நற்றிணை 201-250

# 201 குறிஞ்சி பரணர்# 201 குறிஞ்சி பரணர்
  
மலை உறை குறவன் காதல் மட_மகள்மலையில் வசிக்கும் குறவனின் அன்புக்குரிய இள மகள்
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்கிடைக்கமாட்டாதவள், கடும் காவலுக்குட்பட்டிருப்பவள்,
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்உன் சொல்லைப் புரிந்துகொள்ளாதவள், இளம்பருவத்தாள், அப்படிப்பட்டவளை
உள்ளல் கூடாது என்றோய் மற்றும்நினைக்கக்கூடாது என்கிற தோழனே! ஆனாலும்,
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி 5சிவந்த வேர்ப்பலாவின் பழங்கள் நிறைந்த கொல்லிமலையின்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டுதெய்வம் காக்கும் குற்றமற்ற உயர்ந்த உச்சிமலையில்
அம் வெள் அருவி குட வரை_அகத்துஅழகிய வெள்ளைநிறத்த அருவி உள்ள மேற்கு மலையின் அகத்தே
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்காற்று மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்இடி சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்    10பெரிய இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம்
மாயா இயற்கை பாவையின்கெடாத தன்மையுள்ள கொல்லிப்பாவை போல
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானேநீங்குவாள் அல்லள் அவள் என்னை நெஞ்சைவிட்டு –
  
# 202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 202 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
புலி பொர சிவந்த புலால் அம் செம் கோட்டுபுலியுடன் போரிட்டதால் சிவந்துபோன புலால் நாறும் அழகிய செம்மையான கொம்புகளில்
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்துஉண்டாயிருக்கும் பலவான முத்துக்கள் ஒலிக்க, வலிமை மிக்கு,
வன் சுவல் பராரை முருக்கி கன்றொடுகட்டாந்தரையான மேட்டுநிலத்தில் உள்ள பருத்த அடியினைக் கொண்ட வேங்கையை முறித்து, கன்றோடு
மட பிடி தழீஇய தட கை வேழம்தன் இளைய பெண்யானைத் தழுவிக்கொண்ட நீண்ட கைகளையுடைய ஆண்யானை,
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை       5தேனைச் செய்யும் பெரிய வண்டுக்கூட்டம் சிதறிப்பறந்தோட, வேங்கை மரத்தின்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்பொன்னைப் போன்ற பூங்கொத்துக்களைக் கவளங்களாகப் பேணி ஊட்டும் 
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வரபெரிய மலையின் பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டு மிக்க அழகாகத் தோன்றுவதைக்
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தைகாண்பாயாக! வாழ்க சிறுபெண்ணே! உன் தந்தைக்குரிய,
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள்கார்த்திகை மீன்களோடு கூடிய அறம்செய்வதற்கான முழுத்திங்கள் நாளில்
செல் சுடர் நெடும் கொடி போல      10வரிசையாகச் செல்லும் சுடர்களைக் கொண்ட நீண்ட கொடி போன்ற விளக்குகளைப் போல
பல் பூ கோங்கம் அணிந்த காடேபலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்கள் அழகுசெய்யும் காடு –
  
# 203 நெய்தல் உலோச்சனார்# 203 நெய்தல் உலோச்சனார்
  
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்முழங்குகின்ற கடலலைகள் கொழித்து உருவாக்கிய பெரிதான மணல்மேட்டில் உள்ள
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டுபெரிதான அடிப்பகுதியை உடைய தாழையின் முள்ளையுடைய நீண்ட தாள்களின்
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூஉள்மடலில் செழித்துத்தழைத்த மொட்டு முதிர்ந்த, தூய்மையான பொலிவுபெற்ற
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழைசங்கினை நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது,
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு  5ஓங்கி வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும்சிறிதளவு மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மைமணம் கமழ்கின்ற கடற்கடைச் சோலையில் ஒன்றிய நமது நட்பு
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாதுஒரு நாள் பிரிந்தாலும் உயிரோடிருப்பது அரிது என்று கருதாமல்,
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்கவிரைந்து வரும் ஓட்டத்தையுடைய குதிரை பூட்டிய தேரின் வரவை அங்கு தடுத்துநிறுத்துமாறு
செய்த தன் தப்பல் அன்றியும்      10செய்த தன் தவற்றோடு,
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரேஅவரைக் காணாத என் வருத்தத்திலும் சேர்ந்துகொள்கிறது இந்த இரக்கமுள்ள ஊர் –
  
# 204 குறிஞ்சி மள்ளனார்# 204 குறிஞ்சி மள்ளனார்
  
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தைதளிர்கள் சேர்ந்த குளிர்ச்சியுள்ள தழையுடையை அணிந்து உனது தந்தையின்
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோகிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா?
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரியபறித்த சுனைக் குவளை மலரைச் சூடி, நாம் முன்பு சேர்ந்திருந்த
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோநறிய குளிர்ந்த மலைச்சாரலில் ஆடுவதற்கு வரவா?
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண      5உன் இனிய மறுமொழியை விரும்பி வருந்திய என் மனம் மகிழுமாறு
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு எனகூறுவாயாக இனி, மடந்தையே! உன் கூர்மையான பற்களுக்கிடையே ஊறும் அமுதத்தை உண்பேன் என்று
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்துநான் உனக்குச் சொல்ல, அதற்குப் பதிலாக
தான் செய் குறி நிலை இனிய கூறிதான் ஏற்படுத்திய குறியிடத்துக்கு வந்து இனிய மொழிகளைக் கூறி,
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டுஆண்மானைப் பிரியும் இளைய பெண்மானைப் போல நீங்கி
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும்      10மிக்க மூங்கில் உயர்ந்து நிற்கும் தன் சிறுகுடிக்குப் புறப்பட்டுச் செல்லும்
கொடிச்சி செல் புறம் நோக்கிகொடிச்சியாகிய தலைவி செல்லுகின்ற முதுகினைப் பார்த்து
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதேஅவளைப் போகவிட்ட என் நெஞ்சம் அவளை நினைத்தலை விடாது.
  
# 205 பாலை இளநாகனார்# 205 பாலை இளநாகனார்
  
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துஅருவி ஆரவாரிக்கும் பெரிய மலைகளின் அடுக்குகளில்
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்ஆளியாகிய மிகவும் கொடிய விலங்கு வேட்டையாட எழுந்து, கொல்லவல்ல நகங்களையும்
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதிஅழகிய பொறிகளையுமுடைய புலியைக் கொன்ற, கூரிய நுனியையும்
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும்ஏந்திய வெண்மையான கொம்புகளையும் உடைய வலிமையான ஆண்யானையை இழுத்துச் செல்லும்
துன் அரும் கானம் என்னாய் நீயே   5நெருங்கமுடியாத காட்டுவழி என்று கருதாமல், நீ
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழியகுவளை மலர் போன்ற மையுண்ட கண்களையுடைய இவளை இங்கு விட்டுவிட்டு
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடுபொருளீட்டச் செல்வாயானால், இன்றோடே
போயின்று-கொல்லோ தானே படப்பைபோய்விடும், கொல்லையிலுள்ள
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
நீர் மலி கதழ் பெயல் தலைஇய       10மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினேஅழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே – 
  
# 206 குறிஞ்சி ஐயூர் முடவனார்# 206 குறிஞ்சி ஐயூர் முடவனார்
  
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சிமெல்லிய பஞ்சினைத் தலையிலே கொண்டு பிஞ்சுவிட்டிருக்கும் கதிர்கள் பால்பிடித்துத் தலைசாய்க்கக்
தோடு அலை கொண்டன ஏனல் என்றுகதிரை மூடிய தாள்கள் காற்றால் அசைகின்றன தினைப்பயிருக்கு என்று
துறு கல் மீமிசை குறுவன குழீஇகுத்துப்பாறையின் உச்சியில் கொத்துவதற்காகக் கூட்டங்கூடி
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய்சிவந்த வாயையுடைய பச்சைக்கிளிகள் கவர்ந்துகொண்டுபோகும் என்று அவ்விடத்தில்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என 5தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும்எமது தந்தை வந்து சொல்ல, எம் தாயும்
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி எனநல்ல நாளைக் காட்டும் வேங்கை மரமும் மலர்க இனி என்று கூறி
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழிஎன் முகத்தை நோக்கினாள், எதற்கோ தோழி!
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்தினைப்புனங்காக்க இவள் செல்வாள் என்றா? வீட்டுக்குள் இவளைப் பூட்டிவைக்கவேண்டும் என்றா?
கல் கெழு நாடன் கேண்மை   10மலை பொருந்திய நாட்டுக்காரனோடு உள்ள நமது உறவை
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானேஅறிந்துகொண்டாளோ? அதனை அறிந்திலேன் நான் –
  
