புறநானூறு 301-325

  
# 301 ஆவூர் மூலங்கிழார்# 301 ஆவூர் மூலங்கிழார்
பல் சான்றீரே பல் சான்றீரேபல சான்றோர்களே! பல சான்றோர்களே!
குமரி மகளிர் கூந்தல் புரையமணமாகாத பெண்ணின் கூந்தல் பிற ஆடவரால் தீண்டப்படாதவாறு போல,
அமரின் இட்ட அரு முள் வேலிபோர் கருதி எழுப்பப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த
கல்லென் பாசறை பல் சான்றீரேஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே!
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் காத்துக்கொள்ளுங்கள்;
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்ஒளிர்கின்ற உயர்ந்த கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்;
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்தன்மேல் படையெறிந்து போரிடாதவருடன் போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெறிந்தோரையும்
எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால்தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் அரசன் எதிர்சென்று போர்செய்ய மாட்டான்; அதனால்,
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளேஅவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்?
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண்உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க; இதோ பாருங்கள்!
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறிநிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல மிகக் குறுகிய வழியிலும் நில்லாது
வண் பரி புரவி பண்பு பாராட்டிமிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி,
எல் இடை படர் தந்தோனே கல்லெனஇரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான்; மிகுந்த ஆரவாரத்துடன்
வேந்து ஊர் யானைக்கு அல்லதுஉங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல்
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலேதன்னுடைய ஒளிவிடும் இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.
  
# 302 வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம்# 302 வெறிபாடிய காம கண்ணியார்-காம கணியார் எனவும் பாடம்
வெடி வேய் கொள்வது போல ஓடிவளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போல ஓடி
தாவுபு உகளும் மாவே பூவேதாவித் துள்ளித் திரிந்தன குதிரைகள்; பூக்களும்
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்டஒளிரும் அணிகலன்களை அணிந்த மகளிரின் கூந்தலில் இடங்கொண்டன;
நரந்த பல் காழ் கோதை சுற்றியநரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்ட,
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ்மென்மையாக அமைந்த தாளத்திற்கேற்ப வளைந்த, தண்டையுடைய சிறிய யாழினுடைய
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கியகைவிரலால் இசைக்கும் நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் கொடுக்கப்பட்டன –
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர்குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள்;
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கிதன்னைப் பகைத்துப் பார்க்கும் பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால்,
விண் இவர் விசும்பின் மீனும்வானத்தில் ஊர்ந்து செல்லும் ஆகாயத்து மீன்களும்
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவேகுளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றுக்கு உறைபோடக்கூடக் காணாது.
  
# 303 எருமை வெளியனார்# 303 எருமை வெளியனார்
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉநிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக்
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல்காண்போரின் நெஞ்சைக் கலங்கடிக்கும் வகையில் சுழன்று வரும் குதிரை மேல் வரும்,
எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்ததன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன், தனது கூரிய,
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்பகொடிய வலிமை பெற்ற வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண் செய்யுமாறு
ஆட்டி காணிய வருமே நெருநைஆட்டிக்கொண்டு காண வருகின்றான்; நேற்று,
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர்புகழ் மிக்க சிறப்பினையுடைய வேந்தர்களின் கண்முன்னே,
கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர்கரையை மோதும் கடலைப் பிளந்து செல்லும் படகைப் போல் பகைவர் படையைப் பிளந்து, அவர்களுடைய
கயம் தலை மட பிடி புலம்பபெரிய தலையையுடைய இளம் பெண்யனைகள் தனிமையுற்று வருந்துமாறு,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கேஒளிரும் கொம்புகளையுடைய களிறுகளை கொன்ற என்னை – (காண வருகின்றான்)
  
# 304 அரிசில்கிழார்# 304 அரிசில்கிழார்
கொடும் குழை மகளிர் கோதை சூட்டிவளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மாலை சூட்ட,
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகிநடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவைக் குடித்து,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவிகாற்றின் விரைவையும் கடந்து செல்லும் மிகுந்த ஓட்டத்தையுடைய குதிரைகளைப்
பண்ணற்கு விரைதி நீயே நெருநைபோருக்குத் தகுந்தவையாக ஆயத்தம் செய்வதற்கு நீ விரைந்கொண்டிருக்கிறாய்; ”நேற்று,
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்குஎன் அண்ணனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும் ஒருசேர
நாளை செய்குவென் அமர் என கூறிநாளை போர்புரிவேன்” என்று கூறி
புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான்சிறிதளவும் வயிற்றுக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல், பல குதிரைகளைப்
கடவும் என்ப பெரிதே அது கேட்டுபெரிதும் ஆராய்கின்றாய் என்று கூறுகிறார்கள், அதைக் கேள்விப்பட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்றுவிளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகின்றார்கள்,
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவேஉன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி 
  
