ஐங்குறுநூறு 51-100

# 6 தோழி கூற்று பத்து# 6 தோழி கூற்று பத்து
# 51# 51
நீர் உறை கோழி நீல சேவல்நீரில் வாழும் சம்பங்கோழியின் நீல நிறச் சேவலை
கூர் உகிர் பேடை வயாஅம் ஊரகூர்மையான நகத்தைக் கொண்ட அதன் பேடை வேட்கை மிகுதியால் நினைக்கும் ஊரனே!
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்புளியங்காய்க்கு ஆசைப்பட்டது போன்றது அல்ல, உன்னுடைய
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கேஅகன்ற மார்பானது இவளின் வேட்கை நோய்க்கு –
  
# 52# 52
வயலை செம் கொடி பிணையல் தைஇவயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
செ விரல் சிவந்த சே அரி மழை கண்சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும்,
செ வாய் குறு_மகள் இனையசிவந்த வாயையும் உடையவளுமான இந்த இளைய மகள், இவ்வாறு அழுதழுது நிற்க
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரேஎவ்விடத்திற்குப் போக முனைந்ததோ, தலைவனே! உனது தேர்?
  
# 53# 53
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயேஇந்த நீர்த்துறையின் தெய்வம் எதற்காக என்னை வருத்தப்போகிறது? நான் உற்ற நோய்க்குக் காரணம்,
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கிதடுப்புகளை உடைத்துக்கொண்டு புதிய நீர்ப்பெருக்கு பாய்வதால் கலங்கிப்போய்
கழனி தாமரை மலரும்கழனியில் உள்ள தாமரை மலரும்
பழன ஊர நீ உற்ற சூளேநீர்நிலைகளையுடைய ஊரனே! நீ கூறிய பொய்யான வாக்குறுதிகளே!
  
# 54# 54
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதைதிண்மையான தேரினையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் வழிந்தோடும்
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழதேனூரைப் போன்ற இவளின் தெரிந்தெடுத்த வளையல்கள் கழன்றுபோகுமாறு
ஊரின் ஊரனை நீ தர வந்தஊரிலிருந்தும் சேரியில் வாழும் பெருமானே! உன்னால் தேடிக்கொள்ளப்பட்டு வந்த
பஞ்சாய் கோதை மகளிர்க்குபஞ்சாய்க் கோரை மாலையணிந்த மகளிர்க்காக
அஞ்சுவல் அம்ம அ முறை வரினேஅஞ்சுகிறேன், என்னுடைய அந்த நிலை வருமே என்று –
  
# 55# 55
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூரைப் போன்ற இவளின்
நல் அணி நயந்து நீ துறத்தலின்நல்ல அழகை விரும்பிப் பாராட்டிப் பின்னர் நீ இவளைத் துறந்து செல்வதால்
பல்லோர் அறிய பசந்தன்று நுதலேபலரும் அறியும்படியாகப் பசந்துபோனது இவளின் நெற்றி.
  
# 56# 56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியாபகலாக எரியும் விளக்குகளால், இரவுக்காலம் என்பதையே அறியாத
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள்வெல்கின்ற போரையுடைய சோழரின் ஆமூரைப் போன்ற, இவளின்
நலம் பெறு சுடர் நுதல் தேம்பஅழகு பெற்ற ஒளிவிடும் நெற்றி வாடிப்போக,
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியேஎன்ன பயனைத் தரும் நீ ஆறுதலாகக் கூறும் பொய்மொழிகள்?
  
# 57# 57
பகலின் தோன்றும் பல் கதிர் தீயின்பகலைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தீயையும்,
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்னஆம்பல் மலர்கள் உள்ள கொண்ட வயல்களையும் கொண்ட தேனூரைப் போல
இவள் நலம் புலம்ப பிரியஇவளின் பெண்மை நலத்தைத் தனிமையில் வாடவிட்டுப் பிரிந்துசெல்ல
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டேஅந்த அளவுக்குப் பெருநலம் உடையவளோ, தலைவனே! உன் பரத்தை?
  
# 58# 58
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்மலை போலக் குவித்த வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும்,
கைவண் விராஅன் இருப்பை அன்னகொடைத்தன்மையிலும் சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற
இவள் அணங்கு உற்றனை போறிஇவள்மீது காதல்வேட்கை பெருகித் துன்பப்பட்டாய் போலும்!
பிறர்க்கும் அனையையால் வாழி நீயேபிற மகளிர் மீதும் நீ அவ்வாறே இருக்கிறாய், வாழ்க நீ.
  
