நற்றிணை 351-400

  
# 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்# 351 குறிஞ்சி மதுரை கண்ணத்தனார்
  
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனைசிறுமிப் பருவத்தைக் கடந்துவிட்டாள் இவள் என்று நம் வளமுள்ள வீட்டில்
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள்வெளியே போகாதவாறு காவலுக்குட்படுத்தினாய் என்றாலும் மிகவும் இவள்
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்மேனி நிறம் மாறினாள் என்பதனை உணராதவளாய், பல நாட்கள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணிவருத்தங்கொண்ட நெஞ்சத்தோடு தெய்வத்தை வேண்டிக்கொண்டு
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள்   5வருந்தவேண்டாம்; வாழ்க! வேண்டுகிறேன் அன்னையே! கரிய அடிமரத்தையுடைய
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்தவேங்கை மரத்தின் பிரிகின்ற அழகிய கிளைகளுக்கிடையே சந்தனப் பலகையால் செய்த
களிற்று துப்பு அஞ்சா புலி அதள் இதணத்துகளிற்றின் வலிமைக்கும் அஞ்சாத, புலித்தோல் விரித்த பரணில்
சிறுதினை வியன் புனம் காப்பின்சிறுதினை விளையும் அகன்ற தினைப்புனத்தைக் காவல்காத்திருந்தால்
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனேதிரும்பப் பெறுவாள் உறுதியாக, என் தோழி தன்னுடைய மேனிநலத்தை.
  
# 352 பாலை மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்# 352 பாலை மதுரை பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇயஇலை வடிவத்தில் உள்ள சிறந்த அம்பினை வில்லில் சிறப்பாகப் பொருத்திய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன்அன்பில்லாத ஆடவர் காயப்படுத்தியதால் வழக்கமாகச் செல்வோருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலைபல புதியவர்களும் இறந்து கிடந்த அச்சம்தரக்கூடிய பலவாறாகப் பிரிந்து செல்லும் நெறியில்
அழல் போல் செவிய சேவல் ஆட்டிநெருப்புருண்டை போல் சிவந்த காதினையுடைய கழுகின் சேவல்களை விரட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி   5தன் நிழலைப் பார்த்துச் சினங்கொள்ளும், நிணத்தை விரும்பும் கிழட்டு நரி
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து_உற்றுபுதிய ஊனை நிறைய உண்டு, நீர் வேட்கையால் வருத்தமுற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்துகானல்நீர் தெரியும் வறண்ட புலத்தில் தேடியலைந்து, நீரை விரும்பி,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅபிணத்தை மூடியுள்ள கற்குவியலில் நிழலான ஒதுங்குமிடத்தைப் பெறாமல்,
அரும் சுர கவலை வருதலின் வருந்தியகடப்பதற்கரிய பாலை நெறிகள் பலவாய்ப் பிரிந்துசெல்லும் இடத்திற்கு வந்துநிற்பதனால் வருந்திநிற்கும்
நமக்கும் அரிய ஆயின அமை தோள்     10நமக்கும் கடந்துசெல்ல முடியாதன ஆயின; மூங்கில் போன்ற தோள்களுடைய
மாண்பு உடை குறு_மகள் நீங்கிமாட்சிமை பொருந்திய இளமடந்தையான நம் காதலியும், தன் இருப்பிடத்தை விட்டு நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானேஇங்கே என் கண் முன் எப்படி வந்தாளோ? இரங்கத்தக்கவள் அவள்.
  
# 353 குறிஞ்சி கபிலர்# 353 குறிஞ்சி கபிலர்
  
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்ததுணைக்கு ஆடவர் இல்லாத பெண்டிரான கைம்பெண்கள் தமது முயற்சியால் செய்த,
நுணங்கு நுண் பனுவல் போல கணம்_கொளமிக மிக நுண்ணிதான பஞ்சுப்பொதி போல கூட்டமாகச் சேர்ந்து
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரைஅசைகின்ற மேகங்கள் தவழும் உயர்ந்த உச்சிகளைக் கொண்ட நெடிய மலையில்,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போன்ற பெரிய பழத்தை,
கல் கெழு குறவர் காதல் மட_மகள்   5மலையில் வாழும் குறவரின் அன்புக்குரிய இளைய மகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்கரிய விரலையுடைய மந்திக்கு வீட்டுக்கு வந்த விருந்தாளியாய்ப் படைக்கும்
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம்விண்ணைத் தோயும் மலைக்குரியவனே! சான்றோனாக இல்லை நீ! என்னுடைய
காமம் கனிவது ஆயினும் யாமத்துகாதல் மிகவும் பெருகினாலும், நள்ளிரவில்
இரும் புலி தொலைத்த பெரும் கை யானைபெரிய புலியைக் கொன்ற பெரிய துதிக்கையையுடைய யானை
வெம் சின உருமின் உரறும் 10கொடுங் கோபத்தையுடைய இடி போல முழங்கும்
அஞ்சுவரு சிறு நெறி வருதலானேஅஞ்சத்தக்க சிறிய வழியில் நீ வருவதால் –
  
# 354 நெய்தல் உலோச்சனார்# 354 நெய்தல் உலோச்சனார்
  
தான் அது பொறுத்தல் யாவது கானல்நான் அதனைப் பொறுத்துக்கொள்வது எவ்வாறு? கடற்கரைச் சோலையின்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணைஆடி அசையும் அடிமரத்தை வெட்டியதால், நெடிய கரிய பனைமரத்திலிருந்து
வீழ் காவோலை சூழ் சிறை யாத்தவிழுந்ததால் தோளில் சுமந்துகொண்டு சென்ற ஓலையால் சுற்றிலும் வேலியைக் கட்டின
கானல் நண்ணிய வார் மணல் முன்றில்கடற்கரைச் சோலையை அடுத்துள்ள நீண்டுகிடக்கும் மணலையுடைய முற்றத்தில்
எல்லி அன்ன இருள் நிற புன்னை     5இரவைப் போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னையின்
நல் அரை முழு_முதல் அ வயின் தொடுத்தநல்ல அடிமரத்தின் அடிப்பக்கமான அவ்விடத்தில் கட்டப்பட்ட
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்காற்றால் அசையும் தோணியையுடைய நீர்த்துவலைகள் தெறித்துவிழும் கடற்கரையில்,
கடு வெயில் கொதித்த கல் விளை உப்புகடும் வெயிலினால் உப்பளத்துநீர் சூடாகி ஆவியாய் எழுந்ததினால் கல்லாக விளைந்து உப்பினை
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்நீண்ட வழியில் எடுத்துச் செல்லும் வண்டிகள் வரிசையாகச் செல்வதைப் பார்ப்பவர்கள்
அளம் போகு ஆகுலம் கடுப்ப 10உப்பளத்து வழியில் விரைந்தோடியவாறு எழுப்பும் ஆரவார ஒலியைப் போன்று
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பேஊரெல்லாம் உரக்கப்பேசும் பழிச்சொல்லாய் ஆகின்றது உன்னுடனான நட்பு –
   
# 355 குறிஞ்சி# 355 குறிஞ்சி மோசி கீரனார்
  
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தைபுதல்வனை ஈன்ற பூப்போன்ற கண்களையுடைய மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்தனது முலையைப் புதல்வனின் வாயில் ஊட்டிவிடக் குவிக்கும் கையைப் போன்ற காந்தளின்
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழைபூங்கொத்தின் வாயில் தோயும் கொழுத்த மடலையுடைய வாழைப்பூவிலுள்ள
அ மடல் பட்ட அருவி தீம் நீர்அந்த மடலின் வழியாகச் சொரியும் அருவிநீர் போன்ற இனிய நீரை
செம் முக மந்தி ஆரும் நாட5சிவந்த முகத்தையுடைய மந்தி வாய்வைத்து நிறையக் குடிக்கும் நாட்டைச் சேர்ந்தவனே!
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்காள்.
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில்அழகிய சிலவான கூந்தலையுடைய என் தோழியின் தோளில் துயில்வதில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீநெஞ்சத்தில் இன்புறாய் எனினும் அதனை நீ
என் கண் ஓடி அளி-மதி     10என் மீது கொண்ட பரிவினாலாவது அவளுக்கு அளிப்பாய்,
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளேஉன்னுடைய பரிவைத் தவிர அவளுக்கு வேறு ஒன்றும் இல்லை.
  
# 356 குறிஞ்சி பரணர்# 356 குறிஞ்சி பரணர்
  
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தநிலத்தின் தாழ்ந்த பக்கத்தில் இருக்கும் தெளிந்த கடலில் இரைய அருந்திய,
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள்,
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சிபொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில்
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்     5வளராத இளம் குஞ்சுகளுக்கு வைத்துண்ணும் உணவைக் கொடுப்பதற்குத்
அசைவு இல் நோன் பறை போல செலவரதளர்ச்சியற்ற வலிய பறத்தலை மேற்கொள்வதைப் போல பலமுறை தலைவியைப் பார்ப்பதற்குச் சென்றுவர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்வருந்தினாய், வாழ்க, என் உள்ளமே! ஒரு நாள்
காதலி உழையள் ஆககாதலி எனக்குப் பக்கத்திலிருக்க,
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமேகிழக்கில் தோன்றும் விடிவெள்ளியைப் போல எமக்கும் ஒரு விடிவுகாலம் வரும்.
  
