மீ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 3
மீக்கூர 4
மீக்கூரும் 1
மீக்கூறும் 1
மீக்கொண்ட 1
மீச்சூர் 1
மீட்டார் 1
மீட்டு 2
மீட்டும் 2
மீட்பனவே 1
மீட்பாராய் 1
மீட்பான் 1
மீண்ட 2
மீண்டதன் 1
மீண்டனர் 2
மீண்டார் 5
மீண்டார்-தமை 1
மீண்டு 33
மீண்டும் 29
மீண்டே 1
மீதிட்டு 1
மீது 97
மீதும் 1
மீதுஆம் 1
மீதூர் 1
மீதூர 2
மீதே 2
மீதோ 1
மீப்புலத்து 1
மீப்பொழிந்தார் 1
மீமிசை 1
மீள் 1
மீள்பவர் 1
மீள்வதனுக்கு 1
மீள்வது 1
மீள்வர் 1
மீள்வார் 6
மீள்வார்கள் 1
மீள 10
மீளமீள 1
மீளவும் 7
மீளா 3
மீளாத 2
மீளாமை 1
மீளி 3
மீளும் 2
மீளுமாறு 1
மீளேன் 1
மீன் 18
மீன்களில் 1
மீனவர் 1
மீனவற்கு 2
மீனவன் 7
மீனவன்-தன் 3
மீனவனார் 1
மீனவனை 1
மீனும் 1
மீனே 2

மீ (3)

மகிழ்ச்சியால் மணம் மீ கூறி மங்கல வினைகள் எல்லாம் – 1.திருமலை:5 11/1
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/2
மின் ஆர் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீ கொண்டு ஏற – 6.வம்பறா:1 473/3

மேல்


மீக்கூர (4)

மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால் – 5.திருநின்ற:4 6/2
விரவு காதல் மீக்கூர மேவும் நாள்கள் பல செல்ல – 7.வார்கொண்ட:4 127/1
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கி – 7.வார்கொண்ட:6 3/1
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார் – 8.பொய்:6 6/2

மேல்


மீக்கூரும் (1)

அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில் – 5.திருநின்ற:1 40/1

மேல்


மீக்கூறும் (1)

மாறு_இலா நிறை வளம் தரும் புகலியின் மணம் மீக்கூறும்
நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் – 6.வம்பறா:1 1182/1,2

மேல்


மீக்கொண்ட (1)

செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் – 6.வம்பறா:1 687/3

மேல்


மீச்சூர் (1)

மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்தி – 6.வம்பறா:1 537/3

மேல்


மீட்டார் (1)

மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே – 5.திருநின்ற:7 33/4

மேல்


மீட்டு (2)

வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டு படையும் என படைத்தார் – 7.வார்கொண்ட:3 78/3
முன் நாள் முதலை வாய் புக்க மைந்தன் முன் போல் வர மீட்டு
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/1,2

மேல்


மீட்டும் (2)

அங்கும் அவன் திரு முடி மேல் மீட்டும் அவர் தாள் நீட்ட – 1.திருமலை:5 87/1
மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில் வரும் – 6.வம்பறா:2 137/1

மேல்


மீட்பனவே (1)

மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே – 6.வம்பறா:7 33/4

மேல்


மீட்பாராய் (1)

விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/4

மேல்


மீட்பான் (1)

துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4

மேல்


மீண்ட (2)

மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான – 5.திருநின்ற:1 189/2
வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப்பெற்று மீண்ட பின்பு – 6.வம்பறா:1 488/2

மேல்


மீண்டதன் (1)

இரு பெரு வேந்தரும் இயல்பின் மீண்டதன் பின் எழுந்தருளும் – 7.வார்கொண்ட:4 106/1

மேல்


மீண்டனர் (2)

உய்த்து உடன் போய் விடைகொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் – 2.தில்லை:2 18/3,4
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/4

மேல்


மீண்டார் (5)

இவன் அருள் பெற பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார் – 2.தில்லை:3 27/4
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார் – 6.வம்பறா:1 816/4
வம்பலர் குழலினார் தாம் மறுத்ததே கொண்டு மீண்டார் – 6.வம்பறா:2 346/4
பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார்
முன்பு உடன் போதாதாரும் முறைமையில் சேவித்து ஏக – 6.வம்பறா:2 358/2,3
திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார்
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/3,4

மேல்


மீண்டார்-தமை (1)

தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு – 3.இலை:2 28/2

மேல்


மீண்டு (33)

