கே – முதல் சொற்கள், வில்லி பாரதம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகய 1
கேகயங்கள் 1
கேகயரின் 1
கேகயன் 1
கேசரன் 1
கேசரி 7
கேசரியொடு 1
கேசவ 1
கேசவன் 9
கேட்க 3
கேட்கவும் 1
கேட்கின் 5
கேட்ட 16
கேட்டது 1
கேட்டபோது 2
கேட்டருள் 1
கேட்டருளி 1
கேட்டலும் 11
கேட்டன 2
கேட்டனமேல் 1
கேட்டனன் 3
கேட்டார் 3
கேட்டார்க்கு 1
கேட்டால் 2
கேட்டாலும் 1
கேட்டாள் 1
கேட்டான் 5
கேட்டி 7
கேட்டியால் 1
கேட்டிலர் 1
கேட்டிலேம் 1
கேட்டிலை 1
கேட்டு 115
கேட்டும் 6
கேட்டுழி 1
கேட்டே 5
கேட்டேன் 2
கேட்டோம் 1
கேட்டோர் 1
கேட்டோர்க்கு 1
கேட்ப 19
கேட்பதன் 1
கேட்பினும் 2
கேடக 2
கேடகம் 1
கேடு 6
கேடும் 1
கேண்-மதி 1
கேண்-மின் 3
கேண்-மினோ 1
கேண்ம் 1
கேண்மை 6
கேண்மையார் 1
கேண்மையால் 2
கேண்மையின் 1
கேண்மையினால் 1
கேண்மையோடு 1
கேண்மோ 10
கேத 1
கேதம் 2
கேதன 2
கேதனன் 8
கேதனன்-தன் 2
கேதனனுக்கு 1
கேதனனை 1
கேது 4
கேதுதரன் 1
கேதுவும் 1
கேதுவே 1
கேமதூர்த்தி 1
கேமன் 2
கேமனை 1
கேரளர் 1
கேவலம் 4
கேவலன் 1
கேழ் 2
கேழல் 2
கேழலை 1
கேழலொடு 1
கேள் 21
கேள்வர் 2
கேள்வன் 9
கேள்வனும் 1
கேள்வனுமே 1
கேள்வனே 1
கேள்வி 28
கேள்விக்கு 1
கேள்விக்கும் 1
கேள்விகள் 1
கேள்விசெய்து 1
கேள்வியர் 1
கேள்வியன் 1
கேள்வியால் 3
கேள்வியான் 1
கேள்வியினால் 1
கேள்வியுடை 1
கேள்வியோன் 1
கேளா 6
கேளாத 1
கேளாமல் 2
கேளாய் 3
கேளார் 2
கேளான் 1
கேளான 1
கேளானாகில் 1
கேளிர் 1
கேளிரும் 1
கேளேன்-கொல்லோ 1
கேளொடு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


கேகய (1)

குரா நறும் பொழில் கேகய தலைவரும் குந்தி போசரும் வந்தார் – வில்லி:28 4/4

மேல்


கேகயங்கள் (1)

கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1

மேல்


கேகயரின் (1)

பாஞ்சாலரின் கேகயரின் பல பாடை மாக்கள் – வில்லி:45 75/1

மேல்


கேகயன் (1)

கேகயன் குமரன் மாய்ந்தான் கிருபன் வில் ஒடிந்து மீண்டான் – வில்லி:41 97/2

மேல்


கேசரன் (1)

கேசரன் என போம் விசும்பிடை மனையாள் கிரிகையை நினைந்து உடல் கெழுமி – வில்லி:1 110/2

மேல்


கேசரி (7)

கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம் – வில்லி:9 18/2
கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/2
கிளவியால் முனிவர் தொழு பதம் தொழுது கேசரி துவச வீரனுக்கு – வில்லி:10 53/3
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/4
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன் – வில்லி:46 27/1
காண் தகைய கேசரி வெம் சாபம் அன்னார் கண்இலான் மதலையர் அ களத்தில் அன்று – வில்லி:46 85/2
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2

மேல்


கேசரியொடு (1)

ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2

மேல்


கேசவ (1)

மாதவ யாதவ வாசவ கேசவ மாயா ஆயா மதுசூதா – வில்லி:44 1/3

மேல்


கேசவன் (9)

கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா – வில்லி:6 38/1
கேட்டு இருந்தருள் கேசவன் வாசவன் – வில்லி:12 13/1
கேசவன் மணி கேசரி தவிசிடை கிளர்ந்தான் – வில்லி:27 82/4
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் – வில்லி:27 111/1
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/2
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத – வில்லி:37 28/3
கேசவன் புரிவு எலாம் கிரீசன் என்னும் அ – வில்லி:41 210/1
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு – வில்லி:46 20/1

மேல்


கேட்க (3)

மரு கொண்ட தொடை முடியாய் மொழிக என நின்னுடன் கேட்க வந்தார் உண்டோ – வில்லி:11 240/3
தீது இலாய் இது கேட்க என செப்புவன் மாதோ – வில்லி:14 41/4
பை வரு மாசுண கொடியோன்-தன்னை நோக்கி பரி தடம் தேர் நரபாலர் பலரும் கேட்க
கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வா கட்டாண்மை அரசே இ களத்தில் இன்றே – வில்லி:45 17/2,3

மேல்


கேட்கவும் (1)

கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1

மேல்


கேட்கின் (5)

ஆன்றார் கேட்கின் செவி புதைக்கும் அழல் கால் வெம் சொல் அறன் இல்லான் – வில்லி:11 212/2
கெட்டன பட்டது உரைக்க உண்டோ கேட்கின் – வில்லி:14 115/4
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
புல் விதூடகரினும் உணர்வு இலாதவர் புகலும் வாசகம் கேட்கின்
செல்வி தூரியள் ஆய்விடும் சுற்றமும் சேனையும் கெடும் என்றான் – வில்லி:24 14/3,4
தனக்கு நிகர் தான் ஆன தனஞ்சயனும் கேட்கின் உயிர் தரிக்குமோ-தான் – வில்லி:41 141/2

மேல்


கேட்ட (16)

கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/2
கேட்ட அரசன் அழைக்க கிருபனுடன் வந்து இறைஞ்சும் – வில்லி:3 45/1
பேசிய கட்டுரை கேட்ட பெற்ற தாய் – வில்லி:4 21/2
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப மீண்டும் – வில்லி:11 202/1
சொன்ன வாசகம் கேட்ட சுரபதி – வில்லி:12 169/1
அ உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து அவனுக்கு அன்பால் – வில்லி:13 3/1
ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து அரிய வேந்தே – வில்லி:13 8/1
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார் – வில்லி:13 113/3
கிம்புரி நெடும் கோட்டு அம் பொன் கிரி வல்லோன் கேட்ட பின்னர் – வில்லி:18 13/2
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
உருமின் வெம் குரல் கேட்ட கோள் உரகரோடு ஒத்தார் – வில்லி:22 61/4
அரவினை உயர்த்த கோமான் அ உரை கேட்ட போழ்தே – வில்லி:22 106/1
கரியவன் புகல் கட்டுரை கேட்ட பின் காமபாலனும் சொன்னான் – வில்லி:24 3/4
வேதியன் வாய்மை கேட்ட வேதியன் மகனும் மற்றை – வில்லி:46 114/1

மேல்


கேட்டது (1)

கனத்தினால் அன்றி தாழுமோ யாரும் கண்டது கேட்டது அன்று இதுவே – வில்லி:6 23/4

மேல்


கேட்டபோது (2)

