புறநானூறு 201-225

  
# 201 கபிலர்# 201 கபிலர்
இவர் யார் என்குவை ஆயின் இவரேஇவர்கள் யார் என்று கேட்பாயென்றால், இவர்கள்தாம்
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்ஊர் எல்லாவற்றையும் இரவலர்க்கு வழங்கி, தேருடன் உள்ளவற்றை எல்லாம்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசைமுல்லைக் கொடிக்கு வழங்கிய அழியாத நற்புகழையும்
படு மணி யானை பறம்பின் கோமான்ஒலிக்கும் மணியையுடைய யானையையும் உடைய பறம்புமலையின் கோமான்
நெடு மா பாரி_மகளிர் யானே                        5மிகப் பெரியவனாகிய பாரியின் பெண் மக்கள், நான்தான்
தந்தை தோழன் இவர் என் மகளிர்இவர்களின் தந்தையின் தோழன், இவர்கள் என் பிள்ளைகள்,
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனேஅந்தணனாகிய புலவன் கொண்டுவந்திருக்கிறேன்,
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றிநீதான், வடதிசை முனிவனின் ஓமகுண்டத்தில் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசைசெம்பு கலந்து செய்யப்பட்ட மிக உயரமான கோட்டையையும்
உவரா ஈகை துவரை ஆண்டு                    10வெறுப்பில்லாத கொடையை உடையவராய், துவராபதி என்னும் நகரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்தநாற்பத்தியொன்பது தலைமுறையாக வந்த
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்வேளிர்களுக்கு வேளாய் இருப்பவன், வெற்றிதரும் போரினையுடைய தலைவனே!
தார் அணி யானை சேட்டு இரும் கோவேமாலை சூட்டிய யானையையுடைய பெரிய இருங்கோவே!
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றியமுயற்சியைக் கடமையாகக் கொண்டதனால் பாணர்க்குச் செய்யும் கடமைகளைச் செய்த
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்                       15தழைத்த தலைமாலையைக் கொண்ட புலிகடிமாலே!
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்துநான் இவர்களை உனக்குத் தர, நீ பெற்றுக்கொள்வாயாக, வானத்தால் சுற்றிலும் மூடப்பட்டு
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல்பெரிய கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் அணுக முடியாத வலிமையையுடைய
பொன் படு மால் வரை கிழவ வென் வேல்பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவனே! வெற்றி வேலையுடைய
உடலுநர் உட்கும் தானைபகைவர் அஞ்சும் படையையுடைய
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே          20கேடு இல்லாத நாட்டுக்கு உரியவனே!
                                     
# 202 கபிலர்# 202 கபிலர்
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்டவெட்சிச் செடியையுடைய காட்டில் வேட்டுவர் விரட்டுவதால்
கட்சி காணா கடமா நல் ஏறுதனக்குப் புகலிடம் காணாத காட்டு மாட்டின் நல்ல காளை
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிரமலைச்சாரலிலுள்ள மணிகள் மேலே கிளம்பவும், சிதறிய பொன் மினுங்கவும்,
கடிய கதழும் நெடு வரை படப்பைவேகமாக ஓடும் நீண்ட மலைப்பகுதியில்
வென்றி நிலைஇய விழு புகழ் ஒன்றி          5வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்சிற்றரையம், பேரரையம் என்று இரு பகுதிகளாகப் பெயர் கொண்ட அச்சம் பொருந்திய பழைய ஊரில்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவியகோடி கோடியாகப் பொருளை உங்களுக்கு வழங்கிய
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனிநீடிய நிலையையுடைய அரையம் என்ற ஊருக்கு நேர்ந்த அழிவைக் கேட்பாயாக இப்போது,
நுந்தை தாயம் நிறைவு_உற எய்தியஉன் தந்தையின் உரிமைச் செல்வத்தை நிறையப் பெற்ற
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல்                       10தழைத்த தலைமாலையையுடைய புலிகடிமாலே!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்உம்மைப் போல் அறிவுடைய உம்மவன் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையைபுகழ்ந்து பாடும் செய்யுளைச் செய்த கழாத்தலையார் என்னும் புலவரை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்அவமதித்ததனால் உண்டான பலனே அது, நன்கு இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர்இவர்கள் எவ்வி என்பவனின் பழைய குடியில் வந்தவர்கள், மேலும் இவர்கள்
கைவண் பாரி_மகளிர் என்ற என்                      15கொடைப்பண்புடைய பாரியின் மகளிர் என்ற என்
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெருமதெளிவில்லாச் சிறுசொல்லைப் பொறுத்துக்கொள்வாயாக, பெருமானே!
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்துஉன்னை விட்டுச் செல்கின்றேன், வெல்வதாக உன் வேல், மலைச்சரிவில்
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கைஅரும்புகளே இல்லாமல் மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின்
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல்கரிய புறவிதழையுடைய ஒளிவிடும் பூ பரந்த சிறுதூண் போன்ற பாறை
இரும் புலி வரி புறம் கடுக்கும்                  20பெரிய புலியின் வரிகளையுடைய முதுகினைப் போன்றிருக்கும்
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயேபெரிய மலையிடத்து ஊர்களைக் கொண்ட நாட்டை உடையவனே!
                                     