மேய காலம் அலாமையின் மீண்டு அவன் – 1.திருமலை:1 7/2
வெவ் வினை கொடியோன்-தன்னை விட்ட பின் மீண்டு போந்தான் – 2.தில்லை:5 19/4
அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் – 5.திருநின்ற:1 58/4
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் – 5.திருநின்ற:1 283/4
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:6 20/4
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் – 5.திருநின்ற:6 34/4
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் – 5.திருநின்ற:7 16/4
தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளி சண்பை நகர் சார செல்வார் – 6.வம்பறா:1 105/4
மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு
திசை விளங்கிட திருவருள் பெற்றவர் சில நாள் – 6.வம்பறா:1 228/2,3
காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:1 229/4
மெய்த்த இசை பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர் தாள் மனம் கொண்டு மீண்டு போந்து – 6.வம்பறா:1 267/3
குலவு தமிழ்_தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில் – 6.வம்பறா:1 304/4
பொன்னி மா நதி கரையினில் மீண்டு போந்து அணைந்து – 6.வம்பறா:1 435/3
கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு
தேடு மா மறைகள் கண்டார் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 597/3,4
மீண்டு போந்து அழைக்க புக்கார் விரையுறும் விருப்பின் மிக்கார் – 6.வம்பறா:1 727/4
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ – 6.வம்பறா:1 851/3
மன்னு திருத்தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக்கரசியாரும் – 6.வம்பறா:1 893/2
பொங்கு புனல் காவிரி நாடு அதனின் மீண்டு போதுதற்கு திருவுள்ளம் ஆக போற்றும் – 6.வம்பறா:1 894/1
ஆல விடம் உண்டவரை அடிகள் போற்ற அ நாட்டை அகன்று மீண்டு அணைய செல்வார் – 6.வம்பறா:1 895/4
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
செக்கர் வேணியர் இரும்பை மாகாளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு
மிக்க சீர் வளர் அதிகை வீரட்டமும் மேவுவார் தம் முன்பு – 6.வம்பறா:1 964/2,3
மண்டு பெரும் காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார் – 6.வம்பறா:1 1001/4
பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து – 6.வம்பறா:1 1168/1
என் இனி புறம் போய் எய்துவது என்று மீண்டு எழுந்தருளுவதற்கு எழுவார் – 6.வம்பறா:2 91/4
புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்து போற்றி – 6.வம்பறா:2 118/4
மெய்ப்பொருள் வண் தமிழ் மலை விளம்பிய மீண்டு அணைந்தார் – 6.வம்பறா:2 151/4
வேய் அனைய தோளியார்-பால் நின்று மீண்டு அருளி – 6.வம்பறா:2 244/1
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4
முற்றவே மொழிந்து அருள அவர் மீண்டு போனதன் பின் – 6.வம்பறா:3 24/2
கொள்ள அணைத்து கொண்டு மீண்டு இல்லம் புகுத குல_மாதர் – 7.வார்கொண்ட:3 59/3
எஞ்சல்_இலா காதலினால் இனிது இறைஞ்சி மீண்டு அணைந்து – 7.வார்கொண்ட:4 101/3
முரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர் புக்கான் – 12.மன்னிய:1 16/4

மேல்


மீண்டும் (29)

வெவ் உரை எம் முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து மீண்டும் – 1.திருமலை:5 55/4
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர் – 3.இலை:3 112/1
நாடியும் காணார் மீண்டும் நாயனார்-தம்-பால் வந்து – 3.இலை:3 173/2
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி – 5.திருநின்ற:1 118/3
ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே – 5.திருநின்ற:1 228/4
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் – 5.திருநின்ற:1 290/4
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என – 5.திருநின்ற:1 291/2
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி – 5.திருநின்ற:4 34/3
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் – 5.திருநின்ற:4 60/2
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக – 5.திருநின்ற:7 23/1
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/2
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 377/4
சொற்ற புகழ் சிறுத்தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங்குடியில் எழுந்தருள வேண்டி – 6.வம்பறா:1 484/2
விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று – 6.வம்பறா:1 496/3
அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார் – 6.வம்பறா:1 515/4
வீங்கு ஒலி நீர் வீழிமிழலையினில் மீண்டும் அணைந்து – 6.வம்பறா:1 549/3
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேத வனத்து அரு மணியை மீண்டும் புக்கு – 6.வம்பறா:1 618/1
மீண்டும் சிவ நெறி அடையும் விதியினாலும் வெண்நீறு வெப்பு அகல புகலி வேந்தர் – 6.வம்பறா:1 705/3
அஞ்சி அகன்று ஓடிய அ புத்தர் எலாம் அதிசயித்து மீண்டும் உடன் அணைந்து கூடி – 6.வம்பறா:1 911/1
போக்க அரிது ஆயிட கண்டு மீண்டும் தம் இல் புகுவார் – 6.வம்பறா:2 27/2
பலர் புகழும் பண்பினார் மீண்டும் தம் பதி அணைந்தார் – 6.வம்பறா:2 31/4
பொங்கு நாள் மலர் பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டும் புறத்து அணைந்து – 6.வம்பறா:2 99/2
வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடியும் பாட – 6.வம்பறா:2 106/4
அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்ல – 6.வம்பறா:2 358/1
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2
அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து – 6.வம்பறா:2 408/1
சீர் ஆர் தவத்து சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்தி – 7.வார்கொண்ட:3 42/2
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
தங்கள் பெருமான் திருவருளால் தாழ்ந்து மீண்டும் தடம் பொன்னி – 7.வார்கொண்ட:4 139/2

