குறுந்தொகை 101-150

  
# பரூஉ மோவாய் பதுமன்# பரூஉ மோவாய் பதுமன்
# 101 குறிஞ்சி# 101 குறிஞ்சி
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
இரண்டும் தூக்கின் சீர் சாலாவேஇரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா –
பூ போல் உண்கண் பொன் போல் மேனிபூப்போன்ற மைதீட்டிய கண்களும், பொன்னைப் போன்ற மேனியும்,
மாண் வரி அல்குல் குறு_மகள்சிறப்பு மிக்க வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கேதோள்கள் (தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு-
  
# ஔவையார்# ஔவையார்
# 102 நெய்தல்# 102 நெய்தல்
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது(பிரிந்து சென்ற தலைவரை) நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காமல்
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்திஇருந்தால் அது என்னால் முடிவது அன்று; என்னை வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்வானத்தைத் தொடும் அளவிலானது காமம்,
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரேசான்றோர் அல்லர் நான் தழுவியவர்.
  
# வாயிலான் தேவன்# வாயிலான் தேவன்
# 103 நெய்தல்# 103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்விரைந்து ஓடும் வெள்ளம் குவித்துவைத்த நடுங்கவைக்கும் துன்பத்தைச் செய்யும் சேற்றில்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்முள்முருங்கைப் பூவின் இதழ் போன்ற இறகுகளையும் சிவந்த வாயினையும் கொண்டு
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகஇரைதேடும் நாரைக்குத் துன்பம் உண்டாக,
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்தூவும் மழைத்துளிகளையுடைய துயரந்தரும் வாடைக்காற்றுக் காலத்திலும்
வாரார் போல்வர் நம் காதலர்வரமாட்டார் போலும் நம் காதலர்,
வாழேன் போல்வல் தோழி யானேவாழமாட்டேன் போலும் தோழி! நானே!
  
# காவன்முல்லை பூதனார்# காவன்முல்லை பூதனார்
# 104 பாலை# 104 பாலை
அம்ம வாழி தோழி காதலர்தோழியே கேள்! காதல் கொண்ட தலைவர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்பநூலினின்றும் அறுபட்ட முத்துக்களைப் போல குளிர்ந்த துளிகள் உதிர,
தாளி தண் பவர் நாள் ஆ மேயும்தாளிப் புல்லின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்
பனி படு நாளே பிரிந்தனர்பனி விழும் நாளில் பிரிந்துசென்றார்;
பிரியும் நாளும் பல ஆகுபவேபிரிந்து சென்ற நாள்களும் பல ஆகின்றன.
                
# நக்கீரர்# நக்கீரர்
# 105 குறிஞ்சி# 105 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினைகுறவனுடைய தோட்டத்தில் விளைந்த பொன் போன்ற சிறுதினையின்
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல்பூசையுணவை உண்ணும் கடவுளுக்குப் படைத்த செழுமையான கதிரினை
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்அறியாது உண்ட மயில், ஆடுபவள்
வெறி_உறு வனப்பின் வெய்து_உற்று நடுங்கும்வெறியாடும் அழகைப் போல துன்புற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மைதெய்வங்கள் வாழும் மலைநாட்டையுடையவனின் நட்பு
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றேநீர்நிறைந்த கண்களுடன் நினைவாகிப்போனது.
  
# கபிலர்# கபிலர்
# 106 குறிஞ்சி# 106 குறிஞ்சி
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர்புல்லிய விழுதைக்கொண்ட இற்றிமரத்தின் பாறையில் படர்ந்து வீழும் வெள்ளையான வேர்கள்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்மலையிலிருந்து விழும் அருவியினைப் போல் தோன்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனின்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்_வயின்தீதில்லாத நெஞ்சத்தின் சொற்கள் நம்மிடம்
வந்தன்று வாழி தோழி நாமும்வந்தது வாழ்க தோழியே! நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டுநெய் ஊற்றிய தீயைப்போல் அதனை எதிர்கொண்டு
தான் மணந்து அனையம் என விடுகம் தூதேஅவன் தன்னை மணந்தகாலத்து இருந்த நிலையிலுள்ளோம் என்று தூது விடுவோம்.
  
# மதுரை கண்ணனார்# மதுரை கண்ணனார்
# 107 மருதம்# 107 மருதம்
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்னகுவிந்த கொத்தான செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்தொகுப்பான சிவந்த கொண்டையையுடைய கூட்டத்தோடு திரியும் சேவலே!
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்நள்ளிருளான நடுச்சாமத்தில் வீட்டில் இருக்கும் எலியைப் பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகிகுட்டிப் பூனைக்கு வைத்துண்ணும் உணவாகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்மிக்க துன்பப்படுவாயாக! நீயே! நீண்ட நீர்ப்பரப்பினால் கிடைக்கும்
யாணர் ஊரனொடு வதிந்தபுதுவருவாயுடைய ஊரைச் சேர்ந்தவனோடு தங்கிய
ஏம இன் துயில் எடுப்பியோயேஇன்பத்தைத் தரும் தூக்கத்தினின்றும் எழுப்பிவிட்டாயே! 
  