# 207 நெய்தல்# 207 நெய்தல் ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
  
கண்டல் வேலி கழி சூழ் படப்பைகண்டல் மர வேலியைக் கொண்ட, கழி சூழ்ந்த தோட்டக்காலில்
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பைமுள்ளிச் செடியால் வேயப்பெற்ற குறுகலாய் இறங்கும் கூரையையுடைய குடில்களையுடைய,
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லெனநிறைய மீன்களைக் கொள்பவர்கள் வசிக்கும் பாக்கம் முழுதும் ஆரவாரிக்க,
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதேநெடிய தேரினைச் செய்துகொண்டு நம் காதலர் வருவது தடுக்கப்படமுடியாதது;
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி5மலை போலக் குவிந்துகிடக்கும் மணல் மேடுகளைக் கடந்து
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல்வந்த காதலர் வெறுங்கையாய்த் திரும்பத்தான் செய்வாரோ? (அவ்வாறாயின்) இரவில்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇஇளையரும் முதியரும் சுற்றத்தோடு கூடி
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின்கொல்ல வல்ல சுறா கிழித்துவிட்டதாக, சுருங்கிய மெல்லிய நார்களைக் கொண்டு
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள்வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்,
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால்    10வலையையும் தூண்டிலையும் எடுத்துக்கொண்டு, பெரிய காற்றினால்
திரை எழு பௌவம் முன்னியஅலைகள் எழுகின்ற பெருங்கடலுக்குச் செல்லும்
கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளேகொலைத் தொழிலையுடைய கொடிய சிறியவரிடம் அகப்பட்டுக்கொள்வாள்
  
# 208 பாலை நொச்சி நியமங்கிழார்# 208 பாலை நொச்சி நியமங்கிழார்
  
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மிவெற்றி பொருந்திய ஒளிரும் அணிகலன்கள் நெகிழும்படியாக விம்மி அழுது,
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்பஅரித்தோடும் நீராய் தெளிந்த கண்ணீர்த்துளிகள் முலைகளினிடையே விழுந்து நனைக்க,
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்துசற்றும் குறையாமல் மனமுருகி அழும் கண்ணுடனே பெரிதும் நிலைகெட்டு,
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள்எதற்காக வருந்தி வாடுகிறாய்? சுடர்விடும் நெற்றியையுடைய இளமங்கையே!
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும்     5உன்னைப் பிரிந்து செல்லமாட்டார் நம் காதலர்; அவ்வாறு சென்றாலும்
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர்பொறுத்துக்கொள்ளமாட்டர் பிரிவெனும் நோயை; மேலும் அவர்
கொன்னும் நம்பும்-குரையர் தாமேமிகவும் உன்மேல் விருப்பமுள்ளவர்தானே!
சிறந்த அன்பினர் சாயலும் உரியர்உன்மேல் சிறந்த அன்புகொண்டவர்; மென்மையானவர்;
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள்அவரைப் பிரிந்திருக்கும் நம்மைக்காட்டிலும் மிக வருந்தி, தேடிச் சென்ற அரும் பொருள்
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை10ஈட்டுவது முற்றுப்பெறாதாயினும் வந்துவிடுவார்; அதற்கு மேலும்
இன் துணை பிரிந்தோர் நாடிஇனிய துணையைப் பிரிந்தவரை நாடிச் சென்று
தருவது போலும் இ பெரு மழை குரலேஅவரை மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம்.
  
# 209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்# 209 குறிஞ்சி நொச்சி நியமங்கிழார்
  
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லைமலைப்பக்கத்தை விசாலமாக்கி உருவாக்கிய கொல்லையில்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்மழையால் ஈரப்பதம் பெற்ற காட்டை உழும் குறவர்
சில வித்து அகல இட்டு என பல விளைந்துகொஞ்சம் விதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக விதைக்க, பலபடியாக விளைந்து
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்கதிர் சாய்ந்து விளங்கும் தினைப்புனத்தில் உள்ளவளான
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் 5மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் பேச்சான இனிய குரலைக்
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கேகிளிகளும் தாம் அறியும்; எனக்கு அது
படும்_கால் பையுள் தீரும் படாஅதுசெவியிற்படும்போது காமநோய் தீரும்; அவ்வாறு படாமல்
தவிரும் காலை ஆயின் என்ஒழிந்திருக்கும் வேளை எனில் என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மேஉயிரோடு மற்ற எல்லாவற்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்.
  
# 210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார்# 210 மருதம் மிளைகிழான் நல்வேட்டனார்
  
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்அறுவடை செய்துமுடித்த அழகிய இடம் அகன்ற வயலில்
மறு கால் உழுத ஈர செறுவின்மீண்டும் சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில்,
வித்தொடு சென்ற வட்டி பற்பலவிதைநெல்லோடு சென்று, அந்தக் கூடையில் மிகுதியான
மீனொடு பெயரும் யாணர் ஊரமீனைப் பிடித்து எடுத்துக்கொண்டு திரும்பும் புதுவருவாயைக் கொண்ட ஊரினனே!
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்   5பெருமொழி பேசுவதும், விரைவாகத் தேர்களில் வலம்வருவதும்
செல்வம் அன்று தன் செய்_வினை பயனேசெல்வம் இல்லை; அது முன்செய்த நல்வினைப்பயன்;
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்சான்றோர் செல்வம் என்று கூறுவது, தம்மைச் சேர்ந்தோரின்
புன்கண் அஞ்சும் பண்பின்துயரை நினைத்து அச்சம்கொள்ளும் பண்பினைக்கொண்ட
மென் கள் செல்வம் செல்வம் என்பதுவேபரிவுள்ளமாகிய செல்வமே செல்வம் என்பது.
  
# 211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார்# 211 நெய்தல் கோட்டியூர் நல்லந்தையார்
  
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்யாரிடத்தில் வருந்தி உரைப்பேன் நான்! ஊர்ந்துவரும் கடல்நீர்
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில்பொங்கிப் பெருகி உள்ளே சென்ற உப்பினை உடைய வரப்புள்ள பாத்திகளையுடைய
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்தவளைந்த கழியின் பக்கத்தில் இரையை வேட்டையாட எழுந்த
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகியகரிய காலைக் கொண்ட குருகின் குத்துக்குத் தப்பி ஓடிய 
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை 5வளைந்த முதுகினைக் கொண்ட இறா மீனின் நீண்ட மீசையையுடைய ஆண்,
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டுமோதுகின்ற அலைகள் தொகுத்துச் சேர்த்த மணல் மேட்டின் நீண்ட கரையில்
துறு கடல் தலைய தோடு பொதி தாழைநெருங்கிய கடலின் புறத்தில் தலைவைத்துள்ள இலைகள் பொதிந்த தாழையின்
வண்டு படு வான் போது வெரூஉம்வண்டுகள் மொய்க்கும் வெள்ளையான பூவைக் கண்டு அஞ்சிநடுங்கும்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவேதுறை பொருந்திய கடற்கரைத்தலைவன் என்னைத் துறந்துசென்றான் என்று –
  
# 212 பாலை குடவாயில் கீரத்தனார்# 212 பாலை குடவாயில் கீரத்தனார்
  
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇபழக்கிய பறவைகளைக்கொண்டு வேடன் சிக்கவைக்க விரித்திருக்கும் வலையைக் கண்டு அஞ்சி
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளிநீண்ட கால்களையுடைய கணந்துள் பறவை தனித்துக் கத்தும் தெளிந்த அழைப்பு
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்பாலைவழியில் செல்லும் கூத்தர்கள் விரைவாக ஒலிக்கும்
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்யாழிசையோடு சேர்ந்து ஒலிக்கும் அரிய நெறியில்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர்5கடும் ஒலியையுடைய பம்பை எனும் பறையையும் சினங்கொண்ட நாய்களையும் கொண்ட வடுகரின்
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம் வயின்நீண்ட பெரிய குன்றுகளைக் கடந்து நம்மிடம்
வந்தனர் வாழி தோழி கையதைவந்துசேர்ந்தார், வாழ்க, தோழியே! நம் கையிலுள்ள
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன்செம் பொன்னாலான கழன்றுவிழும் தொடியைப் பார்த்து, சிறந்த மகன்
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்நம்மை அணைத்துக்கொண்டு அழுகிற இனிய குரலை கேட்கும்பொழுதெல்லாம்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே  10ஆசைகொள்ளுகிற மனத்தை உடையவராகிய நம்மிடத்து – 
  
