப் பார்த்தாற்போன்று வீட்டு உச்சியில் கட்டப்பட்டுள்ள
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு    5மணங்கமழும் தேன்கூட்டில் தேன் ஒழுகுகின்ற நாட்டினையுடைவனிடம்
காதல் செய்தவும் காதல் அன்மைநாம் காதல் செய்தபோதும், அவனுக்கு நம்மீது காதலில்லாமற்போனது
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம்எதனாலோ? தோழி! கேட்போம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டுபரப்பி விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தேமெய்யை உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து –
  
# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
  
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணிகுரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும்
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன்பால் பருகும் சிவந்த வாயையும், பைம்பொன் அணிகலன்களையும் கொண்ட புதல்வன்
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழியமாலை அணிந்த மார்பினில் ஏறி இறங்கி விளையாட,
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகைஅழகிய பற்கள் வரிசையாக அமைந்த அழகிய வாயின் மாட்சிமையுள்ள நகைகொள்ளும்
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி 5குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய நம் உயிரான விருப்பமுள்ள காதலியின்
திரு முகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்அழகிய முகத்தில் சுழலும் கண்கள் துன்பம் அடைந்து, நாளும்
பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார்பெரிய மரத்தின் வள்ளிக்கொடியைப் போல நம்மைக் கட்டிப்போடும் என்று கருதாராய்ச்
சிறு பல் குன்றம் இறப்போர்சிறிய பலவான குன்றங்களைக் கடந்து செல்வோர்;
அறிவார் யார் அவர் முன்னியவ்வேஅறிவார் யார் அவர் மனத்தில் கருதியதை –
  
# 270 நெய்தல் பரணர்# 270 நெய்தல் பரணர்
  
தடம் தாள் தாழை குடம்பை நோனாஅகலமான அடிப்பகுதியைக் கொண்ட தாழையில் கட்டிய தன் கூட்டினில் தங்கமுடியாமல்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்துபூஞ்சோலை மலர்களின் மணங்கமழும், வண்டுகள் மொய்க்கின்ற நறிய மணத்தையுடைய,
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடிஇருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து
உருள் பொறி போல எம் முனை வருதல்கீழே விழுந்து, உருளும் பொறியைப் போல எம்மிடத்தில் வருதலையுள்ள,
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா 5தன்னை அழகுசெய்துகொள்வதைத் தவிர அதனால் உன்னைக் கட்டிப்போடுவதை அறியாத
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லாபெரிய தோளாகிய செல்வத்தையுடைய இவளைக்காட்டிலும், தலைவனே!
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடைஎன்பால் பெரிதும் அருள்செய்கின்றாய் நீ! அழகு பொருந்திய
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்விரிந்த பிடரிமயிர் பொலிவுபெற்ற விரைந்த ஓட்டத்தையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய,
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே      10பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது,
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையேமறந்துவிடுவேன் உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை.
  
# 271 பாலை கயமனார்# 271 பாலை கயமனார்
  
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவிகரிய, அண்மையில் ஈன்ற, எருமையின் பெரிய செவியினையுடைய கன்று,
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும்புதிய பூந்தாது உதிர்ந்து சாணத்தின் துகள்போலக் கிடப்பதில் படுத்துத் துயில்கொண்டு உறங்கும்
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழியசெழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க,
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டுதன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி, தொலை நாட்டு,
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர்   5சுவையுள்ள காயைக்கொண்ட நெல்லியின், வழிச்செல்வோரைப் போகவிடாமல் தடுக்கும் தோப்பில்
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்றுவிழுந்துகிடக்கின்ற முற்றிலும் திரண்ட காய்களை இருவரும் சேர்ந்து தின்று,
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்தவற்றியுள்ள சுனையிலுள்ள சிறிதளவு நீரைக் குடித்துவிட்டுக் கடந்து சென்ற
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்னகுவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள், ஒன்றுபோலிருக்கும்
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்சிவந்த பனங்குருத்தைப் பிளந்து பதனிடுவதற்குப் போடுகின்ற
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு10மாலைக் காலத்து விரிந்த நிலவில் செல்ல, அவளைப் பின்சென்று தேடும்படியாக விட்டதற்கு,
மா இரும் தாழி கவிப்பபெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றேவலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.
  
# 272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார்# 272 நெய்தல் முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
  
கடல் அம் காக்கை செ வாய் சேவல்கடலைச் சேர்ந்த காக்கையின் சிவந்த வாயையுடைய ஆண்பறவை,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்தநோன்பு மேற்கொண்ட மகளிர் கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறைமிகவும் தழைத்த அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில்,
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்குநிறைந்த சூல் கொண்டு தங்கியிருந்த அழகிய பேடைக்கு,
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி       5கரிய சேற்றில் இருக்கும் அயிரைமீனைத் தேடிக்கொணர தெளிந்த கழியில்
பூ உடை குட்டம் துழவும் துறைவன்பூக்கள் மலர்ந்துள்ள ஆழமான பகுதியில் மூழ்கித் துழாவும் துறையைச் சேர்ந்தவன்
நல்காமையின் நசை பழுது ஆகநமக்கு அருளாததினால் நமது விருப்பமெல்லாம் பழுதடைய
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய்பெரிதாகச் செயலற்றுப்போன எனது கீழ்நிலை, பலர் வாயிலும்
அம்பல் மூதூர் அலர்ந்துகுசுகுசுக்கும் அம்பலாகிப் பின்னர் ஊர்முழுக்கப் பலரறிய அலராகிய அவதூறாகி
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே10நோய்தருவதாகிவிட்டது; அது பிரிவுதரும் நோயைக்காட்டிலும் பெரிதாயிருக்கிறது
  
