கீ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீண்டிட்ட 1
கீண்டு 2
கீரை 1
கீழ் 82
கீழ்_மடை 1
கீழ்_மரத்து 1
கீழ்கள் 1
கீழ்களது 1
கீழ்களை 3
கீழ்தான் 1
கீழ்ந்திடா 1
கீழ்ந்திடுதல் 1
கீழ்ந்து 1
கீழ்ப்பட்டாளோ 2
கீழ்ப்பட 1
கீழ்ப்படு 1
கீழ்ப்பணிந்து 1
கீழ்ப்பால் 1
கீழ்மக்கள் 1
கீழ 2
கீழது 2
கீழா 2
கீழாயவர் 1
கீழாயினாரை 1
கீழாயோர் 1
கீழால் 1
கீழினம் 1
கீழும் 5
கீழோர் 2
கீள்வது 1
கீறார் 1
கீறி 2

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

கீண்டிட்ட (1)

உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட/ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/11,12

மேல்


கீண்டு (2)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு/விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த – திரு 298,299
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு/உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி மேல்


கீரை (1)

குப்பை கீரை கொய் கண் அகைத்த – புறம் 159/9

மேல்


கீழ் (82)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – மது 534
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி – நற் 328/1
உட்கை சிறு குடை கோலி கீழ் இருந்து – குறு 60/3
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் – குறு 257/3
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/36
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/10
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/14
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை – கலி 38/4
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா – கலி 39/13
மன்றல் வேங்கை கீழ் இருந்து – கலி 41/43
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ்/போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 96/10,11
காஞ்சி கீழ் செய்தேம் குறி – கலி 108/63
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/6
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/9
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/13
மேல் துறை கொளீஇய கழாலின் கீழ் துறை – அகம் 356/1
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல் – புறம் 33/5
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
கீழ் நீரால் மீன் வழங்குந்து – புறம் 396/1
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ்
சேனை தலைவராய் சென்றோரும் ஏனை – நாலடி:1 3/1,2
துள்ளி தூண் முட்டுமாம் கீழ் – நாலடி:7 4/4
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் – நாலடி:20 1/1
குறிப்பின் கீழ் பட்டது உலகு – நாலடி:20 6/4
நிலை கலக்கி கீழ் இடுவானும் நிலையினும் – நாலடி:25 8/2
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் – நாலடி:26 10/4
கொல்ல சுரப்பதாம் கீழ் – நாலடி:28 9/4
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன் – நாலடி:35 1/3
வற்று ஆம் ஒரு நடை கீழ் – நாலடி:35 3/4
பெருமை உடைத்தா கொளினும் கீழ் செய்யும் – நாலடி:35 5/3
முந்திரி மேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை – நாலடி:35 6/3
ஏகுமாம் எள்ளுமாம் கீழ் – நாலடி:35 8/4
கீழ் மேலாய் நிற்கும் உலகு – நாலடி:37 8/4
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த – நான்மணி:41/1
அரிசியான் இன்புறூஉம் கீழ் எல்லாம் தத்தம் – நான்மணி:65/3
நலனும் இளமையும் நல்குரவின் கீழ் சாம் – நான்மணி:80/1
குலனும் குடிமையும் கல்லாமை கீழ் சாம் – நான்மணி:80/2
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா – நான்மணி:80/3
பண்டத்தின் கீழ் சாம் பகடு – நான்மணி:80/4
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை – நான்மணி:97/3
கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா – இன்னா40:3/1
தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா – இன்னா40:29/2
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா – இன்னா40:31/1
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ்
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி – கள40:2/1,2
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ்
நீர் தூம்பு நீர் உமிழ்வ போன்ற புனல் நாடன் – கள40:2/3,4
இரு நிலம் சேர்ந்த குடை கீழ் வரி நுதல் – கள40:22/1
மா உதைப்ப மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய் – கள40:36/3
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி – திணை150:95/1
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து – திணை150:131/4
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள்:39 9/2
மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள்:41 9/1
மன்னவன் கோல் கீழ் படின் – குறள்:56 8/2
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர் – குறள்:93 9/1
மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும் – குறள்:98 3/1
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள்:98 3/2
கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள்:98 3/2
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர் – குறள்:104 4/1
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள்:108 4/2
கொல்ல பயன்படும் கீழ் – குறள்:108 8/2
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள்:108 9/2
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள் – ஆசாரக்:10/3
இடர் எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் – ஆசாரக்:36/2
மன நலம் ஆகாவாம் கீழ் – பழ:11/4
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ வில் கீழ்
அரி தாய் பரந்து அகன்ற கண்ணாய் அறியும் – பழ:82/2,3
நாவல் கீழ் பெற்ற கனி – பழ:138/4
சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே – பழ:272/3
மன்னவன் ஆணை கீழ் மற்றையார் மீக்கூற்றம் – பழ:311/1
மரத்தின் கீழ் ஆகா மரம் – பழ:311/4
வெண்குடை கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும் – பழ:391/1
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த – சிறுபஞ்:15/3
கலந்த பின் கீழ் காணார் காணாய் மடவாய் – சிறுபஞ்:36/3
செங்கோலான் கீழ் குடிகள் செல்வமும் சீர் இலா – ஏலாதி:10/1
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல் – ஏலாதி:10/2

