மதுரைக்காஞ்சி

சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரை
ஓங்கு திரை வியன் பரப்பின்உயர்ந்து எழும் அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும்
ஒலி முந்நீர் வரம்பு ஆகமுழக்கத்தையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு,
தேன் தூங்கும் உயர் சிமையதேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலை நாறிய வியன் ஞாலத்துமலைகள் முளைத்துஎழும் அகன்ற உலகத்தின்கண் –
வல மாதிரத்தான் வளி கொட்ப                5வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல,                                                              5
வியல் நாள்மீன் நெறி ஒழுகஅகன்ற நாள்மீன்கள் (தாம் நடக்கும்)பாதையில் ஒழுங்காக நடக்க,
பகல் செய்யும் செம் ஞாயிறும்பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும்
இரவு செய்யும் வெண் திங்களும்இரவில் (ஒளி)செய்யும் வெண்மையான திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்ககுற்றமற்றுத் தோன்றி விளங்க,
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க  10முகில் (தன் பெய்தல்)தொழிலை (வேண்டுங்காலத்தே செய்து)உதவ, (எல்லாத்)திசைகளும் தழைக்க,              10
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய(ஒரே)விதைப்பில் ஆயிரமாக வித்திய விதை விளைய,
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்தவிளைநிலங்களும் மரங்களும் பயன்தருதலை மேற்கொண்டு தழைப்ப,
நோய் இகந்து நோக்கு விளங்கபிணிகள் நீங்கி அழகு விளங்க,
மேதக மிக பொலிந்தமகிழ்ந்து நிற்க (மேம்பாடு தக), – (மிகவும் பொலிவுபெற்ற
ஓங்கு நிலை வய களிறு             15உயர்ந்த நிலையையுடைய வலிமைமிக்க திசையானைகள்)                                     15
கண்டு தண்டா கட்கு இன்பத்துபார்த்து (ஆசை)தணியாத கண்ணுக்கு இனிமையினையும்,
உண்டு தண்டா மிகு வளத்தான்உண்டு குறையாத மிகுந்த வளத்தையும்,
உயர் பூரிம விழு தெருவில்உயர்ந்த (இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும்,
பொய் அறியா வாய்மொழியால்பொய்மையே அறியாத (தங்களின்)வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு             20புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு                                                                20
நல் ஊழி அடி படரநல்ல ஊழிக்காலம் எல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க,
பல் வெள்ளம் மீக்கூறபல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட,
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருகஉலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே –
பிண கோட்ட களிற்று குழும்பின்பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிண வாய் பெய்த பேய்மகளிர்               25நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய                                                           25
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச்
பிணை யூபம் எழுந்து ஆடசெறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட,
அஞ்சுவந்த போர்க்களத்தான்அச்சந்தரும் போர்க்களத்தின்கண்
ஆண் தலை அணங்கு அடுப்பின்ஆண்களின் தலையால் செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில்
வய வேந்தர் ஒண் குருதி           30வலிமிக்க வேந்தருடைய ஒள்ளிய குருதியாகிய உலை                                              30
சின தீயின் பெயர்பு பொங்கவெகுளியாகிய நெருப்பில் மறுகிப் பொங்க,
தெறல் அரும் கடும் துப்பின்வெல்லுதற்கு அரிய கடிய வலியினையும்,
விறல் விளங்கிய விழு சூர்ப்பின்வெற்றி விளங்கிய சீரிய கொடும்தொழிலினையுமுடைய
தொடி தோள் கை துடுப்பு ஆகவீரவளையல்கள் அணிந்த தோளையுடைய கைகளே துடுப்பாக
ஆடுற்ற ஊன் சோறு                 35துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,                                                                35
நெறி அறிந்த கடி வாலுவன்இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)
அடி ஒதுங்கி பின் பெயரா(இட்ட)அடியை வாங்கிப் பின்போகாத
படையோர்க்கு முருகு அயரவீரர்க்கு வேள்விசெய்யும்படி,
அமர் கடக்கும் வியன் தானைபோரினை வெல்லும் அகன்ற படையினையுடைய
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின்     40தென்னவன் என்னும் பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய                             40
தொல் முது கடவுள் பின்னர் மேயபழைய முதிர்ந்த கடவுளின் வழித்தோன்றிய,
வரை தாழ் அருவி பொருப்பின் பொருநமலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே –
விழு சூழிய விளங்கு ஓடையசீரிய முகபடாத்தையுடைய, விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையுடைய
கடும் சினத்த கமழ் கடாஅத்துகடும் கோபத்தையுடைய, கமழுகின்ற மதநீரால்
அளறு பட்ட நறும் சென்னிய         45சேறுண்டான நறிய தலையையுடையவாய்                                                           45
வரை மருளும் உயர் தோன்றலமலையென்று (கண்டோர்)மருளும் உயர்ந்த தோற்றத்தினையுடைய,
வினை நவின்ற பேர் யானைபோர்த்தொழிலே பயின்ற பெரிய யானை
சினம் சிறந்து களன் உழக்கவும்வெகுளி மிகுந்து போர்க்களத்தில் பகைவரைக் கொன்றுதிரியவும்
மா எடுத்த மலி குரூஉ துகள்குதிரைப்படை தோற்றுவித்த மிகுந்த நிறத்தையுடைய புழுதி
அகல் வானத்து வெயில் கரப்பவும்   50விரிந்த வானத்தில் வெயிலை மறைக்கவும்,                                                    50
வாம் பரிய கடும் திண் தேர்தாவும் குதிரைகளையுடைய கடிய செலவினையுடைய திண்ணிய தேர்
காற்று என கடிது கொட்பவும்(சுழல்)காற்றுப் போன்று விரைந்து சுழலவும்,
வாள் மிகு மற மைந்தர்வாட்போரில் மிகுந்த வலிமை (கொண்ட)மைந்தர்கள்
தோள் முறையான் வீறு முற்றவும்(தம்)தோளால் முறையாகச் செய்யும் வெற்றி முற்றுப்பெறவும் –
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய   55இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ                             55
பொருது அவரை செரு வென்றும்பொருது அவரைப் போரில் வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்திவிளங்குகின்ற அருவிகளையுடைய மலைகளைக் கடந்து
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்காடுகளைப் பிளக்கும் மாறுபாட்டையுடைய போராற்றலால்,
உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின்உயர்ந்து ஓங்கிய சீரிய தலைமையினால்,
நிலம் தந்த பேர் உதவி            60நிலத்தைத் திருத்தித்தந்த பெரிய உதவியினையும் உடைய,                                       60
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல்பொன்னால் செய்த மாலையை அணிந்த நெடியோன் வழியில் வந்தவனே –
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்மரங்களைச் சுட்டு மலைகளை நொறுக்கி விழச்செய்யும்
நரை உருமின் ஏறு அனையைபெருமையினையுடைய இடிமின்னலின் இடி(முழக்கத்தைப்) போன்றவன் நீ,
அரும் குழு மிளை குண்டு கிடங்கின்சேர்தற்கரிய அடர்ந்த காவல்காட்டையும், ஆழ்ந்த கிடங்கினையும்,
உயர்ந்து ஓங்கிய நிரை புதவின்            65உயர்ந்து வளர்ந்த, வரிசையான குறுவாயில்களைக்கொண்ட                                 65
நெடு மதில் நிரை ஞாயில்நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு உமிழ் அயில் அருப்பம்அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தண்டாது தலைச்சென்றுதடைப்படாமல் மேற்சென்று,
கொண்டு நீங்கிய விழு சிறப்பின்கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு,
தென் குமரி வட பெருங்கல்         70தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,                                                 70
குண குட கடலா எல்லைகிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