# 273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்# 273 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
  
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்துஇது என்னாகுமோ? தோழி! நம் உடம்பில் பரவி
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்துன்பத்தை உண்டாக்கி மனத்தடுமாற்றத்தை ஏற்படுத்திய துயரத்துக்காக,
வெம்மையின் தான் வருத்து_உறீஇ நம்_வயின்நம்மேல் கொண்ட நாட்டத்தினாலே தானும் வருத்தம் மேற்கொண்டு, நமக்காக
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி எனஅறியாமல் வெறியாட்டு எடுத்த அன்னைக்கு, “இது முருகுதான் உண்டாக்கியது” என்று
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்     5வேலன் கூறுவான் என்பர்; அதனால்
வண்ணம் மிகுந்த அண்ணல் யானைஇயற்கை அழகு மிகுந்த தலைமைப்பண்புள்ள யானை
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்நீர் உண்ணும் நெடிய சுனையில் அமைந்து நீண்டநாள் இருக்கும், என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்கண் போன்ற நீல மலர்கள் குளிர்ச்சியுடன் மணங்கமழ்ந்து சிறந்துவிளங்கும்
குன்ற நாடனை உள்ளு-தொறும்குன்றுகளுக்குரிய நாடனை நினைக்கும்போதெல்லாம்
நெஞ்சு நடுக்கு_உறூஉம் அவன் பண்பு தரு படரே       10என் நெஞ்சை நடுங்கவைக்கும் அவனது நற்பண்பு தருகின்ற நட்பால் வரும் வருத்தமானது –
  
# 274 பாலை காவன் முல்லை பூதனார்# 274 பாலை காவன் முல்லை பூதனார்
  
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇநெடிய மேகங்கள் மின்னி, சிறிய தூறலைப் போடத்தொடங்கி,
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்துபெரிய மழையாய்ப் பொழிந்த அகன்ற பிளப்புகளை உடைய குன்றத்தில்,
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்உழை மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்     5குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என“என்னோடு வருகிறாயா? அடர்ந்த கூந்தலையுடையவளே” என்று
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டுகூறியதும் உண்டல்லவா? தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு
இரும் புலி வழங்கும் சோலைபெரிய புலிகள் நடமாடித்திரியும் சோலைகளையுடைய
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரேபெரிய மலைநாட்டைச் சேர்ந்த நிலமாகிய பாலைவெளியைக் கடந்துசென்றவர் –
  
# 275 நெய்தல் அம்மூவனார்# 275 நெய்தல் அம்மூவனார்
  
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உறசெந்நெல்லின் கதிர் அறுப்போரின் கூரிய அரிவாளால் காயப்பட்டு
காணார் முதலொடு போந்து என பூவேஅதைக் காணாதவரின் நெற்கதிர் கட்டுக்களோடு போனதினால், பூவானது
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைஅரிவாளோடும், கதிர்க்கட்டோடும் கலந்து படுக்கையாய்க் கிடந்து
தன் உறு விழுமம் அறியா மென்மெலதனக்கு நேர்ந்த கதியை அறியாமல், மெல்லமெல்ல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்5சுடுகின்ற கதிர் ஒளியில் தன் இனிய துயில் நீங்கித் தன் பசிய வாயைத் திறக்கும்
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்குஏமாளியான நெய்தலைக் கொண்ட கடற்கரைத் தலைவனுக்காக
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்துநான் நினைத்து இரங்கமாட்டேன்; ஆதலால் என்னுடைய காதல் நோயை நீக்கி,
அறன் இலாளன் புகழ என்அந்த அறமற்றவனை ஊரார் புகழும்படி, என்னை
பெறினும் வல்லேன்-மன் தோழி யானேஅவன் வேண்டிப் பெற்றாலும் உடன்படுவேன், உறுதியாக தோழி, நானே!
  
# 276 குறிஞ்சி தொல் கபிலர்# 276 குறிஞ்சி தொல் கபிலர்
  
கோடு துவையா கோள் வாய் நாயொடுகொம்புகளை ஊதியவாறு, வேட்டையைப் பற்றிக்கொள்ளும் வாயையுடைய நாயுடன்
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டுகாட்டில் வேட்டையைத் தேடி, தளைர்ச்சியுற்ற வலிமையான விலங்குகளை வேட்டையாடும்
வயவர் மகளிர் என்றி ஆயின்வேட்டுவரின் பெண்கள் என்று எம்மைச் சொல்வாயாயின்,
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம்நாங்கள் குறவரின் பெண்களாவோம், மலைவாழ் கொடிச்சியர் ஆவோம்,
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில்       5உயர்ந்த பரணில் இருக்கும் தினைக்காவலன் கட்டிய உயரமான கால்களைக் கொண்ட பரணில்,
கான மஞ்ஞை கட்சி சேக்கும்காட்டு மயில்கள் தம் இருப்பிடமாய்த் தங்கிவாழும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாதுமலைகளுக்கிடையே அமைந்தது எமது ஊர்; எனவே இப்போது புறப்பட்டுச்செல்லாமல்
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலைஎம் ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான
வாங்கு அமை பழுனிய நறவு உண்டுவளைந்த மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே 10வேங்கை மரங்கள் இருக்கும் முற்றத்தில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு –
  