# 59# 59
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று_உறகேட்பாயாக! வாழ்க தலைவனே! ஆறுதலாக
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீரஉனது மயக்கங்கொண்ட நெஞ்சிற்கு, அதன் துன்பமெல்லாம் தீர,
நினக்கு மருந்து ஆகிய யான் இனிஇவளை உன்னிடம் சந்திக்கவைத்து, உனக்கு மருந்தாக அமைந்த நான், இப்போது
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சேஉன்னைப் பிரிந்துவாடும் இவளுக்கு மருந்தாக இருக்கமுடியாததை எண்ணி நோகின்றது என் நெஞ்சம்.
  
# 60# 60
பழன கம்புள் பயிர் பெடை அகவும்நீர்நிலைகளில் வாழும் சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற
கழனி ஊர நின் மொழிவல் என்றும்வயல்வெளிகளைக் கொண்ட ஊரனே! உன்னை ஒன்று கேட்பேன். எப்பொழுதும்
துஞ்சு மனை நெடு நகர் வருதிவீட்டிலுள்ளோர் தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய இல்லத்திற்கு வருகிறாய்;
அஞ்சாயோ இவள் தந்தை கை வேலேஅஞ்சமாட்டாயோ, இவளின் தந்தையின் கையிலுள்ள வேலுக்கு?
  
<=”” r1b=”” style=”box-sizing: border-box;”><=”” r1b=”” style=”box-sizing: border-box;”>
# 61# 61
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்மணமுள்ள வடுக்களைக்கொண்ட மாமரத்தில் விளைந்து கனிந்து கீழே விழுகின்ற இனிய பழம்
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம்ஆழமான நீரையுடைய பொய்கையில் துடும் என்று விழுகின்ற,
கைவண் மத்தி கழாஅர் அன்னவள்ளண்மை உள்ள மத்தி என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற
நல்லோர் நல்லோர் நாடிநல்ல நல்ல பரத்தையரைத் தேடி
வதுவை அயர விரும்புதி நீயேமணம் செய்துகொள்ள விரும்புகின்றாய் நீ.
  
# 62# 62
இந்திர விழவின் பூவின் அன்னஇந்திர விழாவில் கூடுவதைப் போன்று, பூவைப் போன்ற,
புன் தலை பேடை வரி நிழல் அகவும்புல்லிய தலையைக் கொண்ட பெண்மயில் வரிவரியான நிழலின்கீழிருந்து அகவுகின்ற
இ ஊர் மங்கையர் தொகுத்து இனிஇந்த ஊரின் பரத்தை மகளிரை ஒன்றுசேர்த்துக்கொண்டு இனிமேல்
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரேஎந்த ஊரில் போய் நிற்கப்போகிறது தலைவனே, உனது தேர்?
  
# 63# 63
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்பொய்கையில் வாழும் புலவு நாற்றத்தையுடைய நீர்நாயானது
வாளை நாள் இரை பெறூஉம் ஊரவாளை மீனை தன் அன்றைய இரையாகப் பெறும் ஊரைச் சேர்ந்த தலைவனே!
எம் நலம் தொலைவது ஆயினும்என்னுடைய அழகெல்லாம் முற்றிலும் இல்லாமற்போனாலும்
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பேநாடமாட்டோம் பெருமானே! பிற மகளிர் அணைந்திருந்த மார்பினை.
  
# 64# 64
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇதன்னைச் சுற்றிச் சூழ்ந்தவராய் வரும் மகளிரோடு, விருப்பமுள்ள துணையைத் தழுவிக்கொண்டு
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர்இன்பம் மிகுந்த புதிய வெள்ளத்தில் நீ ஆடுவதைக் கண்டவர்கள்
ஒருவரும் இருவரும் அல்லர்ஒருவரோ, இருவரோ அல்லர்
பலரே தெய்ய எம் மறையாதீமேமிகப் பலராவர், என்னிடமிருந்து மறைக்கவேண்டாம்.
  