தொன்று மொழிந்து தொழில் கேட்ப(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
வெற்றமொடு வெறுத்து ஒழுகியவெற்றியோடே செறிந்து நடந்த
கொற்றவர்தம் கோன் ஆகுவைமன்னர்க்கும் மன்னர் ஆவாய்,
வான் இயைந்த இரு முந்நீர்                75வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய                      75
பேஎம் நிலைஇய இரும் பௌவத்துஅச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
கொடும் புணரி விலங்கு போழவளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
கடும் காலொடு கரை சேரவேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடும் கொடி மிசை இதை எடுத்துநெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இன் இசைய முரசம் முழங்க          80இனிய இசையை உடைய முரசம் முழங்க,                                                          80
பொன் மலிந்த விழு பண்டம்பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாடு ஆர நன்கு இழிதரும்நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
ஆடு இயல் பெரு நாவாய்அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மழை முற்றிய மலை புரையமேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறை முற்றிய துளங்கு இருக்கை            85துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்,                                             85
தெண் கடல் குண்டு அகழிதெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சீர் சான்ற உயர் நெல்லின்சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
ஊர் கொண்ட உயர் கொற்றவ(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே –
நீர் தெவ்வு நிரை தொழுவர்நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு           90பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)                                                       90
வழங்கும் அகல் ஆம்பியின்(ஏற்றத்)தோடு மேலும் கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும்,                 
கயன் அகைய வயல் நிறைக்கும்குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற
மென் தொடை வன் கிழாஅர்மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்,
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணிகடா விடுபவர் எருதுகளுக்குப் பூணும் தெளிந்த மணியின் ஓசையும்,
இரும் புள் ஓப்பும் இசையே என்றும்        95பெரிய பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசையும், எந்த நாளும்                                  95
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல்(நீல)மணி போன்ற பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும்
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்பபரதவப் பெண்டிர் (ஆடும்)குரவைக் கூத்தின் ஓசையுடன் கூடி ஆரவாரிக்க –
ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்ஒரு பக்கத்தே, விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில்,
முழவு தோள் முரண் பொருநர்க்குமுழவு (போலும்)தோளினையுடைய (கல்வியால்)மாறுபடுதலையுடைய பொருநர்க்கு
உரு கெழு பெரும் சிறப்பின்               100அச்சம் பொருந்திய பெரிய சிறப்பினையுடைய                                                   100
இரு பெயர் பேர் ஆயமொடு(கன்றும் பிடியும் என்னும்)இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடன்                              
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்ஒளிர்கின்ற கொம்புகளையுடைய ஆண்யானைகளைக் கொடுத்தும்,
பொலம் தாமரை பூ சூட்டியும்பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டியும்,
நலம் சான்ற கலம் சிதறும்நன்மை அமைந்த அணிகலன்களைக் கொடுக்கும்
பல் குட்டுவர் வெல் கோவே         105பல குட்ட நாட்டு அரசரை வென்ற வேந்தனே –                                                   105
கல் காயும் கடு வேனிலொடுபாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்
இரு வானம் பெயல் ஒளிப்பினும்பெரிய மேகம் மழையை மறைத்துக்கொண்டாலும்,
வரும் வைகல் மீன் பிறழினும்(நாள்தோறும் முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும்,
வெள்ளம் மாறாது விளையுள் பெருகமிகுந்த நீர் மாறாது (வருகையினால்)விளைச்சல் பெருக,
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை              110நெற்கதிரின் ஓசையும், (அதனை)அறுப்பாரின் ஓசையும்,                                         110
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்பறவைகள் ஆரவாரித்து ஒலிக்கும் ஓசையும், என்றும்
சலம் புகன்று சுறவு கலித்தபகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற
புலவு நீர் வியன் பௌவத்துபுலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில்,
நிலவு கானல் முழவு தாழைநிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட
குளிர் பொதும்பர் நளி தூவல்              115குளிர்ந்த சோலையின் செறிந்த நீர்திவலையின் ஓசையும்,                                               115
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலைவரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,
இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடுபெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,
ஒலி ஓவா கலி யாணர்முழங்குதல் ஓயாத முழக்கத்தோடே புது வருவாயையுடைய
முதுவெள்ளிலை மீக்கூறும்முதுவெள்ளிலை (என்னும் ஊரில் வாழும்) – புகழப்படுகின்ற
வியன் மேவல் விழு செல்வத்து              120மிகுதியாய் விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய,                                                    120
இரு வகையான் இசை சான்ற(கல்வி, கேள்வி என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த   
சிறு குடி பெரும் தொழுவர்சிறிய ஊர்களின் பெரிய ஊழியர்கள்,
குடி கெழீஇய நால் நிலவரொடுகுடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பபழைமையைக் கூறி ஏவல் கேட்டுநிற்க;
கால் என்ன கடிது உராஅய்          125காற்றோ என்று சொல்லும்படி விரைந்து சென்று,                                                       125
நாடு கெட எரி பரப்பிபகைவர் நாடு கெடத் தீமூட்டி,                                                                     
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்துதலையாலங்கானம் என்கிற ஊரின்கண் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி,
அரசு பட அமர் உழக்கிஅரசர்கள் விழும்படி போர்செய்து,
முரசு கொண்டு களம் வேட்டமுரசைக்கொண்டு களவேள்வி வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே             130கொல்லுகின்ற ஆற்றல் மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே –                           130
நட்டவர் குடி உயர்க்குவை(உன்னுடன்)நட்புக் கொண்டவருடைய குடியை உயர்த்துவாய்,                                      
செற்றவர் அரசு பெயர்க்குவை(நீ)சினந்தவரின் அரசுரிமையை எடுத்துக்கொள்வாய்,
பேர் உலகத்து மேஎம் தோன்றிபெரிய நன்மக்களிடத்தே மேலாய்த் தோன்றுகையினாலே
சீர் உடைய விழு சிறப்பின்புகழையுடைய விழுமிய தலைமையினையும்,
விளைந்து முதிர்ந்த விழு முத்தின்        135(நன்றாக)விளைந்து முதிர்ந்த சீரிய முத்தினையும்,                                                  135
இலங்கு வளை இரும் சேரிபளிச்சிடும் சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும்,                                        
கள் கொண்டி குடி பாக்கத்துகள்ளை(யே) உணவாகக்கொண்டோரின் குடியிருப்புப் பகுதிகளையும் உடைய,
நல் கொற்கையோர் நசை பொருநநல்ல கொற்கை என்னும் ஊரிலுள்ளோர் விரும்பும் வீரவேந்தே –
