நூ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

நூக்கி (1)

அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கி
சென்ற நீர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார் – 6.வம்பறா:1 723/3,4

மேல்


நூபுர (2)

அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும் அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர் – 4.மும்மை:5 98/2
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4

மேல்


நூபுரங்கள் (2)

சீறடி மேல் நூபுரங்கள் அறிந்தன போல் சிறிது அளவே ஒலிப்ப முன்னார் – 1.திருமலை:5 170/1
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி – 5.திருநின்ற:1 13/2

மேல்


நூபுரம் (1)

கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை – 3.இலை:5 14/3

மேல்


நூல் (68)

வந்த இ பழியை மாற்றும் வகையினை மறை_நூல் வாய்மை – 1.திருமலை:3 26/1
காலை செய் வினைகள் முற்றி கணித நூல் புலவர் சொன்ன – 1.திருமலை:5 14/1
நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/3
அனைத்து நூல் உணர்ந்தீர் ஆதி சைவன் என்று அறிவீர் என்னை – 1.திருமலை:5 54/1
எம்பிரான் கோயில் நண்ண இலங்கு நூல் மார்பர் எங்கள் – 1.திருமலை:5 66/1
தோளொடு மார்பிடை துவளும் நூல் உடன் – 2.தில்லை:2 11/3
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று – 2.தில்லை:2 34/3
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண் மேல் – 2.தில்லை:5 12/3
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபில் பெரியோர் வாழ் பதியாம் – 2.தில்லை:6 3/4
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர் – 2.தில்லை:7 18/4
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி – 3.இலை:1 14/3
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/4
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/4
நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது – 3.இலை:5 1/2
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/2
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய் – 3.இலை:7 13/1
எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும் – 3.இலை:7 28/1
நூல் பாய் இடத்தும் உள நோன் தலை மேதி பாய – 4.மும்மை:1 5/2
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால் – 4.மும்மை:1 31/1
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர்-தாமும் – 4.மும்மை:1 40/2
நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/4
மெய் திகழ் வெண் நூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் – 4.மும்மை:4 32/4
பாவும் கலைகள் ஆகம நூல் பரப்பின் தொகுதி பான்மையினால் – 4.மும்மை:6 18/1
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி – 5.திருநின்ற:1 34/3
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம் – 5.திருநின்ற:1 39/1
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை – 5.திருநின்ற:1 227/1
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள் – 5.திருநின்ற:1 403/1
திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான – 5.திருநின்ற:1 406/1,2
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண் – 5.திருநின்ற:5 8/3
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி – 5.திருநின்ற:5 32/1
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில் – 5.திருநின்ற:6 14/2
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி – 5.திருநின்ற:6 15/1
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால் – 5.திருநின்ற:7 1/3
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார் – 5.திருநின்ற:7 5/1
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க – 5.திருநின்ற:7 19/4
மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறை நூல் முறை சடங்கு – 6.வம்பறா:1 21/2
திரு மறை நூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த – 6.வம்பறா:1 65/1
ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார் – 6.வம்பறா:1 136/4
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளி செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த – 6.வம்பறா:1 266/1
மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர் – 6.வம்பறா:1 308/4
அரும் கலை நூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார் – 6.வம்பறா:1 416/4
பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத – 6.வம்பறா:1 447/2
ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில் – 6.வம்பறா:1 471/4
கோலும் நூல் எடுத்து ஓதி தலை திமிர்ப்ப குரைத்தார்கள் – 6.வம்பறா:1 756/4
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை – 6.வம்பறா:1 883/2
புல்கு நூல் மார்பரும் போய் போற்ற மனம் புரிந்தார் – 6.வம்பறா:1 945/4
மா மறை நூல் விதி சடங்கில் வகுத்த முறை நெறி மரபின் – 6.வம்பறா:1 1179/1
சீர் மறை தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் – 6.வம்பறா:1 1187/2
குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூண நூல் கோவை சாத்தி – 6.வம்பறா:1 1212/3
பொதியும் சடையார் திரு பனையூர் புகுவார் புரி நூல் மணி மார்பர் – 6.வம்பறா:2 52/4
மின் செய்த நூல் மார்பின் வேதியர்-தாம் முதுகுன்றில் – 6.வம்பறா:2 132/3
பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அது வாங்கி – 6.வம்பறா:2 160/3
பொலம் புரி நூல் மணி மார்பர் பிற பதியும் தொழ போவார் – 6.வம்பறா:2 171/4
வெண் திருநீறு அணி திகழ விளங்கு நூல் ஒளி துளங்க – 6.வம்பறா:2 178/1
மின்னும் புரி நூல் அணி மார்பீர் என்றார் குன்றா விளக்கு அனையார் – 6.வம்பறா:2 242/4
துன்றும் புரி நூல் மணி மார்பர் போலும் அழைத்தார் என துணிந்து – 6.வம்பறா:2 338/4
மின்னும் மணி நூல் அணி மார்பீர் எய்த வேண்டிற்று என் என்றார் – 6.வம்பறா:2 340/4
அ நிலைமை சாக்கியர்-தம் அரும் கலை நூல் ஓதி அது – 7.வார்கொண்ட:1 4/1
ஆயுள் வேத கலையும் அலகு_இல் வட நூல் கலையும் – 7.வார்கொண்ட:3 3/1
நாத மறை தந்து அளித்தாரை நடை நூல் பாவில் நவின்று ஏத்தும் – 7.வார்கொண்ட:6 8/3
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் – 8.பொய்:1 1/1
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து – 12.மன்னிய:4 5/2
விரவு மறையோன் காதலனை வெண் நூல் பூட்டி அண்ணலார் – 13.வெள்ளானை:1 14/2