# 277 பாலை தும்பி சேர் கீரனார்# 277 பாலை தும்பி சேர் கீரனார்
  
கொடியை வாழி தும்பி இ நோய்நீ கொடியவள்! நன்றாக இரு! தும்பியே! எனது இந்த நோயினால்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து எனநான் இறந்துபடுவேனாக , நான் உனக்கு என் துன்பத்தைச் சொல்லியதால் –
மெய்யே கருமை அன்றியும் செவ்வன்உன் உடம்புதான் கருப்பு! அன்றியும், செவ்வனே இருக்கும்
அறிவும் கரிதோ அறன் இலோய் நினக்கேஅறிவும் கருப்போ, நீதியற்ற உனக்கு?
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை     5வீட்டைப் பொருந்திநின்று காக்கும் மாண்பும் பெருமையும் பொருந்திய இடத்திலுள்ள
நுண் முள் வேலி தாதொடு பொதுளியநுண்மையான முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த,
தாறு படு பீரம் ஊதி வேறுபடகொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து, அதினின்றும் வேறுபட
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்மணம் இல்லாததினால் என் நெற்றியில் பூத்த பசலையை ஊதாமற்சென்றாய்;
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன்சிறிய குறுகிய பறவையான உன் பெடைக்காக அதன் பின்னே ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பு இலர்  10அதன் நெஞ்சு நெகிழுமாறு செய்ததன் பயனோ இது? என்மீது அன்புகொள்ளாதவராய்
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்குவெம்மையான மலையிலுள்ள அரிய பாலைநில வழிகளைக் கடந்துசென்றோர்க்கு
என் நிலை உரையாய் சென்று அவண் வரவேஎன் நிலையை உரைக்கவும்மாட்டாய், சென்று அங்கே, அவர் வருமாறு –
  
# 278 நெய்தல் உலோச்சனார்# 278 நெய்தல் உலோச்சனார்
  
படு காழ் நாறிய பராஅரை புன்னைவிழுந்த விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின்,
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழஅடுத்து வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து
பொன்னின் அன்ன தாது படு பன் மலர்பொன் போன்ற மகரந்தம் உடைய பல மலர்களில்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்சூடிக்கொள்பவர் பறித்துத்தொடுத்துக்கொண்டது போக மீதமானவை, கிளைகள்தோறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை    5நெய்ப்பசை மிக்க பசிய காய்களாகத் தொங்கும் கடற்கரைத்துறையைச் சேர்ந்தவனை
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்நான் இப்போது அறிந்துகொண்டேன், அவன் கணவன் ஆகுதலை –
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரிகழியின் சேறு படிந்த திரண்ட கால்களைக் கொண்ட அவனது கோவேறு கழுதையின்
குளம்பினும் சே_இறா ஒடுங்கினவிரைவான ஓட்டத்தால் அதன் குளம்புகளில் சிவந்த இறால் மீன்கள் சிக்கி மிதிபட்டன;
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலேஅந்த விரைவினால் அவனது மாலையெல்லாம் ஊதைக்காற்று எழுப்பிய வெள்ளை மணல் படிந்துள்ளது.
  
# 279 பாலை கயமனார்# 279 பாலை கயமனார்
  
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைவேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇதேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி,
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் மேல், கிளைகளிலிருந்து
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்பநெய்தோய்ந்த திரியில் எண்ணெய் துளிப்பது போல குளிர்ந்த பனித்துளிகள் சொட்டுகின்ற
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு    5விடியற்காலத்தில் பாலைநிலவழியில் சென்று வருந்திய ஒளிறும் நிறமுடைய புலியுடன்
பொருத யானை புல் தாள் ஏய்ப்பபோரிட்ட யானையின் புல்லிய காலைப் போன்ற,
பசி பிடி உதைத்த ஓமை செம் வரைபசிமிக்க பெண்யானை உதைத்துச் சிதைத்த ஓமையின் சிவந்த பட்டை இல்லாத அடிப்பகுதி
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்துவெயிலடிக்கும்போது விட்டுவிட்டு ஒளிறும் காட்டு வழியின்
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய்பாதையில் நடந்து வருந்தினவோ? செறிந்த வாயினையுடைய
சிலம்பு கழீஇய செல்வம்   10சிலம்பைக் கழற்றும் விழாவின் சிறப்பு
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியேபிறரிடத்துக் கழிந்த என் அழகிய அணிகலன் அணிந்த மகளின் அடிகள்.
  
