நற்றிணை 301-350

  
# 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி# 301 குறிஞ்சி பாண்டியன் மாறன் வழுதி
  
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சிநீண்ட மலையில் செழித்து வளரும் பெரிய தண்டுகளையுடைய குறிஞ்சியின்
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனைகாலையில் பூக்கும் மலரைப் போன்ற மேனியையும், பெரிய சுனையில் பூத்த
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்பூக்களை இரண்டாகச் சேர்த்துவைத்தது போன்ற கரிய இமைகளைக்கொண்ட குளிர்ச்சியான கண்களையும்,
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்மயிலோடு ஒத்த தன்மையையுடைய சாயலையும், செந்நிறக் கழுத்துப்பட்டையைக் கொண்ட
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள்    5கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும்,
பாவை அன்ன வனப்பினள் இவள் எனகொல்லிப்பாவை போன்ற வனப்பையும் கொண்டவள் என் மகள் என்று
காமர் நெஞ்சமொடு பல பாராட்டிஅன்புடைய நெஞ்சத்தோடு பலவாறாகப் பாராட்ட,
யாய் மறப்பு அறியா மடந்தைஎமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளேஅகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்.
  
# 302 பாலை மதுரை மருதன் இளநாகனார்# 302 பாலை மதுரை மருதன் இளநாகனார்
  
இழை அணி மகளிரின் விழை_தக பூத்தஅணிகலன்கள் அணிந்த மகளிரைப் போல விருப்பம் கொள்ளுமாறு பூத்த
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றைநீண்ட சுருளான கொத்துக்களையுடைய ஒளிரும் பூக்களையுடைய கொன்றை மரங்கள்
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும்காட்டை அழகுபடுத்தப் பூத்திருக்கின்றதாயினும், பெரிதும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்வருகின்ற மழையை எதிரேற்று நிற்கும் நீல மணியின் நிறங்கொண்ட பெரிய புதரில்
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ     5வெள்ளை நிறத்தில் பூத்த நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்களைக் கண்டும்
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டுஇது கார்காலம் என்று தாம் தெளிந்தாரில்லை போலும்; தொலைநாட்டில்,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறுகளிறு உதைத்து உழப்புவதால் கவிழ்க்கப்பட்ட மண்ணினால் எழுந்த நுண்ணிய மண்துகள்,
வெளிறு இல் காழ வேலம் நீடியஉட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த
பழங்கண் முது நெறி மறைக்கும்துன்பம் நிறைந்த பழைய பாதைகளை மறைக்கும்
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே 10செல்வதற்கரிய காட்டுவழியில் சென்றவர் –
  
# 303 நெய்தல் மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்# 303 நெய்தல் மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
  
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனஓசைகளெல்லாம் குறைந்து அடங்கிப்போய், நடுயாமம் நள்ளென்று இருக்க,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றேஆரவாரம் மிக்க பாக்கம் துயில்கொள்ளலாயிற்று;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைதொன்றுதொட்டு உறையும் கடவுள் சேர்ந்த பருத்த அரையைக் கொண்ட
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பைமன்றத்தில் நிற்கும் பனைமரத்தின் வளைந்த மடலே இருப்பிடமாய்க்கொண்டு
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்       5துணையைச் சேர்ந்திருக்கும் அன்றில் பறவையின் வேட்கைக் குரலைக் கேட்கும்போதெல்லாம்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய்உறங்காத கண்ணையுடையவளாய், துயர் வருத்துதலால் மனம்நொந்து,
நம்_வயின் வருந்தும் நன்_நுதல் என்பதுநம்மை எண்ணி வருந்துவாள் நல்ல நெற்றியையுடைய நம் காதலி என்ற எண்ணத்தைக்
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல்கொண்டிருப்பாரோ? வாழ்க! தோழி! தெளிந்த கடலில்
வன் கை பரதவர் இட்ட செம் கோல்வலிமையான கைகளைக் கொண்ட பரதவர் வீசிய நேரான கோலையும்
கொடு முடி அம் வலை பரிய போக்கி   10வளைந்த முடிச்சுகளையும் கொண்ட அழகிய வலையைக் கிழித்துக்கொண்டு தப்பிச்சென்று
கடு முரண் எறி சுறா வழங்கும்கடுமையாக முரண்பட்டுப் பாய்ந்துசெல்லும் சுறாமீன்கள் சஞ்சரிக்கின்ற
நெடு_நீர் சேர்ப்பன்_தன் நெஞ்சத்தானேஆழமான நீர்த்துறையையுடைய தலைவன் தன் நெஞ்சத்தில் –
  
# 304 குறிஞ்சி மாறோக்கத்து நப்பசலையார்# 304 குறிஞ்சி மாறோக்கத்து நப்பசலையார்
  
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்திநீண்ட மெல்லிய தினையின் புலர்ந்த கதிரினை நிறையத் தின்று
சாரல் வரைய கிளை உடன் குழீஇசரிவுள்ள மலையில் இருக்கும் தன் இனத்தோடே சேர்ந்து கூடி,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்காற்று புகுந்து செல்வதால் ஒலிக்கும் வயிர் என்ற ஊதுகொம்பைப் போல கிளிகள் ஒலிசெய்யும்
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன்செறிவான பெரிய மலைச்சாரல்களையுடைய நல்ல மலைநாட்டைச் சேர்ந்தவன்
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின்     5நம்மை வந்து சந்தித்தால் நம்மிடம் வந்துகூடும் அழகு, பிரிந்துசென்றால்
மணி மிடை பொன்னின் மாமை சாய என்நீலமணிகளின் இடைப்பட்ட பொன்னைப் போல, என் மாநிறம் மங்கிப்போக என்
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால்அழகையும் நலத்தையும் சிதைத்துவிடும், பசலையானது; அதனால்
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும்நல்லிசையால் அசுணப்பறவையை ஈர்த்து, வல்லிசையால் அதனைக் கொல்பவரின் கையைப் போல, மிகவும்
இன்பமும் துன்பமும் உடைத்தேஇன்பமும் துன்பமும் உடையது
தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே      10குளிர்ச்சியுடன் கமழும் நறிய மாலையணிந்த வல்லவனான நம் தலைவனின் மார்பு.
  
# 305 பாலை கயமனார்# 305 பாலை கயமனார்
  
வரி அணி பந்தும் வாடிய வயலையும்வரிந்து கட்டிய அழகிய பந்தும், நீரூற்ற ஆளில்லாமையால் வாடிப்போன வயலைக் கொடியும்,
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்மயிலின் கால்விரல்போன்ற இலைகளையும், கரிய பூங்கொத்துக்களையும் உடைய நொச்சியும்,
கடி உடை வியல் நகர் காண்வர தோன்றகாவலையுடைய அகன்ற வீட்டில் கண்ணுக்கினிமையாய் மகளை நினைவூட்டித் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவரஎன் மகளின்றி நான் மட்டும் தனியே சென்று பார்த்த சோலையும் வருத்திநிற்க,
நோய் ஆகின்றே மகளை நின் தோழி     5எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது மகளே! உன் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினைஎரிக்கின்ற சினமுள்ள சூரியன் சிறிதே தணிந்த, இலையில்லாத அழகிய கிளையில்
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளிவரிகளை முதுகில் கொண்ட புறாவின் தனிமைத்துயருடன் கூடிய தெளிந்த அழைப்பொலியைக் கேட்டு,
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கிவெப்பம் அனலாய் வீசும் பொழுதில் கண்கள் மாறுபட்டவளாய்ப் பார்த்து,
இலங்கு இலை வெள் வேல் விடலையைஒளிறுகின்ற இலைவடிவான வெள்ளிய வேலையுடைய தன் காதலனை
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே     10குறுக்கிட்டுக்கிடக்கும் மலைகளிடையே செல்லும் கடத்தற்கரிய வழியில் கேள்விகேட்டு நைப்பாளோ?
  
# 306 குறிஞ்சி உரோடோகத்து கந்தரத்தனார்# 306 குறிஞ்சி உரோடோகத்து கந்தரத்தனார்
  
தந்தை வித்திய மென் தினை பைபயதந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோசிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என“குளிர் என்னும் கிளியோட்டும் கருவி கையிலுள்ள கொடிச்சியே, வீட்டுக்குப் போ” என்று
நல்ல இனிய கூறி மெல்லநல்ல சொற்களை அன்புடன் கூறி, மெதுவாகக்
கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல்    5கதிர்களை அறுக்கத்தொடங்கிவிட்டனர் கானவர்; வளைந்த கதிர்களின்
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவிமுற்றிய சுமையைத் தாங்கிய திரண்ட உச்சியைக் கொண்ட தினைத்தாள்கள்
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவரவிழா முடிந்த அகன்ற களம் போல எம்மை வருத்த,
பைதல் ஒரு நிலை காண வைகல்துயரந்தரும் அக் காட்சியைக் காணும் வேளையில்,
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல்இனி எப்போது வருமோ? இனிய சொல்லையும்
செறி தோட்டு எல் வளை குறு_மகள்   10செறிவான தோள்வளையும், ஒளிறும் வளையல்களையும் கொண்ட இளையவள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையேசிறிய தினைப்புனத்தில் தங்கிக் காவல்காத்த அந்த நிலை —
  
# 307 நெய்தல் அம்மூவனார்# 307 நெய்தல் அம்மூவனார்
  
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும்விருப்பம் தரும் ஓட்டத்தையுடைய நெடிய தேரின் மணியும் ஒலிக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்கூடவே ஓடிவரும் ஏவலரும் ஆரவாரிப்பர்;
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்தகடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற
திதலை அல்குல் நலம் பாராட்டியஉன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்  5வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னைநம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
மா அரை மறைகம் வம்-மதி பானாள்கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா! பாதிநாளாகிய நண்பகலில்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம்பூக்கள் மலர்ந்த கடற்கரைச் சோலையில் நாம் சந்திக்கும் இடத்திற்கு வந்து நம்மை
மெல் இணர் நறும் பொழில் காணாமெல்லிய பூங்கொத்துக்களையுடைய நறிய பொழிலில் காணாத
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே   10அல்லல் மிகுந்த அரிய அவலத்தைக் காண்போம் நாம் சிறிதுநேரம்.
  
