பதிற்றுப்பத்து 1-50

# 0 கடவுள் வாழ்த்து  # 0 கடவுள் வாழ்த்து  
  
எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்நெருப்பை இகழ்ந்தாற்போன்ற சிவந்த நிறத்தையுடையவன்; விரிந்த பூங்கொத்துகளையுடைய
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்கொன்றை மலரால் ஆன அழகிய புதிய மாலையணிந்த மார்பினன்; பகையாகிய அவுணரின்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்கோட்டையைத் தீவைத்துக்கொளுத்திய வில்லையுடையவன்; செறிந்த இருளில்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடியசுடுகாட்டை விரும்பி அங்கு ஆடிய ஆட்டக்காரன்; நீண்டுபோய்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து       5முதுகை மறைக்கும் அளவுக்குத் தாழ்ந்த சடைமுடியையுடையவன்; தொடையில் மோதி
வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண் நூல்வெண்மையான மணிகள் பேரொலி எழுப்பும் விழாவினன்; நுண்ணிய நூலால் கட்டப்பட்ட
சிரந்தை இரட்டும் விரலன்  இரண்டு உருவாய்உடுக்கையை மாறிமாறி ஒலிக்கும் விரல்களையுடையவன்; ஆணும் பெண்ணுமான இரண்டு உருவங்களால்
ஈரணி பெற்ற எழில் தகையன் ஏரும்தோடும் குழையுமாகிய இரண்டுவகை அணிகலன்கள் பெற்ற அழகிய பொலிவுபெற்றவன்; வளர்கின்ற
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனிஇளம்பிறை சேர்ந்த நெற்றியையுடையவன்; களங்கனி
மாறேற்கும் பண்பின் மறு மிடற்றன் தேறிய           10தன் நிற மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் பண்பினையுடைய கறையுள்ள கழுத்தையுடையவன்; தெளிவான ஒளியையுடைய
சூலம் பிடித்த சுடர்ப்படைசூலமாகிய வேலினைப் பிடித்த, ஒளிவிடும் வேறு படைக்கலன்களையும் கொண்ட
கால கடவுட்கு உயர்க மா வலனேகாலக் கடவுளுக்கு உயர்க பெரும் வெற்றி.
  
  
பதிற்றுப்பத்தில்  
முதல் பத்தும் (1 – 10)
இறுதிப் பத்தும் (91 – 100)
கிடைக்கவில்லை.
  
தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்தொல்காப்பியப் பொருளதிகார உரையிலும்
புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்புறத்திரட்டிலும் காணப்பட்ட சில பாடல்களும்
பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்பாடல் வரிகளும் இடம் விளங்காத பாடல்கள்
என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் அவற்றுக்கு இங்கே ஆசிரியரால் 
எண்கள் கொடுக்கப்பட்டு (91 – 94) எண்கள் கொடுக்கப்பட்டு (91 – 94) 
அவை இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.அவை இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
  
  
இரண்டாம் பத்துஇரண்டாம் பத்து  
     குமட்டூர்க்கண்ணனார்      குமட்டூர்க்கண்ணனார்
  
# 11 பாட்டு 11# 11 பாட்டு 11
வரை மருள் புணரி வான் பிசிர் உடையமலை போல் எழும் அலைகள் வெண்மையான சிறுதுளிகளாக உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்காற்று மோதிச் சிதைத்த, அசைந்தாடும் கரிய முதிர்ந்த சூலைக் கொண்டாற் போன்ற
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னிமிகுந்த கரிய பரப்பினைக் கொண்ட பெரிய கடலுக்குள் முனைந்து சென்று
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்பிறரை வருத்துதலை உடைய அவுணர்கள் பாதுகாத்து நிற்கும்
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை             5சூரபத்மனின் மாமரத்தை வேருடன் வெட்டிச் சாய்த்த, பெரும் புகழும்
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்குகடும் சினமும் வெற்றியையும் உடைய செவ்வேள் யானையின்மீது வந்ததைப் போன்று,
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்பகூரிய வாயினையுடைய வாள்படை குறுக்கே வருவோரை வீழ்த்த,
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்அவரின் அரிய மார்பு பிளந்த புண்ணிலிருந்து வெளிவரும் குருதியினால்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்துநீல மணி போன்ற பெரிய கழி தனது நீரின் நிறம் மாறிக்
மனால கலவை போல அரண் கொன்று               10குங்குமக் கலவை போலாக, அவரின் அரணை அழித்து,
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலைவலி மிகுந்த சிறப்பினால் உயர்ந்த மனவெழுச்சி உடையவனே!
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்பகைவர் பலராய்க் கூடிநின்று பாதுகாத்த திரண்ட பூக்களைக் கொண்ட கடம்பமரத்தினை
கடி உடை முழு_முதல் துமிய ஏஎய்காவல் உள்ள முழுமரத்தையும் வெட்டிச்சாய்க்கும்படி வீரரை ஏவி,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்வென்று அறையும் முழங்குகின்ற முரசால் செய்த வெல்லும் போரினையும்,
நார் அரி நறவின் ஆர மார்பின்                     15நார்க்கூடையால் அரித்து வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரங்கள் அணிந்த மார்பினையும்
போர் அடு தானை சேரலாதபோர் புரியும் சேனைகளையுடைய சேரலாதனே!
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும்மார்பில் கிடக்கும் புதிய மாலை, யானையின் நெற்றிப்பட்டம் வரை தாழ்ந்து விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைவெற்றியால் உயர்ந்த கொம்புகளையுடைய குற்றம் தீர்ந்த யானையின்
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்பொன்னாற் செய்த அணிகலன்களையுடைய பிடரியின் மேல் ஏறியிருந்து சிறந்து விளங்கும் உன்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே              20பலரும் புகழும் செல்வத்தை இனிதே காண்கிறோம் –
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரிமுருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்பரந்து விளங்கும் அருவியோடு, நரந்தம் புற்களைக் கனவில் காணும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்ஆரியர் குழுமியுள்ள பெரும் புகழைக் கொண்ட இமயமலை,
தென்னம் குமரியொடு ஆயிடைதெற்கில் உள்ள அழகிய குமரி முனை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே                  25பெருமை பேசித் திரியும் மன்னர்களின் வீரம் எல்லாம் கெட்டொழியுமாறு –
  
# 12 பாட்டு 12# 12 பாட்டு 12
வயவர் வீழ வாள் அரில் மயக்கிவீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்பபகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தேஅவரின் காவல்மரமான கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே!
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
அரி மான் வழங்கும் சாரல் பிற மான்                5சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்குதிரளாகக் கூடும் இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாதுமுரசுகள் முழங்கும் நெடிய அரண்மனைக்குள் அரசர்கள் துயில் கொள்ளாமல் இருக்க,
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ்நான்கு பக்கத்தையும் நடுங்கச் செய்யும் உன் வீரம் சிறந்து விளங்கும் பலவாறான புகழ்
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்கேட்பதற்கு இனியது; உன் செல்வத்தைக் கேள்விப்படும்போதெல்லாம்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி         10உன்னைக் காணவேண்டுமென்ற விருப்பத்தால், மணங்கமழும் காட்டுமல்லிகையால்,
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடைஉதிராத பசிய மயிரினையும், இளமையான அசைகின்ற நடையினையுமுடைய
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்பெருமை பொருந்திய இளங்களிறு, தன்னை மொய்க்கும் வண்டு, ஞிமிறு ஆகியவற்றை ஓட்டுகின்ற,
கன்று புணர் பிடிய குன்று பல நீந்திகன்றுகளைத் தழுவிய பெண்யானைகளைக் கொண்ட குன்றுகள் பலவற்றைக் கடந்து
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல்வந்து, அங்குத் தங்கிய பெரிய என் சுற்றத்தார்,
தொல் பசி உழந்த பழங்கண் வீழ                      15நாட்பட்ட பசியால் வருந்திய வருத்தம் தீர,
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறைஅரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்,
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறுஆட்டு இறைச்சி இட்ட வெண்ணெல்லின் வெண்மையான சோற்றினையும்,
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்திமலர்களின் அரும்புகள் சேர்த்த தெளிந்த கள்ளுடன் மிகுதியாக உண்டு,
நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்னநீரில் நனைந்த பருந்தின் பெரிய சிறகுகளைப் போன்ற
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை                20மண்படிந்த கிழிந்த உடையைக் களைந்த பின்னால்,
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇநூற்கப்படாத நூலாகிய பட்டால் செய்த ஆடையை நீளமாக இடுப்பில் கட்டி,
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்வளைவாக முடிச்சிட்ட கரிய கூந்தலையும், வளைவான மூங்கில் போன்ற மென்மையான தோள்களையும் கொண்ட
வசை இல் மகளிர் வயங்கு இழை அணியகுற்றமற்ற மகளிர் ஒளிவிடும் அணிகலன்களை அணிந்துகொள்ள,
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடுஉன்னை மிகவும் விரும்பி, உன் மெய்யினைச் சூழவிருக்கும் சுற்றத்தோடு,
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே                25துய்ப்பதற்கு இனியது, உன் பெரும் மகிழ்ச்சி கொண்ட அரச அமர்வு.
  
# 13 பாட்டு 13# 13 பாட்டு 13
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்பசுக்கூட்டங்கள் கிடைபோட்ட வயல்வெளிகளில் ஆரல்மீன்கள் துள்ளிவிளையாடவும்,
ஏறு பொருத செறு உழாது வித்துநவும்காளைமாடுகள் சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும்,
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல்கரும்புப் பாத்திகளில் பூத்த நெய்தல்
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும்பெரிய கண்களையுடைய எருமைக் கூட்டங்களை வேறு இடங்களுக்குச் செல்லாதபடி தடுக்கவும்,
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்         5ஒலி மிகுந்த துணங்கைக் கூத்து ஆடிய இடங்களில்
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும்வளைந்த தலையையுடைய முதிய பசுக்கள் ஆம்பலை உண்ணவும்,
ஒலி தெங்கின் இமிழ் மருதின்செழித்து வளர்ந்த தென்னைமரங்களும், பறவைகள் ஒலிக்கும் மருதமரங்களும்,
புனல் வாயில் பூ பொய்கைகால்வாய்களையுடைய பூம்பொய்கைகளும் உள்ள
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்புலவர் பாடும் சிறப்பு மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய
நாடு கவின் அழிய நாமம் தோற்றி            10நாடுகள் தம் அழகு சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி,
கூற்று அடூஉ நின்ற யாக்கை போலகூற்றுவனால் கொள்ளப்பட்டு நிற்கும் உடம்பினைப் போல,
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்நீ வெகுண்டு முற்றுகையிட்டுத் தங்கிய, தம் சிறப்பு அழிக்கபெற்ற பேரூர்கள் –
விரி பூ கரும்பின் கழனி புல்லெனவிரிந்த பூக்களைக் கொண்ட கரும்பு வயல்கள் புல்லென்று தோன்ற,
திரி காய் விடத்தரொடு கார் உடை போகிமுறுக்கிய காய்களையுடைய விடத்தேரை மரங்களுடன், கரிய உடை மரங்கள் நெடிது வளர்ந்து
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க   15இரண்டாகப் பிரிந்த தலைமயிருடன் பேய்மகள் கழுது என்னும் பேய் மீது ஏறி சுற்றித்திரிய,
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலைபரவிக்கிடக்கும் நெருஞ்சி மிகுந்து, புழுதி படியும் பாழிடங்களான
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்துசாணப்பூச்சு அற்ற, ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள்,
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்துநெஞ்சம் நிலைகுலைய, துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து,
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவேநினைத்துப்பார்ப்போர் நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின;
காடே கடவுள் மேன புறவே                   20காடுகள் கடவுள் விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள்
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேனஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்துபெருவழிகள் அவற்றைப் போலவே இனியவை ஆக, மேலும் நிலத்து விளையும்
கூலம் பகர்நர் குடி புறந்தராஅதானியங்களை விற்போரின் குடும்பங்களைக் காத்து,
குடி புறந்தருநர் பாரம் ஓம்பிகுடிமக்களைக் காக்கும் காணியாளர்களின் பொறுப்புகளையும் பேணிக்காத்து,
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது               25செவ்வாய் சென்ற இடத்தில் வெள்ளி செல்லாமையால்
மழை வேண்டு புலத்து மாரி நிற்பமழை வேண்டி நிற்கும் இடங்களில் பெருமழை பொழிய,
நோயொடு பசி இகந்து ஒரீஇநோயுடன் பசியும் இல்லையாக நீங்கி,
பூத்தன்று பெரும நீ காத்த நாடேவளம் சிறந்து விளங்குகிறது, பெருமானே! நீ காத்த நாடு.
  