# வாயிலான் தேவன்# வாயிலான் தேவன்
# 108 முல்லை# 108 முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிமேகங்கள் விளையாடும் குன்றினை அடுத்த சிறுகுடியில்
கறவை கன்று_வயின் படர புறவில்பசுமாடுகள் தம் கன்றை எண்ணித் திரும்ப, முல்லைநிலத்தில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூபசிய இலைகளைக் கொண்ட முல்லையின் குற்றமற்ற வெள்ளைப் பூக்கள்
செம் வான் செவ்வி கொண்டன்றுசெக்கர் வானத்தின் தன்மையைக் கொண்டன,
உய்யேன் போல்வல் தோழி யானேஉயிர்வாழமாட்டேன் போலும் தோழியே நான்.
  
# நம்பி குட்டுவன்# நம்பி குட்டுவன்
# 109 நெய்தல்# 109 நெய்தல்
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளைமுள் போன்ற கால்களைக் கொண்ட இறா மீனின் வளைந்த முதுகையுடைய பெரிய கூட்டத்தை
புணரி இகு திரை தரூஉம் துறைவன்கடலில் தாழ்ந்த அலைகள் அடித்தொதுக்கும் துறையைச் சேர்ந்த தலைவன்
புணரிய இருந்த ஞான்றும்சந்திக்க உடன் இருந்த பொழுதிலும்
இன்னது-மன்னோ நன் நுதல் கவினேஇவ்வாறு பொலிவிழந்துவிட்டதே உனது நல்ல நெற்றியின் அழகு.
  
# கிள்ளிமங்கலம்கிழார்# கிள்ளிமங்கலம்கிழார்
# 110 முல்லை# 110 முல்லை
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்குவராமற்போனாலும், வந்தாலும் , இனி அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி நீரயாராவார் தோழி! நீரிலுள்ள
நீல பைம் போது உளரி புதலநீலக்குவளையின் இளம் மொட்டைத் தடவிக்கொடுத்து, புதரிலுள்ள
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டிமயில்தோகையின் ஒளிரும் கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்தநுண்ணிய முள்ளையுடைய ஈங்கையின் சிவந்த அரும்புகள் மலர்ந்த
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்றுபலநிற வண்ணமுள்ள பஞ்சுபோன்ற மலர் உதிர, குளிர்ச்சியுடன்
இன்னாது எறிதரும் வாடையொடுதுன்பந்தந்து வீசும் வாடைக்காற்றில்
என் ஆயினள்-கொல் என்னாதோரேஎன்ன ஆனாளோ என்று நினைக்காதவர்.
  
# தீன்மதிநாகன்# தீன்மதிநாகன்
# 111 குறிஞ்சி# 111 குறிஞ்சி
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்எனது மென்மையான் தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும்வெற்றியுடைய முருகனால் வந்தது என்று சொல்வான்; என் தாயும்
அது என உணரும் ஆயின் ஆயிடைஅப்படியே என்று நினைப்பாளாயின், அப்பொழுது,
கூடை இரும் பிடி கை கரந்து அன்னகுட்டையான கரிய பெண்யானை தன் துதிக்கையை மறைத்து நிற்பதைப் போல்
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன்நிறத்தால் கருமையான பாறாங்கல் இருக்கும் மலைநாட்டான்
வல்லே வருக தோழி நம்சீக்கிரமே வருக! தோழி! நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதேவீட்டிலுள்ளோர் செய்யும் நகைப்பிடமான காரியத்தைக் கொஞ்சம் கண்டுகளிக்க.
  
# ஆலத்தூர் கிழார்# ஆலத்தூர் கிழார்
# 112 குறிஞ்சி# 112 குறிஞ்சி
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்ஊராரின் பழிமொழிகளுக்கு அஞ்சினால் விருப்பம் மெலிவடையும்;
எள் அற விடினே உள்ளது நாணேஎள்ளுதல் அற்றுப்போகும்படி விருப்பதை விட்டுவிட்டால் என்னிடம் இருப்பது நாணம் மட்டுமே;
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅபெரிய களிறு வளைக்க வளைந்து நிலத்தில் படாத
நார் உடை ஒசியல் அற்றேபட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனேகாண்பாயாக! தோழி! அவர் நுகர்ந்த என் பெண்மை நலன்.
  
# மாதீர்த்தன்# மாதீர்த்தன்
# 113 மருதம்# 113 மருதம்
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குஊருக்கு அருகில் உள்ளது பொய்கை; அந்தப் பொய்கைக்குத்
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறேதூரமானதும் அன்று சிறிய காட்டாறு;
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு; நாம் எமது
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்கூந்தலுக்கான எருமண்ணைக் கொண்டுவரச் செல்வோம்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையேஅங்கும் வருவாள் பெரிய பேதையாகிய தலைவி.
  