# 308 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்# 308 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
  
செல விரைவு_உற்ற அரவம் போற்றிபொருள்தேடிச் செல்வதற்காக நாம் விரைந்து முற்படும் பேச்சைக் கேள்வியுற்று மனத்திற்கொண்டு,
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழைமலரைப் போன்ற அழகிய மையுண்ட கண்களில் கண்ணீர் வர, ஆய்ந்த அணிகலன்களை அணிந்தவளை
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள்நாம் எம்மருகே வருமாறு அழைக்கவும், நாணங்கொண்டு வருகின்றவளாய்,
வேண்டாமையின் மென்மெல வந்துவிருப்பம் இல்லாததினால் மெல்ல மெல்ல வந்து,
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி5கேள்விகேட்கவும், தடுத்து நிறுத்தவும் செய்யாதவளாய் ஆகி
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைமணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான,
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்துசெலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி, நீண்ட நேரம் நினைத்து,
ஆகம் அடைதந்தோளே அது கண்டுஎம் மார்பில் சாய்ந்தாள்; அதனைக் கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்ஈர மண்ணால் செய்யப்பட்டு நீர் நிறைந்திருக்கும் பச்சையான மண்குடம்
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம்10பெரிய மழை பெய்வதனில் நனைந்து கரைந்ததைப் போல, எம்முடைய
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றேபொருள் பற்றிய நினைவு மிகுந்த நெஞ்சம் அவள் உணர்வுகளுடன் பொருந்தி மகிழ்ந்தது.
  
# 309 குறிஞ்சி கபிலர்# 309 குறிஞ்சி கபிலர்
  
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்இளைத்துப்போன தோள்களையும், வாடிப்போன தோல் சுருக்கங்களையும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கிமாந்தளிர் போன்ற அழகினை இழந்த என் மேனி நிறத்தையும் நோக்கி,
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்‘என்னால் அல்லவா இவளுக்குத் துயரம் ஏற்பட்டது’ என்று, அன்பினால்
ஆழல் வாழி தோழி வாழைதுயரத்தில் ஆழ்ந்துபோகாதே! வாழ்க, தோழி! வாழையின்
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும்      5கொழுத்த மடலில் உள்ள அகன்ற இலையில் மழைத்துளிகள் சேர்ந்து ஒன்றாயிருக்கும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கேபெரிய மலையைச் சேர்ந்தவனுடைய நட்பு நமக்குத்
விழுமம் ஆக அறியுநர் இன்று எனதுன்பமாக இருப்பதை அறிவார் யாருமில்லை என்று
கூறுவை-மன்னோ நீயேகூறுகிறாய் திண்ணமாக நீயே!
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பேதெளிவாக இருக்கிறேன் நிச்சயமாக நான், அவர் மீது கொண்ட நட்பினில்.
  
# 310 மருதம் பரணர்# 310 மருதம் பரணர்
  
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைவிளக்கின் சுடரைப் போன்று சுடர்விட்டு நிற்கும் தாமரையின்
களிற்று செவி அன்ன பாசடை தயங்கயானைச் செவியைப் போன்ற பசிய இலைகள் திடீரென அசைய,
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை பிறழும் ஊரற்கு நாளைவாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு,
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே      5பரத்தைகளை நேர்ந்துவிடும் அறிவில்லாத பெண்ணே!
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழிஉண்மையைத் தொலைத்த உன் நாவினால் குழறும் குறுமொழிக்கு
உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன்உடன்பட்டு உன் பொய்ம்மையை ஆராய்ந்து உணராத அவரின் தாய்மாரிடம் சென்று அணுகி
சொல்லலை-கொல்லோ நீயே வல்லைஇன்னும் சொல்லவில்லையோ நீ? விரைவாக,
களிறு பெறு வல்சி பாணன் கையதைகளிற்றைக்கொண்டு பிழைப்பு நடத்தும் பாணனின் கையில் உள்ள
வள் உயிர் தண்ணுமை போல   10பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை போல
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லேஉள்ளே உண்மை ஒன்றும் இல்லாத ஒரு மேற்போர்வையான சொற்களை –
  
# 311 நெய்தல் உலோச்சனார்# 311 நெய்தல் உலோச்சனார்
  
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றிமழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிவாகச் சாய்ந்து அடித்து,
இரும் கதிர் நெல்லின் யாணரஃதேபெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்துபெய்யாது வறண்டுபோனால், கடற்கரையில் வளரும் நீர்முள்ளி படர்ந்து, சேறு காய்ந்து,
இரும் கழி செறுவின் வெள் உப்பு விளையும்கரிய கழி சார்ந்த வயல்களில் வெள்ளை உப்பு விளையும்;
அழியா மரபின் நம் மூதூர் நன்றே   5இத்தகைய ஆக்கம் குறையாத இயல்பைக் கொண்ட நம் மூதூர் நலமுடையதாகும்;
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிகொழுத்த மீனைச் சுடுகின்ற புகை தெருவெங்கும் பரக்க,
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதேசிறிய பூக்களைக்கொண்ட ஞாழல் உள்ள துறையும் இனிமையாக மணக்கும்;
ஒன்றே தோழி நம் கானலது பழியேஒன்றுதான் தோழி! நம் கடற்கரைச் சோலையின் குறை;
கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்திகரிய கிளைகளையுடைய புன்னை மலர்களின் பூந்தாதுக்களை அருந்தி
இரும் களி பிரசம் ஊத அவர்10மிகுந்த களிப்புடன் தேனீக்கள் ஒலியெழுப்ப, அவரின்
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதேநெடிய தேரின் இனிய ஒலி கேட்பது அரிதாயிருக்கிறது.
  
# 312 பாலை கழார் கீரன் எயிற்றியார்# 312 பாலை கழார் கீரன் எயிற்றியார்
  
நோகோ யானே நோம் என் நெஞ்சேநொந்துபோயிருக்கின்றேன் நான்! என்னை நொந்துகொள்ளும் என் நெஞ்சமே!
பனி புதல் ஈங்கை அம் குழை வருடகுளிர்ந்த புதராய் விளங்கும் ஈங்கையின் அழகிய தளிர்கள் வருடிவிட,
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்_குருகுசிறகுகளைக் குவித்துவைத்திருக்கும் துன்பத்தையுடைய வெள்ளைக் குருகாகிய
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருளபார்வைப் பறவையை வேட்டுவன் கால்கட்டை நீக்கி அருள்செய்ய நின்ற
மாரி நின்ற மையல் அற்சிரம்       5கார்காலத்திலும், அது நின்று பகலிரவு என்று அறியாது மயங்கிய கூதிர்காலத்திலும் –
யாம் தன் உழையம் ஆகவும் தானேநாம் அவளின் பக்கத்தில் இருக்கும்போதும், அவள்தானே
எதிர்த்த தித்தி முற்றா முலையள்மேலேறிப் படரும் தேமலையும், முற்றாத இளம் மார்புகளையும் உடையவளாய்
கோடை திங்களும் பனிப்போள்கோடை மாதத்திலும் நடுங்கிக்கொண்டிருப்பவள் –
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவேவாடைக்காற்றடிக்கும் பெரும் பனிக்காலங்களிலும் என்ன பாடு படுவாளோ? என்று –
  
# 313 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்# 313 குறிஞ்சி தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
  
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூகருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் காலையில் பூத்த புதிய பூக்கள்
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்பபொன்வேலை செய்யும் பொற்கொல்லனின் சிறந்த கைவேலைப்பாட்டைப் போல
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்துமிகவும் வனப்புற்றன; தடைகளை முற்றிலும் அழித்து,
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇதழைத்த பலவான கூந்தல் அழகுபெற அவற்றை அணிந்து,
காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு5அவர் காணவேண்டுமென்ற விருப்பம் அளவுமீறிப்போனதினால், நம்மைக் கைவிட்டுச் சென்றவரை
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள்எவ்வாறு காண்போம் தோழி? காந்தளின்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்கமழ்கின்ற பூங்கொத்துக்கள் மலர்ந்த விருப்பந்தரும் மலைச்சாரலின்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்_வயின்கூதளம் படர்ந்த நறிய சோலை நாமின்றித் தனித்திருக்க, ஊருக்குத்
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்துதிரும்பிச் செல்வோம் போலத் தோன்றுகிறது, இலைகள் காய்ந்துபோய்
அருவியின் ஒலித்தல் ஆனா  10அருவிநீரைப் போல ஓயாமல் சலசலத்துக்கொண்டிருக்க,
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையேகொய்யக்கூடிய பருவத்தை அடைந்தன நாம் கிளிகளைக் கூவிக்கூவி விரட்டிய தினைக்கதிர்கள்.
  