மேல்


மீண்டே (1)

அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் – 6.வம்பறா:2 350/2

மேல்


மீதிட்டு (1)

மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் – 6.வம்பறா:1 1107/3

மேல்


மீது (97)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
மீது தோன்றி அ மெல்லியலார் உடன் – 1.திருமலை:1 27/3
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர் – 1.திருமலை:2 8/3
மேவி அ தடம் மீது எழ பாய் கயல் – 1.திருமலை:2 20/3
செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டே – 1.திருமலை:3 23/2
மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க – 1.திருமலை:5 30/3
பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னை தொடர்வு அற தொடர்ந்து வந்து – 1.திருமலை:5 67/2,3
மேக சாலம் மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்ற – 1.திருமலை:5 93/3
மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4
பேர் அழலின் நெய் சொரிந்தால் ஒத்தன மற்று அதன் மீது சமிதை என்ன – 1.திருமலை:5 173/3
இளமை மீது ஊர இன்ப துறையினில் எளியர் ஆனார் – 2.தில்லை:2 3/4
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/2,3
மீது இடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார் – 2.தில்லை:5 17/4
தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை – 2.தில்லை:7 9/3
கோடு தட்டின் மீது இட கொண்டு எழுந்தது கண்டு – 2.தில்லை:7 33/3
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர் – 2.தில்லை:7 38/4
மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்ல – 2.தில்லை:7 48/2
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும் – 3.இலை:1 4/3
மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார் – 3.இலை:1 41/2
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து – 3.இலை:1 51/2
வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி – 3.இலை:3 57/3
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி – 3.இலை:3 58/1
சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை – 3.இலை:3 60/3
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ – 3.இலை:3 61/1
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன் – 3.இலை:3 69/2
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய் – 3.இலை:7 4/2
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும் – 3.இலை:7 34/2
பொழுதும் புலர்வு உற்றது செம் கதிர் மீது மோத – 4.மும்மை:1 26/4
தாழ்வுற்று எடுத்து பிடர் மீது தரித்தது அன்றே – 4.மும்மை:1 34/4
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது – 4.மும்மை:1 35/3
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது
தன்-நின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில் – 4.மும்மை:1 44/1,2
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
மீது செல்வது போல் வர கம்பை வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் – 4.மும்மை:5 62/4
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம் மீது வந்துறும் என வெரு கொண்டே – 4.மும்மை:5 63/2
வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2
மன்னு வெம் கதிர் மீது எழும் போதும் மறித்து மேல் கடல் தலை விழும் போதும் – 4.மும்மை:5 75/3
கொள அமைத்து மீது ஒரு-பால் அன்ன சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே – 4.மும்மை:5 91/2
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம் மிசை பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிற பொழுது தோன்றும் புனிற்றி மதி கண்டு உருகி பொழிந்த நீரால் – 4.மும்மை:5 92/1,2
விரவு மரகத சோதி வேதி திண்ணை விளிம்பின் ஒளி துளும்பு முறைப்படி மீது ஏறும் – 4.மும்மை:5 97/2
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன – 4.மும்மை:6 3/4
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து – 4.மும்மை:6 17/4
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார் – 5.திருநின்ற:1 72/2
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று – 5.திருநின்ற:1 187/1
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் – 5.திருநின்ற:1 354/1
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப – 5.திருநின்ற:1 371/4
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை – 5.திருநின்ற:3 1/4
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி – 5.திருநின்ற:4 32/2
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன் – 5.திருநின்ற:4 40/1
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய – 5.திருநின்ற:7 3/1