# 213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்# 213 குறிஞ்சி கச்சிப்பேட்டு பெருந்தச்சனார்
  
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணிஅருவிகள் ஆரவாரிக்கும் பெரிய மலையை அடைந்து,
கன்று கால்யாத்த மன்ற பலவின்கன்றுகள் அடியில் கட்டப்பட்ட, மன்றத்தில் நிற்கும் பலாமரத்தின்
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம்வேரில் காய்த்துத் தொங்கும் கொழுத்த சுளைகளைக் கொண்ட பெரிய பழத்தை
குழவி சேதா மாந்தி அயலதுகன்றை ஈன்ற சிவந்த பசு தின்று, பக்கத்திலிருக்கும்
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும்   5மூங்கில்கள் நிறைந்த சிறிய மலையில் அரித்தோடிவரும் நீரைப் பருகும்
பெரும் கல் வேலி சிறுகுடி யாது எனபெரிய பாறைகளை வேலியாகக் கொண்ட உமது ஊர் யாது என்று
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனகேட்கவும் சொல்லமாட்டீர்; அதில்லையென்றால் கல்லென்ற ஓசையுடன்
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்தமுகில்கள் திரண்டு சேர்ந்து பெரிய மழை வீழ்ந்ததாக, தழைத்தெழுந்த
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினைசிவந்த நிறம் கொண்ட செழுமையான கதிர்களைக் கொண்ட சிறுதினையைக்
கொய் புனம் காவலும் நுமதோ10கொய்கின்ற கொல்லைக்காட்டுக் காவலும் உங்களுடையதோ?
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரேஉயர்ந்து ஏந்திய அல்குலையும் நீண்ட தோளினையும் உடைய மங்கையரே!
  
# 214 பாலை கருவூர் கோசனார்# 214 பாலை கருவூர் கோசனார்
  
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்புகழும், இன்பமும், கொடையும் ஆகிய இம் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் எனசோம்பி இருப்போர்க்கு அரிதாகவே கிட்டுதலைச் செய்யும் என்று
வினை_வயின் பிரிந்த வேறுபடு கொள்கைபொருளீட்டும்பொருட்டுப் பிரிந்து சென்ற நம்மிடம் வேறுபட்ட கொள்கையுடனே,
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது“அரும்புகள் அவிழ்ந்து மலராகிச் சுரும்புகள் தேனைப் பருகும் பலவான மலர்களை
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என  5சூடுவதற்கு வருவேன் உன் நீலமணி போன்ற கரிய கூந்தலில்” என்று
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறிகுறைவற்ற சூளுரைகளை என் மனம் கொள்ளுமாறு கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்துமுகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்வருமானத்திற்காகச் சென்ற குறைகள் அற்ற நம் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோளகேட்கமாட்டாரோ தோழி? தோளிலிருக்கும்
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி  10ஒளிரும் வளைகள் நெகிழ்ந்துபோகுமாறு செய்த கலங்கிய துன்பத்தை எள்ளி
நகுவது போல மின்னிநகையாடுவதுபோல மின்னி
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலேஆர்ப்பரிப்பது போன்ற இந்தக் கார்காலத்து மழையின் இடிக்குரலை –
  
# 215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார்# 215 நெய்தல் மதுரை சுள்ளம் போதனார்
  
குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பிகிழக்குக் கடற்பரப்பில் ஊர்ந்து, நிறமுள்ள கதிர்களைப் பரப்பி,
பகல்_கெழு_செல்வன் குட மலை மறையபகல்பொழுதைச் செய்த ஞாயிறு மேற்குமலையில் மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலைதனிமைத்துயர் வந்து தங்கிய துன்பமிக்க மாலைப் பொழுதை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயரஒளிரும் வளையணிந்த மகளிர் அகன்ற நகர்களில் தொழுது வணங்க,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர்   5மீனின் கொழுப்பைச் சேர்த்து உருக்கிய ஊனாகிய நெய்யால் எரியும் ஒள்ளிய விளக்கொளியை
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்பநீல நிறப் பரப்பில் அலையாடும் திரைகள் எற்றித்தள்ள,
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்துகரையை ஒட்டி இருக்கும் கல்லென்ற ஒலிமிக்க பாக்கத்தில்
இன்று நீ இவணை ஆகி எம்மொடுஇன்று நீ இங்கே இருந்தவனாகி எம்மோடு
தங்கின் எவனோ தெய்ய செம் கோல்தங்கினால் என்ன? செம்மையான கோலோடு பிணித்த
கொடு முடி அம் வலை பரிய போகிய    10வளைவான முடிகளையுடைய அழகிய வலை கிழியும்படி போன
கோள் சுறா குறித்த முன்பொடுகொலைவல்ல சுறாவை விரட்டிக்கொண்டு செல்லும் வலிமையுடன்,
வேட்டம் வாயாது எமர் வாரலரேதாம் மேற்கொண்ட வேட்டை வாய்க்காமல் எம் சுற்றத்தார் திரும்ப வரமாட்டார்.
  
# 216 மருதம் மதுரை மருதன் இளநாகனார்# 216 மருதம் மதுரை மருதன் இளநாகனார்
  
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்ஊடலைப் போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும்,
இனிதே காணுநர் காண்பு_உழி வாழ்தல்இனியதே, காணவேண்டியவரைக் கண்டவாறு வாழ்தல்;
கண் உறு விழுமம் கை போல் உதவிகண் பெற்ற துன்பத்தைக் கை போலச் சென்று உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்நாம் படுகின்ற துயரத்தைக் களையாராயினும்,
இன்னாது அன்றே அவர் இல் ஊரே      5இனிமை இல்லாதது அவர் இல்லாத ஊர்;
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்தீக்கொழுந்து போன்ற பூக்களைக் கொண்ட வேங்கை மரத்தில் உறையும் கடவுள் காக்கும்,
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் காவல்பரணின் மேல்
ஏதிலாளன் கவலை கவற்றஅயலான் ஒருவன் ஏற்படுத்திய கவலை உள்ளத்தை வருத்த,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக்
கேட்டோர் அனையர் ஆயினும் 10கேட்டவர்கள் அத் தன்மையராக ஆயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரேநாம் விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர்.
  
# 217 குறிஞ்சி கபிலர்# 217 குறிஞ்சி கபிலர்
  
இசை பட வாழ்பவர் செல்வம் போலபுகழ்பட வாழ்பவரின் செல்வம் பொலிவுற்று விளங்குவது போல,
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்காணுந்தோறும் பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலதுகரிய நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும்
கரும் கால் வேங்கை ஊறுபட மறலிகரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு முறித்துத்தள்ளி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்5தன்னுடைய பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன்,
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்துமிகப்பெரிதும் இனியவனாயினும், நம்மைவிட்டுச் சென்ற துயரம் மேற்கொண்டு
ஊடல் உறுவேன் தோழி நீடுஊடல் கொள்வேன் தோழி! நெடுநாளைய
புலம்பு சேண் அகல நீக்கிதனிமைத் துயரத்தை வெகுதொலைவுக்கு அகன்று போகச் செய்து,
புலவி உணர்த்தல் வன்மையானேஎன் மனப்பிணக்கைப் போக்கப் பணிவுடன் உணர்த்தும் திறன்கொண்டவன் அவன் என்பதால் –
  
# 218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார்# 218 நெய்தல் காவிதி கீரங்கண்ணனார்
  
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றேஞாயிறு மேற்கு அடிவானத்தில் தொங்கியவாறு தன் கதிர்கள் மழுங்கிப்போயிற்று;
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றேஇரவும் பூ வாடிய கொடியைப் போல ஞாயிற்றை இழந்து தனிமைத் துயரடைந்தது;
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்வௌவாலும் இடங்கள்தோறும் பறந்து திரியலாயின; ஆந்தைச் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும்மகிழ்ச்சி மிகப்பெற்று, தனது பேடை நகுவதுபோல கூவுந்தோறும் அதனை அழைக்கும்;
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்  5குறையாத காதலோடு முறைமையுடன் நம்மைத் தேற்றிய காதலர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரியகூறிய பருவமும் கழிந்துகொண்டிருக்கிறது; நிழல் நீண்டு பரவிய
பராரை வேம்பின் படு சினை இருந்தபருத்த அடியினைக் கொண்ட வேம்பின் பெரிய கிளைகளிருந்த
குராஅல் கூகையும் இராஅ இசைக்கும்கபில நிறங்கொண்ட கூகையும் இரவில் ஒலியெழுப்பும்;
ஆனா நோய் அட வருந்தி இன்னும்குன்றாத காதல் நோய் வருத்துவதால் வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென்-கொல்லோ       10தனித்திருக்கும் நான் கேட்பேனோ?
பரியரை பெண்ணை அன்றில் குரலேபருத்த அடியைக் கொண்ட பனைமரத்திலிருந்து கூவும் அன்றிலின் குரலை –
  