கன்னன் வாசகம் கேட்டபோது இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது – வில்லி:16 8/1
கீசகா என்று அழுதனள் அ மொழி கேட்டபோது அ கிளி நிகர் மென் சொலாள் – வில்லி:21 13/4

மேல்


கேட்டருள் (1)

எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3

மேல்


கேட்டருளி (1)

கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று – வில்லி:46 151/1

மேல்


கேட்டலும் (11)

கண் இலாதவன் கேட்டலும் காண்டலும் கடுக்கும் – வில்லி:1 4/4
என்ன முன் இறைஞ்சி இவன் மொழி கொடும் சொல் இறையவன் கேட்டலும் இரண்டு – வில்லி:1 101/1
பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி – வில்லி:2 62/1
கொட்பு அனல் சுட இறந்தமை கேட்டலும் குருக்கள் – வில்லி:3 134/1
யதி உரைத்த சொல் கேட்டலும் யாதவி நுதல் வாள் – வில்லி:7 69/1
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4
வரபதி மொழிந்த மாற்றம் கேட்டலும் வணங்கி ஐவர் – வில்லி:11 277/2
என்று தூதன் இசைத்தது கேட்டலும்
நன்று என கை புடைத்து நகைத்திடா – வில்லி:13 46/1,2
வாசகம் கேட்டலும் மலம் கொள் நெஞ்சுடை – வில்லி:21 69/2
கண் இலான் உரைத்த மாற்றம் கேட்டலும் காவலோரில் – வில்லி:27 169/1
ஒப்பு ஏது என வாசவன் கேட்டலும் ஓங்கல் விந்தை – வில்லி:36 31/3

மேல்


கேட்டன (2)

பெரியஆயினும் அதிதிகள் கேட்டன மறுப்பரோ பெரியோரே – வில்லி:9 3/4
கொற்றவன் மதலை கேட்டன வரங்கள் கொடுத்தலும் வேண்டும் என்று எழுந்தான் – வில்லி:12 80/3

மேல்


கேட்டனமேல் (1)

வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ – வில்லி:45 267/2

மேல்


கேட்டனன் (3)

பரத்துவாசன் முன் பகர்தர கேட்டனன் பலகால் – வில்லி:14 34/2
அரி புற தடங்கண்ணியை கேட்டனன் அவனும் – வில்லி:22 42/4
கேட்டனன் அவர்க்கு முன்னே கிருபஆசிரியன் வந்தான் – வில்லி:44 86/4

மேல்


கேட்டார் (3)

கூக்குரல் விளிப்ப போலும் கோகில குரலும் கேட்டார் – வில்லி:5 14/4
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/4

மேல்


கேட்டார்க்கு (1)

கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்கு உரைப்பு அரும் கணக்கின் தாக்கி – வில்லி:44 17/3

மேல்


கேட்டால் (2)

பைம் தொடை அரசர் கேட்டால் பாவமும் பழியும் ஆகா – வில்லி:11 32/4
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால் – வில்லி:13 17/4

மேல்


கேட்டாலும் (1)

பாதத்தில் வீழ்வரோ பார் அரசர் கேட்டாலும் பழியே அன்றோ – வில்லி:46 134/2

மேல்


கேட்டாள் (1)

கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் – வில்லி:5 67/4

மேல்


கேட்டான் (5)

சுகன்-தன் ஞானம் பெற்ற துரோணன் சொல்ல கேட்டான் – வில்லி:3 44/4
மால் முகம் கண்டு கூற வந்தவா மாலும் கேட்டான் – வில்லி:11 204/4
மறு அணி துளப_மார்பனும் கேட்டான் மா முனிக்கு ஓதனம் ஆன – வில்லி:18 22/2
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/4
கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4

மேல்


கேட்டி (7)

மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
அரும் பெறல் ஐய கேட்டி அடியனேன் கருத்து முற்ற – வில்லி:11 47/1
கேட்டி நீ முரசகேது கிளைஞர்-தம் இருக்கை-தோறும் – வில்லி:12 16/1
கேட்டி நீ செ வாய் கிளி நிகர் மொழியாய் கிரீடியை துணைவர்களுடனே – வில்லி:12 79/1
நெஞ்சினில் அறிவு இலாதாய் நீ இது கேட்டி என்னா – வில்லி:13 151/3
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி – வில்லி:14 108/1
ஏதில் அருத்தியன் என்ன கேட்டி என்றான் – வில்லி:14 119/4

மேல்


கேட்டியால் (1)

நீ குலைக்கில் அனைத்தும் இன்றே கெடும் நேர்_இழாய் இது நெஞ்சுற கேட்டியால் – வில்லி:21 14/4

மேல்


கேட்டிலர் (1)

விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர் வெய்யோர் – வில்லி:16 52/4

மேல்


கேட்டிலேம் (1)

வாய் உரைத்தது இன்று அளவும் கேட்டிலேம் கேட்டனமேல் வாட்டம் உண்டோ – வில்லி:45 267/2

மேல்


கேட்டிலை (1)

குரவரும் உரைத்த சொல் உறுதி நீ கேட்டிலை குரு மரபினுக்கு ஒரு திலகமாம் மூர்த்தியே – வில்லி:46 202/4

மேல்


கேட்டு (115)