# பொன்னாகன்# பொன்னாகன்
# 114 நெய்தல்# 114 நெய்தல்
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பிநெய்தல் மணற்பரப்பில் எனது பாவையைக் கிடத்திவிட்டு
நின் குறி வந்தனென் இயல் தேர் கொண்கஉனது குறிப்பிட்ட இடத்துக்கு வந்தேன், நன்கு செய்த தேரையுடைய தலைவனே!
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்அங்குப் போகின்றேன்; செல்ல நீ விடுப்பாயாக; இரவு வருவதால்
ஆரல் அருந்த வயிற்றஆரல் மீனைத் தின்று நிறைந்த வயிற்றையுடைய
நாரை மிதிக்கும் என் மகள் நுதலேநாரை மிதித்துவிடும் என் பாவையின் நெற்றியை.
  
# கபிலர்# கபிலர்
# 115 குறிஞ்சி# 115 குறிஞ்சி
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோபெரிய நன்மையை ஒருவர் செய்தால் அவரைப் போற்றாதவர் இல்லை.
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டுசிறிய நன்மையைச் செய்தவளே ஆயினும், விருப்பம் மிகுந்து
புலவி தீர அளி-மதி இலை கவர்புஊடல் தீரும்படி அருளுவாயாக! இலைகளைக் கவர்ந்துண்டு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்ஆடுகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில்
மென் நடை மரையா துஞ்சும்மெல்லிய நடையையுடைய மரையான்கள் துயிலும்
நன் மலை நாட நின் அலது இலளேநல்ல மலைநாடுத் தலைவனே! நீயின்றி இவளுக்கு வேறு யாரும் இல்லை.
  
# இளங்கீரன்# இளங்கீரன்
# 116 குறிஞ்சி# 116 குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்நான் விரும்பி என்னுள் உறைவோளின் வண்டுகள் மொய்க்கும் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறைவளம் பொருந்திய சோழரின் உறந்தையின் பெரிய நீர்த்துறையில்
நுண் மணல் அறல் வார்ந்து அன்னநுண்ணிய கருமணல் நெளிநெளியாய் நீளமாய்ப் படிந்தாற்போல
நன் நெறியவ்வே நறும் தண்ணியவேநல்ல நெறிப்பை உடையன, நறியவும் குளிர்ந்தனவுமாம்.
  
# குன்றியனார்# குன்றியனார்
# 117 நெய்தல்# 117 நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்மழைக்காலத்து ஆம்பல் பூவைப்போன்ற கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டுபார்வைக்கு அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர்தாழையின் வேர்களுக்குள் உள்ள தனது வளைக்குள் செல்வதற்காக, இடையர்களின்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்கயிற்றினை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரையும் கடற்கரைத் தலைவன் 
வாராது அமையினும் அமைகவாராதிருப்பினும் இருக்க;
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையேசிறியனவும் உண்டு, இங்கு விற்போரின் கைவளைகள்.
  
# நன்னாகையார்# நன்னாகையார்
# 118 நெய்தல்# 118 நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதியபறவைகளும், விலங்குகளும் தனிமையில் தங்க
நள்ளென வந்த நார் இல் மாலைநள்ளென்று வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில்
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்பலரும் புகுவதற்குரிய வாசலை அடைக்க எண்ணி, வினாவுவோர்
வருவீர் உளீரோ எனவும்உள்ளே வருவோர் இருக்கிறீர்களா என்று கேட்கவும்
வாரார் தோழி நம் காதலோரேவாரார் ஆயினர் நம் காதலர்.
  
# சத்திநாதனார்# சத்திநாதனார்
# 119 குறிஞ்சி# 119 குறிஞ்சி
சிறு வெள் அரவின் அம் வரி குருளைவெண்மையான பாம்பின், அழகிய வரிகளைக் கொண்ட சிறிய குட்டி
கான யானை அணங்கி ஆஅங்குகாட்டு யானையை நிலைகுலையவைப்பது போல
இளையன் முளை வாள் எயிற்றள்இளையவள், முளை போன்ற ஒளிமிக்க பற்களையுடையவள்
வளை உடை கையள் எம் அணங்கியோளேவளையுடைக் கையினள் என்னை நிலைகுலையவைத்தவள்.
  
# பரணர்# பரணர்
# 120 குறிஞ்சி# 120 குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்குபொருள் இல்லாதவன் இன்பத்தை விரும்பினாற் போல
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலிபெறுவதற்கு அரியதை விரும்பினாய் நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்குநல்லவள் என்பதனை அறிந்ததைப் போல்
அரியள் ஆகுதல் அறியாதோயேஅரியவள் என்பதனை அறியாமற்போய்விட்டாயே!
  
