நூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், திருக்குறள் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நூக்கி 1
நூக்கு 1
நூபுர 1
நூபுர_புட்டில் 1
நூபுரம் 1
நூல் 53
நூல்_ஏணி 1
நூலா 1
நூலா_கலிங்கம் 1
நூலாக 1
நூலாருள் 1
நூலின் 3
நூலும் 1
நூலை 1
நூலொடு 4
நூலோர் 3
நூலோர்க்கும் 1
நூழில் 1
நூழிலாட்டி 1
நூழிலாட்டு 1
நூழிலும் 1
நூழை 1
நூற்கும் 1
நூற்றினர் 1
நூற்று 4
நூற்றுப்பத்து 1
நூற்றுவர் 2
நூற்றுவர்_தலைவனை 1
நூறவும் 1
நூறி 18
நூறு 6
நூறு_ஆயிரம் 1
நூறும் 2
நூறை 1
நூறொடு 1

நூக்கி (1)

ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
மேல்


நூக்கு (1)

எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45
மேல்


நூபுர (1)

நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த – கலி 96/16
மேல்


நூபுர_புட்டில் (1)

நூபுர_புட்டில் அடியொடு அமைத்து யாத்த – கலி 96/16
மேல்


நூபுரம் (1)

திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
மேல்


நூல் (53)

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் – குறள் 38/5
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41/2
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள் 41/19,20
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44/20
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் – குறள் 56/19
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள் 69/5
அஞ்சுமவன் கற்ற நூல்
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள் – குறள் 73/14,15
அமைவு அரண் என்று உரைக்கும் நூல்
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – குறள் 75/6,7
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் – குறள் 79/5
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை – குறள் 128/5
செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி – திரு 231
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 230
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – பெரும் 236
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – மது 554
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – மது 646
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு – நெடு 76
வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம் – நற் 189/8,9
நூல் அறு முத்தின் காலொடு பாறி – குறு 51/2
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/2
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/2
கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/2
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் – குறு 253/2,3
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் – பதி 34/3
மருந்து_உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/10
விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/78
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/3
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – கலி 99/3
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/30
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி – அகம் 136/14
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் – அகம் 181/16
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் – அகம் 198/6
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப – அகம் 289/11
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி – அகம் 314/8
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – அகம் 361/5
நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
ஐது அடர்ந்த நூல் பெய்து – புறம் 29/2
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று – புறம் 159/4
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/3
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என – புறம் 392/15
மேல்


நூல்_ஏணி (1)

மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
மேல்


நூலா (1)

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21
மேல்


நூலா_கலிங்கம் (1)

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21
மேல்


நூலாக (1)

சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/14,15
மேல்


நூலாருள் (1)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள் 69/5
மேல்


நூலின் (3)

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – அகம் 224/8
மேல்


நூலும் (1)

ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் – குறள் 59/1
மேல்


நூலை (1)

செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை
முந்நூலா கொள்வானும் போன்ம் – கலி 103/30,31
மேல்


நூலொடு (4)

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் – குறள் 64/11
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – குறள் 73/11
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/8
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
மேல்


நூலோர் (3)

பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33/3,4
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று – குறள் 95/1,2
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் – பெரும் 487
மேல்


நூலோர்க்கும் (1)

எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54/6
மேல்


நூழில் (1)

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள – பரி 9/49
மேல்


நூழிலாட்டி (1)

நுகம் பட கடந்து நூழிலாட்டி
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 87,88
மேல்


நூழிலாட்டு (1)

வேழ பழனத்து நூழிலாட்டு
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 257,258
மேல்


நூழிலும் (1)

நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258
மேல்


நூழை (1)

நூழை நுழையும் பொழுதில் தாழாது – நற் 98/4
மேல்


நூற்கும் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் – குறள் 55/5
மேல்


நூற்றினர் (1)

நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
இரு தலை வந்த பகை முனை கடுப்ப – மது 401,402
மேல்


நூற்று (4)

நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும் – ஐங் 20/2
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/2
மேல்


நூற்றுப்பத்து (1)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
மேல்


நூற்றுவர் (2)

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க – கலி 104/57
மேல்


நூற்றுவர்_தலைவனை (1)

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/2,3
மேல்


நூறவும் (1)

எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் – அகம் 145/20
மேல்


நூறி (18)

வேல் கோல் ஆக ஆள் செல நூறி
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் – மது 690,691
அகப்பா அழிய நூறி செம்பியன் – நற் 14/4
வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து – பதி 66/5,6
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/9,10
நாம மன்னர் துணிய நூறி
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/8,9
அம்பு உடை கையர் அரண் பல நூறி
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன் – அகம் 69/16,17
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/2
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து – அகம் 97/4
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/15,16
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் – அகம் 159/17,18
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி – அகம் 205/9,10
செம்பு உறழ் புரிசை பாழி நூறி
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/13,14
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/13,14
முலை பொலி அகம் உருப்ப நூறி
மெய்ம்மறந்து பட்ட வரையா பூசல் – புறம் 25/10,11
அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/14
முரண் மிகு கோவலூர் நூறி நின் – புறம் 99/13
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் – புறம் 309/1
மேல்


நூறு (6)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல் – குறள் 94/3
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை – கலி 122/5
பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/10
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/3
மேல்


நூறு_ஆயிரம் (1)

நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
மேல்


நூறும் (2)

களிறு உடை அரும் சமம் ததைய நூறும்
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 46/12,13
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன் – அகம் 338/12,13
மேல்


நூறை (1)

காஅய் கொண்ட நுகம் மருள் நூறை
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி – மலை 515,516
மேல்


நூறொடு (1)

நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 137
மேல்