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் – 6.வம்பறா:1 35/2
மீது அணைய நடந்து அருளி விளையாட தொடங்கினார் – 6.வம்பறா:1 51/4
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி – 6.வம்பறா:1 88/1
பூ மறுகு சிவானந்த பெருக்கு ஆறு போத அதன் மீது பொங்கும் – 6.வம்பறா:1 95/3
மெய் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழு பொருளை வேணி மீது
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/1,2
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது
போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை – 6.வம்பறா:1 113/1,2
மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன் – 6.வம்பறா:1 209/4
மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று – 6.வம்பறா:1 216/2
சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழும் தரள குடை நிழல் கீழ் சென்று கண்டார் – 6.வம்பறா:1 258/4
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/1,2
நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற – 6.வம்பறா:1 282/4
வெண் தரள பந்தர் நிழல் மீது அணைய திருமன்றில் – 6.வம்பறா:1 395/3
படியில் வலம்கொண்டு திரு முன்பு எய்தி பார் மீது
நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய – 6.வம்பறா:1 414/3,4
உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட – 6.வம்பறா:1 486/3
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது
வீழ்ந்த வேணியர்-தமை பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு – 6.வம்பறா:1 531/2,3
தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூட தம்பிரான் அருள் பெற்று தலத்தின் மீது
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/3,4
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது
மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார் – 6.வம்பறா:1 584/3,4
பெரு நாம சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து – 6.வம்பறா:1 619/2
வெய்யவன் குண கடலிடை எழுந்தன மீது – 6.வம்பறா:1 707/4
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது
பின் வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழத்து செல்ல – 6.வம்பறா:1 745/1,2
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3
மின் ஒளி மணி பொன் வெண்குடை மீது போத – 6.வம்பறா:1 809/2
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1
முந்தை அறிவிலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு – 6.வம்பறா:1 918/3
அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அ மலை மீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார் தாள் தாமரைகள் தம் முடி மேல் – 6.வம்பறா:1 971/1,2
வில் பொலி தரள கோவை விளங்கிய கழுத்து மீது
பொற்பு அமை வதனமாகும் பதும நல் நிதியம் பூத்த – 6.வம்பறா:1 1101/1,2
பொன் மணி பாலிகை மீது புனித முளை பூரித்தார் – 6.வம்பறா:1 1172/4
மீது பூம் சயனத்து இருந்தவர் முன்பு மேவி – 6.வம்பறா:1 1186/4
மஞ்சு உறை விசும்பின் மீது மண அணி காண சென்றார் – 6.வம்பறா:1 1204/4
விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த – 6.வம்பறா:1 1210/3
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது
வண் திரு அரையின் நீடு வனப்பு ஒளி வளர சாத்தி – 6.வம்பறா:1 1211/3,4
ஒளி கதிர் தரள கோவை உதர பந்தனத்தின் மீது
தளிர் ஒளி துளும்பு முத்தின் சன்ன வீரத்தை சாத்தி – 6.வம்பறா:1 1212/1,2
நீற்று ஒளி தழைத்து பொங்கி நிறை திரு நெற்றி மீது
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/1,2
வழிந்தன திசைகள் மீது மலர்ந்தன உலகம் எல்லாம் – 6.வம்பறா:1 1218/4
கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல – 6.வம்பறா:1 1219/3
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது
முன் இழிந்து அருளி வந்தார் மூவுலகு உய்ய வந்தார் – 6.வம்பறா:1 1226/3,4
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது
நகில் அணி முத்த மாலை நகை முக மடவார் வாழ்த்த – 6.வம்பறா:1 1231/2,3
மீது கண்ணீர் விழ மோந்து வேண்டுவனவும் கொடுத்து அருளி – 6.வம்பறா:2 40/3
மற்று அதனில் வட கீழ் பால் கரை மீது வந்து அருளி – 6.வம்பறா:2 130/1
மொய் மலர் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது – 6.வம்பறா:2 400/4
பெற்றம் மீது உயர்த்தவர் தாள் சிந்தித்து பெருகு ஆர்வ – 6.வம்பறா:3 24/3
மீது பெருமாள்-தமை இருத்தி நம்பி மேவி உடன் இருப்ப – 7.வார்கொண்ட:4 71/2
வேறு நாவாய் ஓடங்கள் மீது செல்லா வகை மிகைப்ப – 7.வார்கொண்ட:4 133/2
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் – 10.கடல்:4 3/4
நால் தடம் கடல் முழக்கு என ஐவகை நாதம் மீது எழுந்து ஆர்ப்ப – 13.வெள்ளானை:1 34/2