# 219 நெய்தல் தாயங்கண்ணனார்# 219 நெய்தல் தாயங்கண்ணனார்
  
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்கண்ணும் தோளும் குளிர்ந்த மணம்வீசும் கூந்தலும்
பழ நலம் இழந்து பசலை பாயதம்முடைய பழைய நலத்தை இழந்து நிறம் மங்கி வெளுத்துப்போக,
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்இனிய உயிர் பிரிந்துபோவதாயினும், எவ்வளவேனும்
புலவேன் வாழி தோழி சிறு கால்பிணக்குக்கொள்ளமாட்டேன் வாழ்க தோழி! சிறிய காலையுடைய
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல்     5நண்டுகளை இழுத்துக்கொண்டு செல்லும் புலால் நாறும் அலைகளைக் கொண்ட பெரிய கடலில்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர்நிறைய மீன்களைப் பிடிக்கும், சிறுகுடியைச் சேர்ந்த பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்இரவில் தம் படகில் ஏற்றித்தூக்கிவைத்த செறிவான கதிர்களைக் கொண்ட ஒள்ளிய விளக்குகள்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்இளம் ஞாயிற்றின், கடலில் பட்டு எதிர்வரும் ஒளியைப் போல் தோன்றும்
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்கடற்கரைச் சோலையையும் பெரிய கடல் துறையையும் உடைய தலைவனான நம் காதலன்
தானே யானே புணர்ந்த மாறே 10தனியனாய் வந்து என்னைச் சேர்ந்துகொண்டதனால் – 
  
# 220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார்# 220 குறிஞ்சி குண்டுகட்பாலியாதனார்
  
சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇசிறிய மணிகளைத் தொடுத்துத் தொங்கவிட்டு, பெரிய கச்சினைச் சுற்றிக்கட்டி,
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடிகுறியதாக முகிழ்ந்திருக்கும் எருக்கம்பூவினால் தலைமாலை சூடிக்கொண்டு,
உண்ணா நன் மா பண்ணி எம்முடன்உண்ணாத நல்ல (பனைமடல்)குதிரையைச் செய்து அதில் ஊர்ந்து வர, எம்மோடு
மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள்தெருக்களில் சேர்ந்து திரியும் சிறிய பிள்ளைகள்
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி5மிக்க சான்றோராவர், நிச்சயமாக; இழுத்து இறுக்கக் கட்டப்பட்ட
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்குடமுழவின் முகப்பு புலர்ந்துபோகாமல் எந்நேரமும் முழங்கும் விழாவுடைய ஊரில்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்இந்த ஊரினர் என்று சொல்லிப் பெருமகிழ்ச்சி கொள்ளும் இச்சிறுவர்கள்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழிதாமே உலகநடப்பினைத் தெரிந்திருந்ததால், இனிக்கும் சொற்களையும்,
கயல் ஏர் உண்கண் குறு_மகட்குகயல் போன்ற அழகுடைய மையுண்ட கண்ணும் உடைய இளைய மகளாகிய தலைவிக்கு
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே  10(இத் தோழிகள்) அயலோராவர் என்ற எம் கருத்தோடு ஒத்துப்போவதால் –
  
# 221 முல்லை இடைக்காடனார்# 221 முல்லை இடைக்காடனார்
  
மணி கண்டு அன்ன மா நிற கருவிளைநீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணியஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்பொற்காசுகளைத் தொங்கவிட்டாற்போன்ற அழகுள்ள நல்ல மலராகிய
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்ககொன்றையின் ஒள்ளிய பூங்கொத்துக்கள் கிளைகள்தோறும் தொங்க,
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில்    5ஒரு புதிய மணத்தைப் பரப்பிவிட்டாற்போன்ற சிவந்த தரையையுடைய முல்லை நிலத்தில்
நீர் அணி பெரு வழி நீள் இடை போழநீரால் மூடப்பெற்ற பெருவழியின் நீண்ட இடைவெளி பிளவுபட
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர்செல்வாயாக பாகனே! உனது வேலைப்பாடு சிறப்பாக அமைந்த நெடிய தேரில்;
விருந்து விருப்பு_உறூஉம் பெரும் தோள் குறு_மகள்விருந்தோம்பலில் விருப்பமுள்ள பெரிய தோளையுடைய இளமகளான தலைவி,
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்கமின்னலைப் போன்று ஒளிர்ந்து பளபளக்கும் அணிகலன்கள் நல்ல மாளிகையைச் சிறப்புறச் செய்ய
நடை நாள் செய்த நவிலா சீறடி      10நடத்தலைப் புதிதாகச் செய்து இன்னும் பழகாத சிறிய அடிகளையும்,
பூ கண் புதல்வன் உறங்கு_வயின் ஒல்கிபூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து,
வந்தீக எந்தை என்னும்“வருவாய், என் அப்பனே!” என்று கூறும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமேஅந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம் –
  
# 222 குறிஞ்சி கபிலர்# 222 குறிஞ்சி கபிலர்
  
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினைகருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில்,
வடு கொள பிணித்த விடு புரி முரற்சிதழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய
கை புனை சிறு நெறி வாங்கி பையெனகையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்றுவிசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி      5பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
செலவுடன் விடுகோ தோழி பல உடன்உயரே செல்ல விடுக்கிறேன் தோழி! பலவான
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்வாழை மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாதுதூங்கும் தன் பெண்யானையின் பக்கத்தில் மேகம் சூழ்ந்திருக்க, அதனைக் காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை அவர்பெரும் களிறு பிளிறும் சோலையுள்ள தலைவனின்
சேண் நெடும் குன்றம் காணிய நீயே  10தொலைவிலிருக்கும் உயர்ந்த குன்றினை நீ காண்பதற்காக – 
  
# 223 நெய்தல் உலோச்சனார்# 223 நெய்தல் உலோச்சனார்
  
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்இவள் தன் காதற்பெருக்கால் களவுக்காலமல்லாத காலை என்றும் நினைக்கமாட்டாள், உன்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டிஅன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்இத்தன்மையராக இருத்தல் இனிதே! எனினும் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்       5ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகி அரிய கட்டுக்காவலுக்குட்படுத்தப்படுவாள்; அதனால்
எல்லி வம்மோ மெல்லம்புலம்பஇரவானபின் வருவாயாக, மென்புலமான நெய்தல்நிலத் தலைவனே!
சுறவு_இனம் கலித்த நிறை இரும் பரப்பின்சுறாமீன்கள் கலித்துப்பெருகிய நிறைவான பெரிய கடற்பரப்பின்
துறையினும் துஞ்சா கண்ணர்துறையினிடத்தும் உறங்காத விழியினரான
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரேபெண்களையும் கொண்டது இந்தப் பழிதூற்றும் ஊர்.
  
# 224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ# 224 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலைநம்மிடம் அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர்; ஆனால் அதற்கு மேலும்
பின்பனி அமையம் வரும் என முன்பனிபின்பனிக் காலம் வரப்போகிறது என்று முன்பனிக்காலத்தில்
கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவேதளிர்களை முதலில் விட்டு, குராமரங்கள் அரும்புவிடுகின்றனவே!
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை“சேர்ந்திருப்போர் சேர்ந்தே இருப்பீர்” என்பது போல, பூங்கொத்துகளின் மேலிருந்து
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும்     5சிவந்த கண்களையுடைய கரிய குயில்கள் மாறிமாறிக் குரல் கொடுக்கும்
இன்ப வேனிலும் வந்தன்று நம்_வயின்இன்பமான இளவேனிலும் வந்தது; நம்மிடம்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்துபிரியமாட்டோம் என்று தெளிவாகக் கூறியவரிடம்
இனி எவன் மொழிகோ யானே கயன் அறஇனி என்ன சொல்லுவேன் நான்? குளங்கள் வற்றிப்போக,
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறிஇடமெல்லாம் அழிந்து காய்ந்துபோன பல மரங்களையுடைய நீண்ட வழியில்
வில் மூசு கவலை விலங்கிய 10வில்லேந்தியவர்கள் மொய்த்துக்கிடக்கும் பல கிளை வழிகள் குறுக்கிட்டுக் கிடக்கும்
வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கேகொடிய முனையையுடைய செல்வதற்கரிய பாதையில் செல்ல முற்பட்டவருக்கு –
  
