மூ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 8
மூ_இலை 4
மூக்கினை 1
மூக்கீச்சரம் 1
மூக்கு 1
மூக்கை 2
மூங்கில் 1
மூட்சியில் 1
மூட்ட 1
மூடி 2
மூடு 2
மூடும் 1
மூடுவார் 1
மூண்ட 6
மூண்டவாறு 1
மூண்டான் 1
மூண்டு 2
மூத்த 4
மூத்தாள் 1
மூத்தான் 1
மூதாட்டி 1
மூது 8
மூதூர் 48
மூதூர்-நின்றும் 1
மூதூர்க்கு 1
மூதூர்கள் 2
மூதூரின் 2
மூதூரினில் 2
மூதெயில் 1
மூப்பதிலை 1
மூப்பால் 1
மூப்பின் 2
மூப்பினாலே 1
மூப்பு 5
மூப்புறும் 1
மூர்க்கர் 3
மூர்க்கன் 1
மூர்ச்சித்தார் 1
மூர்த்தம் 1
மூர்த்தி 6
மூர்த்தியார் 8
மூர்த்தியார்-தமை 1
மூர்த்தியார்-தாம் 3
மூர்த்தியாரை 1
மூர்த்தியை 1
மூரல் 1
மூரி 2
மூரியார் 1
மூல 10
மூலங்கள் 1
மூலட்டானத்துள் 1
மூலட்டானம் 2
மூலத்தானத்தார் 1
மூலத்தில் 1
மூலத்தை 1
மூலம் 12
மூலமாக 1
மூலன் 1
மூவர் 2
மூவர்க்கு 1
மூவர்களும் 1
மூவரும் 1
மூவரை 1
மூவலூர் 2
மூவா 2
மூவாத 3
மூவாயிரத்து 1
மூவாயிரம் 2
மூவாயிரவர்களும் 1
மூவுலகில் 1
மூவுலகின் 1
மூவுலகு 3
மூவுலகும் 4
மூவெயில் 1
மூவெயில்கள் 1
மூவேந்தர் 2
மூவேந்தர்-பால் 1
மூழ்க 3
மூழ்காதே 1
மூழ்கி 24
மூழ்கிய 1
மூழ்கியும் 1
மூழ்கினார் 4
மூழ்கினாரே 1
மூழ்கீர் 1
மூழ்குதல் 1
மூழ்குதலும் 3
மூழ்குவாய் 1
மூழ்குவார் 1
மூழி 1
மூள்கின்ற 1
மூள்வது 1
மூள்வார் 1
மூள 3
மூளும் 12
மூளை 1
மூன்றில் 1
மூன்று 14
மூன்று_தீ 1
மூன்று_இலை_படை 1
மூன்று_உலகத்தில் 1
மூன்று_உலகில் 1
மூன்று_உலகும் 1
மூன்றுடன் 1
மூன்றும் 14

மூ (8)

வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
மூ ஆண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன் – 6.வம்பறா:1 54/4
பண் இயல் கதியே பருவம்-அது ஒரு மூ வருடத்தே – 6.வம்பறா:1 93/3
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
வந்து வளர் மூ ஆண்டில் மயிர் வினை மங்கலம் செய்து – 7.வார்கொண்ட:3 22/1
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
பரியும் தொண்டீர் மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது – 7.வார்கொண்ட:3 48/3

மேல்


மூ_இலை (4)

வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
படை கொண்ட மூ_இலை வேலர் பழனம் திரு பதி சார்ந்தார் – 6.வம்பறா:1 298/4
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2

மேல்


மூக்கினை (1)

மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார் – 10.கடல்:1 6/4

மேல்


மூக்கீச்சரம் (1)

செற்றவர் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப்பள்ளி சிலம்பு அணைந்தார் – 6.வம்பறா:1 343/4

மேல்


மூக்கு (1)

துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3

மேல்


மூக்கை (2)

படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை – 10.கடல்:3 5/2
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர் – 10.கடல்:3 5/3,4

மேல்


மூங்கில் (1)

மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும் – 3.இலை:3 34/2

மேல்


மூட்சியில் (1)

மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை – 1.திருமலை:5 56/3

மேல்


மூட்ட (1)

வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர் – 2.தில்லை:4 19/3

மேல்


மூடி (2)

பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி – 5.திருநின்ற:1 187/2
பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே – 5.திருநின்ற:5 29/1,2

மேல்


மூடு (2)

பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த – 3.இலை:5 25/1
மூடு பன் மணி சிவிகை உள் பெய்து முன் போத – 6.வம்பறா:1 1082/1

மேல்


மூடும் (1)

மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால் – 3.இலை:6 15/2

மேல்


மூடுவார் (1)

பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் – 6.வம்பறா:1 681/4

மேல்


மூண்ட (6)

மூண்ட அ புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று – 2.தில்லை:2 6/1
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் – 5.திருநின்ற:1 94/4
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் – 5.திருநின்ற:1 97/4
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார் – 5.திருநின்ற:1 181/4
மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு – 5.திருநின்ற:1 283/3
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே – 5.திருநின்ற:5 19/1

மேல்


மூண்டவாறு (1)

மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற – 6.வம்பறா:1 717/4

மேல்


மூண்டான் (1)

முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான் – 3.இலை:2 36/4

மேல்


மூண்டு (2)

மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள் – 2.தில்லை:3 22/1
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த – 3.இலை:3 20/3

மேல்


மூத்த (4)

மொய்த்து வளர் பேர் அழகு மூத்த வடிவேயோ – 1.திருமலை:5 32/1
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/3
சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை – 5.திருநின்ற:5 23/3
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே – 5.திருநின்ற:5 32/2

மேல்


மூத்தாள் (1)

இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்கு – 6.வம்பறா:1 480/2

மேல்


மூத்தான் (1)

தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினை சார சொன்னான் – 1.திருமலை:5 53/3

மேல்


மூதாட்டி (1)

நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள் – 3.இலை:3 47/4

மேல்


மூது (8)

மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/4
மூது அறிவீர் முன் போந்தான் இது என்றன் முறைப்பாடு என்றான் – 1.திருமலை:5 51/4
வந்த மூது அறிவோரை மானக்கஞ்சாறனார் – 3.இலை:5 17/1
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து – 5.திருநின்ற:4 8/1
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/4
மூது எயில் திரு வாயிலை தொழுது போய் முகை மலர் குழலார்கள் – 6.வம்பறா:1 956/2
மூது எயில் புறம்பு சென்று அணைந்து முன் வணங்கினார் – 6.வம்பறா:1 988/4
பொன் நெடும் தட மூது எயில் மகோதையில் புகுந்தனர் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 27/4

மேல்


மூதூர் (48)

முனைவர் அவர் மகிழ்ந்து அருளப்பெற்று உடைய மூதூர் மேல் – 1.திருமலை:3 50/2
கொங்கு அலர் சோலை மூதூர் குறுகினார் எதிரே வந்து – 1.திருமலை:5 10/3
தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார் – 2.தில்லை:2 1/1
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர் – 2.தில்லை:6 2/4
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/4
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப – 3.இலை:5 12/1
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார் – 3.இலை:5 19/4
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார் – 3.இலை:5 36/4
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர் – 3.இலை:7 7/4
சால்பு ஆய மும்மை தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/1,2
மும்மை புவனங்களின் மிக்கது அன்றே அ மூதூர்
மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை – 4.மும்மை:1 7/1,2
கண் கட்டி விடும் களி யானை அ காவல் மூதூர்
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகி – 4.மும்மை:1 32/1,2
நாம மூதூர் மற்று அதனுள் நல்லோர் மனம் போல் அவர் அணிந்த – 4.மும்மை:2 2/1
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வ சேய்ஞலூர் – 4.மும்மை:6 1/4
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம் – 5.திருநின்ற:1 238/1
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் – 5.திருநின்ற:4 37/1
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் – 5.திருநின்ற:4 61/2
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார் – 5.திருநின்ற:5 42/3,4
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார் – 5.திருநின்ற:6 4/1,2
கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர் – 6.வம்பறா:1 2/4
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்
சங்கம் படகம் கருவி தாரை முதலான – 6.வம்பறா:1 33/1,2
தம்தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர்
எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எ உலகும் ஏத்தும் நாளில் – 6.வம்பறா:1 111/3,4
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அ நெறி செல்வார் – 6.வம்பறா:1 296/1
ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து – 6.வம்பறா:1 300/3
செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர்
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/3,4
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொட தாமும் – 6.வம்பறா:1 497/1
கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளி செய்வார் – 6.வம்பறா:1 563/4
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர்
மல்கு திரு மறுகின்-கண் புகுந்த போது மா தவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் – 6.வம்பறா:1 578/1,2
மன்னிய மூதூர் மறுகில் வந்து அருள கண்டு – 6.வம்பறா:1 801/3
தம்மை உடையவர் மூதூர் மிதிக்க அஞ்சி சண்பை வரும் சிகாமணியார் சார சென்று – 6.வம்பறா:1 1008/3
ஏழிசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார் – 6.வம்பறா:1 1148/4
மனை வளரும் மறுகு எல்லாம் மண அணி செய் மறை மூதூர்
நினைவு_அரிய பெரு வளங்கள் நெருங்குதலால் நிதி கோமான் – 6.வம்பறா:1 1181/2,3
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணி வாயில் புக்கு – 6.வம்பறா:2 111/3
நீட மூதூர் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் – 6.வம்பறா:2 193/3
கோ வீற்றிருந்து முறை புரியும் குல கோ மூதூர் கொடுங்கோளூர் – 7.வார்கொண்ட:4 1/4
முருகு விரியும் மலர் சோலை மூதூர் அதன்-கண் முறை மரபின் – 7.வார்கொண்ட:4 5/1
மின்னு மணி பூண் கொடி மாட வீதி மூதூர் வலம்கொண்டு – 7.வார்கொண்ட:4 20/3
தொட்ட கொடி மாளிகை மூதூர் கடந்தார் உதியர் தோன்றலார் – 7.வார்கொண்ட:4 47/4
மங்குல் தவழும் மணி மாட மதுரை மூதூர் வந்து அணைந்தார் – 7.வார்கொண்ட:4 90/4
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர்
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர் – 8.பொய்:2 1/3,4
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர் – 8.பொய்:4 4/4
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர் – 8.பொய்:5 1/4
நலம் மிகு சிறப்பின் மிக்க நான்_மறை விளங்கும் மூதூர்
குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கை – 12.மன்னிய:1 2/2,3
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4