# 14 பாட்டு 14# 14 பாட்டு 14
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்நிலம், நீர், காற்று, விசும்பு ஆகிய நான்கினையும் போல
அளப்பு அரியையேஉன் பெருமையை அளந்து காண்பதற்கு அரியவன் ஆவாய்;
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்நாள் மீன்களும், கோள் மீன்களும், திங்களும், ஞாயிறும், மிகுந்த நெருப்பும்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையைஆகிய ஐந்தும் ஒன்றுசேர்ந்தால் பிறக்கும் பேரொளியைப் போன்றவன் ஆவாய்;
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு               5போர் செய்வதில் மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன்,
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மைவலிமைபெற்றுத் திகழ்வதில் மிகத் தேர்ந்த அஞ்சாமை பொருந்திய ஆண்மையினையுடைய
அக்குரன் அனைய கைவண்மையையேஅக்குரன் என்பவனைப் போன்ற வள்ளல் தன்மை உடையவன் ஆவாய்;
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர்போர்க்களங்களில் எதிர்சென்று போரிடும் தும்பைப் பூ சூடிய பகைவரின்
போர் பீடு அழித்த செரு புகல் முன்பபோர்த்திறனின் பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே!
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே       10கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே!
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துஎழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த வெற்றித்திருமகள் நிறைந்த மார்பினையும்
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறைவலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே!
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்வானுலகில் வாழும் மகளிரின் மெய்ந்நலத்தோடு போட்டிபோடக்கூடிய –
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின்ஒளிரும் அணிகலன்களால் மறைப்புண்ட வண்டுகள் மொய்க்கும் பின் கூந்தலும்,
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ         15ஒடுங்கிய நெய்ப்புற்ற முடிந்த கூந்தலும், வளைந்த காதணிகளையும் உடைய – தேவிக்குக் கணவனே!
பல களிற்று தொழுதியொடு வெல் கொடி நுடங்கும்பல யானைகளின் கூட்டத்தோடு, வெற்றிக்கொடி வளைந்து அசையும்
படை ஏர் உழவ பாடினி வேந்தேபடையினையே ஏராகக் கொண்ட உழவனே! பாண்மகள்களுக்குப் பரிசுகள் தரும் வேந்தனே!
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரிஒளிர்கின்ற மணிகள் செறிந்த பொன்னால் செய்யப்பட்ட ஆணைச் சக்கரத்தைக் கொண்டு
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின்கடல் சூழ்ந்த இந்த நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன்
முன் திணை முதல்வர் போல நின்று நீ                20சேரர் குலத்து முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ
கெடாஅ நல் இசை நிலைஇகெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து
தவாஅலியரோ இ உலகமோடு உடனேதாழ்வின்றி வாழ்க! இந்த உலகத்தில்.
  
# 15 பாட்டு 15# 15 பாட்டு 15
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்துஆண்டுகள் கழிந்துபோக, நீ வேண்டிய நாட்டில் தங்கி,
முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடுபோர்முனைகளில் நெருப்பு பரவும்படி கொளுத்தி அழித்து, நெருங்கமுடியாத சீற்றத்துடன்
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கிமேகங்கள் தவழ்ந்து ஒன்றுகூடிய மதிலையும், காவல்மரத்தையும் சிதைத்து,
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம்வரிசையாகக் களிறுகள் ஒழுங்குபடச் செல்லும், பகைநாட்டை வென்று கொள்ளும் படைவெள்ளம்
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப        5நாலாபக்கங்களிலும் பரவி, கழங்குகளைப் போட்டுக் குறிபார்த்து மனம் அழியும் மன்னர்களின் சுற்றத்தை அழிக்கும்,
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொரகொடிவிட்டெழும் நிறங்கொண்ட புகை பிசிராக உடைந்துபோகும்படி காற்று மோத
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்துநெருப்பு எரித்தழித்த இடங்களைப் போல, அனைத்தையும் உருக்குலைய அழித்து,
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்தம்முடைய பழைய அழகிய நிலை அழிந்துபோன இடம் அகன்ற ஊர்களையும்,
வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்துவெண்மையான பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர,
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல்           10பீர்க்கங்கொடிகள் மேலேறிப் படர்ந்த நீரற்ற உழவடை சால்களில்,
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்சிவந்த காந்தள் வேருடன் காய்ந்துபோய் இருக்கும் பாழடைந்த வீடுகளையுடைய
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்புலால் நாறும் வில்லை வாழ்க்கையாகக் கொண்ட புல்லிய மறவர்கள் நடமாடும்
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின்புல்லிய பனையோலை வேய்ந்த ஊர்களையுடைய பகைநிலங்களை அழிக்கும் மறமாண்பினைத்
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின்தமது அறியாமையால் மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன்
பகைவர் நாடும் கண்டு வந்திசினே           15பகைவரின் நாடுகளையும் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன் –
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்கடலில் விளைவனவும், மலையில் கிடைப்பனவும், ஆற்றால் பெறுவனவும், பிறவும் ஆன
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டுவளம் பலவும் திகழும் அகன்ற இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில்
கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்துகொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில்
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின்            20சிறப்புப் பெற்ற மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒலிக்கும் முரசைக் கொண்ட
வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கைவலிமிகுந்த வீரர்களின் வேந்தனே! பரிசிலர்களின் ஆதாரப் பொருளே!
தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின்மாலையணிந்து அழகுடன் விளங்கும் பூண்கள் விட்டுப்போன கொம்புகளையுடைய
போர் வல் யானை சேரலாதபோரிடுவதில் வல்ல யானைகளையுடைய சேரலாதனே!
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என‘நீ வாழ்வாயாக! இந்த உலகத்தோர் பொருட்டு’ என்று
உண்டு உரை மாறிய மழலை நாவின்             25கள்ளை உண்டதினால் பேச்சு மாறிப்போன குழறுகின்ற நாவினில்
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்தமென் சொற்களைக் கொண்ட, இசைக்கலன்களின் பையினையுடைய இயவர் திருத்தமான யாழை இசைத்து வாழ்த்த –
வெய்து_உறவு அறியாது நந்திய வாழ்க்கைமனத்துயரம் கொள்ளுதலை அறியாத, வளம் பெருகிய வாழ்க்கையினையுடைய,
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடுசான்றோர் செய்த நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன்,
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்உண்மையே உரைத்துப் புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி            30வாழுமிடங்களை இழப்பதை அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து,
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர்நரகத்தை வெறுத்த அறவேட்கையுடைய சான்றோர்
மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின்விரும்பி வாழ்கின்ற – பலரும் புகழ்கின்ற பண்பினையுடைய –
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇயநீ காத்துவருவதால் நோயை முற்றிலும் நீங்கப்பெற்ற –
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென்புதுவருவாயை உடைய – நல்ல நாட்டினையும் கண்டு மதி மருண்டேன் –
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது           35மண் செறிந்த இந்த உலகில் வாழும் நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம் குறைவின்றிக்
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின்கொடுத்துக் கை ஓயாத ஈகையினையும், மிகுந்த வலிமையினையும் கொண்ட –
புரை_வயின் புரை_வயின் பெரிய நல்கிஉயர்ந்தோர்க்கெல்லாம் நிறையக் கொடுத்த –
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின்இன்பம் தரும் சிறப்பு மிக்க விழாவினையுடைய
நெடியோன் அன்ன நல் இசைதிருமாலைப் போன்ற நல்ல புகழ்
ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே                40குன்றாத – மைந்தனே! உன் பண்புகள் பலவற்றை விரும்பி –
  
# 16 பாட்டு 16# 16 பாட்டு 16
கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சிமலைச் சிகரங்களோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை அடுத்துள்ள,
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல்ஒரு நாட்டைக் கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும் அடுத்து,
துஞ்சு_மர குழாஅம் துவன்றி புனிற்று_மகள்குறுக்காகக் கிடக்கும் கணையமரங்கள் பல செறிவாக அமைந்து, அண்மையில் பிள்ளைபெற்ற இளம்பெண்
பூணா_ஐயவி தூக்கிய மதிலபூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு                5நல்ல அழகிய நெடிய கதவுகளைத் தாக்கிச் சிதைத்ததால்
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்பன்றியைப் போலாகிய நுனி முறிந்துபோன கொம்புகளையுடைய,
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்திமதநீர் சொரிந்து, மிக்க சினம் கொண்டு
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறைகணைய மரங்களை ஒடித்துப்போடும் இளம் களிறுகள் முழங்கும் பாசறையில்
நீடினை ஆகலின் காண்கு வந்திசினேநீண்டநாள் தங்கிவிட்டாயாதலால் கண்பதற்காக வந்தேன் –
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்                      10அமைதிகொண்ட கற்பும், அடக்கமான பெண்மைநலமும்,
ஊடினும் இனிய கூறும் இன் நகைஊடிய காலத்திலும் இன்சொற்களைக் கூறும் இனிதான முறுவலும்,
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின்அமுதத்தையே உள்ளேகொண்டிருக்கிற சிவந்த வாயும், அமைதியான கண்களும்,
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள்ஒளிவிடும் நெற்றியும், அசைந்த நடையும் உள்ள உன் மனைவி உன்னை நினைத்து வருந்துகிறாள்;
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்றுபடுக்கையில் கிடந்து வருந்தும் வருத்தத்திலிருந்து உய்வாளோ? தோன்றலே! குற்றமற்ற
திரு மணி பொருத திகழ் விடு பசும்_பொன்            15அழகிய மணிகள் நெருக்கமாய் அமைந்த, ஒளி விடும் பசும்பொன்னாலான,
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வரபிரகாசிக்கும் கதிர்களையுடைய வயிரத்தோடு சேர்ந்த பூண் ஆரமானது சுடர்விடுகின்ற –
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துஎழுவரது மணிமுடியினால் செய்துகொண்ட ஆரத்தை அணிந்த – வெற்றித்திருமகள் நிறைந்த – உன் மார்பினை,
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்உன் காதல் மகளிரின் மையுண்ட கண்கள் உறங்குவதற்கு இனிய படுக்கையாக ஆக,
பாலும் கொளாலும் வல்லோய் நின்போர்மேற் செல்லும்போது நீங்குவதும், இல்லத்திலிருக்கும்போது கொள்ளுவதும் ஆகிய இரண்டுக்கும் வல்லவனே! உன்
சாயல் மார்பு நனி அலைத்தன்றே                     20மென்மையான மார்பு அவளை மிகவும் வருத்துகின்றது.
  
# 17 பாட்டு 17# 17 பாட்டு 17
புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே– உனக்கு ஒப்பானது ஏதேனும் உள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால், சிறப்பானது ஒன்றும் இல்லை;
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர்பொறுக்கமுடியாத பெரிய பிழை செய்தாரெனினும், பகைவர்கள்
பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின்பணிந்து திறை செலுத்த அதனை ஏற்றுக்கொள்கிறாய் என்பதனால் –
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கிஅசைகின்ற அலைகள் துளித்துளியாய்ச் சிதறும்படி, கரிய கடலைக் கடந்து சென்று,
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை        5கடம்பமரத்தை வெட்டி உண்டாக்கிய வெற்றியைத்தரும் பெரிய முரசுக்கு,
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்வீரர்கள் திரும்ப வந்து அரிய பலியினைப் படைத்து,
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர்குறுந்தடியால் முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடி அணிந்த தோள்களையுடைய இயவர்கள்,
அரணம் காணாது மாதிரம் துழைஇய‘ஒரு பாதுகாப்பான இடத்தையும் காணாமல் திக்கெல்லாம் தேடிச்செல்லும்,
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் எனவிரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்’ என்று,
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின்                       10ஞாயிறு விரும்பிச் செல்லும் குற்றமற்ற சிறப்பையுடைய,
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇநீர் நிறைந்து, இடி மின்னலைக் கொண்ட கூட்டமான மேகங்கள் ஒன்றுகூடும்,
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின்கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய
விசும்பு தோய் வெண்குடை நுவலும்விசும்பினைச் சென்றடையும் வெண்கொற்றக்குடையின் புகழினைக் கூறும்
பசும் பூண் மார்ப பாடினி வேந்தேபசிய பூணினை அணிந்த மார்பினனே! பாடினிகளுக்குப் பரிசளிக்கும் வேந்தனே! –
  
# 18 பாட்டு 18# 18 பாட்டு 18
உண்-மின் கள்ளே அடு-மின் சோறேஉண்பீராக கள்ளை! சமைப்பீராக சோற்றை!
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கேஅறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்பஇல்லையென்று வருவோர்க்குக் குறைவுபடாமல் – பொன்னாலான அணிகலன்கள் ஒலியெழுப்ப,
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால்இருண்டு வளைந்த, செழித்த, முறுக்கு அவிழ்ந்த, ஐவகையாய் முடிக்கப்பட்ட பின்னலையுடைய,
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்          5ஏந்திய கொம்பினைப் போன்ற அல்குலையுடைய, முகிழ்த்த நகையினையுடைய, இளமைப் பண்புடைய,
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பேகூந்தலழகு மிக்க விறலியரே! – மூட்டுங்கள் அடுப்புகளை –
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும்நீங்கள் பெற்றுக்கொண்டவைகளைச் சிறிது கொடுத்துதவுங்கள்! மேலும் அது தவறாகாது!
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கிஉலகத்து உயிர்கள் அழிய, பல ஆண்டுகள் வருத்தி,
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்டமண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி             10குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
மாரி பொய்க்குவது ஆயினும்மாரிக்காலத்தில் பொய்த்துவிட்டாலும்
சேரலாதன் பொய்யலன் நசையேசேரலாதன் பொய்க்கமாட்டான் உமது விருப்பத்தை –
  