# 305 மதுரை வேளாசான்# 305 மதுரை வேளாசான்
வயலை கொடியின் வாடிய மருங்கின்பசலைக் கொடி போல வாடி மெலிந்த இடையையும்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்வருத்தத்தால் ஊர்ந்து செல்வது போன்ற நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன்,
எல்லி வந்து நில்லாது புக்குஇரவில் வந்து, நில்லாமல் உள்ளே சென்று
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கேசொல்லிய சொற்களோ சிலவே. அதன் விளைவாக,
ஏணியும் சீப்பும் மாற்றிமதில்மேல் சாத்திய ஏணியையும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பையும் நீக்கி,
மாண் வினை யானையும் மணி களைந்தனவேசிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளையும் களைந்துவிட்டனர்..
  
# 306 அள்ளூர் நன் முல்லையார்# 306 அள்ளூர் நன் முல்லையார்
களிறு பொர கலங்கு கழல் முள் வேலிமுள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த, யானைகள் புகுந்து உழக்குதலால் கலங்கிச் சேறாகி, 
அரிது உண் கூவல் அம் குடி சீறூர்உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும்,
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவைதழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி,
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாதுநாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது வழிபட்டாள்,
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும்”விருந்தினரை எதிர்கொள்ளப்பெறுவேனாக நான், என் கணவனும்
ஒ —————– வேந்தனொடு———— —————— வேந்தனோடு
நாடு தரு விழு பகை எய்துக எனவேபிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் சிறந்த பகையை அடைவானாகுக” என்று –
  
# 307# 307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோஎமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு இருக்கிறானோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்மலை போன்ற யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான்;
வம்பலன் போல தோன்றும் உது காண்அவன் அயலான் போலத் தோன்றுகிறான் அங்கே அவனைப் பார்! 
வேனல் வரி அணில் வாலத்து அன்னவேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப் போல்,
கான ஊகின் கழன்று உகு முது வீகாட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள்
அரியல் வான் குழல் சுரியல் தங்கவரிவரியாகப் பெரிய தலைமயிரில் உள்ள சுருள்களில் தங்குவதால்,
நீரும் புல்லும் ஈயாது உமணர்நீரும் புல்லும் கொடாமல், உப்பு வணிகர்கள் 
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்தயாருமில்லாத ஓரிடத்தில், முடமாகியதால் கைவிட்டுப்போன
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்வாழும் திறனற்ற பெரிய எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், பகைவர்களின்
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டுஉயிர்களை எல்லாம் கவர்வான்; அதைக் கண்டு
வெம் சின யானை வேந்தனும் இ களத்துமிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தனும், இக்களத்தில்
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் எனஇறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும்,
பண் கொளற்கு அருமை நோக்கிபுலவர் பாடும் பாடலை வேறுவகையால் பெறுவதற்குரிய அருமையை நினைத்தும்,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனேதன் உயிர் மேல் ஆசையின்றி வீழ்ந்து பெருமையுடையவன் ஆயினான்.
  
# 308 கோவூர் கிழார்# 308 கோவூர் கிழார்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்பொன்னை உருக்கி வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கிய நரம்புகளையும்,
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ்மின்னல் போன்ற தோல் போர்வையையும், வண்டிசை போன்ற இசையையும் உடைய சிறிய யாழை இசைக்கும்
நன்மை நிறைந்த நயவரு பாணபுலமை நிறைந்த, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் பாணனே!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல்,
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவேபெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது;
வேந்து உடன்று எறிந்த வேலே என்னைபெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றேசந்தனம் பூசிய மார்பில் தைத்து ஊடுருவிச் சென்றது;
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல்மார்பில் ஊடுருவிய ஒளி விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி, மிக்க வலிமையுடைய நம் தலைவன்
ஓச்சினன் துரந்த_காலை மற்றவன்ஓங்கி எறிந்தபோது. பகைவேந்தனின்
புன் தலை மட பிடி நாணசிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவேகளிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.
  
