சொ – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொட்டை 1
சொட்டைகள் 1
சொரி 9
சொரிகின்ற 1
சொரிதரு 1
சொரிதருகின்ற 1
சொரிதரும் 2
சொரிந்த 2
சொரிந்ததாம் 1
சொரிந்தது 2
சொரிந்தனர் 1
சொரிந்தாள் 1
சொரிந்தான் 1
சொரிந்து 8
சொரிய 12
சொரியா 1
சொரியும் 3
சொரிவது 1
சொருக 1
சொருகின 1
சொருகினான் 1
சொல் 108
சொல்-மின் 1
சொல்படி 1
சொல்பவர்க்கும் 1
சொல்ல 20
சொல்லர் 1
சொல்லல் 3
சொல்லல 1
சொல்லலாம் 1
சொல்லலாமோ 1
சொல்லலுற்றான் 1
சொல்லவும் 1
சொல்லவே 2
சொல்லா 1
சொல்லாதவர்க்கும் 1
சொல்லாது 2
சொல்லாமல் 2
சொல்லாய் 3
சொல்லார் 2
சொல்லால் 6
சொல்லான் 2
சொல்லி 20
சொல்லிடை 1
சொல்லிய 10
சொல்லியதும் 1
சொல்லியவாறு 1
சொல்லியை 1
சொல்லிற்று 1
சொல்லின் 3
சொல்லின்வழி 1
சொல்லினர் 1
சொல்லினராயினும் 1
சொல்லினன் 2
சொல்லினால் 3
சொல்லினான் 3
சொல்லினுக்கு 1
சொல்லு 1
சொல்லு-மின் 1
சொல்லுக்கு 2
சொல்லுக 3
சொல்லும் 9
சொல்லுவார் 2
சொல்லுவான் 3
சொல்லுவீரே 1
சொல்லே 1
சொல்லேன் 1
சொல்லை 1
சொல்வகையே 1
சொல்வது 4
சொல்வர் 2
சொல்வரே 1
சொல்வரோ 1
சொல்வன 1
சொல்வாள் 1
சொல்வான் 23
சொல்வேன் 1
சொல 2
சொலற்கு 1
சொலா 1
சொலாக 1
சொலாகிய 2
சொலாது 1
சொலாதே 1
சொலார் 2
சொலால் 5
சொலாள் 1
சொலான் 1
சொலி 1
சொலினால் 1
சொலுவது 1
சொற்கள் 3
சொற்படி 5
சொற்படியே 1
சொற்பால 1
சொற்ற 3
சொற்றதும் 1
சொற்றருளி 1
சொற்றவர் 1
சொற்றவா 1
சொற்றனம் 1
சொற்றனன் 1
சொற்றாய் 1
சொற்றி 5
சொற்றிடவும் 1
சொற்று 4
சொன்ன 43
சொன்னது 1
சொன்னதும் 1
சொன்னதே 1
சொன்னபோது 1
சொன்னவகையே 1
சொன்னவன்-தானும் 1
சொன்னவாறு 2
சொன்னவை 3
சொன்னார் 8
சொன்னால் 3
சொன்னாலும் 2
சொன்னாள் 8
சொன்னான் 33
சொன்னானோ 1
சொன்னேன் 3
சொன்னேனே 1
சொன்னோம் 1
சொனான் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சொட்டை (1)

தொக்க வெண் கவரி ஆல வட்ட நிரை சொட்டை வாள் பரிசை துகிலுடன் – வில்லி:27 99/1

மேல்


சொட்டைகள் (1)

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1

மேல்


சொரி (9)

புரி வளை தரளம் சொரி புனல் அகழி புரிசை சூழ் புரம் குடி புகுந்தார் – வில்லி:6 26/4
தத்தி சொரி அருவி தட அரவக்கிரி சார்ந்தான் – வில்லி:7 12/4
தோடு என்று தாது என்று தெரியாது மது மாரி சொரி மாலையாய் – வில்லி:22 4/3
தூண்டு மா இவை சொரி மத களிறு இவை துரங்கம் – வில்லி:22 38/1
இடு துகில் நிரைத்த கொடி சொரி அருவி ஒக்கும் எழு குல கிரிகள் ஒக்கும் இரதம் – வில்லி:28 58/4
துரக தடம் தேர் தனஞ்சயன் கை வரி வெம் சாபம் சொரி கணையால் – வில்லி:37 29/1
கன்ன ஆறு சொரி மத களிற்று இனங்கள் வீழ்ந்தன – வில்லி:40 34/2
செம் புணீர் சொரி களத்தில் சிதறிட அறுத்து வீழ்த்தான் – வில்லி:46 43/4
ஆனாமல் சொரி கண்ணீர் ஆறு பெரும் கடலாக அழுது சோர்வாள் – வில்லி:46 240/2

மேல்


சொரிகின்ற (1)

சொரிகின்ற சோரி உடைய மகிபதி சுளிவு இன்றி மீள ஒரு கை நொடியினில் – வில்லி:44 77/2

மேல்


சொரிதரு (1)

தீய ஆகிய சிலீமுகம் உரன் உற சொரிதரு சிங்கஏறு அனையான் – வில்லி:46 21/4

மேல்


சொரிதருகின்ற (1)

மொண்டு சொரிதருகின்ற அடிசிலும் முந்து கறிகளும் வெந்த பால் – வில்லி:4 46/2

மேல்


சொரிதரும் (2)

தோற்று இசைக்கும் வசை கொண்டு மற்று அவர்கள் சொரிதரும் திறைகள் வாரி அம் – வில்லி:10 52/3
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழும் குருதி பெருக்கிடை – வில்லி:45 156/3

மேல்


சொரிந்த (2)

தும்பிமா பரிமா வீரர் என்று இவர் மெய் துணித்தலின் சொரிந்த செம் சோரி – வில்லி:42 207/2
கிடந்த உடல் வானவர்-தம் கிளை சொரிந்த பூ மழையால் கெழுமுற்று ஓங்க – வில்லி:46 236/1

மேல்


சொரிந்ததாம் (1)

மொண்டு மேல் உற சொரிந்ததாம் என நரை திரையுடன் மூப்பு ஒரு வடிவம் – வில்லி:27 235/3

மேல்


சொரிந்தது (2)

சோரி அந்தரத்தினின்றும் சொரிந்தது சோனை மேகம் – வில்லி:2 78/4
நெய் கடல் சொரிந்தது என்னுமாறு அருந்தி நீடு வான் முகடு உற நிமிர்ந்தான் – வில்லி:9 35/4

மேல்


சொரிந்தனர் (1)

சுத்த நீர் வியாதன் தௌமியன் முதலோர் சொரிந்தனர் சோமன் வந்து உதித்து – வில்லி:6 3/3

மேல்


சொரிந்தாள் (1)

இருந்த தாய் ஈன்ற அன்று போல் உருகி இரு தடம் கொங்கை பால் சொரிந்தாள்
அருந்துவான் போல இரவி_சேய் விரும்பி ஆதரத்துடன் புளகு ஆனான் – வில்லி:27 249/1,2

மேல்


சொரிந்தான் (1)

சர குவை சொரிந்தான் அமலன் அ உகத்து தசரதன்-தன் வயிற்று உதித்தே – வில்லி:10 147/4

மேல்


சொரிந்து (8)

சொரிந்து கனலின் உபயாசன் இமைப்பில் சுதனை தோற்றுவித்தான் – வில்லி:3 85/4
வளரும் அரும் தவ வேள்வி முனிவர் ஆர்த்தார் வாச நறு மலர் சொரிந்து வானோர் ஆர்த்தார் – வில்லி:5 56/4
தொகும் தராதல இறுதி போல் நெடும் புனல் சொரிந்து அவித்திடும் என்னை – வில்லி:9 6/2
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி – வில்லி:9 29/2
மின் வந்து அனைய நுண் இடையாய் விழி நீர் சொரிந்து மெலிய உனக்கு – வில்லி:11 231/3
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும் – வில்லி:13 83/1
மாதர்கள் வீதி-தோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த – வில்லி:13 153/3
தூ நானம் ஆடி மறைவாணர்க்கு அநேக வித தானம் சொரிந்து துகிலும் – வில்லி:46 7/2