மேல்


மூதூர்-நின்றும் (1)

மொழி காதல் தமிழ்_மாலை புனைந்து அருளி அங்கு அகன்றார் மூதூர்-நின்றும் – 6.வம்பறா:1 467/4

மேல்


மூதூர்க்கு (1)

விளங்கிய அ மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை – 6.வம்பறா:1 6/4

மேல்


மூதூர்கள் (2)

மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் – 4.மும்மை:5 28/4
மொய்வார் சடையார் மூதூர்கள் இறைஞ்ச முறைமையால் நினைந்தார் – 7.வார்கொண்ட:4 81/4

மேல்


மூதூரின் (2)

அ திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன் போதுவார் போத – 6.வம்பறா:1 282/1
வந்து தில்லை மூதூரின் எல்லை வணங்கி மகிழ்ச்சியினால் – 7.வார்கொண்ட:4 53/1

மேல்


மூதூரினில் (2)

செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் திரு நடம் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 962/1

மேல்


மூதெயில் (1)

ஆதி மூதெயில் அ நகர் மன்னிய – 4.மும்மை:5 104/1

மேல்


மூப்பதிலை (1)

முத்தி தரும் பெருமானை துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:2 121/4

மேல்


மூப்பால் (1)

மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார் – 3.இலை:1 15/2

மேல்


மூப்பின் (2)

மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான் – 3.இலை:3 43/4
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1

மேல்


மூப்பினாலே (1)

முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன் – 3.இலை:3 45/2

மேல்


மூப்பு (5)

அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ – 1.திருமலை:5 32/2
என்னுடைய மூப்பு காண் என்று அருள அதற்கு இசைந்து – 1.திருமலை:5 86/3
வளம் மலி இளமை நீங்கி வடிவு உறு மூப்பு வந்து – 2.தில்லை:2 9/3
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்று – 2.தில்லை:2 39/2
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல – 3.இலை:3 53/1

மேல்


மூப்புறும் (1)

மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை – 5.திருநின்ற:4 21/1

மேல்


மூர்க்கர் (3)

உள் நிலாவும் புகழ் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம் – 6.வம்பறா:4 26/4
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4
நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி – 6.வம்பறா:5 12/3

மேல்


மூர்க்கன் (1)

முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் – 4.மும்மை:1 26/1

மேல்


மூர்ச்சித்தார் (1)

முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார் – 6.வம்பறா:2 274/4

மேல்


மூர்த்தம் (1)

மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4

மேல்


மூர்த்தி (6)

ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே – 1.திருமலை:1 27/1
பூண் தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் – 1.திருமலை:5 26/3
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம் – 4.மும்மை:6 53/2
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள – 5.திருநின்ற:1 277/4
புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார் – 6.வம்பறா:1 744/4
ஆதி மூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் – 6.வம்பறா:1 972/1

மேல்


மூர்த்தியார் (8)

ஆதி மூர்த்தியார் உடன் சிவபுரியினை அணைந்தார் – 2.தில்லை:7 48/4
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/4
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/2
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று – 6.வம்பறா:1 164/1
மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெரும் திரு விசயமங்கையில் – 6.வம்பறா:1 238/3,4
மூர்த்தியார் கழல் பரவியே திரு முன்றில் அணைய – 6.வம்பறா:1 668/4
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
மூர்த்தியார் தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடி தலைவர் – 6.வம்பறா:2 64/4

மேல்


மூர்த்தியார்-தமை (1)

மூர்த்தியார்-தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே – 7.வார்கொண்ட:4 103/2

மேல்


மூர்த்தியார்-தாம் (3)

மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/4
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 23/4
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 46/4

மேல்


மூர்த்தியாரை (1)

முக்கண் பரனார் திருத்தொண்டரை மூர்த்தியாரை
மை கல் புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் – 4.மும்மை:1 15/2,3

மேல்


மூர்த்தியை (1)

அட்ட மூர்த்தியை பொருள் என உடைமையால் அமர்ந்து – 6.வம்பறா:1 786/3

மேல்


மூரல் (1)

மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3

மேல்


மூரி (2)

முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள் – 3.இலை:5 3/3,4
முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ள கங்கையினில் – 6.வம்பறா:2 62/2

மேல்


மூரியார் (1)

மூரியார் கலி உலகின் முடி இட்ட திரு விளக்கு – 9.கறை:1 9/1

மேல்


மூல (10)

ஆதி_இல் மூல ஓலை காட்டி நீ அடிமை ஆதல் – 1.திருமலை:5 49/3
மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை மூல ஓலை – 1.திருமலை:5 56/3
மூல முதல்வர் சிவலோகம் எய்த பெற்றான் முதுமறையோன் – 4.மும்மை:6 58/4
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி – 5.திருநின்ற:1 262/3
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர் – 5.திருநின்ற:1 354/3
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் – 5.திருநின்ற:3 10/4
மூல இலக்கியமாக எல்லா பொருள்களும் முற்ற – 6.வம்பறா:1 277/3
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூல
தேவர்-தம் திருவாவடுதுறை திருத்தொண்டர் – 6.வம்பறா:1 418/1,2
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
மூல தானத்து எழுந்தருளி இருந்த முதல்வன்-தனை வணங்கி – 12.மன்னிய:5 9/1

மேல்


மூலங்கள் (1)

பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி – 5.திருநின்ற:6 20/3

மேல்


மூலட்டானத்துள் (1)

சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள்
ஓவாத பெரும் காதல் உடன் இறைஞ்சி புறம் போந்து – 6.வம்பறா:2 125/2,3

மேல்


மூலட்டானம் (2)

தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
பெருமானை திரு மூலட்டானம் சேர் பிஞ்ஞகனை – 6.வம்பறா:2 308/2

மேல்


மூலத்தானத்தார் (1)

திரை ஏறும் புனல் சடில திரு மூலத்தானத்தார்
விரை ஏறு மலர் பாதம் தொழுது அணைந்தார் வீதியினில் – 6.வம்பறா:2 138/3,4

மேல்


மூலத்தில் (1)

வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து தோன்றினார் மலை_மகள் காண – 4.மும்மை:5 57/4

மேல்


மூலத்தை (1)

வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் – 5.திருநின்ற:1 345/2

மேல்


மூலம் (12)