# 309 மதுரை இளங்கண்ணி கௌசிகனார்# 309 மதுரை இளங்கண்ணி கௌசிகனார்
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்குமாறு கொன்று, பகைவரைப்
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதேபோரில் வெல்லுதல் மற்ற எல்லா வீரர்களுக்கும் எளிதாகும்;
நல்_அரா உறையும் புற்றம் போலவும்நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும்,
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும்,
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறைவெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில்
உளன் என வெரூஉம் ஓர் ஒளிஉள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ்,
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவேவெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.
  
# 310 பொன்முடியார்# 310 பொன்முடியார்
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்இளையோனாக இருந்தபொழுது, பாலை ஊட்டினாலும் உண்ணமாட்டானாதலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடுசினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சியவனோடு
உயவொடு வருந்தும்-மன்னே இனியேகவலைகொண்டு வருந்தும் மனமே! இப்பொழுது,
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக,
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனேஇவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப,
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்புமார்பில் புண்படுத்தி நிற்கும் அம்பைச் சுட்டிக்காட்டியபொழுது,‘அதை நான் அறியேன்’ என்று கூறினான்,
மான் உளை அன்ன குடுமிகுதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன்,
தோல் மிசை கிடந்த புல் அணலோனேகேடயத்தின்மேல் விழுந்து கிடக்கும் குறுந்தாடிக்காரன்.
  
  
  
  
  
  
# 311 ஔவையார்# 311 ஔவையார்
களர் படு கூவல் தோண்டி நாளும்களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவைவண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை
தாது எரு மறுகின் மாசுண இருந்துஅழுக்குப் படிய, சாணப்பொடி பரவிக்கிடக்கும் தெருவில் அமர்ந்திருந்து,
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்குபலரின் குறைகளை விசாரித்துத் தீர்த்துவைத்த மலர்மாலை அணிந்த தலைவனுக்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்துஒருவரும் இல்லாமற்போய்விட்டார்களே! போர்க்களத்தில் 
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்சிறப்பு மிகுந்த சிவந்த கண்களில் புகையெழ நோக்கி, ஒரு
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனேகேடகத்தைக் கொண்டு அவனை மறைத்து நிற்கும் பெருந்தன்மையுடையவன் – (ஒருவரும் இல்லை மாதோ)
  
# 312 பொன்முடியார்# 312 பொன்முடியார்
ஈன்று புறந்தருதல் என் தலை கடனேமகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் தலையாய கடமை;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனேஅவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை;
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனேஅவனுக்குத் தேவையான வேலை உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை;
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனேஅவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை;
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கிஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனேபகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்புவது அந்த இளங்காளையின் கடமை.
  
# 313 மாங்குடி மருதனார்# 313 மாங்குடி மருதனார்
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்பல வழிகள் நிறைந்துள்ள நாட்டையுடைய பெரிய வலிமை மிக்க தலைவன்.
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சிகையில் பொருள் யாதொன்றும் உடையவன் இல்லையெனினும், பொருளை விரும்பி
காணிய சென்ற இரவல் மாக்கள்அவனைக் காணச் சென்ற இரவலர்,
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவயானைகளுடன் நெடிய தேர்களையும் விரும்பிக் கேட்டாலும் தருகின்ற கடமையையுடையவன்,
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்டஉப்பை வண்டிகளில் சுமந்து செல்லும் உப்பு வணிகர்களின் காட்டினில் இருக்கும்
கழி முரி குன்றத்து அற்றேகழிநீர் வந்து மோதும் குன்று போல் குவிந்திருக்கும் உப்பினைப் போன்றதாய் (அள்ள அள்ள உற்பத்தியாகும்)
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளேஇகழ்ச்சிக்கு உரியது அன்று அவன் உள்ளத்தில் எழும் எண்ணம்.
  