# 203 ஊன்பொதி பசுங்குடையார்# 203 ஊன்பொதி பசுங்குடையார்
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும்ஏற்கனவே பொழிந்து கழிந்துவிட்டோமே என்று வானம் பெய்யாது போனாலும்,
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும்ஏற்கனவே விளைந்துவிட்டோமே என்று நிலம் தன் வளத்தை ஒளித்துவைத்துக்கொண்டாலும்,
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கைஎல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை இல்லாமற் போய்விடும்,
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின்ஏற்கனவே வாங்கியிருப்பினும் இன்னும் தாருங்கள் என்று எம்மைப் போன்றவர்கள் இரந்துகேட்டால்
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் 5       முன்னரேயே வாங்கிவிட்டீர்களே என்று உம்மைப் போன்றவர்கள் மறுப்பது
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்இனியதல்ல, நன்கு இயற்றப்பட்ட தேரையுடைய தலைவனே!
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட,
உள்ளி வருநர் நசை இழப்போரேசெல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவராவர்,
அனையையும் அல்லை நீயே ஒன்னார்அப்படிப்பட்டவனும் நீ அல்லன், பகைவரது
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என            10அரிய அரண் அவரிடமே இருக்கும்போதும், உங்களுடையது என்று
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய்பாணர்க்குக் கொடுத்துக் கடமையாற்றும் வள்ளலே!
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவேஎம் தலைவனே! நீ இரவலரைப் பாதுகாப்பதைக் கடமையாகப் பூண்டுகொள்வாயாக.
                                     
# 204 கழைதின் யானையார்# 204 கழைதின் யானையார்
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர்ஒருவரிடம் போய் ‘எனக்குக் கொடு’என்று கேட்பது இழிவானது, அதற்குப் பதிலாகக்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று‘கொடுக்கமாட்டேன்’ என்று சொல்வது அதனைக் காட்டிலும் இழிவானது;
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர்‘இதனைப் பெற்றுக்கொள்’ என்று ஒருவருக்குக் கொடுப்பது உயர்வானது, அதற்குப் பதிலாக
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று‘வேண்டாம்’ என்று மறுப்பது அதனைக் காட்டிலும் உயர்வானது;
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல்               5தெளிந்த நீர்ப்பரப்பாக ஒலிக்கும் அலைகளையுடைய பெரிய கடலின் நீரை
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரேஉண்ணமாட்டார் தண்ணீர் வேட்கை உள்ளவர்கள்;
ஆவும் மாவும் சென்று உண கலங்கிபசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று குடித்ததினால் கலங்கிப்போய்
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்சகதியுடன் கிடக்கும் சிறிதளவு நீரேயானாலும்
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்அந்த உண்ணுகின்ற நீரையுடைய இடத்திற்குச் செல்லும் வழிகள் பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை               10தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தீய சகுனங்களையும், புறப்பட்ட நேரத்தையும் பழிப்பாரேயன்றி
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால்தாம் நாடிச் சென்றவரைப் பழிக்கமாட்டார், அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்வெறுப்புக்கொள்ளமாட்டேன், ஓரியே! ஆகாயத்தில்
கருவி வானம் போலமின்னல், இடி ஆகிய தொகுதியையுடைய மழை போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னேஅளவின்றிக் கொடுக்கும் கொடையாளன் உன்மேல் – (வெறுப்புக்கொள்ளமாட்டேன், ஓரியே!)
                                     
# 205 பெருந்தலை சாத்தனார்# 205 பெருந்தலை சாத்தனார்
முற்றிய திருவின் மூவர் ஆயினும்நிரம்பிய செல்வத்தையுடைய மூவேந்தர்களே என்றாலும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமேவிருப்பத்துடன் எங்களைப் பேணிக் கொடுக்காதவற்றைப் பெற விரும்பமாட்டோம்,
விறல் சினம் தணிந்த விரை பரி புரவிவெற்றிபெற்றதால் சினம் தணிந்த விரைந்த ஓட்டத்தையுடைய குதிரையை உடைய,
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர்அஞ்சிவந்த பகைவர்க்குப் புகலிடமாய் ஆகி, அஞ்சாத பகைவரின்
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை         5முயற்சியையுடைய எழுச்சிமிக்க உள்ளத்தைக் கெடுத்த, வாள்போரில் சிறந்த படையினையுடைய,
வெள் வீ வேலி கோடை_பொருநவெண்மையான பூவையுடைய முல்லை வேலியையுடைய கோடை என்னும் மலைக்குத் தலைவனே!
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கியசிறியதாகவும், பெரிதாகவும் அரிய வழிகளால் தடுக்கப்பட்ட
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்மான் கூட்டத்தை அழித்த விரைந்த ஓட்டத்தையுடைய சினங்கொண்ட நாயையும்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுகவலிய வில்லினையும் கொண்ட வேட்டுவனே! நீ துயர் இல்லாதவனாக இருப்பாயாக,
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து                10இடியின் மிக்க ஓசையையுடைய புதுமழையைக் கொண்டுவர, கீழிறங்கிக்
கடல்_வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூகடலில் திரண்ட முதன்மை மேகம்
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடுநீர் இல்லாமல் திரும்பாதது போல, தேருடன்,
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்மின்னுகின்ற கொம்பினை ஏந்திய தலைமைப் பண்புடைய
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பேயானை இல்லாமல் திரும்பமாட்டாது பரிசிலர்களின் சுற்றம்.
                                     