# 357 குறிஞ்சி குறமகள் குறியெயினி# 357 குறிஞ்சி குறமகள் குறியெயினி
  
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்புஉன்னுடைய கருத்து என்னவோ? தோழி! என்னுடைய கருத்து,
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்என்னோடு அது நிலையாக நிலைத்திருக்கமாட்டாதாயினும் எந்நாளும்
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதேநெஞ்சினைக் காயப்படுத்திக் கெட்டொழிவதை அறியாதது;
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன்நெடுந்தொலைவுக்கு உயர்ந்து தோன்றும் குன்றிலுள்ள உச்சிமலைச் சரிவில்
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி      5மழையில் நனைந்து சிலிர்த்த மணி போன்ற புள்ளிகளையுடைய குடுமியையும்,
பீலி மஞ்ஞை ஆலும் சோலைதோகையையும் கொண்ட மயில்கள் ஆடுகின்ற சோலையின்
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனைஅழகிய இடமான பாறையைக் கொண்ட அகன்ற வாயையுடைய புதுநீருள்ள சுனையில்
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சிமையுண்ட கண்களுக்கு ஒப்பான குவளை மலர்களைக் கொய்து தலையில் செருகிக்கொண்டு,
நீர் அலை கலைஇய கண்ணிசுனைநீரால் அலைக்கப்பட்டு கலைந்து போன தலைமாலையையுடைய
சாரல் நாடனொடு ஆடிய நாளே 10சாரல் நாடனான தலைமகனோடு நான் விளையாடிய நாள் – 
  
# 358 நெய்தல் நக்கீரர்# 358 நெய்தல் நக்கீரர்
  
பெரும் தோள் நெகிழ அம் வரி வாடபெரிய தோள்கள் மெலிந்துபோகவும், மேனியின் அழகிய வரிகள் வாடிப்போகவும்,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊரசிறிய மெல்லிய மார்பகத்தில் பெரிய அளவில் பசலை பாயவும்,
இன்னேம் ஆக என் கண்டு நாணிநான் இத்தன்மையில் இருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு,
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்பிரிந்து செல்வதைப் பற்றி உன்னைத் தெளிவித்தாரெனினும் – சிறிதளவும்
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என   5வருத்துதல் செய்யவேண்டாம், வாழ்க நீ என்று
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்கூட்டமான கடவுளர்க்கெல்லாம் உயர்ந்த பலியுணவைக் கொடுத்துத்
பரவினம் வருகம் சென்மோ தோழிதொழுது வருவோம் செல்வோமா தோழி!
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல்பெரிய சிவந்த இறாமீனின் பஞ்சு போன்ற தலையையுடைய முடங்கிய உடலை
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம்சிறிய வெண்ணிறக் கடற்காக்கை அன்றைய உணவாகப் பெறும்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்       10பசும்பூண் பாண்டியனின் மருங்கூர்ப்பட்டினம் போன்ற என்
அரும் பெறல் ஆய் கவின் தொலையஅரியதாய்ப் பெறக்கூடிய நுட்பமான அழகெல்லாம் தொலைந்துபோக
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரேஎன்னைப் பிரிந்து அயல்நாட்டில் வாழ்வதற்கு வல்லவராகிய தலைவரை –
  
# 359 குறிஞ்சி கபிலர்# 359 குறிஞ்சி கபிலர்
  
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதாமலைச்சரிவில் மேய்ந்த சிறிய கொம்பையுடைய சிவந்த பசு,
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உகஅசைகின்ற குலையான காந்தள் பூவைத் தீண்டியதால், அதினின்றும் தாதுக்கள் பசுவின் மேல் உதிர
கன்று தாய் மருளும் குன்ற நாடன்அதன் கன்று தாயைக் கண்டு மருளுகின்ற குன்றத்தைச் சேர்ந்தவன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃதுஉடுத்திக்கொள்ளும் தழையுடையைத் தந்தான்; நாம் அதனை
உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின்     5உடுத்திக்கொண்டால் எமது தாய்க்கு அஞ்சுகின்றேன்; திருப்பிக் கொடுத்துவிட்டால்
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடைநம் நண்பனுடைய வருத்தத்திற்காக அஞ்சுகின்றேன்; இதற்கிடையில்
வாடல-கொல்லோ தாமே அவன் மலைவாடாமல் இருக்குமோ அது? – அவனது மலையின்
போர் உடை வருடையும் பாயாபோரிற் சிறந்த வருடையாடுகளும் ஏறிச் செல்லாத
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையேவருத்தும் தெய்வமிருக்கின்ற மலைச் சரிவுப்பக்கமுள்ள, கொய்வதற்கு அரிய அந்த தழையுடை –
  
# 360 மருதம் ஓரம்போகியார்# 360 மருதம் ஓரம்போகியார்
  
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடியமுழவின் முகத்தில் பூசும் சாந்து புலர்ந்துபோகும்படி அதனை முழக்க, முறையோடு கூத்தினை ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போலதிருவிழா நடந்து முடிந்த களத்தில் உள்ள பாவையைப் போல,
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவிமுந்தினநாள் உன்னைச் சேர்ந்தவரின் புதிய நலத்தைக் கொள்ளைகொண்டு,
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்இன்று பாணனால் கொணரப்படும் மகளிரின் மென்மையான தோளினைப் பெறுவதற்காகச்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை 5செல்வாயாக பெருமானே! சிறந்து விளங்குக உன் பரத்தை!
பல்லோர் பழித்தல் நாணி வல்லேபலரும் பழித்துக்கூறுவதனை நாணி, ஓங்கி
காழின் குத்தி கசிந்தவர் அலைப்பஇரும்பு முள்ளால் குத்தி யானைப் பாகர்கள் வருத்துவதால்,
கை இடை வைத்தது மெய் இடை திமிரும்கொன்புகளிடையே வைத்தது மேனி முழுக்க வாரி இறைக்கின்ற
முனி உடை கவளம் போல நனி பெரிதுசினத்துக்கு உட்பட்ட கவளம் போல, மிகப் பெரிதும்
உற்ற நின் விழுமம் உவப்பென்      10நீ அடைந்த உன் சிறப்பைக் கண்டு மகிழ்கிறேன்,
மற்றும் கூடும் மனை மடி துயிலேமற்றொரு காலத்தில் கூடிவரும் மனையிடத்து வந்து துயில்கின்ற இன்பம்.
  
# 361 முல்லை மதுரை பேராலவாயர்# 361 முல்லை மதுரை பேராலவாயர்
  
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரிசிறிய மலர்களையுடைய முல்லையின் பெரிதாய் மணக்கும் மலரினைத்
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்தலைவன் தானும் சூடியுள்ளான், அவனுடன் வரும் இளைஞரும் சூடியுள்ளனர்;
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மாவானத்தையே தாவிக் கடப்பது போன்ற, பொன்னாலான முகபடாத்தை அணிந்துள்ள செருக்குள்ள குதிரைகள்,
படு மழை பொழிந்த தண் நறும் புறவில்மிகுதியான மழை பொழிந்த குளிர்ச்சியான நறிய முல்லைக்காட்டினில்
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப     5நீண்ட நாவினையுடைய ஒள்ளிய மணிகள் ஒலி மிக்கு இசைக்க,
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்மாலை நேரம் மயங்கிய வேளையில் மணம் மிகுந்த அகன்ற மாளிகையில்
தந்தன நெடுந்தகை தேரே என்றும்கொண்டுவந்து நிறுத்தின நம் நெடுந்தகையின் தேரை; எப்பொழுதும்
அரும் படர் அகல நீக்கிதீர்த்தற்கரிய துன்பத்தை முற்றிலும் நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளேஅவனுக்கு விருந்து செய்யும் விருப்பினளாக உள்ளாள் திருத்தமான இழையணிந்த தலைவி.
  
# 362 பாலை மதுரை மருதன் இள நாகனார்# 362 பாலை மதுரை மருதன் இள நாகனார்
  
வினை அமை பாவையின் இயலி நுந்தைநடக்கும் திறன் அமைக்கப்பட்ட பாவையைப் போல் நடந்து, உன் தந்தையின்
மனை வரை இறந்து வந்தனை ஆயின்வீட்டு எல்லையைக் கடந்து என்னோடு வந்துவிட்டாய்; எனவே,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலிகார்காலத்து முதல்மழையாகப் பெய்த குளிர்ந்த மழையையுடைய மேகங்களால்
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்தஅழகு மிகுந்துள்ள காட்டினில் உள்ள அகன்ற வெளியில் பரந்து திரியும்
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும்      5மிகச் சிவந்த தம்பலப்பூச்சிகளைப் பார்த்தும், கையிலெடுத்தும்
நீ விளையாடுக சிறிதே யானேநீ விளையாடிக்கொண்டிருப்பாயாக சிறிது நேரம்; நான்
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கைஇளங்களிறுகள் தம் உடலைத் தேய்த்துக்கொண்ட பருத்த அடிமரத்தைக்கொண்ட வேங்கை மரத்தின்கீழ்
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்திமணல் குவிந்திருக்கும் மேட்டின் பெரிய பின்பக்கத்தில் சேர்ந்திருந்து
அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்யாரும் போரிடுவதற்கு வருவாராயின் அஞ்சாமல் அவரை விரட்டுவேன்;
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே   10உன் வீட்டார் யாரும் வந்தால் மறைந்துகொள்வேன், மாமை நிறத்தவளே!
  