# 280 மருதம் பரணர்# 280 மருதம் பரணர்
  
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்மாமரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்கூம்பிய நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும்அசைவாடும் நீர் உள்ள ஆழமான பள்ளத்தில் ‘துடும்’ என்று விழுகின்ற
தண் துறை ஊரன் தண்டா பரத்தமைகுளிர்ந்த ஆற்றுத்துறைகளைக் கொண்ட ஊரினனுடைய நீங்காத பரத்தைமை பொருட்டு
புலவாய் என்றி தோழி புலவேன்      5அவன் மீது பிணக்குக்கொள்ளவேண்டாம் என்கிறாய் தோழி! அவன் மீது கோபங்கொள்ளேன் –
பழன யாமை பாசடை புறத்துநீர்நிலைகளில் வாழும் ஆமையின் பசிய கல்போன்ற முதுகின்மேல்வைத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்வயலைக் காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும்
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போன்ற என்
நன் மனை நனி விருந்து அயரும்நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே     10கை ஓயாத வேலையால் என் கண்ணில் அவன் படவில்லை –
  
# 281 பாலை கழார் கீரன் எயிற்றியார்# 281 பாலை கழார் கீரன் எயிற்றியார்
  
மாசு இல் மரத்த பலி உண் காக்கைஅழுக்கில்லாத மரத்திலிருக்கும், படையல்சோற்றை உண்ணும், காக்கை
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கிகாற்று அலைக்கும் நீண்ட கிளையில் மழைத்துளியுடன் ஆடிக்கொண்டு,
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும்வெல்லுகின்ற போரையுடைய சோழரின் கழார் என்ற ஊரில் கிடைக்கும்
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும்நல்ல வகையில் மிகுந்த பலியுணவுப் படையலோடு வரும்
அடங்கா சொன்றி அம் பல் யாணர்     5அளவுக்கதிகமான சோற்றுத்திரளுடன், அழகிய பலவாகிய புதிய
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்பஊன் துண்டங்களோடு கூடிய பெருவிருந்தை நினைத்துக்கொண்டு இருக்க,
மழை அமைந்து_உற்ற மால் இருள் நடுநாள்மழை நின்று பெய்த மிக்க இருள் செறிந்த நள்ளிரவில்,
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம்தாம் நம் பக்கத்தில் இருக்கவும், நாம் நமக்கு உண்டான
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கிமிகுந்த குளிரின் கடுமையால் மிகப் பெரிதும் வருந்தி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர் 10தூங்காதிருப்பதையும் அறிந்திருப்போர்
அன்பு இலர் தோழி நம் காதலோரேஅன்பு இல்லாதவர் தோழி! நம் காதலர்
  
# 282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார்# 282 குறிஞ்சி நல்லூர் சிறு மேதாவியார்
  
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழதொகுப்பாக அமைந்து நன்கு செறிக்கப்பட்ட ஒளிரும் வளையல்கள் நெகிழவும்,
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாடவளைவாக ஏந்திய அல்குலின் அழகிய வரிகள் சுருங்கிப்போகவும்,
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்நல்ல நெற்றி அழகுகெடவும், வருத்தம் மிக்க தாங்கற்கரிய காதல் நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்தகாதலன் நமக்குத் தந்தது என்பதனை அறியாமல், அதனை வேலனுக்கு அறிவிக்க,
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன்     5தெய்வத்தன்மையுள்ள கழங்குகளைக் கொண்ட அனுபவசாலியான வேலனின்
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல்சொற்களால் இது தணியுமானால் மிகவும் நல்லது, உறுதியாக – மலைச் சாரலில்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகைஅகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும்அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பேநாட்டில் விளங்கும் தலைவனோடு அமைந்த நம் நட்பு – 
  
# 283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்# 283 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
  
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்றஒளியுள்ள நெற்றியையுடைய மகளிர், பரவிக்கிடக்கும் கழியில் பறித்த
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்கண்களை மிகச் சரியாக ஒத்திருக்கும் கமழ்கின்ற நறுமணமுள்ள நெய்தல் மலரால்
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவஅகன்ற கோலமிட்ட சிறிய மனையை அழகுசெய்யும் துறைக்குத் தலைவனே!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலையஅழகுசெய்வதில் வல்லவர்கள் ஆராய்ந்து கண்ட இவளின் பழைய அழகு கெடுமாறு
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை   5இத்தன்மையுடைவனாய் இருப்பது உனக்குத் தகுமோ? உயர்ந்த அலைகளைக் கொண்ட
முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றிகடலின் மேல் பலரும் தொழும்படியாகத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்உயிர்கள் இன்புற விளங்கும் ஞாயிற்றைக் காட்டிலும்
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கேஉண்மை மிக்க உனது சொற்களை விரும்பியவருக்கு –
  
