பை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

பை (11)

பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும் – 3.இலை:5 23/2
பை தரும் பணி அணிந்தவர் பதி எனை பலவால் – 4.மும்மை:5 40/3
பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார் – 5.திருநின்ற:1 238/4
பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும் – 5.திருநின்ற:5 25/2
பை நிறைந்த அரவுடனே பசும் குழவி திங்கள் பரித்து அருளுவானை – 6.வம்பறா:1 102/2
பை பணியவர் கருப்பறியலூரினில் – 6.வம்பறா:1 254/4
பை பாந்தள் புணைந்த வரை பரவி பண்டு அமர்கின்ற – 6.வம்பறா:1 327/3
பை வளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமாதேவியார்க்கும் – 6.வம்பறா:1 642/3
பை பணி அணிவார் கோபுரம் இறைஞ்சி பாங்கு அமர் புடை வலம்கொண்டு – 6.வம்பறா:2 83/3
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து – 8.பொய்:3 8/3
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த – 8.பொய்:8 8/1

மேல்


பைஞ்ஞீலி (2)

மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் – 5.திருநின்ற:1 304/3,4
பண் பயில் வண்டு இனம் பாடும் சோலை பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து – 6.வம்பறா:1 322/1

மேல்


பைஞ்ஞீலியினில் (1)

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி – 5.திருநின்ற:1 310/1

மேல்


பைஞ்ஞீலியை (1)

எ பெயர் பதியும் இரு மருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்தி – 6.வம்பறா:2 83/2

மேல்


பைதிரத்தினை (1)

பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார் – 5.திருநின்ற:1 352/4

மேல்


பைப்பய (1)

பாத தாமரை நொந்தன பைப்பய – 6.வம்பறா:1 187/4

மேல்


பைம் (38)

கயல் பாய் பைம் தடம் நந்து ஊன் கழிந்த பெரும் கரும் குழிசி – 1.திருமலை:2 16/1
தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் – 1.திருமலை:3 8/3,4
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண் – 3.இலை:1 30/3
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு – 3.இலை:2 10/2
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர் – 3.இலை:3 73/1
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார் – 3.இலை:3 170/4
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி – 3.இலை:5 4/2
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து – 3.இலை:6 6/3
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என – 3.இலை:7 4/4
வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி – 3.இலை:7 16/1
பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின் – 4.மும்மை:4 4/1
வயல் வளமும் செயல் படு பைம் துடவையிடை வரும் வளமும் – 4.மும்மை:4 5/1
பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3
விள்ளும் பைம் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள் – 4.மும்மை:4 10/3
பைம் துணர் மந்தாரத்தின் பனி மலர்_மாரிகள் பொழிந்தார் – 4.மும்மை:4 33/4
பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி – 4.மும்மை:5 73/2
நாள் அலர்ந்து செங்குவளை பைம் கமலம் நண்பகல் தரும் பாடலம் அன்றி – 4.மும்மை:5 79/3
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகி பைம் கூழ்க்கு – 4.மும்மை:6 24/3
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து – 5.திருநின்ற:1 210/2
பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை – 5.திருநின்ற:1 328/2
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 8/3
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3
பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி – 6.வம்பறா:1 153/1
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் – 6.வம்பறா:1 296/2
பைம் புனல் மென் பணை தேவூர் அணைந்து போற்றி பரமர் திருநெல்லிக்கா பணிந்து பாடி – 6.வம்பறா:1 574/2
பைம் துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் – 6.வம்பறா:1 747/3
தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை – 6.வம்பறா:1 876/2
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி – 6.வம்பறா:1 1213/4
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
தாங்கிய முத்தின் பைம் பூண் தண் நிலா எறிப்ப ஏறி – 6.வம்பறா:1 1228/3
பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார் – 6.வம்பறா:2 209/2
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன – 10.கடல்:1 8/2
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3

மேல்


பைம்_தொடி-தனையும் (1)

பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு – 5.திருநின்ற:4 44/3

மேல்


பைம்_தொடியார் (1)

பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும் பைம்_தொடியார்
வாரும் அணிய அணியவாம் வளர் மென் முலைகள் இடை வருத்த – 6.வம்பறா:2 209/2,3

மேல்


பைம்_தொடியாள் (1)

பைம்_தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழி பவள வாயார் – 6.வம்பறா:1 98/4

மேல்


பைம்_தொடியை (2)

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார் – 5.திருநின்ற:1 24/4
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு – 5.திருநின்ற:4 8/3

மேல்


பைம்பொன் (18)

பணை முரசு இயம்ப வாழ்த்தி பைம்பொன் நாண் காப்பு சேர்த்தார் – 1.திருமலை:5 12/4
பாசனத்து அமைந்த பாங்கர் பரு மணி பைம்பொன் திண் கால் – 1.திருமலை:5 15/2
பைம்பொன் வார் கரை பொன்னி பயில் தீர்த்தம் படிந்து ஆடி – 1.திருமலை:5 116/2
படியின் மறை அருச்சித்து காப்பு செய்த பைம்பொன் மணி திரு வாயில் பாங்கு வந்தார் – 6.வம்பறா:1 579/4
பாடிய அ பதிக பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் – 6.வம்பறா:1 582/1
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து – 6.வம்பறா:1 800/1
பெருகு ஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல் பிள்ளையார் தாம் – 6.வம்பறா:1 803/3
பள்ளத்தில் இழி புனல் போல் பரந்து செல்ல பைம்பொன் மலை_வல்லி பரிந்து அளித்த செம்பொன் – 6.வம்பறா:1 1023/3
பத்தியில் குயிற்றும் பைம்பொன் பவள கால் பந்தர் நாப்பண் – 6.வம்பறா:1 1239/1
மற்று அதன் முன்பு மண் மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன்
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/3,4
பைம்பொன் மணி மாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் – 6.வம்பறா:2 319/2
பரவும் சேரன்-தனக்கு உனக்கு பைம்பொன் காணம் பட்டு ஆடை – 7.வார்கொண்ட:4 27/2
பாணனார் பத்திரனாரும் பைம்பொன் மௌலி சேரலனார் – 7.வார்கொண்ட:4 36/1
பரவும் தில்லை வட்டத்து பயில்வார் பைம்பொன் அம்பலத்துள் – 7.வார்கொண்ட:4 59/1
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3
பைம்பொன் மணி மாளிகையில் குறை அறுத்தார் பஞ்சவனார் – 7.வார்கொண்ட:4 95/4
பைம்பொன் மணி நீள் முடி கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன் – 7.வார்கொண்ட:4 129/3
பழுது_இல் மணி சாமரை வீசி பைம்பொன் மணி மாளிகையில் வரும் – 7.வார்கொண்ட:4 147/3

மேல்


பைம்பொனின் (1)

பைம்பொனின் மாலை வேய்ந்த பவள மென் கொடி ஒப்பாரை – 6.வம்பறா:1 1223/2

மேல்


பைய (1)

பைய நடப்பன கன்றை நினைந்து படர்வன ஆகி – 6.வம்பறா:3 16/3

மேல்


பையவே (2)

பையவே சென்று பாண்டியற்கு ஆக என பணித்தார் – 6.வம்பறா:1 704/4
தீண்டி இட பேறு உடையன் ஆதலாலும் தீ பிணி பையவே செல்க என்றார் – 6.வம்பறா:1 705/4

மேல்


பையுள் (1)

பையுள் மாலை தமியோர் புனிப்பு உற – 1.திருமலை:5 158/4

மேல்