மேல்


சொரிய (12)

ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய
ஆழி-வாய் முகிலும் மின்னுமே என்ன அரும் புனல் ஆடிய பின்னர் – வில்லி:10 109/2,3
போம் சாலின் நிணம் சொரிய துணைவரொடு குலம் மாள பொருவேன் யானே – வில்லி:11 255/2
விழிகள் ஆரம் சொரிய கொடுத்த பூ வேரி மாலை கொண்டு ஏகினள் மின் அனாள் – வில்லி:21 17/4
அன்னை நெஞ்சு அழிந்தே இரு கண் நீர் சொரிய அலறி வாய் குழறி நொந்து அழுதாள் – வில்லி:27 253/4
என்று இனி என தன் கண்கள் நீர் சொரிய இனைந்து நைந்து அழுதுஅழுது இரங்கி – வில்லி:27 259/3
கனியும் அன்பின் வெள்ளம் கண்ணீர் ஆகி சொரிய
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி – வில்லி:38 48/2,3
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி – வில்லி:41 91/3
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம் மிக சொரிய
செ அம்பரம் ஒத்த களத்திடை அ செய்யோன் மகன் வன்பொடு சீறி விடும் – வில்லி:45 215/2,3
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
கருத்தினுடன் அலமந்தான் அழுது பெரும் புனல் சொரிய கண் இலாதான் – வில்லி:46 241/4
பெருகு விழி நீர் சொரிய அடர்த்தலும் பின்னிட்டு அரனை பெட்பின் போற்றி – வில்லி:46 246/2

மேல்


சொரியா (1)

சர மழை இடி மழை தழல் மழை சொரியா
பெரு மழை என நனி பிளிறினர் எவரும் – வில்லி:13 131/3,4

மேல்


சொரியும் (3)

துற்ற குன்று என ஒன்றுபட்டு எழ சொரியும் மூளை ஆறு அருவி ஒக்குமே – வில்லி:31 26/4
சொரியும் கண்ணீர் துடைத்து துரியோதனனை நோக்கி – வில்லி:38 44/1
சொரியும் கணை மழை ஏவு துரோணாரியன் வில்லும் – வில்லி:41 110/1

மேல்


சொரிவது (1)

தூமம் படு செம் தழல் அவிய சோனை மேகம் சொரிவது போல் – வில்லி:11 228/3

மேல்


சொருக (1)

மயிர் கால்-தொறும் அம்பு இனம் சொருக மன்னற்கு இளையோன் மலைந்தானே – வில்லி:45 142/4

மேல்


சொருகின (1)

இருவர் நெற்றியும் எழுதின சில கணை இரு புயத்திடை சொருகின சில கணை – வில்லி:41 89/2

மேல்


சொருகினான் (1)