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின்     140(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,                        140
கோழ் ஊஉன் குறை கொழு வல்சிகொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,          
புலவு வில் பொலி கூவைபுலால் (நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும்,
ஒன்றுமொழி ஒலி இருப்பின்வஞ்சினம் கூறுதலையும், ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையவராகிய
தென் பரதவர் போர் ஏறேதென்திசை மீனவர்களைப் பொருது அடக்கிய அரிமா போன்றவனே –
அரிய எல்லாம் எளிதினின் கொண்டு   145அரியவை (என்று எண்ணப்படுபவற்றை) எல்லாம் (மிக)எளிதாகக் கொண்டு,                    145
உரிய எல்லாம் ஓம்பாது வீசிஉரியவற்றை எல்லாம் வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் (பிறர்க்குக்)கொடுத்து,               
நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்துமிக விரும்பி (ஊரின்கண்)உறைவோம் என்று சொல்லாமல், மேற்கொண்டு புறப்பட்டு,
பனி வார் சிமைய கானம் போகிபனி ஒழுகுகின்ற மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து,
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து   150ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,                                            150
மேம்பட மரீஇய வெல் போர் குருசில்(அந்நிலங்கள்)மேன்மைபெற அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே –             
உறு செறுநர் புலம் புக்கு அவர்மிக்க பகையுடையோர் நிலத்தில் புகுந்து, அவரின்
கடி காவின் நிலை தொலைச்சிகாவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து,
இழிபு அறியா பெரும் தண் பணைகுன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை
குரூஉ கொடிய எரி மேய             155(செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,                                              155
நாடு எனும் பேர் காடு ஆகநாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,
ஆ சேந்த வழி மா சேப்பபசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,
ஊர் இருந்த வழி பாழ் ஆகஊர்கள் இருந்த இடமெல்லாம் பாழிடம் ஆக,
இலங்கு வளை மட மங்கையர்ஒளிர்கின்ற வளை அணிந்த இள மங்கையர்
துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப             160துணங்கைக்கூத்தையும், சீரான குரவைக்கூத்தையும் மறக்க,                                     160
அவை இருந்த பெரும் பொதியில்அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
கவை அடி கடு நோக்கத்துஇரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் பெயர்பு ஆடபேய்மகளிர் உலாவி ஆட,
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்
நிலத்து ஆற்றும் குழூஉ புதவின்           165நிலத்தில் கிடந்த திரளான வாயில்(நிலை)களில்                                                       165
அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவதுன்பம்கொண்ட பெண்கள் வருந்தியவராய் அழுதுநிற்க,
கொழும் பதிய குடி தேம்பிவளமையான ஊர்களிலிருந்த குடிகள் பசியால் வருந்தி,
செழும் கேளிர் நிழல் சேரசெழுமையுள்ள (தம்)உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர,
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளிபெரிய மாளிகைகளில் வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும்
குடுமி கூகை குராலொடு முரல               170கொண்டையையுடைய கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப,                               170
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கைசெங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தரயானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர,
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல்நல்ல ஏர் உழுத விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில்
பன் மயிர் பிணவொடு கேழல் உகளபல மயிரினையுடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,
வாழாமையின் வழி தவ கெட்டு                175(மனிதர்)வாழாமற்போனதால் பிழைப்பு மிகவும் கெட்டு                                          175
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்பாழ்நிலம் ஆயின நின் பகைவர் நாடுகள் –
எழாஅ தோள் இமிழ் முழக்கின்எழுந்துயராத தோளினையும், முழங்குகின்ற ஓசையையும்,
மாஅ தாள் உயர் மருப்பின்பெருமையையுடைய கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய
கடும் சினத்த களிறு பரப்பிகடிய சினங்கொண்ட யானைகளை எங்கும் பரப்பி,
விரி கடல் வியன் தானையொடு                180விரிந்து நிற்கும் கடல் போல் அகன்ற படையோடு                                                       180
முருகு உறழ பகை தலைச்சென்றுமுருகனைப் போன்று பகைவரிடத்திற்குச் சென்று,
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழவிரிந்த விசும்பெங்கும் ஆரவாரம் முழங்க,
பெயல் உறழ கணை சிதறிமழை போல அம்புகளை ஏவி,
பல புரவி நீறு உகைப்பபல குதிரைகள் துகள்களை எழுப்ப,
வளை நரல வயிர் ஆர்ப்ப            185சங்கம் முழங்க, கொம்புகள் ஒலிக்க,                                                                        185
பீடு அழிய கடந்து அட்டு அவர்பெருமை அழியும்படி வென்று கொன்று, பகைவரின்
நாடு அழிய எயில் வௌவிநாடுகள் அழியும்படி (அவரின்)அரண்களைக் கைக்கொண்டு,
சுற்றமொடு தூ அறுத்தலின்(பகைவரைச்)சேர்ந்தாருடைய வலியைப் போக்குதலின்,
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப(நீ)சினந்த பகைவர் நின் சொற்படி நடப்ப,
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி 190அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து,           190
அரசியல் பிழையாது அற நெறி காட்டிஅரசியலறம் வழுவாது அறவழியைக் காட்டி,
பெரியோர் சென்ற அடி வழி பிழையாதுபெரியோர்கள் சொல்லிச் சென்ற பாதை வழியிலிருந்து விலகாமல்,
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்மேல் அடிவானத்தில் காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம்வழிமுறை வழிமுறையாகச் சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி –
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின்     195கீழ் அடிவானத்தில் தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல்       195
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்(கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் ஆக்கம் –
உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும்,
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையேபொய்யைத் தூர விலக்கிய வாய்மையுள்ள நட்பினையுடையாய்;
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடுமுழங்குகின்ற கடலை எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்      200உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும்,                                               200
பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே(அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;
தென் புல மருங்கின் விண்டு நிறையதெற்கு நாட்டு இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு
வாணன் வைத்த விழு நிதி பெறினும்வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதிபழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே    205வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;                                         205
அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோஅத்தன்மையுடையாய், உன்னோடு ஒப்பிட்டுக் கூறவல்லோன் எவன்?