# 19 பாட்டு 19# 19 பாட்டு 19
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர்பகைவர் நிலத்தில் கொள்ளையிட்டதையே உணவாகக் கொண்ட, முன்னேறிச் செல்லும் கால்களையுடைய ஏவலர்கள்
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்பகற்களையுடைய நெடிய வழிகளை வெட்டி, பாலைவெளியில் வழிகளை உருவாக்க,
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர்ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்பதிண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு
செம் கள விருப்பொடு கூலம் முற்றிய                5சிவந்த போர்க்களத்தில் புகும் விருப்பத்தோடு, கூலங்களாக நிரப்பிய
உருவ செந்தினை குருதியொடு தூஉய்நிறங்கொண்ட செந்தினையைக் குருதியோடு கலந்து தூவிப் பலியிட்டு,
மண்_உறு முரசம் கண் பெயர்த்து இயவர்கழுவிப் பூசிக்கப்பட்ட முரசத்தின் மேற்பகுதியில் குருதியினைப் பூசி, முரசு முழக்குவோர்
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்சகுறுந்தடியை வலது கையில் கொண்டவராய், தொடி அணிந்த தோளினை ஓங்கிஉயர்த்தி முழக்க,
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்துகாப்புக்கயிறுகளை களைதலை அறியாத வீரரோடு, அம்புகளைத் தெரிவுசெய்து
அ வினை மேவலை ஆகலின்                     10முடிந்துபோன அந்தப் போரினையே மேலும் விரும்புகிறாயாதலால்,
எல்லு நனி இருந்து எல்லி பெற்றபகலில் பெரிதும் பொறுத்திருந்து, இரவில் கிடக்கும்
அரிது பெறு பாயல் சிறு மகிழானும்அரிதாகப் பெறுகின்ற உறக்கத்தில் சிறிய மகிழ்ச்சியேனும் பெற்று
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கியகனவினிலேயே வாழும், பெரும் நற்பண்புகளும், மேனியின் மெலிவால் ஏற்பட்ட
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்குநாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு
யார்-கொல் அளியை                         15நீ யாராயினாய்? இரங்கத்தக்கவனே!
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்துபசுக்கூட்டங்கள் கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக,
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீவிளைநில இடங்களெல்லாம் களையிழக்க, உழவுத்தொழிலினை அழித்து, நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்வாழ்வு தராததால் வளம் அற்றுப்போன பகைவர் நாடுகள்
அன்ன ஆயின பழனம்-தோறும்அப்படிப்பட இயல்பினை அடைந்தன – நீர்நிலைகளிலெல்லாம்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து                20நெருப்புப் போன்ற தாமரை ஆம்பலுடன் மலர்ந்து,
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்பநெல்விளையும் இனிய வயல்களில் நெய்தல் பூத்திருக்க,
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்விளைந்த நெல்லை அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்தசாறு பிழியும் எந்திரத்தின் கொப்பரை வருந்த,
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலைஇன்றல்ல, நேற்றல்ல, தொன்றுதொட்டு
நல்ல-மன் அளியதாம் என சொல்லி             25இந்த நாடுகள் நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி
காணுநர் கை புடைத்து இரங்ககாண்போர் கைகளைத் தட்டிக்கொண்டு வருந்திநிற்க,
மாணா மாட்சிய மாண்டன பலவேகெட்டழிந்த தன்மையினைக் கொண்டன, பலவகையாலும் சிறப்புப் பெற்ற இந்த நாடுகள் –
  
# 20 பாட்டு 20# 20 பாட்டு 20
நும் கோ யார் என வினவின் எம் கோஉம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன்
இரு முந்நீர் துருத்தியுள்கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த,
முரணியோர் தலைச்சென்றுஅவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று,
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின்அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி         5நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை;
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும்– வாய்ப்பதை அறியான் – வெயிலில் காணப்படும் சிறிய தூசியளவுகூட –
மாற்றோர் தேஎத்து மாறிய வினையேபகைவரின் நாட்டில் பின்வாங்கும் முயற்சி –
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியாகண்ணுக்கு முன்னால் மகிழ்ச்சியைக் காட்டி, தம் மனம் திறந்து அன்புசெலுத்தாத
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனேஉட்பகைகொண்டாரின் நாட்டினிலும் பொய்கூறுவதை அறியான்,
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து               10கனவில்கூட – பகைவர் வலிகுன்றிப்போக வெற்றிப்பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நடந்து
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும்தன்னைப் பணியாதோரை அழித்து, வடிவமைப்பான மணிகள் மாறிமாறி ஒலிக்கும்
கடாஅ யானை கண நிரை அலறமதம்பிடித்த யானைகளின் கூட்டமான வரிசைகள் அலறிக்கொண்டு ஓட
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்துஅகன்ற பெரிய பரப்பினையுடைய பெரிய நிலத்தை வென்று,
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇபுலவர்கள் புகழ்ந்துபாட, ஓங்கிய புகழை நிலைநாட்டி,
விரி உளை மாவும் களிறும் தேரும்          15விரிந்த தலையாட்டம் அணிந்த குதிரைகளையும், களிறுகளையும், தேர்களையும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசிகொம்பூதுவோர், கழைக்கூத்தாடிகள் ஆகிய கூத்தர்களுக்கு, தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாமல், வாரி வழங்கி
கடி மிளை குண்டு கிடங்கின்பபதுகாப்பு மிக்க காவல்காடுகளையும், ஆழமான அகழிகளையும்
நெடு மதில் நிலை ஞாயில்நெடிய மதில்களையும், நிலைபெற்ற கோட்டை வாயிலையும்,
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்டஅம்புகளையுடைய கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து, இவற்றை விழுங்கிய
அடாஅ அடு பகை அட்டு மலர் மார்பன்         20சமையலினால் எழாமல் ஊரினைச் சுட்டதால் உண்டான இந்தப் புகை படிந்த மலர்ந்த மார்பினன்;
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்எம்மைச் சேர்ந்த பாணருக்கும், பிற பொருநருக்கும், வேறு இரவலர் போன்றோர் எவராயினும்,
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும்பரிசில் பெறுவதற்குரிய திறன் இல்லாதவராயினும்,
கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்கொடுப்பதையே கடமையாக விரும்பிக் கொண்ட கோணலற்ற நெஞ்சினன்;
மன் உயிர் அழிய யாண்டு பல மாறிஉலகத்து உயிர்கள் அழியுமாறு, ஆண்டுகள் பலவாக மாறுபட்டு,
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்          25குளிர்ச்சியான இயல்பினையுடைய மேகங்கள் மழையினைப் பெய்யாமற்போனாலும்
வயிறு பசி கூர ஈயலன்வயிற்றுப்பசி மிகுகின்ற வகையில் ஈயாமல் இருக்கமாட்டான்;
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே          வயிறு குற்றமின்றி இருக்கட்டும் அவனை ஈன்ற தாய்.
  
  
மூன்றாம் பத்து          மூன்றாம் பத்து          
     பாலைக்கௌதமனார்      பாலைக்கௌதமனார்
  
# 21 பாட்டு 21# 21 பாட்டு 21
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்றுசொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆகஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைஎவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
காலை அன்ன சீர் சால் வாய்மொழிஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
உரு கெழு மரபின் கடவுள் பேணியர்அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதிஉள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
வருநர் வரையார் வார வேண்டிபரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறைஇறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்பதாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க –
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின்கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதிநடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்துஇரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணிநிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின்குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய –
மாரி அம் கள்ளின் போர் வல் யானைமழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய – போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்துதோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
நன் கலம் தரூஉம் மண் படு மார்பபகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற – சாந்து அணிந்த மார்பினனே!
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர்முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிபுல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதி அல் செருப்பின் பூழியர் கோவேமிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறைகுவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டுபலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடிநீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாஉன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கியபுகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேர் உயர் நெடு வரை அயிரை பொருநநேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்துஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆகநோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டுநறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
ஒரீஇயின போல இரவு மலர் நின்றுகுளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்துஅசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
வேய் உறழ் பணை தோள் இவளோடுமூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
ஆயிர வெள்ளம் வாழிய பலவேபல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!
  
# 22 பாட்டு 22# 22 பாட்டு 22
சினனே காமம் கழி கண்ணோட்டம்கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமைஅச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்துதண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்;
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்துஇந்தத் தீயவைகளைத் தொலைவிற்குத் தள்ளிவிட்டு, நன்மையானவற்றை மிகவும் செய்து,
கடலும் கானமும் பல பயம் உதவகடலும், முல்லைக்காடுகளும் பலவிதப் பயன்களைக் கொடுத்துதவ,
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாதுகுடிமக்கள் ஒருவரையும் வருத்தாமல், அயலார் பொருள்மீது ஆசைப்படாமல்,
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம்குற்றமற்ற அறிவினராய்ச் செம்மையான ஒழுக்கநெறியில் நடந்து, தம்மை
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள்விரும்பும் துணையான மனைவியைப் பிரியாமல், இருப்பதைப் பகுத்து உண்டு, குடிமக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழியமுதுமையடைந்த உடம்புடன் நோய் இல்லாமல் வாழ
ஊழி உய்த்த உரவோர் உம்பல்ஆட்சி செய்யும் முன்னோர்களின் வழித்தோன்றலே!
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்துஇரும்பால் செய்யப்பட்ட குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்தபசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட
வேல் கெழு தானை வெருவரு தோன்றல்வேல்கள் தாங்கிய வேற்படையைக் கொண்ட அச்சம்தரும் தோன்றலே!
உளை பொலிந்த மாதலையாட்டத்தால் பொலிவுபெற்ற குதிரைகளோடும்,
இழை பொலிந்த களிறுநெற்றிப்பட்டம் போன்ற அணிகளால் பொலிவுபெற்ற களிறுகளோடும்,
வம்பு பரந்த தேர்புதிய தேர்ச் சீலைகள் பரந்து விளங்கும் தேர்களோடும்
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடுபோரினை எதிர்கொள்ளும் விருப்பத்தையுடைய வீரர்களோடும்,
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலைகணையமரங்கள் செறிக்கப்பட்ட, பெரிய அகன்ற வெளியில் அமைந்துள்ள
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்தஉயர்ந்து நிற்கும் வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய,
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவிஎந்திர வில்கள் பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும்,
கடி மிளை குண்டு கிடங்கின்பாதுகாப்பான காவல்காடும் ஆழமான அகழியும் கொண்ட,
நெடு மதில் நிரை பதணத்துநெடிய மதிலில் வரிசையாய் அமைந்த உயர்ந்த மேடைகளையும் கொண்ட,
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்தபெருமை மிக்க அழகிய பெரிய சிகரங்களைக் கொண்ட அகப்பா என்னும் கோட்டையை அழித்த
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவபொன்னால் செய்த உழிஞை மாலையை அணிந்த வெல்லுகின்ற போரைச் செய்யும் குட்டுவனே!
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும்தோல் போர்த்துள்ள பறையை முழக்கி வெள்ளம் வரும்போது கரையை அடைக்க அழைப்பவர் ஒலியும்,
நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநரும்நீர்விளையாட்டில் எழும் ஆரவாரத்தின், போரில் அம்புகள் எழுப்பும் ஒலியையும் அமுக்கிப்போடும், ஒலியும்,
ஒலி தலை விழவின் மலியும் யாணர்பேராரவாரம் எழுகின்ற விழாக்களில் உள்ளதைப் போல் மிகுந்துவரும், புதுவருவாயையுடைய
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்நாட்டினில் பொருந்திய மருதநிலங்களைச் சினந்து பார்ப்பதனால் –
குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றிமேற்குத் திசையில் மறைந்து, கிழக்கில் அடிவாரத்தில் தோன்றி,
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின்பரவிக்கிடக்கும் இருளை அகற்றும் பயன்தரும் பண்பினையுடைய
ஞாயிறு கோடா நன் பகல் அமயத்துஞாயிறு ஒருபக்கமும் சாயாமல் இருக்கும் நடுப்பகற் பொழுதில்
கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றிபிரிந்து செல்லும் வழிகளில் வெள்ளையான நரிகள் மாறி மாறி ஊளையிடும்,
கழல் கண் கூகை குழறு குரல் பாணிபிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப,
கரும் கண் பேய்_மகள் வழங்கும்கரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே– பெரிய பாழ்நிலமாய்விடும், அவைதாம் இரங்கத்தக்கன!
  
# 23 பாட்டு 23# 23 பாட்டு 23
அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திகாய்ந்துபோன உச்சியையுடைய உன்ன மரத்தின் பிரிவுபட்ட கிளையினில் இருந்து
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்துசிள்வண்டு ஒலிக்கும் அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்நிலம் பசுமை இல்லாமற்போன, விளைநிலங்கள் சீர்குலைந்த காலத்திலும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்இழுத்துக் கட்டிய இசைக்கலங்களைக் கொண்ட பையினராய், அங்குள்ள
மன்றம் போந்து மறுகு சிறை பாடும்ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய்  தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்ககூத்தரும் பாணருமான மக்களின் கடும் பசி நீங்க,
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்துஅவர்களின் பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணிகலன்கள் ஒலிக்க, பெரிதும் உவந்து
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆடநெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய், உண்டு கூட்டமாய் ஆட,
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும்சிறிதளவு கள்ளுண்ட மகிழ்ச்சியிலும் பெரும் செல்வத்தை வாரி வழங்கும்
போர் அடு தானை பொலம் தார் குட்டுவபோரில் வெற்றிகொள்ளும் சேனைகளையுடைய பொன்னாலான மாலையைச் சூடிய குட்டுவனே!
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்குஉன்னைக் காணவிரும்பி வந்த நாங்கள் கண்டோம், புற்கள் மிகுந்து,
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்துநடமாடுவோர் இல்லாமற்போனதால் ஓரங்கள் உருக்குலைந்து தூர்ந்துபோய்
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்துதமது பெரும் அழகு அழிந்துபோன வழிகளில் காளைகளைக் கூடி,
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்பெரிய காட்டுப்பசுக்கள் அமைதியாகவும் இனிமையாகவும் வாழ்ந்திருக்கும் அளவுக்கு,
விண் உயர் வைப்பின காடு ஆயின நின்வானளாவ உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஊர்கள் காட்டுநிலம் ஆயின; உன்
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்தவலிமையால் நிறைந்த பெரும் புகழை அறியாதவராய், உன்னோடு பகைகொண்டு
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்போரிட எதிர்த்துவந்த வேந்தர், உன் முன்னணிப்படைக்கே தோற்று ஓடிப்போனதால்;
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்மருதமரங்கள், தம்மிடம் பல பறவைகள் தங்கி ஒலிக்கும்படி நிற்கின்ற செறிவான பெரிய பரப்பிடமாகிய,
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடுமணல் நிறைந்த பெரிய ஆற்றுத்துறையில் நெருங்கிவளர்ந்த காஞ்சி மரங்களோடு
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரைமுருக்க மரங்களினின்று உதிர்ந்த பூக்களால் நெருப்பைப்போன்று தோன்றும் மணல் அடைத்த கரையில்
நந்து நாரையொடு செ வரி உகளும்நன்கு வளர்ந்த நாரையோடு, செவ்வரி நாரையும் ஓடித்திரியும்
கழனி வாயில் பழன படப்பைகழனிகளுக்கு வாயிலாக அமைந்த பொய்கையைச் சார்ந்த விளைநிலங்களில்
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள்நெருப்பினைப் போன்ற பூவையுடைய தாமரையும், வளையணிந்த பெண்
குறாஅது மலர்ந்த ஆம்பல்பறிக்காமல் விட்டுவிட்ட ஆம்பலும் உள்ள,
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடேஅற்றுப்போகாத புதுவருவாயையுடைய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு –
  
# 24 பாட்டு 24# 24 பாட்டு 24
நெடு வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்குநீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்திஉன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பீடு கொள் மாலை பெரும் படை தலைவபெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல்மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகிஅறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்றுஉலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசைநாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட –
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவமேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
குலை இழிபு அறியா சாபத்து வயவர்நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கைஅம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
இடாஅ ஏணி இயல் அறை குருசில்அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும்நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின்அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமேசெல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாதுஉண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் –
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறுஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின்இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும்வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு மதி மருளும் வாடா சொன்றிகண்டு வியக்கும் – குறையாத சோறு –
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வரஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளிசிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்பபயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
கலிழும் கருவியொடு கை உற வணங்கிஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழைகீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார் எதிர் பருவம் மறப்பினும்கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் –
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனேநீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!
  
