குறுந்தொகை 51-100

  
# குன்றியனார்# குன்றியனார்
# 51 நெய்தல்# 51 நெய்தல்
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறிநூல் அற்றுச் சிதறிய முத்துக்களைப் போன்று காற்றால் சிதறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனைநீர்த்துறைகள்தோறும் பரவிக்கிடக்கும் நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்நானும் காதல்கொண்டேன்; நம் தாயும் மிகுந்த விருப்புடையவள்;
எந்தையும் கொடீஇயர் வேண்டும்                     5நம் தந்தையும் அவனுக்குக் கொடுத்தலை வேண்டுகிறார்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமேநம் மேல் பழிசொன்ன ஊரினரும் இப்போது அவனோடு சேர்த்துப் பேசுகின்றனர்.
  
# பனம்பாரனார்# பனம்பாரனார்
# 52 குறிஞ்சி# 52 குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்ஆர்க்கும் களிறுகள் மிதித்து உழப்பிய நீர் விளங்கும் மலைச் சரிவின்
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டேதெய்வமங்கையர் விரும்பி இறங்கியதைப் போல் நீ நடுங்குவதைக் கண்டு
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்நரந்தம் மணக்கும் கொழித்த கருமையான கூந்தலையும்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தைவரிசையாக அமைந்த மின்னுகின்ற வெள்ளைப் பற்களையும் உடையவளே!
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே 5உனக்காக வருந்தினேன் அல்லவா, கொஞ்சம்கொஞ்சமாகவேனும்!
  
# கோப்பெருஞ்சோழன்# கோப்பெருஞ்சோழன்
# 53 மருதம்# 53 மருதம்
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்எம்மை வருத்துகின்றன, தலைவனே! திறந்த வெளியில்,
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்அரும்புகள் முதிர்ந்த புன்கமரத்தின் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் வெள்ளை மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்னசெந்நெல்லின் வெள்ளைப் பொரி சிதறியதைப் போல் தோன்றும்,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை                5மணல்மேடுகள் அருகிலுள்ள எமது ஊரின் அகன்ற நீர்த்துறையில்
நேர் இறை முன்கை பற்றிஎனது நேரிய தோள்களின் முன்கையைப் பற்றி
சூர் அர_மகளிரோடு உற்ற சூளேசூரரமகளிர்மேல் நீ கூறிய வஞ்சினம்.
  
# மீனெறி தூண்டிலார்# மீனெறி தூண்டிலார்
# 54 குறிஞ்சி# 54 குறிஞ்சி
யானே ஈண்டையேனே என் நலனேஎன் உடம்பு மட்டுமே இங்கு இருக்கிறது. என் மனமோ
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇதினைப்புனக் காவலர் கவண்விடும் ஒலிக்கு அஞ்சிய
கான யானை கை விடு பசும் கழைகாட்டு யானை கைவிட்ட பச்சை மூங்கில்
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்பிடித்திழுத்த மீன் பின்னர் விட்டுவிட்ட தூண்டிலைப்போல நிமிர்ந்து உயர்கின்ற
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே           5காட்டையுடைய தலைவனுடன் அங்குச் சென்றுவிட்டது.
  
# நெய்த கார்க்கியர்# நெய்த கார்க்கியர்
# 55 நெய்தல்# 55 நெய்தல்
மா கழி மணி பூ கூம்ப தூ திரைபெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇபொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
கையற வந்த தைவரல் ஊதையொடுசெயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு
இன்னா உறையுட்டு ஆகும்இன்னல் மிக்க உறைவிடம் ஆகும்;
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே         5சில நாள்களே உடையது இந்த சிறிய நல்ல ஊர்.
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 56 பாலை# 56 பாலை
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர்வளையணிந்த கையையுடைவள் எம்மோடு சேர்ந்து குடிப்பதற்கு
வருக தில் அம்ம தானேவருவாளாக, அவளே
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே     5பெரிதும் இரங்கத்தக்கவள், என் நெஞ்சில் அமர்ந்தவள்.
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 57 நெய்தல்# 57 நெய்தல்
 (நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது)
பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்னஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலநீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடுபிரிவு என்பது அரிதாகிய துய்த்து அமையாத காமத்தோடே
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்துபிரிவு ஏற்பட்டவுடனேயே உயிர் போவதாக; இல்லறக் கடமைகளை அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து                    5இருவராய் வாழும் இவ்வுலகில்
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கேஒருவராய் வாழும் சிறுமையினின்றும் தப்புவதற்காக.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 58 குறிஞ்சி# 58 குறிஞ்சி 
இடிக்கும் கேளிர் நும் குறை ஆகஎன்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்லகுலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை.
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்சூரியன் காயும் சூடான பாறையின் ஒரு பக்கத்தில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும்
வெண்ணெய் உணங்கல் போல                    5காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதேஎன் மேல் இந்தப் பிரிவு நோய் படர்கின்றது, என் உடம்பு உருகாமல் காத்துக்கொள்ளல் கடினமாகும்.
  