# 284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார்# 284 பாலை தேய்புரி பழங்கயிற்றினார்
  
புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்முதுகில் தாழ்ந்து கிடக்கும் கரிய கூந்தலையும், நெய்தல் பூவின்
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண்நிறத்தைப் பெற்ற ஈரமான இமைகளால் பொலிவடைந்த மையுண்டகண்களையும் கொண்டு
உள்ளம் பிணிக்கொண்டோள்_வயின் நெஞ்சம்நம் உள்ளத்தை வசமாக்கிக்கொண்டவளிடம், நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்“அவளின் துன்பத்தைத் தீர்க்கத் திரும்பிச் செல்வோம்” என்று சொல்லும்;
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல்       5“மேற்கொண்ட பணியை முடிக்காமல் அதற்கு இடையூறு விளைவிப்பது
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் எனவந்த நோக்கத்தையும் அடையாமல், பழிச்சொல்லையும் கொண்டுசேர்க்கும்” என்று
உறுதி தூக்கா தூங்கி அறிவேஉறுதிப்பாட்டை தூக்கிநிறுத்தித் தாமதித்து, அறிவானது
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை“சிறிதளவுகூட கூடுதல் அவசரப்படவேண்டாம்” என்று சொல்லும்; இவற்றுக்கிடையே,
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றியஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் தமக்குள் மாறுபட்டு பற்றி இழுத்த
தேய் புரி பழம் கயிறு போல10தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல
வீவது-கொல் என் வருந்திய உடம்பேஇற்றுப்போவதோ? என் வருந்திய உடம்பு.
  
# 285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார்# 285 குறிஞ்சி மதுரை கொல்லன் வெண்ணாகனார்
  
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள்பாம்புகள் இரைதேடித்திரியும் மிகுந்த இருள் நிறைந்த நள்ளிரவாகிய
இரவின் வருதல் அன்றியும் உரவு கணைஇரவில் வருகின்றதல்லாமலும், வலிய அம்புகளையும்,
வன் கை கானவன் வெம் சிலை வணக்கிஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடுமார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு,
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட   5வீட்டு நாய்கள் ஒன்றுசேர்ந்து பக்கத்தில் வந்து குதிக்க,
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்டவேட்டையில் வெற்றிகொண்ட மகிழ்ச்சியுள்ளவனாய், காட்டிலுள்ள
நடு கால் குரம்பை தன் குடி_வயின் பெயரும்கால்களை நட்டு எழுப்பிய குடிசைகளைக்கொண்ட தன் ஊருக்குச் செல்லுகின்ற
குன்ற நாடன் கேண்மை நமக்கேகுன்றுகளுள்ள நாட்டினையுடையவனின் நட்பு, நமக்கு
நன்றால் வாழி தோழி என்றும்நலம் தருவதாகும், வாழ்க! தோழியே! என்றும்
அயலோர் அம்பலின் அகலான்  10அயலோர் உரைக்கும் பழிச்சொற்களைக் கேட்டும் நம்மை விட்டு நீங்கான்,
பகலின் வரூஉம் எறி புனத்தானேபகலிலும் வருவான் காய்ந்த தூர்களை எறிக்கின்ற தினைப்புனத்துக்கு.
  
# 286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்# 286 பாலை துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார்
  
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்னஊசலாடும் ஒள்ளிய காதணியான குழைகளை உடைமரங்கள் பெற்றாற் போன்ற,
அத்த குமிழின் ஆய் இதழ் அலரிவழியில் அமைந்த குமிழமரத்தின் அழகிய இதழையுடைய மலர்
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்மலையின் பாறைகளில் உதிர்ந்து கோலமாய்க் கிடக்கும் பொலிவழிந்த குன்றின்வழியே
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் எனகாதலர் சென்றுவிட்டார், திண்ணமாக; சென்றொழியட்டும் என் உயிர் என்று
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து     5அணிந்த அணிகலன்கள் நெகிழ்ந்துபோகுமாறு விம்மி பலவாறு நொந்து
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின்வருந்துகின்றதை மேற்கொள்கிறாய்; நினைத்துப்பார்த்தால்
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டியதம் நண்பர்களுக்கு உதவி செய்யவும், அவரை அண்டியிருக்கும்
நின் தோள் அணி பெற வரற்கும்உனது தோள்கள் அணிகலன்களால் வனப்பெய்யவும்
அன்றோ தோழி அவர் சென்ற திறமேஅன்றோ தோழி! அவர் சென்றதன் நோக்கம்.
  
# 287 நெய்தல் உலோச்சனார்# 287 நெய்தல் உலோச்சனார்
  
விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிவானத்தைத் தடவும்படியான கோட்டையைப் பகை வெம்மை தோன்ற முற்றுகையிட்டு,
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தபசிய கண்களையுடைய யானைப்படையுடன் வேந்தன் மதிலுக்கு வெளியே தங்கியிருக்க,
நல் எயில் உடையோர் உடையம் என்னும்‘நன்கு கோட்டையைக் காப்போரை நாம் உடையோம்’ என்னும்
பெருந்தகை மறவன் போல கொடும் கழிபெருமிதங்கொண்ட கோட்டைக் காவலன் போல, வளைந்த கழியிலுள்ள
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்5பசிய இலையைக் கொண்ட நெய்தல் உள்ள குளிர்ந்த நீருக்கு உரிய தலைவன்
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்அச்சம்தரும் முதலையாகிய நடுங்கவைக்கும் பகைக்கும் அஞ்சாதவனாய்
காமம் பெருமையின் வந்த ஞான்றைநம் மீது கொண்ட காதலின் மிகுதியால், நம்மிடம் வந்த போது,
அருகாது ஆகி அவன்_கண் நெஞ்சம்அஞ்சாதது ஆகி அவன்பால் சென்ற என் நெஞ்சம்,
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்நள்ளென்னும் ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம்
தேர் மணி தெள் இசை-கொல் என       10அவனது தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவேஊரெல்லாம் உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது.
  