# 25 பாட்டு 25# 25 பாட்டு 25
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடாஉன் குதிரைப்படைகள் பாய்ந்துசென்ற நிலங்களில் கலப்பைகள் உழுதுசெல்லமாட்டா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானைமதம் சொரியும் தலையைக்கொண்ட கடுமையாய்ப் பார்க்கும் யானைகளின்
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியாகூட்டம் பரந்து சென்ற நிலங்கள் இனி வளம் பரப்புதலை அறியமாட்டா;
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகிஉன் படைவீரர்கள் கூடிய ஊர்ப்பொதுவிடங்களில் கழுதைகள் கூடிக்கிடக்கின்றன;
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையாநீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை இழந்தன;
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துநீ மூட்டிய தீ – மிகுந்த காற்று எழுந்து மோதுவதால், சுடர்விட்டு எழுந்து, வெப்பமடைந்து
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்புதிதாய்த் தோன்றும் பிசிர்களையுடைய ஒளிவிட்டுச் சுட்டெரித்த பக்கங்கள்
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறிகாட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழிகளாய்,
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னியஆறலைக்கள்வரின் ஒளிப்பிடமாக அகன்ற பெரிய பாழிடங்களாய் மாறிவிட்டன;
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலைஇடிபோல முழங்கும் முரசத்தோடு, பெரிய மலையின்
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்கபக்கங்களில் இறங்கும் அருவியைப் போல பொலிவுள்ள கொடிகள் மடங்கி ஆட,
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீவிரைந்த ஓட்டத்துடன் சீறியெழும் பறவையைப் போல் பறந்து செல்ல, நீ
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடேஉன் நெடிய தேரினை ஓட்டிய பகைவருடைய அகன்ற இடத்தையுடைய நாடுகள்.
  
# 26 பாட்டு 26# 26 பாட்டு 26
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவாசெல்வர்களின் தேர்கள் சென்று சேறுபட்ட நிலங்களில் ஏர்களால் உழுவது தேவைப்படவில்லை;
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடாஆண்பன்றிகள் கிழங்குக்காகத் தோண்டிய நிலங்களில் கலப்பைகளால் உழுவது தேவைப்படவில்லை;
மத்து உரறிய மனை இன் இயம் இமிழாதயிர் கடையும் மத்துகள் முழங்கும் வீடுகளில் வேறு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கத் தேவையில்லை;
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின்அவ்விடத்தை முன்பு நன்றாக அறிந்தவர் அப்போதிருந்த செழுமையான வளத்தை இப்போது நினைத்துப்பார்த்தால்,
நோகோ யானே நோ_தக வருமேவருந்துகிறேன் நான், அவர்கள் மிகவும் வருத்தப்பட நேருமே என்று;
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து_உற்றுகாலத்தில் பெய்யும் மழை காக்காமல் போனதினால் வெப்பம் மிகுந்து
வலம் இன்று அம்ம காலையது பண்பு எனநலமற்றுப் போனது காலத்தின் பண்பு என்று
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூகண்கள் பனித்துப் பெருக்கெடுக்கும் நீரை நிறையத் தாங்கிக்கொண்டு, கைகளை அடித்துக்கொண்டு
மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூரதளர்ச்சியுற்ற நெஞ்சத்தினராய்ப் பகைவர்நாட்டு மக்கள் சிறுமை மிகுந்திருக்க,
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சிபீர்க்கங்கொடிகள் பற்றியேறின வேலிசூழ்ந்த பாழ்பட்ட மனைகளும், நெருஞ்சிமுள்
காடு உறு கடு நெறி ஆக மன்னியகாடாய் வளர்ந்திருக்கும் கடிய வழிகளுமாக நிலைபெற்றன –
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்முருகப்பெருமான் மாறுபட்டு வெகுண்டதால் தன் ஆரவாரமிக்க சிறப்பை இழந்த பழமையான ஊரைப்போல,
உரும்பு இல் கூற்றத்து அன்ன நின்பிறரால் நலிவுறாத கூற்றுவனைப் போன்ற உன்
திருந்து தொழில் வயவர் சீறிய நாடேதிருத்தமான போர்த்தொழிலையுடைய படைவீரர்கள் சீறிச் சென்ற நாடு –
  
# 27 பாட்டு 27# 27 பாட்டு 27
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்– சிதைந்துபோனது, உண்மையாகவே! நீ கண்கள் சிவந்து பார்த்தபோது –
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சிதொடர்ந்தாற்போல மலரும் குவளையைத் தமது தூய அலையலையான கூந்தலில் செருகி,
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்மலர்ந்த ஆம்பல் பூவின் அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய்,
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணிசுருண்ட மயிரையுடைய அழகிய தலையுச்சியில் பூவினால் தொடுத்த தலைமாலையை அணிந்து,
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர்கள்ளை உண்டவராய், இனிதே சுருதி சேர்ந்த வாத்தியத்தையுடையோர் தங்கியிருக்கும்
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்துறைக்குப் பக்கத்தில் இருக்கும் மருத மரத்தில் ஏறி, பக்கத்து வயல்களில் பரவியிருக்கும் பறவைகளை ஓட்டுவதற்காக
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின்ஒளிவிடும் வளையல்களை அணிந்த மகளிரின் தெளிவான அழைப்பொலியின் இனிய ஓசையைக் கேட்டு
பழன காவில் பசு மயில் ஆலும்வயலோரச் சோலைகளில் புத்துணர்ச்சிகொண்ட மயில்கள் ஆடுகின்ற
பொய்கை வாயில் புனல் பொரு புதவின்பொய்கையின் மதகுகளில் நீர் வந்து மோதும் கதவிடுக்கில்
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்நெய்தல் பூக்களை மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற
வல் வாய் உருளி கதுமென மண்டவலிமையான மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று ஆழ்ந்துபோய்
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்பசேற்றில் மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துநல்ல எருதுகள் இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது
சாகாட்டாளர் கம்பலை அல்லதுவண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
பூசல் அறியா நன் நாட்டுவேறே போரினால் ஏற்படும் ஆரவார ஒலியை அறியாத நல்ல நாட்டின்
யாணர் அறாஅ காமரு கவினேபுதிய வருவாய்கள் அற்றுப்போகாத பலரும் விரும்பும் தம் அழகு –
  
# 28 பாட்டு 28# 28 பாட்டு 28
திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர்– மிகுந்த செல்வத்தை உடையது – மிகுந்த வலிமை கொண்ட பகைவரின்
பைம் கண் யானை புணர் நிரை துமியபசிய கண்களையுடைய யானை கலந்த படைவரிசை தூள்தூளாக,
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால்தமது வலிமையைச் செலுத்தித் தூக்கிவைத்த குருதிக்கறை படிந்த பாதத்தையுடைய கழலணிந்த கால்களைக் கொண்ட
கடு மா மறவர் கதழ் தொடை மறப்பவிரையும் குதிரையைப் போன்ற மறவர்கள் மிகுந்த விசையுடன் கூடிய தம் வில் தொழிலை மறக்கும்படியாக,
இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாதுகாவல்காட்டைக் காக்கும் தொழிலை இனிதே செய்து, நாட்டினில் விளைச்சல் குறைவின்றி இருக்க,
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்வீட்டைவிட்டுப் பிரியாத வாழ்க்கையுடன் நீ ஆட்சி செய்வதால் –
விடு நில கரம்பை விடர் அளை நிறைய– மேய்ச்சலுக்காக விடப்பட்ட கரம்பை நிலத்தில் உள்ள வெடிப்பான பள்ளங்கள் நிறையும்படி –
கோடை நீட குன்றம் புல்லெனகோடைக்காலம் நீட்டித்துச் செல்ல, குன்றுகள் பொலிவழிந்து தோன்ற,
அருவி அற்ற பெரு வறல் காலையும்அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும்
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று– உயர்ந்து, கரையை மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும்
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்சிறப்புப் பொருந்திய அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்படியாக,
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைகாய்ந்த இலைதழைகளைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின்
செம் நீர் பூசல் அல்லதுசிவந்த நீர் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி
வெம்மை அரிது நின் அகன் தலை நாடேகொடுமையான போர் ஆரவார ஒலிகள் அரிதாயுள்ள, அகன்ற இடத்தையுடைய உன் நாடு –
  
# 29 பாட்டு 29# 29 பாட்டு 29
அவல் எறி உலக்கை வாழை சேர்த்திஅவலை இடிக்கும் உலக்கையை வாழைமரத்தில் சார்த்திவிட்டு,
வளை கை மகளிர் வள்ளை கொய்யும்வளையலணிந்த கையையுடைய மகளிர் வள்ளைப் பூவினைப் பறிக்கின்ற
முடந்தை நெல்லின் விளை வயல் பரந்தவளைந்த நெற்கதிர்கள் விளைந்த வயலில் மேல் பரவித்திரியும்
தடம் தாள் நாரை இரிய அயிரைபெரிய கால்களையுடைய நாரைகள், அந்த மகளிரைக் கண்டு வெருண்டு, அங்கிருக்கும் அயிரையாகிய
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின்நிறைந்த மீனைகளைத் தின்பதற்காக, மரங்கள்தோறும் குழுமியிருக்க,
வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும்வெறும் கையாய் இருக்கும் மகளிர் அந்த வெள்ளைப் பறவைகளை விரட்டுகின்ற –
அழியா விழவின் இழியா திவவின்தொடர்ந்து நடைபெறும் விழாக்களினால் தொய்ந்துபோகாத யாழ்க்கட்டுகளையுடைய
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇகூத்தரான மக்கள் பண்களை நன்றாக அமைத்து, இசையை எழுப்பி,
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும்ஊர்ப்பொதுவிடங்களை அணுகி, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற –
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளியஅகன்ற இடங்களையுடைய ஊர்களையுடைய நாடுகளாயிருந்தன – இப்போது இரங்கத்தக்கன.
விரவு வேறு கூலமொடு குருதி வேட்டகலந்திருக்கும் பல்வேறான தானியங்களோடு சேர்ந்த இரத்தத்தைப் பலியாகச் செலுத்தி,
மயிர் புதை மா கண் கடிய கழறமயிருள்ள தோலால் மறைக்கப்பட்ட பெரிய முகப்பினைக் கொண்ட முரசம் வேகமாக அடிக்கப்பெற,
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்போரைச் செய்வதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்னும்படி, அரிய மதில்களை வெற்றிகொள்ளும்
பெரும் பல் யானை குட்டுவன்மிகவும் அதிகமான யானைகளைக் கொண்ட குட்டுவனின்
வரம்பு இல் தானை பரவா ஊங்கேவரம்பில்லாத சேனைகள் பரந்து செல்வதற்கு முன்னர் –
  