# 314 பாலை முப்பேர் நாகனார்# 314 பாலை முப்பேர் நாகனார்
  
முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்வயது முதிர்ந்தோர் தம் இளமையை எவ்வளவு வருந்தியும் மீண்டும் பெறமாட்டார்கள்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லைவாழ்நாளை வகுத்து இன்ன அளவுள்ளது என்னும் அறிபவரும் இங்கு இல்லை;
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரிமாரிக்காலத்து ஈரமான இதழையுடைய பூவை,
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்நறிய வயிரம்பாய்ந்த முற்றிய சந்தனத்தோடு சூடிக்கொண்ட மார்பில்,
குறும் பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்5சிறிய புள்ளிகளைக் கொண்ட திரண்ட அழகிய நிறத்தையுடைய
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லிகரிய கண்கள் அமைந்த வெம்மையான மார்பகங்கள் அமுங்குமாறு அணைத்தபடியே
கழிவது ஆக கங்குல் என்றுகழியட்டும் இந்த இரவு என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழியதாம் கூறிய சொல்லின் உறுதிப்பாட்டில் பொய்த்துவிட்டார், அவர் வாழ்க!
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளிவிரல்களை நொடித்துவிட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளியின்,
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள்       10அசைகின்ற பாவையைப் போல கிளைகளில் ஏறி, தனித்திருக்கும்
புன் புறா வீழ் பெடை பயிரும்புன்மையான புறா, தான் விரும்பும் தன் பெடையை அழைத்துக்கூவும்
என்றூழ் நீள் இடை சென்றிசினோரேவெயில் மாறாத நீண்ட பாலைநிலத்தின் வழிகளில் சென்றவர் –
  
# 315 நெய்தல் அம்மூவனார்# 315 நெய்தல் அம்மூவனார்
  
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து எனவிரைந்து செல்லக்கூடிய, பெரும் தெய்வங்களுக்குரிய, ஆண்டுகள் பல கழிந்ததாக,
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டுபாறைகளைக்கொண்ட துறையில் அலைகள் மோதுவதால் அடிபட்டு
மூத்து வினை போகிய முரி வாய் அம்பிபழையதாகி மீன்பிடிக்கத் தகுதியற்றுப்போன முரிந்த முன்பகுதியைக்கொண்ட தோணியை,
நல் எருது நடை வளம் வைத்து என உழவர்நல்ல எருது தன் நடையழகை இழந்ததாக, உழவர்கள்
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு     5புல் உடைய தோட்டத்தில், வேலைசெய்யாதபடி, மேயவிட்டதைப் போல,
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீநறு மணம் சேர்ந்த நல்ல புகையை ஏற்றாமல், சிறிய பூவைக்கொண்ட
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்ஞாழலோடு சேர்ந்த புன்னை மரத்தின் கொழுமையான நிழலில்,
முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும்அதன் முழவு போன்ற அடிமரத்தில் கட்டிவைத்திருக்கும் துறையைச் சேர்ந்தவனே! மிகவும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு எளிதில்
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல்     10தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய், அதனால் எம்மைப் போல
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்நெகிழ்ந்த தோளும், கலங்கிய கண்ணையும் உடையவராய்
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரேமலர்ந்தவுடன் பூவானது தீய்ந்துபோனாற்போல ஆவர் உன்னை விரும்பியவர்.
  
# 316 முல்லை இடைக்காடனார்# 316 முல்லை இடைக்காடனார்
  
மடவது அம்ம மணி நிற எழிலிஅறியாமையுடையது, இந்த நீலமணி நிறத்தைக்கொண்ட மேகம்;
மலரின் மௌவல் நலம் வர காட்டிமௌவல் மலரை அழகுற எடுத்துக்காட்டி,
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின்மீனின் அழகையுடைய மையுண்ட கண்களைக் கொண்டு, பொன் குழைகளையும் அணிந்தவளே, இவை உனது
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் எனபற்களின் அழகைக்கொண்டு அரும்பாய்த் துளிரும் பொழுதில் மீண்டு வருவோம் என்று
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் 5இடம் அகன்ற வானத்துப் பிறைமதி எனக் கொள்ளத்தக்க உன்
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசைநல்ல நெற்றியை நீவிவிட்டுச் சென்றோர், தம்முடைய பொருளிட்டும் விருப்பம்
வாய்த்து வரல் வாரா அளவை அத்தவாய்க்கப்பெற்று திரும்பி வருவதற்கு முன்னரேயே, கடுமையான வழியில் இருக்கும்
கல் மிசை அடுக்கம் புதைய கால்வீழ்த்துமலை சேர்ந்த மலைத்தொடர்கள் மறைந்துபோகுமாறு, இறங்கி
தளி தரு தண் கார் தலைஇமழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே10இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.
  
# 317 குறிஞ்சி மதுரை பூவண்ட நாகன் வேட்டனார்# 317 குறிஞ்சி மதுரை பூவண்ட நாகன் வேட்டனார்
  
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்தநீண்ட பெரிய மலைச் சாரலில் தன் பெண்யானையுடன் உறவுகொண்ட
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பஅழகிய வரிகளையுடைய ஆண்யானையின் உயர்த்திய கையைப் போன்று
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினைதோகை நுனி பிரிந்து வளைந்த நீண்ட கதிர்களையுடைய பசிய தினையைப்
பவள செம் வாய் பைம் கிளி கவரும்பவளம் போன்ற சிவந்த வாயையுடைய பச்சைக் கிளிகள் கவர்ந்துண்ணும்
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை 5உயர்ந்த மலைகளின் நாட்டைச் சேர்ந்தவனே! நீ காதலிப்பளிடம் கொண்ட நட்பை
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்துஅன்னை அறிந்தால், நீர் சொரிய
என் ஆகுவ-கொல் தானே எந்தைஎன்ன ஆகுமோ அது? எமது தந்தையின்
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடிஉயர்ந்த மலைச் சாரலிலுள்ள இனிய சுனைநீரில் குளித்து
ஆயமொடு குற்ற குவளைதோழியரோடு பறித்த குவளையின்
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே    10கரிய இதழையுடைய அழகிய மலரைப் போன்ற கண்கள் –
  
# 318 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ# 318 பாலை பாலை பாடிய பெரும் கடுங்கோ
  
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்நினைக்கவும் செய்வீரா? ஐயனே! முன்பு ஒருநாள் நாம்
பணை தாள் ஓமை படு சினை பயந்தபருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆகநிழல் என்ற சொல்லுக்கே பொருந்தாத வரிவரியான நிழலில் இருக்கும்போது
நடுக்கம் செய்யாது நண்ணு_வழி தோன்றிநம்மை நடுங்க வைக்காது நாமிருந்த இடத்து வழியாக வந்து,
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை   5தழையை ஒடித்துத் தன்மேல் போட்டுக்கொண்ட உயர்ந்த கொம்புகளையுடைய யானை
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்வரிகளையுடைய தன் நீண்ட கையினைச் சுருக்கி, வேறு ஒரு
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்துபாதையில் சென்றுவிட்டதும், அதனை வேறாக உணர்ந்து
என்றூழ் விடர் அகம் சிலம்பவெயில் பரவிய மலைப் பிளப்புகளில் எதிரொலிக்குமாறு
புன் தலை மட பிடி புலம்பிய குரலேபுல்லிய தலையைக்கொண்ட இளம் பெண்யானை பிளிறிக்கொண்டு புலம்பிய குரலை –
  
# 319 நெய்தல் வினைத்தொழில் சோகீரனார்# 319 நெய்தல் வினைத்தொழில் சோகீரனார்
  
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும்பொங்கிவரும் கடலும் ஓசை அடங்கிப்போயிற்று; ஊதைக்காற்று
தாது உளர் கானல் தவ்வென்றன்றேபூந்தாதுக்களை உதிர்த்துவிடும் கடற்கரைச் சோலையும் பொலிவிழந்தது;
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்மணல் மிகுந்த பழமையான ஊரின் அகன்ற நெடிய தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறிஆண்கூகையானது தன் பெடையுடன் சென்று
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும்    5நடமாட்டமில்லாத பெரிய நாற்சந்தியில் அச்சம்தோன்றக் குழறுகின்ற ஒலியை எழுப்பும்;
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள்பேய்களும் நடமாடித்திரியும் தடுமாறவைக்கும் இருளைக்கொண்ட நள்ளிரவில்
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின்கொல்லிப்பாவை போன்ற பலரும் கொண்டாடும் அழகினையுடைய
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள்அகன்ற மென்மையான பருத்த தோள்களைக்கொண்ட பேதைமை மிக்க இளமகளின்
சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளிஅழகுத்தேமல் படர்ந்த அழகிய மார்பகங்களைத் தழுவுவதை நினைத்தவாறு
மீன் கண்துஞ்சும் பொழுதும்       10மீன்கள் கண்துயிலும் போழுதிலும்
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையேநான் கண்துயிலேன் என்னாகுமோ என் நிலை?
  