# மோசிகீரனார்# மோசிகீரனார்
# 59 பாலை# 59 பாலை
பதலை பாணி பரிசிலர் கோமான்ஒருகண் கிணைப்பறையை முழக்கும் தாளத்தையுடைய இரவலரின் மன்னனுடைய
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனைஅதலையென்னும் குன்றத்தின் அகன்ற வாயையுடைய ஆழமான சுனையின்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்குவளையோடு சேர்த்துக்கட்டப்பட்ட காட்டுமல்லிகை மணக்கும் உன் மணமுள்ள நெற்றியை
தவ்வென மறப்பரோ மற்றே முயலவும்முற்றிலும் மறந்துபோவாரோ? முயன்றாலும்
சுரம் பல விலங்கிய அரும் பொருள்          5பாலை வழிகள் குறுக்கே வர அரிய பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றேமுற்றிலும் கைகூடாவாதலால் காலம் நீட்டித்தல் இல்லை.
  
# பரணர்# பரணர்
# 60 குறிஞ்சி# 60 குறிஞ்சி
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரைகுறுகிய தாளையுடைய கூதளங்கொடி காற்றால் ஆடும் உயர்ந்த மலையில்
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன்பெரிய தேன்கூட்டைக் கண்ட கரிய காலையுடைய முடவன்
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்துஉள்ளங்கையைச் சிறியதாகக் குடையாகக் குவித்து, தரையில் அமர்ந்தவண்ணம்
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர்அந்தத் தேனடையை மறுகையால் சுட்டிக்கொண்டு, குடைத்த கையை நக்கியதைப் போல், காதலர்
நல்கார் நயவார் ஆயினும்                  5நமக்கு அருளார், நம்மை விரும்பார் எனினும்
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதேபலமுறை அவரைப் பார்ப்பதுவும் நம் உள்ளத்துக்கு இனிதாகும்.
  
# தும்பிசேர்கீரன்# தும்பிசேர்கீரன்
# 61 மருதம்# 61 மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்தச்சன் செய்த சிறிய குதிரைகளையுடைய தேரினை
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்ஏறிச் செலுத்தி இன்பமடையாராயினும், கையினால்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போலஇழுத்து இன்பமடையும் சிறுவர்களைப் போல்
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர்சேர்ந்து இன்புறாவிட்டாலும் நல்ல தேரினையுடையவரும்
பொய்கை ஊரன் கேண்மை                      5பொய்கையையுடைய ஊரினருமான தலைவனுடன் நட்பு
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையேசெய்து இன்புற்றேன், மீண்டும் செறிந்தன துவண்டுபோன வளையல்கள் . 
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 62 குறிஞ்சி# 62 குறிஞ்சி
கோடல் எதிர் முகை பசு வீ முல்லைகாந்தள் மலரையும், எதிர்த்து அரும்பும் பசிய பூக்களையுடைய முல்லையையும்
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇமணங்கமழும் இதழ்களுடைய குவளையோடு இடையிட்டுக் கலந்து
ஐது தொடை மாண்ட கோதை போலஅழகிதாகத் தொடுத்தலில் சிறப்புற்ற மாலை போல
நறிய நல்லோள் மேனிநறுமணமுள்ள நல்லோளது மேனி,
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே           5இளந்தளிரினும் மென்மையானது, தழுவுதற்கும் மிக்க இனியது. 
  
# உகாய்க்குடி கிழார்# உகாய்க்குடி கிழார்
# 63 பாலை# 63 பாலை
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனஇரப்போருக்கு ஈதலும், இன்பத்தைத் துய்த்தலும், இல்லாதவருக்கு இல்லை என எண்ணி
செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்குபொருளீட்டும் செயலையே மிகுதியாக எண்ணுகின்றாய்; அந்தச் செயலுக்கு
அம் மா அரிவையும் வருமோஅழகிய மாமை நிறமுள்ள தலைவியும் வருவாளோ?
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சேஎன்னை மட்டும் போகச் சொல்லுகின்றாயே, உரைப்பாய் நெஞ்சே!
  