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே,
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்கேட்பாயாக, நெடிது வாழ்க, கெடுக நின் மயக்கம்,
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசைகெடாமல் நிலைபெறுக உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் –
தவா பெருக்கத்து அறா யாணர்               210கெடாத பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும்,                                         210
அழித்து ஆனா கொழும் திற்றி(உண்பதற்காகச்)செலவழித்துக் குன்றாத கொழுவிய தசையும்,
இழித்து ஆனா பல சொன்றிஉண்டு குறையாத பலவாகிய சோறும்,
உண்டு ஆனா கூர் நறவின்பருகிக் குறைவுபடாத மிக்க கள்ளும்,
தின்று ஆனா இன வைகல்தின்று தீராத (இன்னோரன்ன)வகைகளும், (இவை எப்பொழுதோ அன்றி)ஒவ்வொரு நாளும்,
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை       215நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய,                                    215
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர்பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில்,
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி(யாழ்)நரம்பைப் போல் பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய
விறலியர் வறும் கை குறும் தொடி செறிப்பவிறலியரின் வெறுமையான கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க,
பாணர் உவப்ப களிறு பல தரீஇபாணர்கள் மகிழும்படி யானைகள் பலவற்றையும் கொடுத்து,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ    220தம்மைச்சேர்ந்தோர் மகிழ எயில்பொருள்கள் பலவற்றைச் செலுத்திக்கொடுத்து,                     220
மறம் கலங்க தலைச்சென்று(பகைவர்)மறம் கலங்கும்படி அவரிடத்தே சென்று,
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்திவாட்போரில் (அவரை)வருத்தி, அதன் முயற்சியைப் பாராட்டி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு(அன்றைக்)காலையில் வந்துகூடிய நல்ல பொருநற்குத்
தேரொடு மா சிதறிதேருடன் குதிரைகளையும் கொடுத்து,
சூடுற்ற சுடர் பூவின்                    225சூடுதலுற்ற ஒளிவிடும் வஞ்சியினையும்,                                                             225
பாடு புலர்ந்த நறும் சாந்தின்பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தையுமுடைய
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகசீரிய பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு,
கள்ளின் இரும் பை கலம் செல உண்டுகள்ளினையுடைய பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப(தமக்குப்)பணிந்தவரின் நாடுகள் தம் சொற்படி நடப்ப,
பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார்     230(தமக்குப்)பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள,              230
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறைபருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
படு கண் முரசம் காலை இயம்பஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப,
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்தகேடு உண்டாகக் கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி,
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர்பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்    235கரையைப் பொருது முழங்கும் செறிதலையுடைய பெரிய கடலின்                              235
திரை இடு மணலினும் பலரே உரை செலஅலைகள் குவிக்கின்ற மணலினும் பலரே – (புகழோடு
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரேஅகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தை ஆண்டு, பின் இறந்துபோனோர்) –
அதனால் குண கடல் கொண்டு குட கடல் முற்றிஎனவே, கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாதுஇரவென்றும் பகலென்றும் அறிந்துகொள்ள இடமின்றி,
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி      240மேடு பள்ளங்கள் எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து,                                            240
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பகவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்கமூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க,
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்துமலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காதுசிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி  245கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து                         245
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றிஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,
களிறு மாய்க்கும் கதிர் கழனியானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
ஒளிறு இலஞ்சி அடை நிவந்தவிளங்கும் மடுக்களிலும், இலைக்கு மேலே உயர்ந்த
முள் தாள சுடர் தாமரைமுள்ளுடைய அடித்தண்டையுடைய ஒளிவிடும் தாமரைப்பூவினையும்,
கள் கமழும் நறு நெய்தல்          250தேன் கமழும் மணமிக்க நெய்தல் பூவினையும்,                                                 250
வள் இதழ் அவிழ் நீலம்வளவிய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,
மெல் இலை அரி ஆம்பலொடுமெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு,
வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கைவண்டுகள் தங்குதல் கொண்ட மணங்கமழும் பூக்களைக்கொண்ட பொய்கைகளிலும்,
கம்புள் சேவல் இன் துயில் இரியகம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட,
வள்ளை நீக்கி வய மீன் முகந்து            255வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,          255
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்(தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,
வேழ பழனத்து நூழிலாட்டுகொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதைகரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே       260கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும்,                                              260
ஒலிந்த பகன்றை விளைந்த கழனிதழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில்
வன் கை வினைஞர் அரி பறை இன் குரல்வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள்
ததைந்த கோதை தாரொடு பொலிய        265(தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட         265
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பஅகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,
குருகு நரல மனை மரத்தான்குருகுப்பறவைகள் ஒலியெழுப்ப, மனையிலுள்ள மரங்கள்தோறும்
மீன் சீவும் பாண் சேரியொடுமீனைச் செதுக்கி(வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன்
மருதம் சான்ற தண் பணை சுற்றி             270மருதநிலம் ஒழுக்கம் அமைந்த குளிர்ந்த வயல்வெளிகள் சூழ்ந்த ஒருபகுதியும் –                  270
ஒருசார் சிறு தினை கொய்ய கவ்வை கறுப்பசிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,
கரும் கால் வரகின் இரும் குரல் புலரகரிய தாளினையுடைய வரகின் கரிதாகிய கதிர் முற்றிக் காய்ந்துபோக,
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளரஆழமான குழிகளில் திருவினையுடைய மணிகள் விளங்க,
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்பவளர்ந்த காட்டில் நல்ல பொன் மேலே பிறழ,
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி        275பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்                                   275
மட கண் பிணையொடு மறுகுவன உகளமடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பாஅய் அன்ன பாறை அணிந்துபரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
நீலத்து அன்ன பைம் பயிர் மிசைதொறும்நீலமணியை ஒத்த பசிய(கரும்பச்சை நிற) பயிர்களிடந்தோறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து            280வெள்ளியின் நிறத்தை ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து,                                               280
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடன் முல்லையும் பரவ,
மணி மருள் நெய்தல் உறழ காமர்நீலமணியென்று மருளும் நெய்தல், மாறும்படி, விருப்பத்தையுடைய,
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலரதெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர,
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்பவல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்      285முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் –                             285
நறும் காழ் கொன்று கோட்டின் வித்தியநறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவிகுறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடிஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும்இஞ்சியும், மஞ்சளும், பசுத்த மிளகுக்கொடியும், பிறவும்
பல் வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி        290பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கல்தரையில் குவிக்கப்பட்டு,                                  290
தினை விளை சாரல் கிளி கடி பூசல்தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும்பன்மணி போன்ற பூவினையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும்
ஆமா கடியும் கானவர் பூசல்ஆமாவை ஓட்டுகின்ற கானவரின் ஆரவாரமும்,
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின்குறவன் தோண்டின, மூடின வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த)
வீழ் முகம் கேழல் அட்ட பூசல்             295கீழ்நோக்கிய பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,                         295
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர்கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த)
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும்பன்றியைக் கொல்லும் வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும்
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்டவிளங்குகின்ற வெள்ளிய அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து        300கரிய காலையுடைய குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து,                        300
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார்பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்), ஒரு பக்கம் –
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்பபெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,
நிழத்த யானை மேய் புலம் படர(உணவின்றி)கொஞ்சம் கொஞ்சமாக வலு இழந்த யானைகள் (வேறு)மேய் நிலங்களுக்குச் செல்ல,
கலித்த இயவர் இயம் தொட்டு அன்னமகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று,
கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து   305முங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து,                 305
அருவி ஆன்ற அணி இல் மா மலைஅருவிகள் இல்லையான அழகில்லாத பெரிய மலையிடத்தில்,
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டுவைக்கோலைக் கண்டாற் போன்று புல் உலர்ந்த அழகிய காட்டில்,
கமம் சூழ் கோடை விடரகம் முகந்துநிறைவினையுடைய சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினால்,
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மைகாற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய;
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி 310குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்,                 310
உவலை கண்ணி வன் சொல் இளைஞர்தழை விரவின கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர்
சிலை உடை கையர் கவலை காப்பவில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க;
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்துநிழல் தன் வடிவை இழத்தற்குக் காரணமான முதுவேனில் காலத்தையுடைய மலையிடத்து
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார்பாலை ஒழுக்கம் அமைந்த அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம் –
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் 315ஒலிக்கும் கடல் தந்த விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்,                            315
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளைஅரம் கீறியறுத்த இடம் நேரிதாகிய விளங்கும் வளைகளும்,
பரதர் தந்த பல் வேறு கூலம்பரதர் கொண்டுவந்த பலவாய் வேறுபட்ட பண்டங்களும்,
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்புகரிய கழியிடத்துப் பாத்தியில் விற்கும் தித்திப்புக்கூட்டிப் பொறித்த புளியோடே வெள்ளிய உப்பும்,
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர்பரந்து உயர்ந்த கானலில் வலிமையான கையினையுடைய திமிலர்
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல்       320கொழுவிய மீன்களை அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்(ஏற்றப்பட்ட)     320
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்மார்அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்