# 363 நெய்தல்# 363 நெய்தல்
  
கண்டல் வேலி கழி சூழ் படப்பைகண்டல் மரங்களால் ஆன வேலியும், கழி சூழ்ந்துகிடக்கும் கொல்லையையுமுடைய
தெண் கடல் நாட்டு செல்வென் யான் எனதெளிந்த கடலையுடைய நாட்டுக்குச் செல்வேன் யான் என்று
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்வழியினைத் தேர்ந்து போவாயாயின், சிறிதளவும்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன்
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு 5மூட்டுகள் அற்றுப்போனவிடத்தில் அவற்றைச் சேர்த்து வார்ப்புச் செய்ய உருக்குமண்ணைக் கொண்டு
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்பவருவீராக! தோழியே! மிகுந்த நீரையுடைய கடல்நிலத் தலைவனே!
பைம் தழை சிதைய கோதை வாடஉடுத்தியிருக்கும் பசிய தழையுடை உருக்குலைய, தலையில் கட்டிய மாலை வாடிப்போக,
நன்னர் மாலை நெருநை நின்னொடுநல்ல மாலைப் பொழுதில் நேற்று உன்னோடு
சில விளங்கு எல் வளை ஞெகிழசிலவாகிய ஒளிரும் பளபளப்பான வளையல்கள் கழன்றோட,
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே 10நண்டை விரட்டி விளையாடுவோளின் காற்சிலம்பு நெளிந்துபோய்விட்டதால் –
  
# 364 முல்லை கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்# 364 முல்லை கிடங்கில் காவிதி பெரும் கொற்றனார்
  
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்திரும்புவேன் என்று தலைவர் சொல்லிச் சென்ற பருவமும் வந்துசென்றுவிட்டது; பகற்போதிலும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றிஇருள் கலந்த நள்ளிரவைப் போல மேகமூட்டத்துடன் சேர்ந்து
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்கஆரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்பவாடைக்காற்றோடு பனிக்கு உண்டாகிய சினமெல்லாம் என் மீது வந்து தங்க,
இன்ன சில் நாள் கழியின் பல் நாள் 5இப்படியாக இன்னும் சிலநாட்கள் சென்றால், பலநாட்கள்
வாழலென் வாழி தோழி ஊழின்வாழமாட்டேன், வாழ்க, தோழியே! – முதிர்வுடைய
உரும் இசை அறியா சிறு செம் நாவின்இடியோசை போன்ற ஓசையை அறியாத சிறிய செம்மையான நாக்கையுடைய
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்பகுளிர்ந்த மணிகளின் இனிய ஓசை ஊருக்கு அருகே ஒலிக்க,
பல் ஆ தந்த கல்லா கோவலர்பலவான பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்த, மேய்ப்பதைத்தவிர வேறொன்றைக் கல்லாத இடையர்களின்
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப  10கொன்றைப் பழத்தால் செய்த அழகிய இனிய குழலின் ஓசை ஊரின் மன்றங்கள்தோறும் ஒலிக்க
உயிர் செல துனைதரும் மாலைஉயிரே போகுமாறு விரைந்துவரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினேசீற்றந் தீர்ந்த மழையோடு ஒன்று சேர்ந்து வருமானால் –
  
# 365 குறிஞ்சி கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்# 365 குறிஞ்சி கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
  
அரும் கடி அன்னை காவல் நீவிமிகவும் அரிய காப்பினைச் செய்துள்ள அன்னையின் காவலையும் கடந்து,
பெரும் கடை இறந்து மன்றம் போகிபெரிய தலைவாயிலை நீங்கி, ஊர் மன்றத்துக்குச் சென்று,
பகலே பலரும் காண வாய் விட்டுபகலில் பலரும் காணும்படியாக, வாய்விட்டு,
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவிஅகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப்
சென்மோ வாழி தோழி பல் நாள்       5போவோமா? வாழ்க, தோழியே! – பலநாட்கள்
கருவி வானம் பெய்யாது ஆயினும்திரண்டுவரும் வானம் மழைபெய்யாமற்போனாலும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்அருவியில் ஆரவாரத்துடன் நீர் விழும் நீர்வளம் மிக்க மலைச் சரிவையுடைய
வான் தோய் மா மலை கிழவனைவானத்தை எட்டும் பெரிய மலைக்குரியவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கேநீ சான்றோன் இல்லை என்று சொல்லிவிட்டு வருவதற்கு –
  
# 366 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்# 366 பாலை மதுரை ஈழத்து பூதன் தேவனார்
  
அரவு கிளர்ந்து அன்ன விரவு_உறு பல் காழ்பாம்பு படமெடுத்து உயர்ந்ததைப் போன்ற, வேறுபட்ட பலவான மணிகளைக் கோத்து
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்நெகிழ உடுக்கப்பட்ட நுண்ணிய ஆடை இடையிடையே வந்து பளிச்சிடும்
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள்திருத்தமான அணிகலன் அணிந்த அல்குலையும் பெரிய தோளையும் உடைய இளையமகளின்
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇநீலமணி போன்ற, ஐந்தாகப் பிரிக்கப்பட்ட, கூந்தலை மாசு போகக் கழுவி,
கூதிர் முல்லை குறும் கால் அலரி  5கூதிர்காலத்து முல்லையின் குட்டையான காம்பினைக் கொண்ட பூக்களை
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்தஅழகிய வண்டும் சுரும்பும் மொய்க்குமாறு முடித்த,
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்கரிய, பலவான மென்மையான கூந்தலைத் தலைக்கு அணையாகக் கொள்வதை விட்டு, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரிய தீண்டிவேல் போன்ற வெண்மையான முகை விரியும்படி தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பைஅறிவு முதிர்ந்த குருவி முயன்று செய்த கூட்டை
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும்  10மூங்கிலினுடைய அழகிய கழை அசைந்து உராயும்படி அலைக்கும்
வட புல வாடைக்கு பிரிவோர்வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
மடவர் வாழி இ உலகத்தானேஅறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.
  
# 367 முல்லை நக்கீரர்# 367 முல்லை நக்கீரர்
  
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடைவளைந்த பார்வையையுடைய காக்கையின், கூரிய வாயையுடைய பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்துநடுங்குகின்ற சிறகுகளையுடைய தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தைக் கரைந்து அழைத்து
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறுகரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்தெய்வத்துக்கு இடும் பலியுடன் கவர்ந்துகொள்ளும்பொருட்டு, குறிய கால் நாட்டிக் கட்டிய
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும்      5உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும்
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடிபழமையான வீடுகளையுடைய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைகுவளையோடு கலந்து தொடுத்த நறிய பூவான முல்லையின்
தளை அவிழ் அலரி தண் நறும் கோதைகட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை
இளையரும் சூடி வந்தனர் நமரும்    10நம் தலைவருடன் சென்ற இளைஞரும் சூடிக்கொண்டு வந்தனர்; நம் காதலரும்
விரி உளை நன் மா கடைஇவிரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக்கொண்டு
பரியாது வருவர் இ பனி படு நாளேஇடையீடு இல்லாமல் வருவார், இந்தப் பனி கொட்டும் நாளில்.
  
# 368 குறிஞ்சி கபிலர்# 368 குறிஞ்சி கபிலர்
  
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பிபெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி,
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கிகரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கைமரத்தில் ஊஞ்சல் ஆடி,
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடுவளைந்து உயர்ந்த அல்குலில் தழையாடை அணிந்து, உம்மோடு
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோஅருவியில் ஆடியும் வருவதைக் காட்டிலும் இனியதும் வேறு உண்டோ?
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த      5நெறிப்பு அமைந்த கூந்தலில் கருமை முதிர்ந்திருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறியநறுமணம் கமழ்வதைக் கொண்ட புதிய நாற்றத்தையும், சிறிய அளவில்
பசலை பாய்தரு நுதலும் நோக்கிபசலை பாய்ந்திருக்கும் நெற்றியையும் கண்டு
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டிவீணே கரைந்துருகும் நெஞ்சத்தவளாய், வேறொன்றை எண்ணி,
வெய்ய உயிர்த்தனள் யாயேபெருமூச்சுவிட்டாள் தாய்,
ஐய அஞ்சினம் அளியம் யாமே 10ஐயனே! அஞ்சுகிறோம், இரங்கத்தக்கவர் நாம்!
  