# 320 மருதம் கபிலர்# 320 மருதம் கபிலர்
  
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்றுஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன;
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்எதனை நினைத்துக்கொண்டிருக்கிறாள் இவள் என்று கேட்பாயாயின்,
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்தழை அணிந்து அசைவாடும் அல்குலையுடையவளாய், தெருவில்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல்இளையோள் நடந்து சென்ற அந்த ஒரு நிகழ்ச்சிக்கே, பழமையான வெற்றிச் சிறப்பையுடைய
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்   5ஓரி என்பானைக் கொன்ற ஒரு ஒப்பற்ற தெருவில்
காரி புக்க நேரார் புலம் போல்காரி புகுந்தபோது அவனை எதிர்கொள்ளாதமாட்டாதவரின் இடம் போல
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டுகல்லென்ற ஓசையுடையதாயிருந்தது ஊர் முழுதும்; அதனைப்போல
காவல் செறிய மாட்டி ஆய் தொடிவீட்டுக்கதவுகளை இறுக்கப் பூட்டி, அழகிய வளையணிந்த
எழில் மா மேனி மகளிர்எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே 10தப்பித்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு.
  
# 321 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்# 321 முல்லை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
  
செம் நில புறவின் புன் மயிர் புருவைசெம்மண் நிலமான முல்லைக்காட்டில், புல்லிய மயிரைக்கொண்ட செம்மறியாடுகளின்
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயரஓசை இனிய தெளிந்த மணி கட்டப்பட்ட கூட்டம், மேயும் இடத்தைவிட்டு தொழுவத்துக்குத் திரும்ப,
கான முல்லை கய வாய் அலரிகானகத்து முல்லையின் அகன்ற வாயையுடைய மலரைப்
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணியபார்ப்பனப் பெண்கள் சாரலை அடுத்துள்ள வெளியில் சூடிக்கொள்ள,
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை5மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்
புல்லென் வறு மனை நோக்கி மெல்லபொலிவிழந்து வெறுமையாய்த் தோன்றும் தன் இல்லத்தை நோக்கி, மெல்ல
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவைவருந்தியிருப்பாள் திருத்தமான அணிகலன்களை அணிந்திருக்கும் நம் தலைவி,
வல்லை கடவு-மதி தேரே சென்றிகஎனவே, விரைந்து செலுத்துவாயாக தேரினை, செல்வாயாக!
குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்றகுருந்த மரங்கள் பூத்து நிற்கும் காட்டினில், அடர்த்தியாக
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே       10பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன.
  
# 322 குறிஞ்சி மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்# 322 குறிஞ்சி மதுரை பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
  
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்இவ்வாறு தணியுமானால், எங்குமே
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லைஇதனைக்காட்டிலும் கொடியது வேறு ஒன்றும் இல்லை;
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்துஇது உண்மையாகுமோ? வாழ்க தோழி! மூங்கில்கள் உயரமாய் வளர்ந்து,
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகைவெட்டி அடுக்கியதைப் போல் அடர்த்தியாக பின்னிக்கிடக்கும் மலைப் பிளவாகிய குகையினில்
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர்     5ஊனைத் தின்னுகின்ற பெண்புலியின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்கு
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரிஆட்கள் நடமாடும் அரிய ஒடுக்கமான வழியில் மறைந்திருந்து ஒளிபொருந்திய வரிகளையும்
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன்கடுமையான கண்களையும் உடைய வலிமை மிக்க புலி ஒடுங்கியிருக்கும் நாடனாகிய தலைவனின்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாதுகுளிர்ச்சியான மணங்கமழும் அகன்ற மார்பினை உடைமையாகப் பெறாததினால்
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய்நல்ல நெற்றி பசந்துபோன துன்பம் மிகுந்த அரிய நோயை,
அணங்கு என உணர கூறி வேலன்10முருகு தீண்டியது என்று அறிந்து கூறி, வெறியாடும் வேலன்
இன் இயம் கறங்க பாடிஇனிய இசைக்கருவிகள் ஒலிக்கப் பாடி
பன் மலர் சிதறி பரவு_உறு பலிக்கேபலவகைப் பூக்களைச் சொரிந்து முருகனைத் துதித்துப்பாடும் பலிக்கொடைக்கு –
  
# 323 நெய்தல் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்# 323 நெய்தல்# வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
  
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணைஉயர்ந்து தோன்றும் இனிய கள்ளையுடைய பனைமரங்களுக்கு
நடுவணதுவே தெய்ய மடவரல்நடுவே இருக்கிறது – இளமை பொருந்திய
ஆயமும் யானும் அறியாது அவணதோழியரும் நானும் யாருக்கும்தெரியாமல் அங்கு இருப்போம் – 
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின்உன் மேல் மயக்கம் கொண்ட நட்பினால் சிறந்த பெண்மைநலத்தை இழந்து, உன்னுடைய
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை     5உறவைக் கொண்ட வளைகள் நிறைந்த முன்கையைக் கொண்ட
நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம்நல்லவளான தலைவியின் தந்தையின் சிறுகுடியை அடுத்துள்ள கடற்கரைப்பகுதி –
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்தபுலியினதைப் போன்ற வரிகள்கொண்ட மணல்மேட்டுப் புன்னைமரங்கள் உதிர்த்த
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றிமிகுந்த பூந்தாதுக்களில் தேனுண்ணும் தேனீக்களோடு ஒன்றுகூடி
வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்வண்டுகள் ஒலிக்கும் இனிய இசையும் கலந்துஒலிக்க, திண்ணிய தேரில்கட்டிய
தெரி மணி கேட்டலும் அரிதே10தெரிவிக்கும் மணிகளின் ஓசையைக் கேட்பதும் மிக அரிதாகும்,
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமேவரும் வழி இது அவ்விடத்துக்கு, மறக்கவேண்டாம்.
  
# 324 குறிஞ்சி கயமனார்# 324 குறிஞ்சி கயமனார்
  
அந்தோ தானே அளியள் தாயேஅந்தோ! மிகவும் இரங்கத்தக்கவள் இவளின் தாய்!
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்நொந்து அழிகின்ற துயரத்துடன் இனி என்ன ஆவாளோ?
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள்பொன்னைப் போன்ற மேனியை உடைய தன் மகளை மிகவும் விரும்பியவள் அவள் –
கோடு முற்று யானை காடு உடன் நிறைதரகொம்புகள் முற்றிப்போன யானைகள் காடுகளில் சேர்ந்து கூட்டமாக வர
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின்5நெய் பூசினாற்போன்ற வலிய காம்பினையுடைய வேலினையுடைய
செல்வ தந்தை இடன் உடை வரைப்பின்செல்வமுடைய தந்தையின் அகன்ற மலைப்பகுதியில்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடிஆடும்போது பந்தை உருட்டுபவள் போல ஓடி,
அம் சில் ஓதி இவள் உறும்அழகிய சிலவாகிய கூந்தலையுடைய இவளின் மிகுந்த
பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மேபஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள்.
  
# 325 பாலை மதுரை காருலவியம் கூத்தனார்# 325 பாலை மதுரை காருலவியம் கூத்தனார்
  
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றைகவிழ்ந்த தலையையுடைய கரடியின் பருத்த மயிரையுடைய ஆண்கரடி
இரை தேர் வேட்கையின் இரவில் போகிஇரை தேடும் ஆசையால் இரவில் போய்,
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்தநெடுநாள் செயல்புரியும் இயல்பினையுடைய கரையானின் கூட்டம் உருவாக்கிச் செய்த
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யெனபாம்புகள் வாழும் புற்று அழியும்படி, விரைவாக
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்     5முறிந்த நுனியையுடைய பெரிய நகங்களால் பறித்துப் புற்றாஞ்சோற்றை உண்ணும்
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள்செல்லுதற்கு அரிய பிரிவுபட்ட வழிகளைக் கடந்து, இவளுடைய
பூ போல் உண்கண் புது நலம் சிதையபூவைப் போன்ற மையுண்ட கண்கள் தம் புதுமை அழகு குன்றிப்போகும்படி
வீங்கு நீர் வார கண்டும்மிகுந்த கண்ணீர் சொரிவதைப் பார்த்தும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவேதகுந்ததோ?, பெருமானே! தவிர்ப்பீராக உமது பயணத்தை
  
# 326 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்# 326 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
  
கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன்கொழுத்த சுளைகளையுடைய பலாவின் பழம் மிகுந்த உயர்ந்த மலைச்சரிவில்,
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம்செழுமையான குலைகளால் வளைந்த கரிய கிளையில், கொக்குகள்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாதுமீனைக் குடைந்து உண்பதால் ஏற்படும் புலவுநாற்றத்தைத் தாங்க மாட்டாத
துய் தலை மந்தி தும்மும் நாடமெல்லிய பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்முகின்ற நாட்டையுடையவனே!
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே       5உனக்குச் சொல்லவும் நான் நாணமடைகின்றேன், இவளுக்கு,
நுண் கொடி பீரத்து ஊழ்_உறு பூ எனநுண்ணிய கொடியையுடைய பீர்க்கின் நன்கு மலர்ந்த பூவைப் போல்
பசலை ஊரும் அன்னோ பல் நாள்பசலை உண்டாயிருக்கிறது அல்லவா! பலநாளும்,
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ணஅறியப்படுகின்ற அமைதலான அழகுடைய எமது தினைப்புனத்தை நீ அடைதலுண்டென்றாலும்
வண்டு எனும் உணரா ஆகிவண்டு என்று உணரத்தகாதவை ஆகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே  10பசலை போன்ற நிறமுடைய பீர்க்க மலர் என்று கருதியதைப் போலாகும் இவள் கண்கள்.
  