# கபிலர்# கபிலர்
# 121 குறிஞ்சி# 121 குறிஞ்சி
மெய்யே வாழி தோழி சாரல்உண்மையே தோழி வாழ்வாயாக!, மலைப்பக்கத்தில்
மை பட்டு அன்ன மா முக முசு கலைமையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
ஆற்ற பாயா தப்பல் ஏற்றதாங்கக் கூடிய கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கோட்டொடு போகி ஆங்கு நாடன்கிளைக்கு ஆகினாற்போன்று, தலைவன்
தான் குறி வாயா தப்பற்குதான் குறியிடத்துக்கு வாராமற் செய்த தவறுக்குத்
தாம் பசந்தன என் தட மென் தோளேதாம் பசலைபாய்ந்தன எனது பரந்த மெல்லிய தோள்களே!
  
# ஓரம்போகியார்# ஓரம்போகியார்
# 122 நெய்தல்# 122 நெய்தல்
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்னஇளமையான கொக்கின் புல்லிய முதுகினைப் போன்று
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியேபள்ளத்து நீரில் உள்ள ஆம்பலும் கூம்பின; இப்பொழுது
வந்தன்று வாழியோ மாலைவந்தது; வாழ்க இந்த மாலைக்காலம்;
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தேதான் ஒன்று மட்டும் அன்று; அடுத்து வரும் இரவையும் உடையது அது!
  
# ஐயூர் முடவன்# ஐயூர் முடவன்
# 123 நெய்தல்# 123 நெய்தல்
இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல்இருள் செறிந்தாற் போன்ற ஈரமும் குளிர்ச்சியுமுடைய திரட்சியான நிழலையுடைய,
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறைநிலவொளியைக் குவித்து வைத்தாற்போன்ற வெள்ளையான மணலின் ஒரு பக்கத்திலிருக்கும்,
கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்பகரிய கிளைகளையுடைய புன்னை மரங்களுடைய பூஞ்சோலை தனித்துக்கிடக்க
இன்னும் வாரார் வரூஉம்தலைவர் இன்னும் வரவில்லை, வருகின்றன
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலேநிறைய மீன்களை வேட்டையாடிக்கொண்டு என் தமையன்மாருடைய படகுகள்.
  
# பாலை பாடிய பெருங்கடுக்கோ# பாலை பாடிய பெருங்கடுக்கோ
# 124 பாலை# 124 பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலைஉப்பு வணிகர்கள் தங்கிச் சென்ற பக்கத்தையும், அகன்ற இடமுள்ள
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடுஊர் பாழ்பட்டுப்போனதைப் போன்ற ஓமை மரங்களையும் கொண்ட பெரிய பாலைநிலம்
இன்னா என்றிர் ஆயின்இன்னாது என்று கூறுகிறீர், எனினும்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையேஇனியவோ தலைவனே! தனியாய் இருப்போர்க்கு இந்த வீடு?
  
# அம்மூவன்# அம்மூவன்
# 125 நெய்தல்# 125 நெய்தல்
இலங்கு வளை நெகிழ சாஅய் யானேஒளிவிடும் வளைகள் நெகிழ்ந்துபோக மெலிந்துபோய், நானே
உளெனே வாழி தோழி சாரல்இருக்கின்றேன்! வாழ்க தோழி! மலைப்பக்கத்து
தழை அணி அல்குல் மகளிருள்ளும்தழையை அணிந்த அல்குலையுடைய மகளிர்களுக்குள்
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல்திருவிழாவைப் போல் சிறந்த என் பெண்மை நலன், பழைய ஆற்றலாகிய
பறை வலம் தப்பிய பைதல் நாரைசிறகுகளின் வலிமையை இழந்த வருத்தமுடைய நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்அலைகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் வளைந்த கிளையில் இருக்கும்
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றேகுளிர்ந்த அழகிய துறையையுடையவனோடு இடம் மாறிப் போனது. 
  
# ஒக்கூர் மாசாத்தியார்# ஒக்கூர் மாசாத்தியார்
# 126 முல்லை# 126 முல்லை
இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர்இளமையைப் பார்க்காமல், பொருளை விரும்பிச் சென்றவராகிய தலைவர்
இவணும் வாரார் எவணரோ எனஇங்கும் வந்திலர், எங்கிருக்கிறாரோ என –
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லைமழையால் வாழ்விக்கப்பட்ட பூங்கொடியையுடைய முல்லையின்
தொகு முகை இலங்கு எயிறு ஆககொத்தான மொட்டுகளை ஒளிறும் பற்களாகக் கொண்டு
நகுமே தோழி நறும் தண் காரேசிரிக்கிறதே தோழி! மணமுள்ள குளிர்ந்த கார்ப்பருவம்.
  
