நற்றிணை 1-50

சொற்பிரிப்பு மூலம் அடிநேர் உரை
  
   # 0 கடவுள் வாழ்த்து # 0 கடவுள் வாழ்த்து பாரதம் பாடிய பெருந்தேவனார்
  
மா நிலம் சேவடி ஆக தூ நீர்பெரிய நிலமே தன் செம்மையான அடியாகவும், தெளிந்த நீர் நிறைந்த
வளை நரல் பௌவம் உடுக்கை ஆகசங்குகள் முழங்கும் கடலே தனக்கு ஆடையாகவும்
விசும்பு மெய் ஆக திசை கை ஆகவானமே தனக்கு உடம்பாகவும், திசைகள் கைகள் ஆகவும்
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆகபசிய கதிர்களையுடைய திங்களுடன், ஞாயிறு ஆகியவை கண்களாகவும் கொண்டு
5       இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கியஉலகில் காணப்படும் எல்லாவற்றிலும் பொருந்திநின்றும் தன்னகத்தே அடக்கியும் உள்ள அவன்
வேத முதல்வன் என்பவேதங்களுக்கு முதல்வன் என்பர்
தீது அற விளங்கிய திகிரியோனே     தீமைகள் முற்றிலும் நீங்கப்பெற்ற ஆழியையுடைய முறைசெய்து காக்கும் இறையோனை.
  
# 1 குறிஞ்சி# 1 குறிஞ்சி கபிலர்
  
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர்நிற்கின்ற சொல்லை உடையவர், நெடிது பழகினும் இனியவர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரேஎன்றைக்கும் எனது தோளினைப் பிரிதலை அறியார்,
தாமரை தண் தாது ஊதி மீமிசைதாமரைப்பூவின் குளிர்ந்த தாதினை ஊதிக்கொண்டு, மிக்க உயரத்திலுள்ள
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலசந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
5       புரைய மன்ற புரையோர் கேண்மைமேன்மையானது சிறந்தவர்களின் நட்பு;
நீர் இன்று அமையா உலகம் போலநீர்வளம் இன்றி அமைந்திராத உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளிஅவர் இன்றி அமையாத நம்மை விரும்பி அருள்செய்து
நறு நுதல் பசத்தல் அஞ்சிமணக்கும் நெற்றி பசலைகொள்ளுமோ என்று அஞ்சி
சிறுமை உறுபவோ செய்பு அறியலரேசிறுமை பயப்பனவற்றைச் செய்வாரோ? அவ்வாறு செய்தலை அறியமாட்டார்.
  
# 2 பாலை# 2 பாலை பெரும்பதுமனார்
  
அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்துஆழப் பதிந்துகிடக்கும் பெரிய குளிர்ந்த குன்றத்திலுள்ள
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டுதழைத்து வளர்ந்த ஈத்த மரங்களையுடைய காற்று வீசும் பாலைநிலத்தில்
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தவழியே செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால்
செம் மறு தலைய நெய்த்தோர் வாயசிவந்து கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய
5       வல்லிய பெரும் தலை குருளை மாலைவலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள், மாலையில்
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனேமானை எதிர்நோக்கியிருக்கும் இண்டங்கொடிகள் படர்ந்த ஈங்கைப் புதர்களைக் கொண்ட பாலைக்காட்டினில்
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்றுகூர்மையான பற்களைக் கொண்ட மெல்லியலாளான மடந்தையை முன்னே செல்லவிட்டு
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்இரவினிலே இந்தக் காட்டைக் கடக்க எண்ணும் இளைஞனின் உள்ளம்
காலொடு பட்ட மாரிகாற்றோடு கலந்த பெருமழை பெய்யும்போது
10      மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே  பெரிய மலைப்பாறைகளை பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும்
  
# 3 பாலை# 3 பாலை இளங்கீரனார்
  
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினைஅடைகாக்கும் பருந்து வருத்தமுடன் இருக்கும் வானத்தை முட்டும் நீண்ட கிளையினையும்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்பொரிந்துபோன அடிமரத்தையும் உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்துகட்டளைக் கல் போன்ற வட்டரங்கினை கீறிக்கொண்டு
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காய்களைக் கொண்டு வட்டு ஆடும்
5       வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்வில்லால் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மக்களுடைய பகை முனையாகிய சிற்றூரில்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலைநடுவழியில் வந்ததும், நம் வலிமையனைத்தையும் கொன்றதுமான மாலைக்காலத்தில்
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளியநினைத்துப்பார்த்தேன் அல்லவா நானே? எண்ணிய
வினை முடித்து அன்ன இனியோள்காரியத்தை முடித்துவிட்ட இனிமையான உணர்வினைப் போன்ற இனியவள்,
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவேமனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது என்று
   
# 4 நெய்தல்# 4 நெய்தல் அம்மூவனார்
  
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர்கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறுகுடியில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇநீல நிறப் புன்னையின் கொழுவிய நிழலில் தங்கி,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கிகுளிர்ந்த பெரிய கடற்பரப்பின் பக்குவமான நிலையைப் பார்த்தபடி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடுஅழகிய கண்களையுடைய முறுக்கேறிய வலைகளைக் காயவைக்கும் துறையைச் சேர்ந்தவனிடம் சென்று
5       அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கைஊராரின் பழிச்சொற்களை அன்னை அறிந்தால் இங்கு சந்தித்துக்கொள்ளும் நம் வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு என கூறின்இனி அரிதாகிப்போய்விடும் என்று கூறினால்
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர்நம்மை அழைத்துக்கொண்டு செல்வாரோ? தோழி! உப்பு வணிகர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிவெள்ளைக்கல்லான உப்பின் விலையைக் கூவிக்கூறிச்செல்வதால்
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்ஆநிரைகளை விலக்கிப் போகும் நீண்ட வரிசையான வண்டிகள்
10      மணல் மடுத்து உரறும் ஓசை கழனிமணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள
கரும் கால் வெண்_குருகு வெரூஉம்கரிய காலையுடைய வெள்ளை நாரைகள் வெருளும்
இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கேகரிய கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள தம்முடைய வாழ்தற்கு இனிதாகிய ஊருக்கு –
  
# 5 குறிஞ்சி# 5 குறிஞ்சி பெருங்குன்றூர்க்கிழார்
  
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்பநிலமானது நீரினை நிரம்பப் பெற, குன்றுகள் வளம்பெற,
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்பஅகன்ற வாயையுடைய பசிய சுனைகள் பயிர்களை விளைவிக்க,
குறவர் கொன்ற குறை கொடி நறை பவர்குறவர்கள் வெட்டிப்போட்டதால் குறைவுபட்ட மணக்கின்ற கொடிகள்
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்பநறுமணமிக்க வயிரம் பாய்ந்த சந்தனமரத்தைச் சுற்றிக்கொண்டு வளர,
5       பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலிபெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செலஅரிதானதாகும் உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும்
இளையர் தரூஉம் வாடையொடுஅந்த இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன்
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதேவருந்துகின்ற இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும்.
  
