நு – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகர் 3
நுகர்கின்ற 1
நுகர்ந்த 2
நுகர்ந்ததும் 1
நுகர்ந்து 2
நுகர்விப்பார் 1
நுகர 1
நுங்கள் 1
நுசுப்பு 1
நுசுப்பே 1
நுசுப்பை 1
நுடங்க 2
நுடங்கி 2
நுடங்கு 4
நுடங்கும் 1
நுடங்குவன 1
நுண் 12
நுணங்கிய 1
நுணங்கு 1
நுதல் 34
நுதலாய் 2
நுதலார் 23
நுதலார்-தமை 1
நுதலாரும் 2
நுதலாரை 4
நுதலாள் 1
நுதலான் 5
நுதலில் 2
நுதலின் 2
நுதலினாரும் 1
நுதலும் 1
நுதலை 4
நுதலோன் 1
நுதற்கு 3
நுதி 1
நுந்தா 1
நும் 9
நும்-பால் 1
நுமக்கு 3
நுமை 1
நுரை 5
நுவல்வார் 1
நுவலல் 1
நுழுதி 1
நுழை 3
நுழைந்த 1
நுழைந்து 2
நுழையா 1
நுழைவது 1
நுளைச்சியர் 2
நுளைப்பாடி 1
நுளைப்பாடியில் 1
நுளையர்-தம் 2
நுளையர்கள் 1
நுன்னை 1
நுனி 1
நுனை 1

நுகர் (3)

பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை – 0.பாயிரம்:1 4/3
வெறுத்து உண்டி பிச்சை நுகர் மெய் தொண்டருடன் அணைந்தார் வேத கீதர் – 6.வம்பறா:1 469/4
நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் – 6.வம்பறா:1 641/3

மேல்


நுகர்கின்ற (1)

நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுது ஆகி நொய்யானை – 6.வம்பறா:1 402/2

மேல்


நுகர்ந்த (2)

நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் – 2.தில்லை:4 5/2
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் – 5.திருநின்ற:4 24/2

மேல்


நுகர்ந்ததும் (1)

ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய – 6.வம்பறா:1 1037/2

மேல்


நுகர்ந்து (2)

அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம் – 3.இலை:4 21/4
மெய் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர்-தாம் – 7.வார்கொண்ட:3 25/3

மேல்


நுகர்விப்பார் (1)

நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார் – 8.பொய்:3 4/4

மேல்


நுகர (1)

பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறை புள் – 4.மும்மை:6 4/2

மேல்


நுங்கள் (1)

வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர் – 3.இலை:3 46/4

மேல்


நுசுப்பு (1)

கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார் – 5.திருநின்ற:4 5/4

மேல்


நுசுப்பே (1)

சாயலார்கள் நுசுப்பே தளர்வன – 4.மும்மை:5 107/1

மேல்


நுசுப்பை (1)

உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த – 3.இலை:5 15/1

மேல்


நுடங்க (2)

மீது புனை உத்தரிய வெண் துகில் நுடங்க
ஆதபம் மறை குடை அணி கரம் விளங்க – 1.திருமலை:5 30/3,4
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக – 5.திருநின்ற:1 421/2,3

மேல்


நுடங்கி (2)

நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் – 1.திருமலை:5 39/1
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார் – 5.திருநின்ற:1 420/4

மேல்


நுடங்கு (4)

நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/4
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற – 5.திருநின்ற:1 86/2
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/2
நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்-பால் இன்று – 6.வம்பறா:2 355/3

மேல்


நுடங்கும் (1)

இ தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளம் கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் – 6.வம்பறா:1 478/1

மேல்


நுடங்குவன (1)

மேக பந்திகளின் மீது இடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும் – 1.திருமலை:5 100/4

மேல்


நுண் (12)

வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4
மின் தயங்கு நுண் இடையாள் வெவ் உயிர்த்து மெல் அணை மேல் வீழ்ந்த போது – 1.திருமலை:5 172/4
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்து உள் நின்று ஆடுவார் உம்பர் – 2.தில்லை:3 4/1
நுண் தாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூல் மார்பர் – 4.மும்மை:2 9/4
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் – 4.மும்மை:5 37/3
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி – 6.வம்பறா:1 150/3
நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடு வானம் – 6.வம்பறா:1 152/4
கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4
மின் தயங்கு நுண் இடையார் விதி உடன்பட்டு எதிர் விளம்பார் – 6.வம்பறா:2 256/3
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1

மேல்


நுணங்கிய (1)

நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/3

மேல்


நுணங்கு (1)

நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் – 4.மும்மை:1 46/1

மேல்


நுதல் (34)

திங்கள் நுதல் வெயர்வு அரும்ப சிறுமுறுவல் தளவு அரும்ப – 1.திருமலை:2 14/3
நில_மகட்கு அழகு ஆர்தரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி – 1.திருமலை:3 12/1,2
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த – 1.திருமலை:5 29/2
கண்_நுதல் கோயில் தேவ ஆசிரியன் ஆம் காவணத்து – 1.திருமலை:5 189/1
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் – 2.தில்லை:7 11/4
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு – 3.இலை:1 47/3
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு – 3.இலை:3 182/1
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு – 3.இலை:4 7/1
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட – 3.இலை:6 21/2
பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றை – 4.மும்மை:5 17/1
சிலை தனி திரு நுதல் திரு முலைக்கும் செம் தளிர் கரங்களுக்கும் மெத்தெனவே – 4.மும்மை:5 64/3
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே – 5.திருநின்ற:1 272/3
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் – 5.திருநின்ற:1 418/4
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து – 5.திருநின்ற:4 56/3
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே – 5.திருநின்ற:4 56/4
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார் – 5.திருநின்ற:6 2/1
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/2
செப்ப_அரும் பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி – 6.வம்பறா:1 126/2
காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார் – 6.வம்பறா:1 409/4
கானிடை நட்டம் ஆடும் கண்_நுதல் தொண்டர் எல்லாம் – 6.வம்பறா:1 639/1
கன்றும் உள்ளத்தன் ஆகி அ கண்_நுதல் அடியார் – 6.வம்பறா:1 684/3
காடு இடமாக ஆடும் கண்_நுதல் கோயில் மாடு – 6.வம்பறா:1 850/3
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/3
தேம் கமழ் ஆரம் சேரும் திரு நுதல் விளக்கம் நோக்கில் – 6.வம்பறா:1 1096/2
கண்_நுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார் – 6.வம்பறா:1 1109/4
நாதரை அறிவிலாதே நல்_நுதல் புலவி நீக்கி – 6.வம்பறா:2 347/2
நாயனார் தம்மை கண்டால் நல்_நுதல் மறுக்குமோ தான் – 6.வம்பறா:2 348/2
மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு – 6.வம்பறா:2 359/1
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/4
இழையில் சிறந்த ஓடை நுதல் யானை கழுத்தின்-நின்று இழிந்து – 7.வார்கொண்ட:4 18/3
பட்ட நுதல் வெம் களி யானை பிடர் மேல் கொண்டு பனி மதியம் – 7.வார்கொண்ட:4 47/3
கண்டு அடி பணிய வந்தேன் கண்_நுதல் அருள் பெற்று என்றான் – 12.மன்னிய:1 14/4
சென்று கண்_நுதல் திரு முன்பு தாழ்ந்து வீழ்ந்து எழுந்து சேணிடை விட்டு – 13.வெள்ளானை:1 42/1

மேல்


நுதலாய் (2)

வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன – 3.இலை:4 19/3
நல்_நுதலாய் என்னுடைய நாதன் அருளால் குளத்தில் – 6.வம்பறா:2 128/3

மேல்


நுதலார் (23)

கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து – 3.இலை:7 38/3
கார் ஏறும் எயில் புன்கூர் கண்_நுதலார் திரு முன்பு – 4.மும்மை:4 17/3
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் – 5.திருநின்ற:1 189/4
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
கண்_நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து – 6.வம்பறா:1 137/3
கரை கண் மூவலூர் கண்_நுதலார் கழல் பணிந்தார் – 6.வம்பறா:1 436/4
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி – 6.வம்பறா:1 623/1
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/2
கண்_நுதலார் திரு மேனி உடன் கூட கவுணியனார் – 6.வம்பறா:1 1255/1
செம் கண் நுதலார் மேவு திரு வலிவலத்தை சேர்ந்து இறைஞ்சி – 6.வம்பறா:2 43/2
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
கான் நாட்டு முள்ளூரை சாரும் போது கண்_நுதலார் எதிர் காட்சி கொடுப்ப கண்டு – 6.வம்பறா:2 120/1
கண் நீடு திரு நுதலார் காதல் வர கருத்து அறிந்து – 6.வம்பறா:2 156/3
நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமல சேவடியில் – 6.வம்பறா:2 204/2
கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகி கன்னிமாடத்து – 6.வம்பறா:2 218/3
ஒண்_நுதலார் புடை பரந்த ஓலக்கம் அதனிடையே – 6.வம்பறா:2 271/2
கண்டு அருளும் கண்_நுதலார் கருணை பொழி திரு நோக்கால் – 7.வார்கொண்ட:1 16/3
வரும் நாட்ட திரு நுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில் – 7.வார்கொண்ட:3 1/2
கண்_நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர – 7.வார்கொண்ட:3 16/1
வழியில் திகழும் திரு_நுதலார் விரும்பும் இடங்கள் இறைஞ்சி உக – 7.வார்கொண்ட:4 62/3
நங்கை பரவையார் திரு மாளிகையில் நண்ண நல்_நுதலார் – 7.வார்கொண்ட:4 70/2
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் – 8.பொய்:6 15/3
களம் கொள் மிடற்று கண்_நுதலார் கழலில் செறிந்த காதல் மிகும் – 9.கறை:5 2/2

மேல்


நுதலார்-தமை (1)

கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி – 5.திருநின்ற:1 385/1

மேல்


நுதலாரும் (2)

பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார் – 6.வம்பறா:2 339/4
நல்_நுதலாரும் சால நன்று நம் பெருமை என்பார் – 6.வம்பறா:2 342/4

மேல்


நுதலாரை (4)

துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால் – 5.திருநின்ற:1 241/2
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/3
வாங்கு சிலை நல்_நுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார் – 6.வம்பறா:2 212/4

மேல்


நுதலாள் (1)

பெருகும் பதிகம் பிறை அணிவாள் நுதலாள் பாடி பெயர்ந்து நிறை – 6.வம்பறா:2 66/1

மேல்


நுதலான் (5)

கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2
கண்_நுதலான் திருநீற்று சார்பினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார் – 6.வம்பறா:1 562/4
காதலுடன் அ நகரில் இனிது மேவி கண்_நுதலான் திருத்தொண்டர் ஆனார்க்கு எல்லாம் – 6.வம்பறா:1 889/2
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்து கண்_நுதலான் திருத்தொண்டர்-தம்மை ஏற்றி – 6.வம்பறா:1 898/3

மேல்


நுதலில் (2)

கண்_நுதலில் காட்டாதார் கணபதீச்சரத்தின்-கண் – 7.வார்கொண்ட:3 41/1
கறையும் கண்டத்தினில் மறைத்து கண்ணும் நுதலில் காட்டாதார் – 7.வார்கொண்ட:3 69/2

மேல்


நுதலின் (2)

வில் புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரை கண்டார் – 1.திருமலை:5 139/4
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் – 4.மும்மை:1 46/1

மேல்


நுதலினாரும் (1)

திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் – 6.வம்பறா:2 367/3

மேல்


நுதலும் (1)

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திரு_நுதலும் – 1.திருமலை:3 46/1

மேல்


நுதலை (4)

கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
கரு நாகத்து உரி புணைந்த கண்_நுதலை சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 411/2
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
காத்து ஆடும் அம்பலத்து கண் உளனாம் கண்_நுதலை – 6.வம்பறா:2 134/2

மேல்


நுதலோன் (1)

கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும் – 5.திருநின்ற:1 198/1

மேல்


நுதற்கு (3)

கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும் – 3.இலை:4 21/2
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு – 5.திருநின்ற:1 146/2
காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே – 5.திருநின்ற:2 3/1