# 288 குறிஞ்சி குளம்பனார்# 288 குறிஞ்சி குளம்பனார்
  
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டுஅருவி ஆரவாரமாய் ஒலிக்கும் தெய்வ மகளிர் வாழும் நெடிய மலையுச்சியில்
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினைமேலிருந்துவரும் இளவெயிலைப் பெறுவதற்காக, உயர்ந்த கிளைகளிலிருந்து
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்தோகையையுடைய ஆண்மயில் தன் பெடையோடு ஆடும்
குன்ற நாடன் பிரிவின் சென்றுகுன்றுகளையுடைய நாட்டினன் பிரிந்துசென்றதனால் அழகு விட்டுப்போக,
நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை5நல்ல நெற்றியில் பரந்த பசலையைக் கண்டு அன்னையானவள்
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇசெம்மையும் முதுமையும் கொண்ட பெண்களோடு, கொட்டிய நெல்லுக்கு முன் நம்மை நிறுத்தி,
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில்கட்டுவைத்துக் குறிகேட்டால், மலையில்
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல்ஏனலாகிய செந்தினையின் பால் பிடித்த கொழுத்த கதிர்களில் படியும்
சிறு கிளி கடிகம் சென்றும் இசிறிய கிளிகளை ஓட்டுவதற்காகச் சென்றிருந்தும் இந்த
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே  10      முருகவேள் வருத்தியது என்று சொல்லுமோ அது?
  
# 289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்# 289 முல்லை மருங்கூர் பட்டினத்து சேந்தன் குமரனார்
  
அம்ம வாழி தோழி காதலர்கேட்பாயாக! வாழ்க! தோழியே! காதலர்
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறியநிலம் இடம்பெயர்ந்தாலும், தான் சொன்ன
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்சொல்லினின்றும் மாறுபடுகிறவர் இல்லை; மேகம்
நளி கடல் முகந்து செறி_தக இருளிபடர்ந்த கடல்நீரை முகந்துகொண்டு செறிவுற்று இருண்டு
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி  5மிக்க மழையைப் பொழிந்து, பெரு முழக்கத்தை பன்முறை எழுப்பி,
கார் செய்து என் உழையதுவே ஆயிடைகார்காலத்தைச் செய்து என் முன்னே நிற்கின்றது; அப்பொழுது
கொல்லை கோவலர் எல்லி மாட்டியபுன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய
பெரு மர ஒடியல் போலபெரிய மரத்துண்டைப் போன்று
அருள் இலேன் அம்ம அளியேன் யானேஅவர் அருளும் இல்லாமல் இரங்கத்தக்கவள் ஆனேன் நானே!
  
# 290 மருதம் மதுரை மருதன் இளநாகனார்# 290 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
  
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூவயலிலுள்ள வெள்ளைநிற ஆம்பலின் நெற்கதிர்க்கட்டுகளோடு வந்த புதிய பூவை,
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன்ஓய்ந்துபோன நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின்
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்தொடர்பினை நீ விரும்பினால், என் சொல்லைக்
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே     5கேட்பாயாக! முள்ளைப் போன்ற பற்களையுடையவளே!
நீயே பெரு நலத்தையே அவனேநீயோ பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்திஆழமான நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று
தண் கமழ் புது மலர் ஊதும்குளிர்ச்சியுடன் மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும்
வண்டு என மொழிப மகன் என்னாரேவண்டு என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார்.
  
# 291 நெய்தல் கபிலர்# 291 நெய்தல் கபிலர்
  
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்நீர் வற்றி மாறிப்போன செறிவான சேற்றுச் சகதியில் உள்ள
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகுநெய்ப்பசை கொண்ட கொழுத்த மீன்களைத் தின்ற கூட்டமான குருகுகள்
குப்பை வெண் மணல் ஏறி அரைசர்குவிந்திருக்கும் வெள்ளை மணலில் ஏறி, அரசர்களின்
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும்ஒள்ளிய காலாட்படையைப் போல விளங்கித் தோன்றும்
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்    5குளிர்ச்சியான பெரிய கடல் நீரின் துறைவனுக்கு நீயும்
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாணகண்டது கண்டபடியே உரைப்பாய்! மனத்திற்கொள்வாயாக, பாணனே!
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்துமிகவும் பெரிதாகிய முள்ளூரின் மன்னன் தன் குதிரையில் சென்று
எல்லி தரீஇய இன நிரைஇரவில் கொணர்ந்த ஆநிரைகளின் கூட்டத்துக்குரியவரான
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனேஆயர்களின் தலைவனைப் போல மனமழிந்துபோன இவளது பெண்மை நலனை –
  