மேல்


நூல்களால் (1)

தவம் நிறைந்த நான்_மறை பொருள் நூல்களால் சமைந்த – 2.தில்லை:7 39/1

மேல்


நூலவர் (5)

நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி – 5.திருநின்ற:4 6/1
தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர் – 5.திருநின்ற:6 31/3
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல் – 5.திருநின்ற:7 3/3
மருத்து நூலவர் தங்கள் பல் கலைகளில் வகுத்த – 6.வம்பறா:1 713/1
மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்ப – 6.வம்பறா:1 1169/2

மேல்


நூலால் (1)

கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல் திருமேற்கட்டி என விரிந்து செறிய புரிந்து உளது-ஆல் – 12.மன்னிய:4 3/3,4

மேல்


நூலின் (5)

மெய்ம்மை பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மை – 4.மும்மை:1 7/2
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்க பவங்கள் மாற – 4.மும்மை:1 46/1,2
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐ_இரு தினத்தினும் விளைத்தார் – 6.வம்பறா:1 40/3,4
அறியும் அ சமய நூலின் அளவினில் அடங்கி சைவ – 6.வம்பறா:1 602/3
நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானை – 6.வம்பறா:1 883/2

மேல்


நூலினொடு (1)

சோதி மணி மார்பின் அசை நூலினொடு தோளின் – 1.திருமலை:5 30/2

மேல்


நூலுடன் (1)

மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் – 2.தில்லை:7 7/3

மேல்


நூலும் (5)

மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் – 1.திருமலை:5 185/2
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/3
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர – 4.மும்மை:6 25/2
தாமரையும் புல் இதழும் தயங்கிய நூலும் தாங்கி – 6.வம்பறா:1 9/2
ஏதமாம் இ அறிவால் உரைத்த நூலும் என்ற அவனுக்கு ஏற்குமாறு அருளி செய்ய – 6.வம்பறா:1 924/2

மேல்


நூழில் (1)

நூறுற்ற பெரும் படை நூழில் பட – 8.பொய்:2 29/2

மேல்


நூறி (1)

கூறுபட நூறி இட புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெரு கொண்டது அன்றே – 6.வம்பறா:1 909/4

மேல்


நூறினார் (1)

சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார் – 3.இலை:3 78/4

மேல்


நூறு (3)

ஏதம்_இல் பல யோனி எண் பத்து நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த – 4.மும்மை:5 54/1
நூறு வில்கிடைக்கு முன்னே போனது நோக்கி காணார் – 6.வம்பறா:1 815/4
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4

மேல்


நூறுற்ற (1)

நூறுற்ற பெரும் படை நூழில் பட – 8.பொய்:2 29/2

மேல்