# ஓரம்போகியார்# ஓரம்போகியார்
# 127 மருதம்# 127 மருதம்
குருகு கொள குளித்த கெண்டை அயலதுகொக்கு கொத்த, தப்பிப்போய் மூழ்கிய கெண்டை, அருகிலிருக்கும்
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம்நிறமுள்ள தாமரையின் வெள்ளையான மொட்டைக்கண்டு வெருளும்
கழனி அம் படப்பை காஞ்சி ஊரவயல்வெளிகளையும் தோட்டங்களையும் கொண்ட காஞ்சி நகரத்துத் தலைவனே!
ஒரு நின் பாணன் பொய்யன் ஆகஉன்னுடைய பாணன் ஒருவன் பொய்யன் ஆக,
உள்ள பாணர் எல்லாம்ஊரில் உள்ள பாணர் எல்லாம் 
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கேபொய்யரைப் போன்று தோன்றுவர் நீ அகன்றதால் தனித்திருக்கும் மகளிருக்கு.
  
# பரணர்# பரணர்
# 128 நெய்தல்# 128 நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரைகிழக்குக் கடலின் அலைகளின் அருகிலிருக்கும் சிறகுகள் மெலிந்த நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறைதிண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்குஅயிரைக் கூட்டத்தை எண்ணி அண்ணாந்து பார்த்தாற்போல
சேயள் அரியோள் படர்திதொலைவிலுள்ளவள், பெறுவதற்கு அரியவள் ஆகிய தலைவியை எண்ணிப்பார்க்கிறாய்,
நோயை நெஞ்சே நோய் பாலோயேநோயுடையவனாகிவிட்டாய் நெஞ்சே! இந்த நோய்க்குக் காரணமாகிய ஊழ்வினையின்பாற்பட்டாய்!
  
# கோப்பெருஞ்சோழன்# கோப்பெருஞ்சோழன்
# 129 குறிஞ்சி# 129 குறிஞ்சி
எலுவ சிறாஅர் ஏமுறு நண்பஎன் தோழனே! இளைஞர்கள் இன்புறுவதற்குக் காரணமாகிய நண்பனே!
புலவர் தோழ கேளாய் அத்தைஅறிவுடையார்க்குத் தோழனே! கேட்பாயாக!
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்துகரிய கடலின் நடுவில் எட்டாம் நாளுக்குரிய
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்குஇளமையான வெள்ளிய திங்கள் தோன்றியதைப் போல்
கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல்கூந்தல் பக்கத்தில் விளங்கும் சிறிய நெற்றி
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மேபுதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப் போல் என்னைப் பிணித்துவிட்டது.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 130 பாலை# 130 பாலை
நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்நிலத்தைத் தோண்டி அதனுள் புகமாட்டார்; வானத்தில் ஏறமாட்டார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்குறுக்கிடும் பெரிய கடலில் காலால் நடந்து செல்லார்;
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின்நாடுகள்தோறும், ஊர்கள்தோறும்
குடிமுறை_குடிமுறை தேரின்குடிமுறைகள்தோறும் தேடிப்பார்த்தால்
கெடுநரும் உளரோ நம் காதலோரேகாணாமற்போவாரோ நம் காதலர்.
  
# ஓரேருழவனார்# ஓரேருழவனார்
# 131 பாலை# 131 பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள்ஆடுகின்ற மூங்கிலைப் போன்ற அழகினையுடைய பெரிய தோள்களையும்,
பேர் அமர் கண்ணி இருந்த ஊரேபெரிதும் விரும்பப்படும் கண்ணையும் உடையவள் இருந்த ஊர்
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சேநெடுந்தூரத்தில் அடைதற்கரிய இடத்தில் உள்ளது; எனது நெஞ்சு
ஈரம் பட்ட செவ்வி பைம் புனத்துஈரமான தன்மையையுடைய உழுவதற்கேற்ற நிலத்தில்
ஓர் ஏர் உழவன் போலஒற்றை ஏர் உழவனைப் போல
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானேபெரிதும் பரபரப்புக்கொள்கிறது; வருந்துகிறேன் நான்.
  
# சிறைக்குடி ஆந்தையார்# சிறைக்குடி ஆந்தையார்
# 132 குறிஞ்சி# 132 குறிஞ்சி
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள்தழுவுவதில் விரைவுடையவள்; விருப்பம்தரும் அழகினள்;
குவவு மென் முலையள் கொடி கூந்தலளேகுவிந்த மெல்லிய முலையினள்; நீளமான கூந்தலையுடையவள்;
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர்எப்படி மறந்திருப்பேன் நான்? அருகில் நிற்கும்
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவிநிறையச் சுரக்கும் நல்ல பசுவின் நடுங்குகின்ற தலையைக் கொண்ட கன்று
தாய் காண் விருப்பின் அன்னதாயைக் காணும் விருப்பதைக் கொண்டது போல
சாஅய் நோக்கினள் மாஅயோளேமெலிந்த பார்வையையுடையவள் மாமைநிறங்கொண்ட என் காதலி!
  