# 327 நெய்தல் அம்மூவனார்# 327 நெய்தல் அம்மூவனார்
  
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்உறக்கமில்லாதனவாய்க் கண்ணீர் சொரியும் கண்களோடு மெலிவுற்று
சாதலும் இனிதே காதல் அம் தோழிஇறந்துபோதலும் நமக்கு இனிதாகும்; அன்புகொண்ட தோழியே!
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர்அந்த நிலை இனியது அல்ல என்றாலும், சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து    5தமக்குரிய கடனாற்றும் திறத்தில் குறைவுபடமாட்டார் என்று ஒருமனதாக
உலகம் கூறுவது உண்டு என நிலைஇயஉலகம் கூறுவது உண்டு என்றுகொண்ட எமக்கு நிலைபெற்ற
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்உரிமைப்பொருள் ஆகுதலும் உரியதேயாகும் – அரும்புகள் மலர்கின்ற
புன்னை ஓங்கிய கானல்புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த கடற்கரைச் சோலையின்
தண்ணம் துறைவன் சாயல் மார்பேகுளிர்ந்த அழகிய துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு.
  
# 328 குறிஞ்சி தொல் கபிலர்# 328 குறிஞ்சி தொல் கபிலர்
  
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கிகிழங்குகள் கீழே வேர்கொண்டு இறங்க, தேனடைகள் மேலே மரக்கிளைகளில் தொங்க,
சிற்சில வித்தி பற்பல விளைந்துஒருசில தினைவிதைகளை விதைத்து, அவை பலவாக விளைய,
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன்அந்தத் தினைகளை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பெரிய மலைநாடனான தலைவனின்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால்பிறப்பு நம்முடையதைப் போல் இல்லாமல் உயர்வானதாக இருக்க அறிந்தோம், அதனால்
அது இனி வாழி தோழி ஒரு நாள்      5அந்த உயர்வு இனி என்றும் வாழ்க, தோழி! ஒரு நாள்
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்புசிறிய பலவான மின்னல், இடி போன்றவற்றைக் கொண்டு வலமாக ஏறி
பெரும் பெயல் தலைக புனனே இனியேபெரும் மழை பெய்வதாக, இங்கே – இனிமேல்,
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாதுஎள்ளைப்பிழிந்து எடுக்கப்பட்ட நெய்யுடன், வெள்ளைத்துணியும் வேண்டாது
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல்சந்தனமரங்களை உச்சியிலே கொண்ட உயர்ந்த பெரிய மலைச்சாரலில்
விலங்கு மலை அடுக்கத்தானும்      10குறுக்கிட்டுக்கிடக்கும் மலை அடுக்கத்திலுள்ள
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரேநல்ல கலன்களைப் பரிசிலாகப் பெறும் விறலி ஆடுகின்ற இவ்வூரில் உள்ள தினைப்புனத்தில் –
  
# 329 பாலை மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்# 329 பாலை மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  
வரையா நயவினர் நிரையம் பேணார்அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன்கள்வர்கள் கொன்று வழியில் போட்டுவிட்டுச் சென்ற மக்களின் உருக்குலைந்த பிணங்களின்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅதுமுடை நாற்றம் மிக்க உடலின் பாகங்களில் தோண்டித் தின்பதற்குரிய இடம் இல்லாததினால்
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறுஅண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி5இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத்
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்தம்முடைய செம்மையான அம்புகளில் இறுகக்கட்டிய கொடுமையான ஆண்கள்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்கொலைத்தொழிலைச் செய்யும் எண்ணத்துடன் வழியைப் பார்த்துத் தங்கியிருக்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்துபாலைநில வழியில் சென்றனர் என்றாலும், நம்மைத் துறந்து
அல்கலர் வாழி தோழி உது காண்அங்கேயே தங்கிவிடமாட்டார், வாழ்க, தோழியே! இதோ பார்,
இரு விசும்பு அதிர மின்னி10பெரிய வானம் அதிரும்படியாக மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவேகூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன.
  
# 330 மருதம் ஆலங்குடி வங்கனார்# 330 மருதம் ஆலங்குடி வங்கனார்
  
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்துஅகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
மட நடை நாரை பல் இனம் இரியஇள நடையையுடைய நாரையின் பலவான கூட்டம் வெருண்டோட
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்துநெடிய நீர் நிரம்பிய குளிர்ந்த குளத்தில் துடுமென்று விரைவாகப் பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினைஅந்த நாளிற்செய்த உழும் தொழிலின் வருத்தம் நீங்கும்படியாக நீராடி, நீண்ட கிளைகளையுடைய
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்    5இருள் நிரம்பியது போன்ற அடர்ந்த மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரைபுதிய வருவாயையுடைய ஊரினைச் சேர்ந்தவனே! உன்னுடைய மாண்புமிக்க அணிகலன்களை அணிந்த மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்_தம்எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து நீ அவருடன் கூடியிருந்தாலும், அவர்களின்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்புல்லிய மனத்தில் இடம்பிடித்திருப்பது அரிது, அந்த மகளிரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்துபசிய தொடியணிந்த புதல்வியரொடு, புதல்வரையும் பெற்றுத்தந்து
நன்றி சான்ற கற்பொடு     10நன்மை மிகுந்த கற்போடு
எம் பாடு ஆதல் அதனினும் அரிதேஎம்மைப்போல் குலமகளிரின் பெருமையை அடைதல் அதனினும் அரிது.
  
# 331 நெய்தல் உலோச்சனார்# 331 நெய்தல் உலோச்சனார்
  
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்உவர் நிலத்தில் விளையும் உப்பை உழாமல் விளைவிக்கும் பரதவர்
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கிஒன்றன்பின் ஒன்றாக வண்டிகளைச் செலுத்தும் உப்புவணிகர் வருகின்ற வேளையைப் பார்த்து
கானல் இட்ட காவல் குப்பைகடற்கரைச் சோலையில் இட்டுவைத்துக் காவல்காக்கும் குவியலான
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பிபுலவுநாற்றத்தையுடைய காய்ந்துகொண்டிருக்கும் மீனின் மீது படியும் பறவைகளை ஓட்டிக்கொண்டு
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி 5மடப்பம் பொருந்திய பார்வையையுடைய தோழியரோடு சேர்ந்து மேட்டினில் ஏறி
எந்தை திமில் இது நுந்தை திமில் எனஎன் தந்தையின் படகு இது, உனது தந்தையின் படகு என்று சொல்லிக்கொண்டு
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர்வளைத்து நிற்கும் கடலில் மீன் வேட்டைக்குச் சென்றுள்ள தம் சுற்றத்தாருடைய
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்பதிண்மையான படகுகளை எண்ணிக்கொண்டிருக்கும் குளிர்ந்த கடலைச் சேர்ந்தவனே!
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர்மிகவும் இனிமையுடையது எமது வெறுப்புணர்வு இல்லாத நல்ல ஊர்;
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்10இப்பொழுது வந்தாலும் தவறும் இல்லை; சிறிதளவுகூட
பிறர் பிறர் அறிதல் யாவதுவேற்றூர்க்காரரின் வரவை மற்றவர்கள் அறிவது எப்படி?
தமர் தமர் அறியா சேரியும் உடைத்தேசுற்றத்தவர்க்குள்ளேயே இவர் இவர் என்று அறியாமல் இருக்கும் சேரியையும் உடையதாயிருக்கும்போது-
  
# 332 குறிஞ்சி குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்# 332 குறிஞ்சி குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார்
  
இகுளை தோழி இஃது என் எனப்படுமோஎன் இளம்வயதுத் தோழியே! இது எப்படிப்போய் முடியுமோ?
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்குநீருக்குள் குவளை மலரைக் கொய்பவர்கள் நீர் வேட்கை அடைந்தாற்போல
நாளும் நாள் உடன் கவவவும் தோளேநாள்தோறும் உடனிருந்து தலைவன் தழுவவும், உனது தோள்களில்
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண்முன்பிருந்த நிலையிலிருந்து வழுவுகின்றனவே உன்னுடைய தோள்வளைகள் என்று பலமுறை
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை      5சொல்வதை மேற்கொள்கிறாய் நீ; மலைப்பிளப்புகளில் உள்ள குழிவுகளில்
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலிகுட்டியீன்ற பெண்புலியை இருக்கவைத்த பெரிய, நிறத்தையுடைய வலிய புலி
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறிஇரையை விரும்பித்தேடி வருந்தியலையும் மலையடிவாரத்துச் சிறிய வழியில்
தலை நாள் அன்ன பேணலன் பல நாள்முதன்முதலில் என்னைக் காண வந்ததைப் போன்று உயிரைப் பொருட்படுத்தாதவனாய், பல நாட்கள்
ஆர் இருள் வருதல் காண்பேற்குநிறைந்த இருளில் வருவதைக் காண்கின்ற எனக்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே      10எப்படி ஆகும், ஒளிரும் அணிகலன்கள் கழலாதவாறு செறிந்திருப்பது? –
  