# 225 குறிஞ்சி கபிலர்# 225 குறிஞ்சி கபிலர்
  
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கிமுருகனைப் போன்ற வலிமையோடு கடும் சினத்தைப் பெருக்கிக்கொண்டு
பொருத யானை வெண் கோடு கடுப்பபோரிட்ட யானையின் வெண்மையான கொம்பினைப் போல
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகைவாழை மரம் ஈன்ற கூர்மையாக ஏந்திநிற்கும் கொழுத்த மொட்டு,
மெல் இயல் மகளிர் ஓதி அன்னமென்மையான இயல்புகொண்ட மகளிரின் கூந்தலின் கொண்டை முடிப்பு போன்று
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை5முகையை ஒட்டிய பூவுடன் மேலும்கீழும் அசையும் பெரிய மலைநாட்டைச் சேந்தவனை
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழைஇரந்து வேண்டுவோர் யாரும் உண்டோ? தோழி! திருத்தமான அணிகலன்களைக்கொண்டு,
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பதொய்யில் குழம்பால் தீட்டப்பட்ட அழகிய முலைகள் தம் மீது வரைந்த வனப்பை இழக்க,
பயந்து எழு பருவரல் தீரபசலை பாய்ந்து எழுகின்ற துன்பம் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பேகாதலித்தோர்க்கு உதவாத அவனது அன்பில்லாத மார்பினை –
  
# 226 பாலை கணி புன்குன்றனார்# 226 பாலை கணி புன்குன்றனார்
  
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெடதம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை; நாட்டின் வளம் குன்றிப்போக
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்_நுதல்மக்களிடமிருந்து வரிப்பணம் வாங்கமாட்டார் மன்னர்; நல்ல நெற்றியையுடையவளே!
நாம் தம் உண்மையின் உளமே அதனால்நாம் அவர் இருப்பதால் உயிருடன் இருக்கிறோம்; அதனால்
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து      5தாம் ஈட்டும் பொருளுக்கு ஓர் எல்லையையும் அறியார்; தாமே அதில் நாட்டங்கொண்டு
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழியவெயிலின் வெப்பம் நிலைகொண்டிருக்க, நீண்டுசெல்லும் நெறி பின்னே ஒழிய,
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்சென்றுவிட்டார் நம் காதலர்; என்றுமே
இன்ன நிலைமைத்து என்பபொருளின்மீது கொள்ளும் நாட்டம் இப்படிப்பட்ட தன்மையது என்பார்கள்;
என்னோரும் அறிப இ உலகத்தானேஇதனை எல்லோருமே அறிவார்கள் இந்த உலகத்தில் –
  
# 227 நெய்தல் தேவனார்# 227 நெய்தல் தேவனார்
  
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்தநாலும் தெரிந்தவர்கள் எல்லாரும் நம்மை நல்வழி நடப்பவர் அல்லர் என்பதனால், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதேஇனிய உயிர் பழிச்சொற்களால் பிரிந்தாலும் அது மிகவும் இன்னாதது;
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்தபுன்னை மரத்தின் அழகிய கடற்கரைச் சோலையில் உன்னைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோபின்னலையுடைய நெய்ப்பதமிக்க கூந்தலையுடைய என் தோழி, பாவம்!
படு மணி யானை பசும் பூண் சோழர்   5ஒலிக்கின்ற மணிகளைக் கொண்ட யானையையுடைய பசிய பூண்களைக் கொண்ட சோழரின்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்கொடிகள் உயரத்தே மடங்கி ஆடும் தெருமுனைகளுள்ள ஆர்க்காடு என்னும் ஊரில்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவாகள்ளையுடைய குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத,
தேர் வழங்கு தெருவின் அன்னதேர்கள் ஓடும் தெருவைப் போல,
கௌவை ஆகின்றது ஐய நின் அருளேஊராரின் பழிச்சொல்லாய் எழுகின்றது, ஐயனே, உன் அருள் – 
  
# 228 குறிஞ்சி முடத்திருமாறனார்# 228 குறிஞ்சி முடத்திருமாறனார்
  
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபுஎன்னவென்று சொல்லப்படுமோ? தோழி! மின்னல் பிளக்க,
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீரமுழங்கும் இடியையுடைய சூல்கொண்ட மேகம், தன் முதிர்ந்த கடன் தீரும்படியாக
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்கண்கள் தூர்ந்துபோகுமாறு பரந்த, மிக்க இருள் பரவிய நள்ளிரவில்
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்துபண்பற்ற அரிய வழியில் வருகின்ற நம்மிடம்
அருளான்-கொல்லோ தானே கானவன்      5இரக்கம் கொள்ளமாட்டானோ அவன்? வேட்டுவனின்
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்முதுகைப் போன்ற பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇமிரட்சியூட்டும் வில்லானது எறிகின்ற அம்பினை அஞ்சி
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும்ஆழ்ந்துபட மலைப்பிளவுகளில் பிளிறும்,
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனேகுதித்து விழும் அருவியைக் கொண்ட மலைக்கு உரிமையாளன்.
  
# 229 பாலை# 229 பாலை இளங்கண்ணனார்
  
சேறும் சேறும் என்றலின் பல புலந்து“செல்வோம், செல்வோம்” என்று சொல்வதால் பலவாறாகப் பிணக்குண்டு பேசிச்
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே“செல்லுங்கள்” என்று சொல்வதற்கு அஞ்சுவேன்;
செல்லாதீம் என செப்பின் பல்லோர்செல்லாதீர் என்று சொன்னால், பலரும்
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலேஉம்மை நோக்கி வீசும் புன்மையான சொற்களை நினைத்து அஞ்சுவேன்;
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு     5அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்துஅவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்; நள்ளிரவில்
இழை அணி ஆகம் வடு கொள முயங்கிஅணிகலன்கள் அணிந்த மார்பில் தழும்பு உண்டாகுமாறு தழுவிப்
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியேபக்கத்திலேயே இருப்பவராய் இருந்தாலும் “பிரிவாரே” என்று இவள் நடுங்குவாள்; தனித்திருந்து
குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணெனவாட்டமுறுமாறு, இடமெங்கணும் செறிவாய்க்கூடி, குளிரும்படியாக
ஆடிய இள மழை பின்றை      10அசைந்துவரும் இலேசான மழைக்குப் பின்னால்
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவேவாடைக்காற்றும் கண்டீரன்றோ வந்து நிற்பதை – 
  
# 230 மருதம் ஆலங்குடி வங்கனார்# 230 மருதம் ஆலங்குடி வங்கனார்
  
முய பிடி செவியின் அன்ன பாசடைநெருக்கமாய்க்கிடக்கும், பெண்யானையின் காதைப் போன்ற பசிய இலைகளையும்,
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகைகுளத்தில் கூட்டமாய் நிற்கும் கொக்குகளைப் போன்ற குவிந்த மொட்டுக்களையும்
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போதுதிரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்கிழக்கில் தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும்
கயல் கணம் கலித்த பொய்கை ஊர      5மீன்கூட்டம் கலித்துப்பெருகிய பொய்கை உள்ள ஊரினனே!
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய்உன்மேல் கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்!
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்கமிகுந்த தனிமைத் துயரம் வாட்டிய பேரளவு என்னைவிட்டு நீங்க,
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணெனபுதிதாய் வற்றிக்காய்ந்த வயலுக்குள், மிகவும் குளிர்ச்சியுண்டாக
மலி புனல் பரத்தந்து ஆஅங்குமிகுந்த புனல் பாய்ந்து பரவினாற்போன்று
இனிதே தெய்ய நின் காணும்_காலே    10இன்பமாகவே இருக்கின்றது உன்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் – 
  
# 231 நெய்தல் இளநாகனார்# 231 நெய்தல் இளநாகனார்
  
மை அற விளங்கிய மணி நிற விசும்பில்மேகங்கள் சிறிதுமில்லாமல் விளங்கிய நீலமணி நிறத்ததான விசும்பில்
கைதொழும் மரபின் எழு மீன் போலவணங்கக்கூடிய மரபினதான ஏழு மீன்களான சப்தரிஷிமண்டலம் போல
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோயபெரிய கடற் பரப்பில் தமது அகன்ற முதுகு நனையுமாறு
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்சிறிய வெண்ணிறக் கடற்காக்கைகள் பலவும் சேர்ந்து நீராடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும்       5கடற்கரைத் துறை தனிமைத்துயரத்தை உடையது, தோழி! இதன் முன்னேயும்
உள்ளூர் குரீஇ கரு உடைத்து அன்னஊருள் வாழும் குருவியின் முட்டை உடைந்தது போல
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னைபெரிய மொட்டு மலர்ந்த கரிய அடியைக் கொண்ட புன்னைமரங்களைக் கொண்ட
கானல் அம் கொண்கன் தந்தகடற்கரைச் சோலையில் நம் தலைவன் தந்த
காதல் நம்மொடு நீங்கா மாறேகாதலானது நம்மிடமிருந்து நீங்காமையினால் – 
  