மேல்


மீதும் (1)

களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல் – 3.இலை:6 3/3

மேல்


மீதுஆம் (1)

பிள்ளைமை பருவம் மீதுஆம் பேதைமை பருவம் நீங்கி – 1.திருமலை:5 136/1

மேல்


மீதூர் (1)

வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை – 3.இலை:3 44/2

மேல்


மீதூர (2)

மான மிக மீதூர மண் படுவான் கண் படான் – 3.இலை:2 30/2
பொங்கு காதல் மீதூர புகல்வார் சில நாள் போனதன் பின் – 6.வம்பறா:2 313/4

மேல்


மீதே (2)

தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே
வெண் நரை முடித்தது விழுந்து இடை சழங்க – 1.திருமலை:5 29/3,4
மும்மை நிலை தமிழ் விரகர் முடி மீதே சிவபூதம் – 6.வம்பறா:1 392/2

மேல்


மீதோ (1)

பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார் – 7.வார்கொண்ட:4 98/4

மேல்


மீப்புலத்து (1)

விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம் – 6.வம்பறா:1 332/4

மேல்


மீப்பொழிந்தார் (1)

புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார் – 6.வம்பறா:1 544/4

மேல்


மீமிசை (1)

மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட – 5.திருநின்ற:1 358/2

மேல்


மீள் (1)

திரு மலி தோளினானை மீள் என செப்பினானே – 2.தில்லை:3 26/4

மேல்


மீள்பவர் (1)

மெய் பெருந்தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளி போய் – 6.வம்பறா:1 961/3

மேல்


மீள்வதனுக்கு (1)

மேலவர் தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியில் வீழ்ந்து – 6.வம்பறா:1 895/2

மேல்


மீள்வது (1)

சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4

மேல்


மீள்வர் (1)

வழி எதிர்கொள்ள செல்வர் வரவு காணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர் அசைவுடன் இருப்பர் நெற்றி – 6.வம்பறா:2 349/1,2

மேல்


மீள்வார் (6)

நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் – 5.திருநின்ற:1 173/4
ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக – 5.திருநின்ற:1 421/3
இன் தமிழின் விரகர் அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணை அடி என் மனத்த என்று – 6.வம்பறா:1 1028/3
என் செய்து மீள்வார் இன்னமும் என்றே இடர் கூர – 6.வம்பறா:2 370/2
தம்பிரான் ஆனார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார்
எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சியோடும் – 6.வம்பறா:2 375/1,2
மின் நாட்டும் பல் மணி பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/3,4

மேல்


மீள்வார்கள் (1)

மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள – 6.வம்பறா:1 282/2

மேல்


மீள (10)

பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற – 2.தில்லை:2 39/4
தவ முனி-தன்னை மீள சொன்ன பின் தலையால் ஆர – 2.தில்லை:3 27/1
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த – 3.இலை:3 108/1
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர் – 3.இலை:3 112/1
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா – 3.இலை:3 171/2,3
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
மெய் தவர் அந்தணர் நீங்கா விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளி தாமம் நிரத்த – 6.வம்பறா:1 282/2,3
வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் – 6.வம்பறா:1 810/3
வியக்கும் உக கடை நாளின் மேக முழக்கு என மீள
சய தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும்படி தயங்க – 9.கறை:3 5/3,4
இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை – 12.மன்னிய:4 4/3

மேல்


மீளமீள (1)

மீளமீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட – 4.மும்மை:6 36/1

மேல்


மீளவும் (7)

மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல்உற்றான் – 2.தில்லை:3 28/4
பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர் – 6.வம்பறா:1 660/4
மீளவும் பல முறை நிலமுற விழுந்து எழுவார் – 6.வம்பறா:1 665/4
துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார் – 6.வம்பறா:2 250/4
விழியவர் தாழ்ந்தார் என்று மீளவும் எழுவர் மாரன் – 6.வம்பறா:2 349/3
உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்-பால் வந்தோம் – 6.வம்பறா:2 364/2
மடுத்த கடல் மீளவும் தாம் வடி வேல் வாங்கிட பெருக – 9.கறை:3 4/4