# 6 குறிஞ்சி# 6 குறிஞ்சி பரணர்
  
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமைநாரை உரித்தது போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும், 
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்குவளை மலரைப் போன்ற ஏந்திய அழகுள்ள குளிர்ந்த கண்களையுடைவளும்
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்குதேமல் படிந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய தலைவியிடத்தே
5       எய்த சென்று செப்புநர் பெறினேகிட்டிச் சென்று உரைப்பவாரைப் பெற்றால்,
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது“இவர் யார்” என்று சொல்பவள் அல்லள் அவள், முன்னர் இருக்கும்
அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனிபாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
எறி மட மாற்கு வல்சி ஆகும்துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறிவல்வில்லோரியின் காட்டைப் போல் மணம் மிக்க
10      இரும் பல் ஒலிவரும் கூந்தல்கரிய பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலாள்
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவேபெரிதும் வருந்துவாள் தலைவன் வந்துவிட்டுச் சென்றிருக்கிறான் என அறிந்து
  
# 7 பாலை# 7 பாலை நல்வெள்ளியார்
  
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்கவருத்தும் தெய்வத்தையுடைய அகன்ற இடத்திலுள்ள சுனையின் நீர் பொங்கி வழிய
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்பபெரிதான மலையின் சரிவுகளில் அருவிகள் ஆர்த்தொலிக்க
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்றுகற்பாறைகளைப் புரட்டிப்போட்டுக்கொண்டு இறங்கும் கடுமையான வரத்தினைக்கொண்ட காட்டாற்றின்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பமூங்கிற் கழைகளை மூழ்கச்செய்யும் வெள்ளம் காட்டில் மோதி ஆரவாரிக்க,
5       தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்மிக்கு ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழிஇதோ பெய்வதற்கு மின்னுகின்றது தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானைவெண்ணெல்லை அருந்திய வரிகளைக் கொண்ட நெற்றியையுடைய யானை
தண் நறும் சிலம்பில் துஞ்சும்குளிர்ந்த நறுமணமிக்க மலைச்சாரலில் தூங்கும்
சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டேசிறிய இலையைக் கொண்ட சந்தனமரங்களைக்கொண்ட வாடிப்போய் நிற்கும் பெரிய காட்டினில் –
  
# 8 குறிஞ்சி# 8 குறிஞ்சி கண்ணகனார்
  
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
திரு மணி புரையும் மேனி மடவோள்அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர்யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!
5       துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல்துயருக்குள் அமிழ்த்துவிட்டாள் என்னை; அகன்ற வயலில்
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்கதிரறுப்போரால் அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்குலிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்கன் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்
திண் தேர் பொறையன் தொண்டிதிண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
10      தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே  சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்.
  
# 9 பாலை# 9 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள்ஊக்கம் குன்றாதவராய் முயல்கின்ற ஆர்வம் மிக்க மக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்குதாம் வழிபடுகின்ற தெய்வத்தை நேரில் கண்டதைப் போல்
அலமரல் வருத்தம் தீர யாழ நின்மனத்தைச் சுழற்றும் வருத்தம் தீர, உன்னுடைய
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்நலம் மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின்
5       பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறிபொரிப்பொரியான பூக்களைக்கொண்ட புன்கமரத்தின் நெருப்பின் தன்மைத்தான ஒள்ளிய தளிரை
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரிஅழகுத்தேமல் பரந்த அழகிய முலைகளில் பொருந்தத் தேய்த்து
நிழல் காண்-தோறும் நெடிய வைகிநிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி,
மணல் காண்-தோறும் வண்டல் தைஇமணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயேவருத்தமில்லாமல் செல்வாய், வெண்மையான பற்களையுடையவளே!
10      மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்மாமரத்தின் அரும்புகளைக் கோதிவிட்டு மகிழ்ந்து குயில்கள் கூவித் திரியும்
நறும் தண் பொழில கானம்மணமிக்க குளிர்ந்த சோலைகளையுடையன இக் காடுகள்;
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறேபல சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி.
  
# 10 பாலை# 10 பாலை குடவாயிற் கீரத்தனார்
  
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்நிமிர்ந்து உயர்ந்த அழகிய முலைகள் தளர்ச்சியுற்றுப்போனாலும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்தபொன்னைப் போன்ற மேனியில் நீலமணிபோலும் தாழ்ந்த
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்நல்ல நெடிய கூந்தல் நரையோடு முடியப்பெற்றாலும்
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊரகைவிடுதலைக் காப்பாயாக! பூக்கள் ஒளிறும் ஊரையுடையவனே!
5       இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்இனிய கடுக்கின்ற கள்ளினையும், அணிகலன்கள் பூட்டப்பெற்ற நெடிய தேரையும் கொண்ட
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்வெற்றியையுடைய சோழர்கள் கொங்குநாட்டாரைப் பணியச் செய்வதற்காக
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் வேல் வாய்த்து அன்ன நின்பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல உன்னுடைய
பிழையா நன் மொழி தேறிய இவட்கேபொய்க்காத நல்ல சொற்களை நம்பிய இவளை – 
  
# 11 நெய்தல்# 11 நெய்தல் உலோச்சனார்
  
பெய்யாது வைகிய கோதை போலதலையில் சூடாமல் கீழே கிடக்கும் மாலையைப் போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்பமேனி வாடிப்போனாய்! காதலர் குறித்த இடத்தில் வராமற்போனதினால்;
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்அயலார் கூறும் அலர் உரைகளை நினைத்து, நிச்சயமாக
வாரார் என்னும் புலவி உட்கொளல்அவர் வரமாட்டார் என்ற பிணக்கத்தைக் கொள்வதை
5       ஒழிக மாள நின் நெஞ்சத்தானேஒழிப்பாயாக, உனது நெஞ்சத்தில்;
புணரி பொருத பூ மணல் அடைகரைஅலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில்
ஆழி மருங்கின் அலவன் ஓம்பிசக்கரத்தின் கீழ் நண்டுகள் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து
வலவன் வள்பு ஆய்ந்து ஊரபாகன் தன் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தும் அளவுக்கு
நிலவு விரிந்தன்றால் கானலானேநிலவொளியும் பரந்துள்ளது இக் கடற்கரைச் சோலையில்
மேல் 
# 12 பாலை# 12 பாலை கயமனார்
  
விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசிவிளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்இரவில் தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தே, தன்னை ஒளித்துக்கொண்டு, தனது காலின்
5       அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண்பரற்கற்கள் நிறைந்த சிலம்புகளைக் கழற்றி, பலவிதங்களில் சிறந்த
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்வரிகளால் புனையப்பட்ட பந்தோடு வைப்பதற்காகச் செல்கின்றவள்,
இவை காண்-தோறும் நோவர் மாதோ“இவற்றைக் காணும்போதெல்லாம் வருந்துவார் அன்றோ!
அளியரோ அளியர் என் ஆயத்தோர் எனபெரிதும் இரங்கத்தக்கவர் என் தோழியர்” என்று
நும்மொடு வரவு தான் அயரவும்காதலனாகிய உன்னோடு செல்லுதல் மேற்கொள்ளவும்
10      தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணேதன்னால் கட்டுப்படுத்த முடியாதபடி கலங்கி அழுதன அவளது கண்கள்.
  
# 13 குறிஞ்சி# 13 குறிஞ்சி கபிலர்
  
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலையஎழமாட்டேனென்கிறாய், அவ்வாறிருப்பினும் உன் அழகிய நலமெல்லாம் கெடும்படியாக
அழாஅதீமோ நொதுமலர் தலையேஅழாமலிருப்பாயாக! இது அயலார் இருக்குமிடம்;
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்ததினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பறித்த
பகழி அன்ன சே அரி மழை கண்அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும்
5       நல்ல பெரும் தோளோயே கொல்லன்நல்ல பெரிய தோள்கள்களையும் உடையவளே! பொற்கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்ஊதும்போது தெறிக்கும் பொன்போன்ற தீப்பொறிபோல சிறியவாகவும் பலவாகவும் பரவிவிழும்
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சிவேங்கைமரத்தின் பூக்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையில் தங்கும்
மயில் அறிபு அறியா-மன்னோமயில் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாத 
பயில் குரல் கவரும் பைம் புற கிளியேநெருங்கிய தினைக்கதிர்களைக் கவரும் பசிய முதுகினைக் கொண்ட கிளிகளை ஓட்ட –
  