# 232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார்# 232 குறிஞ்சி முதுவெங்கண்ணனார்
  
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம்சிறிய கண்களைக் கொண்ட யானையின், பெரிய கையால் உறிஞ்சி இழுக்கும் கூட்டம்
குளவி தண் கயம் குழைய தீண்டிகாட்டு மல்லிகை உள்ள குளிர்ந்த குளம் கலங்குமாறு அடித்து,
சோலை வாழை முணைஇ அயலதுசோலையிலுள்ள வாழையை வெறுத்து, பக்கத்திலிருக்கும்
வேரல் வேலி சிறுகுடி அலறசிறுமூங்கிலை வேலியாக உடைய சிறுகுடியினர் அலறும்படி,
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும்     5செவ்விய அடிமரத்தையுடைய பலாமரத்தின் இனிய பழத்தைச் சுவைத்து உண்ணும்
மா மலை நாட காமம் நல்கு எனபெரிய மலை நாட்டினனே! உன் காதலைத் தருவாயாக என்று
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கைவேண்டுகிறேன், வாழ்க நீ! எம் தந்தையின், வேங்கையின்
வீ உக வரிந்த முன்றில்மலர்கள் உதிரும்படி வரிக்கப்பட்ட முற்றம் உள்ள
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினேபாறைகள் நிறைந்த எமது ஊரில் தங்கிச் சென்றால் – 
  
# 233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார்# 233 குறிஞ்சி அஞ்சில் ஆந்தையார்
  
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்றுதன் குடும்பத்தைப் பேணுவதைக் கல்லாத ஆண்குரங்கு நடுங்குமாறு, தன் முள் போன்ற பற்களைக் காட்டி
மட மா மந்தி மாணா வன் பறழ்இளமையுடைய பெரிய பெண்குரங்கு, வளர்ச்சியுறாத தன் வலிய குட்டியோடு
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்உச்சி உயர்ந்த மலைப்பக்கத்தில் அசைவாடித்திரியும் மேகத்தில் தன்னை ஒளித்துக்கொள்ளும்
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்பெரிய மலைநாடனாகிய தலைமகன் மேல் அன்புடையவளாயின்,
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று 5இனி அவ்வாறு நிச்சயமாகக் கொள்ளவேண்டாம்; சிறந்த ஒன்றைக்
கூறுவென் வாழி தோழி முன் உறகூறுவேன், வாழ்க, தோழியே! இனி அவன் உன் முன்னால் நிற்கும்போது
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்திஉன் அன்புடைய நெஞ்சத்தில் இருக்கும் காதலை மறைத்து,
ஆன்றோர் செல் நெறி வழாஅஆன்றோர் செல்லும் வழியில் வழுவாது
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமேசான்றோனாக அவன் இருத்தலை நன்கு அறிந்து தெளிந்துகொள்வாயாக.
  
# 234 குறிஞ்சி# 234 குறிஞ்சி இறையனார் அகப்பொருள் 28 ஆம் சூத்திர உரை
  
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமதுதலைவனுக்காகப் பெண்கேட்டு வந்தோரின் வழிநடை வருத்தத்தையும், உமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கிவானத்தைத் தொடுவதுபோன்ற குலப்பெருமையையும் நினைத்துப்பார்த்து,
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்அழகிய மணிகளைத் தேய்த்து அடித்துக்கொண்டு செல்லும் இவரின் குன்றத்தின் பெருமையைக் கொண்டு,
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றேவளர்கின்ற முலைகளையுடைய மார்பினையுடையவளை வழங்கினால் நல்லது;
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு    5அதைவிட்டு, இவர் கொண்டுவந்த பரிசப்பொருள்களை எண்ணுவீராகில், பகைவரின் வெண்கொற்றக்குடையோடு
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின்
பங்குனி விழவின் உறந்தையொடுபங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு
உள்ளி_விழவின் வஞ்சியும் சிறிதேஉள்ளி விழாக் காலத்து வஞ்சியும் மிகவும் சிறியதே.
  
# 235 நெய்தல்# 235 நெய்தல் வெள்ளிவீதியார்
  
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்வலிமையான அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும்,
அரவு வாள் வாய முள் இலை தாழைஅரத்தின் வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்பொன் போன்ற பூந்தாதுக்களையுடைய புன்னையோடு சேர்ந்து மணம்வீசும்
பல் பூ கானல் பகற்குறி வந்து நம்பலவான பூக்கள் உள்ள கடற்கரைச் சோலையே பகலில்சந்திக்கும் இடமாக வந்து, நமது
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்    5உடம்பின் அழகைச் சிதைத்துவிட்டுச் சென்றானாயினும்
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிகுன்றைப் போல உயரமாகத் தோன்றும் குவியலான மணல்மேட்டில் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழிபார்த்துவிட்டு வரலாம், போகலாமா தோழி! 
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊதகுளிர்ந்த மாலை அணிந்த மார்பினில் வண்டுகள் ஒலிப்புடன் தேனருந்த
படு மணி கலி_மா கடைஇஒலிக்கும் மணிகளையுடைய குதிரைகளைச் செலுத்தியபடி
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே  10நெடிய நீரையுடைய நெய்தல்நிலத் தலைவன் மணமுடிக்க வருகின்ற வழியை –
  
# 236 குறிஞ்சி நம்பி குட்டுவன்# 236 குறிஞ்சி நம்பி குட்டுவன்
  
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றேநெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது;
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையெனவிரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, “மெல்ல
முன்றில் கொளினே நந்துவள் பெரிது எனமுற்றத்தில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்” என்று
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு 5உள்ளிருப்போரை வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு
உரை இனி வாழி தோழி புரை இல்உரைப்பாயாக இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்துநுண்ணிய நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணெனமிகப்பெரிய உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன்
வியல் அறை மூழ்கிய வளி என்நம் மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது
பயலை ஆகம் தீண்டிய சிறிதே10பசலை பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும் –
  
# 237 பாலை காரிக்கண்ணனார்# 237 பாலை காரிக்கண்ணனார்
  
நனி மிக பசந்து தோளும் சாஅய்மிகவும் அதிகமாகப் பசந்து தோளும் மெலிந்துவிட்டன;
பனி மலி கண்ணும் பண்டு போலாநீர் நிறைந்து கண்ணும் முன்பு போல் இல்லை;
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர்இனிய உயிர் போன்ற பிரிவதற்கு அரிய காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவிநம்மை விட்டுப் பிரிந்து நெடுந்தொலைவு சென்றனர் என்ற பிணக்கம்
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை       5உள்ளத்தில் கொண்டு அவரிடத்தில் ஊடல்கொள்ளுதலும் இல்லையோ? பெண்ணே!
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடைஅதோ அங்கு பார்! தோன்றுகிறதே உயர்ந்து – வியப்பூட்டும்
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன்இரவலர்கள் வரும்வரை, அண்டிரன் என்போன்
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போலஅவர்களுக்குக் கொடை கொடுப்பதற்காகச் சேர்த்துவைத்த யானைகள் போல
உலகம் உவப்ப ஓது அரும்உலகம் மகிழ்ச்சியுற, சொல்லுதற்கரிய
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே 10வெவ்வேறான பற்பல உருவங்களில் எழுகின்ற மேகக்கூட்டங்கள் –
  
# 238 முல்லை கந்தரத்தனார்# 238 முல்லை கந்தரத்தனார்
  
வறம் கொல வீந்த கானத்து குறும் பூகோடை வாட்டுவதால் பட்டுப்போன காட்டில், சிறிதளவு பூவேயுள்ள
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்பமாலையை அணிந்த மகளிர் கூடிநிற்கும் கூட்டத்தைப் போல,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்
மாலை அந்தி மால் அதர் நண்ணியஅந்தி மாலையில் நான் காமநோய் கொள்ளுமாறு
பருவம் செய்த கருவி மா மழை       5கார்ப்பருவத்தைத் தோற்றுவித்த கூட்டமான கார்மேகமே!
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல்“அவர் நிலை அறிவாயோ இங்கு” என்று வருதல்
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன்உயர்ந்தவருக்கு ஒத்தது ஆகாது அன்றோ? மயங்கி ஒன்று சேர்ந்து
உர உரும் உரறும் நீரின் பரந்தவலிய இடி முழங்கும் இயல்பினால், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்டபாம்புகளின் படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும், மாட்சிமைப் பண்புடைய
கனியா நெஞ்சத்தானும்     10தலைவரின் நெஞ்சம் கனிந்துபோகாததினாலும்
இனிய அல்ல நின் இடி நவில் குரலேஇனிமையானது அல்ல உனது இடிமுழக்கம் எழுப்பும் குரல்.
  