போல் எழு வய புரவி ஊரும் இரதத்து இரவி போய் உததியில் சொருகினான் – வில்லி:30 30/4

மேல்


சொல் (108)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
துய்ய வண் கலைவித சொல் மடந்தை-கொல் – வில்லி:1 43/3
மின் புரை தெரிவை சொல் விழைந்த நீ அவண் – வில்லி:1 73/3
நால் இரு வசுக்களும் நதி_மடந்தை சொல்
பால் இரு செவிப்பட படாத நல் தவம் – வில்லி:1 77/1,2
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
இரதம் முற்றிய சொல் மக பெறாதவருக்கு இல்லை என்று இயம்பும் நல் கதியும் – வில்லி:1 104/3
அவனியில் நிருபர் வெருவரும் திறலான் அரிய சொல் பொருள் நிலை அறிந்தே – வில்லி:1 105/4
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
நின் சொல் யாவரும் மறார் என கருதி நீ உரைப்பினும் நிகழ்ந்த இ – வில்லி:1 144/3
வேண்டுமால் இது தாயர் சொல் புரிதலின் விரதமும் கெடாது என்ன – வில்லி:2 3/2
முகுரவானனனும் வேத்து முனிவனும் மனம் சொல் காயம் – வில்லி:2 114/1
அம் சொல் முனி-தானும் இவன் மேல் எவரினும் பெருக அன்புடையன் ஆகி அகலான் – வில்லி:3 48/3
அன்று அவன் பதம் பணிந்து அளித்த சொல் தலைக்கொளா – வில்லி:3 74/2
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு – வில்லி:5 32/1
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/2
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
அன்னையை வணங்கி நின் சொல் ஆரண படியது ஆகும் – வில்லி:5 66/2
வியப்போடு தொல்லை முனி சொல் தலை மீது கொண்டு – வில்லி:5 89/1
பாண்டு மைந்தர் எனும் சொல் பரவலும் – வில்லி:5 98/2
மதி முறை தவறா அமைச்சர் சொல் விழையும் மன்னவர் ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/2
சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி – வில்லி:7 26/2
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் – வில்லி:7 69/1
தகைந்தபோது உயிர் சேடியர் தவிர்க என சில சொல்
பகர்ந்து போய் ஒரு மாதவி பந்தரில் புகுந்து – வில்லி:7 71/1,2
அளித்தும் என்ற சொல் தன் செவி படுதலும் பெற்றனன் போல் ஆகி – வில்லி:9 4/1
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4
சொல் மழை பொழிந்து நாள்-தொறும் தனது தோள் வலி துதிக்கும் நாவலர்க்கு – வில்லி:9 50/1
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
ஓவியம் சிறக்க தீட்டி ஒண் கொடி நிரைத்து செம் சொல்
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி – வில்லி:11 45/1,2
சொல் நவைக்கு ஏற்றது என்று தொழுதகு தாதை-தன்பால் – வில்லி:11 46/3
தோடு எலாம் எழு சுரும்பு இனம் மதுகர சொல் எலாம் செழும் கீதம் – வில்லி:11 53/2
அசைவு இல் அன்புடை தந்தை சொல் மறுப்பதோ என்றனன் அறம் செய்வான் – வில்லி:11 72/4
நேயம் உண்டு போல் நெஞ்சொடு இன்ன சொல்
தூய மைந்தரை சொல்லி நீவிர் போய் – வில்லி:11 132/1,2
நின்று வாய் புதைத்து அறங்கள் நிலைபெறும் சொல் நீதியாய் – வில்லி:11 154/2
கன்றுமாறு உரைத்தனன் சொல் கன்னன் என்னும் மன்னனே – வில்லி:11 167/4
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/3
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4
பண் நலம் கடந்த மென் சொல் பாவையை பழிக்க நீ இன்று – வில்லி:11 201/3
கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப மீண்டும் – வில்லி:11 202/1
ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
இன்னல் படு சொல் பாஞ்சாலி இரக்கம்-தனை கண்டு இரக்கம் உறா – வில்லி:11 233/1
சொல் நேர் உரைக்கு தான் பிறர்க்கு தொண்டாய்விட்டு சுரி_குழலை – வில்லி:11 238/3
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
நூல் வரு முறை சொல் என்றான் நோன் சிலை நூலின் மிக்கோன் – வில்லி:11 271/4
பெருமித வலியும் பாரும் பேணலார் கவர இன் சொல்
தருமனும் தம்பிமாரும் தழல் எழு தையலாளும் – வில்லி:12 1/1,2
சாரணர் இயக்கர் விச்சாதரர் முதல் பலரும் செம் சொல்
ஆரணப்படியே சூழ்ந்த அடவிகள்-தோறும் வைகி – வில்லி:12 32/1,2
நின்று பெரும் தவ முயல்வோர் தாங்கள் கொண்ட நினைவு ஒழிய புறத்து ஒன்று நினைவரோ சொல்
பொன்றிடினும் நீ அறிய பசுத்தோல் போர்த்து புலி பாய்ச்சல் பாய்வரோ புரிவிலாதாய் – வில்லி:12 95/3,4
கூறிய சொல் கொண்டு அறிந்து வேடன் மீண்டும் குருகுலத்தோர் ஐவருளும் குனி வில் கற்று – வில்லி:12 97/1
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள் – வில்லி:13 6/2
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
என்று காலகேயர் நின்று இசைத்த சொல் செவிக்கொளா – வில்லி:13 123/1
கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட – வில்லி:13 149/1
சொல் கொண்டு துதித்து எழுந்து துள்ளி நாளும் தொழுமவரே எழு பிறவி துவக்கு அற்றாரே – வில்லி:14 1/4
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா – வில்லி:14 28/1
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு – வில்லி:14 32/1
மேல் அளவாது விளங்கிய சொல் மெய் – வில்லி:14 55/1
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு – வில்லி:15 3/1
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/2
கன்னலும் புளிக்கும் இன் சொல் கயிரவம் கருகும் வாயாள் – வில்லி:18 1/4
சொல் தகு நிலனும் ஆயுவும் உணர்வேன் துயர் உறு பிணிகளும் தவிர்ப்பேன் – வில்லி:19 22/4
அன்ன நாளினில் மன்னவன் தேவியாம் அன்ன மென் நடை ஆர் அமுது அன்ன சொல்
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/1,2
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
சொல் நடுங்கவும் சுடர் முடி நடுங்கவும் சோர்ந்தான் – வில்லி:22 35/3
சொல் பயில் நான்மறை துவசன் வீடுமன் – வில்லி:22 74/2
பரசினோம் அடி என்று பின் உரிய சொல் பணித்தருள் என போந்தான் – வில்லி:24 7/4
பொன்றியே விடுகின்றினிர் முனிவர் சொல் பொய்க்குமோ பொய்யாதே – வில்லி:24 12/4
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின் சொல் மறுத்திடார் – வில்லி:26 2/2
துராசர் அன்பு இலர் என் சொல் இன்று சுயோதனாதியர் கை கொளார் – வில்லி:26 8/2
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி ஒண் குறு முறுவல் செய்து – வில்லி:26 10/2
செம் சொல் முனி சஞ்சயனுக்கு யாம் உரைத்த கருமமும் முன் சென்ற காலை – வில்லி:27 3/1
அம் சொல் முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த கருமமும் நீ அறிதி அன்றே – வில்லி:27 3/2
போர் முடித்தான் அமர் பாருது புலம்புறு சொல் பாஞ்சாலி பூம் தண் கூந்தல் – வில்லி:27 13/1
சொல் அவாவு உரக துவச நின் உரிய துணைவர்-தங்களை அழைத்து நீ – வில்லி:27 110/1
சொல் இரண்டு புகலேன் இனி சமரில் நின்று வெம் கணை தொடேன் எனா – வில்லி:27 129/1
ஆவது கருதானாகில் அமைச்சர் சொல் கேளானாகில் – வில்லி:27 140/1
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல்
எனக்கு இசையாமல் யானும் இரும் சிலை இறுத்தது என்றான் – வில்லி:27 142/3,4
முடி நெருக்கவும் முறை நெருக்கினர் முரசம் ஒத்த சொல் அரசரே – வில்லி:28 45/4
சொல் கையாத வாய்மை வல்ல துருபதன் குமாரனும் – வில்லி:30 9/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் – வில்லி:31 4/1
விதுரனும் வெம் சொல் ஆற்றான் வில்லினை ஒடித்து நின்றான் – வில்லி:36 14/1
அறம் மிக்க சொல் குண்டலபோசன் அனாதியக்கன் – வில்லி:36 30/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
சொல் கவ்வையாக நினையற்க கொன்று சுரர் நாடு அளிப்பன் இனி உன் – வில்லி:37 5/3
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே புகன்றனன் அரோ – வில்லி:37 6/4
சொல் பகல் இலான் இளவல் என்றனர் துதித்தார் – வில்லி:37 27/3
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி – வில்லி:37 32/2
சொல் அழிந்தது வில் அழிந்தது தேர் அழிந்தது தொடைகளால் – வில்லி:41 25/4
சொல் பொலி வய பகழி – வில்லி:41 61/3
நின் மகன் இறந்தால் என் சொல் மறாது ஒழி நீயும் என்றான் – வில்லி:41 152/4
வெய்ய என் சொல் வழுவுறாமை வேண்டும் என்ன முறுவலித்து – வில்லி:42 17/3
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே – வில்லி:42 57/1
சொல் கொண்டு வெறும் கையன் ஆம் அளவில் திட்டத்துய்மன் என நின்ற குரு துரோகி கொன்றான் – வில்லி:43 34/3
மெய் புதல்வன்-தனையும் அற மலைவன் என்னா வில் வளைத்தான் சொல் வளையா வேத நாவான் – வில்லி:43 35/4
சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும் – வில்லி:44 3/1
அனிலன் குமாரன் அரசர் அசனி என் அநுசன் சொல் வாய்மை பழுதுபடும் என – வில்லி:44 82/1
செம் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவி பட சிந்தனை தெளிவுற்று – வில்லி:45 8/1
புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கி புகன்றனையால் புல் மேயும் புல்வாய்க்கு என்றும் – வில்லி:45 26/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
சொல் கையா மனு குல தோன்றல் தோன்றினான் – வில்லி:45 120/4
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும் இரப்பவர் உள்ளங்கை – வில்லி:45 183/2
சொல் வளைத்திலர் தொடுத்தனர் தும்பை அம் தொடையார் – வில்லி:45 193/4
புகலும் சொல் அவன் செவியில் புகவே புண் மேல் அயில் உற்றது போன்றதுவே – வில்லி:45 205/4
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/4
மெய் வரு சொல் தவறாத வீமசேனனை ஒழிந்தால் வேறும் உண்டோ – வில்லி:46 141/4
சோமனுக்கு நிகர் ஆனோன் இளவலை நீ சொல் என்றான் – வில்லி:46 152/4
குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4
இணைதரும் சொல் கிளைஞர்கள் யாரையும் – வில்லி:46 229/2
நாடிய சொல் சுருதி நிகழ் நாவினான் சஞ்சயனும் நள்ளென் கங்குல் – வில்லி:46 239/1

மேல்


சொல்-மின் (1)

ஓடி நீர் சொல்-மின் என்று தூதரை ஓடவிட்டான் – வில்லி:22 110/3

மேல்


சொல்படி (1)

பொறுக்கும் தவ முனி சொல்படி புனித புனல் படிவான் – வில்லி:7 6/3

மேல்


சொல்பவர்க்கும் (1)

சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாதிபர்களுக்கும் – வில்லி:27 232/3

மேல்


சொல்ல (20)

சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல
நாண் நலம் திகழ் அம்பிகையிடத்து இவன் நண்ணலும் அவள் அஞ்சி – வில்லி:2 17/2,3
மதி அளித்த தொல் குலத்தவன் விழி இலா மகன் என தமர் சொல்ல
விதி அளித்தது என்று உளம் மகிழ்ந்தனள் வடமீன் என தகும் கற்பாள் – வில்லி:2 22/3,4
சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/4
சுற்றும் நின்று பல சம்புகங்கள் துதி சொல்ல அல்லல் மிகு துன்முகன் – வில்லி:4 51/2
விண்ணில் பயிலும் தேவர்களும் இவன் பேர் சொல்ல வெருவுவரால் – வில்லி:10 32/4
இ நிலம் சொல்ல வைத்தான் இவனை வேறு யாவர் ஒப்பார் – வில்லி:10 125/4
தன் பெரு மாமன் சொல்ல தரணிபன் தம்பி-தானும் – வில்லி:11 24/1
தன் அவைக்கு உரியோர் சொல்ல சகுனியும் தானும் நோக்கி – வில்லி:11 46/2
மண்ணில் அங்கு உவமை சொல்ல மடந்தையர் யாரும் இல்லா – வில்லி:11 201/2
சொல்ல பாவி தரியாமல் துச்சாதனனை முகம் நோக்கி – வில்லி:11 211/2
சத்திய விரதன்-தானும் தன் பெருந்தேவி சொல்ல
பத்தியால் வணங்கி மாயன் பன்னிரு நாமம் ஏத்தி – வில்லி:11 279/1,2
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன் – வில்லி:18 4/1
ஏந்து_இழை சொல்ல ஓராது இனிய இ கனி இன்று ஈர்ந்தாய் – வில்லி:18 9/2
மாறுகின்றிலை சொல்ல தகாத புன் மாற்றம் இன்னமும் மன்னுயிர் யாவும் வந்து – வில்லி:21 5/3
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/4
நின் பெரும் புதல்வர் சொல்ல நெடும் புனல் நாடு வேண்டி – வில்லி:27 148/1
இம்பர் மற்று யாது சொல்ல இளைஞரை அழைத்தது என்றான் – வில்லி:27 172/4
சொல்ல அரும் சிறையில் வைத்தல் தூதருக்கு உரிமை என்றான் – வில்லி:27 176/4
வென்றனம் இனி நாம் என்று மெய் முகில்வண்ணன் சொல்ல
குன்று அன குவவு தோளார் வெம் களம் குறுகினாரே – வில்லி:39 3/3,4
அன்று இகல் வருணன் கூறும் ஆகும் என்று அறிஞர் சொல்ல
துன்றிய வடிவத்தோடும் அடங்கினான் தோயத்தூடே – வில்லி:46 122/3,4