# 314 ஐயூர் முடவனார்# 314 ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன்இல்லத்திற்கு விளக்குப் போல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன்;
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகைபோரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய நெடுந்தகை;
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலைநடுகற்கள் விளங்கும் சருகுகள் நிறைந்த பாழிடங்களையும்,
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர்சிறிய கொட்டைகளையுடைய நெல்லி மரங்களையும் உடைய சிறிய ஊரில் வாழும்
குடியும் மன்னும் தானே கொடி எடுத்துகுடிமக்களில் அவனும் ஒருவன்; தானே கொடியை உயர்த்திக்
நிறை அழிந்து எழுதரு தானைக்குகட்டுக்கடங்காது வரும் பகைப்படையை
சிறையும் தானே தன் இறை விழுமுறினேஅணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே – தனது அரசனுக்குத் துன்பம் வந்தால்,
  
# 315 ஔவையார்# 315 ஔவையார்
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்மிகுதியாக உணவு உடையவனாயின் பரிசிலர்க்குக் கொடுத்து எஞ்சியதை உண்ணுபவன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்தான் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறவர்களுக்குக் கொடுப்பதைவிட இரவலர்க்கு அதிகமாகக் கொடுப்பான்;
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சிஅறிவில்லாதவர் மகிழக்கூடிய துணையாக இருப்பான்; நெடுமான் அஞ்சி
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போலவீட்டுத் தாழ்வாரத்தில் செருகப்பட்ட தீக்கடை கோல் போல்
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன்தன் ஆற்றல் வெளியே தோன்றாமல் ஒடுங்கி இருப்பதிலும் வல்லவன்; மேலும் அதனைக்
கான்று படு கனை எரி போலகடையும்போது வெளிப்படும் சுடர்த் தீயைப் போல
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலேவெளிப்படத் தோன்றுவதிலும் வல்லவன், தன் ஆற்றல் தோன்ற வேண்டுமிடத்தில்.
  
# 316 மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்# 316 மதுரை கள்ளி கடையத்தன் வெண்ணாகனார்
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்திதான் உண்ட கள்ளினை வாழ்த்தியவாறு,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்செத்தைகள் நிறைந்த, பெருக்கித் தூய்மை செய்யப்படாத முற்றத்தில்
நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோனேவிடியற்காலத்துக் களிப்பினால் ஏற்பட்ட மயக்கத்தால் உறங்குகின்றானே
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர்அவன் எம் தலைவன்; நாங்கள் அவனுடைய பாணர்கள்;
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன்நேற்று, தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணுவதற்குத் தன்
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இபெரிய, பக்கத்தில் செருகியிருக்கும் பழமையான வாளை ஈடு வைத்தான். இன்று இந்தக்
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டுகரிய தண்டையுடைய சிறிய யாழ் பணையம் ஆகும். இதனைவைத்துக்
ஈவது இலாளன் என்னாது நீயும்கொடுப்பதற்கு அவன் ஒன்றும் இல்லாதவன் என்று எண்ணாமல், நீயும்
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணியகொடிபோன்ற இடையையுடைய உன் பாடினி ஒளிவிடும் அணிகலன்களை அணிய,
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்ககள்ளையுடைய கலங்களையுடைய நாங்கள் மகிழ்ச்சிகொள்ள,.
சென்று வாய் சிவந்து மேல் வருகஅவனிடம் சென்று விருந்து உண்டு, வாய் சிவந்து பின்பு வருக – 
சிறு கண் யானை வேந்து விழுமுறவேசிறிய கண்களையுடைய யானையையுடைய பகைவேந்தன் போரில் விழுந்து இறந்ததினால்.
  
# 317 வேம்பற்றூர் குமரனார்# 317 வேம்பற்றூர் குமரனார்
வென் வேல் ……………………. வந்துவெற்றி பயக்கும் வேல் ——————————வந்து,
முன்றில் கிடந்த பெரும் களியாளற்குமுற்றத்தில் மிகுந்த களிப்புடன் கிடக்கும் இவனுக்கு,
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும்படுப்பதற்குத் தோல் இருந்தாலும், பாய் இருந்தாலும்
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லேஅல்லது வேறு எது இருந்தாலும் விரைந்து கொடுப்பீர்களாக;
வேட்கை மீள ———————————————-எமக்குப் பொருள்மேல் சென்ற விருப்பம் மீள ……………….
——————————- கும் எமக்கும் பிறர்க்கும்…………………………. எங்களுக்கும், மற்றவர்களுக்கும்,
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனேயாவருக்கும் கொடுத்துவிட்டு, (தனக்கு விரிக்கக்கூட இல்லாமல், வெறுந்தரையில்) துயிலை மேற்கொள்கிறான்.
  