# 65# 65
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்கரும்பு நட்ட பாத்தியில் தானாகச் செழித்து வளர்ந்த ஆம்பல் மலரில்
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊரவண்டினங்கள் தம் பசியைப் போக்கிக்கொள்ளும் பெரிய நீர்வளத்தையுடைய ஊரனே!
புதல்வனை ஈன்ற எம் மேனிஅண்மையில் புதல்வனை ஈன்ற என் மேனியைத்
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவேதழுவவேண்டாம், அதனால், தீம்பால் பட்டு, உன் மார்பின் அழகு குலைந்துபோகும்.
  
# 66# 66
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோகோபங்கொள்ளமாட்டேன், பொய்சொல்லாமல் கூறு,
யார் அவள் மகிழ்ந தானே தேரொடுயார் அவள் தலைவனே? நீ தானாகத் தேருடன்,
தளர் நடை புதல்வனை உள்ளி நின்வீட்டில் தளர் நடை போடும் உன் புதல்வனை எண்ணியவனாய், உன்
வள மனை வருதலும் வௌவியோளேவளம் பொருந்திய வீட்டுக்கு வந்தபோது பின்னாலேயே வந்து உன்னைப் பற்றிக்கொண்டு போனவள்.
  
# 67# 67
மடவள் அம்ம நீ இனி கொண்டோளேஅறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னொடு நிகரா என்னொடு நிகரிதன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்; மலர்ந்த மலரில்
தாது உண் வண்டினும் பலரேபூந்தாதுக்களை உண்ணும் வண்டுகளைக் காட்டிலும் பலர் இருக்கிறார்கள்,
ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரேகூந்தல் தவழும், ஒளிவிடும் நெற்றியைப் பசந்துபோகச் செய்பவர்கள் –
  
# 68# 68
கன்னி விடியல் கணை கால் ஆம்பல்உதயத்திற்கு முற்பட்ட அதிகாலை வேளையில் திரண்ட தண்டினையுடைய ஆம்பல்
தாமரை போல மலரும் ஊரதாமரையைப் போல மலரும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!
பேணாளோ நின் பெண்டேஅடக்கமாய் இருக்கமாட்டாளோ உன் காதற்பரத்தை?
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளேநானே என்னை அடக்கிக்கொண்டிருக்கும்போது, அவள் அடங்காமல் என்னைப் பழித்துக் கூறுகிறாள்.
  
# 69# 69
கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டேநேராகவே பார்த்துவிட்டேன் தலைவனே! உன் காதற் பரத்தையை;
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்தபலரும் நீராடும் பெரிய நீர்த்துறையில் மலர்களை அடித்துக்கொண்டு வந்த
தண் புனல் வண்டல் உய்த்து எனகுளிர்ந்த வெள்ளநீர், தன் மணல்வீட்டை அழித்துவிட்டதாகத்
உண்கண் சிவப்ப அழுது நின்றோளேதன் மையுண்ட கண்கள் சிவந்துபோகும்படி அழுதுகொண்டிருந்தாள்.
  
# 70# 70
பழன பன் மீன் அருந்த நாரைநீர்நிலைகளிலுள்ள பலவான மீன்களை உண்ட நாரை
கழனி மருதின் சென்னி சேக்கும்வயல்வெளியிலுள்ள மருதமரத்தின் உச்சியில் சென்று தங்கும்
மா நீர் பொய்கை யாணர் ஊரமிக்க நீரையுடைய பொய்கையினையும், புதுவருவாயையும் உடைய ஊரனே!
தூயர் நறியர் நின் பெண்டிர்தூய்மையும், நறுமணமும் கொண்டவர் உன் காதற்பரத்தையர்,
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமேபேயைப் போன்றவளாகிவிட்டேன் நான், ஒரு சேயைப் பெற்றதால்.
  
# 8 புனலாட்டு பத்து# 8 புனலாட்டு பத்து
# 71# 71
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்துவஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
நின் வெம் காதலி தழீஇ நெருநைஉனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
ஆடினை என்ப புனலே அலரேமகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில், இதனால் எழுந்த பழிச்சொற்களை
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்நமறைத்துவிட முடியுமா? தலைவனே!
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியேபுதைத்துவிட முடியுமா ஞாயிற்றின் ஒளியை?
  