# 292 குறிஞ்சி நல்வேட்டனார்# 292 குறிஞ்சி நல்வேட்டனார்
  
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்தநெடிதுயர்ந்த குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும்
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்
யாணர் வைப்பின் கானம் என்னாய்எப்போதும் புதிய வருமானம் கொண்ட இடத்தையுடைய கானம் என்று கருதமாட்டாய்;
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை     5களிறுகள் சண்டையிட்டுக்கொள்வதால் கரைந்துபோன, பெரிய பள்ளங்கள் உள்ள குழிவான கரையில்
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும்கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்
கராஅம் பேணாய் இரவரின்முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால்,
வாழேன் ஐய மை கூர் பனியேநான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில் –
  
# 293 பாலை கயமனார்# 293 பாலை கயமனார்
  
மணி குரல் நொச்சி தெரியல் சூடிநீலமணி போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு
பலி கள் ஆர்கை பார் முது குயவன்பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்துஇன்னும் இடவேண்டிய பலியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும் அகன்ற இடமுள்ள மன்றத்தில்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில்
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல்5பூப்போல் கண்கொண்ட குமரிகளைக் காணும்போதெல்லாம், என்னைப் போல
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல்பெரிதாக மனம் ‘விதுக்’கென்று போகட்டும்; எமது வீட்டுப்
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇபொங்கிநிற்கும் கூந்தல்காரியான என் மகளைத் தன் சொற்களால் மயக்கித்
கொண்டு உடன் போக வலித்ததன்னுடன் கூட்டிக்கொண்டுபோய்விடுவதற்கு மனத்தை மாற்றிய
வன்கண் காளையை ஈன்ற தாயேகொடுமைக்கார இளைஞனைப் பெற்றெடுத்த தாய்க்கு –
  
# 294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்# 294 குறிஞ்சி புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
  
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்குதீயையும் தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல,
நோயும் இன்பமும் ஆகின்று மாதோநோயையும், இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா!
மாயம் அன்று தோழி வேய் பயின்றுபொய்த்தோற்றமில்லை இது தோழி! மூங்கில்கள் மிகுந்து,
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்கொறுக்கச்சியாய் உயர வளர்ந்த பெரிய மலைப்பக்கந்தோறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ     5தொன்றுதொட்டு வரும் பகைமையுணர்ச்சியுடன், முரண்கொண்டு மிகவும் சினந்து
கொன்ற யானை கோடு கண்டு அன்னபுலியைக் கொன்ற யானையின் கொம்பினைப் பார்த்ததைப் போன்ற
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்சிவந்த பக்கங்களையுடைய கொழுத்த மொட்டு மலர்ந்த காந்தளானது
சிலம்பு உடன் கமழும் சாரல்மலைப்பக்கமெல்லாம் சேர்ந்து கமழும் மலைச்சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பேதிகழ்கின்ற மலைநாடனின் அகன்ற மார்பு –
  
# 295 நெய்தல் ஔவையார்# 295 நெய்தல் ஔவையார்
  
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்உச்சி சரிந்து விழுந்த மலைப்பக்கத்தில் நசுங்கிப்போன வள்ளிக்கொடி போல
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்புற அழகெல்லாம் அழிந்துபோய், தழைத்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள்தோழியர் கூட்டமும் மனம்வருந்தினர்; எம் தாயும் அதனை அறிந்துகொண்டாள்;
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தைகடுமையான காவலையுடைய பாதுகாப்பை மேற்கொண்டாள்; எமது தந்தையின்,
வேறு பல் நாட்டு கால் தர வந்த    5வேறுபட்ட பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறைபலவாறான வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும்
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற எமது
இள நலம் இல்_கடை ஒழியஇளமை நலம் வீட்டுக்குள் அடங்கி ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமேசெல்வோம், வாழ்க நீவிர், வயதாகிப்போகட்டும் எங்களுக்கு.
  
# 296 பாலை குதிரை தறியனார்# 296 பாலை குதிரை தறியனார்
  
என் ஆவது-கொல் தோழி மன்னர்என்ன ஆகுமோ? தோழி! மன்னர்களின்
வினை வல் யானை புகர் முகத்து அணிந்தபோர்த்தொழிலில் வல்லமையுள்ள யானையின் புள்ளிகள் நிறைந்த முகத்தில் அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்பபொன்னால் செய்யப்பட்ட முகபடாத்தின் வேலைப்பாட்டின் சிறப்பைப் போன்று,
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்உள்ளீடற்ற காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து
ஏ கல் மீமிசை மே தக மலரும்       5பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்பிரிந்திருப்போர் வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇமேற்கொண்ட பணியையையே நினைத்த உள்ளத்தோடு விரைவாகச்
செல்ப என்ப காதலர்செல்வார் என்பர் நம் காதலர்;
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தேஇங்கேயே இருந்து ஒழிவீர் என்பர், நாம் வருந்துகின்ற துன்பத்தில் உழன்று –
  
# 297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்# 297 குறிஞ்சி மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
  