# 239 நெய்தல் குன்றியனார்# 239 நெய்தல் குன்றியனார்
  
ஞான்ற ஞாயிறு குட மலை மறையமேலை அடிவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஞாயிறு மேற்கு மலையில் சென்று மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்இருள் மயங்கிய மாலையில் கள்குடித்து மகிழ்ந்த மீனவர்கள்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறிபகலில் எளிதாகப் பிடித்த நிறைய மீன்களை எளியவிலைக்கு விற்று,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்நண்டுகள் ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முற்றத்தையுடைய
காமர் சிறுகுடி செல் நெறி வழியின்5கண்டோர் விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில்
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல்அழகான மணிகள் கொண்ட பொதியை அவிழ்த்துவிட்டாற்போன்ற, நெய்தலின்
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும்புல்லிய புறஇதழ்கள் மூடிக்கொண்டிருக்கும் பூக்கள் கெட்டுப்போகுமாறு மிதித்துச் செல்லும்
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்குவளம் மிக்க கரிய கழிகளில் நிறைந்த நீரையுடைய நெய்தல்நிலத் தலைவனுக்கு,
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கைஅவனது மனமொத்தவராய் அவன் சொற்படி கேட்டோம் இல்லை; முன்கையில்
வார் கோல் எல் வளை உடைய வாங்கி   10நீண்ட திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத்
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்தழுவினாய் என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினேஎன்னத்திற்கு ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால்.
  
# 240 பாலை நப்பாலத்தனார்# 240 பாலை நப்பாலத்தனார்
  
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனேமெதுவாக நடந்து செல்லட்டும், இந்த உலகைப் படைத்தவன் –
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள்கூர்மையான அழகுபொருந்திய வெண்மையான பற்களையும் ஒளிகொண்ட நெற்றியையும் உடைய இளையவளே!
கை கவர் முயக்கம் மெய் உற திருகிநம் காதலர் தம் கைகளால் வளைத்துத் தழுவுவது உடம்போடு பொருந்துவதை விரும்பாமல்விட,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்அதனால் ஏங்குகின்ற பெருமூச்சோடு பொருந்திய பருத்த கொங்கையை உடைய எனது மார்பு
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்     5தனித்துக்கிடந்து துயில் கொள்ளாது வருந்தும் தன்மையதாயினும்,
வெயில் வெய்து_உற்ற பரல் அவல் ஒதுக்கில்வெயிலால் வெப்பமுற்ற பரல் மிக்க பள்ளத்தின் ஒருபக்கத்தில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணிகுந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானை இன நிரை வௌவும்யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்
கானம் திண்ணிய மலை போன்றிசினே    10கானமானது திண்ணிய மலை போல் அழியாத தன்மையதாய் உள்ளது – அதில்
  
# 241 பாலை மதுரை பெருமருதனார்# 241 பாலை மதுரை பெருமருதனார்
  
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறைநம்மை நினைத்துப்பார்க்கமாட்டாரோ தோழி? வளைந்த சிறகுகளையுடைய
புள் அடி பொறித்த வரி உடை தலையபறவைகளின் உள்ளங்கால் சுவடுகள் பதித்த தடங்களையுடைய மேற்பரப்பினையுடையவாய்,
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்றநீர் வற்றிக்கொண்டிருக்கும் இடங்கள்தோறும் ஈரமான நுண்மணல் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்மெல்லென வீசும் வாடை கோதிவிடுவதாக ஊன்றித் தீண்டுவதால்
வேழ வெண் பூ விரிவன பல உடன்      5கரும்பின் வெள்ளையான பூக்கள் பலவும் சேர்ந்து விரிவனவாய்,
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணியஅரசனுக்கு வீசும் கவரி விசிறியைப் போல பூக்கள் புதர்களை அழகுசெய்ய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறுமேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறையவிழித்து இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உறபகற்பொழுது சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர,
பனி கால்கொண்ட பையுள் யாமத்து    10பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,
பல் இதழ் உண்கண் கலுழபல இதழ்களையுடைய மலர்போன்ற மையுண்ட கண்கள் நீர் சொரிய
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரேநிலையில்லாத பொருளை ஈட்டுதற்காகப் பிரிந்துசென்றோர் –
  
# 242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்# 242 முல்லை விழிக்கட்பேதை பெருங்கண்ணனார்
  
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்பஇலைகள் அற்ற பிடவமரங்களில் புதிய மலர்கள் அரும்பிநிற்க,
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழபுதர்கள் மேல் ஏறிப்படர்கின்ற முல்லைக் கொடியின் பூக்கள் மலர,
பொன் என கொன்றை மலர மணி எனபொற்காசுகள் போன்று கொன்றை மலர, நீலமணி போன்று
பன் மலர் காயாம் குறும் சினை கஞலபல மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க,
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து      5கார்காலம் தொடங்கிவிட்டது இன்று காலையில், மிக விரைவாகச்
செல்க பாக நின் தேரே உவ காண்செலுத்துக பாகனே! உன் தேரை, இதோ பார்!
கழி பெயர் களரில் போகிய மட மான்கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓடகண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட,
காமர் நெஞ்சமொடு அகலாவிருப்பங்கொண்ட நெஞ்சத்தோடு இருக்கின்ற இடத்தைவிட்டு அகலாமல்
தேடூஉ நின்ற இரலை ஏறே    10பார்வையாலேயே தேடி நிற்கும் ஆண்மானை –
  
# 243 பாலை காமக்கணி பசலையார்# 243 பாலை காமக்கணி பசலையார்
  
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇயதேன் ஒழுகும் மலைச்சாரலில், தெளிந்த ஓடைநீர் சூழ்ந்த
துறுகல் அயல தூ மணல் அடைகரைகுத்துப்பாறையின் அயலில் உள்ள தூய மணலையுடைய அடைகரையில்
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துஆடுகின்ற கிளைகளில் நெருக்கமாய்த் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரத்துச்
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில்சோலைதொறும் தங்கும் அழகிய கண்களையுடைய கரிய குயில்,
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு       5“சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப்
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் எனபிரிந்து செல்வதைத் தவிர்ப்பீர்! அறிவுள்ளவர்களே!” என்று
கையற துறப்போர் கழறுவ போலதம் காதலியர் செயலற்றுப்போக அவரைத் துறந்துசெல்வோருக்குக் இடித்துரைப்பது போல
மெய் உற இருந்து மேவர நுவலதம் துணையோடு ஒன்றியிருந்து பொருத்தமானபடி கூற,
இன்னாது ஆகிய காலை பொருள்_வயின்இன்னாததாகிய இந்த இளவேனிற்காலத்தில், பொருளீட்டுவதற்காகப்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்  10பிரிந்து செல்லுதல் ஆடவர்க்கு இயல்பு எனின்
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளேஅரியதாய்ப் போய்விட்டது உறுதியாக, அறத்தைக்காட்டிலும் பொருள்.
  
# 244 குறிஞ்சி கூற்றங்குமரனார்# 244 குறிஞ்சி கூற்றங்குமரனார்
  
விழுந்த மாரி பெரும் தண் சாரல்விழுந்த மழையால் பெரிதும் குளிர்ந்துபோன மலைச்சாரலில்
கூதிர் கூதளத்து அலரி நாறும்கூதிர்காலத்துக் கூதளத்தின் பூக்களுடைய மணத்தைக் கொண்ட,
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்அழகிய வண்டுகள் இசைக்கும் இனிய குரலை
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்மணம் கமழும் மலைச் சரிவில் உள்ள அசுணம் என்ற விலங்கு உற்றுக்கேட்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ 5உயர்ந்த மலைகளைக் கொண்டவனுக்கு எடுத்துச் சொல்லுவதையோ,
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்நாம் அடைந்துள்ள துயருக்கான காரணத்தை அறியாத அன்னைக்கு இந்தக் காதல்நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோதணிகின்ற வழி இதுதான் என்று சொல்லுவதையோ
செய்யாய் ஆதலின் கொடியை தோழிசெய்யமாட்டாய்; ஆகவே நீ கொடியவள் தோழி!
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்தமணிகள் ஒளிவீசுகின்ற நெடிய மலை அழகு பெற உயர்ந்துநிற்கும்
செயலை அம் தளிர் அன்ன என்10அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
மதன் இல் மா மெய் பசலையும் கண்டேவலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு –
  