# 14 பாலை# 14 பாலை மாமூலனார்
  
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅயஎமது பழைய கவின் தொலைய, எமது தோளின் நலமெல்லாம் அழிந்துபோக
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்எமக்கு அருளாராய் எம்மை விட்டு நீங்கினர்; எனினும் அருள்செய்வார்
நட்டனர் வாழி தோழி குட்டுவன்நம்மீது நட்புக்கொண்டோர்!, வாழ்க தோழியே! குட்டுவனின்
அகப்பா அழிய நூறி செம்பியன்அகப்பா என்னும் ஊர் அழிய இடித்தழித்து செம்பியன்
5       பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிதுபகலில் தீயை மூட்டிய ஆரவாரத்திலும் மிகப் பெரிதாக
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்துஊரார் பழிச்சொல் எழும்படி சென்றுவிட்டாரெனினும், மலர்கள் தலைகவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்பெரிதான மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில்
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு எனதம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல்நீங்காத துயரத்துடன் அச்சங்கொண்ட பெண்யானையின் ஓலம்
10      நெடு வரை விடர்_அகத்து இயம்பும்நீண்ட மலையின் குகைகளிலே எதிரொலிக்கும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரேகடிதாகச் செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர் –
  
# 15 நெய்தல்# 15 நெய்தல் பாண்டியன் அறிவுடை நம்பி
  
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொளகாற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்பஊதைக்காற்று தூவிவிடும் ஓயாது இயங்கும் கடற்கரைத் தலைவனே!
பூவின் அன்ன நலம் புதிது உண்டுபூவைப் போன்ற என் பெண்மைநலத்தைப் புதிதாக நுகர்ந்து
5       நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமேநீ என்னுடன் சேர்ந்திருந்ததைப் போல் இப்போது நான் இல்லாததினால், நான்
நேர்பு உடை நெஞ்சம் தாங்க தாங்கிசெம்மைப்பண்பினையுடைய எனது நெஞ்சம் தாங்குமளவுக்குத் தாங்கி,
மாசு இல் கற்பின் மடவோள் குழவிகுற்றமற்ற கற்பினையுடைய இளையவள் ஒருத்தி தன் குழந்தையைப்
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்குபேய் கைப்பற்றப் பறிகொடுத்ததைப் போல
சேணும் எம்மொடு வந்தநெடுங்காலம் எம்மோடிருந்த
10      நாணும் விட்டேம் அலர்க இ ஊரேநாணத்தைக் கைவிட்டேன், அலர் எழுவதாக இந்த ஊரில்
  
# 16 பாலை# 16 பாலை சிறைக்குடி ஆந்தையார்
  
புணரின் புணராது பொருளே பொருள்_வயின்தலைவியோடு சேர்ந்திருந்தால் நம்மைச் சேராது பொருள்; பொருள் தேடப்
பிரியின் புணராது புணர்வே ஆயிடைபிரிந்துசென்றால் நம்மைச் சேராது தலைவியின் கூட்டம்; இந்த இரண்டில்,
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்குபிரிந்து சென்றாலும் செல்லாவிட்டாலும் எனக்கு நல்லது செய்வதற்கே
உரியை வாழி என் நெஞ்சே பொருளேநீ உரியையாவாய் வாழ்க என் நெஞ்சமே! பொருளும்
5       வாடா பூவின் பொய்கை நாப்பண்வாடாத பூவையுடைய பொய்கையின் நடுவில்
ஓடு மீன் வழியின் கெடுவ யானேநீரைக் கிழித்தோடும் மீனின் தடம் மறைந்து அழிவதைப் போலக் கெட்டுப்போகும்; நானும்
விழு நீர் வியல்_அகம் தூணி ஆகவிழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்அந்த அளவில் ஏழு அளவு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண்பொன்குழைகளோடு மாறுபட்ட சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களின்
10      அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்விருப்பமுடனான இனிதான பார்வையினால் வெல்லப்பட்டேன்;
எனைய ஆகுக வாழிய பொருளேபொருள் எத்தன்மையதாயினும் ஆகுக; யாரிடமாவது வாழ்ந்துவிட்டுப்போகட்டும் அந்தப் பொருள்.
  
# 17 குறிஞ்சி# 17 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்
  
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்துவிடியற்காலத்தில் மழை பெய்த நல்ல நெடிய குன்றத்தில்
மால் கடல் திரையின் இழிதரும் அருவிகரிய கடலின் அலையைப் போல வீழ்கின்ற அருவியையுடைய
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கிஅகன்ற பெரிய கானத்தின் உறைந்திருக்கும் அழகை நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்புஅடக்கவும், அடக்கும் எல்லைக்குள் நில்லாமல் நீர் பெருகி
5       ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னைமிகுந்த அழகினைக் கொண்ட குளிர்ச்சியான கண்கள் கலங்கி அழுதலால், என் அன்னை
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு எனஎதனால் அழுகின்றாய்? உனது ஒளிறும் பற்களுள்ள வாயை முத்தமிடுவேன் என்று
மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்துமென்மையான இனிய சொற்களைக் கூறப்போக, மிக வேகமாக,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்துஉயிரினும் சிறந்த நாணத்தை அறவே மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்சொல்லப்போய் நிறுத்திவிட்டேன் தோழி! மலைச் சாரலில்
10      காந்தள் ஊதிய மணி நிற தும்பிகாந்தள் மலரை ஊதிய நீல மணி போன்ற தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்இனிதாகத் தொடுக்கப்பட்ட நரம்பினைக் கொண்ட யாழைப்போல ஒலிக்கும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவேவானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று – 
  
# 18 பாலை# 18 பாலை பொய்கையார்
  
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருத்தப்படும் உள்ளத்திலிருக்கும் பலவாகிய கவலை நீங்கும்படி
வருவர் வாழி தோழி மூவன்வந்துவிடுவார், வாழ்க தோழியே! மூவன் என்பானின்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
5       தெறல் அரும் தானை பொறையன் பாசறைகடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர்நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
திரை தபு கடலின் இனிது கண்படுப்பஅலைகள் ஓய்ந்த கடலைப் போல இனிதாகத் துயிலுமாறு
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைமதம் குறைந்த சினம் தணிந்த யானையின்
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்னபெரிதாய் நிலைத்துள்ள ஒரு கொம்பினைப் போன்று
10      ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரேஒன்றாக ஒளிறும் அருவியையுடைய குன்றைக் கடந்து என்றோர் – 
  
# 19 நெய்தல்# 19 நெய்தல் நக்கண்ணையார்
  
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்இறாலின் முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழைசுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்புபெரிய களிற்றின் தந்தத்தைப் போன்ற அரும்புகள் முதிர்ந்து
நன் மான் உழையின் வேறுபட தோன்றிநல்ல உழைமானின் சாய்ந்த கழுத்தைப் போல மாறுபடத் தோன்றி
5       விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்பவிழாக்கொண்டாடும் களத்தைப் போன்று மணக்கும் வலிமைவாய்ந்த கடலைச் சேர்ந்த தலைவனே!
இன மணி நெடும் தேர் பாகன் இயக்கவரிசையான மணிகள் கொண்ட நெடிய தேரினை அதன் பாகன் இயக்க
செலீஇய சேறி ஆயின் இவளேசென்று உனது ஊரை அடைவாய், இருப்பினும், இங்கிருக்கும் தலைவி
வருவை ஆகிய சில் நாள்நீ மீண்டும் வருவதற்கிடையுள்ள சில நாட்களும்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மேவாழமாட்டாள் என்பதனை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
  
# 20 மருதம்# 20 மருதம் ஓரம்போகியார்
  
ஐய குறு_மகள் கண்டிகும் வைகிஐயனே! ஓர் இளையவளைக் கண்டேன்; நேற்று இரவில் கிடந்து
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்தலைவனின் மார்பில் துயின்று, மலர்ந்த கொத்துக்களையுடைய
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்தேன் ஒழுகும் மராமரத்தின் பூக்கள் மணக்கும் கூந்தலானது
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வரவலமிடமாய் அசைய, கட்டியிருந்த ஆடை முன்னும் பின்னும் ஆட,
5       செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில்செறிவான வளையல்கள் ஒலிக்கக் கைகளை வீசி, தெருவில்
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிபூப்போன்ற மையுண்ட கண்கள் சுழலப் பார்த்துக்கொண்டே
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல்நடந்து சென்றாள், வாழ்க அந்தப் பெண்! நுண்மையான பல
சுணங்கு அணிவு_உற்ற விளங்கு பூணள்அழகுத்தேமல் படர்ந்து ஒளிவிடும் பூண்களை அணிந்த,
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழைமார்பு முயக்குதலால் நெறிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய,
10      பழம் பிணி வைகிய தோள் இணைகாதலன் பிரிவு என்னும் பழைய துயரம் தங்கிய இரண்டு தோள்களையுடைய,
குழைந்த கோதை கொடி முயங்கலளேகுழைந்த மாலையினையும் உடைய கொடி போன்ற அவள்தான் உன்னைத் தழுவினள் போலும்!
  