# 206 ஔவையார்# 206 ஔவையார்
வாயிலோயே வாயிலோயேவாயில் காப்பவனே! வாயில் காப்பவனே!
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்வள்ளல்களின் செவியாகிய வயலில், சிறந்து விளங்கும் சொற்களாகிய விதையை விதைத்து, தாம்
உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்துவிரும்பும் பரிசிலைப் பெற்றுக்கொள்ளும் வலிமையான உள்ளத்தையும்
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கைதகுதியறிந்து போற்றுதலை வருந்தி வேண்டும் கொள்கையையும் உடைய, இந்தப் பரிசில் வாழ்க்கை வாழும்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே             5பரிசிலர்க்கு அடைக்காத வாசலைக் காப்பவனே!
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சிவிரைந்த ஓட்டத்தையுடைய குதிரைத் தலைவன், அதியமான் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்தன் தரத்தை அறியவில்லை போலும்! என் தரத்தை அறியவில்லை போலும்!
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து எனஅறிவும் புகழும் உடையோர் இறந்துபோய்விட்டதால்
வறும் தலை உலகமும் அன்றே அதனால்வறுமைப்பட்ட இடமாய்ப் போய்விடவில்லையே இந்த உலகமும், அதனால்,
காவினெம் கலனே சுருக்கினெம் கல பை                10தூக்கித்தோளில் போட்டோம் எம் இசைக்கலங்களை, இழுத்துக் கட்டினோம் அந்த மூட்டைகளை,
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்மரம் வெட்டச் செல்லும் தச்சனின் தேர்ச்சி மிக்க சிறுவர்கள்
மழு உடை காட்டு_அகத்து அற்றேகோடரியுடன் காட்டுக்குள் சென்றது போல
எ திசை செலினும் அ திசை சோறேஎந்தப் பக்கம் சென்றாலும் அந்தப் பக்கம் சோறு கிடைக்கும்.
                                     
# 207 பெருஞ்சித்திரனார்# 207 பெருஞ்சித்திரனார்
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோஎழுவாயாக நெஞ்சமே! இனி நாம் போவோமாக, யார்தான் –
பருகு அன்ன வேட்கை இல்_வழிகண்ணால் பருகுவது போன்ற ஆசை இல்லாத இடத்தில்
அருகில் கண்டும் அறியார் போலஅருகில் இருப்பதைக் கண்டும் கண்டறியாதவர் போல
அகம் நக வாரா முகன் அழி பரிசில்உள்ளம் மகிழும்படி கொடுக்காமல், முகம் மாறுபட்டுத் தருகின்ற பரிசிலை
தாள் இலாளர் வேளார் அல்லர்                       5முயற்சியே இல்லாதவர் விரும்பாமல் இருக்கமாட்டார் (முயற்சியுடையோர் விரும்பார்)
வருக என வேண்டும் வரிசையோர்க்கேவாருங்கள் என்று வேண்டி வரவேற்கும் தரமுடையவர்க்கோ
பெரிதே உலகம் பேணுநர் பலரேஉலகம் பெரியது, அதில் விரும்பிப் பேணுவோரும் பலர்;
மீளி முன்பின் ஆளி போலமிக்க வலிமையையுடைய யாளியைப் போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளெனஉள்ளம் உள்ளுக்குள் அவிந்து அடங்கிப்போகாமல் (எழுவாயாக நெஞ்சமே!) அனைவரும் அறிய
நோவாதோன்_வயின் திரங்கி                  10இரக்கம் காட்டாதவனிடத்தில் வருந்தி நின்று
வாயா வன் கனிக்கு உலமருவோரேகிடைக்காத கன்றிப்போன கனிக்கு அலைபவர் – (யார்தான்)
                                     
# 208 பெருஞ்சித்திரனார்# 208 பெருஞ்சித்திரனார்
குன்றும் மலையும் பல பின் ஒழியபல குன்றுகளும் மலைகளும் பின்னே செல்ல
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு எனஅவற்றைக் கடந்து வந்தேன், பரிசிலைக் கொண்டு செல்வதற்கு என்று
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டுசொல்லி நின்ற என் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, இப்பரிசிலை எடுத்துக்கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னைஇப்படியே செல்லட்டும் அவர்கள் என்று சொல்ல என்னை
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன்    5எப்படி அறிந்தான் பகைவரால் தடுத்தற்கு அரிய காவலன்?
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்என்னப் பார்க்காமலேயே கொடுத்துவிட்ட இந்தப் பரிசிலைப் பெறுவதற்கு, நான் ஒரு
வாணிக பரிசிலன் அல்லேன் பேணிபாட்டினை விற்கும் வியாபாரப் பரிசிலன் அல்லன், உபசரித்து
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்தினையளவே ஆயினும் இனியது, பரிசிலரின்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினேதிறத்தின் அளவு அறிந்து கொடுத்து வழியனுப்பினால்
                                     