மேல்


சொல்லர் (1)

விவாதமே விளைக்கும் சொல்லர் வெகுளியே விளையும் நெஞ்சர் – வில்லி:13 15/3

மேல்


சொல்லல் (3)

துங்க வேல் துருபதன்-தான் சூழ்ந்தது சொல்லல் உற்றாம் – வில்லி:5 1/4
தொடக்கி உரைசெய நினைக்கில் ஆயிரம் நா உடையோற்கும் சொல்லல் ஆமோ – வில்லி:12 84/4
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ – வில்லி:13 127/4

மேல்


சொல்லல (1)

தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/4

மேல்


சொல்லலாம் (1)

சொல்லலாம் இருந்துழி சொன்ன சொற்படி – வில்லி:22 83/1

மேல்


சொல்லலாமோ (1)

தொடும் படை தட கை வீரர்க்கு உத்தரம் சொல்லலாமோ – வில்லி:11 21/4

மேல்


சொல்லலுற்றான் (1)

சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4

மேல்


சொல்லவும் (1)

வீமன் இப்படி சொல்லவும் வேரி அம் – வில்லி:42 146/1

மேல்


சொல்லவே (2)

தருக்கிய காமுகன் தகாது சொல்லவே
உரு கிளர் சாயலோடு உளம் அழிந்து போய் – வில்லி:21 20/1,2
தூரில் ஆசை அற துறந்தருள் சுருதி மா முனி சொல்லவே – வில்லி:26 9/4

மேல்


சொல்லா (1)

வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும் – வில்லி:43 18/3

மேல்


சொல்லாதவர்க்கும் (1)

சொல்லாதவர்க்கும் சொல்பவர்க்கும் சூழும் சமயாதிபர்களுக்கும் – வில்லி:27 232/3

மேல்


சொல்லாது (2)

சொல்லாது இருந்த பேர் அவையை தொழுதாள் அழுதாள் சோர்வுற்றாள் – வில்லி:11 232/2
சொல்லாது ஊமர் கணம் போல தொல் போர் வேந்தர் சூழ்ந்து இருப்ப – வில்லி:11 236/2

மேல்


சொல்லாமல் (2)

சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3

மேல்


சொல்லாய் (3)

சொல்லாய் நல்லாய் மென் பூவாய் தோகாய் பாவாய் துரௌபதியே – வில்லி:5 46/4
மெய் தவறாத சொல்லாய் வெருவுதல் என்-கொல் என்றான் – வில்லி:18 8/4
சொல்லாய் நீ தொல் வேதியர் உட்கும் தொழிலாய் நீ – வில்லி:43 33/2

மேல்


சொல்லார் (2)

மெய்யுற மறுத்து சொல்லார் வேண்டின தருவர் அன்றே – வில்லி:11 31/4
சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார் – வில்லி:27 141/2

மேல்


சொல்லால் (6)

சொல்லால் உருக்கி அழுது ஓடி தொடர்ந்து பற்றி – வில்லி:2 58/2
தருமன் மா மதலை சொல்லால் தளர்வுறு காலை மாலை – வில்லி:5 71/1
ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் – வில்லி:5 81/2
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3
ஊறிய அமுத சொல்லால் உத்தரற்கு உரைசெய்தானே – வில்லி:22 109/4
தூதர் வந்து உரைத்த சொல்லால் சோகமும் துனியும் மாறி – வில்லி:22 115/2

மேல்


சொல்லான் (2)

ஐந்து ஆன சொல்லான் அளித்தான் மற்று அவனும் முன் நாள் – வில்லி:5 81/3
இங்கு அயல் எழுந்த கோடம் யாது என யாதும் சொல்லான்
பங்கய நெடும் கண் சேப்ப நித்திலம் பரப்பினானே – வில்லி:41 155/3,4

மேல்


சொல்லி (20)

இனிமையின் பலவும் மாற்றம் யாவர்க்கும் யாவும் சொல்லி
தினகரன் தொழுத பின்னர் தேர் பரி கரிகள்-தோறும் – வில்லி:2 117/1,2
துணைவரை திரு தாய் பதம் தொழுக என சொல்லி
அணி கொள் கோயிலை தாதை நண்பனுக்கு இரை அளித்தான் – வில்லி:3 128/2,3
சொல்லி என் பயன் அரக்கன் நீ மனிதன் யான் உனக்கு உரிய தொழில்களாம் – வில்லி:4 56/1
சுரந்திடும் புயல்கள் அனைத்தையும் நெடு நீர் சொரிந்து அவித்திடுக என சொல்லி
நிரந்தரம் அருகு விடாது தன் நிழல் போல் நின்ற வானவரையும் ஏவி – வில்லி:9 29/2,3
தூய மைந்தரை சொல்லி நீவிர் போய் – வில்லி:11 132/2
கோனே சொல்லி யாவையும் முன் கொடுத்தான் கொடுத்த பின் இசைவு – வில்லி:11 213/2
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல் அடைவே சொல்லி
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/3,4
துன்றிய உவகை தூண்ட சுருதியால் ஆசி சொல்லி
வென்று மீள்க என்று வாழ்த்தி விரைவினில் வீரன் தன்னை – வில்லி:13 26/2,3
துயக்கம் அற இ கணத்தில் தெய்வ போக சுரபி மலர் அளித்திடுவன் என்று சொல்லி
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/3,4
துன்புறாது இரும் என சொல்லி ஏகினான் – வில்லி:16 67/3
சுருதி கடவுள் அனையானை சுனை நீர் படிந்து வர சொல்லி
கருதி பிற நாம் புரியும் அது கடனோ என்றான் கழல் விசயன் – வில்லி:17 6/1,2
ஆங்கு அவர்க்கு இவன் அவண் நிகழ்ந்தன எலாம் அரும் தகை உற சொல்லி
ஈங்கு வந்து எழில் யாதவற்கு இயம்பலும் யாதவன் மகிழ்வுற்று – வில்லி:24 21/1,2
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/4
சிந்தையின் ஐயம் தீர இதனை நீ தெளிய சொல்லி
கொந்து அவிழ் அலங்கலானை கூட்டுக விரைவின் அம்மா – வில்லி:27 153/3,4
சொல்லி ஒருவர்க்கொருவர் தொடு சிலை குனித்தார் – வில்லி:29 50/4
உச்சாசனம் சொல்லி நின்றான் அ அடல் மன்னர் உடன் ஓடவே – வில்லி:33 9/4
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
தோயும்படி நின் பொர நின்றேன் என்றே சொல் ஆயிரம் சொல்லி
சேயும் தனக்கு நிகர் இல்லா சிகண்டி கடும் கால் சிலை வாங்கி – வில்லி:37 32/2,3
ஏந்து அரா எழுதிய பொன் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும் உடன்பட்டான் என் செய்வானே – வில்லி:45 29/4
துங்க மணி முடி வேந்தர் சொல்லி முடிப்பதற்கு அடங்கார் துரக மாவும் – வில்லி:46 131/2

மேல்


சொல்லிடை (1)

சொல்லிடை நஞ்சு கக்கும் துன் மதி உடைய தம்பி – வில்லி:11 7/1

மேல்


சொல்லிய (10)