# 369 நெய்தல் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்# 369 நெய்தல் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்
  
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரஞாயிறு தன் சினம் தணிந்து மலையினில் சேர,
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுகநிறைவாகப் பறத்தலையுடைய குருகுக் கூட்டம் வானத்தில் உந்திக்கொண்டு ஒழுங்காகச் செல்ல,
எல்லை பைபய கழிப்பி முல்லைபகற்பொழுதை மெல்லமெல்லக் கழித்து, முல்லையின்
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலைஅரும்பு வாய்திறக்கும் பெரிய புன்மையையுடைய மாலைக்காலம்
இன்றும் வருவது ஆயின் நன்றும்    5இன்றும் வருமானால் பெரிதும்
அறியேன் வாழி தோழி அறியேன்என்ன செய்வதென்று தெரியவில்லை, வாழ்க, தோழி! – எனக்குத் தெரியவில்லை,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சிஞெமை மரங்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலையான இமையத்தின் உச்சியில்
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிவானிலிருந்து இறங்கும் ஒளிரும் வெள்ளிய அருவியையுடைய
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
சிறை அடு கடும் புனல் அன்ன என்   10அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல என்
நிறை அடு காமம் நீந்தும் ஆறேமனவுறுதியை உடைத்துச் செல்லும் காமவெள்ளத்தை நீந்திக்கடக்கும் வழி –
  
# 370 மருதம் உறையூர் கதுவாய் சாத்தனார்# 370 மருதம் உறையூர் கதுவாய் சாத்தனார்
  
வாராய் பாண நகுகம் நேர்_இழைவருக! பாணனே! சிறிது சிரிப்போம்! நேரிய இழை அணிந்த நம் தலைவி
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவிதன் சுற்றத்தைச் சூழ உடைய முதிர்ந்த சூல் கொண்டு நம் குடிக்கு ஒரு புதல்வனை ஈன்று உதவினாள்;
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்நெய்யோடு பளிச்சிடும் வெண்சிறுகடுகின் திரண்ட விதைகள்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகிபளிச்சென்ற நம் மாளிகையில் பேய்க்காப்பாக எங்கும் சிதறிக்கிடக்கப் படுத்திருந்தோளின் அருகில் சென்று
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி       5புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளும்
திதலை அல்குல் முது பெண்டு ஆகிஅழகுத்தேமலும் உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகித்
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி எனதூங்குகின்றாயோ மென்மையான அழகிய சிலவான கூந்தலையுடையவளே என்று
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றிபலவான மாட்சிமை கொண்ட அவளது வயிற்றில் குவளை மலரை ஒற்றியெடுத்துச்
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்லசிறிது நேரம் சிந்தித்தபடி நின்றிருந்த என்னைக் கண்டு மெல்ல
முகை நாண் முறுவல் தோற்றி10மலரும் மொட்டு போன்ற நாணமுடைய முறுவலைக் காட்டி,
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவேஅழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்.
  
# 371 முல்லை ஔவையார்# 371 முல்லை ஔவையார்
  
காயாம் குன்றத்து கொன்றை போலகாயா மரங்களைக் கொண்ட குன்றினில் கொன்றைப் பூக்களைப் போலப்
மா மலை விடர்_அகம் விளங்க மின்னிபெரிய மலையின் பிளவிடங்கள் விளங்கித் தோன்றும்படி மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கிமாமை நிறத்தவள் இருந்த இடத்தை நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்அகன்ற கரிய விசும்பிடம் எல்லாம் மறையும்படி பரவி
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்   5ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்மழை பெய்யத் தொடங்கின, இதுவரை பெய்யாத மேகங்கள்;
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கிஒளி விளங்கும் சுடரைப் போன்ற தொடிகள் கழன்று விழும்படியாக ஏங்கி
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர்அழத் தொடங்கினாள் ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி; அதற்கு மாறாகத்
குழல் தொடங்கினரே கோவலர்தம் குழலை இசைக்கத் தொடங்கினர் கோவலர்கள்,
தழங்கு குரல் உருமின் கங்குலானேமுழங்குகின்ற ஓசையுடன் இடி இடிக்கும் இரவுப்பொழுதில்.
  
# 372 நெய்தல் உலோச்சனார்# 372 நெய்தல் உலோச்சனார்
  
அழி_தக்கன்றே தோழி கழி சேர்புமனம் அழிந்து வருந்துதல் தக்கதல்ல, தோழியே! கழியைச் சேர்ந்த
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிக முதிர்ந்த பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபுவளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ வருந்தும்படியாக, காம்பு இற்று
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு எனகுழைவான கரிய சேற்றில் ஆழமாகப் புதைந்துபோகுமாறு வீழ்ந்ததாக,
கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு  5கிளைகளுடன் இருந்த குருகு வெருண்டு பறந்தோடும் துறையைச் சேர்ந்தவனை, வளை செய்யும் சங்கினைப்
அன்ன வெண் மணற்று அக_வயின் வேட்டபோன்ற வெண்மணலை உடைய இடத்தில், தழுவி மகிழ விரும்பிய உன்
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கிபெருமை வாய்ந்த உள்ளத்தோடு பொருந்த, – உன்னை ஆசையுடன் இனிதாகப் பார்த்து –
அன்னை தந்த அலங்கல் வான் கோடுஅன்னை தந்த அசைகின்ற மெல்லிய கோல்
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்குவளைந்து ஒடிந்ததற்கு வருந்துதலை அஞ்சி, – அவ்வாறு நேர்ந்ததற்கு
இனையல் என்னும் என்ப மனை இருந்து 10வருந்தவேண்டாம் என்று அன்னை தேற்றுவாள் என்று சொல்லுவர், – வீட்டிலிருந்து
இரும் கழி துழவும் பனி தலை பரதவர்கரிய கழியில் மீன்தேடும் நடுங்கும் தலையையுடைய பரதவரின்
திண் திமில் விளக்கம் எண்ணும்திண்மையான படகிலிருக்கும் விளக்குகளை எண்ணிக்கொண்டிருக்கும்
கண்டல் வேலி கழி நல் ஊரேகண்டல் மரத்தை வேலியாகக் கொண்ட கழியை அடுத்துள்ள நல்ல ஊர்மக்கள் –
  
# 373 குறிஞ்சி கபிலர்# 373 குறிஞ்சி கபிலர்
  
முன்றில் பலவின் படு சுளை மரீஇவீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து,
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தைபுல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க, தந்தையின்
மை படு மால் வரை பாடினள் கொடிச்சிமுகில் தவழும் பெரிய மலையைப் பாடியவளாய்க் குறமகள்
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடுஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு,
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி    5வருத்தும் தெய்வங்கள் உள்ள மலைச் சரிவில் அருவியில் நீராடி
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைகார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின்
பா அமை இதணம் ஏறி பாசினம்பரப்பு அமைந்த பரண் மீது ஏறி, பச்சைக் கிளிகளின் கூட்டத்தை
வணர் குரல் சிறுதினை கடியவளைந்த கதிர்களைக் கொண்ட சிறுதினையில் படியாதவாறு ஓட்டுவதற்கு
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கேவாய்ப்புக் கிட்டுமோ, நாளைக்கும் நமக்கு?
  
# 374 முல்லை வன் பரணர்# 374 முல்லை வன் பரணர்
  
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்சரளைக் கற்கள் பரவிக்கிடந்த, சென்று முடியாத நீண்ட வழியில்,
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடிஉயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களரி புளியின் காய் பசி பெயர்ப்பகளர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்தலை உச்சியில் கொண்ட உயர்ந்த சோற்றுப்பொதிகளையுடைய அயலூர் மக்களே!
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை  5முன் நாளிலும் பெற்றிருக்கிறோம் – இப்பொழுது பெறப்போகும்,
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்விரும்பப்படும் கரிய மணியைப் போன்ற, புனையப்பட்ட நீண்ட கூந்தலையுடையவள்,
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்பகண்ணீர் வடிந்து சொட்டுச் சொட்டாக மார்பினை நனைக்க,
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்நமக்கு விருந்து வைக்கும் விருப்பினளாய் தன்னை வருத்திக்கொள்ளும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையேதிருத்தமான அணிகலன்களை அணிந்த அரிவையாகிய இன்மொழிக்காரியின் நிலையை –
  
# 375 நெய்தல் பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி# 375 நெய்தல் பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி
  
நீடு சினை புன்னை நறும் தாது உதிரநீண்ட கிளைகளையுடைய புன்னைமரத்திலிருந்து நறிய தாதுக்கள் உதிரும்படியாக,
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்மரக்கொம்பில் அணிசெய்வதுபோல் இருக்கும் குருகுகள் கூட்டமாகப் பறந்துசெல்லும்
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்பபலவான பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையையும், மிகுந்த நீர்ப்பெருக்கையும் உடைய கடற்கரைத் தலைவனே!
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்தஉமக்கு எம்மீது அன்பு இல்லை; ஆதலினால், அவளுடைய விருப்பத்தையே என்னுடைய விருப்பமாக விரும்பிய
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப  5என்னிடத்தில் கூடத் தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூற வெட்கப்படும் இந்த நல்ல நெற்றியையுடையாள் மகிழும்படி
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நீ மணம்பேச வருவாயானால் மிகவும் நல்லது; பெரிய கடலில்
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரைஇரவுப் பொழுதில் திங்கள் மண்டிலம் தோன்றியதால் வலிமிக்க அலைகள்
எறிவன போல வரூஉம்எழுந்து கரையை மோதுவது போல வரும்
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரேஉயர்ந்த மணல்மேட்டுப் பகுதியிலுள்ள எமது வாழ்வதற்கு இனிமையான ஊருக்கு –
  