# கருவூர் கதப்பிள்ளை# கருவூர் கதப்பிள்ளை
# 64 முல்லை# 64 முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து எனபசுக்கூட்டம் மேய்தலை விட்டு திரும்பும் நீண்ட வழிக்கு வந்தது என,
புன் தலை மன்றம் நோக்கி மாலைபொலிவிழந்த மன்றத்தைப் பார்த்து, மாலையில்
மட கண் குழவி அலம்வந்து அன்னமடப்பம் பொருந்திய கண்களையுடைய கன்றுகள் எதிர்நோக்கி ஏமாறுவதைப் போல
நோயேம் ஆகுதல் அறிந்தும்பிரிவு நோயால் வாடுகிறேன் என அறிந்தும்
சேயர் தோழி சேய்நாட்டோரே                 5நெடுங்காலம் தங்கிவிட்டார் தோழி! தொலைநாட்டில் இருக்கும் தலைவர்.
  
# கோவூர் கிழார்# கோவூர் கிழார்
# 65 முல்லை# 65 முல்லை
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்கெட்டியான பரல்கற்களிடையே தெளிவாய் ஓடும் நீரைப் பருகிய ஆண்மான், தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளஇன்புறு துணையொடு மீண்டுவந்து துள்ளிக்குதிக்க,
தான் வந்தன்றே தளி தரு தண் கார்தான் வந்தது மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம்;
வாராது உறையுநர் வரல் நசைஇகுறித்த காலத்தில் வராமல் தொலைவில் வசிப்பவரின் வருகையை விரும்பி
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே              5வருந்தி நொந்து உயிருடன் இருப்பதற்காக இருக்கிறாயோ என்று கேட்கும்வண்ணம்.
  
# கோவர்த்தனார்# கோவர்த்தனார்
# 66 முல்லை# 66 முல்லை
மடவ மன்ற தடவு நிலை கொன்றைஅறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறியமலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரபருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்தகிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன,
வம்ப மாரியை கார் என மதித்தே                     5காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 67 பாலை# 67 பாலை
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளைநம்மை நினைக்கமாட்டாரோ தோழி? கிளியானது
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே               5நிலம் கரிந்துள்ள கள்ளியையுடைய பாலைநிலத்தைக் கடந்துசென்ற தலைவர்.
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 68 குறிஞ்சி# 68 குறிஞ்சி
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்குறும்பூழ்ப் பறவையின் கால் போன்ற சிவந்த அடித்தண்டை உடைய உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும்நெற்றான முதிய காய்களை மானினங்கள் தின்னும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்முன்பனிக்காலத்து வருத்தத்தைத் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பேமருந்து வேறு இல்லை, என்னைத் தழுவிய அவரின் மார்பினை அன்றி.
  
# கடுந்தோட் கரவீரன்# கடுந்தோட் கரவீரன்
# 69 குறிஞ்சி# 69 குறிஞ்சி
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று எனகரிய கண்ணையுடைய தாவித்திரியும் ஆண்குரங்கு இறந்துபோனதாக,
கைம்மை உய்யா காமர் மந்திகைம்மையுற்று வாழவிரும்பாத காதல்கொண்ட பெண்குரங்கு
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்திதாவுந்தொழிலை இன்னும் கற்காத தன் வலிய குட்டியைச் சுற்றத்தாரிடம் சேர்த்துவிட்டு
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்உயர்ந்த மலைச் சரிவில் பாய்ந்து உயிரை மாய்க்கும்
சாரல் நாட நடுநாள்                               5சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில்
வாரல் வாழியோ வருந்துதும் யாமேவரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம்.
  
# ஓரம்போகியார்# ஓரம்போகியார்
# 70 குறிஞ்சி# 70 குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள்ஒடுங்கிய எண்ணெய்ப்பூச்சுடைய ஒள்ளிய நெற்றியையுடைய இளையவள்
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளேநறிய மணமும் குளிர்ச்சியும் உடைய தன்மையள்; நிறைந்த வருத்தத்தைச் செய்பவள்;
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன்இப்படிப்பட்டவள் என்று அவளின் நலத்தைப் புனைந்துரைக்கும் அளவையும் அறியேன்;
சில மெல்லியவே கிளவிசிலவான மெல்லிய பேச்சு அவளது;
அனை மெல்லியல் யான் முயங்கும்_காலே               5அப்படிப்பட்ட மென்மையானவள் நான் அவளைத் தழுவும்போது.
  