வைகல்தோறும் வழிவழி சிறப்பநாள்தோறும் வழிவழியாகச் சிறக்க,
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு     325நெய்தல் ஒழுக்கம் அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு, அங்கு                               325
ஐம் பால் திணையும் கவினி அமைவரஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற –
முழவு இமிழும் அகல் ஆங்கண்முழவு முழங்கும் அகன்ற ஊரில்,
விழவு நின்ற வியல் மறுகின்விழாக்கோலம் நிலைபெற்ற அகன்ற தெருவினையும்,
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரிதுணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும்,
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு    330இனிய செருக்கினையுடைய புதுவருவாயினையுடைய குடித்திரளையும் உடைய அங்கே,     330
பாடல் சான்ற நல் நாட்டு நடுவண்(புலவர்)பாடுதல் நிறைந்த நல்ல நாட்டிற்கு நடுவணதாய் –
கலை தாய உயர் சிமையத்துமுசுக்கலைகள் தாவுகின்ற உயர்ந்த மலையுச்சியில்,
மயில் அகவும் மலி பொங்கர்மயில்கள் அகவும் நிறைந்த மரக்கிளைகளில்
மந்தி ஆட மா விசும்பு உகந்துமந்திகள் ஊசலாட, பெரிய வானில் உயர்ந்து
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்    335ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலையிலும்,                    335
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல்ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும்காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும்,
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்தாதுக்கள் சூழ்ந்த கோங்கினையுடைய பூவும் (ஏனை)மலர்களும் பரந்து
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்மாலையைப் போன்று ஒழுகி ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய
அவிர் அறல் வையை துறைதுறைதோறும்  340விளங்குகின்ற அறலையுடைய வையையின் துறைகள்தோறும்                                   340
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றிபலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,
அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும்நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் –
நிலனும் வளனும் கண்டு அமைகல்லாநிலத்தையும் (அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்  345அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்,                                       345
கொழும் பல் பதிய குடி இழந்தனரும்செல்வத்தினையுடைய பல ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவர்களும்,
தொன்று கறுத்து உறையும் துப்பு தர வந்தஅதிக நாட்களாய் கறுவிக்கொண்டு இருக்கும் — (தன்)வலிமையினால் வந்த —
அண்ணல் யானை அடு போர் வேந்தர்தலைமைச்சிறப்புடைய யானையைக் கொல்லும் — போர்த்தொழிலை உடைய, வேந்தரை,
இன் இசை முரசம் இடை புலத்து ஒழியஇனிய ஓசையினையுடைய முரசம் (உழிஞைப் போர்க்கு)இடைநிலத்தே கிடக்கும்படி,
பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று        350பலவாய்க் கிடந்த மாறுபாட்டினை அகற்றி, (பகைவர் அத்தனை)பேரின் முதுகைக் கண்டு,              350
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின்(கீழே)மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும்,
விண் உற ஓங்கிய பல் படை புரிசைவிண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும்,
தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலைதொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும்,
நெய் பட கரிந்த திண் போர் கதவின்நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும்,
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு        355முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,                                               355
வையை அன்ன வழக்கு உடை வாயில்வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்,
வகை பெற எழுந்து வானம் மூழ்கிபலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)
சில் காற்று இசைக்கும் பல் புழை நல் இல்சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் –
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப   360பல வேறுபட்ட குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,                                             360
மா கால் எடுத்த முந்நீர் போலபெருமையையுடைய காற்று எடுத்த கடலொலி போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவலமுழங்கும் ஓசையையுடைய நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற,
கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசைகுளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மைமகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தையும் உடைய,
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து        365ஓவியத்தில் கண்டாற்போன்ற இரண்டு பெரிய அங்காடித்தெருவின்கண்                               365
சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடிவிழா நிகழ்த்திக் கட்டின அழகினையுடைய பல கொடிகளும்,
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக்கொளவேறுபட்ட பல பெயர்களையுடைய (உறுதி)நிறைந்த அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடிநாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய அலங்காரமான கொடியும்,
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடுகடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி 370புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து,        370
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடிபுகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும்,
கள்ளின் களி நவில் கொடியொடு நன் பலகள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல
பல் வேறு குழூஉ கொடி பதாகை நிலைஇபலவாய் வேறுபட்ட திரண்ட கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று,
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்கபெரிய மலையிடத்து அருவியைப் போன்று நெளிந்துஆட,
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்      375பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,                                         375
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூஇறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇகடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடும் சுழி பட்ட நாவாய் போலநெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து     380இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, வெகுளி மிக்கு                               380
கோலோர் கொன்று மேலோர் வீசிகோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, பாகரைத் தூக்கி எறிந்து,
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்துமெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்துஅழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்   385ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்          385
செம் கால் அன்னத்து சேவல் அன்னசிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்துநிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும்காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய             390தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின                                390
கொடி படு சுவல இடுமயிர் புரவியும்ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்
வேழத்து அன்ன வெருவரு செலவின்யானை போன்ற அச்சம்தரும் போக்கினையுடைய
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும்கள்ளை உண்ட மறவரின் பெரிய போரைச்செய்யும் கலக்கமும்,
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்(இவ்வாறு தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால் – 
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்        395இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின் 395
பூ தலை முழவின் நோன் தலை கடுப்பபூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர்கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும்,
பல வகை விரித்த எதிர் பூ கோதையர்பலவகையாக விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும்,
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்,
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய்        400அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடன்,                   400
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்நீண்ட கொடி(யில் விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த) சுண்ணாம்பையுடையவரும்,
இரு தலை வந்த பகை முனை கடுப்பஇரண்டு பக்கத்திலும் (படை)வந்த பகைப்புலத்தை ஒக்க,
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்துஇனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து,
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றைஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர்,
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர்     405பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,                405
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தரமலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க –
இரும் கடல் வான் கோது புரைய வாருற்றுகரிய கடலில் (மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி)
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர்பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய,
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்நல்ல வனப்பினையுடைய, பழைமை மூத்த பெண்டிர் —
செம் நீர் பசும்பொன் புனைந்த பாவை        410{சிவந்த தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை                                 410
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்னவீழ்கின்ற ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற
செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண்சிவந்த நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்; மடப்பத்தையுடைய கண்ணோடே
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று(பார்ப்பவர்)வியந்து கலங்கும் மாமை நிறமுடையவரும்; கூர்மையான பற்களின்
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்ஒழுங்குபட்ட வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,
சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை      415நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும்,                  415
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலைதொய்யிலால் பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்,
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல்மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய
மயில் இயலோரும் மட மொழியோரும்மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப 420கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,}                                           420
புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்— புடைத்தல் அமைந்த அழகிய பலவகைப்பட்ட செப்புக்களில்,
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்விருப்பம் மருவிய வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை
கமழ் நறும் பூவொடு மனைமனை மறுககமழ்கின்ற நறிய பூவோடு மனைகள்தோறும் எடுத்துச்செல்ல –
மழை கொள குறையாது புனல் புக மிகாதுமுகில்கள் முகக்கக் குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போல        425கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல,                                                        425
கொளக்கொள குறையாது தரத்தர மிகாது(வாங்குவோர்)எடுக்க எடுக்கக் குறையாது, (வணிகர்)கொணரக் கொணர நிறையாது,
கழுநீர் கொண்ட எழு நாள் அந்திதீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றேஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது (மக்கள்)ஆரவாரித்ததைப் போன்று,
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்
நாளங்காடி நனம் தலை கம்பலை               430நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் –                               430
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுவெயிலையுடைய சுடர்கள் (வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய
செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்செவ்வானத்தை ஒத்த, சிவந்து நுண்ணிதான வடிவில்,
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம்கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை,
பொன் புனை வாளொடு பொலிய கட்டிபொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி,
திண் தேர் பிரம்பின் புரளும் தானை        435திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,                                435
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடிகச்சம் இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்,