# உறையூர் முதுகண்ணன் சாத்தன்# உறையூர் முதுகண்ணன் சாத்தன்
# 133 குறிஞ்சி# 133 குறிஞ்சி
புனவன் துடவை பொன் போல் சிறுதினைபுனத்தையுடைய குறவனின் தோட்டத்துப் பொன் போன்ற சிறுதினையைக்
கிளி குறைத்து உண்ட கூழை இருவிகிளி முறித்து உண்டதால் ஏற்பட்ட குட்டையான இருவியாகிய தாள்,
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என்பெரிய மழை பெய்ததால் இலைவிட்டுத் தழைத்ததைப் போல்
உரம் செத்தும் உளெனே தோழி என்எனது வலிமை முழுதும் அழிந்தபின்னரும் இருக்கிறேனே தோழி! என்
நலம் புதிது உண்ட புலம்பினானேபெண்மை நலத்தைப் புதிதான நிலையில் நுகர்ந்த தனிமை வருத்தத்தோடு-
  
# கோவேங்கை பெருங்கதவன்# கோவேங்கை பெருங்கதவன்
# 134 குறிஞ்சி# 134 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம்மொடுகேட்பாயாக வாழி தோழி!  நம்மைவிட்டுப்
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்லபிரிதல் இல்லையென்றால் அது நல்லது நிச்சயமாக –
குறும் பொறை தடைஇய நெடும் தாள் வேங்கைகுட்டையான பாறைகளிடையே தழைத்து வளர்ந்த நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கிபூக்களுடையவாய் ஆடும் கிளைகளை வருத்தித் தாக்கி
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவிபெரும்பாறைகளை மோதி ஒலிக்கும் விரைந்து விழும் அருவி
நிலம் கொள் பாம்பின் இழிதரும்மரத்திலிருந்து நிலத்தை நோக்கி விரையும் பாம்பைப் போல இறங்கும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பேகுறுக்கிட்டுக் கிடக்கும் மலைகளையுடைய நாட்டுத் தலைவனுடன் கலந்த நட்பு.
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 135 பாலை# 135 பாலை
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல்தொழில்தான் ஆடவர்க்கு உயிர்; ஒளிபொருந்திய நெற்றியையுடைய
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் எனவீட்டில் வாழும் மகளிர்க்கு ஆடவரே உயிராவார் என்று
நமக்கு உரைத்தோரும் தாமேநமக்கு உரைத்தவரும் அத் தலைவரே!
அழாஅல் தோழி அழுங்குவர் செலவேஅழவேண்டாம் தோழி! பயணத்தை மேற்கொள்ளமாட்டார்.
  
# மிளைப்பெரும்கந்தன்# மிளைப்பெரும்கந்தன்
# 136 குறிஞ்சி# 136 குறிஞ்சி
காமம் காமம் என்ப காமம்காமம் காமம் என்று உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிவருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானைமிகுவதும் குறைவதும் அன்று; யானை
குளகு மென்று ஆள் மதம் போலதழையுணவை மிகுதியாக உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினேஅது வெளிப்படும் தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால்.
  
# பாலை பாடிய பெருங்கடுங்கோ# பாலை பாடிய பெருங்கடுங்கோ
# 137 பாலை# 137 பாலை
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்பமென்மையான இயல்புடைய நங்கையே! உன் நல்ல நெஞ்சு வருந்தும்படி
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்துஉன்னைத் துறந்து அமைந்திருப்பேனாயின், என்னை நீங்கி
இரவலர் வாரா வைகல்இரப்போர் வராத நாட்கள்
பல ஆகுக யான் செலவு_உறு தகவேபலவாகுக, எனது பயணத்தின் தகுதியில்-
  
# கொல்லன் அழிசி# கொல்லன் அழிசி
# 138 குறிஞ்சி# 138 குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமேபெரிய ஊரிலுள்ளார் தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்;
எம் இல் அயலது ஏழில் உம்பர்எமது வீட்டுக்கு வெளியேயுள்ள ஏழில்மலையின் உச்சியில்
மயில் அடி இலைய மா குரல் நொச்சிமயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்தஅழகுமிக்க மெல்லிய கிளைகளில் மலர்ந்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டேநீல மணி போன்ற பூக்கள் உதிர்வதால் உண்டாகும் ஓசையை மிகவும் கேட்டு –
  