# 21 முல்லை# 21 முல்லை  மருதனிள நாகனார்
  
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்விரைந்த ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇஇடுப்பில் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு
வேண்டு அமர் நடையர் மென்மெல வருகவேண்டிய விருப்பமுடைய நடையினராய் மெல்லமெல்ல வரட்டும்;
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஇதுவரை தீண்டாத கூரிய முள்ளையுள்ள சாட்டைக்கோலால் தீண்டி நாம் செல்வதற்கு
5       ஏ-மதி வலவ தேரே உது காண்விரைந்து செலுத்துவாயாக! வலவனே! தேரினை, இங்கே பார்!
உருக்கு_உறு நறு நெய் பால் விதிர்த்து அன்னஉருக்கிய நறுமணமுள்ள நெய்யில் பாலைத் தெளித்தாற்போல்
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிஅரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட
காமரு தகைய கான வாரணம்காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
10      புலரா ஈர் மணல் மலிர கெண்டிபுலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
நாள்_இரை கவர மாட்டி தன்அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
பேடை நோக்கிய பெரும் தகு நிலையேதன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை – 
  
# 22 குறிஞ்சி# 22 குறிஞ்சி  நல்வேட்டனார்
  
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினைகுறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின்
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்திமுதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு
கல்லா கடுவனொடு நல் வரை ஏறிஅவ்வாறு பறிப்பதை அறியாத ஆண்குரங்கோடு நல்ல மலையில் ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்உள்ளங்கை நிறையக் கசக்கித் தன் கையிலே கொண்டு, தன்னுடைய
5       திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கிசுருக்கம்விழுந்த கன்னத்து மயிர்களையுடைய வளைந்த உள்வாய் நிறைய அமுக்கிக்கொண்டு
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்வானிலிருந்து விழுகின்ற மழையில் நனைந்த முதுகினையுடையவாய், நோன்பிருப்போர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்கையில் வாங்கிய உணவுடன் குந்தி இருப்பதைப் போல காட்சியளிக்கும் நாட்டையுடையவன்
வந்தனன் வாழி தோழி உலகம்வந்துவிட்டான், வாழ்க தோழியே! உலகமானது
கயம் கண் அற்ற பைது அறு காலைகுளங்கள் காய்ந்துபோகுமாறு பசுமை நீங்கிய பொழுது
10      பீளொடு திரங்கிய நெல்லிற்குஇளங்கதிர்களோடு வாடிப்போன நெல்லுக்கு
நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கேநள்ளென்ற நடுஇரவில் மழை பொழிந்தது போல – 
  
# 23 குறிஞ்சி# 23 குறிஞ்சி கணக்காயனார்
  
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவேவளைகள், மேலே செறிக்கபட்டதால், பழிச்சொற்களை மறைக்க, தோள்கள் பழிநீங்கப்பெற்றன;
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொளகளைப்பும் மேனியில் தெரிவதற்குக் காரணம் ஒன்று உடைத்தானது; காவல் மிகுந்து
அன்னை காக்கும் தொல் நலம் சிதையஅன்னை காக்கும் பழைய பெண்மைநலம் சிதையும்படி
5       காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்காணுந்தொறும் அழுதலல்லாமலும், நெருங்கிய நீர்மிக்க
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறைமுத்துக்கள் விளையும் கடற்பரப்பினையுடைய கொற்கை நகரத்துத் துறையின் முன்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்சிறிய பசிய இலைகளைக் கொண்ட செப்பம் அமைந்த நெய்தலின்
தெண் நீர் மலரின் தொலைந்ததெளிந்த நீரிலுள்ள மலர் போல அழகுகுலைந்தன
கண்ணே காமம் கரப்பு அரியவ்வேகண்களே; காமத்தை மறைப்பது அரியது.
  
# 24 பாலை# 24 பாலை கணக்காயனார்
  
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டுநிலம் பிளவுபட கீழ்ச்சென்ற வேர்களையுடைய பெரிய கிளைகளையும்
உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின்உடும்பு அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபுஆட்டம் முடிந்த பந்து போல கிளையில் ஒட்டிய காம்பு அற்றுப்போய்
கம்பலத்து அன்ன பைம் பயிர் தாஅம்கம்பலத்தை விரித்தாற்போன்ற பசிய பயிர்மீது பரந்துகிடக்கும்
5       வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடைவிளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்
சேறும் நாம் என சொல்ல சே_இழைசெல்வேன் நான் என்று தலைவன் சொல்ல, சிவந்த இழைகளை அணிந்தவளே!
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையேநல்லது என்று விரும்பினாய்! நல்லதையே செய்தாய்!
செயல்படு மனத்தர் செய்_பொருட்குசெயல்புரிவதையே நினைத்தவராய் ஈட்டுதற்குரிய பொருளுக்காகப்
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பேபிரிந்து செல்வர் ஆடவர்; அவ்வாறு செல்லவைப்பது அந்தப் பொருளின் பண்பாகும்
  
# 25 குறிஞ்சி# 25 குறிஞ்சி பேரிசாத்தனார்
  
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்னஅழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தேய்த்தது போல
செம் வரி இதழ சேண் நாறு பிடவின்சிவந்த வரிகளைக் கொண்ட இதழ்களையுடைய நெடுந்தொலைவுக்கும் மணக்கும் பிடவமலர்களின் 
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்மணமிக்க தாதுக்களில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம்பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும்
5       வள மலை நாடன் நெருநல் நம்மொடுவளமிக்க மலைநாட்டினன் நேற்று நம்மோடு
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇகிளைத்தல் மிகுந்த சிறுதினையில் வந்து விழும் கிளிகளை ஓட்டிக்கொண்டு தங்கியிருந்தவன்
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்ததுதன் குறையைக் கூறுவதற்கேற்ற வாய்ப்பினைப் பெறாதவனாகி அகன்று போனான், அப்படிச் சென்றது
அல்லல் அன்று அது காதல் அம் தோழிநமக்குத் துன்பம் தருவதன்று, அன்புடைய தோழியே!
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதாதேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
10      வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சிவண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியைக்
கண்டும் கழல் தொடி வலித்த என்கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றேபண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது.
  