# 376 குறிஞ்சி கபிலர்# 376 குறிஞ்சி கபிலர்
  
முறம் செவி யானை தட கையின் தடைஇமுறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, வளைந்து
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினைதலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை
வரையோன் வண்மை போல பல உடன்வரையாது கொடுப்பவனின் வள்ளல்தன்மை போலக் கருதி, பலவும் ஒன்று சேர்ந்து
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம்தம் சுற்றத்தோடு கொத்தித்தின்னும் வளைந்த வாயையுடைய பச்சைக் கிளிக்கூட்டமே!
குல்லை குளவி கூதளம் குவளை       5கஞ்சங்குல்லை, காட்டு மல்லிகை, கூதாளி, குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன்இல்லம் ஆகியற்றின் பூக்களோடு கலந்து கட்டிய மிகவும் குளிர்ந்த தலைமாலையையுடையவனும்,
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும்வரிந்து கட்டிய வில்லையுடையவனும், அசோக மரத்தடியில் தோன்றுபவனுமாகிய
நல் தார் மார்பன் காண்குறின் சிறியநல்ல மாலையணிந்த மார்பினையுடையவனைக் கண்டால், இந்தச் சிறிய செய்தியை
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றைநன்கு அவனுக்குப் புரியும்படி சொல்லுங்கள்; – பின்னால் வந்து
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி 10வருத்துகின்ற தெய்வம் போல என்னை வருத்தி,
வறும் புனம் காவல் விடாமைவெறுமையான தினைப்புனத்தில் காவல்காக்க விடாததை
அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயேஅறிந்திருக்கிறீர் அல்லவோ? – எமது அறப்பண்பில்லாத தாயானவள் –
  
# 377 குறிஞ்சி மடல் பாடிய மாதங்கீரனார்# 377 குறிஞ்சி மடல் பாடிய மாதங்கீரனார்
  
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடிபனைமடலால் செய்த குதிரையில் ஏறி வந்தும், எருக்கம்பூ மாலையைச் சூடியும்
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்இடம் அகன்ற உலகத்தின் நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்,
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டிஒளிரும் நெற்றியையுடை அரிவையின் அழகினைச் சிறப்பித்துக்கூறியும்,
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்றுஇவ்வாறு செய்வதை விரும்பியவனாய், என்னுள்ளத்தை அரிதின் முயன்று நிலைநிறுத்தி,
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ     5அதுவே பிணியாக நலிவிக்க இறந்துபோகமாட்டேனோ?
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்தஅகன்ற கரிய வானத்தில் பாம்பினால் விழுங்கப்பட்டுக் குறைபட்டுப்போன
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போலபசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல
அளகம் சேர்ந்த திரு_நுதல்கூந்தலோடு சேர்ந்த அழகிய நெற்றி,
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றேதோழர்கள் இடித்துரைக்குமாறு என்னை மெலிவிக்கின்ற நோய் ஆகின்றது.
  
# 378 நெய்தல் வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்# 378 நெய்தல் வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
  
யாமமும் நெடிய கழியும் காமமும்நள்ளிரவுப் பொழுதும் நீண்டுகொண்டே மெல்லச் செல்கிறது; காமநோயும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்கண்ணுறக்கம் தராமல் மிகுந்துகொண்டே செல்லும்; தெளிந்த கடலில்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபயமுழங்கும் அலைகளும் முழவு இசைப்பது போன்று மெல்ல மெல்லப்
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்நெடுங்காலம் புண் பட்டவர்களைப் போல நீர்ப்பரப்பில் அசைந்துகொண்டிருக்கும்;
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்      5அவ்விதமாக நம்மை நலிவிக்கவும், இதனை நீங்கி எவ்விடத்தும்
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்இரவை முடித்துப் பகல் தோன்றினபாடில்லை; பழிசொல்லும்
அயல் இல் பெண்டிர் பசலை பாடஅயல்வீட்டுப் பெண்கள் என் நெற்றியின் பசலையைக் குறிப்பிட்டுப் பாடுபேச
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்– இவ்வாறு ஆகிவிட்டது, தோழி! உயர்ந்த மணற்பரப்பில்
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்துகோலமிட்ட சிறிய மணல்வீட்டைச் சிதைக்கும்படி வந்து,
பரிவு தர தொட்ட பணிமொழி நம்பி    10நமக்கு அவன்மேல் பரிவு உண்டாகும்படி அவன் சொன்ன பணிவான சொற்களை நம்பி,
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடுஒலி முழங்கும் குளிர்ந்த நீர்ப்பெருக்கையுடைய கடற்கரைத்தலைவனோடு
நாடாது இயைந்த நண்பினது அளவேசிந்திக்காமல் உடன்பட்ட நட்பின் அளவு –
  
# 379 குறிஞ்சி குடவாயில் கீரத்தனார்# 379 குறிஞ்சி குடவாயில் கீரத்தனார்
  
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்புன்மையான தலையையுடைய மந்தியின் அறிவற்ற வலிய குட்டியானது
குன்று உழை நண்ணிய முன்றில் போகாதுகுன்றத்தின் பக்கமாகப் பொருந்திய முற்றத்தைவிட்டுப் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணரநெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தாற்போன்ற பூக்கள் நெருங்கிய கொத்துக்களையுடைய
வேங்கை அம் படு சினை பொருந்தி கையவேங்கை மரத்தின் அழகிய தாழ்ந்த கிளையில் பதுங்கியிருந்து, கையிலுள்ள
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி    5தேன் ஊற்றியது போன்ற இனிய பாலுள்ள கலத்தைப் பறித்துக்கொண்டுபோக, குறமகளான தலைவியின்
எழுது எழில் சிதைய அழுத கண்ணேமை தீட்டிய கண்களின் அழகு குலைந்துபோகுமாறு அழுத கண்கள்,
தேர் வண் சோழர் குடந்தை_வாயில்தேர்களை இரவலர்க்கு வழங்கும் சோழரின் குடவாயில் என்னும் ஊரில் உள்ள
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்தமழைபெய்து நிரம்பிய குளத்தில் குளிர்ச்சியாக மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலேமழைநீரை ஏற்ற நீலமலரைப் போல ஆயின; விரல்களோ
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது10பரந்துபட்டு, அழகிய வயிற்றில் அடித்துக்கொண்டதால், இடைவிடாமல்
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில்அசைகின்ற மேகங்கள் தவழும் உச்சிகள் உயர்ந்த பொதிகை மலையின்
ஓங்கு இரும் சிலம்பில் பூத்தஉயர்ந்த பெரிய மலைச்சரிவில் பூத்த
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தேகாந்தளின் அழகிய கொழுவிய மலர்கின்ற மொட்டைப்போல் சிவந்துபோயின.
  
# 380 மருதம் கூடலூர் பல்கண்ணனார்# 380 மருதம் கூடலூர் பல்கண்ணனார்
  
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடுநெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன்
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்றதேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வன் புல்லி புனிறு நாறும்மேபுதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;
வால் இழை மகளிர் சேரி தோன்றும்   5தூய அணிகலன்கள் அணிந்த மகளிர் வாழும் சேரியில் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால்தேரையுடைய தலைவனுக்கு நாம் ஒத்துவரமாட்டோம்; அதனால்,
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்பொன் போன்ற நரம்பைக் கொண்ட இனிய ஓசையைக் கொண்ட சிறிய யாழை
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல்இசைப்பதில் வல்லவன் என்றாலும், என்னை வணங்கிநிற்கவேண்டாம்;
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனைகொண்டுபோய்விடு, பாணனே! உன்னுடைய குளிர்ந்த துறையையுடைய மருதநிலத்தானை!
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை 10சிறந்த என் வீட்டிலிருந்து பாடவேண்டாம்; என் உள்ளம் அதற்கு ஒருப்படாது; நீண்ட நேரம் நிற்பதால்
புரவியும் பூண் நிலை முனிகுவகுதிரைகளும் தாம் தேரில் பூட்டப்பட்டிருக்கும் நிலையை வெறுக்கின்றன;
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியேபயனில்லாத சொற்களைச் சொல்லவேண்டாம், நான் விரும்பியது எனக்கு இல்லாத போது.
  
# 381 முல்லை ஔவையார்# 381 முல்லை ஔவையார்
  
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனமிகுந்த துன்பத்தில் உழன்றாலும் உயிரோடிருத்தலே போதும் என்றவாறு
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்எனக்குச் சாவு இல்லை என்பதால் நான் அன்பு இல்லாதளும் அல்லள்;
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரைகரையை மோதிச் செல்லும் கட்டாற்றின் இடிந்துவிழும் கரையிலுள்ள
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போலவேர்கள் வெளிப்பட்டுத்தோன்றும் மராமரத்தின் அழகிய தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை  5நடுங்கிக்கொண்டே இருக்கும் நெஞ்சத்தோடு, துன்பத்தை
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல்எவ்வாறு தாங்குவேன்? மிடுக்கான நடையையும்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சிமிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கஇரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர் வீசு இருக்கை போலதேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கையைப் போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே     10மேகங்கள் நிலைகொண்டு கொட்டுகின்றன மழையை.
  