# 209 பெருந்தலை சாத்தனார்# 209 பெருந்தலை சாத்தனார்
பொய்கை நாரை போர்வில் சேக்கும்பொய்கையில் மேய்ந்த நாரை, வைக்கோல் போரில் வந்து தங்கும்
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர்நெய்தல் நிலத்து அழகிய வயல்வெளியில் நெல்லை அறுக்கும் உழவர்கள்
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல்மொட்டு அவிழ்ந்து மென்மையான இதழ்கள் நெகிழ்ந்த ஆம்பலின்
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல்அகன்ற இலையில் மதுவை உண்ட பின்பு, தெளிந்த கடலின்
படு திரை இன் சீர் பாணி தூங்கும்         5ஒலிக்கும் அலைகளின் இனிய சீரான தாள ஓசையில் தூங்கும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருநநன்செய் நிலங்களைக் கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டின் வீரனே!
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்துபல பழங்களையும் விரும்பி, தாம் பெரிதும் வாழும் ஆகாயத்தில் விசைத்தெழுந்து
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னிபெரிய மலையின் குகைகள் எதிரொலிக்கச் சென்று
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்றுபழங்களையுடைய பெரிய மரத்தில் கனிகள் தீர்ந்துபோய்விட மனம் வருந்தி
பெறாது பெயரும் புள் இனம் போல நின்               10பழங்கள் கிடைக்கபெறாமல் திரும்பி வரும் பறவைக் கூட்டம் போல, உன் மேலுள்ள
நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென்ஆசை அழைத்து வர வந்து, உன் புகழைக் கூறும் பரிசிலனாகிய நான்
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுநவெறுங்கையுடன் திரும்புவேனோ? வாள்போரில் மேம்பட்டவனே!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்நீ எனக்குக் கொடுக்கவில்லை என்றாலும் வருந்தமாட்டேன்,
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள்நோய் இன்றி இருப்பாயாக, பெருமானே! நம்மிடையே உள்ள
குறு நணி காண்குவது ஆக நாளும்            15மிக அண்மையான நெருக்கத்தைக் காண்பதாகுக – நாள்தோறும்
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழிமணம் மிக்க பலவான நன்கு வளர்ந்த கூந்தலையும், தேன் போன்ற இனிய சொல்லையும்
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும்தெரிந்தெடுத்த அணிகலன்களையும் உடைய மகளிர் உன்னுடனிருக்கும் இனிய காலத்தை எதிர்நோக்கும்
பெரு வரை அன்ன மார்பின்பெரிய மலையைப் போன்ற மார்பினையுடைய
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையேபோரை விரும்பும் முருகனை ஒத்தவனே! உன் நாளோலக்கம் – (நம்முள் குறு நணி காண்குவது ஆக)
                                     
# 210 பெருங்குன்றூர் கிழார்# 210 பெருங்குன்றூர் கிழார்
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காதுஉயிர்களைப் பாதுகாக்கும் உன்னுடைய மேன்மையான நிலையை எண்ணிப்பாராமல்,
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடுஅன்பு நீங்கிய அறம் இல்லாத பார்வையுடன்
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்உம்மைப் போன்றவர் யாவரும் இப்படிப்பட்டவராய் இருந்தால்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோஎம்மைப் போன்றவர்கள் இங்கு பிறவாதிருப்பார்களாக,
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி               5குற்றமில்லாத கற்பினையுடைய எம்மை விரும்பிய மனைவி
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின்சிறிதே உயிர் உடையவளாய் இருந்தால் என்னை
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால்நினைக்காமல் இருக்கமாட்டாள், அதனால்
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியஅறன் இல்லாத கூற்றம் முறைகேடாக உயிர்கொள்ளத் துணிய,
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் எனஇறந்துவிட்டானோ, என் உயிரும் போகட்டும் என்று
நுவல்வு_உறு சிறுமையள் பல புலந்து உறையும்        10சொல்லுகின்ற துன்பத்தையுடையவளாய்ப் பலவாறு வெறுத்துத் தங்கியிருக்கும்
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலைமனையோளின் இடுக்கண் தீர, இங்கிருந்து
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண்புறப்பட்டேன், வாழ்க வேந்தனே! இங்கே பார்!
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர்வருந்திய மனத்தோடு போகிறேன், உன்னைப் பகைத்தவர்களின்
அரும் கடி முனை அரண் போலஅரிய காவலையுடைய முனையிடத்து அரண் போல
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே          15பெரிய செயலற்ற என் வறுமையை முன்னே போகவிட்டு.
                                     