# கருவூர் ஓதஞானி# கருவூர் ஓதஞானி
# 71 பாலை# 71 பாலை
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பேஎன் காம நோய்க்கு மருந்து வேண்டும் எனின் அது அவளே; எனக்குச் செல்வமும் அவளே;
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலைஅரும்புகின்ற தேமலையும் அழகிய பெருமையையும் உடைய இளைய முலையினையும்
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின்பெரிய தோள்களையும், நுண்ணிய இடையினையும் உடைய
கல் கெழு கானவர் நல்கு_உறு மகளேமலைகள் சூழ்ந்த குறவர்கள் ஈன்றளித்த மகள்.
  
# மள்ளனார்# மள்ளனார்
# 72 குறிஞ்சி# 72 குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்துபூவினைப்போன்று சுழலும் தன்மையுடையன, அம்பினைப் போல்
எல்லாரும் அறிய நோய் செய்தனவேஎல்லாரும் அறிய துன்பத்தை உண்டாக்கின;
தே மொழி திரண்ட மென் தோள் மா மலைஇனிய மொழியினையும், திரண்ட மெத்தென்ற தோளினையும் உடைய, பெரிய மலைப்பக்கத்தில்
பரீஇ வித்திய ஏனல்பருத்தி விதைத்த தினைப்புனத்தில்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே          5குருவிகளை ஓட்டுவாளின் பெரிய குளிர்ந்த கண்கள்.
  
# பரணர்# பரணர்
# 73 குறிஞ்சி# 73 குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீதலைவனின் மார்பை விரும்புகின்றாய், நீ
அழியல் வாழி தோழி நன்னன்வருந்தவேண்டாம் தோழி! நன்னன் என்பவனின்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கியமணமுள்ள மா மரத்தை அழித்து நாட்டுக்குள் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போலசொல்தவறாக் கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே           5கொடுமையான சூழ்ச்சியும் வேண்டும் சிறிதளவு.
  
# விட்ட குதிரையார்# விட்ட குதிரையார்
# 74 குறிஞ்சி# 74 குறிஞ்சி
விட்ட குதிரை விசைப்பின் அன்னஅவிழ்த்துவிட்ட குதிரையின் வேகத்தைப் போல
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்வானத்தைத் தீண்டும் பசிய மூங்கில்கள் உள்ள குன்றைச் சேர்ந்தவன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும்நாம் அவனை விரும்பியதை அறியான்; தானும்
வேனில் ஆன் ஏறு போலவேனில் காலத்துக் காளையைப் போல
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே               5மெலிந்தான் என்பர், நம் சிறப்பான அழகினை விரும்பி.
  
# படுமரத்து மோசிகீரனார்# படுமரத்து மோசிகீரனார்
# 75 மருதம்# 75 மருதம்
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோநீ நேரில் பார்த்தாயா? அல்லது பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயா?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோஉண்மையைத் தெரிந்துகொள்வதற்கு விரும்பினோம்; சொல்வாயாக!
வெண் கோட்டு யானை சோனை படியும்வெண்மையான தந்தங்களையுடைய யானைகள் சோணையாற்றில் நீராடும்
பொன் மலி பாடலி பெறீஇயர்பொன் மிகுந்த பாடலிபுத்திரத்தைப் பெறுவாயாக!
யார் வாய் கேட்டனை காதலர் வரவே           5யார் கூறக் கேட்டாய்? காதலர் வந்துவிட்ட செய்தியை.
  
# கிள்ளிமங்கலங்கிழார்# கிள்ளிமங்கலங்கிழார்
# 76 குறிஞ்சி# 76 குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டுகாந்தளை வேலியாகக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நல்ல நாட்டுக்குச்
செல்ப என்பவோ கல் வரை மார்பர்செல்வேன் என்கிறாரோ மலைபோன்ற மார்பையுடையவர்;
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலைமலைச் சரிவில் உள்ள சேம்பின் ஆடுகின்ற வளப்பமிக்க இலை
பெரும் களிற்று செவியின் மான தைஇபெரிய களிற்றின் செவியை ஒக்கும்படி தடவிச்செல்லும்
தண் வரல் வாடை தூக்கும்                  5குளிர்ந்த வாடைக்காற்று அசைக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவேகடுமையாகக் குளிர்கின்ற முன்பனிக்காலத்தில் நடுங்கிக்கொண்டு துன்பமடைய.
  