# 72# 72
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைவயலில் மலர்ந்த ஆம்பல் மலரால் தொடுக்கப்பட்டு மூட்டுவாய் அமைந்த அசைகின்ற தழையினையும்,
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்தேமல் படர்ந்த அல்குலில் அசைந்தாடும் கூந்தலையும்,
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல்குவளை போன்ற மையுண்ட கண்களையும் அழகும் மென்மையும் பொருந்திய இயல்பினையும் உடைய தலைவி
மலர் ஆர் மலிர் நிறை வந்து எனமலர்களைச் சுமந்துகொண்டு பெருவெள்ளம் வந்தபோது
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கேஅந்தப் புனலில் விளையாடுகையில் தழுவி விளையாடும் துணையாக இருந்தாள் எனக்கு.
  
# 73# 73
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழைநிறமமைந்த ஒளியையுடைய தழையுடை அசையும்படி, தூய அணிகலன்களையும்
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து எனஒளிபொருந்திய நெற்றியையும் உடைய தலைவி, நீர்விளையாட்டு ஆடினபோது
கள் நறும் குவளை நாறிதேனையுடைய மணங்கமழும் குவளை மலரின் நறுமணமே கமழ்ந்து
தண்ணென்றிசினே பெரும் துறை புனலேமிகவும் குளிர்ச்சியுடையதாயிற்று பெரிய துறையின் நீர்முழுதும்.
  
# 74# 74
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினேவானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்றபைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச,
கரை சேர் மருதம் ஏறிகரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பேநீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்.
  
# 75# 75
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்(கண்டவர்)பலர், இங்கு ஒத்துக்கொள்ளமாட்டாய், அதனால்
அலர் தொடங்கின்றால் ஊரே மலரபழிச்சொற்களைப் பேசத்தொடங்கிவிட்டது ஊர், மலர்களையுடைய
தொல் நிலை மருதத்து பெரும் துறைநெடுங்காலம் நிற்கும் மருதமரங்களைக் கொண்ட பெரிய துறையில்
நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவேஉன்னோடு ஒருத்தி நீர்விளையாட்டு ஆடினாள் குளிர்ந்த நீர்ப்பெருக்கில், என்பதனைக் –
  
# 76# 76
பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின்பஞ்சாய்க் கோரை போன்ற கூந்தலையும், புதிய மலர் போன்ற தேமலையும் கொண்டு,
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள்குளிர்ந்த நீர்ப்பெருக்கில் ஆடித் தன்னுடைய பெண்மை நலத்தில் மேன்மையுற்றாள்
ஒண் தொடி மடவரால் நின்னோடுஒளிரும் வளையல்களையும் இளைமையையும் கொண்ட அவள், உன்னுடன் –
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றேவானவர் மகளிர்க்குத் தெய்வமே போன்று –
  
# 77# 77
அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல்வாழ்க தலைவனே! உனக்கு ஒன்று சொல்வேன்!
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கிஇந்தப் பெரிய ஊரில் நம்மைப்பற்றிய பேச்சு எழும்படியாக, நீர் அலைத்தலால் கலங்கி
நின்னொடு தண் புனல் ஆடுதும்உன்னுடன் குளிர்ந்த நீர்ப்பெருக்கில் விளையாடுவேன்;
எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையேஎன்னுடன் வா, செல்லவேண்டாம் உன் வீட்டுக்கு.
  
# 78# 78
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளிஒளியையுடைய இலை அமைந்த நெடிய வேலையும், விரைந்து செல்லும் குதிரையையும் உடைய கிள்ளியின்
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்தபகைவரின் மதிலை அழிக்கின்ற யானையைப் போல விரைவாகத் தன் வழியிலே வந்த
சிறை அழி புது புனல் ஆடுகம்அணையை அழிக்கின்ற புதிய நீர்ப்பெருக்கில் விளையாடலாம்,
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையேஎன்னோடு சேர்ந்து பற்றிக்கொள்வாயாக, எனது தோளைப் போன்ற தெப்பத்தை.
  
# 79# 79
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள்புதிய நீர்ப்பெருக்கில் ஆடியதால் மாறுபட்டுத்தோன்றும் கண்களையுடையவள்
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்நயாருடைய மகள் இவள் என்று கையைப் பற்றிய தலைவனே!
யார் மகள் ஆயினும் அறியாய்இவள் யார் மகளாயினும் நீ அறியமாட்டாய்!
நீ யார் மகனை எம் பற்றியோயேநீ யாருடைய மகனோ? எம் கையைப் பற்றியிருப்பவனே!
  