# 333 பாலை கள்ளிக்குடி பூதம் புல்லனார்# 333 பாலை கள்ளிக்குடி பூதம் புல்லனார்
  
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து எனமேகங்கள் தம் தொழிலில் குறைவுபட்டு, பெரிய வானத்தில் உயரச் சென்றதினால்,
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறிமூங்கில்கள் தம் அழகை இழந்துபோன மலைகளினூடேஅமைந்த பாதையாகிய சிறிய நெறியில்
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்பருக்கைக் கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்பொலிவுள்ள நெற்றியையுடைய யானையோடு புலி போரிட்டு உண்ணும்
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து  5பாலைவெளியைக் கடந்துசெல்வது கடினமானது என்று நினையாராய், வலிமையழிந்து
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டிஉள்ளே பொருளாசை பெருக்கெடுக்கும் நெஞ்சத்தோடு, தாம் வள்ளன்மை உள்ளவராய் இருப்பதற்காக,
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்துஅரிய பொருளை ஈட்டுவதற்குப் பிரிந்துசென்ற காதலர், உன்னைத் தழுவுவதை எதிர்பார்த்துவந்து
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும்உன்னுடைய திருத்தமான அணிகளையுடைய பருத்த தோளை இன்று வந்து பெறுவர் போலும்,
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசைநீங்குவதாக உன்னுடைய துயரம்! உயரமான இடத்தில்,
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி   10சிறந்த புகழையுடைய நல்ல இல்லத்தின் ஒளிபொருந்திய சுவரில் ஒட்டிக்கொண்டு
நயவரு குரல பல்லிவிரும்பத்தக்க குரரையுடைய பல்லி
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமேநள்ளென்னும் நடு இரவில் நாம் நினைக்கும்போதெல்லாம் கௌளிசொல்லும்.
  
# 334 குறிஞ்சி# 334 குறிஞ்சி ஐயூர் முடவனார்
  
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளைகரிய விரல்களையுடைய மந்தியின், சிவந்த முகங்களையுடைய பெரிய கூட்டமானது,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடிபெரிய மலைகளின் சரிவில் அருவியில் குளித்து,
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கைஉயர்ந்த மூங்கில்கழைகளில் ஊசல் ஆடி, வேங்கைமரத்தின்
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்பமலைக்கே அழகுதரும் நறிய பூக்கள் கல்லிடையேயுள்ள சுனையில் உதிர்ந்துவிழ,
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் 5தம் ஆண்குரங்குகளோடு களித்திருக்கும் மலையக நாடன்,
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள்மாரிக்கால மழை நின்று பெய்யும் மிகுந்த இருளையுடைய நள்ளிரவில்
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்திஅருவியின் சரிவில் ஒரு வேலை ஏந்திக்கொண்டு
மின்னு வசி விளக்கத்து வரும் எனின்மின்னல் மேகத்தைப் பிளக்கும் ஒளியையே விளக்காகக் கொண்டு வருவான் எனில்
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையேஎன்ன ஆகும் நம் இன்னுயிரின் நிலை?
  
# 335 நெய்தல் வெள்ளிவீதியார்# 335 நெய்தல் வெள்ளிவீதியார்
  
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்திங்களும் தான் திகழ்கின்ற வானத்தில் அழகைப் பொழியும்; ஒலிக்கும் நீரோடு
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதேபொங்கியெழும் அலைகளுள்ள கடலும் தன் முழக்கத்தை நிறுத்தாது;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல்ஒலி மிகுந்துவர கடர்நீர்ப்பெருக்கும் கரையைத் தாண்டிவரும்; மிகுந்த நீரைக்கொண்ட
பல் பூ கானல் முள் இலை தாழைபலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ     5சோற்றை அள்ளிப்போடும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடுகாற்று எங்கும் பரக்க உண்டாக்கும் குறைவில்லாத நறுமணத்துடன்
மை இரும் பனை மிசை பைதல உயவும்கரிய பெரிய பனைமரத்தின் மேல் துன்புற்று வருந்தும்
அன்றிலும் என்பு உற நரலும் அன்றிஅன்றில் பறவைகளும் தம் எலும்புகள் நடுங்கக் கூவும்; அன்றியும்
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்விரலால் தடவி வருந்தி இசைக்கக்கூடிய விருப்பந்தரும் நல்ல யாழ்
யாமம் உய்யாமை நின்றன்று 10நடுயாமத்தும் ஒழியாமல் இசைக்கின்றது;
காமம் பெரிதே களைஞரோ இலரேகாம நோயோ பெரிதாக இருக்கின்றது; களைவோரைத்தான் காணோம்.
  
# 336 குறிஞ்சி கபிலர்# 336 குறிஞ்சி கபிலர்
  
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடுசொரசொரப்பான பிடரியைக் கொண்ட பன்றி, தோலாய் வற்றிப்போன முலைகளையுடைய தன் பெண்பன்றியுடன்
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின்திரண்ட அடித்தாள்களையுடைய தினையை அளவின்றித் தின்றுதீர்த்ததால்
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்மலை வழியிலுள்ள கடினமான சிறிய ஒடுக்கமான வழியில் தன்னை ஒடுக்கிக்கொண்டு, கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றைவில்லெறிந்து கொன்று கொணர்ந்த வெண்மையான கொம்பினைக்கொண்ட ஆண்பன்றியை
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி     5இழுத்துச் செறுகிய பெரிய கூந்தலையுடைய இல்லாள் அறுத்துத்துண்டாக்கி
குடி முறை பகுக்கும் நெடு மலை நாடஅண்டை அயலாருக்குப் பகுத்துக்கொடுக்கும் நெடிய மலை நாட்டினனே!
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும்மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்இரவில் இங்கு வருவதற்கு அஞ்சமாட்டாய்; நான் அஞ்சுகிறேன்; பாம்பின்
ஈர் அளை புற்றம் கார் என முற்றிஈரப்பதம் உள்ள குகைபோன்ற புற்றினைக் கார்காலத்து மேகம் போலச் சூழ்ந்துகொண்டு
இரை தேர் எண்கு_இனம் அகழும்      10இரையைத் தேடியுண்ணும் கரடிகளின் கூட்டம் தோண்டுகின்ற
வரை சேர் சிறு நெறி வாராதீமேமலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக!
  
# 337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 337 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
உலகம் படைத்த காலை தலைவஉலகம் உண்டான காலத்திலிருந்தே, தலைவனே!
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரேமறந்தனரோ? சிறந்தவரே அவர்கள்!
முதிரா வேனில் எதிரிய அதிரல்முற்றாத இளவேனில் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகையையும்,
பராரை பாதிரி குறு மயிர் மா மலர்பருத்த அடிமரத்தைக் கொண்ட பாதிரியின் நுண்ணிய மயிர்களைக் கொண்ட சிறந்த மலரையும்,
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய     5நறுமணம் கமழும் செங்கருங்காலி மலருடன் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி அடைத்துவைத்துள்ள
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன்செப்பினைத் திறந்துவைத்ததைப் போன்ற நறுமணம் சேர்ந்து, அதனுடன்
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால்அழகிய நிறங்கொண்ட நீலமணி போன்ற ஐந்தாகப் பிரித்துக் கட்டிய
தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும்தாழ்ந்து இறங்கும் நறிய கூந்தலில் உடனிருந்து உறையும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாதுஅரிதாய்க் கிடைக்கும் பெரிய பயனைக் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே     10பிரிந்து வாழ்கின்ற இயல்பையுடைய பொருளீட்டி வாழ்கின்ற ஆடவர்கள் –
  
# 338 நெய்தல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்# 338 நெய்தல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
  
கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றேகடுமையான கதிரையுடைய ஞாயிறு மேற்குத்திசையில் மலையில் சென்று மறைந்தது;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்அடும்பின் கொடிகள் துண்டித்துப்போகும்படி, சக்கரங்கள் பிளக்க, அவரின்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றாநெடிய தேரின் இனிய ஒலி இரவிலும் கேட்கவில்லை;
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலைமிகுதியான துன்பத்தினால் நலியும் உனது நிலையை
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப5நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறாய்! அவ்வாறு நிலைத்திருக்க
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொளஎவ்வாறு இயலும்? எனது காம மயக்கம் பெருகிட,
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபுஅகன்ற கரிய கழிப்பரப்பில் இரைதேடி எழுந்து அருந்தும்
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கியபுலவு நாற்றத்தையுடைய சிறுகுடியின் மன்றத்தில் ஓங்கியுயர்ந்த
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறிபருத்த அடியையுடையதுமான பனையின் ஓலையின் மட்டையில் ஏறி
கொடு வாய் பேடை குடம்பை சேரிய    10வளைந்த வாயையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டுக்கு வரும்படி
உயிர் செல கடைஇ புணர் துணைஉயிரே போகும்படியாக கூவிக்கொண்டு, தான் சேரும் துணையை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகேமீண்டும் மீண்டும் விடாது அழைக்கிறது, துயரத்தைக் கொண்ட அழகிய குருகு –
  