சொல்லிய கருமம் வாய்ப்ப சூழ் வலை படுத்தி கொண்ட – வில்லி:11 16/3
சொல்லிய இளைஞர்-தாமும் தொண்டினராக சொற்றி – வில்லி:11 197/4
அரு மறை சொல்லிய நாமம் ஆயிரமும் உரை தழைக்க அமரர் போற்றும் – வில்லி:11 247/1
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம் – வில்லி:14 78/3
சொல்லிய காலம் செல்லா முன் இவர் தோற்றம் செய்தார் – வில்லி:22 104/2
சொல்லிய நிருபர் தானை ஆறொடும் கடலின் சூழ்ந்தார் – வில்லி:28 17/4
சொல்லிய வில் கை வாயு_சுதனுடன் உருமேறு என்ன – வில்லி:39 13/3
துரியோதனன் அவர் சொல்லிய சொல் தன் செவி சுடவே – வில்லி:42 57/1
சொல்லிய அறங்கள் யாவும் நின்னிடை தொக்க ஆற்றால் – வில்லி:43 25/2
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3

மேல்


சொல்லியதும் (1)

துளி ஆர் மதுவின் வலம்புரி தார் துரியோதனன்-தான் சொல்லியதும்
ஒளி ஆர் அவையில் வாள் வேந்தர் ஒருவர்க்கொருவர் உரைத்தனவும் – வில்லி:27 226/1,2

மேல்


சொல்லியவாறு (1)

சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4

மேல்


சொல்லியை (1)

கன்னலை அமுதொடு கலந்த சொல்லியை
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும் – வில்லி:12 141/2,3

மேல்


சொல்லிற்று (1)

துரக்கைக்கு நின்றேன் என தெவ்வர் தம்மொடு சொல்லிற்று என – வில்லி:33 4/2

மேல்


சொல்லின் (3)

தொடங்கா இவரை இளைப்பித்த தொழிலை சொல்லின் ஒரு நாவுக்கு – வில்லி:16 20/3
நெருப்பினும் சொல்லின் நா வேம் நினைப்பினும் நெஞ்சம் வேமால் – வில்லி:16 31/4
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின் சூரன் – வில்லி:29 14/3

மேல்


சொல்லின்வழி (1)

செய்தால் அவன் உரைத்த சொல்லின்வழி ஒழுகி வந்து நினை உவகையால் – வில்லி:1 139/3

மேல்


சொல்லினர் (1)

தெழித்த சொல்லினர் சீற்ற வெம் தீ உக – வில்லி:13 32/1

மேல்


சொல்லினராயினும் (1)

சொல்லும் ஆடவர் சொல்லினராயினும்
கொல்லுமோ கனல் தான் பெற்ற கோதையை – வில்லி:21 93/1,2

மேல்


சொல்லினன் (2)

தொடுத்த நூல் முனிவரோடும் சொல்லினன் சுடர்கள் தம்மில் – வில்லி:28 29/3
சொல்லினன் பகைவன்-தன்னை சுடர் முடி துணித்தி என்றே – வில்லி:42 157/4

மேல்


சொல்லினால் (3)

தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால்
மிக்கோர் மிலைச்சும் செழும் தாம விறல் வெட்சி மிலை தோளினான் – வில்லி:22 8/1,2
சொல்லினால் ஒரு தூதினில் அறியலாம் சுயோதனன் நினைவு என்று – வில்லி:24 2/3
சொல்லினால் உயர் ஆயுள் வேதியர் சுதனை இன்று அமரில் – வில்லி:44 34/2

மேல்


சொல்லினான் (3)

சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/4
சொல்லினான் மறை மொழி துரோணன்-தானுமே – வில்லி:41 251/4

மேல்


சொல்லினுக்கு (1)

சொல்லினுக்கு உததி தோய் கை தொல் முனி என்ன வன் போர் – வில்லி:20 1/3

மேல்


சொல்லு (1)

சோமகர்க்கு அரசன் பாவை சொல்லு முன் வில்லு வாங்கி – வில்லி:18 3/1

மேல்


சொல்லு-மின் (1)

சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4

மேல்


சொல்லுக்கு (2)

சொல்லுக்கு விடேன் இன்று நீயும் நானும் தோள் வலியும் சிலை வலியும் காண்டல் வேண்டும் – வில்லி:12 99/3
சாதேவனும் அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு இசைந்தான் தருமனுமே – வில்லி:17 7/4

மேல்


சொல்லுக (3)

உய்வண்ணம் சொல்லுக நீ உபாயம் என தொழுது உரைப்பான் உரம் கொள் வேலான் – வில்லி:27 31/4
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான் – வில்லி:45 242/2

மேல்


சொல்லும் (9)

வேறான துகில் தகைந்த கை சோர மெய் சோர வேறு ஓர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா என்று அரற்றி குளிர்ந்து நாவில் – வில்லி:11 246/2,3
சொல்லும் நூல்களில் பெரியது ஏது அரிய மெய் சுருதி – வில்லி:16 55/1
சொல்லும் ஆடவர் சொல்லினராயினும் – வில்லி:21 93/1
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
நகுலன் இவை உரைத்ததன் பின் நன்று என கை அமைத்தருளி நகுலன் சொல்லும்
இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம் – வில்லி:27 28/1,2
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1
சொல்லும் பெரும் செம்மல் பல்லங்கள் அவன் மேல் தொடுத்து ஏவினான் – வில்லி:33 7/2
அந்தஅந்த வீரர் செய்த ஆண்மை சொல்லும் அளவதோ – வில்லி:43 10/2
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3

மேல்


சொல்லுவார் (2)

தும்பை சூட கருதினர் சொல்லுவார் – வில்லி:12 9/4
துன்று கோபத்துடன் அவர் சொல்லுவார் – வில்லி:13 46/4

மேல்


சொல்லுவான் (3)

சோதி அம் புதல்வனும் தொழுது சொல்லுவான் – வில்லி:4 29/4
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான் – வில்லி:13 44/4
துன்று பொன் தவிசினில் இருத்த இருந்து சில் உரை சொல்லுவான் – வில்லி:26 4/4

மேல்


சொல்லுவீரே (1)

தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4

மேல்


சொல்லே (1)

வெம் பரி நகுலன் சொல்லே விதி என கருதி அப்போது – வில்லி:18 13/3

மேல்


சொல்லேன் (1)

ஏதிலார் போல யானும் இனி உனக்கு யாதும் சொல்லேன்
தீது அலாது உணரா வஞ்ச சிந்தையார் பரிந்து கூறும் – வில்லி:11 39/2,3

மேல்


சொல்லை (1)

சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/3

மேல்


சொல்வகையே (1)

மாற்றினர் பிளந்து பெரு வண்மை சிறு நுண்மை சலம் நிச்சலம் என சொல்வகையே – வில்லி:3 55/4

மேல்


சொல்வது (4)

சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே – வில்லி:2 62/2
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/4
செற்றவர்-தம்முடன் உற்றது சொல்வது சேவகமோ அறிவோ – வில்லி:41 226/2
வித்தகன் மலைந்து செற்ற விரகை என் சொல்வது என்றான் – வில்லி:43 27/4

மேல்


சொல்வர் (2)

எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
பெற்றிட கொடுக்கும் செல்வம் உண்டு என்று பெரியோர் சொல்வர்
கொற்றவ உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும் – வில்லி:13 12/2,3

மேல்


சொல்வரே (1)

சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே – வில்லி:26 13/4

மேல்


சொல்வரோ (1)

சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் – வில்லி:22 122/4

மேல்


சொல்வன (1)

சொல்வன அறிந்து சொல்லார் சுற்றமும் துணையும் நோக்கார் – வில்லி:27 141/2

மேல்


சொல்வாள் (1)

கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4

மேல்


சொல்வான் (23)

இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் – வில்லி:11 8/4
தா வரு புரவி திண் தேர் தானையான் சகுனி சொல்வான்
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும் – வில்லி:11 20/2,3
பன்னக துவசன் கேட்டோர் பலரும் மெய் பனிக்க சொல்வான் – வில்லி:11 193/4
அரம் கடி சமர வேலான் அழல் பொழி உருமின் சொல்வான்
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/2,3
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான் – வில்லி:11 212/4
கோத்தவன் பின்னும் சொல்வான் குன்ற வில்லவன்-பால் இன்று – வில்லி:12 25/2
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான்
புவனம் மூன்றினுக்கும் உன்னை போல் ஒரு வீரன் உண்டோ – வில்லி:13 10/1,2
சூதனும் அவனுக்கு அன்னோர் இயல்பு எலாம் தோன்ற சொல்வான் – வில்லி:13 21/4
மஞ்சு என கரிய மெய்யான் மனம் கனன்று இனைய சொல்வான் – வில்லி:13 151/4
சொல்லு-மின் என்றான் என்றலும் தொழுது சுரபதி மகன் இவை சொல்வான் – வில்லி:19 2/4
கனைவரு கழலாய் புரிவது யாது என்றாள் காளையும் கனன்று இவை சொல்வான் – வில்லி:21 46/4
வெல் படை வேந்தன் சொல்ல வீடுமன் மீண்டும் சொல்வான் – வில்லி:22 104/4
சுந்தர கிரிகள் போலும் தோளினான் தோன்ற சொல்வான் – வில்லி:22 136/4
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் – வில்லி:24 9/4
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான்
இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர் – வில்லி:27 168/1,2
தம்பியை முனிந்து சீறி தமையனை நோக்கி சொல்வான்
வம்பு அவிழ் அலங்கல் மார்ப மந்தணம் உரைக்கலுற்றால் – வில்லி:27 172/2,3
சதிப்பதே கருமம் என்று சௌபலன் பின்னும் சொல்வான் – வில்லி:27 175/4
வலக்கண் நேர் முனிவரோடும் மன்னவரோடும் சொல்வான் – வில்லி:41 91/4
சந்து அணி குவவு தோளான் சல்லியன்-தனக்கு சொல்வான் – வில்லி:45 34/4
சொல்லுக உனக்கு தருதும் என்று உரைப்ப சூரன் மா மதலையும் சொல்வான்
அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும் ஏழ் எழு பிறப்பும் – வில்லி:45 242/2,3
தீ என தீய நெஞ்சன் செவி சுட சில சொல் சொல்வான் – வில்லி:46 130/4
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான்
கந்தருவர் அன்று உன்னை கட்டிய தோள் வலி கொண்டோ – வில்லி:46 164/2,3
உறைத்து மீளவும் உயிர்த்து மாயனொடு உருத்து வாசகம் உற சொல்வான்
குறிப்பினால் விசயனை கொடு ஆர் உயிர் குறிக்கும் மா மதி கொளுத்தினாய் – வில்லி:46 188/2,3

மேல்


சொல்வேன் (1)

இந்த மண்டபம் சமைந்த இனிமை-தன்னை என் சொல்வேன்
முந்தை மண்டபங்களுக்கும் முதன்மையான தேவர் ஊர் – வில்லி:11 157/1,2

மேல்


சொல (2)

தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4
தருமத்தினது உயிர் என்று உரை தக்கோர் சொல மிக்கோன் – வில்லி:44 71/4

மேல்


சொலற்கு (1)

சொலற்கு அரும் புகழ் சுரபதி கொடுப்ப அ தோன்றலும் தொழுது கை கொண்டான் – வில்லி:27 241/4

மேல்


சொலா (1)

தருக துகில் என எழுந்து தங்களை வன்பொடு துச்சாதனன் சொலா முன் – வில்லி:11 245/1

மேல்


சொலாக (1)

அருகு வரு சிந்துராச திலகனொடு அபரிமிதம் இன் சொலாக உரைசெய்தான் – வில்லி:41 45/4

மேல்


சொலாகிய (2)

முன் சொலாகிய சொல் எலாம் முழுது உணர் முனிவன் – வில்லி:1 5/1
தன் சொலாகிய மா பெருங்காப்பியம்-தன்னை – வில்லி:1 5/2

மேல்


சொலாது (1)

என்ன பாவம் மற்று என்னை இன்று என் சொலாது உலகே – வில்லி:1 3/4

மேல்


சொலாதே (1)

இன்னம் இரந்து அவன் குடை கீழ் இருந்தக்கால் நம்மை உலகு என் சொலாதே – வில்லி:27 26/4

மேல்


சொலார் (2)

வஞ்ச நெஞ்சுடை வஞ்சியர் என் சொலார் மறவோய் – வில்லி:22 36/4
வார் முக கன தன மாதர் என் சொலார் – வில்லி:22 69/4

மேல்


சொலால் (5)

தென்_சொலால் செய்தலின் செழும் சுவை இல்லா – வில்லி:1 5/3
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
வன் சொலால் இரத மணம் உறேன் என மனத்தினால் விரதம் மன்னினேன் – வில்லி:1 144/2
என்று உரம் நெருங்க புல்லி இன் சொலால் உவகை செய்தான் – வில்லி:25 10/4
வாழ அன்று உயர் நாரணனார் திரு வாய் மலர்ந்த சொலால் மகிழா மிக – வில்லி:46 183/2

மேல்


சொலாள் (1)

கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4

மேல்


சொலான் (1)

ஓதும் வேந்துக்கு ஒரு மொழியும் சொலான்
வேத பண்டிதன் நிற்க அ வீரனை – வில்லி:46 225/1,2

மேல்


சொலி (1)

விதுரன் இன்று அவனொடு உறவு கொண்டது ஓர் வியப்பை என் சொலி வெறுப்பதே – வில்லி:27 126/4

மேல்


சொலினால் (1)

ஆய இன் சொலினால் துயர் ஆற்றிட – வில்லி:46 232/2

மேல்


சொலுவது (1)

நன்று அல்ல வீரத்தில் ஓரம் சொலுவது என்று நனி சீறினான் – வில்லி:40 86/4

மேல்


சொற்கள் (3)

தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால் – வில்லி:22 8/1
குரவர் சொற்கள் மறுத்து வன்பொடு கொண்ட பார் உடையான் – வில்லி:44 42/1
குந்தி_மகன் முகம் நோக்கி கொடும் சொற்கள் சில சொல்வான் – வில்லி:46 164/2

மேல்


சொற்படி (5)

சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ – வில்லி:3 113/2
துங்க மா முனி சொற்படி தோள் வடம் நெகிழ்த்து – வில்லி:22 22/2
சொல்லலாம் இருந்துழி சொன்ன சொற்படி
வெல்லலாம் என்பது விதிக்கும் கூடுமோ – வில்லி:22 83/1,2
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் – வில்லி:27 195/1
அந்தம் உறு கடன் கழித்தி என உலுகன் சொற்படி நின்று அளித்த பின்னர் – வில்லி:46 248/4

மேல்


சொற்படியே (1)

தருமன் மா மதலை அந்த சடங்கு சொற்படியே தொட்டு – வில்லி:10 106/1

மேல்


சொற்பால (1)

சொற்பால அல்லா பழி கூர் உரை சொல்வது என்னே – வில்லி:2 62/2

மேல்


சொற்ற (3)

சொற்ற பின் தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே – வில்லி:29 17/4
ஆடையான் அறிந்து சொற்ற அவதி ஈது என்று கொண்டான் – வில்லி:43 17/4
வெற்றி புனை பலபத்ரராமனும் மெய் துணைவன் இவை சொற்ற காலையில் – வில்லி:46 196/1

மேல்


சொற்றதும் (1)

பரிந்து அறன் தரு காளை சொற்றதும் வீமன் நின்று பகர்ந்ததும் – வில்லி:26 18/3

மேல்


சொற்றருளி (1)

அரு மறை முறையால் அரசனை முனிவர் அனைவரும் ஆசி சொற்றருளி
தரு நிரை பயிலும் தம்தம விபினம் சார்ந்தனர் தகவுடன் மீள – வில்லி:10 151/1,2

மேல்


சொற்றவர் (1)

சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4

மேல்


சொற்றவா (1)

சொற்றவா நன்று சுகன் திரு தாதை சூதிகை தோன்றிய பொழுதே – வில்லி:10 117/1

மேல்


சொற்றனம் (1)