  
  
  
  
  
# 211 பெருங்குன்றூர் கிழார்# 211 பெருங்குன்றூர் கிழார்
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறுஅஞ்சத்தக்க தன்மையையுடைய, கடும் சினமுள்ள மேகத்திலுள்ள இடி
அணங்கு உடை அரவின் அரும் தலை துமியஅஞ்சுகின்ற பாம்பின் அணுகமுடியாத தலை துண்டாக,
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிரநிலப்பரப்பை நின்று பார்ப்பது போன்ற நீண்ட மலை பிறழும்படியாகவும்
குன்று தூவ எறியும் அரவம் போலசிறிய மலை சிதறும்படியாகவும் இடிக்கும் ஓசையைப் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று     5முரசு ஓங்கி ஒலிக்கும் படையுடனே முன்னேறிச் சென்று
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின்அரசுகள் வீழ எதிர்நின்று கொல்லும் புகழ் அமைந்த தலைவனே! உன்னை
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென்நினைத்து வந்த உயர்ந்த நிலையையுடைய பரிசிலனாகிய நான்
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனநீ வள்ளல் என்பதால் எம்மை வணங்கிப் பரிசில் தருவான் இவன் என்று
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின்எம்மை ஏற்றுக்கொள்ளாத மாந்தரின் கொடுமையை உனக்குக் கூறவும் நீ
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள்              10நினைத்ததையே உறுதியாகச் செய்துமுடித்தாய், முதல் நாள்
கை உள்ளது போல் காட்டி வழி நாள்பரிசில் கையில் உள்ளது போல் காட்டி, அடுத்த நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்அது பொய்யாகிப் போன வேறுபட்ட நிலையை எண்ணி நான் வருந்தியதற்கு
நாணாய் ஆயினும் நாண கூறி என்நீ வெட்கப்படவில்லை, என்றாலும் நீ வெட்கப்படும்படி சொல்லி என்
நுணங்கு செம் நா அணங்க ஏத்திநுணுக்கமாக ஆய்வுசெய்யும் செம்மையான நாக்கு வருந்தும்படி, உன்னைப் புகழ்ந்து
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின்          15பாடப்பாட அந்த பாடு புகழை ஏற்றுக்கொண்ட உன்
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிவெற்றி பொருந்திய அகன்ற மார்பினை வணங்கி வாழ்த்திப்
செல்வல் அத்தை யானே வைகலும்போகிறேன். நான், நாள்தோறும்,
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறிஉணவில்லாததால் என் வீட்டின் பழைய சுவர்களில் வேறுவேறு இடங்களில் மாறிமாறித் தோண்டிய
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்வீட்டு எலிகள் இறந்து கிடக்கும் பழைய சுவர்களையுடைய வீட்டில்
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து               20என் மனைவியின் முலைகளில் பால் இல்லாததால், பலமுறை சுவைத்தும் ,
முலை கோள் மறந்த புதல்வனொடுபால் குடிப்பதையே மறந்துவிட்ட என் மகனோடு
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தேவீட்டில் வறுமையில் வாடும் என் மனைவியின் ஒளிபொருந்திய நெற்றியை நினைத்து –
                                     
# 212 பிசிராந்தையார்# 212 பிசிராந்தையார்
நும் கோ யார் என வினவின் எம் கோ“உம் அரசன் யார்?” என்று என்னைக் கேட்பீராயின், எம் அரசன்
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள்உழவர்களுக்காக வடிக்கப்பட்ட, முதிர்ந்த விரும்பத்தகுந்த கள்ளை
யாமை புழுக்கின் காமம் வீட ஆராஆமையின் அவித்த இறைச்சியுடன் ஆசைதீர அவ்வுழவர்கள் உண்டு,
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅவதக்கிய கொழுத்த ஆரல் மீனைத் தம் கன்னத்தில் அடக்கித்
வைகு தொழில் மடியும் மடியா விழவின்               5தம்முடைய தொழிலை மறந்துபோகும், நீங்காத விழாக்களையும்
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர்புதுவருவாயையும் உடைய வளமான சோழநாட்டில், பாணர்களின்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகிவருத்தமடைந்த சுற்றத்தாரின் பசிக்குப் பகையாக இருக்கும்,
கோழியோனே கோப்பெருஞ்சோழன்உறையூரில் வாழ்பவன் கோப்பெருஞ்சோழன்.
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇஅவன் குறையற்ற நண்பர் பொத்தியாரோடு கூடி
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே         10உண்மையான பெருமகிழ்ச்சியோடு நாள்தோறும் மகிழ்ந்து –
                                     