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்பபொன்னால் செய்யப்பட்ட கிண்ணத்தில் இருக்கும் பால் கீழே இருக்க,
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய்உன் மேனியின் ஒளி மாறுபட்டுத் தோன்ற, உன் சிவந்த அடிகளால் ஒதுங்கிப்போனாய் இல்லை;
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇபலவகையில் சிறப்புற்ற படுக்கையை பகையாக நினைத்துக்கொண்டு,
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனைவெறியேறாத அமைதியான உன் பார்வை, கள்வெறிகொண்டதுபோல் தோன்றுகிறாய்;
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை  5இது எதனால் என்று நினைத்துப்பார்க்கவும் இல்லை;
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதேஉன் உள்ளத்தில் தோன்றும் குறிப்பு மிகவும் பெரிதாக இருக்கிறது;
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமைமெல்ல வந்து உன் உள்ளத்தில் இடம்பெற்றதை
மையல் உறுகுவள் அன்னை    10ஊகித்தறியும் மயக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அன்னை,
ஐயம் இன்றி கடும் கவவினளேஐயமின்றி அவள் கடுமையாக உன்னை வீட்டுக்குள்வைத்துப் பூட்டிவிடுவாள்.
  
# 298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்# 298 பாலை விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
  
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கிபாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்டமடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும்பருந்தின் சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும்
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை5கடப்பதற்கரிய பாலைநிலத்தின் பலவாறாய்ப் பிரியும் பாதைகளைக் கொண்ட அச்சம் தரும் அகன்ற இடமான
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்பெரிய பலவான குன்றுகளை நினைத்துப்பார்த்தும் – அடுத்து இவளின்
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம்கரும்பு வரைந்த பருத்த தோள்களை எண்ணிப்பார்த்தும், ஒரு பக்கமும்
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்உறுதியாக முடிவெடுக்கமாட்டாய், வாழ்க என் நெஞ்சே! நல்ல வெப்பமாலையை அணிந்த
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்பொன்னாலான தேரையுடைய செழியனின் கூடல் நகரில்
ஒருமை செப்பிய அருமை வான் முகை   10முன்பு பிரியேன் என்று ஒரே முடிவாகச் சொன்ன அருமையான முடிவு, வெண்மையான அரும்புகள்
இரும் போது கமழும் கூந்தல்பெரிய பூக்களாய்க் கமழும் கூந்தலையுடையவள்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றேநாம் பிரிந்து சென்ற பெரிய மலைகளை ஏக்கத்தோடு பார்க்கும் பார்வையோடு ஒத்துப்போகுமோ?
  
# 299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்# 299 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
  
உரு கெழு யானை உடை கோடு அன்னஅச்சத்தை உண்டாக்கும் யானை உடைந்த கொம்பினைப் போன்ற
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூசெறிந்த கட்டவிழ்ந்த தாழையின் வெள்ளைநிறப் பூ
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாதுவீசுகின்ற பெரிதான மேல்காற்று மோதுவதால், நுண்ணிய தாதுக்கள்
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்மின்னுகின்ற அணிகலன்களையுடைய மகளிரின் விளையாட்டு மணலின் மேல் பரவும்
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண்    5அழகுமிக்க சிறிய ஊர் நம்மைத் தனிமைப்படுத்தினும், அவரே நம் தலைவர்;
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோநாம் இருந்தும் இல்லாமல் போவோம் என்பதை அறிவோம் திண்ணமாக –
வில் எறி பஞ்சி போல மல்கு திரைவில்லால் அடிக்கப்பட்ட பஞ்சினைப் போல பெருகும் அலைகளில்
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்காற்று மோதுவதால் ஒளிறும் பிசிர்கள் மேலெழும்பும்
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கேபடர்ந்த கடலைச் சேர்தவனோடு நாம் மகிழ்ந்து இருக்காத போது –
  
# 300 மருதம் பரணர்# 300 மருதம் பரணர்
  
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர்ஒளிர்கின்ற தோள்வளை அணிந்த அரசகுமாரி கோபங்கொள்ள, அதைத் தணிக்க
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்குமடப்பத்தையுடைய தோழியர் கூட்டம் கைகூப்பி நின்றதைப் போல,
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்பெரிய காற்று தள்ளுவதால் தளர்ந்து, ஆம்பல் மலர்கள்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்தாமரையின் எதிரில் சாய்ந்துநிற்கும் குளிர்ந்த துறையினையுடைய தலைமகன்
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்  5சிறுவளை அணிந்தவளுக்கு இது விலையாகும் என்று பெரிய தேரை அலங்கரித்து, எமது
முன்கடை நிறீஇ சென்றிசினோனேவீட்டின்முன் நிறுத்திச் சென்றுவிட்டான்;
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாதுநீயும் அவனோடு தேருடன் வந்து திரும்பிச் செல்லாமல்,
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின்நெய்யை ஊற்றிவிட்டாற் போன்ற பிசிர் அடங்கிய நரம்புகளைக் கொண்ட யாழை இசைக்கும்
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே! பெரும் புண்பட்ட
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்      10அழகினைக் கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில்
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம்பிச்சைக்காக வந்த பெரிய களிறு போல, எம்முடைய
அட்டில் ஓலை தொட்டனை நின்மேஅடுப்படியின் கூரை ஓலையைத் தொட்டுக்கொண்டு நிற்கின்றாய்.