மேல்


மீளா (3)

மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே – 5.திருநின்ற:7 33/4
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து – 6.வம்பறா:2 277/2
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் – 6.வம்பறா:2 309/1

மேல்


மீளாத (2)

மீளாத அருள் பெற்று புறம் போந்து திரு வீதி மேவி தாழ்ந்தே – 6.வம்பறா:2 116/1
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார் – 8.பொய்:3 8/4

மேல்


மீளாமை (1)

மின் செய் பொலம் கிண்கிணி கால் கொட்டி அவர் மீளாமை
உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார் – 6.வம்பறா:1 57/3,4

மேல்


மீளி (3)

மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே – 3.இலை:3 68/4
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே – 3.இலை:3 79/4
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2

மேல்


மீளும் (2)

மீளும் ஓதம் முன் கொழித்த வெண் தரளமும் கமுகின் – 4.மும்மை:5 46/1
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும் – 5.திருநின்ற:1 366/1

மேல்


மீளுமாறு (1)

சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய் – 3.இலை:3 69/3

மேல்


மீளேன் (1)

மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார் – 5.திருநின்ற:1 366/4

மேல்


மீன் (18)

பரிவுற தடிந்த பன் மீன் படர் நெடும் குன்று செய்வார் – 1.திருமலை:2 23/2
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் – 4.மும்மை:5 9/4
கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன்
படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் – 4.மும்மை:5 35/1,2
கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து – 4.மும்மை:5 44/1
கனை வான முகில் கூந்தல் கதிர் செய் வட_மீன் கற்பின் – 6.வம்பறா:1 10/3
மஞ்சினிடை எழுந்த வான மீன் பரப்பு என்ன – 7.வார்கொண்ட:3 27/2
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல் – 8.பொய்:4 6/2
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த – 8.பொய்:4 7/1
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் – 8.பொய்:4 8/2
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து – 8.பொய்:4 11/1
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/2
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் – 8.பொய்:4 12/1
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் – 8.பொய்:4 13/1
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று – 8.பொய்:4 13/3
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் – 8.பொய்:4 15/3
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் – 8.பொய்:4 16/4
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/2

மேல்


மீன்களில் (1)

பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும் – 8.பொய்:4 11/2

மேல்


மீனவர் (1)

கந்து சீறும் மால் யானை மீனவர் கருத்து நேர் – 6.வம்பறா:1 773/1

மேல்


மீனவற்கு (2)

மீனவற்கு உயிரை நல்கி மெய் நெறி காட்டி மிக்க – 6.வம்பறா:1 859/1
விருப்பினால் திருநீறு மீனவற்கு அளித்து அருளி – 6.வம்பறா:1 1051/3

மேல்


மீனவன் (7)

மீனவன் மதுரை-தன்னில் விரவிட கண்டோம் என்பார் – 6.வம்பறா:1 639/2
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து – 6.வம்பறா:1 714/2
மீனவன் செவியின் ஊடு மெய் உணர்வளிப்போர் கூற – 6.வம்பறா:1 721/1
மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த – 6.வம்பறா:1 802/1
மீனவன் தேவியாரும் குலச்சிறையாரும் மிக்க – 6.வம்பறா:1 872/1
வெற்றியாக மீனவன் அவை எதிர் நதி மிசை வருகான் என்பார் – 6.வம்பறா:1 954/4
மேய வெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும் – 6.வம்பறா:1 1050/4

மேல்


மீனவன்-தன் (3)

மீனவன்-தன் மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற – 6.வம்பறா:1 772/1
மீனவன்-தன் நாடு உய்ய வெண் நீறு பெருக்குதற்கும் – 6.வம்பறா:1 874/3
வடி நெடு வேல் மீனவன்-தன் வள நாடு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 875/4

மேல்


மீனவனார் (1)

வளவனார் மீனவனார் வளம் பெருக மற்றவரோடு – 7.வார்கொண்ட:4 96/3

மேல்


மீனவனை (1)

வென்று மீனவனை வெண்நீறு அணிவிப்பன் விதியால் என்றார் – 6.வம்பறா:1 734/4

மேல்


மீனும் (1)

ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து – 8.பொய்:4 15/1

மேல்


மீனே (2)

மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும் – 3.இலை:6 13/1,2
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் – 8.பொய்:4 12/3,4

மேல்