நிருபனது உரை கேட்டு அஞ்சினள் ஒதுங்கி நின்று கை நினைவு உற குவியா – வில்லி:1 98/1
அன்று அவை-கண் அவன் மொழி கேட்டு உவந்து – வில்லி:1 113/2
கிளைத்திடும் துகிர் கொடி நிகர் சடையவன் கேட்டு நுண் இடையே போல் – வில்லி:2 14/1
மரு மாலை வல்லி உரை கேட்டு மகிழ்ச்சி கூரும் – வில்லி:2 64/1
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு
பாங்குடை பதியில் வாழும் பார்ப்பன மாக்களோடும் – வில்லி:5 4/2,3
இ சொல் பழன பாஞ்சாலர்க்கு இறைவன் புதல்வன் இயம்புதல் கேட்டு
அ சொல் தம்தம் செவிக்கு உருமேறு ஆக கலங்கும் அரவு அன்னார் – வில்லி:5 32/1,2
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி வந்தவாறு உரைப்ப நெடுமாலும் கேட்டு
துதியாடி காலையிலே வருதும் என்று சொற்று இமைப்பில் மீளவும் போய் துவரை சேர்ந்தான் – வில்லி:7 53/3,4
சொன்னான் அது கேட்டு உளம் மகிழ்ந்தார் சுரர் கோ மகனும் துணைவனுமே – வில்லி:10 36/4
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு – வில்லி:10 143/3
யாவரும் மொழிந்த வார்த்தை இன்புற கேட்டு பின்னும் – வில்லி:11 20/1
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
செழும் திரு விரும்பும் மார்பன் செப்பிய கொடுமை கேட்டு
விழும் திரள் மாலை திண் தோள் விதுரனும் வெகுண்டு முன்னி – வில்லி:11 41/1,2
மகன் மொழி நயந்து கேட்டு வாழ்வு உறு தந்தை-தானும் – வில்லி:11 48/1
இரத மாற்றம் அங்கு எழுதிய படியினால் இயம்பலும் அது கேட்டு
வரதனால் பணிப்புறு தொழில் யாவர் நாம் மறுக்க என்று உரைசெய்தான் – வில்லி:11 62/3,4
இகல் நிருபர் இவர் மொழி கேட்டு எளிதோ இ கொடும் பழி என்று ஏங்கினாரே – வில்லி:11 257/4
சகுனி சொல் மருகன் கேட்டு தம்பியும் அங்கர்_கோவும் – வில்லி:11 267/1
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு
நின்றவா நில்லா வஞ்ச நெஞ்சினன் ஆகி மீண்டும் – வில்லி:11 270/1,2
பிறந்த இ மாற்றம் கேட்டு பிதாமகன் முதலாய் உள்ளோர் – வில்லி:11 276/3
தையல் அங்கு உரைத்த மாற்றம் தருமனும் கேட்டு நாங்கள் – வில்லி:11 278/1
பார் இழந்த இ பாதக சூது கேட்டு
ஈரும் நெஞ்சினர் ஏமுறு நோக்கினர் – வில்லி:12 7/1,2
கேட்டு இருந்தருள் கேசவன் வாசவன் – வில்லி:12 13/1
கெடுவர் என்பது கேட்டு அறியீர்-கொலோ – வில்லி:12 14/4
அச்சுதன் உரைத்த மாற்றம் அறன் சுதன் மகிழ்ந்து கேட்டு
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம் – வில்லி:12 18/1,2
மானையும் பொருத செம் கண் மரகதவல்லி கேட்டு
தானையும் கரிய பேர் உத்தரியமும் ஆக சாத்த – வில்லி:12 74/2,3
ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடும் கண் அம்பிகை அருள் மொழி கேட்டு
நீலம் உண்டு இருண்ட கண்டனும் இரங்கி நிரை வளை செம் கையாய் நெடிது – வில்லி:12 75/1,2
பேறு அற அன்று ஒரு முனிவன் வார்த்தை கேட்டு பிளந்தனை பல் வேடுவரை பிறை வாய் அம்பால் – வில்லி:12 97/4
தேவர் தம் உரையும் தேவி செப்பிய உரையும் கேட்டு
தா வரும் புரவி திண் தேர் தனஞ்சயன் தொழுது சொன்னான் – வில்லி:13 9/1,2
அவன் உரை மகிழ்ந்து கேட்டு ஆங்கு அமரருக்கு அதிபன் சொல்வான் – வில்லி:13 10/1
தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு தனுவினுக்கு ஒருவன் ஆன – வில்லி:13 13/1
செரு என்ற மாற்றம் கேட்டு சிந்தையில் உவகை பொங்க – வில்லி:13 17/1
மங்கையர் வாய்மை கேட்டு மணி குறு முறுவல் செய்து – வில்லி:13 24/1
என்று அவன் உரைத்த மாற்றம் இன்புற கேட்டு நெஞ்சில் – வில்லி:13 26/1
தன் தேர் வலவன் மொழி கேட்டு தயங்கும் நீல – வில்லி:13 111/1
காலகேயர் விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு
ஆலகாலம் என உருத்து அழன்று பொங்கி அயில் முனை – வில்லி:13 124/1,2
சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாக கேட்டு
பத்தி கொள் விமான சோதி பைம் பொன் மா நகரி கோடித்து – வில்லி:13 148/1,2
என்று கொண்டு உயர் தேர் பாகன் இசைத்தன யாவும் கேட்டு
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில் – வில்லி:13 157/1,2
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு
தந்தையும் இன்னம் சில் நாள் தங்குக இங்கு என்று ஏத்தி – வில்லி:13 159/1,2
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
இயக்கர் பதி-தனில் உளது என்று இசைத்த மாற்றம் இன்புற கேட்டு ஒருகாலும் ஈறு இலாத – வில்லி:14 15/1
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/2,3
தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/1,2
என்று தன் திரு துணைவன் நின்று இசைத்தது கேட்டு
நன்று நன்று நீ நவின்றது நன்று என நகையா – வில்லி:14 29/1,2
குரக்கு_நாயகன் அ உரை கூறலும் கேட்டு
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா – வில்லி:14 30/1,2
தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு
நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும – வில்லி:14 32/1,2
குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான் – வில்லி:14 35/1,2
என்ற வாசகம் இரு செவிக்கு அமுது என கேட்டு
துன்று நெஞ்சினில் உவகையன் துதித்தனன் துள்ளி – வில்லி:14 37/1,2
முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு
பின்னவன் தொழுது இவையிவை பேசினன் பின்னும் – வில்லி:14 45/1,2
ஆண்டு அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி – வில்லி:14 47/1,2
சங்கை உறாது சமீரணி கேட்டு
பங்கய நாம நிசாசரபதி-தன் – வில்லி:14 80/2,3
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு
மொய்த்தார் அ கடவுள் வாச மொய் மலர் சோலை எல்லாம் – வில்லி:14 89/3,4
மா விந்தம் அனைய பொன் தோள் மாருதி வாய்மை கேட்டு
பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி என்று அழன்று பொங்கி – வில்லி:14 95/1,2
என்று அவர் வாய் கை புதைத்து இசைத்தல் கேட்டு
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு – வில்லி:14 109/1,2
கோதில் இயக்கன் யாவும் கூற கேட்டு
தாதை உருத்திரசேனன் தன்னை நோக்கி – வில்லி:14 119/1,2
தன் பெரும் கதையும் கேட்டு தங்கினர் என்ப மாதோ – வில்லி:14 139/4
அரும் தவ முனிவர் எனை பலர் இவ்வாறு அபயம் என்று அழுங்கு சொல் கேட்டு
பெரும் திறல் அரசன் அவர் பதம் வணங்கி பேசுக நும் குறை என்ன – வில்லி:15 3/1,2
அபயம் என்று அவள் அந்தரத்தின் மீது அரற்றும் அ உரை கேட்டு மாத்திரி-தன் – வில்லி:15 8/1
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு – வில்லி:15 27/2