# மதுரை மருதன் இளநாகனார்# மதுரை மருதன் இளநாகனார்
# 77 பாலை# 77 பாலை
அம்ம வாழி தோழி யாவதும்தோழியே வாழ்க! ஒருசிறிதும்,
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்துதவறுடையன என்பாயாகில், தவறுடையன ஆகமாட்டா; வெம்மையான நிலத்தில்
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கைகொல்லப்பட்ட பயணியரின் தழையிட்டு மூடிய கற்குவியல்
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்நெடிய நல்ல யானைக்கு இடப்பட்ட நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு                 5அரிய காட்டுவழியில் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளேமெலிந்திளைத்த பெரிய மெத்தென்ற தோள்களே!
  
# நக்கீரனார்# நக்கீரனார்
# 78 குறிஞ்சி# 78 குறிஞ்சி
பெரு வரை மிசையது நெடு வெள் அருவிபெரிய மலையின் மேலுள்ள நீண்ட வெள்ளிய அருவி;
முதுவாய் கோடியர் முழவின் ததும்பிமுதுமைவாய்க்கப்பெற்ற கூத்தரின் முழவைப் போலத் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்பமலைச் சரிவில் இறங்கும் ஒளிவிடும் மலைகளையுடைய தலைவனே!
நோ_தக்கன்றே காமம் யாவதும்வெறுக்கத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணரார் மாட்டும்                        5நன்று என உணராதவரிடத்தும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தேவலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.
  
# குடவாயி கீரனக்கன்# குடவாயி கீரனக்கன்
# 79 பாலை# 79 பாலை
கான யானை தோல் நயந்து உண்டகாட்டு யானை பட்டையை விரும்பி உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினைபொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின்
அலங்கல் உலவை ஏறி ஒய்யெனஅசையும் காய்ந்த கொம்பில் ஏறி ஒய் என்று
புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும்தனிமைத்துயரைத் தோற்றுவிக்கும் குரலையுடைய பெண்புறா அழைக்கும் 
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்                   5பயணவழிகள் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிறிய ஊரில்
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்குதாம் தங்கிவிட்டாரோ? நாம் அவர் (பிரிந்து செல்வதாகக்)கூறுவதைப்
ஒல்லேம் என்ற தப்பற்குபொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று கூறிய தவறினால்
செல்லாது ஏகல் வல்லுவோரேநம்மிடம் சொல்லாமல் போவதைச் செய்யக்கூடியவர்.
  
# ஔவையார்# ஔவையார்
# 80 மருதம்# 80 மருதம்
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சிகூந்தலில் ஆம்பலின் முழுப்பூவைச் செறுகி,
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பிமிகுந்த வெள்ளம் வந்த பெரிய நீத்துறையை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃதுநாம் அந்நீரில் விளையாடுவதற்குச் செல்வோம், தலைவி அதற்கு
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்அஞ்சுவாளாயின், கடும்போரில்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி                5நன்முறையில் வெல்லும் பெரிய வேற்படையை உடைய எழினி என்பானின்
முனை ஆன் பெரு நிரை போலபோரில் கைப்பற்றப்பட்ட பெரிய மாடுகளின் கூட்டம்போல
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பேதன்னைச் சேர்ந்தவரோடும் காத்துக்கொள்வாளாக, தன் கணவனின் மார்பை.
  
# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்# வடம வண்ணக்கன் பேரிசாத்தன்
# 81 குறிஞ்சி# 81 குறிஞ்சி
இவளேஇந்தத் தலைவி,
நின் சொல் கொண்ட என் சொல் தேறிஉனது சொற்களைக் கூறிய எனது சொற்களை ஏற்றுக்கொண்டு
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைஇளமையான அரும்புகளைக் கொண்ட ஞாழல் மரத்தின் பல கிளைகளின் கீழே
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள்தனது புதிய அழகினை இழந்து இப்போது தனிமைத் துயரத்திலுள்ளாள்;
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும்          5நீ இவளின் தன்மையை எண்ணிப்பார்க்கவேண்டும்; இதோ பார்!
நிலவும் இருளும் போல புலவு திரைநிலவும் இருளும் போல புலவுநாறும் அலைகளுள்ள
கடலும் கானலும் தோன்றும்கடலும் அதன் கரைநிலமும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரேமடல்கள் தாழ்ந்துள்ள இளம்பனைகளையுடைய எம்முடைய சிறிய நல்ல ஊர்.
  