# 26 பாலை# 26 பாலை சாத்தந்தையார்
  
நோகோ யானே நெகிழ்ந்தன வளையேநோகின்றேன் நான்! நெகிழ்ந்தன வளையைகள்!
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரைசெம்மண் பூச்சுடைய புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய
விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டுமலைக் குன்றுகளை ஒத்து, அடுத்தடுத்து நிற்கும் நெடிய நெற்கூடுகளில் இருக்கும்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியநிறைந்த நெல்லையுடைய தாய்வீட்டை விட்டு,
5       சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்ஞாயிறு முற்றவும் எரிக்க, வாடிப்போன செழுமையான காய்களைக் கொண்ட
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடுவளைந்து முதிர்ந்த பலாமரங்கள் நிற்கும் காட்டுவழியில் உம்மோடு
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்றுகேடுகாலத்துத் துணையாகி இவள் வந்தது தவறோ? கூர்மையான பற்களையும்,
பொன் பொதிந்து அன்ன சுணங்கின்பொன்னைப் பொதிந்தாற்போன்ற தேமல்புள்ளிகளையும்,
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கேகரிய சூழ்ந்த கூந்தலையும் கொண்ட பெரிய தோள்களையுடைவளுக்காக – 
  
# 27 நெய்தல்# 27 நெய்தல் குடவாயிற் கீரத்தனார்
  
நீயும் யானும் நெருநல் பூவின்நீயும் நானும் நேற்று பூக்களில் உள்ள
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பிநுண்ணிய தாதுக்களில் திளைக்கும் வண்டுகளை ஓட்டி
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைமோதி அழியும் அலைகள் குவித்த வெள்ளிய மணலைக் கொண்டு அடைத்த கரையினில் உள்ள
கழி சூழ் கானல் ஆடியது அன்றிகழியினைச் சூழ இருக்கும் கடற்கரைச் சோலையில் ஆடியது அன்றி
5       கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்மறைவாக நாம் செய்தது ஒன்றும் இல்லை; அப்படி ஒன்று இருந்தாலும்
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும்அது பரவி, பிறரும் அதை அறியவும் இல்லை; பெரிதாக
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறுஎதனை எண்ணிக்கொண்டிருக்கிறாள் நம் அன்னை? பொய்கைகள்தோறும்
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம்இறால் மீனை நிரம்ப உண்ட குருகுகள் ஒலிக்க, சுறாமீன்கள்
கழி சேர் மருங்கின் கணை கால் நீடிகழிகளில் சேர்ந்திருக்கும் பக்கங்களில் கணைபோன்ற தண்டுகள் நீண்டு
10      கண் போல் பூத்தமை கண்டு நுண் பலகண் போன்று பூத்திருத்தலைக் கண்டு , நுண்ணிய பல
சிறு பாசடைய நெய்தல்சிறிய பசிய இலைகளையுடைய நெய்தல் பூக்களைப்
குறுமோ சென்று என கூறாதோளேபறிக்கச் செல்லுங்கள் என்று கூறாதிருக்கிறாளே!
  
# 28 பாலை# 28 பாலை முதுகூற்றனார்
  
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும்என் கையைக் கொண்டு தன் கண்களை ஒற்றிக்கொண்டும்,
தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்தன் கைகளைக் கொண்டு என்னுடைய நல்ல நெற்றியை நீவிவிட்டும்
அன்னை போல இனிய கூறியும்அன்னை போல இனியசொற்களைக் கூறினாலும்,
கள்வர் போல கொடியன் மாதோகள்வர் போலக் கொடியவன் அந்தோ!
5       மணி என இழிதரும் அருவி பொன் எனநீலமணியோ என வீழும் அருவியையுடைய, பொன்னோ என்னும்படி
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்துவேங்கை மலர்கள் உதிர்ந்துகிடக்கும், உயர்ந்த மலைகளின் சரிவில்
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில்ஆடுகின்ற கழைகள் உயர்ந்து நிற்கும் பசிய கணுக்களைக் கொண்ட மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிஓடுகின்ற மேகங்களைக் கிழிக்கும், தலையில்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனேகொடுமுடிகள் உயர்ந்த பாறை மலைகளின் உரிமையாளன்.
  
# 29 பாலை# 29 பாலை பூதனார்
  
நின்ற வேனில் உலந்த காந்தள்நின்று காயும் வேனிற்காலத்தில் உலர்ந்துபோன காந்தள் பூக்களைக்கொண்ட,
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅதுநெருப்பாய் ஒளிரும் நீண்ட வெளியில் நிழலுள்ள ஓர் இடம் இல்லாமல்,
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து எனகுட்டிகளை ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என
மான்ற மாலை வழங்குநர் செகீஇயஇருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
5       புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறிஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன்நடந்துசெல்ல எங்கனம் ஆற்றலுள்ளவள் ஆனாளோ அவள்? நான் அவளுடைய
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் எனவடிவமைந்து உயர்ந்திருக்கும் இளமையான முலைகள் நோகுமோ என்று
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்எண்ணி இறுக்கிப்பிடித்திருந்த கையை நெகிழ்த்த அந்த அளவிற்கு, அவள் தனது
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழபெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்கள் ஈரமுற்றனவாய்க் கலங்க 
10      வெய்ய உயிர்க்கும் சாயல்வெம்மையோடு பெருமூச்செறியும் மென்மையையும்
மை ஈர் ஓதி பெரு மட தகையேகரிய நெய்ப்பூச்சும் கொண்ட கூந்தலையுடைய பெருமை மிக்க மடப்பம் கொண்ட என் மகள் –
  
# 30 மருதம்# 30 மருதம் கொற்றனார்
  
கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோகண்டேன் தலைவனே! கண்டு என்ன செய்ய இயலும்?
பாணன் கையது பண்பு உடை சீறியாழ்பாணன் கையிலிருக்கும் பண்பமைந்த சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்புதிதாய்ப் பூத்த மலரினைக் கண்ட வண்டைப் போல இம்மென ஒலிக்கின்ற
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்நீ எழுந்தருளும் தெருவில் உன்னை எதிர்பார்த்து நோக்கி, உனது
5       மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்மார்பின் மாலையைப் பற்றிக்கொண்ட மாட்சிமைகொண்ட இழையணிந்த பெண்டிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனிகவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன்,
கால் ஏமுற்ற பைதரு காலைகாற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்புகடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலர் கொள் பலகை போலபலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
10      வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையேஅவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை –
  
# 31 நெய்தல்# 31 நெய்தல் நக்கீரனார்
  
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கிபெரிய, கரிய கடற்பரப்பின் நீர் தெளிந்திருந்த நிலையை நோக்கி
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கைசிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை,
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்பரந்த பெரிய குளிர்ச்சியையுடைய கழியைத் துழாவி மீனைப் பிடித்து, பசிய கால்களையுடைய
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும்தான் விரும்பும் பெடையை அழைத்துக் கொடுக்கும்
5       சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதேசிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்களைக் கொண்ட துறை இனிதாக இருந்தது;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்துபெரிய தனிமைத்துயருற்ற உள்ளத்தோடு பலவற்றையும் நினைந்து
யானும் இனையேன் ஆயின் ஆனாதுநானும் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்; கணக்கில்லாமல் 
வேறு பல் நாட்டில் கால் தர வந்தவேறு பல நாடுகளினின்றும் காற்றுத் தர வந்துசேர்ந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்பல வகைப்பட்ட பண்டங்கள் வந்து இறங்கும் நிலாவையொத்த மணற்பரப்பிலுள்ள
10      நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகுநெடிய கிளைகளையுடைய புன்னைமரத்தில் முதிர்ந்த சூல்கொண்ட வெள்ளைக் குருகு,
உலவு திரை ஓதம் வெரூஉம்உலவுகின்ற அலைகளைக்கொண்ட கடற்பெருக்கைக் கண்டு அஞ்சும்
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கேஓயாது இயங்கும் நீர்ப்பரப்பினையுடைய தலைவனோடு நான் மணவாததற்கு முன்னர் – 
  
# 32 குறிஞ்சி# 32 குறிஞ்சி கபிலர்
  
மாயோன் அன்ன மால் வரை கவாஅன்மாயவனான கண்ணனைப் போன்ற கரிய பெரிய மலையின் உயரத்துச் சரிவினில்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவிபலராமனைப் போன்ற ஒளிவிடும் வெள்ளிய அருவியையுடைய
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்;
5       நீயும் கண்டு நுமரொடும் எண்ணிநீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும்
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்குஅறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு
அரிய வாழி தோழி பெரியோர்அரியது ஆகும், வாழ்க தோழியே! பெரியவர்கள்
நாடி நட்பின் அல்லதுமுதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தேநட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து –
  