காவலன் வார்த்தை கேட்டு காளமாமுனிவன் என்னும் – வில்லி:16 41/1
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு
சீலம் கொள் வாய்மையாய் செம் தீ எழு கானில் சில் நீர் – வில்லி:16 42/2,3
அன்னோன் மொழி கேட்டு அ முனியும் அடைந்தான் தன் பேர் அரும் தவ கான் – வில்லி:17 17/1
அ உரை வீமன் கேட்டு ஆங்கு அமித்திரன் வந்த போதே – வில்லி:18 6/1
வேந்தன் அ மாற்றம் கேட்டு வில்_வலான்-தன்னை நோக்கி – வில்லி:18 9/1
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு அந்த மனுகுல மன்னனும் மகிழ்ந்து – வில்லி:19 12/1
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு
இ திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை என்று இனிது உரைத்தருளி – வில்லி:19 19/1,2
உண்டியும் இழந்தேன் உறுதியும் இழந்தேன் உன் புகழ் கேட்டு வந்து உற்றேன் – வில்லி:19 23/4
என்ன அ புரவி ஏற்று நாயகன் வந்து இயம்பிய இன் மொழி கேட்டு
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா மதி குடை மன்னன் – வில்லி:19 24/1,2
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு
துண்ணென வெரீஇயினள் சுதேட்டிணை விரும்பி – வில்லி:19 34/1,2
கேகயங்கள் எனும் எழில் சாயலாள் கிளந்த வாசகம் கேட்டு இடியேறு உறும் – வில்லி:21 10/1
மருத்தின் மா மதலை வார்த்தை கேட்டு அந்த மருச்சகன் மட_கொடி உரைப்பாள் – வில்லி:21 49/1
கேட்டு உணர்ந்தனர் கீசகன் தம்பிமார் – வில்லி:21 85/4
உத்தரன் புகல் உறுதி கேட்டு ஒப்பனைக்கு உரியாள் – வில்லி:22 31/1
விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப கேட்டு ஆங்கு – வில்லி:22 112/3
புன் நவை ஆன மாற்றம் புகன்றனர் எனினும் கேட்டு ஆங்கு – வில்லி:22 122/1
மகன் இவை மற்று உரைத்த அளவில் தாதை கேட்டு மனம் நடுங்கி நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான் – வில்லி:22 140/1
கல்வி தூய நெஞ்சு இலாத அ சுயோதனன் கழறிய மொழி கேட்டு
வில் விதூரன் இ வேதியன் மொழிப்படி மேதினி வழங்காமல் – வில்லி:24 14/1,2
ஏடு அவிழ் துளப மால் அங்கு இருந்தனன் என்று கேட்டு
சேடன் வந்து அனந்த கோடி செம் கதிர் மணியின் பத்தி – வில்லி:25 3/2,3
கேட்டு வந்தனம் என்றனன் விதுரனும் கேட்டான் – வில்லி:27 90/4
அடாது செய்தவர் படாது பட்டனர் எனும் அங்கர்_கோன் அருள் மொழி கேட்டு
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/1,2
மூத்தவன் காதல் இளைஞர்-தம் பொருட்டால் மொழிந்தமை கேட்டு இவை மொழிவான் – வில்லி:27 255/4
என்றலும் அது கேட்டு ஈன்ற தாய் ஒக்கும் என்று கொண்டு இ வரம் நேர்ந்து – வில்லி:27 259/1
கண்ணனும் குந்தி கன்னனோடு உரைத்த கருத்து எலாம் திருத்தமா கேட்டு ஆங்கு – வில்லி:27 260/1
இடைப்படு நெறியில் வைகும் இவனது வரவு கேட்டு
தொடைப்படு தும்பை மாலை சுயோதனன் சூழ்ச்சி ஆக – வில்லி:28 16/1,2
சென்றனன் அவனும் கேட்டு சிலையில் வெம் கதிரை திங்கள் – வில்லி:28 27/2
ஐவரில் இளையோன்-தன்பால் முகூர்த்தம் கேட்டு அவர் சேய் ஆன – வில்லி:28 28/1
உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான் – வில்லி:28 28/3
தொழும் தாள் அரசன்-தானும் உயிர் சோர்ந்தான் என்னும் தொனி கேட்டு
செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் – வில்லி:31 9/2,3
பட்டான் துணைவன் என கேட்டு பரிவு பொங்க – வில்லி:36 25/1
கங்குல் சிலை நூல் முனிவனுடன் கழல் கால் அரசன் பணித்தமை கேட்டு
அங்கு தரியாது இவன் கரத்தே அருள் கூர் நெஞ்சன் அகப்படும் என்று – வில்லி:39 45/1,2
அலக்கண் உற்று ஆவி மாய்ந்தான் அமரிடை என்று கேட்டு
கல கணீர் சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி – வில்லி:41 91/2,3
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர் – வில்லி:41 135/2
அம் கை ஆர்த்து அனைத்துளோரும் அரற்று பேர் அரவம் கேட்டு
கங்கை அம் பழன நாடன் கண்ணனை வணங்கி நோக்கி – வில்லி:41 155/1,2
பேர் அமர் ஆண்மை கேட்டு பிதாமகன் என் சொன்னானோ – வில்லி:41 165/4
நந்தியும் உரைசெய கேட்டு நன்று என – வில்லி:41 208/3
இவன் மொழிந்த இகழ்உரை கேட்டு இடிம்பன் மருமகன் வெகுளுற்று என் சொன்னாலும் – வில்லி:41 239/1
உரைக்கும் மொழி கேட்டு இருந்த உரகம் அணி கொடி வேந்தன் உருத்து நோக்கி – வில்லி:41 242/2
அந்த உரை மீண்டு இவன் கேட்டு ஆங்கு அவனை நகைத்து உரைப்பான் அரக்கரேனும் – வில்லி:41 243/1
கொற்றவனது உரை கேட்டு கொடி நெடும் தேர் நரபாலர் சபதம் கூறி – வில்லி:42 173/3
நிருபனுடன் இரவி_மகன் புகன்ற உரை கேட்டு அருகே நின்ற வில் கை – வில்லி:42 180/1
மெய்யினால் வகுத்தது அன்ன மெய்யுடை வேந்தன் கேட்டு
பொய்யினால் ஆள்வது இந்த புவி-கொலோ என்று நக்கான் – வில்லி:43 21/3,4
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
இன் உரை கேட்டு ஒரு வரம் நீ நல்கல் வேண்டும் என் ஆணை என கரம் கொண்டு இறைஞ்சினானே – வில்லி:45 22/4
வலியுடை தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு
கலியுடை தடம் தேர் விட்டு காலின் நின்று உடைவாள் வாங்கி – வில்லி:45 41/1,2
கிளை இலா அரசு இயற்கையும் நன்று என கேட்டு அறிகுவது உண்டோ – வில்லி:45 180/4
ஆரியன் திரு மகன் இவை உரைசெய அரசனும் அவை கேட்டு
காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ – வில்லி:45 182/1,2
என்று கொண்டு அந்த அந்தணன் உரைப்ப இரு செவிக்கு அமுது என கேட்டு
வென்றி கொள் விசயன் விசய வெம் கணையால் மெய் தளர்ந்து இரதம் மேல் விழுவோன் – வில்லி:45 239/1,2
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு – வில்லி:45 255/3
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு உன் வீரம் கேட்டு
நன்றே என் தவ பயன் என்று உன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ – வில்லி:45 255/3,4
என்று என்றே அமர் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு அதிசயிப்ப ஏங்கிஏங்கி – வில்லி:45 257/1
ஆர் கயல் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினை கேட்டு ஆழியானை – வில்லி:45 263/2
கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு
துருபதேயனும் தன் பெரும் சேனையை துன்றிய வியூகமா தொடுத்து – வில்லி:46 20/1,2
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/3
மாயவன் உரைத்த மாற்றம் மாருதி கேட்டு தந்தை – வில்லி:46 130/1
தூ நாகம் உரும் ஒலி கேட்டு அயர்வது போல் வீழ்ந்து அழுதாள் சுபலன் பாவை – வில்லி:46 240/4