# 382 நெய்தல் நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்# 382 நெய்தல் நிகண்டன் கலைக்கோட்டு தண்டனார்
  
கானல் மாலை கழி நீர் மல்ககடற்கரைச் சோலையில் மாலையில் கழியிலுள்ள நீர் மிகுதியாகப் பெருக்கெடுக்க,
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்தநீல நிறமுள்ள நெய்தல் தன் வரிசையான இதழ்கள் பொருந்துமாறு குவிய,
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்திகொஞ்சமும் குறையாமல் அலைகள் மோதித்திரும்பும் கடலில் மீனை அருந்தி
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்பறவையினங்கள் தம் கூட்டுக்கு ஒன்று சேர்ந்து போவதை நினைத்துப்பார்க்காதவராய்,
துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி   5நம்மைப் பிரிந்து சென்றவர் இருக்குமிடத்தில் இருக்க, மிகவும் வருந்தி
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழைநம் அரிய உயிர் அழிவதாயினும், நேர்த்தியான அணிகலன்களை அணிந்தவளே!
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்மறைத்துக்கொள்ளவேண்டும்; பரவிக்கிடக்கும் நீரையுடைய
தண்ணம் துறைவன் நாணகுளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவனாகிய நம் தலைவன் நாணிப்போகும்படியாக,
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டேநமக்குப் பகையானவர்கள் தூற்றுகின்ற பழிச்சொற்கள்தாம் இருக்கின்றனவே!
  
# 383 குறிஞ்சி கோளியூர் கிழார் மகனார் செழியனார்# 383 குறிஞ்சி கோளியூர் கிழார் மகனார் செழியனார்
  
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கைமலையடிவாரத்தில் செழித்து வளர்ந்த கரிய அடிப்பகுதியையுடைய வேங்கைமரத்து மலரின்
அலங்கல் அம் தொடலை அன்ன குருளைஅசைகின்ற அழகிய மாலையைப் போன்ற குட்டிகளை ஈன்ற
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலிமசக்கை நோயால் வாடிய ஈன்றணிமையான பெரிய பெண்புலிக்குப் பசித்ததாக, வலிய ஆண்புலி
புகர் முகம் சிதைய தாக்கி களிறு அட்டுபுள்ளிகளையுடைய முகம் உருக்குலைந்துபோகத் தாக்கிக் களிற்றினைக் கொன்று
உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள்       5இடி முழக்கத்தோடு முழங்கும் அச்சந்தரும் நள்ளிரவில்,
அருளினை போலினும் அருளாய் அன்றேஎம்மீது அருளுடையவன் போல் தோன்றினும், அருளற்றவனாவாய் அல்லவா!
கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில்மிகுந்த இருள் மூடிய அச்சந்தரும் பாதையில்
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடுபாம்பின் மீது சினந்து விழுந்து கொல்லும் இடியுடன்,
ஓங்கு வரை நாட நீ வருதலானேஉயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே, நீ வருவதால் –
  
# 384 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 384 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
பைம் புற புறவின் செம் கால் சேவல்இளமையான முதுகினைக் கொண்ட புறாவின் சிவந்த காலையுடைய சேவலானது
களரி ஓங்கிய கவை முட கள்ளிகளர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முடக்கள்ளியில்
முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்டமுட்களைக்கொண்ட சுள்ளிக்குச்சியால் கட்டப்பட்ட அழகிய கூட்டில் குஞ்சுபொரித்து இளைத்துப்போன
உயவு நடை பேடை உணீஇய மன்னர்வருத்தமிக்க நடையைக் கொண்ட பெண்புறா உண்பதற்காக, அரசர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம்     5போர் முனையில் கவர்ந்ததால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும் நெல்மணியைக் கொத்திக்கொணரும்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்தஅரண்கள் இல்லாத தொலைநாட்டு வழியோரத்தில் மலர்ந்த
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூநல்ல நாளின் காலையில் வேங்கைமரத்தின் பொன்னைப் போன்ற புதிய பூக்கள்
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோபரவிக்கிடக்க, – அதன் மீது நடக்க நான் கண்டேன் –
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டுகாண்பாயாக இப்போது வாழ்க என் நெஞ்சமே! நாணத்தைவிட்டு
அரும் துயர் உழந்த_காலை  10தீர்த்தற்கரிய துயரத்தில் நான் உழந்துகிடந்த போது
மருந்து எனப்படூஉம் மடவோளையேஅதற்கு மருந்தாவாள் எனப்படும் இளமையோளாகிய இவளை –
  
# 385 நெய்தல்# 385 நெய்தல் அஞ்சிலாந்தையார்
  
எல்லை சென்ற பின் மலரும் கூம்பினபகற்பொழுது சென்றபின் மலர்கள்கூம்பிவிட்டன;
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடுபுலால் நாறும் நீரையுடைய மணல்மேடுகளில் ஆமையின் குஞ்சுடன்
அலவனும் அளை_வயின் செறிந்தன கொடும் கழிநண்டுகளும் தம் வளைக்குள் சென்று சேர்ந்தன; வளைந்த கழியினில்
இரை நசை வருத்தம் வீட மரம் மிசைஇரைதேடித்திரிந்த வருத்தம் நீங்கிப்போகுமாறு மரத்தின் மேல்
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால்      5பறவைகளும் தம் குஞ்சுகளுடன் தங்கின; அதனால்
பொழுது அன்று ஆதலின் தமியை வருதிஇது சந்திப்பதற்குரிய பொழுது அன்று; எனினும் தனியனாய் வருகிறாய்;
எழுது எழில் மழைமை தீட்டிய அழகிய குளிர்ந்த —
  
# 386 குறிஞ்சி# 386 குறிஞ்சி
  
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்சிறிய கண்களையுடைய பன்றியின் மிகுந்த சினத்தைக்கொண்ட ஆணானது
துறு கண் கண்ணி கானவர் உழுதநெருங்கத் தொடுக்கப்பட்ட தலைமாலையையுடைய கானவர் உழுது விதைத்த
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர்வளைந்த கதிரையுடைய தினையை நிரம்ப உண்டு, அங்கு
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாதுமலைப்பிளவுகளில் தங்கியிருக்கும் வேங்கைப் புலிக்கு அஞ்சாது
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்   5மூங்கில் வளரும் மலைச் சாரலில் தூங்கும் நாட்டையுடையவன்
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீஅச்சம்தரக்கூடிய அரிய சூளுரைகளை உனக்குத் தருவேன் என்று கூற, நீயோ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை எனஉம்மைப் போன்றவர்கள் மேற்கொள்ளமாட்டார் இந்தச் செயல்களை என்று
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம்தெரிந்துரைத்தது உண்மையாகக் கண்டு, அதனைப் பற்றி வியப்படைந்தேன், தோழி, அவரைப் பணிந்து, நம்முடைய
கல் கெழு சிறுகுடி பொலியமலையை ஒட்டிய சிறுகுடி மங்கலமாகத் தோன்றும்படியாகத்
வதுவை என்று அவர் வந்த ஞான்றே    10திருமணம் பேசுவதற்காக அவர் வந்த பொழுது –
  
# 387 பாலை# பொதும்பில் கிழார் மகனார்# 387 பாலை பொதும்பில் கிழார் மகனார்
  
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும்சுருள் சுருளான, கரிய கூந்தலும், நீண்ட தோள்களும்
அம்ம நாளும் தொல் நலம் சிதையநாளுக்குநாள் அவற்றின் பழைய அழகு சிதைந்துபோகுமாறு,
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணிசெம்மையாக அம்புதொடுக்கத் தகுதியற்றவரும், சரியாகக் கட்டப்படாத தலைமாலையையுடையவரும்
கல்லா மழவர் வில் இடை விலங்கியதம் தொழிலைக்கூடச் சரியாகக் கற்காதவருமாகிய மழவர்களின் வில்கூடங்கள் குறுக்கிட்டுக்கிடக்கும்
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர்    5செல்வதற்கு அரிதான கிளைவழிகளையுடைய கடினமான பாலைவழியில் சென்றோர்,
வருவர் வாழி தோழி செரு இறந்துதவறாமல் திரும்ப வருவார், வாழ்க, தோழியே! போரில் வென்று
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்தஆலங்கானம் என்னுமிடத்தில் அச்சம்வரும்படியாக வீற்றிருந்த
வேல் கெழு தானை செழியன் பாசறைவேல்வீரர் நிரம்பிய படையையுடைய செழியனின் பாசறையிலிருக்கும்
உறை கழி வாளின் மின்னி உது காண்உறையிலிருந்து உருவப்பட்ட வாளைப் போல மின்னி, அங்கே பார்!
நெடும் பெரும் குன்றம் முற்றி    10நீண்ட பெரிய குன்றத்தை வளைத்துக்கொண்டு
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானேகடுமையான மழையைப் பொழிகின்றன, ஆரவாரம் மிக்க மேகங்கள்.
  
