பீ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

பீடத்தில் (3)

விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் – 5.திருநின்ற:1 258/1,2
பிள்ளையார் செம்பொன் மணி பீடத்தில் இருந்த பொழுது – 6.வம்பறா:1 755/1
பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தில் இழிந்து போந்து – 6.வம்பறா:1 800/1

மேல்


பீடத்தின் (1)

பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு – 10.கடல்:4 5/1

மேல்


பீடத்து (3)

அ சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து
உச்சி வைத்தது பசும்பொன் ஆயிர கிழி ஒன்று – 6.வம்பறா:1 426/3,4
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து
அணைந்த ஆடகக்கிழி தலைக்கொண்டு அரு_மறைகள் – 6.வம்பறா:1 428/1,2
இலகு மணி பீடத்து குணக்கும் மேற்கும் யாம் அளித்தோம் உமக்கு இந்த காலம் தீர்ந்தால் – 6.வம்பறா:1 564/3

மேல்


பீடம் (2)

முன் துயர் சிறிது நீங்கி முழு மணி அணி பொன் பீடம்
மற்று அவன் முடியின் பக்கத்து இடுக என வல்லன் ஆனான் – 6.வம்பறா:1 746/3,4
தண் துணர் முடியின் பாங்கர் தமனிய பீடம் காட்ட – 6.வம்பறா:1 752/2

மேல்


பீடம்-தன்னில் (1)

ஆங்கு முன் இட்ட செம்பொன் அணி மணி பீடம்-தன்னில்
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன – 6.வம்பறா:1 1228/1,2

மேல்


பீடமும் (2)

சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோக பீடமும் உளது என்றும் – 4.மும்மை:5 83/2
அந்தம்_இல் அறம் புரப்பவள் கோயில் ஆன போக பீடமும் உளது ஆகும் – 4.மும்மை:5 83/3

மேல்


பீடிகை (1)

அம்பிகாபதி அருளால் பிள்ளையார்-தாம் அபிமுகத்து பீடிகை மேல் காசு கண்டார் – 6.வம்பறா:1 565/4

மேல்


பீடு (10)

பீடு தங்கிய பெரும் குடி மனை அறம் பிறங்கும் – 4.மும்மை:5 28/3
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும் – 5.திருநின்ற:1 251/3
பெருகு கணபதீச்சரத்தார் பீடு உடை கோலமே ஆகி தோன்ற – 6.வம்பறா:1 486/2
பீடு உடைய திரு வாயில் பணிந்து புக்கு பிறை அணிந்த சென்னியர் மன்னும் கோயில் – 6.வம்பறா:1 902/2
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார் – 6.வம்பறா:1 1174/4
பீடு தங்கிய திரு பெருமங்கல பெயர்த்து-ஆல் – 6.வம்பறா:2 1/4
பீடு நீடு நிலத்தின் மேல் பெருக பணிந்து வணங்கினார் – 6.வம்பறா:2 98/4
பீடு உயர் கோயில் புக்கு பெருகிய ஆர்வம் பொங்க – 6.வம்பறா:2 104/2
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி – 8.பொய்:4 4/2
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1

மேல்


பீலி (13)

நெருங்கிய பீலி சோலை நீல நீர் தரங்கத்தாலும் – 1.திருமலை:5 22/3
மலை வளர் சந்து அகில் பீலி மலர் பரப்பி மணி கொழிக்கும் – 1.திருமலை:5 82/1
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி – 3.இலை:3 48/3
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி – 3.இலை:3 57/2
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும் – 5.திருநின்ற:1 53/3
பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார் – 6.வம்பறா:1 756/2
மீது தம் பீலி கொண்டு தடவிட மேல்மேல் வெப்பு – 6.வம்பறா:1 763/3
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை – 6.வம்பறா:1 766/2
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/3
படர் பெரும் தொங்கல் பிச்சம் பைம் கதிர் பீலி பந்தர் – 6.வம்பறா:1 1219/1
பீலி தடவி காணாது பெயர்வார் நின்று பேதுறுவார் – 6.வம்பறா:4 23/1
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1

மேல்


பீலிகள் (1)

பீலி கொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து – 6.வம்பறா:1 715/3

மேல்


பீலிகை (1)

நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார் – 6.வம்பறா:1 788/4

மேல்


பீலியின் (1)

கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும் – 3.இலை:3 30/2

மேல்


பீலியும் (5)

பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட – 3.இலை:3 9/3
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார் – 5.திருநின்ற:1 60/4
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் – 5.திருநின்ற:1 81/4
பறி மயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனி – 6.வம்பறா:1 602/1
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ – 6.வம்பறா:1 633/1

மேல்


பீலியோடு (1)

சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/3,4

மேல்


பீறியோர் (1)

குண்டிகை தகர்த்து பாயும் பீறியோர் குரத்தி ஓட – 6.வம்பறா:1 638/1

மேல்