மேல்


கேட்டும் (6)

யாய் மொழி தலை மேல் கொண்டும் இளையவர் மொழிகள் கேட்டும்
வேய் மொழி வேய் தோள் வல்லி மென் மொழி விரும்பலுற்றும் – வில்லி:6 39/1,2
கேட்டும் கொடியள் காந்தாரி கிளையோடு இன்றே கெடும் என்பார் – வில்லி:11 221/4
அரியும் வெம் கரியும் தம்மில் அமர் புரி முழக்கம் கேட்டும்
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/1,2
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும் – வில்லி:12 33/2
கிரியினின் முழக்கம் கேட்டும் கிராதர் போர் முழக்கம் கேட்டும்
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/2,3
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3

மேல்


கேட்டுழி (1)

இவன் மொழி நயந்து கேட்டுழி அவையின் இருந்த தொல் மனிதரே அன்றி – வில்லி:1 105/1

மேல்


கேட்டே (5)

ஈண்டு உறு நிகழ்ச்சி கேட்டே யாதவன் மகளை நோக்கி – வில்லி:2 74/1
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
விசையன் இ வகை மொழிந்ததும் முந்துறு வீமன் மாற்றமும் கேட்டே
இசை பெறும் பெயர் நகுலனும் தம்பியும் ஏகுதல் தகாது என்றார் – வில்லி:11 72/1,2
பின்னை வந்ததும் பேழையில் விடுத்ததும் பிழை இலாது உரைத்திட கேட்டே – வில்லி:27 246/4
தருமனும் தம்பிமாரும் சாற்றிய மாற்றம் கேட்டே
உரும் எறி புயங்கம் போல உள் அழிந்து உள்ளாய் நின்ற – வில்லி:28 31/1,2

மேல்


கேட்டேன் (2)

இற்றது கண்டேன் பின்னர் வில்லின் நாண் இடியும் கேட்டேன் – வில்லி:13 155/4
வேண்டிய தருதி நீ என கேட்டேன் மேருவினிடை தவம் பூண்டேன் – வில்லி:45 238/2

மேல்


கேட்டோம் (1)

இகல் விசயன்-தன் மொழியும் திறல் வீமன் இயம்பியதும் யாவும் கேட்டோம்
புகல் அரிய உணர்வு உடையோய் புகழ் உடையோய் திறல் உடையோய் புகல் நீ என்ன – வில்லி:27 28/2,3

மேல்


கேட்டோர் (1)

பன்னக துவசன் கேட்டோர் பலரும் மெய் பனிக்க சொல்வான் – வில்லி:11 193/4

மேல்


கேட்டோர்க்கு (1)

பரிபவமோ கேட்டோர்க்கு பரிபவம் என்பது பிறரால் பட்டால் அன்றோ – வில்லி:27 16/2

மேல்


கேட்ப (19)

அன்ன துருபன்-தன்னை அவையில் அரசர் கேட்ப
சொன்ன வாய்மை நீயே சோர்ந்தாய் யானோ சோரேன் – வில்லி:3 43/3,4
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
சிரத்தினால் வணங்கி கேட்ப தேசிகன் உரைத்தவாறும் – வில்லி:5 2/2
தொழுது பொன் தவிசின் ஏற்றி சூழ்ந்தனர் இருந்து கேட்ப
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/1,2
சென்னியர்க்கும் வில்லவர்க்கும் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன் கேட்ப
கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம் என்றனன் மெய்ம்மை கடவுள் போல்வான் – வில்லி:7 22/3,4
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப – வில்லி:11 8/2
அமைதரு தந்தை கேட்ப அவன் பெருந்தாதை கேட்ப
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப – வில்லி:11 8/2,3
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப – வில்லி:11 8/3
கமை பெறு விதுரன் கேட்ப கார்முக கன்னன் கேட்ப
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் – வில்லி:11 8/3,4
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் – வில்லி:11 8/4
இமையவன் துரோணன் கேட்ப யாவரும் கேட்ப சொல்வான் – வில்லி:11 8/4
இங்கு நீ எனக்கு இயம்பிய யாவையும் யானும் அன்னவர் கேட்ப
அங்கு நீர்மையின் மொழிந்தனன் என் மொழி யார்-கொலோ மதிக்கிற்பார் – வில்லி:11 68/1,2
கேட்ட சொல் வினவும் நாககேதனன் கேட்ப மீண்டும் – வில்லி:11 202/1
மரு விரி துளப மாலை மரகதவண்ணன் கேட்ப
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/2,3
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப
இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னே ஓட – வில்லி:38 53/2,3
முன் கொண்ட விரதம் மறந்து யாரும் கேட்ப முரசு உயர்த்தோன் பொய் சொன்னான் முடிவில் அந்த – வில்லி:43 34/2
கிளப்ப அரும் திதியை மயக்கி வான் மதியம் கிளர் ஒளி அருக்கனை கேட்ப
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/2,3
தருமனும் எவரும் கேட்ப தாம வேல் வீமன் சொன்னான் – வில்லி:46 127/2
பொய் விடை ஏழ் அடர்த்தோனை புயங்ககேதனன் கேட்ப
மெய் விடை ஆன் நிரை பின் போய் வேய் ஊதும் திருநெடுமால் – வில்லி:46 146/2,3

மேல்


கேட்பதன் (1)

முகுந்தன் வாசகம் கேட்பதன் முன்னமே முரசு உயர்த்தவன் முன்னி – வில்லி:28 2/1

மேல்


கேட்பினும் (2)

கண்ணின் நின் உரு காணினும் மற்று அவன் கன்னம் இன்புற கட்டுரை கேட்பினும்
வண்ண மா மகளே உயிர் நிற்கும் நீ வாழி ஏகி வருக என வாழ்த்தினாள் – வில்லி:21 16/3,4
வண்மையாளர் தம் ஆர் உயிர் மாற்றலார் கேட்பினும் மறுக்கிலார் அன்றே – வில்லி:27 243/4

மேல்


கேடக (2)

பொரு கேடக நடவும் கன பொன் தேர் மிசை இழியா – வில்லி:33 16/2
கேடக வாள் அணி வலய கிளர் புய தோள் அறுவதோ அந்தோ அந்தோ – வில்லி:41 132/2

மேல்


கேடகம் (1)

இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் – வில்லி:33 16/4

மேல்


கேடு (6)

கிடந்தவன் எழுந்து ஒரு கேடு வந்துறா – வில்லி:21 28/1
கீசகனாயினும் கேடு செய்தனன் – வில்லி:21 41/1
கிருபனும் அவனை கண்டு கெட்டனன் கேடு இலாத – வில்லி:22 96/1
கெட்டார் அரசன் பெரும் சேனையில் கேடு இல் வேந்தர் – வில்லி:36 25/4
தன் போலும் மாமன்-அவனோடு கேடு தரு தம்பியோடு கருதி – வில்லி:37 2/2
கிருபாரியனும் கிருத பெயர் கேடு இலோனும் – வில்லி:46 107/2

மேல்


கேடும் (1)

செற்றனள் தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் – வில்லி:2 69/4

மேல்


கேண்-மதி (1)

கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1

மேல்


கேண்-மின் (3)

விரதம் முற்றியவாறு அனைவரும் கேண்-மின் மெய் உயிர் வீடும் அன்று அளவும் – வில்லி:1 104/1
தீம் சாலி விளை பழன திருநாட்டீர் கேண்-மின் என செம் தீ மூள – வில்லி:11 255/3
உள பொலிவு உடையாய் இன்றே உற்று அவன் கேண்-மின் என்றான் – வில்லி:28 25/4

மேல்


கேண்-மினோ (1)

அதி மதுர வாய்மையால் வெகுளாவகை அடிகள் இவை கேண்-மினோ என ஓதினான் – வில்லி:46 193/4

மேல்


கேண்ம் (1)

மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேண்ம் என நோதகு நெஞ்சினனும் – வில்லி:41 230/3

மேல்


கேண்மை (6)

இணங்கி நும் கேண்மை கொள்வான் இச்சையால் யாகசேனன் – வில்லி:5 6/2
கேசவன் முதலா உள்ள கிளைஞரும் கேண்மை தப்பா – வில்லி:6 38/1
ஒன்றிய கேண்மை தந்தைக்கு ஒரு புடை வாரம் உண்டோ – வில்லி:11 34/2
கேசவன் தனது தாதையோடு உதித்த கேண்மை கூர் தெரிவையை கிட்டி – வில்லி:27 244/2
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் – வில்லி:41 22/1
சதமகன் மகன் தேர் பாகன்-தன்வயின் கேண்மை விஞ்சி – வில்லி:45 46/1

மேல்


கேண்மையார் (1)