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்(உலகத்தார்)வலிமையைக் கடந்து (புகழோடு) திரியும் ஒப்பற்ற பெரிய வேப்பமாலையினையும்,
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதைமாணிக்கம் ஒழுகினாற் போன்ற ஒளிரும் செங்கழுநீர் மாலையினையும்,
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇஅழகு விளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து,
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ  440காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,                                    440
காலோர் காப்ப கால் என கழியும்காலாட்கள் (சூழ்ந்து)காக்க, காற்று என விரைந்து செல்லும்,
வான வண் கை வளம் கெழு செல்வர்முகில்போன்று (வரையாமற்கொடுக்கும்)வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்திய செல்வர்
நாள் மகிழ் இருக்கை காண்மார் பூணொடுநாட்காலத்தே மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண – (ஏனைய)அணிகலன்களோடே
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில்(இட்டு)
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை       445குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னாற் செய்த பளபளக்கும் அணிகலன்களையுடைய,    445
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழமணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம்ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம்,
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத்
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப      450தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால்,               450
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும்ஒழுங்குபட்ட நிலைமையினையுடைய மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறையமேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய –
நீரும் நிலனும் தீயும் வளியும்நீரும் நிலனும் நெருப்பும் காற்றும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றியதிசைகளையுடைய வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக     455மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,             455
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர்அழுக்கற்றுத் திகழும் வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய
வாடா பூவின் இமையா நாட்டத்துவாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும்,
நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்குஅவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,
மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார்பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு,
அந்தி விழவில் தூரியம் கறங்க             460அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க –                                                460
திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களைதிண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கிபேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்குதாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அவரும் ஓராங்கு விளங்கதாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்           465ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர்,                                          465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிபூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் –
சிறந்த வேதம் விளங்க பாடிசிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்துசீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி  470நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)   470
உயர் நிலை உலகம் இவணின்று எய்தும்உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் –
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து      475வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய                        475
பூவும் புகையும் சாவகர் பழிச்சபூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலமும் வரூஉம் அமயமும்சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்துஇன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,
சான்ற கொள்கை சாயா யாக்கை                480(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,                                      480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டைகல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல் புரி சிமிலி நாற்றி நல்குவரபல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்துகுளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து  485செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,                                   485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கிகண்பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,
இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்வியப்பமைந்த நறிய பூக்களையுடைய (அமண்)பள்ளியும் –
குன்று பல குழீஇ பொலிவன தோன்றமலைகள் பலவும் திரண்டு பொலிவன (போலத்)தோன்ற;
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிஅச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,
செற்றமும் உவகையும் செய்யாது காத்து      490பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து,                             490
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகிதுலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,
சிறந்த கொள்கை அறங்கூறவையமும்சிறந்த கொள்கைகள் (உடைய)அறங்கூறவையமும் –
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்துநறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய்,
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்துயாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல       495அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போன்று,                                             495
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கிநன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்துஅன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்தபழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
செம்மை சான்ற காவிதி மாக்களும்தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும் –
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி  500அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து —                                               500
குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்னஅருகருகேயமைந்த பலவான சிறுமலைகளைக் கண்டாற் போன்று
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல்பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லங்களில்
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினிபலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு 505பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு  505
சிறந்த தேஎத்து பண்ணியம் பகர்நரும்— சிறந்த (அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் –
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள்மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய
பழையன் மோகூர் அவையகம் விளங்கபழையன் (என்னும் மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு
நான் மொழி கோசர் தோன்றி அன்னநான்மொழிக்கோசர் வீற்றிருந்தாற் போன்று,
தாம் மேஎ தோன்றிய நாற்பெருங்குழுவும்     510தாம் மேலாய் விளங்கிய நாற்பெருங்குழுவும் –                                                       510
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும்சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்சுடுதலுற்ற நல்ல பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும்,
பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,
பூவும் புகையும் ஆயும் மாக்களும்         515பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,                                             515
எ வகை செய்தியும் உவமம் காட்டிபல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடிஓவியரும், பிறரும் கூடி,
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல்தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து   520சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,                 520
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇசிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றரநான்காய் வேறுபட்ட தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய 
கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்,
தண் கடல் நாடன் ஒண் பூ கோதைகுளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ       525பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு                                                       525
விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன்விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப – பலவுடன்,
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்சாறும், மணமும் (கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும்,
வேறு பட கவினிய தேம் மாங்கனியும்ஒன்றற்கொன்று வேறுபட்ட அழகிய மாவின் பழங்களையும்,
பல் வேறு உருவின் காயும் பழனும்பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும், பழங்களையும்,
கொண்டல் வளர்ப்ப கொடி விடுபு கவினி       530மழை வளர்க்கக் கொடிவிட்டு அழகுபெற்று,                                                            530
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும்அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற பதார்த்தங்களையும்,
இன் சோறு தருநர் பல் வயின் நுகர  535இனிய (கற்கண்டுச்)சோறு தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண –                                535
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த)
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்துபலவாய் வேறுபட்ட சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான கல்லெனஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போன்று, கல்லென
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுகஅகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்   540பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி                    540
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்துகரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து,
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றேபல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது
அல்லங்காடி அழிதரு கம்பலைஅந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் –
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து      545ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து,                             545
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
குட முதல் குன்றம் சேர குண முதல்மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கீழ் வானத்தில்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு(பதினாறு)நாள் முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால்,
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர்பகலின் வடிவை ஒத்த இராக்காலம் வரும்படியும், (நெஞ்சால்)விரும்பினோரான —
காதல் இன் துணை புணர்மார் ஆய் இதழ்       550காதல் (மிக்க தம்)இனிய துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய           550
தண் நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉகுளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்கள் துணையாக நிற்க, அணிகளை அணிந்து,
நல் நெடும் கூந்தல் நறு விரை குடையநல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க,
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுககத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க,
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்பமெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணக்கின்ற (அகிற்)புகையை ஊட்ட,
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்      555— பெண்டிரே விரும்பும் மான்பிணை(போலும்) நோக்கினையுடைய மகளிர்                            555
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர்நீண்ட சுடர்(விடும்) விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்துஎல்லைக்குட்பட்ட இடமெல்லாம் (நயந்தோர்க்கு)நோயைச் செய்தலோடே புகுந்து
கல்லென் மாலை நீங்க நாணு கொளகல்லெனும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்க – நாணம் கொண்டு,
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்(இசை)ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து    560தாழ்ந்து (அதன்)அயலே (பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி கூட்டி),   560