# 213 புல்லாற்றூர் எயிற்றியனார்# 213 புல்லாற்றூர் எயிற்றியனார்
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள்நெருங்கி வரும் போரில் வெல்லும் ஆற்றலும் மிகுந்த முயற்சியும் உடையவனாகிய
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தேவெண்கொற்றக்குடையுடன் விளங்கும் வெற்றி பொருந்திய வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்துகிளர்ந்தெழும் கடல் சூழ்ந்த, இந்தப் பரந்த இடத்தையுடைய உலகத்தில்,
நின் தலை வந்த இருவரை நினைப்பின்உன்னை எதிர்த்து வந்த இருவரையும் எண்ணிப்பார்த்தால்,
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்        5அவர்கள் தொன்றுதொட்டு வரும் வலிமையுடைய உன் பகைவராகிய சேரரோ பாண்டியரோ அல்லர்.
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்போரில் வெற்றிபெறும் நோக்கத்தோடு உன்னை எதிர்த்து வந்தவர்கள்
நினையும்_காலை நீயும் மற்று அவர்க்குசிந்தித்துப் பார்த்தால், நீ அவர்களுக்குப்
அனையை அல்லை அடு_மான் தோன்றல்பகைவன் அல்லன். பகைவர்களைக் கொல்லும் யானைகளையுடைய தலைவனே!
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீபரந்துபட்ட நல்ல புகழை அடைந்து, நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும்         10தேவருலகம் சென்ற பிறகு,
ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றேநீ விட்டுச்சென்ற அரசுரிமை அவர்களுக்கு உரியதுதானே?
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்ஆதலால், அவ்வாறு ஆதல் நீ அறிவாய். மேலும்
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயேநான் சொல்வதை இன்னும் நன்றாகக் கேள். புகழை விரும்புபவனே!
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்தநிலைபெற்ற வலிமையோடு உன்னோடு போர்செய்யப் புறப்பட்டு வந்திருக்கும்
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்         15ஆராயும் திறனற்ற அறிவையுடைய உன் மக்கள் தோற்றால்,
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையேஉனக்குப் பிறகு, உன் பெருஞ்செல்வத்தை யாருக்குக் கொடுக்கப் போகிறாய்?
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்போரை விரும்பும் அரசே! நீ அவர்களிடம் தோற்றால்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையேஉன் பகைவர்கள் அதைக்கண்டு மகிழ, பழிதான் மிஞ்சும்.
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்துஅதனால், உன் வீராவேசத்தை விட்டுவிடுக, மிகவும் விரைவாக
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு         20புறப்படுவாயாக. உன் உள்ளம் வாழ்வதாக. அஞ்சுபவர்களுக்குப்
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காதுபாதுகாப்பாக இருக்கும் உனது அடி நிழல் மயங்காத வண்ணம் 
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்நல்ல செயல்களை செய்ய வேண்டும், விண்ணவரின்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்பெறுவதற்கரிய உலகத்தில் இருக்கும் பெரியோர்
விதும்பு_உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கேவிரைந்த விருப்பத்தோடு உன்ன விருந்தினனாக ஏற்றுக்கொள்ள – (நல்ல செயல்களை செய்ய வேண்டும்)
                                     
# 214 கோப்பெரும் சோழன்# 214 கோப்பெரும் சோழன்
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவேநல்ல செயல்களைச் செய்யலாமா வேண்டாமா என்ற
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சிஐயம் நீங்காதவர்களாக இருப்பார்கள் அழுக்கு நிறைந்த அறிவு
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரேநீங்காத உள்ளத்தினையுடைய துணிவு இல்லாதவர்கள்
யானை வேட்டுவன் யானையும் பெறுமேயானையை வேட்டையாடச் சென்றவன் யானையைப் பெறலாம்;
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே         5சிறுபறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு திரும்பி வரலாம்.
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குஅதனால், உயர்ந்த விருப்பமுடைய பெரியவர்களுக்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால்,
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்விண்ணுலக இன்பம் கிடைக்கலாம்.
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்விண்ணுலக இன்பம் கிடைக்காவிடினும்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்         10மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் பெறலாம்.
மாறி பிறவார் ஆயினும் இமயத்துபிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின்
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டுசிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக்,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையேகுறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.
                                     
# 215 கோப்பெரும் சோழன்# 215 கோப்பெரும் சோழன்
கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குற்றி உலையேற்றி வடிக்கப்பட்ட சோற்றையும்,
தாது எரு மறுகின் போதொடு பொதுளியபூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந்த புழுதியையுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇவேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவைஇடைச்சியர் சமைத்த அழகிய புளிக்கூழை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்                      5அவரையைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்தென்திசையில் உள்ள பொதிகை மலையையுடைய பாண்டிய நன்னாட்டில் உள்ள
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனேபிசிர் என்னும் ஊரில் உள்ளவன் என்பார்கள் என் உயிரைப் பாதுகாப்பவன்;
செல்வ காலை நிற்பினும்நான் செல்வாக்குடன் இருந்த காலத்தில் அவன் வந்து என்னைப் பார்க்காவிட்டாலும்
அல்லல் காலை நில்லலன்-மன்னேநான் துன்பத்தில் இருக்கும் பொழுது என்னைப் பார்க்க வராமல் இருக்கமாட்டான்.
                                     