# 80# 80
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோகோபித்துக்கொள்ளமாட்டேன்! பொய்யில்லாமல் சொல்க!
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகிஅழகு நலத்தில் தகுதியுடைய மகளிர்க்கு உமது தோளைத் துணையாக ஆக்கி
தலை பெயல் செம் புனல் ஆடிமுதல் மழையில் வந்த சிவந்த நீர்ப்பெருக்கில் ஆடி
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணேமிக மிகச் சிவந்துபோயுள்ளன, தலைவனே! உனது கண்கள்.
  
# 9 புலவி விராய பத்து# 9 புலவி விராய பத்து
# 81# 81
குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமைநாரை உடைத்து உண்டு கழித்த வெள்ளை வயிற்றினைக் கொண்ட ஆமையின் தசையை
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும்அரித்து எழும் ஓசையைக் கொண்ட பறையையுடைய உழவர்கள் தமக்கு வைத்துண்ணும் உணவாகக் கொண்டுச் செல்லும்
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீமலர்களால் அழகுபெற்ற நீர்த்துறை அமைந்த பொய்கையை உடைய ஊரைச் சேர்ந்தவனே! நீ
என்னை நயந்தனென் என்றி நின்என்னைப் பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறாய்; உனது
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதேமனைவி இதனைக் கேட்டால் வருந்துவாள் மிகவும்.
  
# 82# 82
வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள்வெகுண்டாள் என்று கூறுகின்றனர், பாணனே! உனது தலைவியாகிய பரத்தை,
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்தலைவனது மார்பில் உள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துகளோடு கூடிய மணமுள்ள மாலையில் மொய்த்த
தாது உண் பறவை வந்து எம்தேனுண்ணும் வண்டுகள் வந்து எமது
போது ஆர் கூந்தல் இருந்தன எனவேமலரும் நிலையிலுள்ள மொட்டுக்கள் நிறைந்த என் கூந்தலிலும் இருந்தன என்பதற்கே!
  
# 83# 83
மணந்தனை அருளாய் ஆயினும் பைபயஎன்னை நீ மணந்தாய், ஆயினும் என்மீது அருள்செய்யவில்லை; மெல்ல மெல்ல
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர்என்னைவிட்டுப் பிரிந்தவனாகி வாழக்கடவாய்! உனது ஊரில் உள்ள
ஒண் தொடி முன்கை ஆயமும்ஒளிவிடும் வளையல்களை அணிந்த முன்கையையுடைய பரத்தை மகளிரெல்லாம்
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கேகுளிர்ந்த துறையையுடைய ஊரனின் பெண்டுகள் என்று சொல்லப்படுவதற்காக –
  
# 84# 84
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்காதால் கேட்டாலும் பேச்சிழக்குமளவுக்குப் பெருஞ்சினங்கொள்வோள்,
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்கண்ணால் கண்டால் என்ன ஆவாளோ?
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்நறிய மலரணிந்த கூந்தலையுடைய மகளிர் ஆடும்
தைஇ தண் கயம் போலதைமாதத்துக் குளிர்ந்த குளத்தைப் போன்று
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பேபலரும் தழுவிக்கிடந்து நுகரும் உன் பரத்தமை அடையாளமுள்ள மார்பினை –
  
# 85# 85
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடைவெண்மையான நெற்றியையுடைய கம்புள் பறவையின் அரித்தெழும் குரலையுடைய பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும்குளிர்ந்த நறிய நீர்நிலையில் தன் கிளைகளோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும்
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீகுறை சொல்லமுடியாத புதுவருவாயை மிகுதியாகப் பொருந்திய ஊரனே! நீ
சிறுவரின் இனைய செய்திசிறுவரைப் போல இத்தகைய செயல்களைச் செய்கிறாய்!
நகாரோ பெரும நின் கண்டிசினோரேநகைக்கமாட்டார்களோ பெருமானே! உன்னைக் கண்டவர்கள்?
  