மேல்


நுதி (1)

உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/4

மேல்


நுந்தா (1)

ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் – 6.வம்பறா:2 190/3

மேல்


நும் (9)

முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக்கொண்டு – 2.தில்லை:3 19/3
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே – 5.திருநின்ற:5 12/2
பரிவுறுவாள்-தனை நோக்கி பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்ன – 6.வம்பறா:1 479/2
பிள்ளையார் அது கோளா பேசுக நும் பொருள் எல்லை – 6.வம்பறா:1 757/1
மெய் படியே கரணங்கள் உயிர்-தாம் இங்கு வேண்டுதியால் நும் இறைவற்கு ஆன போது – 6.வம்பறா:1 920/2
அடுத்த உணர்வு உரு உடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும் கோன் – 6.வம்பறா:1 923/2
ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்த நும் முத்தி போல் ஆயிற்று அன்றே – 6.வம்பறா:1 924/1
ஏர் கெழு சிறப்பில் நும் மகளை கொண்டு இனி – 6.வம்பறா:1 1112/3
நில்லா நிலையீர் உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு – 6.வம்பறா:4 9/3

மேல்


நும்-பால் (1)

ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3

மேல்


நுமக்கு (3)

ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று – 6.வம்பறா:1 683/1
இங்கு நுமக்கு திருமாலை தொடுத்து என் உள்ளத்து தொடை அவிழ்ந்த – 6.வம்பறா:2 232/3
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த – 8.பொய்:2 17/3

மேல்


நுமை (1)

இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என – 5.திருநின்ற:1 92/3

மேல்


நுரை (5)

பொங்கு வெண் தலை நுரை பொருது போதலால் – 1.திருமலை:2 5/2
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும் – 3.இலை:7 30/2
காமர் நுரை குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்து ஆக – 6.வம்பறா:1 95/4
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப – 8.பொய்:2 5/2
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் – 8.பொய்:4 5/2

மேல்


நுவல்வார் (1)

நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால் – 5.திருநின்ற:1 362/2,3

மேல்


நுவலல் (1)

நோக்கி வண் தமிழ் செய் மாலை பதிகம் தான் நுவலல் உற்றார் – 6.வம்பறா:1 738/4

மேல்


நுழுதி (1)

வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த – 3.இலை:7 15/1

மேல்


நுழை (3)

முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா – 3.இலை:3 85/1
வாளை பாய் நுழை பழன முனைப்பாடி வள நாடார் – 7.வார்கொண்ட:4 115/4

மேல்


நுழைந்த (1)

தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும் – 5.திருநின்ற:1 416/3

மேல்


நுழைந்து (2)

சோலை-தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர் – 6.வம்பறா:1 8/2
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/2

மேல்


நுழையா (1)

மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய – 4.மும்மை:5 122/2

மேல்


நுழைவது (1)

மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும் – 5.திருநின்ற:1 164/1

மேல்


நுளைச்சியர் (2)

படு மணல் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் – 4.மும்மை:5 35/2
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து – 8.பொய்:4 7/3

மேல்


நுளைப்பாடி (1)

தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி – 8.பொய்:4 5/4

மேல்


நுளைப்பாடியில் (1)

அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து – 8.பொய்:4 9/1

மேல்


நுளையர்-தம் (2)

மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார் – 8.பொய்:4 9/2
ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள் – 8.பொய்:4 10/1

மேல்


நுளையர்கள் (1)

கொடு வினை தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழு மீன் – 4.மும்மை:5 35/1

மேல்


நுன்னை (1)

நோ தக ஒழித்தற்கு அன்றே நுன்னை யான் வேண்டிக்கொண்டது – 6.வம்பறா:2 344/3

மேல்


நுனி (1)

துஞ்சின் நுனி தனி பரப்பும் தும்பை நறு மலர் தோன்ற – 7.வார்கொண்ட:3 27/4

மேல்


நுனை (1)

கொல் நுனை கழுவில் ஏற முறை செய்க என்று கூற – 6.வம்பறா:1 853/4

மேல்