# 388 நெய்தல் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்# 388 நெய்தல் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
  
அம்ம வாழி தோழி நன்_நுதற்குவாழ்க! தோழியே! என் நல்ல நெற்றிக்கு
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரிஎவ்வாறு உண்டாகும் பசப்பு? வலிமையான புரிகளால்
கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளிசெய்யப்பட்ட கயிற்றின் முனையில் கட்டப்பட்ட விரைவான செலவையுடைய எறியுளிகளைக் கொண்ட,
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇதிண்ணிய படகுகளையுடைய பரதவர், ஒளிரும் விளக்குக்குகளைக் கொளுத்திக்கொண்டு
நடுநாள் வேட்டம் போகி வைகறை      5நள்ளிரவில் மீன்வேட்டைக்குச் சென்று, அதிகாலையில்
கடல் மீன் தந்து கானல் குவைஇதாம் பிடித்த கடல் மீன்களைக் கொண்டுவந்து, கடற்கரைச் சோலையில் குவித்து,
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்துஉயர்ந்த பெரிய புன்னைமரத்தின் வரிவரியான நிழலில் தங்கியிருந்து
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திதேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெரிய மகிழும் துறைவன் எம்பெருமகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன், என்னுடைய
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே  10சிறிய நெஞ்சத்திலிருந்து நீங்காமலிருக்கிறான்.
  
# 389 குறிஞ்சி காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்# 389 குறிஞ்சி காவிரி பூம்பட்டினத்து செங்கண்ணனார்
  
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும்அன்னையும் இனிதாய்ப் பார்க்கிறாள்; என் தந்தையும்
களிற்று முகம் திறந்த கல்லா விழு தொடைகளிற்றின் முகத்தைப் பிளக்கும் வில்தொழிலைத் தவிர வேறொன்றைக் கல்லாத, சிறப்பாக அம்பினைத் தொடுக்கும்
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என  5ஏவலாளிகளுடன் விலங்குகளின் வழியில் வேட்டையாடச் சென்றுவிட்டார்; எனவே
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல்சிறு கிளிகள் கொத்தியழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்
காவல் நீ என்றோளே சேவலொடுகாவல் நீதான் என்றுசொல்லிவிட்டாள்; தன் சேவலோடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்மலைச் சரிவில் சென்ற கிளறுகின்ற கால்களையுடைய கோழி,
முதை சுவல் கிளைத்த பூழி மிக பலபழங்கொல்லையின் மேல்மண்ணைக் கிளறிய புழுதி, மிகப் பலவாக
நன் பொன் இமைக்கும் நாடனொடு      10நல்ல பொன்துகள் போல் மினுமினுக்கும் நாட்டைச் சேர்ந்தவனுடன்
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பேஅன்பு பெருகும் காதலாக அமைக நம் தொடர்பு.
  
# 390 மருதம் ஔவையார்# 390 மருதம் ஔவையார்
  
வாளை வாளின் பிறழ நாளும்வாளை மீன்கள் வாளைப் போல பிறழ, நாள்முழுதும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்பொய்கையில் இருக்கும் நீர்நாய் நிலைகொண்ட துயிலினை மேற்கொள்கின்ற,
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்தவள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழைவயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ    5மெல்லியதான அகன்ற அல்குலில் அழகுண்டாக உடுத்திக்கொண்டு
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோதிருவிழாவுக்குச் செல்லவேண்டும், உறுதியாக,
யாணர் ஊரன் காணுநன் ஆயின்புதுவருவாயை உடைய மருதநிலத்துக்காரன் என்னைக் காண்பானாயின்
வரையாமையோ அரிதே வரையின்என்னை மணந்துகொள்ளாமற்போவது மிகவும் அரிது; அப்படி என்னை மணந்துகொண்டால்
வரை போல் யானை வாய்மொழி முடியன்மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின்
வரை வேய் புரையும் நல் தோள்      10மலையில் உள்ள மூங்கிலைப் போன்ற பிற பெண்களின் நல்ல தோள்கள்
அளிய தோழி தொலையுந பலவேஇரங்கத்தக்கன தோழி, தம் அழகினையும் இழப்பன மிகப் பல.
  
# 391 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 391 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவேஅழவேண்டாம் மடந்தையே! தவிர்த்துவிடுவார் பயணத்தை;
புலி பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்புலியின் புள்ளிகளைப் போன்று புள்ளிபுள்ளியாக நிழல் இருக்கும் அழகிய சோலையில்
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின்குளிர்ச்சியான அடர்ந்த கொடிகளை மேய்ந்த பெரிய கரிய கொம்பினையுடைய
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடைபருத்த தலையைக் கொண்ட காராம்பசு தின்னாதுவிட்ட குளிர்ந்த தழைகளை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும்5ஒளிரும் வளையணிந்த மகளிர் தம் அணிகலன்களுக்கு அழகுண்டாகச் சேர்த்து அணியும்
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டுபொன் விளையும் கொண்கானத்து நன்னனின் நல்ல நாட்டிலுள்ள
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்_வயின்ஏழிற்குன்றத்தையே பெற்றாலும், பொருள் ஈட்டுவதற்காக
யாரோ பிரிகிற்பவரே குவளை– யார்தான் பிரிந்துசெல்வார்? குவளையின்
நீர் வார் நிகர் மலர் அன்ன நின்நீர் ஒழுகும் ஒளிபொருந்திய மலரைப் போன்ற உனது
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே10பெரிதான, அமைவடக்கமான, குளிர்ந்த கண்களில் தெளிந்த கண்ணீர் நிறையும்படியாக –
  
# 392 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்# 392 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
  
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தைகொடிய சுறாமினை எறிந்து கொன்ற கடிய முயற்சியைக் கொண்ட தந்தை
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று எனபறவைகள் ஒலிக்கும் பெரிய கடலுக்குக் கூட்டிச் செல்லாமல் சென்றுவிட்டான் என்று
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர்வீட்டில் அழுது ஓய்ந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்கூட்டாக முயன்று பெற்ற இனிய கண்ணையுடைய நுங்கைத்
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் 5தாயின் பருத்த கதகதப்பான கொங்கையை உண்ணுவதுபோலச் சுவைத்து உண்டு மகிழும்
பெண்ணை வேலி உழை கண் சீறூர்பனைமரங்களே வேலியாக உள்ள அகன்ற இடத்தையுடைய சிற்றூரிலுள்ள
நன் மனை அறியின் நன்று-மன் தில்லநமது நல்ல மனையை அறிந்திருந்தால் மிகவும் நல்லது –
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்தவீறு கொண்ட நெஞ்சத்தோடு முன்பு தான் வந்துபோன
கானலொடு அழியுநர் போலாம் பானாள்கடற்கரைச் சோலையில் இன்று மனமழிந்து நிற்கிறார் போலும்; நள்ளிரவில்
முனி படர் களையினும் களைப10நாம் வெறுக்கும் துன்பத்தைப் போக்கினாலும் போக்குவார்,
நனி பேர் அன்பினர் காதலோரேநம்மீது மிகப் பெரிய அன்பையுடைய நம் காதலர் –
  
# 393 குறிஞ்சி கோவூர் கிழார்# 393 குறிஞ்சி கோவூர் கிழார்
  
நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்நெடிய மூங்கில்கள் உயர்ந்துநிற்கும் நிழல் படிந்த மலைச் சரிவில்
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்கமுற்றின சூலைக் கொண்ட வலிய பெண்யானை கன்று ஈன்று வருந்த,
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்துபால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்தீட்டுள்ள யானை வளைந்த தினைக்கதிரை உண்டதினால்,
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி5குறவன் எறிந்த விரைவாகச் செல்லும் கொள்ளிக்கட்டை,
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னிமூங்கில்கள் நிறைந்த மலைகளின்இடுக்கு ஒளிரும்படியாக மின்னி,
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்நிலைபெயர்ந்து விழும் எரிமீனைப் போன்று தோன்றும் நாட்டையுடையவன்,
இரவின் வரூஉம் இடும்பை நாம் உயஇரவினில் நம்மைச் சந்திக்க வருவதால் நாம் அடையும் துன்பத்தினின்றும் நாம் உய்ய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்பநம்மை மணம்பேச வந்த வாய்மையான செயலுக்கேற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்      10நம்மவர்கள் பெண்கொடுக்க இசைந்தால், அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்இசைவாகப் பேசுவார்களோ? வாழ்க, தோழியே!, நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின்உனக்குப் புதியவரைப் போல் வந்து நின்றதையும், உன்னுடைய
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்_காலேமணநாளுக்கான நாணமுடைய அடக்கத்தையும் காணும்போது –
  
# 394 முல்லை ஔவையார்# 394 முல்லை ஔவையார்
  
மரம் தலைமணந்த நனம் தலை கானத்துமரங்களெல்லாம் நெருங்கி ஒன்றுகூடியுள்ள அகன்ற இடத்தையுடைய கானத்தில்,
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞைகாய்ந்துபோன உச்சியையுடைய ஞெமை மரத்தில் இருந்த பேராந்தை
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பபொன்வேலை செய்யும் கொல்லன் தட்டுவது போன்று இனிதாக ஒலித்துக்கொண்டிருக்க,
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர்கட்டப்பட்ட மணிகள் பெரிதாய் ஒலிக்கும் அணிகளால் புனையப்பட்ட நெடிய தேரில்,
வன் பரல் முரம்பின் நேமி அதிர    5வன்மையான பரல்கற்களைக் கொண்ட சரளைக்கல் பூமியில் சக்கரங்கள் அதிரும்படியாகச்
சென்றிசின் வாழியோ பனி கடு நாளேசென்றான், வாழ்க! அந்த பனிமிக்க நாளில்;
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்இப்போது, நடுவழியில் மேகங்கள் மழை பெய்ததாக, மார்பிலுள்ள
குறும் பொறி கொண்ட சாந்தமொடுசிறிய புள்ளிகளைக் கொண்ட சந்தனத்தோடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானேநறிய, குளிர்ந்த நெஞ்சத்தினனாய்த் திரும்புகின்றான் போலும். இதற்கு நோவேனோ நான்?
  