# 33 பாலை# 33 பாலை இளவேட்டனார்
  
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரைமறைகின்ற ஞாயிறு சேர்ந்த பிளந்த வாய்ப்பகுதியையுடைய நீண்ட மலைத்தொடரின்
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலைசரளைநிலத்தைச் சேர்ந்த சிறுகுடியில் பரவிய மாலையில்
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துதனித்திருப்போர் சேர்ந்துண்ணும் புல்லிய மன்றத்தில்
கல் உடை படுவில் கலுழி தந்துபாறையை உடைத்த பள்ளத்தில் இருக்கும் கலங்கல் நீரைத் தந்து
5       நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்பழுப்பேறிய ஆடையையுடைய, செம்மையாக அம்பினைத் தொடுத்திருக்கும் மறவர்கள்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடைவழியைப் பார்த்து அமர்ந்திருக்கும் அஞ்சத்தக்க பாதையினில்
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்செல்ல எண்ணுகிறார் அவர் என்றால் அதை மறுப்பதற்கு
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் எனஆற்றலுள்ளவரோ மெல்லிலாய்! நாம், என்று
10      விம்மு_உறு கிளவியள் என் முகம் நோக்கிஎன் முகத்தைப் பார்த்து விம்மிக்கொண்டே சொல்பவளின்
நல் அக வன முலை கரை சேர்புநல்ல மார்பிலுள்ள அழகிய முலைகள் என்னும் கரையைச் சேர்ந்து
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணேநிரம்பி வழியும் நீர் பரவியது மலரைப் போன்ற அவளது அழகிய கண்களிலிருந்து – 
  
# 34 குறிஞ்சி# 34 குறிஞ்சி பிரமசாரி
  
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்தகடவுள் தன்மையுள்ள மலைச் சுனையில், இலைகளை விலக்கிக்கொண்டு மலர்ந்த
பறியா குவளை மலரொடு காந்தள்யாரும் பறிக்காத குவளை மலருடன், காந்தளின்
குருதி ஒண் பூ உரு கெழ கட்டிகுருதி நிறத்ததாகிய ஒள்ளிய பூவை அச்சம்தோன்றும்படியாகக் கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்பெரிய மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர்
5       அருவி இன் இயத்து ஆடும் நாடன்அருவியின் ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்முயக்கத்தினால் ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்துநீ வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடிகார்காலத்து மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்!
10      கடவுள் ஆயினும் ஆகநீ உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக,
மடவை மன்ற வாழிய முருகேஆனால் நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே!
  
# 35 நெய்தல்# 35 நெய்தல் அம்மூவனார்
  
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைபொங்கிவரும் அலைகள் மோதுவதினால் ஏற்பட்ட சரிவான மணலைக் கொண்டு அடைத்தகரையில்
புன் கால் நாவல் பொதி புற இரும் கனிபுல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துதன் இனத்தைச் சேர்ந்தது என்று எண்ணி சூழ்ந்த தும்பியைப் பழமென்று நினைத்து
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்துபலகால்களைக் கொண்ட நண்டு பற்றிக்கொண்ட பிடிக்கு வருந்தி
5       கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்மீட்டப்படாத நரம்பாய் இமிர்ந்து ஒலிக்கும் ஆரவாரத்தால்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்இரையைத் தெரிந்துகொண்ட நாரை அதனைக் கொத்தியபின் விடுவிக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்துறையைப் பொருந்திய மாந்தை நகரத்தைப் போன்ற இவளின் பெண்மைநலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்யமுன்பும் இப்படியேதான் இருந்தது, நீ காண்பாயாக ! 
உழையின் போகாது அளிப்பினும் சிறியபக்கத்திலிருந்து நீங்காமல் அருள்செய்தாலும், சிறிதளவு
10      ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர்கைதளர்ந்ததால் குறைந்த மேனியழகின் வேறுபாடோ? கள்ளுண்டு மகிழ்ந்தோர்க்கு
கள் களி செருக்கத்து அன்னகள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவேகாதல் களிப்புக் குறைவோ? இவள் கண் பசந்து தோன்றுவதற்குக் காரணம்?
  
# 36 குறிஞ்சி# 36 குறிஞ்சி சீத்தலைச் சாத்தனார்
  
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றைகுட்டையான கைகளையுடைய பெரிய புலியின் கொல்லுதலில் வல்ல ஆண்புலி
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கிஅழகிய நெற்றியையுடைய பெரிய பெண்யானை புலம்பும்படி தாக்கி
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம்ஆழமான நீரையுடைய அகன்ற இடத்தில் பெரிய களிற்றினைக் கொல்லும்
கல்_அக வெற்பன் சொல்லின் தேறிமலைநாட்டுத் தலைவனின் சொல்லை நம்பி
5       யாம் எம் நலன் இழந்தனமே யாமத்துநாம் எம் பெண்மைநலத்தை இழந்தோம்!; நள்ளிரவிலும்,
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றிபுறங்கூறும் வாயையுடைய மகளிரின் வம்புமொழிகளோடு சேர்ந்து
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்துஉயர்வற்ற தீய சொற்களை கூறுவதற்குரிய பேச்சுக்களை மேற்கொண்டு,
ஆனா கௌவைத்து ஆகபொருந்தாத பழிச்சொற்களையுடையதாயிற்று என்றால்
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரேதான் எதை இழந்தது இந்த ஆர்ப்பரிக்கும் ஊர்?
  
# 37 பாலை# 37 பாலை பேரிசாத்தனார்
  
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலைபின்னிக்கிடக்கும் சிறுதூறுகள் வாடிய அழிந்துபோன பழஞ் சிறப்புக்களைக் கொண்ட அகன்ற இடத்திலுள்ள
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணிகாய்ந்துபோன புல்லைத் தின்னும் ஆநிரைகளினின்றும் தனித்துப்போன ஒரு பசுவின் தெள்ளிய மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்றுமெல்ல இசைக்கும் காட்டுவழியில், கூர்மையான பற்களைக்கொண்ட
இவளொடும் செலினோ நன்றே குவளைஇவளோடு சென்றால் நலமாக இருக்கும்; குவளையின்
5       நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழநீர் சூழ்ந்த பெரிய மலர் போன்ற கண்கள் அழும்படியாக
கலை ஒழி பிணையின் கலங்கி மாறிஆண்மானைப் பிரிந்த பெண்மானைப் போலக் கலங்கி, மனம் மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம்அன்பு இல்லாதவராய்ப் பிரிந்துசென்றீராயின், என் பாரமாக
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்துஆவது அன்று இவளது அவலம்; பாம்பின்
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்புவருத்துகின்ற அரிய தலை மோதுண்டு கெட, வலமாக எழுந்து
10      ஆர் கலி நல் ஏறு திரிதரும்நிறைந்த முழக்கத்தையுடைய பெருத்த இடி இடிக்கும்
கார் செய் மாலை வரூஉம் போழ்தேகார்காலத்து மாலைக்காலம் வரும் போது – 
  
# 38 நெய்தல்# 38 நெய்தல் உலோச்சனார்
  
வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்பமீன்வேட்டை பொய்க்காமல், வலையினால் கிடைக்கும் வளம் சிறந்து விளங்க,
பாட்டம் பொய்யாது பரதவர் பகரதங்களின் பெரும் பங்கு பொய்க்காமல், பரதவர் விலைகூறி விற்க,
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழுபெருத்த ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும், தேரையுடைய
5       மெல்லம்புலம்பன் பிரியின் புல்லெனநம் நெய்தல்நிலத் தலைவன் பிரிந்துசென்றால், பொலிவிழந்து
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்வெறிச்சோடிப்போய்விடுகிறதே, தோழி! கலங்கலான நீரைக் கொண்ட
கழி சூழ் படப்பை காண்ட_வாயில்கழிகள் சூழ்ந்த தோட்டங்களையுடைய காண்டவாயில் என்னும் நம் ஊரில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலிஒலிக்கின்ற காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி
பெண்ணை இவரும் ஆங்கண்பனைமரங்கள் வளர்ந்து உயரும் இடத்தில்
10      வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரேவெள்ளிய மணற் பரப்புகள் உள்ள எம்முடைய ஆரவாரமிக்க ஊர் –
  