# 245 நெய்தல் அல்லங்கீரனார்# 245 நெய்தல் அல்லங்கீரனார்
  
நகை ஆகின்றே தோழி தகையசிரிப்பைத் தருகின்றது தோழி! உயர்ச்சிமிக்க
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதைஅழகிய மலரான கழிமுள்ளியின் ஆய்ந்தெடுத்த பூக்களைக் கொண்ட மாலையை
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇநீலமணி போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படி அணிந்து,
துணி நீர் பௌவம் துணையோடு ஆடிதெளிந்த நீர் உள்ள கடலில் தோழியரோடு விளையாடி.
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்     5நேரேஇறங்கும் நுண்ணிய இடுப்பும், அகன்ற அல்குலும்,
தெளி தீம் கிளவி யாரையோ என்தெளிவான இனிய சொற்களும் உடையவளே! யாரோ, என்
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ எனஅரிதாக அமைந்திருக்கின்ற இனிய உயிரைக் கவர்ந்த நீ என்று
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கிபூண்கள் நிறைந்த நெடிய தேரின் புரவியை இழுத்துப்பிடித்தவாறு,
தான் நம் அணங்குதல் அறியான் நம்மின்அவன்தான் நம்மைக் காதல்நோயால் வருத்துகிறான் என்பதனை அறியாதவனாய், நம்மால்
தான் அணங்கு உற்றமை கூறி கானல்   10தான் காதல்நோயால் வருத்தமுற்றதைக் கூறி, கடற்கரைச் சோலையில்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கிவண்டினம் ஒலியெழுப்பும் ஒளிவிடும் என் நெற்றியை நோக்கிப்
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவேபெரிய கடல்பகுதியைச் சேர்ந்தவன் நம்மைத் கைகூப்பித் தொழுது நின்ற காட்சி –
  
# 246 பாலை காப்பியம் சேந்தனார்# 246 பாலை காப்பியம் சேந்தனார்
  
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;
நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும்நெடிய சுவரில் உள்ள பல்லியும் பக்கத்தில் ஒலித்து அதனை உறுதிப்படுத்தும்;
மனை மா நொச்சி மீமிசை மா சினைவீட்டிலுள்ள கரிய நொச்சிச்செடியின் உச்சிக்கு மேலேயிருக்கும் மாமரத்தின் கிளைகளில்
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும்கூவுதலில் சிறந்த கரிய குயில்கள் திரும்பத்திரும்பக் கூவவும் செய்கின்றன;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி      5உறுதியான நெஞ்சத்தோடு பாலைவழிகள் பலவற்றைக் கடந்து
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர்பொருளீட்டுவதற்காகப் பிரிந்த்சென்றாராயினும், பொய்சொல்லமாட்டார்,
வருவர் வாழி தோழி புறவின்வந்துவிடுவார் வாழ்க தோழியே! முல்லைக்காட்டின்
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழபொன்போன்ற பூக்களையுடைய கொன்றையோடு பிடவமும் கட்டவிழ்ந்து மலர
இன் இசை வானம் இரங்கும் அவர்இனியதாய் இசைக்கும் வானம் முழங்குகின்ற, அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே       10வந்துவிடுவேன் என்று சொல்லிச்சென்ற, கார்ப்பருவமே இது>
  
# 247 குறிஞ்சி பரணர்# 247 குறிஞ்சி பரணர்
  
தொன்றுபடு துப்பொடு முரண் மிக சினைஇஇளைமைமுதல் இருக்கும் வலிமையோடு பகைமையும் மிகுந்து, சினங்கொண்டு
கொன்ற யானை செம் கோடு கழாஅபுலியைக் கொன்ற யானையின் சிவந்த கொம்புகளைக் கழுவுமாறு
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலிமிகுந்த மழை பொழிந்த இனிய குரலையுடைய மேகம்
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறைஇரும்பு வில்லினால் அடிக்கப்பட்ட பஞ்சைப் போல் ஆகி, விடியற்காலையில்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ 5உச்சி உயர்ந்த நெடிய மலையில் தவழும் நாடனே! நீ
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்நீ அன்புசெய்யாவிட்டாலும், பண்புடைமை இல்லாதவற்றைச் செய்தாலும்
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல்உன் வழியில்தான் நடக்கிறாள் என் தோழி; நல்ல நெற்றியில்
விருந்து இறைகூடிய பசலைக்குபுதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மேமருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக!
  
# 248 முல்லை காசிபன் கீரனார்# 248 முல்லை காசிபன் கீரனார்
  
சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீசிறிய பூக்களைக் கொண்ட முல்லைக்கொடியின் தேன் கமழும் புதிய மலர்கள்,
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்பபொறிக்கப்பட்டதைப் போன்ற வரிகளையுடைய நல்ல யானையின் புள்ளிகளையுடைய முகத்தைப் போன்று
தண் புதல் அணி பெற மலர வண் பெயல்குளிர்ச்சியான புதர்கள் அழகுபெற மலர்ந்துநிற்க, மிகுந்த மழையுள்ள
கார் வரு பருவம் என்றனர்-மன் இனிகார்காலமே திரும்பி வருகின்ற பருவம் என்று சொன்னார் உறுதியாக; இப்போது
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்       5மிகுந்த துயரத்தால் என் உள்ளம் நடுங்குவதைக் காண்பதற்காக,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்என்மீது அன்பு இல்லாததால், பண்புக்கொவ்வாதவற்றை மீண்டும் மீண்டும் செய்யும்வகையில்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்பொய்யாக இடிக்கும் அதிர்ந்த குரலை, கார்வாய்த்தது என்று எண்ணி ஆடுகின்ற
இன மயில் மட கணம் போலஆண் இன மயில்களின் அறிவில்லாத கூட்டத்தைப் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையேஉன்னை எண்ணி மயங்குவேனோ? நீ வாழ்க மழையே!
  
# 249 நெய்தல் உலோச்சனார்# 249 நெய்தல் உலோச்சனார்
  
இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னைஇரும்பைப் போன்ற கரிய கிளைகளையுடைய புன்னைமரத்தின்,
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்நீலம் போன்ற பசிய இலைகளுக்குள்ளேயெல்லாம்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்வெள்ளியைப் போன்று ஒளிவிடும் பூங்கொத்துகளுக்கிடையே
பொன்னின் அன்ன நறும் தாது உதிரபொன்னைப் போன்ற நறிய பூந்தாதுக்கள் உதிர்வதால்
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்     5புலியினதைப் போன்ற புள்ளிகளைப் பெற்ற பூக்கள் மணக்கும் நிறமுள்ள மணற்குன்றின்மேல்
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇவரிகளைக் கொண்ட வண்டுகள் ஒலியெழுப்பிப் பறப்பதால், அதனைப் புலி என்று எண்ணி வெருண்டு
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவகுதிரையின், ஓட்டத்தையுடைய ஒளிவிடும் கால்கள் பந்தைப்போல் தாவ,
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்இழுத்துப்பிடிக்கவும் தடுத்துநிறுத்தமுடியாமல் நிற்காமல் ஓடுகின்ற அந்த இடத்தில்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றிவளப்பமுள்ள அழகிய சேரியின் மக்கள் ஆரவாரத்துடன் தோன்ற,
அம்பல் மூதூர் அலர் எழ   10கூடிக் குசுகுசுக்கும் இந்த முதிய ஊரில் பலரறிய பழிச்சொற்கள் எழும்ப,
சென்றது அன்றோ கொண்கன் தேரேசென்றது அல்லவா நம் காதலனின் தேர்.
  
# 250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்# 250 மருதம் மதுரை ஓலை கடையத்தார் நல்வெள்ளையார்
  
நகுகம் வாராய் பாண பகு வாய்சிரிக்கலாம், வாராய் பாணனே! பிளந்த வாயினையுடைய
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்உள்ளே பரல்கள் இடப்பெற்ற கிண்கிணி ஒலியெழுப்ப, தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன்விளையாட்டுவண்டிகொண்டு நடைபயின்றுகொண்டிருந்த இனிய மொழிபேசும் என் புதல்வனின்
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடுபூ மணக்கும் சிவந்த வாயின் நீர் சிதைத்த மார்புச் சந்தனத்தோடு 
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்   5ஆசைகொண்ட என் நெஞ்சம் தூண்டிவிட, நான் அவளை
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகஅணைத்துக்கொள்ளும் விருப்பத்தோடு நெருங்கிச் செல்ல,
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல்பிறையின் வனப்பைக் கொண்ட மாசில்லாத அழகிய நெற்றியையும்
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்துமணக்கின்ற கரிய திரளான கூந்தலையும் உடைய என் மனைவி வேறாக எண்ணி,
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇவெருளும் பெண்மானைப் போல் ஒதுங்கிக்கொண்டு,
யாரையோ என்று இகந்து நின்றதுவே   10 “யாரையா நீர்” என்று தள்ளி நின்ற கோலத்தை எண்ணி –