# 318 பெருங்குன்றூர் கிழார்# 318 பெருங்குன்றூர் கிழார்
கொய் அடகு வாட தரு விறகு உணங்கபறித்த கீரை சமைக்கப் படாமல் வாடி வதங்க, கொண்டு வந்த விறகு உலர்ந்து கெட, (அரிசி இன்றி)
மயில் அம் சாயல் மாஅயோளொடுமயில் போன்ற சாயலும், கரிய நிறமும் உடைய அவன் மனைவியோடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரேபசியால் வாடும் இப்பெருந்தகையின் ஊர் முழுதும்;
மனை உறை குரீஇ கறை அணல் சேவல்வீடுகளின் இறைப்பில் வாழும் பெண்குருவியின் துணையாகிய கரிய கழுத்தையுடைய ஆண்குருவி,
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான்பாணர்களுடைய யாழ் நரம்பின் கோதுகளுடன், வலிமைமிக்க சிங்கத்தின்
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பைகதிர் போல் விரிந்த பீலி போன்ற பிடரி மயிரும் சேர்த்துச் செய்த கூட்டில்,
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியைக் கொண்டுவந்து தின்று தன்
புன் புற பெடையொடு வதியும்சிறிய முதுகுடைய பெட்டையோடு வாழும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினேபுதுவருவாய் உள்ளதாக இருக்கும் (இந்த ஊர்), வேந்தனுக்குத் துன்பம் வந்தால் -(அரிசி இன்றிப் பசியால் வாடும்)
  
# 319 ஆலங்குடி வங்கனார்# 319 ஆலங்குடி வங்கனார்
பூவல் படுவில் கூவல் தோண்டியசெம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் கிணற்றைத் தோண்டியதால் உண்டாகிய
செம் கண் சில் நீர் பெய்த சீறில்சிவந்த இடத்தில் சிறிதளவு ஊறிய நீரை முகந்துவைத்த, எங்கள் சிறிய வீட்டின்
முன்றில் இருந்த முது வாய் சாடிமுற்றத்தில் உள்ள பழைய அகன்ற வாயையுடைய சாடியின்
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்றுஅடியில் கொஞ்சம் கிடக்கிறது; அது சிறிதும் குற்றமற்ற நல்ல நீர்;
படலை முன்றில் சிறுதினை உணங்கல்படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி,
புறவும் இதலும் அறவும் உண்கு எனபுறாவும், காடையும், முழுவதும் கொத்தித்தின்ன என விடுத்து அவற்றைப் பிடித்துச்
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்சமைப்பதற்கு, இப்போது மாலை நேரம் கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால்,
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்துமுயலைச் சுட்டுச் சமைத்த கறியையாகிலும் தருகிறோம். எம் இல்லத்திற்குள் வந்து
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாணஇங்கே தங்குக, அறிவு முதிர்ந்த பாணனே!
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவிவளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், நடுங்கும் தலையையுடைய இளம் கன்றைப்
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும்பரட்டைத்தலைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்களில் கன்றுகளாகப் பூட்டி விளையாடும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்சிற்றூருக்குத் தலைவனான என் கணவன். நேற்றைய நாளில்,
வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின்வேந்தனின் கட்டளைப்படி போருக்குச் சென்றிருக்கிறான்; அவன் வந்ததும், உன்
பாடினி மாலை அணியமனைவிக்குப் பொன்மாலை அணிவித்து,
வாடா தாமரை சூட்டுவன் நினக்கேஉனக்கு வாடாத பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.
  
# 320 வீரை வெளியனார்# 320 வீரை வெளியனார்
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிவீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால்
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்அங்குப் பந்தல் வேண்டாத அளவுக்குப் பலர் உறங்கக்கூடிய நிழலில்,
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து எனயானை வேட்டைக்காரன், நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்க,
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்விலங்குகளைப் பிடிப்பதற்காகக் கட்டிவைக்கப்படும் பார்வை இளம்பெண்மானைத் தழுவி, வேறு ஒரு
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாடவேலை எதுவும் இல்லாத தனி ஆண்மான் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்க,
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்மான்கள் புணர்ச்சி இன்பத்தை அனுபவிப்பதைக் கண்ட வேட்டுவனின் மனைவி,
கணவன் எழுதலும் அஞ்சி கலையேகணவன் விழித்துக்கொள்வான் என்று அஞ்சியும், ஆண்மான்
பிணை_வயின் தீர்தலும் அஞ்சி யாவதும்பெண்மானை விட்டு விலகி ஓடிவிடும் என்று அஞ்சியும், சிறிதும்
இல் வழங்காமையின் கல்லென ஒலித்துவீட்டில் நடமாடாமல் இருக்க, கல்லென்று ஆரவாரித்து,
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சிமான் தோலின் மேல் பரப்பி உலரவைத்த தினை அரிசியான தீனியைக் 
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு எனகாட்டுக் கோழியோடு, காடையும் கவர்ந்து தின்று கொண்டிருக்க, அவற்றைப் பிடித்து,
ஆர நெருப்பின் ஆரல் நாறசந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்ட ஆரல் மீனின் மணம் கமழ,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்துண்டு துண்டாக அறுத்த நிறைந்த இறைச்சியைச் சமைத்து,
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்திகரிய பெரிய சுற்றத்தாரோடே ஒன்றாகக் கூடியிருந்து இனிதே உண்டு
தங்கினை சென்மோ பாண தங்காதுதங்கிச் செல்க பாணனே! குறையாமல்
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக்
அருகாது ஈயும் வண்மைகுறையாமல் கொடுக்கும் வள்ளல்தன்மையையும் 
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரேபுகழையும் உடைய நெடுந்தகை பாதுகாக்கும் இந்த ஊரில் – (தங்கிச் செல்க பாணனே!)
  