# 39 குறிஞ்சி# 39 குறிஞ்சி மருதனிளநாகனார்
  
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்நான் ஒரு சொல் சொன்னால் அதற்கு எதிர்ச்சொல் ஏதும் கூறமாட்டாய்; உனது
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமெனஅழகிய முகம் கவிழ்ந்து நாணுகின்றாய்; விரைவாகக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோகாமம் கைமீறிப்போனால் அதனைத் தாங்கிக்கொள்ளுதல் எளிதோ?
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்திவளைந்த நிறக்கோடுகளைக் கொண்ட பெரிய முதுகு நடுங்கக் குத்திப்
5       புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்புலியை விளையாட்டாகக் கொன்ற புலவு நாறும் யானையின்
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின்நுனிக் கொம்பினைப் போன்று ஓரங்கள் சிவந்துபோன உன்
கண்ணே கதவ அல்ல நண்ணார்கண்கள் மட்டுமா சினமிகுந்தன? அல்ல; பகைவர்கள்
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டுகோட்டையின் உச்சி மதிலிலே இருக்கவும், அவரை வென்று அவரின் முரசைக் கைப்பற்றி
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்அவர் காத்துநின்ற அரணையும் வென்ற அழிக்கின்ற போரினையுடைய செழியனின்
10      பெரும் பெயர் கூடல் அன்ன நின்பெரும் புகழ்பெற்ற கூடல்மாநகரைப் போன்ற உன்
கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கேதொய்யிலால் கரும்பு வரைந்த தோள்களும் உடையன என்னை வருத்துதலை.  
  
# 40 மருதம# 40 மருதம் கொண்மா நெடுங்கோட்டனார்
  
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்டநீண்ட நாவினைக்கொண்ட ஒள்ளிய மணி, காவலுள்ள மனையில் ஒலிக்க,
குரை இலை போகிய விரவு மணல் பந்தர்ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்பெரும்பாணர்கள் காவலிருக்க, ஒரு பக்கத்தில்
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்பதிருந்திய இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க,
5       வெறி_உற விரிந்த அறுவை மெல் அணைநறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்சஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணிவெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கைபசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்தசிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
10      நள்ளென் கங்குல் கள்வன் போலநள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன் துறை ஊரனும் வந்தனன்அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறேசிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால்.
  
# 41 பாலை# 41 பாலை இளந்தேவனார்
  
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்தசிறிய கண்ணையுடைய யானையின் பருத்த கால்கள் எற்றியதால் ஏற்பட்ட
வெண் புற களரி விடு நீறு ஆடிவெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயகாட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்ல
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட,
5       நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோநெடுந்தொலைவு சென்று வருந்துவர்;
எல்லி வந்த நல் இசை விருந்திற்குஇரவில் வந்த நல்ல புகழ்படைத்த விருந்தினர்க்கு
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்டபொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய் பெய்து சமைத்த
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிகொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்
சிறு நுண் பல் வியர் பொறித்தசிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் உண்டாகப்பெற,
10      குறு நடை கூட்டம் வேண்டுவோரேகுறுகுறுவென நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர்-
  
# 42 முல்லை# 42 முல்லை கீரத்தனார்
  
மறத்தற்கு அரிதால் பாக பல் நாள்மறக்க முடியாதது பாகனே! பல நாள்கள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயவறட்சியுற்று வருந்திய உயிர்கள் தத்தமக்குரிய தொழிலை மேற்கொள்ளுமாறு
பழ மழை பொழிந்த புது நீர் அவலதொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினைநாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட
5       மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால்மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்; அதனால்
ஏகு-மின் என்ற இளையர் வல்லேசீக்கிரம் போங்கள் என்று ஏவிய இளையர் விரைவில் சென்று
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லெனவீட்டில் நுழைந்து வரவை அறிவிக்க, அதுவரை நிதானமாக
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇநீர்விட்டுக் கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி
சில் போது கொண்டு பல் குரல் அழுத்தியஒருசில பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட
10      அ நிலை புகுதலின் மெய் வருத்து_உறாஅஅவ்வேளையில் நான் வீட்டுக்குள் சென்று புக, தன் மெய் வருந்தும்படி வந்து
அவிழ் பூ முடியினள் கவைஇயபூக்கள் விழும்படி அவிழ்ந்த கூந்தலையுடையவளாய் என்னை அணைத்துக்கொள்ள
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையேஅந்த இளமை ததும்பும் சிறந்த காதலி மகிழ்ந்து என் வரவைக் கொண்டாடிய நிலை-
  
# 43 பாலை# 43 பாலை எயினந்தையார்
  
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்வெண்மையான ஆடையை விரித்துவிட்டாற் போன்று வெயில் ஒளிரும் வெப்பம் உள்ள
என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன்கோடை நீடிய மலையின் உச்சிச் சரிவில்
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சிமிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டுநன்கு உண்டு எஞ்சிய மிச்சம், நெடுந்தொலைவில் உள்ள வேற்று நாட்டுக்குச் செல்லும்
5       அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்அரிய பாலை வழியில் செல்வோர்க்கு உண்ணும் உணவாக ஆகும்
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கேவெம்மையான அரிய வழியில் செல்லுதல் உமக்கு
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கேஉடல் பூரிக்கும் உவகை தருவதாகின்றது; இவளுக்கோ,
அஞ்சல் என்ற இறை கைவிட்டு எனஅஞ்சவேண்டாம் என்று கூறிய வேந்தன் கைவிட்டானாக,
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்சிறிய கண்ணையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே தங்கியிருக்க,
10      களையுநர் காணாது கலங்கிய உடை மதில்தன் துன்பத்தைக் களைவாரைக் காணாமல் கலங்கிய, உடைந்த மதிலாகிய
ஓர் எயின் மன்னன் போலஒரே ஒரு கோட்டையை உடைய குறுநில மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டேமனம் அழிவுபட்டது நீ பிரிவதைக் கேட்டு. 
  
# 44 குறிஞ்சி# 44 குறிஞ்சி பெருங்கௌசிகனார்
  
பொரு இல் ஆயமோடு அருவி ஆடிஒப்பற்ற தோழியருடன் அருவியில் நீராடி,
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண்அருவிநீர் அலைத்தலால் சிவந்துபோன பெரிய அமர்ந்த குளிர்ந்த கண்களில்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கியாரையும் குறித்து நோக்காத பார்வையுடன் மெல்நகையை நமக்குத் தந்து
மனை வயின் பெயர்ந்த_காலை நினைஇயர்தன் வீட்டுக்குச் சென்றுவிட்ட பின்னர் நினைக்கின்றாய்!
5       நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்தஉனக்கோ அவள் அறியத் தகுந்தவள் எனது நெஞ்சே? கொல்லைப்புறத்தில்
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிரநீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பலகொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில்பெருத்த கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள
குட காய் ஆசினி படப்பை நீடியகுடம்போன்ற காய்களைக் கொண்ட ஆசினிப்பலாத் தோப்பின் நீண்ட
10      பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்துபலவாக இருக்கும் மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள மினிமினிகளின் வெளிச்சத்தில்
செல் மழை இயக்கம் காணும்வானில் செல்கின்ற மேகங்களின் ஓட்டத்தைக் காணும்
நன் மலை நாடன் காதல் மகளேநல்ல மலையையுடைய நாடனின் காதல் மகளானவள்-
  