# 395 நெய்தல் அம்மூவனார்# 395 நெய்தல் அம்மூவனார்
  
யாரை எலுவ யாரே நீ எமக்குயார் நீ நண்பனே? யார்தான் நீ எங்களுக்கு?
யாரையும் அல்லை நொதுமலாளனைநீ எமக்கு யாரும் இல்லை! அன்னியனே!
அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின்அவ்வாறுதான் உள்ளது, கொண்கனே! நமக்கு இடையேயுள்ள தொடர்பு, நினைத்துப்பார்த்தால்!
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்பெரும் வலிமை கொண்ட யானையையும், நெடிய தேரினையும் உடைய குட்டுவன்,
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன       5பகைவேந்தரைக் கொல்லும் வேளையில் முரசுகள் அதிர்வதைப் போல்
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்உயர்ந்து எழும் அலைகளுக்குள் பாய்ந்து விளையாடும் மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்தஅணிந்திருக்கும் பலவான பூக்கள் உதிர்ந்து கலந்துவர அவற்றை மேய்ந்த
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைபசுவானது மீண்டும் தன் இருப்பிடத்துக்குள் நுழையும் பெரிய சிறப்புள்ள மாலைக்காலத்தில்
கடல் கெழு மாந்தை அன்ன எம்கடல் சூழ்ந்த மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே     10நீதான் விரும்பவில்லை, எனவே உன்பொருட்டு இழந்த என் நலத்தைத் தந்துவிட்டுச் செல்வாயாக!
  
# 396 குறிஞ்சி# 396 குறிஞ்சி முத்தூற்று மூதெயினனார்
  
பெய்து போகு எழிலி வைகு மலை சேரமழையைப் பெய்துவிட்டுப் போகும் மேகங்கள் தாம் தங்கியிருக்கும் மலையைச் சென்றடைய,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்பதேனடைகள் தொங்குகின்ற உயர்ந்த மலையருவிகள் ஆரவாரத்துடன் ஒலிக்க,
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள்வேங்கை மரம் பூத்ததினால் மலையிடம் அழகுபெற்றுத் திகழும் நல்ல நாள் காலையில்,
பொன்னின் அன்ன பூ சினை துழைஇபொன் போன்ற பூக்களையுடைய அழகிய கிளைகளைத் துழாவிக்கொண்டு சென்றதால்
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை  5மணங்கமழும் பூந்தாதுக்கள் மேனியில் படிந்து அழகுபெற்றுத்திகழும் மயில்கள்,
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்றுபசுமை போர்த்த பாறையின் உச்சியிலிருந்து, கூட்டமாய் ஞாயிற்றின்
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்மிக்க கதிராகிய இளவெயிலில் காய்ந்துகொண்டிருக்கும் நாட்டினைச் சேர்ந்தவனே!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்உன் மார்பு தாக்கியதால் வருத்தமுற்ற நீக்குவதற்கு அரிதான இந்தக் காமநோயை
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்யாரிடம் நொந்துபோய் உரைப்பேன் நான்? பலநாட்கள்
காமர் நனி சொல் சொல்லி   10இனிமை மிகுந்த சொற்களைச் சொல்லியும்
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையேஎமக்கு நலமானதை அருளமாட்டாய்! நீ குழம்பிப்போயுள்ளாய்!
  
# 397 பாலை அம்மூவனார்# 397 பாலை அம்மூவனார்
  
தோளும் அழியும் நாளும் சென்று எனஎன் தோள்கள் மெலிவடைந்து தம் நலம் அழிந்தன; குறித்துச் சென்ற நாளும் கடந்துவிட்டதாக,
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுநீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்ணும் காட்சி தௌவின என் நீத்துகண்களும் பார்வை குன்றிப்போயின; என்னைவிட்டு நீங்கி
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றேஎன் அறிவும் மயங்கி வேறொன்றாகிச் செயலற்றுப் போனது;
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று       5காதல்நோயும் பெருகுகின்றது; மாலைக்காலமும் வந்துவிட்டது;
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோஎன்ன ஆவேனோ நான்? இவ்விடத்திலேயே
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்இறந்துபோவதற்கு அஞ்சவில்லை; ஆனால் ஒன்றனுக்கு அஞ்சுகிறேன்! இறந்தால்
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்பிறப்பு வேறொன்றாகிவிடுமாதலால்,
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவேமறந்துவிடுவேனோ என் காதலனை என்று –
  
# 398 நெய்தல் உலோச்சனார்# 398 நெய்தல் உலோச்சனார்
  
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றேஅச்சம் பொருந்திய தெய்வமும் மறைந்திருப்பதைவிட்டு உலவத் தொடங்கிவிட்டது;
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மேவிரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மேற்குத்திசையில் சாயத்தொடங்கிவிட்டது;
நீர் அலை கலைஇய கூழை வடியாநீராடியதால் அலைக்கப்பட்டுக் கலைந்துபோன கூந்தலின் நீரை வடித்துவிட்டு
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்துசுருக்கி முடித்து, அழகிய வயிறு குலுங்க ஒன்றுசேர்ந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே       5ஓரை விளையாடிய மகளிரும் ஊருக்குத் திரும்பிவிட்டனர்;
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன்பல மலர்களையுடைய நறிய சோலையை வாழ்த்தி, நாம் முதலில்
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர்கிளம்புவோம் சிவந்த அணிகலன்களை அணிந்தவளே என்று சொன்னேன்; அதற்கு விடையாக
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்துசொல்லாமல் இருக்கிறாள் மென்மையான இயல்பினள் சில சொற்களைக் கூட; நல்ல தன் மார்பில்
யாணர் இள முலை நனையபுதியவாய் எழுந்த இளமையான முலைகள் நனையும்படி
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே      10மிக்க அழகுபடைத்த மலர் போன்ற கண்களில் தெளிந்த நீர் நிறைந்து நிற்க –
  
# 399 குறிஞ்சி தொல்கபிலர்# 399 குறிஞ்சி தொல்கபிலர்
  
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துஅருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலைகளின் இடுக்குச் சரிவில்
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்குருதியைப் போன்ற மணங்கமழும் பூக்களையுடைய காந்தள்,
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்வரிகள் அழகுசெய்யும் சிறகைக் கொண்ட வண்டுகள் உண்பதற்காக மலர்கின்ற
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டியவாழை மரங்களைக் கொண்ட மலைச் சரிவில், பன்றிகள் கிளறிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி  5நிலத்தில் மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின்
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடிஒளி பரந்து விளங்கும் விளக்கொளியில் கன்றினை ஈன்ற இளமையான பெண்யானை
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும்ஆண்யானை புறத்தே நின்று காவல்காக்கக் கன்றோடு தங்கியிருக்கும்
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவன் விரும்பிக்கொண்டு வருகின்ற
பெருமை உடையள் என்பதுபெருமை படைத்தவள் என்பதைத்
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே10தருகின்றதல்லவா தோழி! உன்னுடைய அழகிய நெற்றியின் எழில்.
  
# 400 மருதம் ஆலங்குடி வங்கனார்# 400 மருதம் ஆலங்குடி வங்கனார்
  
வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்வாழையின் மெல்லிய இலை நீண்டு தாழ்ந்திருக்க,அதனை உயர்த்தும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்நெற்பயிர் விளையும் கழனியிலுள்ள நேரான இடம் பொருந்திய வயலில்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரியநெல்லறுப்போர் களத்தில் குவித்த நெற்கதிர்குவைக்கு அயலாக, பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊரகரிய பிடரியையுடைய வாளைமீன் துள்ளிப்பாயும் மருதநிலத்தலைவனே!
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று  5நீயின்றி வாழ்தல் எனக்குக் கூடுமாயின், இவ்விடத்திலிருந்து
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோஇனிமையைத் தராத நோக்கத்துடன் எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டு?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்துமறம் பொருந்திய சோழரின் உறையூரின் அரசவையில்
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்தஅறம் கெடுதல் என்பதை அறியாதது போல, சிறந்த
கேண்மையொடு அளைஇ நீயேநட்புறவால் கலந்து நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே    10நீங்குதல் அறியாய் என் நெஞ்சத்தைவிட்டு.