சுற்றும் மொய்த்தனர் தோம் அறு கேண்மையார் – வில்லி:12 5/4

மேல்


கேண்மையால் (2)

இரு திற புதல்வரும் இயைந்த கேண்மையால்
கரை அடைந்தனர் இளம் கடவுளோர் அனார் – வில்லி:3 2/3,4
கேண்மையால் எனது அரசு நீ தருக என கேட்கவும் மதியாமல் – வில்லி:28 10/1

மேல்


கேண்மையின் (1)

கேண்-மதி ஓர் மொழி முன்னம் கேண்மையின் நம் குலத்து ஒருவன் கிரீசன்-தன்னை – வில்லி:7 37/1

மேல்


கேண்மையினால் (1)

சீர் படைத்த கேண்மையினால் தேர் ஊர்தற்கு இசைந்து அருளும் செம் கண் மாலை – வில்லி:27 1/2

மேல்


கேண்மையோடு (1)

கேட்ட அ கணத்தில் கடல் புறத்து அரசை கேண்மையோடு அடைந்து இளவரசும் – வில்லி:1 103/1

மேல்


கேண்மோ (10)

எழுத அரு மறையின் வேள்வி இயற்றுதற்கு இயற்கை கேண்மோ – வில்லி:5 72/4
மேல்வரும் இராயசூய வேள்வி நாம் விளம்ப கேண்மோ – வில்லி:10 66/4
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேச கேண்மோ – வில்லி:16 45/4
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ
இருடி ஆகி நின் தாதை ஓர் ஆசனத்து இருக்கும் – வில்லி:22 43/1,2
கன்னலே கமுகு காட்டும் கங்கை நீர் நாட கேண்மோ
இன்னலே உழந்தோர் காலம் இந்துவின் இயக்கம்-தன்னால் – வில்லி:22 105/2,3
நாளையே வெளிப்படுவர் நெருநலே தம் நாள் உள்ள கழிந்தனவால் நயந்து கேண்மோ
வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் – வில்லி:22 139/2,3
கிரியின் சிறகை அரி படையாய் கேண்மோ ஆண்மை களம் மீதில் – வில்லி:27 229/1
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
கொற்றவன் ஆகும் என்னை கொல்ல நீ உபாயம் கேண்மோ
அற்றை வெம் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்தி-தானே – வில்லி:29 10/2,3
இன்னம் ஒன்று உரைப்ப கேண்மோ இரு செவிக்கு ஏறாதேனும் – வில்லி:36 12/1

மேல்


கேத (1)

கிளர்ந்த செம் புண்நீர் பொசியும் மெய்யினன் கேத நெஞ்சினன் கோத வாய்மையன் – வில்லி:4 14/2

மேல்


கேதம் (2)

கையில் சிலையோடு உலவும் கழல் காளை கேதம்
பைய தணித்தான் இமநாக பவனன் என்பான் – வில்லி:2 47/3,4
கேதம் இல் சிந்தையான் கிருபன் என்று உளான் – வில்லி:3 28/4

மேல்


கேதன (2)

கிளர்ந்து வெம் சமரம் தொடங்கலும் தனது கேதன கேசரி அனையான் – வில்லி:10 27/2
முந்த அம் தண் மா முரச கேதன திருமுகம் வர விடுக என்று – வில்லி:24 6/3

மேல்


கேதனன் (8)

முரச கேதனன் நீ எழுந்தருள்க என முனிவனை தொழுது ஏத்தி – வில்லி:24 7/2
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2
அரவ கேதனன் சேனைதன்னுளார் அழிந்த மன்னருக்கு அழுது அரற்றினார் – வில்லி:31 29/3
உந்து உரக கேதனன் உரைப்ப முகில் ஏழும் உடன் ஊழி இறுதி பொழிவ போல் – வில்லி:38 21/3
கெட்டனர் முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார் – வில்லி:45 119/2
புயங்க கேதனன் கண்ணினுக்கு இமை என பொரு படையுடன் சேர்ந்தான் – வில்லி:46 54/4
புறத்து வீழ்தர எறிந்தனன் எறிந்தமை புயங்க கேதனன் கண்டான் – வில்லி:46 58/4
கேட்டருளி நெடும் தால கேதனன் மா மனம் தளர்வுற்று – வில்லி:46 151/1

மேல்


கேதனன்-தன் (2)

நென்னல் புயங்க கேதனன்-தன் நிலயம்-தன்னில் தீம் பாலும் – வில்லி:17 14/1
கிரி தடம் குவடு அணைந்த கேசரி நிகர் சல்லியன் முரச கேதனன்-தன்
பரி தடம் தனி தேர் விடும் பாகனை பாணம் ஒன்றால் தலை துணித்து – வில்லி:46 27/1,2

மேல்


கேதனனுக்கு (1)

தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த சரங்கள் எல்லாம் – வில்லி:45 143/1

மேல்


கேதனனை (1)

போரினில் துணைவரோடும் புயங்க கேதனனை வென்று – வில்லி:41 160/1

மேல்


கேது (4)

புரோகிதன் தூது வந்து போன பின் புயங்க கேது
விரோசனன் சுதனை கங்கா_சுதனொடும் வெகுளி மாற்றி – வில்லி:25 1/1,2
ஒரு கணை தொடுத்து பாகன் உயிர் கவர்ந்து உயர்த்த கேது
இரு கணை தொடுத்து வீழ்த்தி இரத மா தொலைய நான்கு – வில்லி:39 9/1,2
பொருது மாய்வன் என வீமனோடு உயர் புயங்க கேது மிகு போர் செய்தான் – வில்லி:42 186/4
இருவரும் இரண்டு காயம் இகலும் முன் உரக கேது
வெருவரும் சிந்தையோடு வெய்தின் போய் விலக்கினானே – வில்லி:45 42/3,4

மேல்


கேதுதரன் (1)

தயங்கு வெம் கழல் கால் கேதுதரன் எனும் தனு_வலோனை – வில்லி:46 36/2

மேல்


கேதுவும் (1)

வராக கேதுவும் உத்தரகுமாரனும் மச்சநாட்டவர் வந்தார் – வில்லி:28 4/2

மேல்


கேதுவே (1)

எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4

மேல்


கேமதூர்த்தி (1)

காசி மன் கேமதூர்த்தி காய் அயில் ஒன்று வாங்கி – வில்லி:44 14/2

மேல்


கேமன் (2)

கேமன் அ கரியின்-நின்றும் கிரியின்-நின்றும் இழியும் ஆளி – வில்லி:44 15/1
எறிந்த தண்டு அமரில் கேமன் இறந்தனன் என்ற போழ்தின் – வில்லி:44 18/1

மேல்


கேமனை (1)

கொண்டு வன் காயம் ஒன்றால் கேமனை வீமன் கொன்றான் – வில்லி:44 17/4

மேல்


கேரளர் (1)

பூம் சாப வெற்றி கொடி கேரளர் பொன்னி நாடர் – வில்லி:23 21/3

மேல்


கேவலம் (4)

கேவலம் அல்ல என்று கிளர் சினம் மூண்டு மீண்டே – வில்லி:16 41/4
கேவலம் தீர் வலிய பகை கிடக்க முதல் கிளர் மழைக்கு கிரி ஒன்று ஏந்து – வில்லி:27 25/1
கேசவன் இப்படி மேல் வருகிற்பது கேவலம் உற்று உணரா – வில்லி:31 16/2
கேவலம் அல்ல இ போர் கிரீடி வந்து இவனை கூடின் – வில்லி:41 100/2