# ஒக்கூர் மாசாத்தியார்# ஒக்கூர் மாசாத்தியார்
# 139 மருதம்# 139 மருதம்
மனை உறை கோழி குறும் கால் பேடைவீட்டில் வாழும் கோழியின் குட்டைக் கால்களையுடைய பேடை,
வேலி வெருகு இனம் மாலை உற்று எனவேலியில், காட்டுப்பூனைகள் மாலையில் வந்து இருக்க,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇயஒளிந்துகொள்ளும் இடம் அறியாது ஒன்றுகூடிச் சேர்ந்துகொள்ளும் பொருட்டு
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்குவருந்தும் குஞ்சுகளைக் அழைத்துக் கூவினாற் போன்று
இன்னாது இசைக்கும் அம்பலொடுசெவிக்கு இன்னாதாகத் தூற்றப்படும் பழிச்சொல்லோடே
வாரல் வாழியர் ஐய எம் தெருவேவராமலிருப்பாயாக! வாழியர் எம் தலைவ! எம் தெருப்பக்கம்-
  
# அள்ளூர் நன்முல்லை# அள்ளூர் நன்முல்லை
# 140 பாலை# 140 பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்துபன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்வழிச்செல்வோருக்கு நல் நிமித்தமாக ஒலியெழுப்பத் தங்கியிருக்கும்
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்துபாலைநிலத்தில் சென்றனர் காதலர்; என் வலிமை அழிந்து
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்இங்கு நான் தாங்கிய துன்பத்தை
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரேஎப்படி அறியும் இந்த இரக்கமுள்ள ஊர்.
  
# மதுரை பெருங்கொல்லனார்# மதுரை பெருங்கொல்லனார்
# 141 குறிஞ்சி# 141 குறிஞ்சி
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர்வளைந்த வாயையுடைய சிறிய கிளிகள் விளைந்த தினையின்மேல் வீழாதபடி விரட்டச்
செல்க என்றோளே அன்னை என நீசெல்வாய் என்றாள் அன்னை என்று நீ
சொல்லின் எவனோ தோழி கொல்லைசொன்னால் என்ன தோழி! தினைக்கொல்லையிலுள்ள
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்தநீண்ட கையையுடைய யானையின் கடிய பகையினால் வருந்திய
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றைகுறிய கைகளையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண் புலியை
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும்பசிய கண்களையுடைய செந்நாய் உண்பதற்குரிய தருணத்தைப் பார்த்திருக்கும்
ஆர் இருள் நடுநாள் வருதிஇருள் நிறைந்த நள்ளிரவில் வருகின்றாய்,
சாரல் நாட வாரலோ எனவேமலைச்சாரலைச் சேர்ந்தவனே! இவ்வாறு வரவேண்டாம் என்று-
  
# கபிலர்# கபிலர்
# 142 குறிஞ்சி# 142 குறிஞ்சி
சுனை பூ குற்று தொடலை தைஇசுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து
புன கிளி கடியும் பூ கண் பேதைதினைப்புனத்துக் கிளிகளை விரட்டும் பூப்போன்ற கண்ணையுடைய பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்தான் அறிந்தனளோ இல்லையோ? பாதியிரவில்
பள்ளி யானையின் உயிர்த்து என்படுக்கப்போகும் யானையைப்போல் பெருமூச்சுவிட்டு என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவேஉள்ளம் பின்னரும் அந்தத் தலைவியினிடத்தே இருக்கிறது என்பதை.
  
# மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்# மதுரை கணக்காயன் மகன் நக்கீரன்
# 143 குறிஞ்சி# 143 குறிஞ்சி
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன்வருந்தாதே! ஆய்ந்த அணிகலன்களையுடையாய்! அன்பினைப் பெரிதும் உடையவன்;
பழியும் அஞ்சும் பய மலை நாடன்பழியையும் அஞ்சுவான் அந்தப் பயன்தரும் மலைநாட்டுத் தலைவன்!
நில்லாமையே நிலையிற்று ஆகலின்நிலையாமை ஒன்றே நிலையானதாகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின்நல்ல புகழை விரும்பிய நன்மையுடைய நெஞ்சில்
கடப்பாட்டாளன் உடை பொருள் போலகடமையுணர்ச்சி மிக்கவனிடம் உடைமையான பொருள் போல
தங்குதற்கு உரியது அன்று நின்நிலைத்து நிற்றற்கு உரியது அன்று, உன்
அம் கலுழ் மேனி பாஅய பசப்பேஅழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்.
  
# மதுரை ஆசிரியன் கோடம்கொற்றன்# மதுரை ஆசிரியன் கோடம்கொற்றன்
# 144 பாலை# 144 பாலை
கழிய காவி குற்றும் கடலகழியிலுள்ள கருங்குவளை மலரைப் பறித்தும், கடலிலுள்ள
வெண் தலை புணரி ஆடியும் நன்றேவெள்ளிய தலையைக் கொண்ட அலைகடலில் விளையாடியும், நன்றாக
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயரதன்னைவிட்டுப் பிரியாத தோழிகள் தத்தமக்கு உரிய ஒரு விளையாட்டை விளையாட
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழிஇப்படியாக இங்கு சேர்ந்திருப்பதற்கு உடன்படாள்; இதற்கு மாறுபாடான வழியில்
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோபரல் கற்கள் பாதத்தைப் பாழ்படுத்தச் சென்றுவிட்டாள்-
செல் மழை தவழும் சென்னிவிரைந்து செல்லும் மேகங்கள் தவழும் உச்சியையுடைய
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டேவிண்வரை உயர்ந்த பெருங்கற்கள் குறுக்கிட்டுக்கிடக்கும் மலைநாட்டு வழியே.
  