# 30 பாட்டு 30# 30 பாட்டு 30
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறைபூங்கொத்துகள் செறிந்திருக்கும் ஞாழல்கள் இருக்கும் கரையைப் பொருந்திய பெரிய நீர்த்துறையில்
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல்நீல மணியினால் செய்யப்பட்ட பாத்திரத்தைப் போன்ற பெரிய இதழ்களையுடைய நெய்தலின்
பாசடை பனி கழி துழைஇ புன்னைபசிய இலைகள் உள்ள குளிர்ந்த கழியினில் மீனை வேட்டையாடிவிட்டு, புன்னையின்
வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும்நீண்ட பூங்கொத்துகள் உள்ள தாழ்ந்த கிளையில் கொக்குகள் தங்கும்,
அல்கு_உறு கானல் ஓங்கு மணல் அடைகரைமக்கள் தங்குவதற்குரிய கடற்கரைச் சோலையில் உள்ள உயர்ந்த, மணல் இறுக்கமாய் அமைந்த கரையில்,
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரலதாழ்வாகப் படர்ந்திருக்கும் அடும்பங்கொடியை மோதிய அலை கொண்டுவந்த சங்கு ஒலிக்க,
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்ஒளிரும் தன்மையுள்ள முத்துக்களோடு, நீண்ட பவளக்கொடிகளையும் பொறுக்கியெடுக்கும்
தண் கடல் படப்பை மென்பாலனவும்குளிர்ந்த கடல் வெளியாகிய மென்மையான நிலமாகிய நெய்தல் நில மக்களும் –
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர்காந்தள் பூவால் தொடுக்கப்பட்ட தலைமாலையினையும், கொலைபுரியும் வில்லினையும் கொண்ட வேடர்கள்
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்டசெம்மையான கொம்பினையுடைய காட்டுப்பசுவின் இறைச்சியோடு, காட்டிலுள்ள
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டுவலிமையுடைய யானைகளின் வெண்மையான தந்தங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றைப்
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும்பொன்னை உடைய கடைத்தெருக்களில் கள்ளுக்கு விலையாகக் கொடுக்கும்
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும்குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும் –
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாதுபருவமல்லாத காலத்திலும் கரும்பினை அறுத்து மாளாது,
அரி கால் அவித்து பல பூ விழவின்கரும்பின் வேர்க்கட்டைகளை அழித்து, அங்கு பல பூக்களைக் கொண்டு எடுக்கும் விழாவினையுடைய,
தேம் பாய் மருதம் முதல் பட கொன்றுதேன் பாயும் மருதமரத்தை அடியோடு சாய்த்து,
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்வெண்மையான நுரையை முகப்பினில் கொண்ட சிவந்த புதுவெள்ளம் பரந்து ஓரங்களை உடைத்துச் செல்லும் இடங்களில்
பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துபல வைக்கோல் புரிகள் சூழக் கட்டிய மணல் தடுப்புகளும் கரைந்துபோக, அந்த வெள்ளத்தை
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்அணையிட்டுத் தடுக்கும் ஆரவாரத்தோடு விரும்பிநிற்கும் மக்கள் கூட்டம்,
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும்முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற,
செழும் பல் வைப்பின் பழன பாலும்செழுமையான பல ஊர்களையும் கொண்ட மருத நிலப் பகுதிகளின் மக்களும் –
ஏனல் உழவர் வரகு மீது இட்டதினைப்புனத்தை உழுது வாழும் குறவர்கள், வரகுத்தாள்களை மேலே வேய்ந்த,
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கைமணம் மிக்க காட்டுமல்லிகை வளர்கின்ற, வலிய நிலத்தைச் சேர்ந்த, மனைகளில்
மென் தினை நுவணை முறை_முறை பகுக்கும்மென்மையான தினை மாவை விருந்தினருக்கு முறை முறையாய்ப் பகிர்ந்தளிக்கும்
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும்புன்செய் நிலங்களைத் தழுவிக்கிடக்கும் முல்லைநிலத்திற்கு அண்மையிலுள்ள குறிஞ்சிப் பகுதி மக்களும் –
பல் பூ செம்மல் காடு பயம் மாறிபலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய்,
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டுசெவ்வரக்கு போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு,
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்ஒளிவிடும் நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும்,
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்வானளாவ உயர்ந்த நின்ற மரங்களைக் கொண்ட காடுகளும் அவை சார்ந்த நிலங்களிலுள்ள மக்களும் –
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்துமுரசினையுடைய வேந்தர்களும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறிக்
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்ககடலோரத்திலும், காடுகளிலும் அரண்களைக் கொண்டு வலிமையுடையோராய் இருந்தும் நடுக்கமுறும்படி,
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிரமாறுபாடு மிகுந்து ஒலிக்கும் முரசின் கடுமையான ஒலி விசும்பினை அடைந்து அதிர,
கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்துமிகுந்த சினத்தைக் கொண்டு முழங்குகின்ற மந்திரவொலியால்
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு,
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்ககரிய கண்களையுடைய பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க,
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலிஇரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
எறும்பும் மூசா இறும்பூது மரபின்எறும்புகளும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக,
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆரகரிய கண்களையுடைய காக்கைகளோடு பருந்துகளும் சேர்ந்து உண்ணும்படியாக,
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்பகைவருக்குப் பின்னிட்டு ஓடாத கொள்கையைப் பூண்ட, ஒளிரும் புள்ளிகளைக் கொண்ட கழலணிந்த கால்களையுடைய
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்துஇடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க,
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது –
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே     கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்.
  
  
நான்காம் பத்து          நான்காம் பத்து          
     காப்பியாற்றுக்காப்பியனார்      காப்பியாற்றுக்காப்பியனார்
  
# 31 பாட்டு 31# 31 பாட்டு 31
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்தகுன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, பல பொருட்களும் திரண்டுள்ள கடலினை ஆடையாக உடுத்திய
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்குமண் செறிந்த உலகத்து மாந்தர் எல்லாம் ஒரேநேரத்தில்
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்துகைகளைத் தலைக்குமேல் கூப்பி உரத்த ஒலி எழுப்பும் ஆரவாரம், திசைகளின்
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்பநால்வேறான அகன்ற பக்கங்களில் ஒன்றாக எழுந்து ஒலிக்க,
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லெனதெளிந்த ஓசையையுடைய, உயர்வாக வடிக்கப்பெற்ற மணியை அடிப்பவர்கள் கல்லென்ற ஓசையை உண்டாக்க,
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணிஉண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்துவண்டுகள் சுற்றிவரும் பொலிவுள்ள மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
அலங்கல் செல்வன் சேவடி பரவிமாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயரநெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;
மணி நிற மை இருள் அகல நிலா விரிபுநீலமணியின் நிறத்தைப் போன்ற கரிய இருள் நீங்கும்படி நிலவொளியைப் பரப்பி
கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்குபிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டுவருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி,
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்புவெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு,
கருவி வானம் தண் தளி தலைஇயஇடிமின்னலுடன் கூடிய மேகங்கள் குளிர்ந்த நீரைப் பொழிய,
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலியவடதெற்காகக் குறுக்கிட்டு நின்று தடுத்து விலக்கும் உச்சிகளில் மேகங்களை உடையதாகி,
பனி வார் விண்டு விறல் வரை அற்றேகுளிர்ச்சி நிறைந்த மலையாகிய சிறந்த மலையைப் போன்றது.
கடவுள் அஞ்சி வானத்து இழைத்ததேவர்களுக்குப் பயந்து வானத்தில் கட்டிய
தூங்கு எயில் கதவம் காவல் கொண்டதொங்குகின்ற கோட்டையின் கதவினைக் காத்துநிற்கும்
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள்கணைய மரத்தை நிமிர்த்தி வைத்தாற்போன்ற பருத்த அழகிய வலிமையுள்ள முழவினைப் போன்ற தோள்கள் உன்னவை;
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்துவெண்மையான அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில்
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்துகொடையால் வரும் புகழை நிலைநிறுத்திய வகைவகையான செல்வங்களைக் கொண்ட
வண்டன் அனையை-மன் நீயே வண்டு படவண்டன் என்பானைப் போன்றவன் நீ; வண்டுகள் மொய்க்கும்
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின்செழிப்பான கூந்தலையும், அறம் சார்ந்த கற்பினையும்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின்காதிலிருக்கும் குழைக்கு வெளிச்சம் தரும் ஒளிவிடும் நெற்றியையும், பொன்னாலான
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்திஅணிகலன்களுக்கு வெளிச்சமூட்டும் அழகிய வளைந்த வயிற்றையும் கொண்டு,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்தவானுலகில் நடமாடும் பெண்களுக்குள் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்விசெம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்புநிலத்திலுள்ளோர் அதிர்ந்து நடுங்குமாறு முழங்காமல், வெற்றியினால் சிறந்து
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்துஉன் அகன்ற முரசு முழங்கும்; வேற்படை மொய்த்துக்கிடக்கும் போர்க்களத்தின் நடுவே,
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள்ஒடுங்கிய பனைமாலை அணிந்த, பொன்னாலான கழலை அணிந்த வலிமையான கால்களையுடைய –
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇஅடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர்அவரின் முதுகினில் வேல்களை வீசியெறியமாட்டார் – உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்குஉன்னோடு சிரித்து உறவாடுவோருக்குப் பாதுகாவலாய் அமைந்து, பகைவர்க்கு
சூர் நிகழ்ந்து அற்று நின் தானைஅச்சுறுத்தும் தெய்வம் தாக்கியது போன்றது உன் சேனை,
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவேஇவ்வாறு போர்த்தொழிலில் சிறந்து விளங்கும் அரசனே! மாட்சிமை பொருந்தியவனாவாய் பலவகையாலும்!
  
# 32 பாட்டு 32# 32 பாட்டு 32
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீமாட்சிமை பொருந்தியவனாவாய் பலவகையாலும்! போரில் மேம்பட்டு விளங்கும் குருசிலே! நீ!
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும்நாற்புறத்தையும் ஒளிவிடச் செய்யும் நற்குணங்களும், நடுவுநிலைமையும்,
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிறமுத்து உடைய கொம்புகளையுடைய இளமையான களிறுகள் பிளிறும்படி,
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்றுபோர்வேட்கை மிகுந்து எழுகின்ற கடுமையான முன்னணிப்படையினர் பகைவர் நாட்டின் இறுதியெல்லை வரை சென்று
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்பவலிமை முழுவதையும் காட்டிப் போரிட்டு, பெருங்கூட்டமான பாணரும் கூத்தருமாகிய சுற்றத்தார் மகிழும்படி,
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும்கொடுத்து நிறைந்தும் அழியாத செல்வத்தையுடைய வளமும்,
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்வருந்துகின்ற குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும் ஆகிய
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுநஎல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எண்ணினால் எண்ணிக்கைக் கழங்குகளும் முடிந்துவிடும்;
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவஉன்னிடம் மிகச் சிறந்ததொன்றைக் கண்டு மருண்டேன், கொல்லுகின்ற போரையுடைய கொற்றவனே!
நெடுமிடல் சாய கொடு மிடல் துமியநெடுமிடல் என்னும் மன்னன் தோற்றோட, அவனது கொடிய வலிமை அழியும்படி,
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்துபெரிய மலையைப் போன்ற யானையோடு பகைவரின் நாடு கெடும்படி அவர் நாட்டில் தங்கி,
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும்பெரிய கால்களையுடைய நாரை நிலையாகத் தங்கி மீனைக் கவர்கின்ற
முடந்தை நெல்லின் கழை அமல் கழனிவளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய
பிழையா விளையுள் நாடு அகப்படுத்துதவறாத விளைச்சலையுடைய நாடுகளைக் கைப்பற்றி,
வையா மாலையர் வசையுநர் கறுத்தஒரு பொருட்டாக மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட
பகைவர் தேஎத்து ஆயினும்பகைவரின் நாட்டில் இருப்பினும்,
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதேசினங்கொள்ளாது இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது!
  
# 33 பாட்டு 33# 33 பாட்டு 33
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்எனக்குண்டாகும் வியப்பு பெரியது! கொடிகள் கட்டப்பட்ட தேர்ப்படையையுடைய அரசனே!
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள்வடிவாக அமைக்கப்பட்ட மணிகள் தழுவிக்கிடக்கும் பக்கங்களையும், முரசு போன்ற வலிய கால்களையுமுடைய
கடி_மரத்தான் களிறு அணைத்துயானைகளைக் காவல் மரத்தில் கட்டி,
நெடு நீர துறை கலங்கஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
மூழ்த்து இறுத்த வியன் தானையொடுஅதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு,
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்பகைவர் நாடு கெடும்படியாக நெருக்கமாய்ச் செல்லும் வரம்பு கடந்த வெள்ளம் போன்ற உன் படைகளுக்கு,
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்துவாட்படையே மதில் ஆக, வேற்படை உயர்ந்த காவற்காடு ஆக,
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின்வில்லிலிருந்து வேகமாக வெளிவரும் அம்புகளே கூர்மையான முள்வேலியாக,
செ வாய் எஃகம் வளைஇய அகழின்சிவந்த வாயையுடைய படைக்கருவிகள் வளைவான அகழியாக,
கார் இடி உருமின் உரறு முரசின்மேகத்திலிருந்து இடிக்கும் இடியைப் போன்ற முழங்கும் முரசினையுடைய
கால் வழங்கு ஆர் எயில் கருதின்காலாட்படையே வெல்லுதற்கரிய கோட்டை ஆக, பகைமேற் செல்லக் கருதினால்,
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னேபோர்புரிய எதிர்ப்பட்ட மன்னர்கள் புறங்கொடுத்து ஓடுவர் உன்னைவிட்டு.
  
# 34 பாட்டு 34# 34 பாட்டு 34
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தேபுறங்கொடுத்து ஓடுவர் உன்னைவிட்டு, ஒப்பற்ற பெரிய வேந்தனே!
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்புறங்கொடாத நிலைப்பாட்டைக் கொண்ட ஒளிவிடும் புள்ளிகள் உள்ள கழலை அணிந்த கால்களையும்
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர்பெரிய நிலம் வரையில் தொங்குகின்ற விரிந்த நூலால் நெய்யப்பட்ட ஆடையினையும் உடைய உன் பகைவர் –
செ உளைய மா ஊர்ந்துசிவந்த தலையாட்டமணிந்த குதிரையை ஓட்டிக்கொண்டும்,
நெடும் கொடிய தேர் மிசையும்நீண்ட கொடியையுடைய தேர் மீது ஏறிக்கொண்டும்,
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்முகபடாம் அணிந்து விளங்கும் அச்சம்பொருந்திய புள்ளிகளுள்ள நெற்றியையுடைய
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்பொன்னரிமாலை அணிந்த யானையினுடைய வலிமை பொருந்திய கழுத்தின் மீதிருந்தும்,
மன் நிலத்து அமைந்தநிலைபெற்ற நிலத்தின்மீது இருந்தும் போரிடுகின்ற,
மாறா மைந்தர் மாறு நிலை தேயபோரிடுவதிலிருந்து மாறாத வீரரின் வலிமை கெட்டுப்போகவும்,
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழமுரசை முழக்கிச் செய்யும் பெரிய போர் உருக்குலைந்துபோவதனாலும், ஆரவாரம் உண்டாக,
அரைசு பட கடக்கும் ஆற்றல்பகை மன்னர் பலரை வெல்லும் ஆற்றலையுடைய
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறேசிறப்பு மிக்க வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால்.
  