# 216 கோப்பெரும் சோழன்# 216 கோப்பெரும் சோழன்
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்”உன்னைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறானே தவிர, சிறுபொழுதுகூட
காண்டல் இல்லாது யாண்டு பல கழியநேரில் கண்டதில்லை. இவ்வாறு பல ஆண்டுகள் கழிய
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்தவறாமல் கூடிக் கலந்து பழகிய உரிமையுடைய நண்பராக இருப்பினும்,
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்றுஅவன் அம்முறைப்படி நடத்தல் அரிது, தலைவனே!” என்று
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர்         5சந்தேகப்படாதீர்கள். அறிவு நிறைந்தவர்களே!
இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன்அவன் என்னை ஒருபொழுதும் இகழாதவன்; இனியவன்; பிணிப்புண்ட நட்புக் கொண்டவன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனேபுகழ் கெடும்படி வரும் பொய்யை விரும்பாதவன்.
தன் பெயர் கிளக்கும்_காலை என் பெயர்தன் பெயர் என்னவென்று சொல்லும்போதுகூட, “என் பெயர் 
பேதை சோழன் என்னும் சிறந்தகளங்கமில்லாத சோழன்” என்று கூறும் சிறந்த
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை                10அன்பும் உரிமையும் உடையவன். அதற்கும் மேலே,
இன்னது ஓர் காலை நில்லலன்இத்தகைய நிலையில் அவன் வராமல் இருக்க மாட்டான்;
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமேஅவன் இப்பொழுதே வருவான்; அவனுக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.
                                     
# 217 பொத்தியார்# 217 பொத்தியார்
நினைக்கும்_காலை மருட்கை உடைத்தேஎண்ணும்போது வியப்பாக உள்ளது.
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்இத்துணைப் பெரிய சிறப்போடு இங்கு இவ்வாறு முடிவெடுத்தது;
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுஅதைவிட வியப்பையுடையது,. வேறு நாட்டுப்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றிபெருமை மிக்க சான்றோன் ஒருவன், பாதுகாத்துவரும்
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக                      5புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு,
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் இங்கு வருவது;
வருவன் என்ற கோனது பெருமையும்அவன் வருவான் என்று கூறிய அரசனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்அந்தக் கூற்றுக்குப் பழுது நேராமல் வந்தவனின் அறிவும்
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றேவியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது.
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும்  10அதனால், தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும்
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசைசான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற பழைய புகழையுடைய
அன்னோனை இழந்த இ உலகம்அப்படிப்பட்ட பெரியவனை இழந்த இந்நாடு
என் ஆவது-கொல் அளியது தானேஎன்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.
                         மேல்
# 218 கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்# 218 கண்ணகனார் – நத்தத்தனார் எனவும் பாடம்
பொன்னும் துகிரும் முத்தும் மன்னியபொன், பவளம், முத்து, நிலைபெற்ற
மா மலை பயந்த காமரு மணியும்பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்துஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும், கோக்கப்பட்டு 
அரு விலை நன் கலம் அமைக்கும்_காலைபெருமதிப்புடைய நல்ல அணிகலன்களை அமைக்கும் பொழுது,
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர்   5அவை ஒரே இடத்தில் காணப்படுவது போல, எந்நாளும் சான்றோர்கள்
சான்றோர்_பாலர் ஆபசான்றோர்களையே சேர்ந்திருப்பர்.
சாலார் சாலார்_பாலர் ஆகுபவேசான்றோர் அல்லாதவர், சான்றோர் அல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.
                                     
# 219 கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்# 219 கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்ஆற்றின் நடுவே இருக்கும் மேட்டில் உள்ள புள்ளிபுள்ளியான மர நிழலில்,
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ளஉடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வீரனே!
புலவுதி மாதோ நீயேஎன்னை நீ வெறுத்தாய் போலும்!
பலரால் அத்தை நின் குறி இருந்தோரேஉன் கருத்திற்கேற்ப உன்னோடு வடக்கிருந்தவர்கள் பலர்.
                                     
# 220 பொத்தியார்# 220 பொத்தியார்
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்தபெருமளவில் சோற்றை அளித்துப் பல ஆண்டுகள் பாதுகாத்துவந்த
பெரும் களிறு இழந்த பைதல் பாகன்பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன்,
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலைஅந்த யானை தங்கியிருந்த சோகம் உண்டாக்கும் கூடத்தில்,
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்குகட்டியிருந்த கம்பம் வெறுமையாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல்,
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார்       5நான் கலங்கினேன் அல்லனோ? பொன்மாலை அணிந்தவனும்
தேர் வண் கிள்ளி போகியதேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத
பேர் இசை மூதூர் மன்றம் கண்டேபெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு
                                     
  
  
  
  