# 86# 86
வெண் தலை குருகின் மென் பறை விளி குரல்வெண்மையான தலையையுடைய நாரை மென்மையாகப் பறந்துகொண்டே அழைக்கும் குரலானது
நீள் வயல் நண்ணி இமிழும் ஊரநீண்ட வயல்வெளியை அடைந்து ஒலிக்கும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!
எம் இவண் நல்குதல் அரிதுஎமக்கு இங்கு இன்பம் நல்குதல் அரிது;
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமேஉம்முடைய வீட்டுப் பெண்ணோடே ஒன்றுசேர்ந்து இருப்பாயாக.
  
# 87# 87
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர்பகன்றைப்பூ மாலையைத் தலையில் சூடியவரும், பல பசுக்களை மேய்ப்பவருமான கோவலர்கள்
கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும்தாம் கடித்துத் தின்னும் கரும்புத் தட்டையைக் கொண்டு மாங்கனிகளை உதிர்க்கும்
யாணர் ஊர நின் மனையோள்புதுவருவாயையுடைய ஊரனே! உன் மனைவி
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோயாரையுமே சினந்து பேசுவாள் – என்னை மட்டும் சும்மா விடுவாளா?
  
# 88# 88
வண் துறை நயவரும் வள மலர் பொய்கைவளம் நிரம்பிய நீர்த்துறைகளில் யாவரும் விரும்பும் வளமையான மலர்கள் பூத்துள்ள பொய்கையின்
தண் துறை ஊரனை எவ்வை எம்_வயின்தண்ணிய நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தமக்கை என்னிடத்திற்கு
வருதல் வேண்டுதும் என்பவரவேண்டும் என்று கூறுகிறாள்;
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமேஅதனை விரும்பமாட்டாதவள் போல் நான் அதனையே வேண்டுகிறேன்.
  
# 89# 89
அம்ம வாழி பாண எவ்வைக்குகேட்பாயாக! வாழ்க! பாணனே! எம் தமக்கைக்கு
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்துஎதற்காகப் பெரிதும் அருள்செய்கின்றான் என்கிறார்கள்? நீர்நிலைகளில்
வண்டு தாது ஊதும் ஊரன்வண்டுகள் தேனுண்ணும் ஊரைச் சேர்ந்த தலைவன்
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பேமனைவி என்று அவளை விரும்பியது அவளின் நற்பண்புகளுக்காகமட்டும்தான்.
  
# 90# 90
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்புதுப்புதுப் பெண்டிரை நாடிச் செல்லும் தலைவனின் சிறந்த குணத்தை வண்டுகள் பற்றிக்கொண்டனவோ?
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்புதுப்புதுப் மலர்களைத் தேடிச் செல்லும் வண்டுகளின் சிறந்த குணத்தைத் தலைவன் பற்றிக்கொண்டானோ?
அன்னது ஆகலும் அறியாள்அவன் குணம் அப்படிப்பட்டது என்பதனை அறியாள்,
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயேஎன்னோடு கோபித்துக்கொள்ளும் அவனுடைய மகனின் தாய்.
  
# 10 எருமை பத்து# 10 எருமை பத்து
# 91# 91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்துஅலையலையாய் வளைந்திருக்கும் கொம்பினையுடைய எருமையின் கரிய பெரிய கடாவானது
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும்மணம் மிக்க மலர்களையுடைய பொய்கையில் உள்ள ஆம்பலைச் சிதைத்தழிக்கும்
கழனி ஊரன் மகள் இவள்வயல்வெளிகளையுடைய ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
பழன வெதிரின் கொடி பிணையலளேநீர்நிலைகளின் மூங்கிலான கரும்பின் நீண்டமைந்த மணமற்ற பூவினால் தொடுத்த மாலையையுடையவள்.
  
# 92# 92
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆகரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்
நுந்தை நும் ஊர் வருதும்உனது தந்தை இருக்கும் உன் ஊருக்கு வருகிறேன்,
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினேஒளிவிடும் வளையல்களை அணிந்த மடந்தையாகிய உன்னை நான் பெறுதல் கூடுமாயின்.
  
# 93# 93
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து எனஎருமையின் நல்ல கடாக்களின் கூட்டம் மேய்ந்து நிறைய உண்டுவிட்டதாக,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லாபசிய செங்கருங்காலியோடு, ஆம்பலும் தேனுண்ண ஒவ்வாமல்போய்விட்டன;
செய்த வினைய மன்ற பல் பொழில்இனி செய்யத்தக்க செயலாகத் தேர்ந்து, பல பொழில்களிலும்
தாது உண் வெறுக்கைய ஆகி இவள்தேனுண்ணுவதை வெறுத்தனவாகி, இவளின்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டேஅரும்பாக இருந்து அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம்.
  