மேல்


கேவலன் (1)

கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன் ஐயா – வில்லி:45 105/2

மேல்


கேழ் (2)

கிட்டா உலகோர் புகழ் கேழ் கிளர் சீர் – வில்லி:13 71/2
கிளைபடு நெல்லி வாச கேழ் உறு கனி முன் வைத்தால் – வில்லி:18 11/2

மேல்


கேழல் (2)

வினை படு கேழல் வேட்டை நாம் இன்றே வேடராய் ஆடுதல் வேண்டும் – வில்லி:12 81/2
முன்பு விட்ட என் வாளி கேழல் முகம் பிளந்து பின் உருவ நீ – வில்லி:12 93/1

மேல்


கேழலை (1)

அதிர்ந்து வரு கேழலை கண்டு அரும் தவத்தை அழிக்கும் என அஞ்சி நாளும் – வில்லி:12 90/1

மேல்


கேழலொடு (1)

கிருதனை ஆதி கேழலொடு ஒப்பான் – வில்லி:42 101/2

மேல்


கேள் (21)

வேந்த கேள் இவன் உன் மதலையே தேவ விரதன் என்று இவன் பெயர் பல்லோர் – வில்லி:1 93/1
களம் புகுந்தவரை மீள ஏகுதல் கொடாத கார்முக வினோத கேள்
உளம் புகுந்து இனிது இருக்கும் நல் கடவுள் உன்னை அன்றி இலை உண்மையே – வில்லி:1 145/1,2
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
தெரிவை கேள் என செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரை – வில்லி:2 28/3
அம்ம வெற்பு இரண்டு அனைய பொன் புயத்து அழகு எறிக்கும் நீடு ஆர மார்ப கேள்
கொம்மை வெம் முலை தெரிவையர்க்கு உளம் கூசும் ஆசை நோய் கூறுகிற்பது என்று – வில்லி:4 4/2,3
மாய்ந்தவன் துணைவி கேள் வதுவை இன்னமும் – வில்லி:4 20/1
இன்னல் பெரிது உளது என்ன புரிகுவது என்ன அறிகிலன் அன்னை கேள்
முன்னை மனை நிகழ் தன்ம முனிவனை முன்னில் இடர் நனி துன்னுமால் – வில்லி:4 42/3,4
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/4
மான்மத மலர் தார் மன்ன கேள் ஒருவன் வாயுவின் மதலை மற்று ஒருவன் – வில்லி:10 19/2
பொங்கு நீருடை பூதல தலைவ கேள் புனைந்த நின் இதயத்து – வில்லி:11 68/3
நீடுகின்ற தரும நீதி நிருப கேள் விழைந்து நாம் – வில்லி:11 165/1
கடும் கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெண்குடை காவலன் தேவி கேள்
தொடும் கழல் கழலான் நின் துணைவன் என் சுட்டி ஆயிரம் சொல்லல சொல்லினான் – வில்லி:21 8/3,4
அடல் கடும் கதையால் அடித்திடும் அதிசயம்-தனை ஐய கேள் – வில்லி:26 14/4
தன்மை நான் உரைப்ப கேள் நின் தந்தை-தன் மனையில் நீயும் – வில்லி:27 149/1
ஒரு கேள் தக உரை தேறினர் உளமே என அமரில் – வில்லி:33 16/1
நீடு மணி பொலம் கழலோர் நின் அருகே நிற்கின்றார் நிகர் இலாய் கேள்
ஆடு திரை கடல் நீந்தி ஏறினர்க்கு கழி கடத்தல் அரியது ஒன்றோ – வில்லி:46 16/2,3
மருக வாழி கேள் போரில் மடிவுறாத பூபாலர் – வில்லி:46 87/3
தலைவ கேள் எனா வீர சகுனி கூறினான் மீள – வில்லி:46 91/4
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/2
நீ நயந்தனை கேள் உறு போரிடை நேர் மலைந்திடுவோர் இருவோரினும் – வில்லி:46 181/1
நம்பி கேள் அரியோடு உடன் மேவிய நஞ்சு போலும் நரேசர் முன்னே உடல் – வில்லி:46 191/3

மேல்


கேள்வர் (2)

கலகமிடும் பரிதாபம் அகற்றினார் இனிமையுடன் கலந்த கேள்வர் – வில்லி:8 15/4
பேர் அழலும் புகுந்தது என பிணங்கினார் தம் கேள்வர் பிரிந்த மாதர் – வில்லி:8 16/4

மேல்


கேள்வன் (9)

பொற்பாவை கேள்வன் மொழி கேட்டலும் பொன்ற நாணி – வில்லி:2 62/1
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன்
சிந்தித்த சிந்தையினளாய் மலர் சேக்கை சேர்ந்து – வில்லி:2 65/1,2
காவி அம் கண்ணி கேள்வன் கமழ் வரை மார்பின் அன்போடு – வில்லி:2 97/3
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் – வில்லி:5 73/4
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன்
அன்ன நாள் மலர் பைம் தாமத்து அறன் மகன் ஆதி ஆக – வில்லி:6 46/2,3
இலகு பரிமள புளக ஈர முலை தடம் மூழ்கி இரதி கேள்வன்
கலகமிடும் பரிதாபம் அகற்றினார் இனிமையுடன் கலந்த கேள்வர் – வில்லி:8 15/3,4
எல்லையும் அதிர்ந்து சுழல்கின்ற பொழுதத்து இமைய இன்ப மயில் கேள்வன் வெகுளா – வில்லி:12 111/2
சீத நாள்மலர் மடந்தை கேள்வன் இவை செப்பவும் தெரிய ஒப்பு இலா – வில்லி:27 108/1
செந்திரு மட மயில் கேள்வன் சென்றமை – வில்லி:41 208/1

மேல்


கேள்வனும் (1)

கைதவன் குல கன்னி கேள்வனும் ஒரு கணைக்கு ஒரு கணையாக – வில்லி:42 74/1

மேல்


கேள்வனுமே (1)

ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4

மேல்


கேள்வனே (1)

பாண்டியன் உயர் குல பாவை கேள்வனே – வில்லி:12 45/4

மேல்


கேள்வி (28)