சொற்றனம் ஆங்கண் இங்கும் துயில் உணர் பொழுதத்து இன்று – வில்லி:25 12/2

மேல்


சொற்றனன் (1)

சொற்றனன் சுரர் கோ முன் தொழுது அரோ – வில்லி:12 168/4

மேல்


சொற்றாய் (1)

சோரன் ஆதலின் சொற்றாய் இனி தவிர் சுரேசர் ஐவர்-தம் காவல் என் தோள் இணை – வில்லி:21 6/3

மேல்


சொற்றி (5)

துரங்கமும் களிறும் தேரும் துறைதுறை கவர சொற்றி – வில்லி:11 196/4
தொல்லை மா நகரும் நாடும் தோரணம் நாட்ட சொற்றி
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/1,2
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/2,3
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி
சொல்லிய இளைஞர்-தாமும் தொண்டினராக சொற்றி – வில்லி:11 197/3,4
சொல்லிய இளைஞர்-தாமும் தொண்டினராக சொற்றி – வில்லி:11 197/4

மேல்


சொற்றிடவும் (1)

அகம் மலர்ந்து முனி ஆசி சொற்றிடவும் அன்னை ஆர்வ உரை கூறவும் – வில்லி:4 63/1

மேல்


சொற்று (4)

துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/4
இசையும்படி சொற்று அவரோடும் இருந்த பின்னர் – வில்லி:23 16/2
சொற்று அராபதம் நெருங்க தொடை தும்பை புனைந்தானே – வில்லி:40 2/4
வித்தகனும் ஆசி சொற்று சதாகதி சேயினை தழுவ வேண்டும் என்ன – வில்லி:46 249/3

மேல்


சொன்ன (43)

சொன்ன பாவலன் துகள் அறு சுகன் திரு தாதை – வில்லி:1 3/2
வரிசையால் உயர் அநேக மண்டல மகீபர் சொன்ன சொல் மறுக்கினும் – வில்லி:1 139/1
தொழுது சொன்ன பின் மனம் தெளிந்து அன்னையும் தோன்றலுக்கு உரைசெய்வாள் – வில்லி:2 4/4
சொன்ன நாள் வழுவுறாமல் சுயோதனன் தோன்றினானே – வில்லி:2 77/4
சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய் யானோ சோரேன் – வில்லி:3 43/4
சொன்ன சொற்படி சூழ் படை வேண்டுவ – வில்லி:3 113/2
சொன்ன நாள் தொடங்கி ஐந்து சூரரும் தேவர் நாளுக்கு – வில்லி:6 46/1
தோளினும் சென்னித்தலத்தினும் மற்போர் சொன்ன போர் விதம் எலாம் தொடங்கி – வில்லி:10 23/3
விதரண வினோதன் சொன்ன வார்த்தையும் வேந்தர்_வேந்தன் – வில்லி:11 6/1
தமையனும் தம்பி சொன்ன தன்மையை உணர்ந்து நீதி – வில்லி:11 8/1
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4
சொன்ன தாயமே புரண்டு சோர்வு இலாமல் வருதலின் – வில்லி:11 188/2
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
சொன்ன வாசகம் கேட்ட சுரபதி – வில்லி:12 169/1
வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா – வில்லி:13 94/1
நன்று காலகேயர் சொன்ன வாய்மை நன்று எனா நகைத்து – வில்லி:13 123/2
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில் அறனால் வந்த – வில்லி:16 38/1
முந்த மல் கலை நூல் சொன்ன முறைமையின் அரசன் காண – வில்லி:20 5/3
சொன்ன சாயல் சுதேட்டிணை-தன் திரு துணைவர் நூற்றுஒருநால்வரில் தோற்றமும் – வில்லி:21 1/2
சொல்லலாம் இருந்துழி சொன்ன சொற்படி – வில்லி:22 83/1
இளவல் சொன்ன மாற்றமும் அரசன் சாற்றி – வில்லி:25 18/2
நேமியான் இவை சொன்ன வீரனை நிற்க என்று நிறுத்தி உள் – வில்லி:26 17/1
இவ்வண்ணம் சாதேவன் இயம்புதலும் நகைத்தருளி இகலோர் சொன்ன
அவ்வண்ணம் புகலாமல் விரகு உரைத்தான் இவன் என்ன அவனோடு ஆங்கு ஓர் – வில்லி:27 31/1,2
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு – வில்லி:27 78/3
தூதன் ஆகி வரு தன்மை சொல்லுக என மன்னர்_மன்னன் இது சொன்ன பின் – வில்லி:27 108/3
சூதினால் அரசு இழந்து நின் துணைவர் சொன்ன சொல்லும் வழுவாது போய் – வில்லி:27 109/1
சொன்ன வாய் குருதி சோர வாள் கொடு துளைத்து நின் முடி துணிப்பன் யான் – வில்லி:27 127/2
சொன்ன மந்திரம் ஓர் ஐந்தின் ஒன்றினால் சூரன்-தன்னை – வில்லி:27 149/3
தாதையும் விசும்பில் சொன்ன நாமமே தக்கது என்றான் – வில்லி:27 151/4
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4
பொலியும் நாமம் மறைகள் சொன்ன பொருள் விளக்கும் நாமம் முன் – வில்லி:38 1/3
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் – வில்லி:38 50/4
சொன்ன உரை ஆன கனல் சுட்ட செவியோடும் – வில்லி:41 185/3
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன
அசைவு இல் மொழி மறுத்து உடற்றல் ஆகாது என்று இருக்கின்றேன் அறிகிலீரே – வில்லி:41 240/3,4
துயில் உணர் குரிசிலுக்கு அடைவில் சொன்ன பின் – வில்லி:41 258/4
சொன்ன வார்த்தையும் பிற்பட முற்பட தொழுது – வில்லி:42 113/1
சொன்ன மொழி பிழைத்தான் வெம் சுவேத துரங்கமன் என்று துள்ளி ஆர்த்தார் – வில்லி:42 169/2
வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு – வில்லி:45 39/1
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு – வில்லி:45 41/1
சொன்ன திண் திறல் துருபதேயனும் சோமகேசராய் உள்ள சூரரும் – வில்லி:45 53/3
சொன்ன சிங்க துவசனை ஆதியா – வில்லி:46 223/1
சொன்ன பாலர் மகுடம் துணித்தது இன்று – வில்லி:46 226/3
துரகததாமனுக்கும் அமைத்து இவ்வுழி நீர் இருத்திர் என சொன்ன பின்னர் – வில்லி:46 238/2

மேல்


சொன்னது (1)

சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3

மேல்


சொன்னதும் (1)

தூது போய் அரவ துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்து அவன் சினந்து – வில்லி:27 261/1

மேல்


சொன்னதே (1)

சொன்னதே துணிந்து மார்பும் தோள்களும் பூரித்திட்டான் – வில்லி:11 29/4

மேல்


சொன்னபோது (1)

சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4

மேல்


சொன்னவகையே (1)

வரு நாள் தொடங்கி அமர் செய்து தெவ்வை மடிவிப்பர் சொன்னவகையே
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/2,3

மேல்


சொன்னவன்-தானும் (1)

சொன்னவன்-தானும் இந்த சோகமோ தொகுக்க மாட்டான் – வில்லி:16 27/4

மேல்


சொன்னவாறு (2)

சொன்னவாறு நன்று உனக்கு இது ஆர் சொற்றவர் என்றான் – வில்லி:14 33/4
சொன்னவாறு குறியும் உள்ள துரகதம் துணிந்தன – வில்லி:40 34/1

மேல்


சொன்னவை (3)

சொன்னவை மறுத்து மாறு சொல்வரோ சுருதி வல்லாய் – வில்லி:22 122/4
துரந்தபோது அவர்க்கு உதவுவர் சொன்னவை எல்லாம் – வில்லி:27 93/4
சொன்ன வேலையில் நகைத்து உனக்கு அளிப்பன் நீ சொன்னவை யாவையும் என்றான் – வில்லி:27 237/4

மேல்


சொன்னார் (8)

சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/4
இன்னதே கருமம் என்று என்று இளைஞரும் விழைந்து சொன்னார்
அன்னதே கருமம் ஆக அவர் வழி ஒழுகும் நீரான் – வில்லி:11 29/1,2
ஆறு அலாதன அரசருக்கு என்று கொண்டு அரச நீதியில் சொன்னார்
கூறலாதன சொல்வது என் செல்வது என் கொடியவன் அருகு என்றான் – வில்லி:11 71/3,4
ஓது நூல் புலவர் சொன்னார் உமக்கு உள உணர்வு அற்று அன்றே – வில்லி:11 265/3
வண்டு அணி தாரான் செய்த வஞ்சனை அனைத்தும் சொன்னார் – வில்லி:12 21/4
தொறு நிரை மீட்டவாறும் தூதர் போய் தொழுது சொன்னார் – வில்லி:22 114/4
மகத்தில் சனி போல் வளைக்குவம் யாம் என வஞ்சினமும் பல சொன்னார் – வில்லி:39 40/4
தோள் வலியும் தம் செயலும் தொழா முடியோன் துஞ்சியதும் தொழுது சொன்னார் – வில்லி:46 237/4

மேல்


சொன்னால் (3)

மன்னவ வெல்ல நின் சேய் வல்லனோ வந்து சொன்னால்
பின்னை நீ தெளிதி என்றான் பீடுடை பேடி-தன்னை – வில்லி:22 123/3,4
அ காலம் பொறுத்த எலாம் அமையாமல் இன்னம் இருந்து அறமே சொன்னால்
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/3,4
சொல்லிய நா என் படும் மற்று ஒருவன் சொன்னால் சுயோதனன் ஆதலின் பொறுத்தேன் சொன்னது என்று – வில்லி:45 26/3

மேல்


சொன்னாலும் (2)

சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும்
அவனி தலம் முழுதும் இனி அரசாள நினைந்திருந்தீர் அறிவிலீர்காள் – வில்லி:41 239/1,2

மேல்


சொன்னாள் (8)

சூடிய மகவை கை கொடுத்து இவளும் தோன்றலோடு இவையிவை சொன்னாள் – வில்லி:1 92/4
அறம் தவாவகை துறந்த வாள் அரசனுக்கு அன்னை மற்று இது சொன்னாள் – வில்லி:2 1/4
தோழி நின்றவள் ஒருத்தி கைதொழுதனள் சொன்னாள் – வில்லி:7 66/4
மான் அவராக வேத மலர் முனி-தனக்கு சொன்னாள் – வில்லி:11 203/4
துன்னிய கோப செம் தீ விழி உக சில சொல் சொன்னாள்
மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து உன் – வில்லி:13 6/2,3
கண் மலர் அருவி சோர கனல்_பிறந்தாளும் சொன்னாள் – வில்லி:18 12/4
தூய சொல் விளைய பொருவதே உறுதி என்ன அ திரௌபதி சொன்னாள் – வில்லி:21 50/4
கொக்கின் மேல் குயில்கள் கூவும் குளிர் பொழில் குறியும் சொன்னாள் – வில்லி:21 57/4

மேல்


சொன்னான் (33)

சுரதம் முற்றிய என் தந்தை-தன் பொருட்டால் பெறுவல் என்று இன்னதும் சொன்னான் – வில்லி:1 104/4
முகம் முகுரம் புரை முதலொடு சொன்னான் – வில்லி:3 101/4
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
தூ இலை பளிதம் ஏனை துணைவரை வழங்க சொன்னான் – வில்லி:10 101/4
வில் இடை நின்று தம்முன் வெம் மனம் களிக்க சொன்னான்
அல் இடை நிறைந்ததேனும் அமுத வெண் கிரண திங்கள் – வில்லி:11 7/2,3
தங்கு நீர்மையின் புரிக என புதல்வனை தந்தையும் தக சொன்னான் – வில்லி:11 68/4
விரைந்தனன் ஓடி வந்து வேந்தனுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:11 209/4
சோரும் கொடியை முகம் நோக்கி துச்சாதனன் மெய் சுட சொன்னான் – வில்லி:11 230/4
சொன்னான் எவரும் தக்கோன் என்று அவனுக்கு ஒரு பேர் சூட்டினர் பின் – வில்லி:11 239/2
சொன்ன கிளி_மொழியினையும் துகில் உரிதி என உருமின் சொன்னான் மன்னோ – வில்லி:11 243/4
பகலவன்-தன் மதலை உயிர் பகை புலத்து கவர்வன் என பார்த்தன் சொன்னான்
நகுலனும் மற்று என் கரத்தால் சௌபல நாயகன் உயிர்க்கு நாசம் என்றான் – வில்லி:11 257/1,2
தன் மனை யாவர் நெஞ்சும் சருகு என தழைக்க சொன்னான் – வில்லி:11 272/4
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான்
யாவரும் பரவும் உன்-தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து – வில்லி:13 9/2,3
சொன்னான் அவனும் துனை தேர் நனி தூண்டும் எல்லை – வில்லி:13 104/4
துன்று புயங்கள் துவக்கி எய்த சொன்னான் – வில்லி:14 110/4
தூயவன் உற்றன யாவும் தோன்ற சொன்னான் – வில்லி:14 123/4
இளையவன்-தானும் தம்முன் நினைவினுக்கு ஏற்ப சொன்னான் – வில்லி:18 11/4
கல்லினால் வரு கல் முகில் விலக்கிய கரிய மா முகில் சொன்னான் – வில்லி:24 2/4
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/4
பங்கயாசன முனிவனும் மீண்டு போய் பாண்டவர்க்கு அவை சொன்னான் – வில்லி:24 20/4
பற்று அற துணிந்து சொன்னான் பாண்டவர் சகாயன் ஆனான் – வில்லி:25 12/4
மும்மையும் உணர்ந்த நாதன் முன்னுற பின்னும் சொன்னான் – வில்லி:25 16/4
கங்குலின் எழு-மின் என்று கன்னனும் கனன்று சொன்னான் – வில்லி:27 174/4
துனி வந்து அரசர் முகம் நோக்கி சொன்னான் இடியேறு அன்னானே – வில்லி:27 225/4
அரு வரை தோளினானுக்கு உற்றவாறு அனைத்தும் சொன்னான் – வில்லி:41 157/4
இங்கு இருந்த ஏழையரேம் என் செய மற்று இருக்கின்றேம் என்றும் சொன்னான் – வில்லி:41 238/4
திண் சயம் கொள் விசயனுக்கு சிந்துபதி-தனை காட்டி திருமால் சொன்னான் – வில்லி:42 166/4
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல் கடவுவன் தேர் அவற்கு என்று கனன்று சொன்னான் – வில்லி:45 27/4
மதலையை நோக்கி பாகன் வன் பகை தோன்ற சொன்னான் – வில்லி:45 95/4
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3
மன கவலை உறும் மன்னன்-தன்னை நோக்கி மாமனும் மற்று ஒரு கோடி மாற்றம் சொன்னான் – வில்லி:46 86/4
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான்
பொரும் அரவு உயர்த்தோன் இன்று ஓர் பொய்கையில் புகுந்தான் என்று – வில்லி:46 127/2,3

மேல்


சொன்னானோ (1)

பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/4

மேல்


சொன்னேன் (3)

என் நினைந்து என் சொன்னேன் மற்று என் செய்தேன் என்று சோரும் – வில்லி:5 66/1
ஆதலால் உறுதி சொன்னேன் ஆம் முறை தெரிந்து கோடி – வில்லி:11 39/1
விடுக நீ கவல வேண்டா மேல் உனக்கு உறுதி சொன்னேன்
முடுக வாள் அமரில் சென்று முன் முனைந்தாரை இன்றே – வில்லி:36 16/1,2

மேல்


சொன்னேனே (1)

துவசம் படைத்தோன் படும் பயந்த துணைவா இன்னே சொன்னேனே – வில்லி:27 231/4

மேல்


சொன்னோம் (1)

சூது ஆடி அழிவுற்று அடைந்தோர்கள் சரிதங்கள் சொன்னோம் இனி – வில்லி:22 2/2

மேல்


சொனான் (1)

வாசகம் பல சொனான் மறை வலானுமே – வில்லி:21 41/4

மேல்