# 94# 94
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமைமள்ளரைப் போன்ற வலிய பெரிய கொம்புகளையுடைய எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்மகளிரைப் போன்ற துணையோடு சேர்ந்து தங்கியிருக்கும்
நிழல் முதிர் இலஞ்சி பழனத்ததுவேநிழல் செறிந்த வாவியினைக் கொண்ட நீர்நிலையில் இருப்பதுவே
கழனி தாமரை மலரும்வயல்வெளியில் தாமரை மலர்ந்திருக்கும்
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரேஅழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியையுடையவளின் தந்தையின் ஊர்.
  
# 95# 95
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇகரிய கொம்பினையுடைய எருமை, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று,
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரை அன்றைக்கு உணவாக மேய்ந்து வயிற்றை நிரப்பும்
புனல் முற்று ஊரன் பகலும்நீர்வளம் சூழ்ந்த ஊரைச் சேர்ந்த தலைவன், பகல்பொழுதிலும்
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கேபடர்ந்து பெருகும் தீராத நோயைச் செய்தான் எனக்கு.
  
# 96# 96
அணி நடை எருமை ஆடிய அள்ளல்அழகான நடையைக் கொண்ட எருமை புரண்டெழுந்த சேற்றில்
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும்மணி போன்ற நீல நிற நெய்தல் ஆம்பலுடன் செழித்து வளரும்
கழனி ஊரன் மகள் இவள்வயல்வெளியைக் கொண்ட ஊரினைச் சேர்ந்தவனின் மகளான இவள்
பழன ஊரன் பாயல் இன் துணையேநீர்நிலைகள் சார்ந்த ஊரினைச் சேர்ந்தவனின் படுக்கைக்கு இனிய துணையாவாள்.
  
# 97# 97
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைபகன்றையின் வெண்மையான மலர்கள் சுற்றியிருந்த கொம்பினைக்
கரும் தாள் எருமை கன்று வெரூஉம்கரிய கால்களையுடைய எருமைக் கன்று கண்டு அஞ்சும்
பொய்கை ஊரன் மகள் இவள்பொய்கை இருக்கும் ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
பொய்கை பூவினும் நறும் தண்ணியளேஅந்தப் பொய்கையில் பூத்திருக்கும் பூவைக்காட்டிலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டவள்.
  
# 98# 98
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமைகுளிர்ந்த புனலில் நீராடிக் களிக்கும் பெரிய கொம்பினையுடைய எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊரதிண்ணிய பிணிப்புடன் செய்யப்பட்ட தோணியைப் போலத் தோன்றும் ஊரினனே!
ஒண் தொடி மட_மகள் இவளினும்ஒளிவிடும் வளையல்களை அணிந்த இளமையான மகளான இவளைக் காட்டிலும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னேஉன் தந்தையும் தாயும் கடுமையானவர்களோ, உன்னிடத்தில்.
  
# 99# 99
பழன பாகல் முயிறு மூசு குடம்பைநீர்நிலைகளை ஒட்டிப் படர்ந்திருக்கும் பாகல் கொடியில், முசுற்றெறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனி எருமை கதிரொடு மயக்கும்வயல்வெளிகளில் மேயும் எருமை, நெற்கதிரோடு சேர்த்து உழப்பிவிடும்,
பூ கஞல் ஊரன் மகள் இவள்பூக்கள் நெருக்கமாய் அமைந்துள்ள ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளேஎன் காம நோய்க்கு மருந்தாக அமையும் பெருத்த தோள்களையுடையவள்.
  
# 100# 100
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழைநீர்ப்பெருக்கில் விளையாடும் பெண்கள் கழற்றி வைத்த ஒளிரும் அணிகலன்கள்
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும்மணல் பரந்து மூடிக்கிடக்கும் உச்சியில் எருமை கிளைத்து வெளிப்படுத்தும்
யாணர் ஊரன் மகள் இவள்புதுவருவாயையுடைய ஊரைச் சேர்ந்தவனின் மகளான இவள்
பாணர் நரம்பினும் இன் கிளவியளேபாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள்.
  

Related posts