மனைவியை கண்டு மீளவும் பிரிந்த வருத்தம் மெய் திருத்தகு கேள்வி
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/1,2
மெய்யுடை அரிய கேள்வி வேள்வி கூர் வியாதன் கண்டான் – வில்லி:2 70/4
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/2
ஓதிய கேள்வி உதிட்டிரன் என்னா – வில்லி:3 94/4
புகன்ற கேள்வி புரோசனன்-தன்னை இ – வில்லி:3 112/1
தன் நிகர் இலாத கேள்வி சான்ற சீர் தருமன் என்பான் – வில்லி:5 66/4
முழுது உணர் கேள்வி ஞான முனி குலத்து அரசு போல்வான் – வில்லி:5 72/2
மாது இடத்தான் வைகுதற்கு வாய்க்குமதோ இது என்ன வரம்பு இல் கேள்வி
சோதிடத்தோர் நாள் உரைப்ப சுதன்மையினும் முதன்மை பெற தொடங்கினானே – வில்லி:10 6/3,4
முழுது உணர் வரம்பு இல் கேள்வி முனிவரர் குழாமும் என்றும் – வில்லி:10 107/1
போதில் நான்முகனும் மாலும் புரி சடையவனும் கேள்வி
ஆதி நான்மறையும் உள்ள அளவும் இ வசை அறாதே – வில்லி:11 33/3,4
வில் கொண்டு சரம் தொடுத்து புரை இல் கேள்வி விண்ணவர்-தம் துயர் தீர்த்த வீர ராமன் – வில்லி:14 1/2
மா முனி-தன் மொழி கேட்டு புரை இல் கேள்வி மன்னவனும் தம்பியரும் வருத்தம் மாறி – வில்லி:14 7/1
அ முனிவன் மொழிப்படியே வரம்பு இல் கேள்வி அறன் மகனும் தம்பியரும் அரிவையோடும் – வில்லி:14 11/1
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைம் கானிடை கழி கேள்வி
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அரும் தவ விபினம் மேவினராகி – வில்லி:16 2/2,3
ஆன்று அமைந்து அடங்கு கேள்வி அண்ணலும் அவனை பெற்ற – வில்லி:22 134/1
பன்னிய புரை இல் கேள்வி பயன் நுகர் மனத்தாய் நின்னை – வில்லி:27 145/1
முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும் முடி சாய்த்து ஆங்கண் – வில்லி:29 77/1
சொல் ஆர் கேள்வி கங்கை_மகன் துரோணன் முதலாம் அதிரதரும் – வில்லி:31 4/1
நூல் வரு பழுது இல் கேள்வி நும்பியும் நீயும் இந்த – வில்லி:36 13/3
துறை மிக்க கேள்வி கனகத்துசன் ஆன தோன்றல் – வில்லி:36 30/4
திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்வி செலவும் – வில்லி:38 40/2
சேயின் முனிவர் கேள்வி தெள் ஆர் அமுதம் நுகர்வான் – வில்லி:38 45/4
துகள் அறு கேள்வி வேள்வி துரோண ஆசிரியன் செய்த – வில்லி:39 2/3
நூல் விதத்து மிக்க கேள்வி நோன் சிலை கை முனி படை – வில்லி:40 31/3
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
நும்பிமார்களில் இருந்தவர்-தம்மொடும் நுவல் அரும் பல கேள்வி
தம்பிமாரொடும் நும்முன் ஆகிய விறல் தருமன் மா மகனோடும் – வில்லி:45 181/2,3
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி
அல கை வித்தகன் இளவல் தேர் விட வரும் அருச்சுனன் தடம் தோளாம் – வில்லி:46 51/1,2
தகல் அரும் கேள்வி தாமனே தாம சடையவன் தனயனாதலினால் – வில்லி:46 220/4

மேல்


கேள்விக்கு (1)

கேள்விக்கு ஒருவன் எனும் தௌமியன் கீத வேத – வில்லி:5 93/1

மேல்


கேள்விக்கும் (1)

தனுவேதத்தின் கேள்விக்கும் சதுர்வேதத்தின் வேள்விக்கும் – வில்லி:39 37/1

மேல்


கேள்விகள் (1)

கிருபையால் உயர் கேசவன் இங்கித கேள்விகள் உணர்வுற கேட்டு – வில்லி:46 20/1

மேல்


கேள்விசெய்து (1)

பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து பெரியோன் முகிழ்த்து நகையா – வில்லி:37 7/1

மேல்


கேள்வியர் (1)

குரவோர்களை நீ எனினும் கொலையின் கொடிது என்று உயர் கேள்வியர் கூறுவரால் – வில்லி:45 207/1

மேல்


கேள்வியன் (1)

இரு வினை கூறா அறத்தின் மா மகன் இளவல் விதாதாவொடு ஒத்த கேள்வியன்
உரை தவறாதான் மறைக்குமோ எனது உயிர் துணைவா கேள் சிரத்திலே என – வில்லி:46 174/1,2

மேல்


கேள்வியால் (3)

விரதம் மிஞ்சிய வேள்வியால் கேள்வியால் மிக்கான் – வில்லி:1 32/1
தனத்தினால் உணர்வால் கேள்வியால் அழகால் தக்கது ஒன்று யாது என துலைகொள் – வில்லி:6 23/2
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/4

மேல்


கேள்வியான் (1)

நின்ற நல் மலர் கொடு நிகர் இல் கேள்வியான்
மன்றல் அம் துழாய் முடி மாயன் மேல் மனம் – வில்லி:41 196/2,3

மேல்


கேள்வியினால் (1)

கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4

மேல்


கேள்வியுடை (1)

கேள்வியுடை வரி சிலை கை முனி_மகனும் மாதுலனும் கிருதன் என்னும் – வில்லி:46 237/1

மேல்


கேள்வியோன் (1)

முரண் நிறைந்த மெய் கேள்வியோன் அருளினால் முஞ்சியும் புரிநூலும் – வில்லி:2 6/1

மேல்


கேளா (6)

புந்தி இலள் மன்றல் பெறு பூவை குரல் கேளா
முந்திய கடும் பழி முடிந்தது-கொல் என்னா – வில்லி:2 102/1,2
உரம் கொள் வீமன் அ மாருதி உரைத்த சொல் கேளா
வரம் கொள் வார் சிலை இராகவன் மா பெரும் தூதன் – வில்லி:14 28/1,2
வென்றி அரக்கன் விளம்புதல் கேளா
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து ஆங்கு – வில்லி:14 75/1,2
கொன்றிடா வருதி என்று கூறிய உறுதி கேளா – வில்லி:16 35/4
கெட்ட வெம் படை கெட்டமை சுயோதனன் கேளா
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/1,2
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2

மேல்


கேளாத (1)

தக்கோர் தகும் சொற்கள் கேளாத துரியோதனன் சொல்லினால் – வில்லி:22 8/1

மேல்


கேளாமல் (2)

அம் புவியில் முன் பிறந்தோர் அரசு நெறி முறை உரைத்தால் அது கேளாமல்
தம்பியரும் மறுப்பரோ தலைவ இனி கடும் கோபம் தணிக என்றான் – வில்லி:27 19/3,4
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3

மேல்


கேளாய் (3)

திரு வரும் வின்மை வீர செப்புவது ஒன்று கேளாய் – வில்லி:13 11/4
வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய்
தென் திசை மறலி-பால் இ தீய வஞ்சகர் முன் பெற்ற – வில்லி:13 92/1,2
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து – வில்லி:27 48/1

மேல்


கேளார் (2)

நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார்
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/2,3
பெண் மொழி கேளார் என்றும் பெரியவர் என கொண்டு இந்த – வில்லி:18 12/1

மேல்


கேளான் (1)

சொன்னாலும் அவன் கேளான் விதி வலியால் கெடு மதி கண் தோன்றாது அன்றே – வில்லி:27 23/2

மேல்


கேளான (1)

கேள்வியினால் மிகுந்து எவர்க்கும் கேளான உதிட்டிரனும் கேட்டான் அன்றே – வில்லி:41 137/4

மேல்


கேளானாகில் (1)

ஆவது கருதானாகில் அமைச்சர் சொல் கேளானாகில்
வீவது குறியானாகில் விளைவதும் உணரானாகில் – வில்லி:27 140/1,2

மேல்


கேளிர் (1)

தரை காவல் பெறு தோளின் ஆண்மை பெரும் கேளிர் தற்சூழவும் – வில்லி:22 9/2

மேல்


கேளிரும் (1)

மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4

மேல்


கேளேன்-கொல்லோ (1)

கெடுத்தனையே பிழைத்தனை என்று இனி ஒருவர் வந்து உரைக்க கேளேன்-கொல்லோ – வில்லி:41 144/4

மேல்


கேளொடு (1)

கேளொடு கெடுதரு கீசகன் கழல் – வில்லி:21 74/1

மேல்