# 339 குறிஞ்சி சீத்தலை சாத்தனார்# 339 குறிஞ்சி சீத்தலை சாத்தனார்
  
தோலா காதலர் துறந்து நம் அருளார்எக்காலத்தும் தோல்வியையே அறியாத நம் காதலர் நம்மைத் துறந்து இரக்கமில்லாதவராயினார்;
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்ஊராரின் பழிச்சொல்லை  விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறிஅன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த   5அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை! சிறந்த
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கிபுகழ் பொருந்திய அகன்ற நம் வீட்டில் என்னருகில் வந்து என்னைத் தழுவிக்கொண்டு
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல்நீர் அலைத்தலால் கலைந்துபோன குளிர்ந்த இதழ்களால் தொடுக்கப்பட்ட மாலையையும்
ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇஒளி பொருந்திய நெற்றியையும், பெதும்பைப் பருவத்து நல்ல அழகினையும் பெற்று
மின் நேர் ஓதி இவளொடு நாளைமின்னலைப் போன்ற கூந்தலையுடைய இவளோடு சென்று நாளை
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி   10பலவாகிய மலர்கள் செறிந்திருக்கும் மணங்கமழும் வேலியையுடைய
தெண் நீர் மணி சுனை ஆடின்தெளிந்த நீர் நிறைந்த அழகிய சுனையில் நீராடினால்
என்னோ மகளிர்_தம் பண்பு என்றோளேபெரிதும் வேறுபடும் போலும் மகளிரின் மேனியும் நிறமுமாகிய பண்பு என்று உரைத்தாள்.
  
# 340 மருதம் நக்கீரர்# 340 மருதம் நக்கீரர்
  
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன்தழுவமாட்டேன், தலைவனே! உன்னை வெறுத்தேனும் இல்லை;
கல்லா யானை கடும் தேர் செழியன்பாகன் மொழியைத் தவிர வேறொன்றைக் கல்லாத யானைப்படையையும் கடிய தேர்ப்படையையும் உடைய செழியனின்
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு எனசிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளைவாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி     5சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்துகாளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம் சால் உழவர் கோல் புடை மதரிசெம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என்வாணனின் சிறுகுடி என்ற ஊரைப் போன்ற என்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே      10அணிந்துகொள்வதற்கு நேராக இருக்கும் ஒளிமிகுந்த வளையல்கள் நெகிழும்படி செய்த உன்னை –
  
# 341 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்# 341 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
  
வங்கா வரி பறை சிறு பாடு முணையின்வங்கா எனும் வீட்டுப்பறவையை ஓடவிட்டும், பறக்கவிட்டும் விளையாடி சிறிதுநேரங்கழித்து விட்டுவிட்டு
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்சிவந்த புள்ளிகளையுடைய அரக்கினால் செய்யப்பட்ட வட்டு எனும் விளையாட்டுக் கருவியை நாவில் தேய்த்து
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்துவிளையாட்டாக இனிய நகை குறையாமல், பாலைக் குடித்து,
அலையா உலவை ஓச்சி சில கிளையாஅங்குமிங்கும் ஓடி, காய்ந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கிக்கொண்டு, சில சொற்களைக் கூறிக்கொண்டு இருக்கும்
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்      5குன்றக் குறவனின் மகனைச் சிறிய சைகையால் அழைக்கும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமேநல்ல துணையை உடையவள் தலைவி! நானோ,
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து எனகொடிய பகைவர் கொண்ட அரிய போர் முனையில் குளிர்ந்த மழை பெய்ததாக,
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடுநீர்கள் ஒலிக்கும் நள்ளிரவில் மயங்கிக் கூதிரோடு கலந்து
வேறு புல வாடை அலைப்பவேற்று நாட்டுள்ள வாடையும் துன்புறுத்துதலால்
துணை இலேம் தமியேம் பாசறையேமே    10துணை இல்லாதவ்னாய், தனிமையில் பாசறையில் இருக்கின்றேன்.
  
# 342 நெய்தல்# 342 நெய்தல் மோசி கீரனார்
  
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்குகுதிரை எனக் கருதிப் பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வருவாரைப் போலவும்
மதில் என மதித்து வெண் தேர் ஏறிகோட்டை மதில் எனக் கருதி பேய்த்தேரைத் தாக்கி மோதுவதைப் போலவும் என்னிடம் வருதலால்,
என் வாய் நின் மொழி மாட்டேன் நின் வயின்என் வாயால் நீ கூறவேண்டியதைக் கூறமாட்டேன்; உன்னுடைய இடமான
சேரி சேரா வருவோர்க்கு என்றும்சேரியிடத்துக்கு வருகின்ற அவருக்கு எப்போதும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என5நீ அருள்செய்தல் வேண்டும் அன்புடையவளே! என்று
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள்கண்களால் இனிமையுறத் தலைசாய்த்துக் காட்டியும் தெளிகின்றாளில்லை
யானே எல்_வளை யாத்த கானல்நான் கூறுவதை, ஒளிமிக்க வளையையுடையவள்; வேலி சூழ்ந்த கடற்கரைச் சோலையில்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்தவண்டுகள் உண்ணுகின்ற நறிய மலர்கள் உதிர்ந்து நுண்ணிதாகக் கோலஞ்செய்த
சென்னி சேவடி சேர்த்தின்எனது தலையைத் தலைவியின் சிவந்த அடிகளிலே சேர்த்து வணங்கினால்
என் என படுமோ என்றலும் உண்டே     10தலைவரின் செயல் இப்பொழுது எப்படியாய் இருக்கின்றது என்று என்னைக் கேட்கவும்படுமே!
  
# 343 பாலை  கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்# 343 பாலை கருவூர் கதப்பிள்ளை சாத்தனார்
  
முல்லை தாய கல் அதர் சிறு நெறிமுல்லைக்கொடி படர்ந்த மலை வழியாகிய சிறிய நெறியினை
அடையாது இருந்த அம் குடி சீறூர்அடையாது, அங்கிருந்த அழகிய குடிகளமைந்த சிறிய ஊரில்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்பூந்தாதுக்களே எருவாக உதிர்ந்துள்ள தெருவில், பசுக்களின் முதுகுகளைத் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்துநெடிய விழுதுகள் தொங்குகின்ற கடவுள் உறையும் ஆலமரத்தில்
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை      5படைத்துப்போடப்படும் பலிச்சோற்றைத் தின்ற தொகுப்பான விரல்களையுடைய காக்கைகள்
புன்கண் அந்தி கிளை வயின் செறியபுன்மையான அந்திக் காலத்தில் தம்தம் சுற்றம் இருக்குமிடத்திற்குச் சென்றுசேர,
படையொடு வந்த பையுள் மாலைபிரிந்தாரைக் கொல்லும் படையுடன் வந்த துன்பம் நிறைந்த மாலைக் காலமானது
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்துஇல்லையோ? வாழ்க, தோழியே! நம்மைத் துறந்து
அரும் பொருள் கூட்டம் வேண்டிஅரிய பொருளை ஈட்டுவதை விரும்பி
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே10நம்மை விட்டுப் பிரிந்து வாழும் காதலர் சென்ற நாட்டில் –
  
# 344 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்# 344 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்டஅழகிய மலையின் பக்கத்தில் வியக்கும்படி வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்நீலமணி போன்ற கதிரின் தாள்களைக் கொண்ட கருமை பொருந்திய தினைக்கதிர்கள்
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம்பெரிய பிடியானையின் பெருங்கையைப் போன்று வளைந்து தொங்கும் பெரிய தினைப்புனத்தினைக்
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழைகாவல் காப்பதை நினைத்தோமாயின், ஆராய்ந்த இழைகளை அணிந்தவளே!
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை    5நமது நிலையின் காலமும் இடமும் தெரிந்து உணராதவனாய், தன்னுடைய மலையில் விளைந்த
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்சந்தனத்தின் குழம்பைத் தடவிய அழகு பொருந்திய மார்பில்
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்பமலைச் சாரலின் இடைவெளியில் மிகவும் வண்டுகள் ஆரவாரிக்க,
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரைவருபவன் மீண்டும் போவான் போலும்! உயர்ந்த மலையிலுள்ள
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலிபெரிய கற்களின் இடையேயுள்ள பிளவுகளில் எதிரொலிக்கும்படி, பெரிய புலியானது
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து10களிற்றினைக் கொன்று முழங்கும் அச்சம் பயக்கும் முழக்கத்தை மழைமேகத்தின் முழக்கமென நினைத்து
செந்தினை உணங்கல் தொகுக்கும்செந்தினை காயப்போட்டதை வாரி அள்ளும்
இன் கல் யாணர் தம் உறைவு இன் ஊர்க்கேஇனிய பாறைகளின் மேலுள்ள புது அறுவடையையுடைய தம்முடைய வசிப்பதற்கு இனிய ஊருக்கு –
  