# 45 நெய்தல்# 45 நெய்தல் உலோச்சனார்
  
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடிஇவளோ, கடற்கரைச் சோலையை அடுத்துள்ள அழகிய சிறுகுடியில் இருக்கும்,
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்குநீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து
மீன் எறி பரதவர் மகளே நீயேமீனைப் பிடிக்கும் பரதவர் மகள் ஆவாள்! நீயோ,
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்
5       கடும் தேர் செல்வன் காதல் மகனேவிரைந்து செல்லும் தேர்களையுடைய செல்வரின் அன்புக்குரிய மகன்!
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டிகொழுப்புள்ள சுறாமீனை அறுத்த துண்டங்களைக் காயவைப்பதற்காக,
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோகூட்டமாக வரும் பறவைகளை விரட்டும் எமக்கு உயர்ந்த நலன்கள் என்ன வேண்டியுள்ளது?
புலவு நாறுதும் செல நின்றீமோஎம்மிடம் புலால் நாறுகிறது. தள்ளி நில்லுங்கள்,
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கைபெரிய கடல்நீரையே விளைவயலாகக் கொண்ட எமது சிறுத்த நல்ல வாழ்க்கை
10      நும்மொடு புரைவதோ அன்றேஉம்மோடு ஒத்துப்பார்க்கும் அளவுக்குச் சிறப்பானதன்று,
எம்மனோரில் செம்மலும் உடைத்தேஎம் பரதவர் குடியிலும் உம்மைப் போல் உயர்வானவர்கள் உண்டு. 
  
# 46 பாலை# 46 பாலை கோட்டம்பலவனார்
  
வைகல்-தோறும் இன்பமும் இளமையும்ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்துஎய்யப்பட்ட அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்
காணீர் என்றலோ அரிதே அது நனிஅதனை நீவிர் அறியமாட்டீர் என்று கூறுவது இயலாது. அதனை மிகவும்
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழிபேணுகின்ற தன்மையர் ஆவீராக; என் தோழியின்
5       பூண் அணி ஆகம் புலம்ப பாணர்பூண்கள் அணிந்த மார்புகள் அவற்றை இழந்து தனிமையில் வாட, பாணர்கள்
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனிஐயமுறும் வகையில் கொன்றையின் அழகிய இனிய கனிகள்
பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வரபறையை முழக்கும் குறுந்தடியைப் போன்று பாறைகளில் மோதுமாறு அசைய
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்துகொடிய காற்று வீசுகின்ற மூங்கில்கள் நிறைந்த வெளியில்
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்துதுன்பம் மிகுந்த அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து
10      நன் வாய் அல்லா வாழ்க்கைநன்மை வாய்த்தல் அல்லாத வாழ்விற்குரிய
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவேநிலையற்ற பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசெல்வேன் நான் என்று நீர் கூறுவதனால் –
  
# 47 குறிஞ்சி# 47 குறிஞ்சி நல்வெள்ளியார்
  
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடிபெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாதுஉடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தல் பாசடை புரையும் அம் செவிநெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யெனஇளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு, சட்டென
5       அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்ஆற்றுதற்கரிய புண்ணைப் பெற்றவர் போல வருந்தி இருக்கும்
கானக நாடற்கு இது என யான் அதுகானக நாடனுக்கு இங்கு இவ்வாறு நிகழ்கிறது என நான் அதனைக் குறித்துக்
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்துகூறினால் என்னாம் தோழி! என் நிலையை வேறுவிதமாக உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டிதெய்வம் வருத்தியதோ என அறியத்தக்க கழங்குகள் என் மாற்றத்தைக் காட்டியதால்
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்துஅதற்குத் தீர்வு வெறியாட்டயர்தலே என உணர்ந்த உள்ளத்துடன் ஆட்டை அறுத்து
10      அன்னை அயரும் முருகு நின்அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறேபொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாத நிலையை-
  
# 48 பாலை# 48 பாலை  பாலைபாடிய பெருங்கடுங்கோ
  
அன்றை அனைய ஆகி இன்றும் எம்அன்றைக்கு இருந்ததைப் போன்றே இன்றைக்கும் எமது
கண் உள போல சுழலும் மாதோகண்ணுக்குள் இருப்பது போலச் சுழல்கிறது!
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூசிறிய இதழ்களைக் கொண்ட கோங்கின் மெல்லிய இதழ்கள் குடைபோல் தோன்றும் மலர்கள்
வைகுறு_மீனின் நினைய தோன்றிவைகறைக் காலத்து வானத்து மீன்கள் என நினைக்குமாறு தோன்றி
5       புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடைகாட்டினை அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில்
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்‘கிடின்’ என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த மறவராகிய,
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாதுவடிவாகச் செய்யப்பட்ட அம்பினை இயக்குபவரை அஞ்சாது
அமர் இடை உறுதர நீக்கி நீர்போரிட்டு உறுதியாக அவரை விரட்டி, நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடேஎன்னுடைய உறவினர் தேடிவந்தபோது உம்மை ஒளித்துக்கொண்ட காடு-
  
# 49 நெய்தல்# 49 நெய்தல் நெய்தல் தத்தனார்
  
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்பெரிய அலைகள் கொழித்து உருவாக்கிய பாலின் நிறத்ததாகிய மணல்மேடுகளில் விளையாடும்
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றேவளைமகளிர் தம் இல்லத்தில் துயில் கொண்டுவிட்டதால் கடல்துறை தனிமையுடைதாயிற்று;
முடி வலை முகந்த முடங்கு இறா பாவைமுடிச்சிட்ட வலைகள் முகந்த முடங்கிய இறாமீன்கள் காய்வதை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றேஅவற்றின் மேல் விழும் பறவைகளை விரட்டுவதால் பகலும் கழிந்தது;
5       கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்துசுறாமீன்களைப் பிடித்த மகிழ்ச்சியையுடையவராய், தம் வேட்டையை விடுத்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனஎமது இல்லத்தோரும் மனையில் தங்கினர்; யாம் மனம் கலங்கினோம் என
சென்று யாம் அறியின் எவனோ தோழிசென்று நாம் அவன் கருத்தை அறியின் என்னாம் தோழி?
மன்ற புன்னை மா சினை நறு வீமன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
முன்றில் தாழையொடு கமழும்வீட்டு முற்றத்தில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்
10      தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கேதெளிந்த கடலையுடைய தலைவன் வாழும் சிறிய நல்ல ஊருக்கு – 
  
# 50 மருதம்# 50 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
  
அறியாமையின் அன்னை அஞ்சிஎன் அறியாமையினாலே, அன்னையே! உன்மேல் அச்சம்கொண்டு,
குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும் கொண்டவனாய்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை கையகப்படுத்தச் சென்றபோது
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடைநெடிய நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
5       நொதுமலாளன் கதுமென தாக்கலின்நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட,
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என“உன்னைக் கேட்பார் உண்டோ இல்லையோ, இதைத்தவிர்” என்று நான் கூற
யாணது பசலை என்றனன் அதன் எதிர்“அழகாக இருக்கிறது உன் பசலை” என்று கூறினான். அதற்கு மறுமொழியாக,
நாண் இலை எலுவ என்று வந்திசினே“உனக்கு வெட்கம் இல்லை, ஐயனே” என்று கூறிவந்தேன் –
செறுநரும் விழையும் செம்மலோன் எனவேண்டாதவரும் விரும்பும் வீறு கொண்டவன் என்று
10      நறு நுதல் அரிவை போற்றேன்மணமுள்ள நெற்றியை உடைய தலைவியே! அவனைப் போற்றேன் –
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே      மேல்எனது சிற்றறிவு பெரிதாயிருப்பதால் ஆராயாமல் துணிந்து – (அவ்வாறு கூறினேன்)