மேல்


கீழ்_மடை (1)

கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13

மேல்


கீழ்_மரத்து (1)

கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5

மேல்


கீழ்கள் (1)

கீழ்கள் வாய் தோன்றிவிடும் – நான்மணி:95/4

மேல்


கீழ்களது (1)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – குறள்:108 5/1

மேல்


கீழ்களை (3)

செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை
நள்ளார் அறிவுடையார் – நாலடி:27 2/3,4
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை
செய் தொழிலால் காணப்படும் – நாலடி:35 7/3,4
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை
செய்தொழிலால் காணப்படும் – நாலடி:35 10/3,4

மேல்


கீழ்தான் (1)

தாழாது போவாம் என உரைப்பின் கீழ்தான்
உறங்குவாம் என்று எழுந்து போமாம் அஃது அன்றி – நாலடி:35 2/2,3

மேல்


கீழ்ந்திடா (1)

கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள்:81 1/2

மேல்


கீழ்ந்திடுதல் (1)

கிழமை உடையாரை கீழ்ந்திடுதல் இன்னா – இன்னா40:27/2

மேல்


கீழ்ந்து (1)

மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து/கடாஅ யானை முழங்கும் – பதி 94/8,9

மேல்


கீழ்ப்பட்டாளோ (2)

புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/9
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/12

மேல்


கீழ்ப்பட (1)

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட/நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/2,3

மேல்


கீழ்ப்படு (1)

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை – அகம் 171/12

மேல்


கீழ்ப்பணிந்து (1)

வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து/நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/4,5

மேல்


கீழ்ப்பால் (1)

கீழ்ப்பால் ஒருவன் கற்பின் – புறம் 183/9

மேல்


கீழ்மக்கள் (1)

கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3

மேல்


கீழ (2)

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ/நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 393,394
உவலை கூவல் கீழ/மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/3,4

மேல்


கீழது (2)

கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் – புறம் 6/5

மேல்


கீழா (2)

பறி ஓலை மேலொடு கீழா இடையர் – திணை150:113/1
தலை கீழா காதிவிடல் – பழ:300/4

மேல்


கீழாயவர் (1)

எள்ளுவர் கீழாயவர் – நாலடி:35 9/4

மேல்


கீழாயினாரை (1)

கீழாயினாரை பெருக்குதல் யாழ் போலும் – பழ:371/2

மேல்


கீழாயோர் (1)

கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் – பழ:80/2

மேல்


கீழால் (1)

பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால்
அடி வெந்து கண் சுடும் ஆறு – திணை150:92/3,4

மேல்


கீழினம் (1)

இடர் தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை – ஏலாதி:4/1

மேல்


கீழும் (5)

கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி – மலை 142
கீழும் மேலும் காப்போர் நீத்த – நற் 182/8
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது – புறம் 6/6
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து – புறம் 120/8
புடை பெண்டிர் மக்களும் கீழும் பெருகி – நாலடி:37 8/2

மேல்


கீழோர் (2)

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ – பரி 17/40
மேலோரை கீழோர் குறுகி குறைத்திட்ட – கள40:9/1

மேல்


கீள்வது (1)

தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3

மேல்


கீறார் (1)

கீறார் இரா மரமும் சேரார் இடர் எனினும் – ஆசாரக்:13/2

மேல்


கீறி (2)

பொதியில் முனிவன் புரை வரை கீறி/மிதுனம் அடைய விரி கதிர் வேனில் – பரி 146/1

மேல்