# 345 நெய்தல் நம்பி குட்டுவனார்# 345 நெய்தல் நம்பி குட்டுவனார்
  
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்கடற்கரைச் சோலையில் உள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசுமையான காய்கள்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து எனகரிய நிறமுள்ள பெரிய கழியினுள் விழுந்ததாக,
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்தடித்த தண்டு உயர எழ அசைந்து ஆம்பலின் மொட்டுக்கள்
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்னசிறிய வெண்ணிறமுள்ள கடற்காக்கைகள் கொட்டாவி விட்டது போன்று
வெளிய விரியும் துறைவ என்றும்    5வெள்ளையாக விரிகின்ற துறையைச் சேர்ந்தவனே! எக்காலத்தும்
அளிய பெரிய கேண்மை நும் போல்கருணை செய்தலையுடைய பெரிய நட்பினையுடைய உம்மைப் போல,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்நற்பண்புகளை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாடதெளியாத உள்ளத்துடன் செயலற்று வாட,
நீடு இன்று விரும்பார் ஆயின்நெடிய காலத்துக்கு வளர்தல் இன்றி, விரும்பாமல் செல்வார் எனில்
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே       10வாழ்வது எவ்வாறு? வீணாகிப்போகட்டும் உங்கள் விளக்கங்கள்.
  
# 346 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்# 346 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்
  
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிகிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்கில் எழுந்துசென்று, இருண்டு
தண் கார் தலைஇய நிலம் தணி காலைகுளிர்ந்த மேகங்கள் மழைபெய்து நிலத்தின் வெப்பம் தணிந்திருக்கும் நேரத்தில்,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்இது அரசர்களின் பகையால் ஏற்பட்ட அவலம் என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் அரிய போர்முனையை அடுத்துள்ள வழியில்
அழிந்த வேலி அம் குடி சீறூர்அழிந்த வேலியையுடைய அழகாயிருந்த குடிகள் இருந்த சிறிய ஊரில்,
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட 5ஆட்கள் இல்லாத ஊர் மன்றத்தில் நிலைகொண்டிருக்கும் காற்று அசைக்க,
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கைமுயற்சியின் வலிமையினால் உண்டாக்கப்பட்ட மனவுரம் மிக்க பாசறையில்,
இன்று நக்கனை-மன் போலா என்றும்இன்று நினைத்து மகிழ்கின்றாய் போலும்! என்றும்
நிறை_உறு மதியின் இலங்கும் பொறையன்நிறைவோடு பொருந்தி விளங்கும் திங்களைப் போல ஒளிரும் பொறையனின்
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவிமிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய காட்டுமல்லிகையின்
கடி பதம் கமழும் கூந்தல் 10மிகுதியான மணம் கமழும் கூந்தலையுடைய
மட மா அரிவை தட மென் தோளேஇளைய மாமைநிறத்த அரிவையின் நீண்ட மெல்லிய தோள்களை –
  
# 347 குறிஞ்சி பெருங்குன்றூர் கிழார்# 347 குறிஞ்சி பெருங்குன்றூர் கிழார்
  
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழைமுழங்குகின்ற கடல் முகந்த நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்
மாதிர நனம் தலை புதைய பாஅய்திசைகளெங்குமுள்ள பரந்த இடங்கள் மறையுமாறு பரந்து
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபுஉயர்ந்த மலைகள் ஒளிரும்படி மின்னலிட்டுத் தாக்கி, பாம்புகளைக் கொன்று,
வான் புகு தலைய குன்றம் முற்றிவானத்தை ஊடுருவிச் செல்லும் உச்சிகளையுடைய குன்றுகளை வளைத்து,
அழி துளி தலைஇய பொழுதில் புலையன் 5மிக்க மழையைப் பொழிந்த பொழுதில், புலையனின்
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்னஅகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று
அருவி இழிதரும் பெரு வரை நாடன்அருவிகள் ஒலித்துக்கொண்டு இறங்கும் பெரிய மலைகளையுடைய நாட்டினன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் எனநீர் போன்ற இனிய இயல்பினன், பேரன்பினன் என்று
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழிபலவித சிறந்த மொழிகளால் கூறும் பரிசிலருடைய புகழ்மொழிகள்
வேனில் தேரையின் அளிய    10வேனில் காலத்து மழைக்குக் கத்தும் தவளைகளின் ஒலியைக் காட்டிலும் இரங்கத்தக்கன;
காண வீடுமோ தோழி என் நலனேஅவை உண்மைதான் என்பதைக் காண்பதற்கு முன்னர் இல்லாமற்போகுமோ, தோழி! என் மேனிநலம்.
  
# 348 நெய்தல் வெள்ளி வீதியார்# 348 நெய்தல் வெள்ளி வீதியார்
  
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பிநிலவானது, நீல நிற விசும்பில் பல கதிர்களைப் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றேபால் மிகுந்த கடலைப் போல ஒளியைப் பரப்பி விளங்குகிறது;
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டிஊரானது, தழைத்துவரும் பேரொலியோடு நிறைந்து ஒன்றாகக் கூடிச் செறிவுடன்
கலி கெழு மறுகின் விழவு அயரும்மேஓசை மிக்க தெருவில் விழாவைக் கொண்டாடுகிறது;
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்   5காடானது, பூத்திருக்கும் மலர்கள் நிறைந்துள்ள பொழிலகங்கள்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மேதாம் விரும்பும் துணையோடு வண்டுகள் ஒலிக்கின்றதானது;
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடுநானோ, அணிந்திருக்கும் அணிகலன்கள் நெகிழும்படியான தனிமைத்துயர்கொண்ட வருத்தத்தோடு
கனை இரும் கங்குலும் கண்படை இலெனேமிகுதியான இருளையுடைய இரவுப்பொழுதிலும் கண்களில் தூக்கமில்லாதவள் ஆனேன்;
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்அதனால், என்னுடன் சேர்ந்து ஏன் மகிழ்ச்சியாக இல்லை என்று என்னோடு சண்டைபோடுகின்றதோ இவ்வுலகம்?
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே10என்னுடன் சேர்ந்து ஏன் வருந்தவில்லை என்று அந்த உலகத்தோடு சண்டைபோடுகின்றதோ என் வருத்தம் மிக்க நெஞ்சம்?
  
# 349 நெய்தல் மிளை கிழான் நல்வேட்டனார்# 349 நெய்தல் மிளை கிழான் நல்வேட்டனார்
  
கடும் தேர் ஏறியும் காலின் சென்றும்விரைகின்ற தேரின்மேல் ஏறிச் சென்றும், காலால் நடந்து சென்றும்,
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்வளைவான கழியை அடுத்துள்ள அடும்பு மலர்களைக் கொய்துகொடுத்தும்,
கைதை தூக்கியும் நெய்தல் குற்றும்தாழை மலரைப் பறிக்கும்படி தூக்கிப் பிடித்தும், நெய்தல் மலரைப் பறித்தும்,
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடுஒன்றானது போல உணர்ச்சிகொண்ட நெஞ்சத்தோடு
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் 5நாள்தோறும் இவ்வாறு நடந்துகொண்டும், தொடுக்கப்பட்ட மாலையையுடைய
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறைபுதிய பூண்களை அணிந்த வேந்தர், படையழிந்து வீழ்ந்த பாசறையில்
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருதஒளிறும் வேல்படை பொரும் போரில் களிறுகள் வீழும்படி போரிட்ட
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போலபெரிய புண்ணுற்ற வீரரைக் காத்துநிற்கும் பேய்மகள் போல
பின்னிலை முனியா நம்_வயின்வழிபட்டு நிற்கும் நிலையை வெறுக்காத நம்மை,
என் என நினையும்-கொல் பரதவர் மகளே10எத்தகையவன் என்று நினைப்பாளோ அந்தப் பரதவர் மகளாகிய தலைவி.
  
# 350 மருதம் பரணர்# 350 மருதம் பரணர்
  
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇவெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழன பல் புள் இரிய கழனிபழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர் போன்ற என்
தொல் கவின் தொலையினும் தொலைக சார 5பழைய அழகு தொலைந்துபோனாலும் போகட்டும்; உன்னை நெருங்க
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇவிடமாட்டேன்; அவ்வாறு விட்டால், தாவி
கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலைஎன்னை ஆரத் தழுவும் உன் கைகள் நான் விசும்பாதவாறு தாங்கும் வலிமையுடையன; பரத்தையின் குவிந்த முலைகள்
சாடிய சாந்தினை வாடிய கோதையைபாய்வதால் ஏற்பட்ட சந்தனத்தை மார்பில் கொண்டுள்ளாய்; அவள் தழுவியதால் வாடிப்போன மாலையை உடையாய்;
ஆசு இல் கலம் தழீஇ அற்றுஉன்னைத் தொடுதல், கழித்துப்போடப்பட்ட கலங்களைத் தொட்டது போலாகும்;
வாரல் வாழிய கவைஇ நின்றோளே       10இங்கு நீ வரவேண்டாம்; வாழ்க உன்னைத் தழுவிநின்ற அந்தப் பரத்தை.
  

Related posts