வேத மூலம் வெளிப்படும் மேதினி – 1.திருமலை:1 33/2
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன் மலை_வல்லிக்கு அளித்த வளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருளப்பெற்று தொல் நிலத்து மன்னு பயிர் வேத வாய்மை – 4.மும்மை:5 102/2,3
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ – 4.மும்மை:6 21/4
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப – 5.திருநின்ற:3 10/3
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி – 5.திருநின்ற:4 63/3
அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அனைத்தின் ஆகரம் ஆன – 6.வம்பறா:1 153/2
மூலம் ஆகிய திரு இருக்கு குறள் மொழிந்து – 6.வம்பறா:1 667/2
மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கி – 6.வம்பறா:1 1196/3
மூலம் என கொடு போந்த ஆணியின் முன் உரைப்பிக்க – 6.வம்பறா:2 136/2
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு – 6.வம்பறா:2 288/2
முன்னை வினையால் இ வினைக்கு மூலம் ஆனாள்-பால் அணைய – 6.வம்பறா:2 323/1
மூலம் ஆன திருத்தொண்டத்தொகைக்கு முதல்வராய் இந்த – 13.வெள்ளானை:1 1/1

மேல்


மூலமாக (1)

மேவும் பெருமை அரு_மறைகள் மூலமாக விளங்கு உலகில் – 4.மும்மை:6 18/2

மேல்


மூலன் (1)

முந்தை முறை நிரை மேய்ப்பான் மூலன் எனும் பெயர் உடையான் – 6.வம்பறா:3 11/2

மேல்


மூவர் (2)

வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக – 3.இலை:1 25/3
மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை – 7.வார்கொண்ட:4 69/2

மேல்


மூவர்க்கு (1)

மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூல – 6.வம்பறா:1 418/1

மேல்


மூவர்களும் (1)

முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2

மேல்


மூவரும் (1)

பொன் ஆரம் அணி மார்பில் புரவலர் மூவரும் போத – 7.வார்கொண்ட:4 97/2

மேல்


மூவரை (1)

தானவர் புரங்கள் வேவ மூவரை தவிர்த்து ஆட்கொண்டீர் – 6.வம்பறா:2 354/2

மேல்


மூவலூர் (2)

கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
மூவலூர் உறை முதல்வரை பரவிய மொழியால் – 6.வம்பறா:1 437/1

மேல்


மூவா (2)

முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க – 5.திருநின்ற:1 381/1,2
மூவா முனிவர் யோகிகளின் முதல் ஆனார்கள் முன் போக – 6.வம்பறா:2 332/4

மேல்


மூவாத (3)

மூவாத முதல் ஆகி நடு ஆகி முடியாத – 6.வம்பறா:2 125/1
மூவாத முழு முதலார் முதல் கோலக்கா அகன்று – 6.வம்பறா:2 155/1
மூவாத திரு மகிழை முக்காலும் வலம் வந்து – 6.வம்பறா:2 260/2

மேல்


மூவாயிரத்து (1)

மன்னிய மூவாயிரத்து ஆண்டு இ புவி மேல் மகிழ்ந்து இருந்து – 6.வம்பறா:3 27/2

மேல்


மூவாயிரம் (2)

ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுதிகள் – 4.மும்மை:4 24/4
முன்னிய அ பொருள் மாலை தமிழ் மூவாயிரம் சாத்தி – 6.வம்பறா:3 27/1

மேல்


மூவாயிரவர்களும் (1)

முண்ட திருநீற்று மூவாயிரவர்களும்
தொண்ட தகைமை கண நாதராய் தோன்ற – 6.வம்பறா:1 170/2,3

மேல்


மூவுலகில் (1)

முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல் – 5.திருநின்ற:4 26/3

மேல்


மூவுலகின் (1)

மூவுலகின் பயன் ஆகி முன் நின்றது என நினைந்து – 1.திருமலை:5 141/3

மேல்


மூவுலகு (3)

மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் – 6.வம்பறா:1 238/3
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/4
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4

மேல்


மூவுலகும் (4)

முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம் – 4.மும்மை:5 127/1,2
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி – 5.திருநின்ற:1 229/3
மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி – 6.வம்பறா:2 170/2
முன் எதிர் சென்றே மூவுலகும் சென்று அடையும் தாள் – 6.வம்பறா:2 371/3

மேல்


மூவெயில் (1)

முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து – 5.திருநின்ற:1 340/1

மேல்


மூவெயில்கள் (1)

முற்றா வெண் மதி முடியார் பதி பணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வ திருநெல்வேலியை அணைந்தார் – 7.வார்கொண்ட:4 107/3,4

மேல்


மூவேந்தர் (2)

முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன் – 8.பொய்:2 41/1
மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கு அப்பால் முதல்வனார் அடி சார்ந்த முறைமையோரும் – 11.பத்தராய்:7 1/1

மேல்


மூவேந்தர்-பால் (1)

முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர்-பால் பயில்வார் – 9.கறை:2 1/4