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ(தம்மை)விரும்புகின்ற துணைவரை முயங்கி, அகன்ற விண்ணில் (சென்று)மணக்கும்படி,
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டுநீர் திரண்டாற் போல (வெள்ளிய பூக்களால் புனைந்த)மாலைகளை கொண்டையில் சூடி,
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசிஅழகிய திரண்ட ஒளிரும் தொடிகள் பளபளக்கக் கையை வீசி நடந்து,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழமொட்டுக்கள் மலரும் புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ,
மேதகு தகைய மிகு நலம் எய்தி              565பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து,                565
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர்பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகள் மொய்க்கும் பல பூக்களை,
திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து(கையால்)மலரச்செய்து மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்து மணக்கும் வாசனையுடன்,
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்துமழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி,
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கிநுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்)வடுப்படும்படியாகத் தழுவி,
மாய பொய் பல கூட்டி கவவு கரந்து  570வஞ்சனையுடைய பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, (தம் மனத்து)எண்ணத்தை மறைத்து,  570
சேயரும் நணியரும் நலன் நயந்து வந்ததொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கிஇளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,
நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும்(பூவின்)நுண்ணிய தாதை உண்டு, (பின்னர் தாதற்ற)வறிய பூவை விட்டுவிலகும்
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர்மெல்லிய சிறகையுடைய வண்டுகளைப் போன்று, (தம்மை)நுகர்ந்தோரது
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து        575நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,                                                575
பழம் தேர் வாழ்க்கை பறவை போலபழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎயவளவிய குடி(யிற் பிறந்த)செல்வரும், பிறமாந்தரும் பொருந்தியுள்ள,
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல்(புதிய)மணம் நிகழ்ந்தமையால் உயர்ச்சிபெற்ற, இல்லுறை தெய்வங்களையுடைய நல்ல இல்லங்களில்,
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர்ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி  580ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி,                               580
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்
வானவ மகளிர் மான கண்டோர்தெய்வமகளிர் போல, (தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர்நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,
யாம நல் யாழ் நாப்பண் நின்றயாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்     585முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய                             585
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர்குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவரகொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சிநெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயரமணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய –
கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்       590குழாம் கொண்ட அவுணர்களைக் கொன்றருளிய, பொன்னால் செய்த மாலையினையுடைய       590
மாயோன் மேய ஓண நல் நாள்திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,                                                       
கோணம் தின்ற வடு ஆழ் முகத்ததோட்டி (வளைந்த வாள்)வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,
சாணம் தின்ற சமம் தாங்கு தட கைசாணைக்கல்லால் தழும்பேறின, போரைத் தாங்கும் பெரிய கையினையும்,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில்,
மாறாது உற்ற வடு படு நெற்றி              595(அடி)மாறாமையாற்பட்ட (கொம்பு அழுந்தின)தழும்பினையுடைய நெற்றியினையுடையனவும்,       595
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய மறவர்கள்            
கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்டகடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால், (அதனைக்)காணவந்தோர் இட்டுச்செய்த
நெடும் கரை காழ் அக நிலம் பரல் உறுப்பநெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கண் பரல்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி,
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதரகடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய –
கணவர் உவப்ப புதல்வர் பயந்து             600தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று,                                                        600
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறபருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடுபுலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,
வள மனை மகளிர் குள நீர் அயரவளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க –
திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணிவார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி      605குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,                                       605
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடுஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நன் மா மயிலின் மென்மெல இயலிநல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுதுமுதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார்       610பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் மடைகொடுக்க – ஒருபக்கத்தே,                     610
அரும் கடி வேலன் முருகொடு வளைஇஅரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்துஅரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்கார் (காலத்தில் மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉபுகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்      615மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் – (முதல் யாமத்தில் மாலை 6 – 9) குடியிருப்புகள்தோறும் (நின்ற)       615
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇபுனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கிவேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து,
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள்பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்குசேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே
முந்தை யாமம் சென்ற பின்றை               620முற்பட்ட (முதல்)யாமம் நிகழ்ந்த பின்னர் – (இரண்டாம் யாமத்தில் – இரவு 9 – 12 நள்ளிரவு)    620
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்துசங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப்
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து, மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒள் இழை மகளிர் பள்ளி அயரஒளிவிடும் அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய,
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடைநல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும்,
அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் 625கண்டசருக்கரையை வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய)                 625
கவவொடு பிடித்த வகை அமை மோதகம்உள்ளீட்டோடெ பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்கஇனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடியதிருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள,
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரையஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப 630படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில – (மூன்றாம் யாமத்தில் நள்ளிரவு 12 – 3 காலை)       630
பானாள் கொண்ட கங்குல் இடையதுநடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்பகூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,
இரும் பிடி மேஎ தோல் அன்ன இருள் சேர்புகரிய பிடியின்கண் மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை        635கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய                                                       635
தொடலை வாளர் தொடுதோல் அடியர்தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடிதொடையில் (தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்மிக்க கருமையான, நுணுக்கமான வேலைப்பாடு(கொண்ட), நுண்ணிய கருமணலின்
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர்நிறத்தை வாங்கிப் புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்;
மெல் நூல் ஏணி பன் மாண் சுற்றினர்        640மெல்லிய நூலாற் செய்த ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்;640
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇ கொட்கும்நிலத்தை அகழும் உளியினை உடையவராய்; பேரணிகலன்களை விரும்பிச் சுற்றித்திரியும்
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றிகாட்சியினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து,
வய களிறு பார்க்கும் வய புலி போலவலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,
துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர்துயில் கொள்ளாத கண்ணையுடையவராய்; அஞ்சாத கோட்பாட்டையுடையவராய்;
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த     645அறிந்தவர்கள் புகழும் ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய                         645
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சிநூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள)
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர்ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுகதேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்மழை நின்று-பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,                                         
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் 650சோம்பலற்றவராய்ப் புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால்,                          650
கடவுள் வழங்கும் கையறு கங்குலும்தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சம் அறியாது ஏமம் ஆகியஅச்சத்தை அறியாமல் காவலையுடைய
மற்றை யாமம் பகலுற கழிப்பிமுந்திய யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை(நான்காம் யாமத்தில் – காலை 3  – 6)பூக்கள் தளையவிழ்ந்த (மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில், 
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு      655தாதை உண்ணும் தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று,                                  655
ஓதல் அந்தணர் வேதம் பாடஓதுதல் (தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட,
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கிதாள அறுதியை இனிதாக உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து,
யாழோர் மருதம் பண்ண காழோர்யாழோர் மருதப்பண்ணை இசைக்க, பரிக்காரர்
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர்கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான,                                           
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட 660கொட்டிலில் நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,               660
பல் வேறு பண்ணியம் கடை மெழுக்குறுப்பபலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர்கள் விற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, மகளிர்
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி(பொழுது)புலர்ந்து (கதிர்)விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே, விருப்பத்தால்
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய   665கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று                                    665
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலிஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து —
திண் சுவர் நல் இல் கதவம் கரையதிண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகள்(திறக்கப்படுவதால்) கிரீச்சிட,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழம் செருக்காளர் தழங்கு குரல் தோன்றபழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,
சூதர் வாழ்த்த மாகதர் நுவல               670நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,                                  670
வேதாளிகரொடு நாழிகை இசைப்பவைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப,