  
  
  
  
  
# 321 உறையூர் மருத்துவன் தாமோதரனார்# 321 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
பொறி புற பூழின் போர் வல் சேவல்புள்ளிகள் நிறைந்த முதுகையுடைய குறும்பூழ்ப் பெண்பறவையின் போர்புரிவதில் ஆற்றலுடைய சேவல்
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள்மேல் தோல் நீக்கிய, இனிமை பொருந்திய வெண்ணிறமான எள்ளின்
சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட காய்ச்சலை, தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து உண்டு, உடனே
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்னவேனிற்காலத்தில் பூத்த கோங்குப் பூவின் கொட்டை போன்ற
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்டவளைந்த அழகிய காதுகளையுடைய, வரப்பில் வாழும் எலியை விரட்ட,
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்அவ்வெலி தழைத்து விளங்கும் வரகின் உயர்ந்த இளங்கதிர்களில் மறைந்துகொள்ளுகின்ற
வன்_புல வைப்பினதுவே சென்றுபுன்செய் நாட்டில் உள்ளது, அங்குச் சென்று
தின் பழம் பசீஇ …………….. னனோ பாணபறித்துத் தின்னப்படும் பழம் பசந்து ………………… பாணனே! 
வாள் வடு விளங்கிய சென்னிவாளால் வெட்டப்பட்டு வடுவுடன் விளங்கும் தலையையுடைய,
செரு வெம் குருசில் ஓம்பும் ஊரேபோரை விரும்பும் தலைவன் பாதுகாக்கும் ஊர்.- (புன்செய் நாட்டில் உள்ளது)
  
# 322 ஆவூர்கிழார்# 322 ஆவூர்கிழார்
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்னநிலத்தை உழுததால் ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் நன்கு முளைத்த கொம்பு போல்,
கவை முள் கள்ளி பொரி அரை பொருந்திபிளவுபட்ட முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு,
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும்
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின்சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்தால்,
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடையஅந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், கரிப்பிடித்த பாத்திரங்கள் உடையுமாறு
மன்றில் பாயும் வன்_புலத்ததுவேஉருட்டித் தள்ளிவிட்டு வீட்டு முற்றத்தில் பாயும் புன்செய். நிலத்தில் உள்ளது –
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலதுகரும்பை ஆட்டும் ஆலைகள் ஒலியெழுப்பினால், அருகே உள்ள நீர்நிலைகளில்,
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும்
தண் பணை ஆளும் வேந்தர்க்குவளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரேகண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவனின் ஊர்.
  
# 323 ……………கிழார்# 323 ……………கிழார்
புலி_பால் பட்ட ஆமான் குழவிக்குபுலியிடம் சிக்கிக்கொண்டு இறந்த ஒரு காட்ட்ப்பசுவின் கன்றுக்குச்
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும்சினம் இல்லாத முதிய பசு தன் கன்று எனச் சேர்த்துத் தன் பாலை உண்ணக்கொடுக்கும். 
கா ………………………….. பரிசிலர்க்கு………………………………………. பரிசிலர்களுக்கு 
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகைஅவர் நினைத்ததை நினைத்தவாறு அளிக்கும், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாத ஈகைக் குணமுடைய,
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள்வெள்ளிய வேல் ஏந்திச் செய்யும் போர் இருந்தால், தன் ஒளி பொருந்திய வாளை,
கறை அடி யானைக்கு அல்லதுஉரல் போன்ற காலடிகளையுடைய யானையை வீழ்த்துவதற்கு அன்றி
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரேஉறையிலிருந்து எடுப்பதை அறியாத வேற்படையை உடைய, தலைவனின் ஊர்.
  