மேல்


மூழ்க (3)

எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை – 2.தில்லை:2 29/3
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார் – 5.திருநின்ற:1 335/3,4
ஆடிய சேவடியார்-தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க – 6.வம்பறா:1 582/4

மேல்


மூழ்காதே (1)

அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் – 2.தில்லை:2 30/2,3

மேல்


மூழ்கி (24)

தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று – 1.திருமலை:1 7/3
இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்னிசை வண் தமிழ்_மாலை பாட – 1.திருமலை:5 126/4
குளத்தினில் மூழ்கி போ என்று அருளினான் கொடுமை இல்லான் – 2.தில்லை:2 27/4
பொங்கு புனல் யான் மூழ்கி தருகின்றேன் போதும் என – 2.தில்லை:2 29/4
தரும் இவர் குளத்தில் மூழ்கி தருக என்று உரைத்தார் ஆகில் – 2.தில்லை:2 35/3
பொருந்திய வகையால் மூழ்கி தருகின்றேன் போதும் என்று – 2.தில்லை:2 36/3
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவியாரும் – 2.தில்லை:2 39/1
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி – 3.இலை:1 9/1
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார் – 3.இலை:3 138/4
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி
பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து – 3.இலை:3 165/1,2
புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கி போய் – 4.மும்மை:2 7/1
இ பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரிநூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து – 4.மும்மை:4 28/1,2
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா – 4.மும்மை:5 12/2
பூம் பாசடை நீர் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் – 4.மும்மை:6 5/3
அன்பு புரியும் பிரமசாரிகளும் மூழ்கி அரனார்க்கு – 4.மும்மை:6 46/1
பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கி பூ மேல் அயன் முதலாம் – 4.மும்மை:6 55/3
ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர் – 5.திருநின்ற:1 101/1
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான் – 5.திருநின்ற:1 270/2
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி
மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி – 5.திருநின்ற:1 371/2,3
பெரு வெள்ளத்திடை மூழ்கி பேராத பெரும் காதல் – 6.வம்பறா:1 398/2
முன் அணைந்த திருநாவுக்கரசர்-தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கி
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு – 6.வம்பறா:1 577/1,2
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி
என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் – 6.வம்பறா:1 585/1,2
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி – 7.வார்கொண்ட:4 8/2
புலரி எழுந்து புனல் மூழ்கி புனித வெண் நீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து நீடும் பணிகள் பல செய்து – 7.வார்கொண்ட:4 8/2,3

மேல்


மூழ்கிய (1)

மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்ற – 2.தில்லை:7 19/2

மேல்


மூழ்கியும் (1)

வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் – 2.தில்லை:2 32/4

மேல்


மூழ்கினார் (4)

பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/4
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் – 5.திருநின்ற:1 370/4
பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய் – 6.வம்பறா:1 60/4
வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணி நீர் மூழ்கினார் – 6.வம்பறா:4 19/4

மேல்


மூழ்கினாரே (1)

முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4

மேல்


மூழ்கீர் (1)

கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க – 2.தில்லை:2 38/3

மேல்


மூழ்குதல் (1)

மருவிய மனைவியோடு மூழ்குதல் வழக்கே என்றார் – 2.தில்லை:2 35/4

மேல்


மூழ்குதலும் (3)

மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மை காணாது – 6.வம்பறா:1 61/1
கிளரும் திரை நீர் மூழ்குதலும் வழுவி போக ஏதம் உற – 6.வம்பறா:2 77/2
புக்கு அதனில் மூழ்குதலும் புதிய பிணி அது நீங்கி – 6.வம்பறா:2 299/3

மேல்


மூழ்குவாய் (1)

மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் – 2.தில்லை:2 28/4

மேல்


மூழ்குவார் (1)

பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற – 2.தில்லை:2 39/4

மேல்


மூழி (1)

மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4

மேல்


மூள்கின்ற (1)

மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான் – 3.இலை:2 9/4

மேல்


மூள்வது (1)

முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும் – 6.வம்பறா:1 333/4

மேல்


மூள்வார் (1)

பின்னை இ அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார் – 6.வம்பறா:1 758/4

மேல்


மூள (3)

மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ் – 4.மும்மை:6 36/3
முறை புரிந்த முன் உணர்வு மூள அழ தொடங்கினார் – 6.வம்பறா:1 61/3
மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும் – 6.வம்பறா:2 20/4