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்பஇமிழ்கின்ற முரசு ஒலிக்க, ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்க,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்பபொறிகளுள்ள மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ,
யானையங்குருகின் சேவலொடு காமர்யானையங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய
அன்னம் கரைய அணி மயில் அகவ       675அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ,                       675
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலிபிடியைக் கூடின பெரிய யானைகள் முழங்க, மிக்க வலியுடைய
கூட்டு உறை வய மா புலியொடு குழுமகூட்டில் உறைகின்ற (கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்துமின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த        680மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த              680
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடுபரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு, 
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்னபொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம் போல்,
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும்அழகிய மென்மையான இளம்பாக்குக் காய் விழுந்து, (முத்தொழிந்த)பிறவும் (விழுந்து கிடப்ப),
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்பகொண்டுவந்து இட்ட மணலையுடைய (அம்)முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப,
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப        685— மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள                             685
இரவு தலைப்பெயரும் ஏம வைகறைஇராக்காலம் தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில்,
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டிகருமை படர்ந்த பெரிய தோளையுடைய மழவரைக் கெடுத்து,
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானைபோர்க்களத்தின் நடுவழியில் (விட்டுப்போன)ஏந்தின கொம்பினையுடைய யானைகளும்,
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவிபகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும்,
வேல் கோல் ஆக ஆள் செல நூறி               690வேலினை (ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி,                                       690
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும்(பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும்,
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டிஅகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்,
நாள்தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சிநாள்தோறும் (தமக்குச் செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி,
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும்        695நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்                             695
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்குகங்கையாகிய அழகிய பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல,
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடுஅளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,
புத்தேள் உலகம் கவினி காண்வரதேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைமிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் –
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ      700மரக்கிளைகளில் ஒன்றுகூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)                     700
ஒண் பூ பிண்டி அவிழ்ந்த காவில்ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்றுஒளியைச் சொரிந்து (உச்சிக்கு)ஏறிய பளீரிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின்
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன(மேற்கில் இறங்கிய பின்னர்)மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழைபொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் விளக்குறுப்ப மேதக பொலிந்து        705நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று,                                           705
மயில் ஓர் அன்ன சாயல் மாவின்மயிலோடு ஒருதன்மைத்தாகிய மென்மையினையும், மாமரத்தின்
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்துதளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்றுஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையராய், கூரிய எயிற்றினையும்
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும்,
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை    710இறைத்தன்மையுள்ள (பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின்     710
தாது படு பெரும் போது புரையும் வாண் முகத்துதாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும்,
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்துஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கி,
கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சிதூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு –
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்துநன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும்        715திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும்                                       715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்பவரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்,
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம்பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
வலி கெழு தட கை தொடியொடு சுடர் வர        720வலி பொருந்தின பெரிய கையில் வீர வளையோடு விளக்கம் வர,                             720
சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம்சோறு (தன்னிடத்தே நன்றாக)அமையப்பெற்ற நீரை(- கஞ்சியை) உடைய துகிலை,
உடை அணி பொலிய குறைவு இன்று கவைஇஉடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்தி,
வல்லோன் தைஇய வரி புனை பாவை(சிற்பத்துறை)வல்லோன் செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில்
முருகு இயன்று அன்ன உருவினை ஆகிமுருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி –
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து    725வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து,     725
ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர்(அப்)பகைவரை விரட்டிய போரை விரும்பும் படைத்தலைவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்தவாள் வெற்றியைப் பொருந்தின நின் முயற்சியின் வெற்றியை வாழ்த்திநிற்ப –
வில்லை கவைஇ கணை தாங்கு மார்பின்‘வில்லை (வலிக்கையினால் தன்னுள்ளே)அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும் மார்பினையும்,
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்மின்குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்;
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின்        730கல் (தரையைப்)பொளிந்து பண்ணின ஒடுங்கிய (நீர்வரும்)வாயையுடைய கிடங்கினையுடைய       730
நல் எயில் உழந்த செல்வர் தம்மின்நல்ல கோட்டைமதிலில் சிரமப்பட்ட (மறச்)செல்வர்களைக் கொணர்மின்;
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்தகொல்லும் (தன்மையுள்ள முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமற் போர்த்த
மா கண் முரசம் ஓவு இல கறங்கபெரிய கண்ணையுடைய முரசம் விடாமல் ஒலிக்க,
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண்நெருப்பு நிமிர்ந்து நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று)
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய 735பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று,                                               735
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்மின்சீரிய புண்ணால் வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்;
புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பைகுற்றம்தீர்ந்த உயர்வினையுடையோர்க்குக் கட்டப்பட்ட பொன்னாற்செய்த பூவினையுடைய தும்பையை
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டிநீர் (யார்)என்னாது, (அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும்)முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுதலால்
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கிகாம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து    740(பலவாய்ப்)பிரிந்து இணைந்த (பொருத்துவாய்கள் அற்ற பழைய)நிறம் கெட்ட கவசத்தோடே,     740
வானத்து அன்ன வள நகர் பொற்பதேவருலகத்தை ஒத்த வளமுடைய நகர் (மேலும் வீரப்பொலிவாலே)விளங்க,
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்வலிய குறட்டை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின்உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;
நிவந்த யானை கண நிரை கவர்ந்தஉயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த,
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்      745(பூசி)உலர்ந்த சாந்தினையும், பலவகையாய்க் கலந்த பூக்களின் மாலையினையும்,                   745
பெரும் செய் ஆடவர் தம்மின் பிறரும்பெரிய செய்கைகளையும் உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் எனஎல்லாரும் வருக, ஏனோரையும் கொணர்மின்’ என்று
வரையா வாயில் செறாஅது இருந்துவரைந்து கூறி, வாயிலில் தடுத்து நிறுத்தாமல் இருந்து,
பாணர் வருக பாட்டியர் வருக‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
யாணர் புலவரொடு வயிரியர் வருக என 750புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து                 750
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசிகொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,
களம்தோறும் கள் அரிப்பகளங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரம்தோறும் மை வீழ்ப்பமரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய             755நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும்,                   755
நெய் கனிந்து வறை ஆர்ப்பநெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,
குரூஉ குய் புகை மழை மங்குலின்நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றா வியல் நகரால்பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே,
பல் சாலை முதுகுடுமியின்(பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,
நல் வேள்வி துறைபோகிய            760நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக,                                                       760
தொல் ஆணை நல் ஆசிரியர்தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலம்தருதிருவில் நெடியோன் போலநிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்இறும்பூதும், நிறைவும், செப்பமும் உடைய சான்றோர்
பலர்வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி     765பலர் கூற்றுக்களிலும் களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு,                                    765
அரிய தந்து குடி அகற்றிஅரியவான பொருள்களைக் கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி,
பெரிய கற்று இசை விளக்கிபெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்கடல் நடுவே ஞாயிறு போன்றும்,
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்பல விண்மீன்களுக்கு நடுவே திங்கள் போன்றும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி  770பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,                                      770
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும்,
பெரும் பெயர் மாறன் தலைவனாகபெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப,
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர்(பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்பநடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க,
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த  775பொன் அணிகலன்களையுடைய ஐம்பெரும் கேளிரும் உட்பட, (அவரால்)புகழப்பட்ட               775
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர்மறம் மிக்க சிறப்பினையுடைய குறுநில மன்னராகிய
அவரும் பிறரும் துவன்றிஅவர்களும், மற்றோரும் நிறைந்து,
பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்தபொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த,
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்தியவிளங்குகின்ற பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் எடுத்த
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்   780மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்                          780
மகிழ்ந்து இனிது உறைமதி பெருமமகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையேஅறநெறியில் ஈட்டி நீ பெற்றுள்ள நல்ல பழவினைப் பயனை உடையவனாவாய்.