# கடுவன் மள்ளன்# கடுவன் மள்ளன்
# 82 குறிஞ்சி# 82 குறிஞ்சி
வார்_உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்புவாரப்பட்ட வளைந்த கூந்தலை விரலால் கோதிவிட்டு, முதுகைச் சேர்ந்து
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்அழவேண்டாம் என்று நம் அழுத கண்ணைத் துடைத்தவர்
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல்இப்பொழுது யாரோ ஆகிவிட்டார், தோழி; மலைச் சரிவில்
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்பெரும் தினைப்புனத்தையுடைய குறவனின் சிறுதினையை அறுத்த மறுகாலில்
கொழும் கொடி அவரை பூக்கும்                       5கொழுத்த கொடியுள்ள அவரை பூத்து நிற்கும்
அரும் பனி அற்சிரம் வாராதோரேபொறுக்கமுடியாத பனியையுடைய முன்பனிக்காலத்தில் வராமலிருப்பவர்.
  
# வெண்பூதன்# வெண்பூதன்
# 83 குறிஞ்சி# 83 குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆகஅரிதாகக் கிடைக்கும் அமிழ்தமே உண்ணும் உணவாக,
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னைபெரும் புகழையுடைய தேவருலகத்தைப் பெறுவாளாக, அன்னை!
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்தமது வீட்டில் தாம் உண்டு இருப்பதைப் போல், கிளைகள்தோறும்
தீம் பழம் தூங்கும் பலவின்இனிய பழங்கள் தொங்கும் பலாமரங்கள் கொண்ட
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே           5உயர்ந்த மலநாட்டானான தலைவன் திருமணம் பேச வருகிறான் என்று சொன்னவள்.
  
# மோசிகீரன்# மோசிகீரன்
# 84 பாலை# 84 பாலை
பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்,
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலேஇப்பொழுது தெரிந்துகொண்டேன், அவள் அதை விரும்பவில்லை;
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்கழலும் தொடியும் அணிந்த ஆய் அரசனின் மேகங்கள் தவழும் பொதிகை மலையின்
வேங்கையும் காந்தளும் நாறிவேங்கைப் பூவும் காந்தளும் கலந்து மணம் கமழ்ந்து,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே           5ஆம்பல் மலரினும் அவள் குளிர்ச்சியானவள்.
  
# வடம வண்ணக்கன் தாமோதரன்# வடம வண்ணக்கன் தாமோதரன்
# 85 மருதம்# 85 மருதம்
யாரினும் இனியன் பேர் அன்பினனேஎவரையும் விட இனியவன்; மிகுந்த அன்பினன்;
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்                   5மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கோதி எடுத்துவரும்
யாணர் ஊரன் பாணன் வாயேபுதுவருவாயை உடைய தலைவன், தன் பாணனின் கூற்றில் மட்டும்.
  
# வெண்கொற்றன்# வெண்கொற்றன்
# 86 குறிஞ்சி# 86 குறிஞ்சி
சிறை பனி உடைந்த சே அரி மழை கண்அடக்கிவைத்த கண்ணீர்த்துளி உடைந்து விழுகின்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ந்த கண்கள்
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கிபொறுத்தற்கரிய நோயுடன் கலங்கித் தனிமையினால் வருந்தி,
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்துஎன்னையன்றிப் பிறரும் கேட்பவர்கள் உண்டோ? மழைத்துளி மிக்கு
ஊதை தூற்றும் கூதிர் யாமத்துவாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்                5பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலேநாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.
  
# கபிலர்# கபிலர்
# 87 குறிஞ்சி# 87 குறிஞ்சி
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் அச்சந்தரும் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்கொடியவரைத் தண்டிக்கும் என்று சொல்வர். கொஞ்சங்கூட
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்கொடியவர் அல்லர் எம் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவர்;
பசைஇ பசந்தன்று நுதலேஅவர் அன்பைப் பெறும்பொருட்டு வெளுத்துப்போயிற்று என் நெற்றி;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே                5அவர் மேல் என் உள்ளம் உருகியதால் மெலிந்தன என் பெரிய மெத்தென்ற தோள்கள்.
  
# மதுரை கதக்கண்ணன்# மதுரை கதக்கண்ணன்
# 88 குறிஞ்சி# 88 குறிஞ்சி
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்ஒலிக்கின்ற வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலை நாட்டுத் தலைவன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கிசிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையுள்ள புலியைத் தாக்கி
தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்தனது முந்தைய வலிமை சோர்ந்துபோகும் எளிதில் அடையமுடியாத மலைச் சரிவில்
நடுநாள் வருதலும் வரூஉம்நள்ளிரவில் வந்தாலும் வருவான்
வடு நாணலமே தோழி நாமே                    5அந்தப் பழிக்கு நாம் நாணாதிருப்போம் தோழி நாமே!
  