மேல்


மூளும் (12)

நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/2
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை – 3.இலை:6 14/1,2
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்-தாம் – 4.மும்மை:1 9/4
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து – 5.திருநின்ற:1 45/4
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார் – 5.திருநின்ற:1 64/4
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே – 5.திருநின்ற:1 358/3
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும் – 5.திருநின்ற:3 6/3
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால் – 6.வம்பறா:1 822/4
முன்னி எழும் குறிப்பினால் மூளும் ஆதரவு எய்த – 6.வம்பறா:3 10/2
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி – 7.வார்கொண்ட:2 4/2
மு பெரும் பொழுது அர்ச்சனை வழிபாடு மூளும் அன்பொடு நாளும் – 7.வார்கொண்ட:5 5/3

மேல்


மூளை (1)

இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு – 7.வார்கொண்ட:3 65/3

மேல்


மூன்றில் (1)

காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன முன்னே – 1.திருமலை:5 56/2

மேல்


மூன்று (14)

நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/2
வருமுறை எரி மூன்று ஓம்பி மன் உயிர் அருளால் மல்க – 2.தில்லை:1 5/1
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன்-தன்னை ஏத்தி – 2.தில்லை:3 27/3
தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும் – 3.இலை:4 25/3
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா – 4.மும்மை:5 78/3
தாள் அது ஒன்றினில் மூன்று பூ மலரும் தமனிய செழும் தாமரை தடமும் – 4.மும்மை:5 79/1
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3
ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் – 5.திருநின்ற:6 3/2
நால் தடம் தோள் உடை மூன்று நயன பிரான் கோயில் நண்ணி – 6.வம்பறா:1 286/2
முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற – 6.வம்பறா:1 1064/1
வில்லால் எயில் மூன்று எரித்த பிரான் விரை ஆர் கமல சேவடிகள் – 6.வம்பறா:4 9/1
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆம் என்று முன் மொழிந்த மூன்று பேதம் – 11.பத்தராய்:6 1/3

மேல்


மூன்று_தீ (1)

ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர் – 5.திருநின்ற:6 3/2

மேல்


மூன்று_இலை_படை (1)

நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்று தரையின் நாம மூன்று_இலை_படை உடை பிள்ளை – 4.மும்மை:5 81/3

மேல்


மூன்று_உலகத்தில் (1)

பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2

மேல்


மூன்று_உலகில் (1)

நீண்ட காப்பு உடை தீர்த்தம் மூன்று_உலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமே முதலா – 4.மும்மை:5 78/3

மேல்


மூன்று_உலகும் (1)

நண்ணும் மூன்று_உலகும் நான்_மறைகளும் – 1.திருமலை:1 2/2

மேல்


மூன்றுடன் (1)

உலகில் வந்து உறு பயன் அறிவிக்க ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று – 4.மும்மை:5 72/2

மேல்


மூன்றும் (14)

தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற – 3.இலை:3 154/3
மண்ணின் மிசை வந்ததற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் – 4.மும்மை:5 112/1,2
ஆசு உடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி – 4.மும்மை:5 114/3
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி – 5.திருநின்ற:1 339/3
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் – 5.திருநின்ற:4 53/2
பொன்_தொடியை கொடு வந்து போர் கோல சேவகராய் புரங்கள் மூன்றும்
செற்றவர்-தம் கோயிலினுள் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான் – 6.வம்பறா:1 312/3,4
வாய்ந்த மா தவர் அவர்-தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும்
காய்ந்த மால் விடையார்-தம் கணபதீச்சரம் பரவு காதல் கூர – 6.வம்பறா:1 471/2,3
விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரிய செற்ற – 6.வம்பறா:1 482/2
மற்று இதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும்
செற்றவர் அன்பர்-தம்-பால் செய்தது ஈங்கு அரசன் பாங்கு – 6.வம்பறா:1 718/2,3
ஆடும் எனவாம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும்
நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று – 6.வம்பறா:1 838/1,2
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய – 10.கடல்:1 1/2
புரம் மூன்றும் செற்றானை பூண் நாகம் அணிந்தானை – 11.பத்தராய்:2 1/1
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும் அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின் – 11.பத்தராய்:5 3/2
உழையார் புவனம் ஒரு மூன்றும் அளிக்கும் என்ன ஒள்_இழையார் – 12.மன்னிய:4 9/4

மேல்