# 324 ஆலத்தூர் கிழார்# 324 ஆலத்தூர் கிழார்
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலைஆண் காட்டுப் பூனையின் பார்வை போன்ற அஞ்சத்தக்க பார்வையையும், பெரிய தலையையும்,
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் வீசும் மெல்லிய வாயையும் உடைய,
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின், ஒருவரை ஒருவர் நேசிக்கும் சிறுவர்கள்,
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள்சிறிய இலையைக்கொண்ட உடைவேல் மரத்தின், உள்ளே துளையமைந்த வெண்ணிற முள்ளை,
ஊக நுண் கோல் செறித்த அம்பின்ஊகம் புல்லின் சிறிய தண்டில் செருகிய அம்பை,
வலாஅர் வல் வில் குலாவர கோலிவளாரால் செய்யப்பட்ட வலிய வில்லில் வைத்து வளைவாக இழுத்து,
பருத்தி வேலி கருப்பை பார்க்கும்பருத்தி வேலியின் அடியில் தங்கியிருக்கும் எலியைக் குறிபார்க்கும்
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர்புன்செய் நிலம் சூழ்ந்த அழகிய குடிகளை உடைய சிறிய ஊரில்,
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்தகுமிழம் பழத்தை உண்ணும் வெள்ளாடுகள் பின் வாய் வழியாக இட்ட
வெண் காழ் தாய வண் கால் பந்தர்வெண்ணிறமுள்ள பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற வளப்பமான தூண்கள் உள்ள பந்தலின் கீழ்,
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்துஇடையன் கொளுத்திய சிறிய தீயின் வெளிச்சத்தில்,
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகைபாணர்களுடன் இருந்த, நாணமாகிய நற்பண்பு உள்ள தலைவன்,
வலம் படு தானை வேந்தற்குவெற்றி பயக்கும் படையையுடைய வேந்தனுக்கு,
உலந்து_உழி உலக்கும் நெஞ்சு அறி துணையேஅவன் அல்லல்படும்போது தானும் அவனோடு சேர்ந்து அல்லல்படும் மனமறியக்கொண்ட உயிர்த் துணைவன்.
  
# 325 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்# 325 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தில்
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து எனபுதிதாக வந்த பெரு மழை அவ்விடத்தில் குறைவாகப் பெய்து அவ்விடத்தைவிட்டு நீங்க,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்பள்ளங்களில் தங்கிய சிறிதளவு நீரை, கன்றையுடைய பசு குடித்துவிட்டதால்,
செறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்அங்குள்ள மக்கள், சேற்றைத் தோண்டியதால் ஊறிய கலங்கலான நீரை
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கைமுறைவைத்துப் பகிர்ந்து உண்ணும் நிறைவில்லாத வாழ்க்கையையுடைய,
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்முள்ளம்பன்றியைக் கொல்லுகின்ற, சொல்லியதைச் சொல்லியவண்ணம் செய்து முடிக்கும் ஆடவர்கள்
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலைஅறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடுமரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்திய
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்சிறிய வீட்டின் முற்றத்தில் எல்லாருக்கும் பகிர்ந்து கூறுபோடுவதற்காக,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்நெருப்பில் வேகவைத்த கொழுத்த புலாலின் மணம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்துதெருவெங்கும் கமழும் – வலிதாக எழுப்பப்பட்ட ஊர் மன்றத்தில் நிற்கும்
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்உலர்ந்த தலையையுடைய இலந்தை மரத்தின் அசையும் நிழலில்,
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும்மெல்லிய தலையையுடைய இளஞ்சிறுவர்கள் அம்பெய்தி விளையாடும் – 
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்கடத்தற்கரிய காவற்காடுகள் உள்ள நாட்டில் உள்ளது, வெற்றி பயக்கும் வேலையுடைய
வேந்து தலைவரினும் தாங்கும்வேந்தன் தன் படையுடன் வந்தாலும் தாங்கக்கூடிய – 
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரேகுறையாத ஈகையையுடைய நெடுந்தகையாகிய தலைவனுடைய ஊர்,