முனைவர் ப.பாண்டியராஜா

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001) Ph.D Thesis: A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – A diachronic and synchronic study of linguistic features starting from tolkappiyam and upto modern times. – Degree awarded by Tamil University, Thanjavur. அண்ணா பல்கலைக்கழகம், கணினித்துறை, சென்னைப்பல்கலைக்கழகம், மொழியியல் துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, ஞாலத்தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், மதுரை, திராவிடப் பல்கலைக்கழகம், குப்பம், செம்மொழி மாநாடு, கோயம்புத்தூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்,…

Read More

எழுதி முடித்த நூல்கள்

1. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -1 இத் தொகுதியில் பத்துப்பாட்டின் ஆற்றுப்படை நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் எனப்படும் கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் படிக்கலாம். குறிப்பாக மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது இந் நூல். ஒவ்வொரு நூலைப் பற்றிய உரைநடைச் சுருக்கமும், பாடலில் அமைந்துள்ள சில காட்சிகளின் சிறப்பும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே படங்கள் மூலமும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. 2. இளைஞர்க்கான பத்துப்பாட்டு – தொகுதி -2 இத் தொகுதியில், பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களைத் தவிர்த்த ஏனைய முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஐந்து நூல்களுக்கான விளக்கங்கள் எளிய நடையில் அமைந்துள்ளன. பாடல்களின் உரைநடைச் சுருக்கமும், சில குறிப்பிட்ட காட்சிகளின் சிறப்புத்தன்மைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும்…

Read More

எழுதிக்கொண்டிருக்கும் நூல்கள்

1. மல்லல் மூதூர் மதுரை இந்நூல் மதுரையைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் கொண்டுள்ளதாக எழுதப்படு வருகிறது. வரலாற்று ஆவணங்களில் மதுரை, கல்வெட்டுகளில் மதுரை, புராண இதிகாசங்களில் மதுரை, இலக்கியங்களில் மதுரை ஆகிய பலதலைப்புகளில் மதுரையின் வரலாறு ஆயப்படுகிறது. மதுரை நகரின் பண்டைய தோற்றமும், அதன் வளர்ச்சியும் விரிவாக ஆயப்படுகின்றன. காலந்தோறும் மதுரை மக்களின் வாழ்க்கை முறையும் ஆயப்படுகிறது. முற்கால மதுரை, இடைக்கால மதுரை, தற்கால மதுரை என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன. முற்கால மதுரை ஏறக்குறைய முடியுந்தறுவாயில் உள்ளது. 2. சங்கச் சொல்வளம் இத் தலைப்பில் மின்தமிழ் கூகுள் குழுமத்தில் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமையும். நகர்வுகள், அசைவுகள், அஞ்சுதல், உண்ணுதல், உணவுவகைகள் என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மேலும் பல தலைப்புகளில் கட்டுரைகள் உருவாகி வருகின்றன. நூலின் பல…

Read More

திருமுருகாற்றுப்படை

சொற்பிரிப்பு-மூலம் அடிநேர்-உரை உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு         உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும் பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு           பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி        ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய, உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்          தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும், செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை             5 தான்கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,              5 மறு இல் கற்பின் வாணுதல் கணவன் குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன் ஆகியவனும் – கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை கடலில் முகந்த நிறைத்த சூல்…

Read More