# 35 பாட்டு 35# 35 பாட்டு 35
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறேசிறப்பு மிக்க வலிமையினை உடையவனே! நீ உன் படையைப் பேணுகின்ற முறையால்.
உரை சான்றனவால் பெருமை நின் வென்றிசான்றோரும் புகழும் தன்மைய ஆயின, பெருமை மிக்க உன் வெற்றி –
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடுபெரிய களிறுகளான யானைகளின் ஒளிருகின்ற நீண்ட தந்தங்களுடன்,
நெடும் தேர் திகிரி தாய வியன் களத்துநெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில்,
அளகு உடை சேவல் கிளை புகா ஆரபெடையையுடைய சேவல்கள் தம் சுற்றத்தோடு இறைச்சியாகிய உணவை மிகுதியாய் உண்ண,
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலைதலைகள் துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய,
அந்தி மாலை விசும்பு கண்டு அன்னஅந்தி மாலை நேரத்தில் வானத்தைக் கண்டது போன்ற
செம் சுடர் கொண்ட குருதி மன்றத்துசிவந்த ஒளியையுடைய குருதி படிந்த போர்க்களத்து நடுவே
பேஎய் ஆடும் வெல் போர்பேய்கள் எழுந்தாடுகின்ற வெல்லுகின்ற போரினால்
வீயா யாணர் நின்_வயினானேகுன்றாத புதுச்செல்வங்கள் வந்தடைந்தன, உன்னிடத்தில் –
  
# 36 பாட்டு 36# 36 பாட்டு 36
வீயா யாணர் நின்_வயினானேகுன்றாத புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில்
தாவாது ஆகும் மலி பெறு வயவேகுறைபடாததாகும், மிகுதியாகப் பெற்ற வலிமை;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்துவெற்றி நிறைந்த உள்ளத்தோடு, புதுமையாக வந்த போர்களை வென்று,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்றுபோரில் சிறந்த வலிமை பொருந்திய வீரர்களுடன் கூடிச் சென்று,
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார்யானைகள் இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக் களத்தில்
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்குதிரைகள், யானைகள், வீரர்கள் ஆகியோரின் வீழ்ந்துகிடக்கும் பிணங்களை உண்ணும்பொருட்டு,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்இட்டுவைத்தாற் போன்ற புள்ளிகளையுடைய கழுத்தினையும்,
புன் புற எருவை பெடை புணர் சேவல்புல்லிய முதுகையும் கொண்ட பருந்தின், பெடையோடு சேர்ந்துவாழும் சேவலை,
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழியகுடுமியைக் கொண்ட கழுகுடன், இழுத்துக்கொண்டு கீழே இறங்கிப் பாய,
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்துபள்ளமான இடத்திற்குப் பாய்ந்துசெல்லும் வெள்ளத்தைப் போல, நீண்ட குவியல்கள் பலவற்றைச் சுமந்துகொண்டு,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடஅச்சம் பொருந்திய கூளிக்கூட்டம் உண்டு மகிழ்ச்சி மிகுந்து கூத்தாட,
குருதி செம் புனல் ஒழுககுருதியாகச் சிவந்த வெள்ளம் பெருக்கெடுத்தோட,
செரு பல செய்குவை வாழ்க நின் வளனேபோர்கள் பலவற்றைச் செய்வாய்! வாழ்க உன் வளம்!
  
# 37 பாட்டு 37# 37 பாட்டு 37
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை– வாழ்க உன் வளம்! வாழ்க உன்னுடைய வாழ்நாள்!
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்தவாய்மையே உரைக்கும் சான்றோர், உன்னுடைய புகழைப் போற்றிப் பாட,
பகைவர் ஆர பழங்கண் அருளிபகைவர்க்கு அதிகமான துன்பத்தைச் செய்து,
நகைவர் ஆர நன் கலம் சிதறிநீ நகைத்து உறவாடுவோர்க்கு அதிகமான நல்ல அணிகலன்களை அள்ளிக்கொடுத்து,
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்நற்குணங்களால் நிறைந்து, பணிவுடன் நடந்து, புலன்களை அடக்கியாளும் குற்றமற்ற தலைவனே! 
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்பவானைத் தொடும் உன் நல்ல புகழ் உலகமுள்ளளவும் வாழ,
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்வருந்துகின்ற குடிமக்களை முன்னைய நிலையில் இருத்திய சிறந்த வெற்றியும்,
மா இரும் புடையல் மா கழல் புனைந்துகரிய பெரிய பனந்தோட்டு மாலையையும், பெரிய வீரக் கழலையும், சூடிக்கொண்டு,
மன் எயில் எறிந்து மறவர் தரீஇபகை மன்னர்களின் மதில்களை அழித்து, அவர்களுடைய வீரர்களைச் சிறைப்பிடித்துக் கொணர்ந்து,
தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குபழமையான நிலைபெற்ற சிறப்பினையுடைய உன் ஆட்சியின் கீழ் வாழ்பவர்க்கு இணையாக,
கோடு அற வைத்த கோடா கொள்கையும்அவரின் மனக்கோட்டம் தீர்ந்துபோகுமாறு திருத்தி வைத்த மனக்கோட்டமற்ற கோட்பாட்டையும்
நன்று பெரிது உடையையால் நீயேமிகவும் மிகுதியாகக் கொண்டிருக்கிறாய் நீ!
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கேகடுமையான திறத்தையுடைய வேந்தனே! இந்த உலகத்தார்க்காக -.
  
# 38 பாட்டு 38# 38 பாட்டு 38
உலகத்தோரே பலர்-மன் செல்வர்இந்த உலகத்தாரில் பலர் இருக்கிறார்கள் செல்வர்கள்,
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமேஅவர் எல்லாரிலும் உனது நல்ல புகழே மிகுந்திருக்கும்!
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்தியபலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
தோட்டி தந்த தொடி மருப்பு யானைஅந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்,
செ உளை கலி_மா ஈகை வான் கழல்சிவந்த தலையாட்டத்தைக் கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும்,
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தேநல்ல வேலைப்பாடு அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே!
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவைபரிசிலர்களின் செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே!
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறேஒளி பொருந்திய நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே!
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்குற்றமின்றி விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே!
வசை இல் செல்வ வானவரம்பபழிச்சொல் இல்லாத செல்வத்தையுடையவனே! வானவரம்பனே!
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம்உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே நுகருவோம்,
தருக என விழையா தா இல் நெஞ்சத்துகொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகுத்தூண் தொகுத்த ஆண்மைபகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறேபிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால் –
  
# 39 பாட்டு 39# 39 பாட்டு 39
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறேபிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்,
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர்எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் – உன் வீரத்தை விளக்கிக்கூறும் வீரர்கள்!
துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பைபோர்த்தொழிலின் முழுமையையும் கற்றறிந்த, கடுமையையுடைய தும்பை மாலையைச் சூடிய,
கறுத்த தெவ்வர் கடி முனை அலறசினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணைகுறுந்தடியால் ஓங்கி அடிக்க ஒலிக்கின்ற. படைவீரரைப் போருக்கும் ஏவிவிடும் அகன்ற முரசம்
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்குஇடிபோல் அதிர்ந்து முழங்க, போர்வெறி மிகுந்து,
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும்அடங்காதாரின் கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும்
காலன் அனைய கடும் சின முன்பகாலனைப் போன்றவன் நீ, கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே!
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழையவெண்மையான பருத்தி நூலால் இழைக்கப்படாத, நுண்ணிய மயிர் போன்ற இழைகளையுடைய,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்பொறித்து வைத்தது போன்ற புள்ளிகளையுடைய கழுத்தையும்,
புன் புற புறவின் கண நிரை அலறபுன்மையான முதுகினைக் கொண்டதுமான புறாக்களின் கூட்டமான வரிசைகள் பயந்து ஓடும்படியாக,
அலந்தலை வேலத்து உலவை அம் சினைசிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில்,
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்சிலந்தி பின்னிய ஆடுகின்ற வலையைப் போல,
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்துமின்னுகின்ற மணிகள் இடையிடையே கலந்த பசும்பொன்னாலான உட்குழிவுள்ள கூட்டின் ஓரத்தை.
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கஒளிருகின்ற இழைகளால் தைத்து, மின்னலைப் போல பளிச்சிட,
சீர் மிகு முத்தம் தைஇயசிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றேநார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி –
  
# 40 பாட்டு 40# 40 பாட்டு 40
போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்துஉனது போரினைப் புகலிடமாக விரும்பிய சுற்றத்தோடு, ஊரின் முன்பகுதியில்
இறாஅலியரோ பெரும நின் தானைதங்கிவிடாமலிருப்பாராக! பெருமானே! உன் படைகள்’ என்று
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉஇனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடிக்கும்
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பமுரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல்‘காய் காய்த்த கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில்
வந்து இறைகொண்டன்று தானை அந்தில்வந்து நிலையாகத் தங்கியுள்ளது சேனை, அவ்விடத்தில்
களைநர் யார் இனி பிறர் என பேணிநம் துயரைத் தீர்ப்பவர் சேரனைத்தவிர யார் இருக்கிறார்கள் இனி வேறே’ என்று இறைவனைத் தொழுது,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்கபகைவரின் நிலையான கோட்டைக்குள்ளிருக்கும் வீரர்கள் ஓசை அடங்கிப்போய் வெளிவராமல் இருக்க,
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇவேறு பகைவரும் அழியும்படி, தும்பைப் பூ மாலையினைச் சூடிக்கொண்டு, வஞ்சினம் கூறி,
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய அரிய போரினை
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பிஅழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த,
வென்றி ஆடிய தொடி தோள் மீ கைவெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துபகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்தஒளிவிடும் பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல்முன்னணிப்படையினரை மிகுதியாகக் கொண்ட, வலிமையுள்ள நார்முடிச் சேரல்,
புன் கால் உன்னம் சாய தெண் கண்புல்லிய அடிப்பகுதியையுடைய உன்னமரம் பகைவரின் தோல்வியைக் குறியிட்டுக்காட்டி வாடி நிற்க, தெளிந்த கள்ளில்
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்பசிறிதளவே சேர்மானப் பொருள்கள் கலக்கப்பட்ட அரியல் என்ற கள் இரவலரை வேறு ஏதேனும் குடிக்கவிடாமல் தடுக்க,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்துதான் தனக்கெனத் தருவித்து உண்ட பூ அரும்புகளால் சமைக்கப்பட்ட நறவு என்ற கள்ளினை உண்டுகளித்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனேஅருவிநீர் இனிமையாக ஒலிக்கும் மலைச் சரிவையுடைய நேரிமலையில் இருக்கிறான்!
செல்லாயோ தில் சில் வளை விறலிசெல்வாயாக! சிலவாகிய வளைகளை அணிந்த விறலியே!
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்துமலர்ந்த வேங்கை மரத்தைப் போல ஒளிரும் அணிகலன்களை அணிந்து
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்பமென்மையான இயல்பினையுடைய மகளிரின் அழகு நலம் சிறந்திருக்க,
பாணர் பைம் பூ மலைய இளையர்பாணர்கள் பசும்பொன் மாலையைச் சூடியிருக்க, இளையவர்கள்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்துஇனிய களிப்பால் வழுவாத மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்தநெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய் பெரிய போர்க்களத்தை வாழ்த்த,
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்றுஅங்குசம் காட்டும் குறிப்பினை மீறாமல் – தந்தத்தின் பூண்கள் இறுக்க அணியப்பெற்று
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிரபாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் சிதறும்படியாக, 
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர்காட்டினில் தோன்றி பரந்து உயர்ந்து நின்று, நாட்டிலுள்ளோர் காணும்படி ஒளிரும் காட்டுத்தீயைப் போன்ற
அழல் விடுபு மரீஇய மைந்தின்சினத்தைக் கைவிட்டு – நடக்கின்ற, வலிமையுடைய
தொழில் புகல் யானை நல்குவன் பலவே     வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
  