# கொல்லன் அழிசி# கொல்லன் அழிசி
# 145 குறிஞ்சி# 145 குறிஞ்சி
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடிதங்குதற்குரிய ஊர் அன்று, இந்தத் துறையை ஒட்டிய சிற்றூர்,
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றிகடற்கரைச் சோலையையுடைய தலைவனது கொடுமையை எண்ணி
ஆனா துயரமொடு வருந்தி பானாள்அடங்காத் துயரமொடு வருந்தி, நள்ளிரவில்
துஞ்சாது உறைநரொடு உசாவாதுயிலாமல் இருப்போரை ஏனென்று கேட்காமல்
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தேதுயிலுகின்ற கண்களையுடைய மக்களோடு, நீண்ட இரவையும் உடையது.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 146 குறிஞ்சி# 146 குறிஞ்சி
அம்ம வாழி தோழி நம் ஊர்கேட்பாயாக, வாழ்க தோழியே! நம் ஊரில்
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோபிரிந்தோரைச் சேர்த்துவைப்போர் இருக்கின்றார்களே!
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர்தண்டினைப் பிடித்த கையினரும், நரைத்த தலையில் துகில்முடித்திருப்போரும்,
நன்று நன்று என்னும் மாக்களொடுநன்று நன்று என்று சொல்வதற்கெல்லாம் ஒத்திசைக்கும் மக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையேஇன்று நல்லநாள் என்று கூறும் அங்குள்ள நம்மவர் அவை.
  
# கோப்பெருஞ்சோழன்# கோப்பெருஞ்சோழன்
# 147 பாலை# 147 பாலை
வேனில் பாதிரி கூன் மலர் அன்னவேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமைமயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்
நுண் பூண் மடந்தையை தந்தோய் போலநுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையும் கொண்ட மடந்தையைத் தந்தவனைப் போல
இன் துயில் எடுப்புதி கனவேஇனிய துயிலினின்றும் எழுப்புகின்றாய், கனவே!
எள்ளார் அம்ம துணை பிரிந்தோரேஉன்னை இகழமாட்டார், தம் துணையைப் பிரிந்தோர்.
  
# இளங்கீரந்தையார்# இளங்கீரந்தையார்
# 148 முல்லை# 148 முல்லை
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்தசெல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிதவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்
காசின் அன்ன போது ஈன் கொன்றைகாசைப் போன்ற அரும்புகளை ஈன்ற கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும்குருந்த மரத்தோடு சேர்ந்து ஆடும் மிகுந்த குளிர்ச்சியையுடைய பருவத்தையும்
கார் அன்று என்றி ஆயின்கார்ப்பருவம் அல்ல என்று சொல்வாயாயின்
கனவோ மற்று இது வினவுவல் யானேகாண்பது கனவோ? நான் கேட்கிறேன்.
  
# வெள்ளிவீதியார்# வெள்ளிவீதியார்
# 149 பாலை# 149 பாலை
அளிதோ தானே நாணே நம்மொடுஇரங்கத் தக்கது நாணம்! நம்முடனே
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியேமிகவும் நீண்டகாலம் வருந்திநிற்கிறது; இனிமேல்
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறைவெள்ளைப் பூவைக்கொண்ட கரும்பினையுடைய உயர்ந்த மணலாகிய சிறு கரை
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்குஇனிய நீர் பெருகி நெருக்க கரைந்து விழுந்ததைப் போல்
தாங்கும் அளவை தாங்கிதாங்கும் அளவு தாங்கி
காமம் நெரிதர கை நில்லாதேகாமம் மிகுந்து நெருக்கும்போது நில்லாதுபோய்விடும்.
  
# மாடலூர் கிழார்# மாடலூர் கிழார்   
# 150 குறிஞ்சி# 150 குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழிமரத்தின் உச்சிப்பரணில் இருப்போன் ஏற்றிய மணமுள்ள புகையை எழுப்பும் கொள்ளியானது
வான மீனின் வயின்_வயின் இமைக்கும்வானத்து மீன்களைப் போல் ஆங்காங்கே மின்னும்
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம்உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனின் சந்தனம் பூசிப் புலர்ந்த மார்பினை
உள்ளின் உள் நோய் மல்கும்நினைத்தால் உள்ளத்தில் காமநோய் பெருகும்;
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய்அந்த மார்பைத் தழுவினால் அது இல்லாமற்போது எப்படி தோழியே?
  

Related posts