# 221 பொத்தியார்# 221 பொத்தியார்
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னேபாடி வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்துப் புகழ் பல கொண்டவன்;
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனேஆடி வருபவர்களுக்கு அள்ளிக் கொடுத்த மிகுந்த அன்புடையவன்;
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னேஅறவோர் புகழ்ந்த செங்கோலன்;
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனேசான்றோர் புகழ்ந்த உறுதியான நட்புடையவன்;
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து         5மகளிரிடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்;
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்குற்றமற்ற கேள்வி அறிவுடைய உயர்ந்தவர்களுக்குப் புகலிடமானவன்;
அனையன் என்னாது அ தக்கோனைஅத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, அந்தத் தகுதிமிக்கவனைச்
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்றுசிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவனது இனிய உயிரைக் கொண்டுசென்றான்.
பைதல் ஒக்கல் தழீஇ அதனைவருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர்            10வைவோம்; வாருங்கள். வாய்மையே பேசும் புலவர்களே!
நனம் தலை உலகம் அரந்தை தூங்கஅகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய,
கெடு இல் நல் இசை சூடிகேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி,
நடுகல் ஆயினன் புரவலன் எனவேஎம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று
                                     
# 222 பொத்தியார்# 222 பொத்தியார்
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி”தீச்சுடர் போல் ஒளிரும் மின்னுகின்ற அணிகலன்கள் அழகுசெய்யும் மேனியையுடைய,
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்தஉன் நிழலைக் காட்டிலும் உன்னைவிட்டு ஒருபோதும் நீங்காத, நீ விரும்புபவள் உண்டாகியிருக்கும்
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா எனபுகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி
என் இவண் ஒழித்த அன்பு இலாளஎன்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே!
எண்ணாது இருக்குவை அல்லை                 5நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய்.
என் இடம் யாது மற்று இசை வெய்யோயேபுகழை விரும்பும் மன்னா! எனக்குரிய இடம் எது?
                                     
# 223 பொத்தியார்# 223 பொத்தியார்
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறிபலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில்
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கிஅரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒரு சிறிய இடத்தில் அடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும்நிலைபெறும் நடுகல்லாய் ஆன போதும்,
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடுஇடம் கொடுத்து உதவி செய்வாய், உடம்போடு 
இன் உயிர் விரும்பும் கிழமை                      5இனிய உயிர் வாழ விரும்புவது போல விரும்பும் உரிமையுடைய,
தொல் நட்பு உடையார் தம் உழை செலினேபழைய நட்பினர் உன்னிடம் வந்தால்,
                                     
# 224 கருங்குழல் ஆதனார்# 224 கருங்குழல் ஆதனார்
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்ததுவும்,
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சிதுணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்து,
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்பாணர்களின் பெரிய சுற்றமாகிய கூட்டத்தைப் பாதுகாத்ததுவும்,
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்துஅறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில்
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த            5வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடுதூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு
பருதி உருவின் பல் படை புரிசைவட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள்,
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து,
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம்வேதத்தால் சொல்லப்பட்ட வேள்வியைச் செய்து முடித்ததுவுமாகிய.
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன்           10இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன்
இறந்தோன் தானே அளித்து இ உலகம்இறந்தான்; ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது;
அருவி மாறி அஞ்சுவர கருகிஅருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும்படி தீய்ந்து
பெரு வறம் கூர்ந்த வேனில் காலைபெரும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில்
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்பசியால் வாடும் பசுக்களாகிய பயன்தரும் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக,
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர                     15கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளும் பூக்களும் உதிரக்
கொய்து கட்டு அழித்த வேங்கையின்கொய்து தழைச்செறிவை அழித்த வேங்கை மரத்தைப் போல்
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரேமெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்தனர்.
                                     
# 225 ஆலத்தூர் கிழார்# 225 ஆலத்தூர் கிழார்
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசையமுன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ண,
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்தபடையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ண,
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகரபடையின் கடைப்பகுதியில் உள்ளோர் பிளந்த வாயையுடைய தோலுடன் சுட்ட பனங்கிழங்கினை உண்ண,
நில மலர் வையத்து வல முறை வளைஇபரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப்
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு  5பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய,
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிவலிமை என்று சொல்லப்பட்டதன் விளைவை இப்பொழுது கேட்பாயாக;
கள்ளி போகிய களரி அம் பறந்தலைகள்ளிச் செடிகள் உயரமாய் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்தில்
முள் உடை வியன் காட்டதுவே நன்றும்முள்ளுடைய பெரிய காட்டில் இருப்பதாயிற்று (அந்த வலிமை),
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் எனசேட்சென்னி நலங்கிள்ளி கேட்பானோ என்று அஞ்சி,
இன் இசை பறையொடு வென்றி நுவல             10முன்பு, இனிய ஓசையையுடைய முரசுடனே, வெற்றியை அறிவிக்க
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்பதூக்கணங்குருவியின் தொங்கும் கூட்டைப் போல
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரிஒருபக்கம் தொங்கவிட்ட திரிந்த வாயையுடைய வலம்புரிச் சங்கு
ஞாலம் காவலர் கடை தலைஇப்போது, உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில்,
காலை தோன்றினும் நோகோ யானேகாலையில் ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு வருந்துகிறேன்.