  
ஐந்தாம் பத்து           ஐந்தாம் பத்து           
      பரணர்      பரணர்
  
# 41 பாட்டு 41# 41 பாட்டு 41
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனியமுறுக்கேற்றிய நரம்பினையுடைய, இனிய இசை நிறைவுற்ற
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்பவளைந்த அமைப்பினையுடைய நல்ல யாழினை ஏவல்இளையவர்கள் தாங்கிநிற்க,
பண் அமை முழவும் பதலையும் பிறவும்தாளங்களைத் தட்டிப்பார்த்து அமைக்கப்பட்ட மத்தளமும், ஒரு கண் பறையும், பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கிமூங்கிலின் கணுக்களை அறுத்துச் செய்யப்பட்ட பெருவங்கியத்தோடு சேர்த்துக்கட்டி
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர்காவடியின் இரு பக்கங்களிலும் சரியாகக் கட்டப்பட்ட, ஆடல்துறைக்கு வேண்டிய கலங்களைக் கொண்ட பையினராய்
கைவல் இளையர் கடவுள் பழிச்சயாழிசைப்பதில் வல்லவரான இளையோர் கடவுளை வாழ்த்திக்கொண்டுவர,
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறுவீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி, வலிமைகொண்ட களிறு,
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைமலையினைச் சார்ந்து நிற்கும், ஒளிவிடும் பூக்களையுடைய வேங்கைமரத்தின்
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன்பூக்களைக் கொண்ட பெரிய கிளையை வளைத்து, அதனைப் பிளந்து தன்
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சிகரிய பெரிய தலையுச்சி அழகுபெறச் சூடிக்கொண்டு,
சேஎர் உற்ற செல் படை மறவர்திரளாக வருகிற பகைவர்மேற் செல்லும் படைவீரர்கள்
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்குதண்டினை வலதுகையில் ஏந்தியவராய்ப் போரை எதிர்கொண்டு ஆரவாரிப்பதைப் போல,
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும்சுரபுன்னைகள் செறிந்து இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற,
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்மழை பெய்வது மாறிப்போன, மூங்கில்கள் உலர்ந்துநிற்கும் அரிய வழிகள்
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர்ஒன்றோ, இரண்டோ அல்ல, பலவற்றைக் கடந்து, திண்ணிய தேரையுடைய
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினேபழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்!
தாவல் உய்யுமோ மற்றே தாவாதுவருந்துவதிலிருந்து உய்வு பெறுமோ? – தவறாமல்
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்தமது சூளுரையைச் செய்து முடிக்கும் பேச்சு மாறாத வீரர்கள்,
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்துமுரசுகளையுடைய பெரிய போரில் அரசர்கள் பலரை வெற்றிகொண்டு,
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்போர்வெம்மையின் மிகுதி பெருக, பகைவரை,
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்துமிளகினை இடிக்கும் உலக்கையைப்போல் அவரின் பெரிய தலைகளைத் தோமரத்தால் இடித்து அழிக்க,
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்நிலைத்திருக்கும் ஆரவாரம் உண்டாகும் கருமை படிந்த கடற்பரப்பைப் போல்,
எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண்எடுத்து எறிதலை ஏவிய குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற அகன்ற முகப்பையுடைய முரசு,
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்துவெற்றியால் உண்டாகிய புகழொலியோடு, ஒன்றாகக் கூடிச் சேர்ந்து முழங்க,
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளைகாற்றால் மோதுண்டு சிறு சிறு கடிய திவலைகளாக உடையுமாறு, வெண்மையான தலையாட்டமணிந்த
கடும் பரி புரவி ஊர்ந்த நின்விரைவான ஓட்டத்தையுடைய புரவியில் ஏறிவந்த உன்
படும் திரை பனி கடல் உழந்த தாளேஒலிக்கின்ற அலைகளையுடைய குளிர்ந்த கடலில் போரிட்ட உன் கால்கள் –
  
# 42 பாட்டு 42# 42 பாட்டு 42
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல்கரிய பனந்தோட்டால் ஆன மாலையையும், பொன்னால் செய்த பெரிய வீரக் கழலினையும் உடையோராய்
மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கிமீனைத் தெரிவுசெய்ய உயரத்தே சுற்றிச்சுற்றிவந்து, குளிர்ந்த குளத்தில் பாய்ந்து மூழ்கி
சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசிமீன்கொத்திப் பறவை மீண்டு எழுவதைப் போல, நெடிய வெண்மையான ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்நீண்ட பிளவினில் தைத்த தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட,
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லதுஅம்புகள் தைத்த உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல்,
தும்பை சூடாது மலைந்த மாட்சிமற்றவரோடு தும்பை மாலை சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய
அன்னோர் பெரும நன்_நுதல் கணவஅத்தகையவருக்குத் தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே!
அண்ணல் யானை அடு போர் குட்டுவதலைமை சான்ற யானைகளையும் எதிர்த்து அழிக்கும் போராற்றல் மிகுந்த குட்டுவனே!
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇபகைவரின் வலிமையை உடைக்கும் நல்ல போரில் எதிர்நின்று வெற்றியைத் தந்து,
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டிஇஞ்சியினையும் பூவினையும் கலந்த வாடாத மாலையை அணிந்து,
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கைசந்தனத்தை வெளியில் பூசிய கள்குடங்கள் சமைக்குக்கும்போது ஆடுகின்ற அடுப்புகளிலிருந்து
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்இனிய சுவைமிகுந்த சாறு வடிக்கப்பட்ட நீலமணி போன்ற தெளிந்த கள்ளினைத்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்துதனக்கென்று வைத்துக்கொள்ளாத ஈகையால் மிகுந்த களிப்பினை அளித்து,
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல்கூத்தர்களின் பெரிய சுற்றம் செழித்து வாழ, ஆடும் இயல்பினையுடைய
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின்தலையாட்டம் சிறந்துவிளங்கும் செருக்குள்ள குதிரைகள் கொடுக்கப்பட்டவற்றை எண்ணினால்,
மன்பதை மருள அரசு பட கடந்துமக்களெல்லாம் வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று,
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர்முன்னால் செய்த போரை, அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக –
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்துஒளிர்கின்ற நிலையையுடைய உயர்ந்த தந்தங்களை ஏந்தியபடி இருக்கும் களிறின் மீது ஏறி வந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்மானத்தையுடைய வலிமை மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, – உன்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூயதேருடன் சேர்ந்த வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க,
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்துகரிய பெரிய தெளிந்த கடலின் மிக்க அலைகளையுடைய நீர்ப்பரப்பில்
வெண் தலை குரூஉ பிசிர் உடையநுரையாகிய வெண்மையான உச்சி நிறமுள்ள திவலைகளாக மோதி உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவேகுளிர்ச்சியாகவும் பலவாகவும் வருகின்ற அலைகளைக் காட்டிலும் பலவே!
  
# 43 பாட்டு 43# 43 பாட்டு 43
கவரி முச்சி கார் விரி கூந்தல்கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும்,
ஊசல் மேவல் சே இழை மகளிர்ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும்,
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள்பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால், அவற்றுக்குள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅதமக்குப் புதுமையாகத் தோன்றித் தாம் விரும்பும் பெண்யானைகள் எண்ணிப்பார்க்கும் எண்ணிக்கையில் அடங்கப் பெறாத,
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரைதெய்வங்கள் நிலைபெற்றிருக்கும், பெரும் பாறைகள் உயர்ந்து நிற்கும் மலையான
வட திசை எல்லை இமயம் ஆகவடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக,
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்தெற்கில் உள்ள குமரியோடு, இவற்றுக்கிடையே உள்ள அரசர்களின்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழமுரசுகளையுடைய பெரிய போர் அழிந்துபோக, அதனால் ஆரவாரம் மிகுந்து எழ,
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்தபுகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,
போர் அடு தானை பொலம் தார் குட்டுவபோரில் பகைவரைக் கொல்லும் சேனைகளையுடைய, பொன்னால் செய்யப்பட்ட மாலையினை அணிந்த குட்டுவனே!
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்பபெரிய மூங்கில்கள் வாடிப்போகுமளவுக்கு மிகுந்த மழை பெய்யாமற்போக,
குன்று வறம் கூர சுடர் சினம் திகழகுன்றுகளில் வறட்சி மிகுந்திருக்க, ஞாயிறு சினந்து வெப்பம் மிக்குத் திகழ,
அருவி அற்ற பெரு வறல் காலையும்அருவிகள் நீர் அற்றுப் போன பெரும் வறட்சி நிலவுகின்ற காலத்திலும்,
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்துகடப்பதற்கரிய நீரோட்டத்தையுடைய பெரிய ஆற்றின் பெரிய கரையை உடைத்துச் செல்லும்படியாகவும்,
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலையபுதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்,
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்துஎண்ணற்ற அதிர்கின்ற முழக்கங்களை முழங்கி, மழை மிகுந்து,
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்குபெருத்த ஆரவாரத்தையுடைய வானம் துளிகளைச் சொரிவதைப் போல,
உறுவர் ஆர ஓம்பாது உண்டுதான் அன்புகொண்டவர் நிரம்ப உண்ணும்படி, தனக்கென எதனையும் வைத்துக்கொள்ளாமல் அவருடன் உண்டு,
நகைவர் ஆர நன் கலம் சிதறிதான் சிரித்து உறவாடுவோர் நிரம்பக் கொள்ளும்படி நல்ல அணிகலன்களை வாரி வழங்கி,
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்ஆடுகின்ற சிறகுகளையுடைய கின்னரப்பறவையை வெல்லுகின்ற யாழ்நரம்பின் இனிய இசையோடு சேர்ந்த இனிய குரலில்
பாடு விறலியர் பல் பிடி பெறுகபாடுகின்ற விறலியர் பல பெண்யானைகளைப் பெற்றுக்கொள்க;
துய் வீ வாகை நுண் கொடி உழிஞைமேலே பஞ்சு போன்ற முடியினைக் கொண்ட வாகைப்பூவும், நுண்ணிய கொடியில் பூக்கும் உழிஞையும் சூடுகின்ற
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின்வெற்றியை விரும்பும், பகைவர்க்கு அச்சம்தரும் சிறப்பினையுடைய,
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுகபகைப்புலத்தைக் கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க;
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்குஊர்ப்பொதுவிடத்தில் பரவித்திரிந்து, தெருக்களின் இரண்டு பக்கங்களிலும் சென்று
கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும்சிறிதாக வெட்டப்பட்ட நுண்ணிய கோலைக் கையில் ஏந்திக்கொண்டு, அரசனின் போர்வெற்றியை வாழ்த்திப் பாடும்
அகவலன் பெறுக மாவே என்றும்பாணன் பெற்றுக்கொள்க குதிரைகளை என்ற – எப்பொழுதுமே
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும்போராகிய தொழிலை விரும்புவதால், பகைவர்களும்
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின்மனம் அடங்காமல் புகழ்ந்த, தூங்கல் ஓசையினைக் கொண்ட முழவினையுடைய, 
தொலையா கற்ப நின் நிலை கண்டிகுமேஅழையாத கல்வியினையுடையவனே!  – உனது செல்வமிக்க நிலையைக் கண்டோம் –
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராதுநிணத்தைச் சுடுவதால் உண்டான புகையுடன் நெருப்பு தன் வெம்மையை நீங்காமல்
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணிநிரம்புதலும் அகலுதலும் இல்லாத, கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டு என தவாஅ கள்ளின்உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வண் கை வேந்தே நின் கலி மகிழானேவளமையான கொடையினையுடைய வேந்தனே! உன்னுடைய மகிழ்ச்சிமிக்க அரசவையில் –
  
# 44 பாட்டு 44# 44 பாட்டு 44
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூநிலத்தையே உடைப்பது போன்ற முழக்கத்துடன், விசும்பினைத் துடைப்பது போல்
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்கவானத்தில் தோயும்படியாக, வெற்றிக்கொடி, தேர் மீது அசைந்தாட,
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்றஎவ்வளவு பெருமையுடையதாயினும், போரில் வெற்றியடைந்து பெற்றவைகளை,
அரிய என்னாது ஓம்பாது வீசிமிகவும் அரியவை என்று எண்ணாமல், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாமல் வாரி வழங்கி,
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும்அணிகலன்களை மிகவும் கொடுப்பதை அன்றி, கனவிலும்
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்துஎன் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையும்,
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர்பெருமித நடையையுமுடைய அண்ணலே! உன்னைப் பாடுகின்ற பாடினி காண்பாளாக –
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை – காணாமலேபோகட்டும் – உன்னைப் புகழ்ந்த யாக்கையாகிய,
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடைமிக்க வலிமை பொருந்திய, நோயில்லாத, வலிமையாக முறுக்கேறக் கட்டப்பட்ட உடம்பினை –
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகைநுண்ணிய கொடியையுடைய உழிஞையின் பூவைச் சூடிய, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பவன்
சேணன் ஆயினும் கேள் என மொழிந்துதோலைவில் இருந்தாலும் உன்னை நண்பன் என்று கூறிக்கொண்டு,
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்குபகைவர்க்கு அஞ்சி தன் இடத்தை விட்டுப் பெயர்ந்து ஒளிந்திருந்த நீக்கமுடியாத சச்சரவிற்கு,
அரண்கள் தாவு_உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்னஅரண்களைக் கடந்து, தெய்வத்தால் கேடு நிகழ்ந்தாற் போல,
மோகூர் மன்னன் முரசம் கொண்டுபகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்துஅவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு வீழ்த்தி
முரசு செய முரச்சி களிறு பல பூட்டிமுரசு செய்வதற்காகத் துண்டுகளாக வெட்டி, யானைகள் பலவற்றை வண்டியில் பூட்டி
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணிஇழுத்துக்கொண்டு போகச் செய்தவனே! திரட்சி இல்லாத பசிய இறைச்சித் துண்டத்தை
வைத்தலை மறந்த துய் தலை கூகைவைத்த இடத்தை மறந்த பஞ்சுபோன்ற கொண்டையையுடைய ஆண்கூகையைக்
கவலை கவற்றும் குராலம் பறந்தலைகவலைப்படச்செய்து வருத்தும் பென்கூகையையுடைய பாழ்நிலத்தில்,
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டிமுரசினை உடைய, பரம்பரையாக அரசுரிமை பெற்ற, வேந்தர்கள் பலரை வென்று
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்தஅசைகின்ற கடல் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பை ஆட்சிசெய்து, தம் வாழ்நாளை இனிதே கழித்து இறந்துபோன
மன்னர் மறைத்த தாழிமன்னர்களை உள்ளிட்டு மூடிமறைத்த தாழிகளைக் கொண்ட
வன்னி மன்றத்து விளங்கிய காடேவன்னி மரம் நிற்கும் ஊர்ப்பொதுவிடத்தில் விளங்கிய இடுகாடு -(- காணாமலேபோகட்டும் – – உடம்பினை.)
  
