யூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யூகம் 1
யூகமொடு 1
யூப 1
யூபம் 2
யூபமொடு 1

யூகம் (1)

வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம்
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/12,13
மேல்


யூகமொடு (1)

நாக நறு மலர் உதிர யூகமொடு
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 302,303
மேல்


யூப (1)

எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் – புறம் 224/8
மேல்


யூபம் (2)

பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/21
மேல்


யூபமொடு (1)

தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/10,11
மேல்