# பரணர்# பரணர்
# 89 மருதம்# 89 மருதம்
பா அடி உரல பகு வாய் வள்ளைபரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்பஅயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கேகெடுதல்தான் யாது இந்த அறிவில்லாத ஊருக்கு?
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிபெரிய பூணையுடைய சேரனின் அச்சம் மிகுந்த கொல்லிமலையில்
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய                5கரிய கண்ணையுடைய தெய்வம் அம்மலையின் மேற்குப்பக்கத்தில் எழுதிய
நல் இயல் பாவை அன்ன இநல்ல இயல்பையுடைய பாவையை ஒத்த இந்த
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினேமென்மை மிக்க இயல்புடைய இளையவள் பாடிக்கொண்டு (உரலைக்) குற்றினாளாயின்.
  
# மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்# மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்
# 90 குறிஞ்சி# 90 குறிஞ்சி
எற்றோ வாழி தோழி முற்றுபுஎத்தன்மையதோ தோழி? வாழ்வாயாக! முதிர்ந்து
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கியமிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்முகிலின் பெரிய மழை விழுந்ததாக, சிலிர்த்த மயிரையுடைய
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனிஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை
வரை இழி அருவி உண்துறை தரூஉம்            5மலையிலிருந்து விழும் அருவி நீர்உண்கிற துறையில் கொண்டுவந்து சேர்க்கும்
குன்ற நாடன் கேண்மைகுறிஞ்சித் தலைவனின் நட்பு
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றேஉன் மெத்தென்ற தோளினை மெலிவித்தும் ஏற்கும் தன்மையிலுள்ளது-
  
# ஔவையார்# ஔவையார்
# 91 மருதம்# 91 மருதம்
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனிஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கிற கொடியாகிய பிரம்பின், புறத்தில் வரிகொண்ட விளைந்த கனியை,
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம்ஆழமான நீரையுடைய குளத்தில் வாழும் கெண்டை கௌவும்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்குளிர்ந்த துறைகளைக் கொண்ட ஊரைச்சேர்ந்தவனின் மனைவியாகிய நீ இப்படியிருந்தால்
பல ஆகுக நின் நெஞ்சில் படரேஉனது நெஞ்சின் துன்பம் மிகுதியாவதாக;
ஓவாது ஈயும் மாரி வண் கை                 5இடைவிடாமல் கொடுக்கும் மழையைப் போன்ற வள்ளல்தன்மையுள்ள கையும்,
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சிகடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்
கொன் முனை இரவு ஊர் போலஅச்சமுண்டாக்கும் போர்க்களத்தின்கண் இரவைக்கழிக்கும் ஊரினர் போன்று
சில ஆகுக நீ துஞ்சும் நாளேசிலவே ஆகுக நீ துயிலும் நாட்கள்.
  
# தாமோதரன்# தாமோதரன்
# 92 நெய்தல்# 92 நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்துஞாயிறு மறைந்த அகன்ற இடமுள்ள வானத்தில்
அளிய தாமே கொடும் சிறை பறவைஇரங்கத் தக்கன தாமே வளைந்த சிறகுகளையுடைய பறவைகள்;
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்ததாம் தங்கும் உயர்ந்த, வழியைவிட்டு வெகுதூரம் விலகியிருக்கும் கடம்பமரத்தில் இருக்கும்
பிள்ளை உள்வாய் செரீஇயதம் குஞ்சுகளின் வாய்க்குள் ஊட்டுவதற்கு
இரை கொண்டமையின் விரையுமால் செலவே        5       இரையைத் தாம் கொண்டமையால் விரைந்து செல்கின்றன.
  
# அள்ளூர் நன்முல்லையார்# அள்ளூர் நன்முல்லையார்
# 93 மருதம்# 93 மருதம்
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்நல்ல பெண்மை நலம் தொலையவும், மேனியழகு மெலியவும்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்குஇனிய உயிர் நீங்கினாலும் சொல்லவேண்டாம், அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோதாயும் தந்தையும் அல்லரோ?
புலவி அஃது எவனோ அன்பு இலம்_கடையேஊடல் என்பது எதற்கோ? அன்பு இல்லாதவிடத்து-
  
# கதக்கண்ணன்# கதக்கண்ணன்
# 94 முல்லை# 94 முல்லை
பெரும் தண் மாரி பேதை பித்திகத்துஅறியாமையுடைய பிச்சியானது பெரிய குளிர்ந்த மாரிப்பருவத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவேமுன்னரேயே அரும்புகள் மிகச் சிவந்தனவாய் வந்தன,
யானே மருள்வென் தோழி பானாள்நான் மனம் மயங்கி நிற்கிறேன், தோழி! நடு இரவில்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்இன்னும் தனியாகவே இருக்கிறவர் கேட்டால் மறுபடியும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே          5என்ன ஆவாரோ? பிரிந்திருப்பவராகிய தலைவர்-
அருவி மா மலை தத்தஅருவிநீர் பெரிய மலையில் தத்திவீழ
கருவி மா மழை சிலைதரும் குரலேகூட்டமான கரிய மேகங்கள் முழங்கும் ஓசையை-
  