# 45 பாட்டு 45# 45 பாட்டு 45
பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணிபொன்னால் செய்யப்பட்ட தும்பைப் பூவையும், புள்ளிகள் பொருந்திய அம்பறாத்தூணியில்
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்புற்றினில் அடங்கி இருக்கும் பாம்பைப் போன்று ஒடுங்கிக்கிடக்கும் அம்புகளையும்,
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்,
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினையும்,
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,
எழுமுடி மார்பின் எய்திய சேரல்ஏழுஅரசர்களின் மணிமுடியினின்றும் செய்யப்பட்ட பதக்கத்தை மார்பினில் அணிந்த சேரலே!
குண்டு கண் அகழிய மதில் பல கடந்துஆழமான இடத்தையுடைய அகழிகளைக் கொண்ட மதில்கள் பலவற்றை வெற்றிகொண்டு,
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்டமுன்னர் பலகாலங்களின் பலமுறை உள்ளே புகுந்து அங்குள்ள பொருள்களைக் கொண்டு அழித்த
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்துநாடு பொருந்திய அரசுரிமையுடைய, அகன்ற உள்ளிடத்தையுடைய அரண்களின்
கதவம் காக்கும் கணை எழு அன்னகதவினைக் காக்கும் திரண்ட எழுமரத்தைப் போன்ற
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சிபகைவர் நாடுகளைப் பெறும் திண்மையான தோளினை உயர ஓங்கித் தூக்கி,
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடிபிணங்கள் குவிந்துகிடக்கும் போர்க்களத்தில் துணங்கைக்கூத்து ஆடி,
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை
ஓடா பீடர் உள்_வழி இறுத்துபகைவருக்குப் புறங்கொடுத்து ஓடாத பெருமையையுடைவர்களுக்கு அவர்கள் இருக்குமிடங்களில் அளித்து,
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்முள்வேலி இடுவதை அறியாத எல்லையையும், பகைவரின்
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்வில் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும்,
அனைய பண்பின் தானை மன்னர்அத்தகைய பண்பினையுடைய சேனையையுடைய வேந்தர்
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லைஇப்பொழுது வேறு யார் உள்ளாரோ? உனக்கு  முன்னாலும் இல்லை,
மழை கொள குறையாது புனல் புக நிறையாதுமேகங்கள் உறிஞ்சிக்கொள்வதால் குறையாமலும், ஆற்று வெள்ளம் புகுவதால் நிறையாமலும் இருக்கின்ற –
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல்குறுக்கிட்டுத் தடுக்கும் காற்று செலுத்துதலால், அசைகின்ற, மிக நிறைந்த சூல்கொண்ட மேகங்களின்
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபுஒளிர்கின்ற மணி போன்ற மின்னலைப் போன்று வேலினைச் செலுத்தி,
முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே– முழங்குகின்ற அலைகளோடு கூடிய குளிர்ந்த கடலிடத்தில் பகைவரைப் போரிட்டு அழித்தவர்கள் –
  
# 46 பாட்டு 46# 46 பாட்டு 46
இழையர் குழையர் நறும் தண் மாலையர்அணிகலன்களையும், காதணிகளையும், நறிய குளிர்ந்த மாலையினையும் அணிந்த,
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கைநிமிர்ந்தெரியும் சுடர் போன்று ஒளிரும் வளையல்களைச் செறிவாக அணிந்த முன்னங்கைகளையும்,
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின்மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்,
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலைக் கொண்டையாக முடித்து அலங்கரித்துக்கொண்ட மகளிர்,
தொடை படு பேரியாழ் பாலை பண்ணிநரம்புகள் இறுக்கமாகக் கட்டப்பட்ட பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்து,
பணியா மரபின் உழிஞை பாடபகைவருக்குப் பணியாத மரபினையுடைய உழிஞைத் திணையைப் பாட,
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்அவர்களை நன்கு உபசரித்து, அவர்க்கு இனிய கள்ளினை மிகுதியாகக் கொடுப்பதால் –
சுரம் பல கடவும் கரை வாய் பருதிபாலைவழிகள் பலவற்றைக் கடந்துசெலுத்தப்படும், தேய்ந்துபோன விளிம்புகளைக் கொண்ட தேர்ச்சக்கரங்கள்
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமியதான் செல்லுகின்ற போக்கில் எண்ணற்ற பசிய தலைகளைத் துண்டாக்க,
பல் செரு கடந்த கொல் களிற்று யானைபல போர்களை வென்ற, கொல்லுகின்ற களிறாகிய யானைகளையுடைய,
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டுசங்குகள் முழங்கும் கடல் கலங்கும்படி, வேற்படையைச் செலுத்தி,
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டியஎழுந்து உடையும் அலைகளையுடைய நீர்ப்பரப்பாகிய ஒலிக்கின்ற கடலில் பகைவரைத் தோற்றோடச் செய்த
வெல் புகழ் குட்டுவன் கண்டோர்வெற்றியால் கிடைக்கும் புகழை உடைய குட்டுவனைக் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தேசெல்வோம் என்று சொல்லமாட்டார், பாடிவிட்டுத் திரும்ப அவரது ஊருக்கு –
  
# 47 பாட்டு 47# 47 பாட்டு 47
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்பகைவரோடு போரிட்டது போதும் என்று ஓயமாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும்போதெல்லாம்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறேபெற்று ஓயமாட்டார், பரிசிலர், களிறுகளை;
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்துமலைமேலிருந்து விழும் அருவியினைப் போல, மாடங்களின் மேலிருந்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்காற்றால் அலைக்கப்படும் ஒளிவிடும் கொடிகள் ஆடி அசையும் தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்சொரிகின்ற சுரை பெற்றுக்கொண்ட நெய் வழிந்து பரவுதலால்
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழலபாண்டிலாகிய வட்ட விளக்கில் பருத்த சுடர் ஆடிக்கொண்டு எரிய,
நன் நுதல் விறலியர் ஆடும்நல்ல நெற்றியைக் கொண்ட விறலியர் ஆடுகின்ற
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவேபழமையான மாளிகையுள்ள ஊர்களில் அவனது புகழுரைகள் ஓயமாட்டா.
  
# 48 பாட்டு 48# 48 பாட்டு 48
பைம் பொன் தாமரை பாணர் சூட்டிபசும்பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பாணருக்குச் சூட்டி,
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிஒளிவிடும் நெற்றியையுடைய விறலிகளுக்குப் பொன்னாற் செய்த மாலைகளை அணிவித்து,
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்குநிலையில் தாழ்ந்துபோகாத பலவான புகழை நிலைநாட்டி, கடலுக்குள் சென்று,
கடலொடு உழந்த பனி துறை பரதவகடற்பகைவரோடு போரிட்டு வெற்றிபெற்ற, குளிர்ந்த துறைகளைக் கொண்ட பரதவனே!
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர்அங்கு, நீரில் பெற்ற அரும் பொருள்களை, இங்கு இவரின்
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்மனம்கொள்ளாப் பாடலுக்கு எளிதிலே வழங்கும்,
கல்லா வாய்மையன் இவன் என தத்தம்கொடுத்தலையன்றித் தனக்கென வைத்துக்கொள்ளுதலைக் கல்லாத வாய்மையையுடையவன் இவன் என்று, அவரவர்,
கைவல் இளையர் நேர் கை நிரைப்பஇசைப்பதில் வல்லவர்களாகிய இளையவர்கள், தங்களின் ஒத்த கைகளை வரிசையாக நீட்ட,
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மைவேண்டியவர்க்கு வணங்கிய மென்மையினையும், வேண்டாதோர்க்கு வணங்காத ஆண்மையினையும், கொண்டு
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும்பகைவரின் ஊர்களைச் சுடுகின்ற மிகுதியான நெருப்பை எரிப்பதால், மிகவும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர்பூவிதழ்கள் தம் அழகழிந்துபோன மாலையோடு, பூசிய சந்தனம் புலர்ந்துபோன
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோபலவாகிய புள்ளிகளையுடைய மார்பையுடையவனே! உன் பெயர் வாழட்டும் –
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்உனது மலையில் பிறந்து, உனது கடலில் சென்று கலக்கும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும்
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கைசோலைகளில் தங்கியிருந்து செய்யும் வேனில் விழாவும் கொண்ட பெரிய அழகிய வாழ்க்கையில்
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும்உன்னை விரும்பிச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரோடு உண்டு, இனிமையாகத் துய்த்து,
தீம் புனல் ஆயம் ஆடும்இனிய வெள்ளத்தில், மக்கள் கூட்டம் நீர்விளையாட்டு ஆடுகின்ற
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவேகாஞ்சி என்னும் ஆற்றின் அழகிய பெரிய துறையிலிருக்கும் மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் –
  
# 49 பாட்டு 49# 49 பாட்டு 49
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்– நாங்களும் செல்கிறோம், நீங்களும் வாருங்கள்,
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர்முன்னும் பின்னும் அசைகின்ற மாலையினையும், பக்கவாட்டில் அசைந்தசைந்து நடக்கும் இயல்பினையும் உடைய விறலியரே!
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயபாடும் திறத்தால் வாழும் வாழ்க்கையினையுடைய உம்முடைய சுற்றத்தவர் இனிதே உண்பார்களாக –
களிறு பரந்து இயல கடு மா தாங்கயானைப்படை பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் தாங்கித்தாங்கி நடக்க,
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்பஒளிவிடும் கொடிகள் அசைந்து ஆட, தேர்கள் விலகி விலகி வளைந்து செல்ல,
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார்வேல்களை எறிந்துகொண்டு மேற்செல்லும், பகைவரின் பக்கவாட்டுப் படைகளை அழிக்கின்ற விரைவான முன்னணிப்படையும்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்துவெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டிவெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடிமார்பிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி,
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுகமழை நாளின் வெள்ளம் போலச் செங்கலங்கலாக, பள்ளங்களை நோக்கிப் பாய,
படு பிணம் பிறங்க பாழ் பல செய்துசெத்து விழுகின்ற பிணங்கள் குவியும்படியாக மிகுதியான சீரழிவைச் செய்து,
படு கண் முரசம் நடுவண் சிலைப்பஒலிக்கின்ற கண்ணையுடைய முரசு போர்க்களத்து நடுவே வெற்றியை முழங்க,
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் படபகைவரின் வளம் எல்லாம் அற்றுப்போகுமாறு கொள்ளை நிகழ, இருந்து வாழக்கூடிய இளையர் பலர் இறக்கும்படி செய்து,
கரும் சினை விறல் வேம்பு அறுத்தகரிய கிளைகளையும், வலிமையினையும் உடைய வேம்பினை வெட்டி வீழ்த்திய,
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கேமிகுந்த சினத்தைக் கொண்ட குட்டுவனைக் கண்டு வருவதற்காக –
  
# 50 பாட்டு 50# 50 பாட்டு 50
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்பபெரிய மலையில் மேகங்களின் முழக்கத்தினால் விலங்குக் கூட்டம் அஞ்சி நடுங்க,
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறிகாற்றோடு கலந்து வேகமாகப் பெய்யும் மழை, ஆலங்கட்டிகளோடு சிதறிப் பொழிய,
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழியகரும்புகள் நெருங்கி வளர்ந்த கழனிகளையுடைய நாடு வளத்தை மிகுதியாகத் தர,
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇவளம் பொருந்திய சிறப்பினையுடைய உலகத்தைப் பேணிப் பாதுகாத்து,
செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைநேர் கிழக்காக ஓடும் கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய,
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒருகாவிரியோடு கூட, பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள்
மூன்று உடன் கூடிய கூடல் அனையைமூன்றும் ஒன்று கூடும் முக்கூடல் போன்றவன் நீ!
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிரகொல்லுகின்ற களிறுகள் வலிமையுள்ள கடலலைகளாய் நடந்துவர, அழகிய வில்கள் பிசிர் போல் விளங்க,
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வரஉயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்குபலவாறான முரசங்கள் கலந்து முழங்குகின்ற ஒலியினைக் கேட்டு வெருண்டுபோன வேந்தர்களுக்குப்
அரணம் ஆகிய வெருவரு புனல் தார்பாதுகாப்பாகிய அச்சம் தரும் வெள்ளமாகிய முன்னணிப்படை,
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும்மலையின் மேலும், கடலிலும், பிற இடங்களிலும் உள்ள
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்தஅரண்கள் அமைந்த போர்களை வென்று, அச்சம் பொருந்திய
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்துவீரர்கள் நிறைந்த இடங்களையுடைய நாடுகளைக் கைப்பற்றி,
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார்நல்ல புகழ், இந்த அகன்ற உலகில், கெட்டழிய, பகைவரின்
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்புசினமாகிய தீ முற்றிலும் அணைந்துபோகுமாறு நிறைவுசெய்தாய்! எனவே பூசிய சந்தனம் புலர்ந்துபோக,
வண்ணம் நீவி வகை வனப்பு உற்றமேனியின் ஒப்பனைகள் துடைக்கப்பட, பலவகையாக அழகு சேர்ந்த
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்கோடுகளைக் கொண்ட வண்டுகள் ஒலிக்கும், உன் மார்பினால் ஒன்றுசேர்க்கப்படும் மகளிரின்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்துவிரிந்த மெல்லிய கூந்தலான மென்மையான படுக்கையில் இருந்து,
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்துவருத்துகின்ற காமமாகிய நோயை நீக்கும்பொருட்டு, அவரின் மார்பைச் சேர்ந்திருக்கும் அணைப்பினால்
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழஇரவுப்பொழுதின் பயனைக் கொள்ளும் முறைமையினால் – சிறிய தூக்கத்திலிருந்து விழிக்க
எவன் பல கழியுமோ பெரும பல் நாள்எத்தனை நாட்கள் கழியுமோ? பெருமானே! பல நாட்கள்,
பகை வெம்மையின் பாசறை மரீஇபகைவர்மீது கொண்ட பகைமையின் வெம்மையினால், பாசறையில் தங்கியிருப்பதால்
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாதுதூக்கம் என்பது அரிதாக அமைந்த சிறிய துயிலும் கொள்ள இயலாமல்,
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்சங்கொலி முழக்கமும், பிற கருவிகளின் இனிய ஓசையும் எழுப்பிவிடும்
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே     பெருமை பொருந்திய போர்ச்செல்வத்தில் பழகிப்போன உன் கண்களுக்கு –