# கபிலர்# கபிலர்
# 95 குறிஞ்சி# 95 குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவிபெரிய மலையிலிருந்து விழுகின்ற தூய வெள்ளிய அருவிநீர்
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல்மலை முழைஞ்சுகளில் ஒலிக்கும் பல மலர்களையுடைய மலைச் சரிவின்
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள்சிறுகுடியில் இருக்கும் குறவனின் பெரிய தோள்களையுடைய இளையவளின்
நீர் ஓர் அன்ன சாயல்நீரின் தன்மை போன்ற மெல்லிய தன்மை
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே         5தீயைப் போன்ற என் வலிமையை அழித்தது.
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 96 குறிஞ்சி# 96 குறிஞ்சி
அருவி வேங்கை பெரு மலை நாடற்குஅருவியின் ஓரத்தில் வேங்கை மரம் உள்ள பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனுக்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது(அவன் குறை தீர)நான் என்ன செய்வேன் என்று கூறுகிறாய்; நான் அச் சொல்லை
நகை என உணரேன் ஆயின்விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால்
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயேநீ என்ன ஆவாய் நல்ல நெற்றியை உடைய தோழியே!
  
# வெண்பூதி# வெண்பூதி
# 97 நெய்தல்# 97 நெய்தல்
யானே ஈண்டையேனே என் நலனேநான் இவ்விடத்தில் இருக்கின்றேன்; என் பெண்மை நலமோ
ஆனா நோயொடு கானலஃதேபொறுக்கமுடியாத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது;
துறைவன் தம் ஊரானேதலைவன் தனது ஊரில் இருக்கின்றான்;
மறை அலர் ஆகி மன்றத்தஃதேமறைவான எங்கள் நட்போ பலரும் தூற்றும் பழிச்சொல்லாகி தெருவிற்கிடக்கிறது.
  
# கோக்குளமுற்றன்# கோக்குளமுற்றன்
# 98 முல்லை# 98 முல்லை
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்“இதுபோல் ஆகிவிட்டாள் நல்ல நெற்றியையுடையவள்” என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினேகிட்டச் சென்று கூறுவார் கிடைத்தால்,
நன்று-மன் வாழி தோழி நம் படப்பைநல்லது நிச்சயமாக, வாழ்க தோழி! நம் கொல்லைப்புறத்தில்
நீர் வார் பைம் புதல் கலித்தநீர் ஒழுகி வளர்ந்த புதரின்மேல் செழித்துப் படர்ந்த
மாரி பீரத்து அலர் சில கொண்டே                    5கார்காலத்து பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சென்று –
  
# ஔவையார்# ஔவையார்
# 99 முல்லை# 99 முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிநான் சிந்தித்தேன் அல்லவா! நானே, சிந்தித்து
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்துஉன்னை நினைத்தேன் அல்லவா! பெரிதும் நினைத்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பேமயங்கினேன் அல்லவா! இது உலகத்து இயற்கை;
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறைஉயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
இறைத்து உண சென்று அற்று ஆங்கு           5இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவேஅவ்வளவு பெரிய காமம் (உன்னைக் கண்டவுடன்) இங்கு வடிந்துவிடுதல்-
  
# கபிலர்# கபிலர்
# 100 குறிஞ்சி# 100 குறிஞ்சி
அருவி பரப்பின் ஐவனம் வித்திஅருவி விழும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து எனகாந்தள் செடிகளைக் கொண்ட அழகிய மலைச் சரிவில் உள்ள சிறுகுடியிலுள்ளோர் பசித்ததாக
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும்கடுமையான வேழத்தின் தந்தங்களைப் பண்டமாற்றாக விற்று உண்ணும்
வல் வில் ஓரி கொல்லி குட வரை             5வலிய வில்லையுடைய ஓரியின் கொல்லி என்னும் மேற்கு மலையின்
பாவையின் மடவந்தனளேகொல்லிப்பாவை போன்று அழகும் மென்மையும் மிக்கவள் அவள்,
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளேதழுவுவதற்கு அரியன அவளின் மூங்கில் போன்ற பெரிய தோள்கள்.