தெ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கின் 1
தெங்கு 4
தெங்கூர் 1
தெண் 16
தெப்ப 1
தெம் 4
தெய்வ 48
தெய்வங்கள் 2
தெய்வத்து 1
தெய்வதம் 1
தெய்வம் 4
தெரி 1
தெரிக்க 2
தெரிக்கும் 1
தெரித்த 1
தெரிந்த 2
தெரிந்தவாறு 1
தெரிந்து 25
தெரிந்தே 1
தெரிப்பீர் 1
தெரிய 7
தெரியல் 2
தெரியலாம் 1
தெரியலார் 1
தெரியா 5
தெரியாத 1
தெரியாது 1
தெரியாமே 1
தெரியார் 2
தெரியாவகை 1
தெரியின் 1
தெரியும் 1
தெரிவித்தார் 1
தெரிவு 5
தெரிவு_அரிய 3
தெரிவு_அரியார் 1
தெரிவு_அரும் 1
தெரிவுற 2
தெரிவுறும் 1
தெரிவையார் 1
தெருட்சி 1
தெருண்டு 1
தெருமந்தார் 2
தெருமந்து 2
தெருமர 1
தெருமரும் 1
தெருவில் 5
தெருவின் 2
தெருவினூடு 1
தெருவு 4
தெருவு_இல் 1
தெருவும் 4
தெருவே 1
தெருள் 8
தெருளாது 1
தெருளும் 3
தெருளுற 1
தெலுங்கு 1
தெவ் 1
தெவ்வர் 2
தெவ்விடத்து 1
தெவ்வுடன் 1
தெவிட்டி 1
தெவிட்டும் 1
தெழித்து 1
தெள் 9
தெள்ளாற்று 1
தெள்ளி 1
தெள்ளு 12
தெள்ளும் 7
தெளி 3
தெளிக்க 1
தெளிகின்ற 1
தெளிகின்றார் 1
தெளித்த 2
தெளித்தனர் 2
தெளித்தார் 1
தெளித்து 6
தெளிந்த 6
தெளிந்தார் 3
தெளிந்தாராய் 1
தெளிந்து 11
தெளிந்து_இலர்-ஆல் 1
தெளிபவர் 1
தெளிய 8
தெளியாதார் 1
தெளியாதார்-தமை 1
தெளியாது 1
தெளியான் 1
தெளியும் 2
தெளிவ 1
தெளிவார் 2
தெளிவித்தே 1
தெளிவு 4
தெளிவும் 1
தெளிவுற 1
தெளிவுறா 1
தெளிவுறும் 1
தெளிவுஉற்றனர் 1
தெற்றி 5
தெற்றி-தொறும் 1
தெற்றிகள் 4
தெற்றினார் 2
தெற்று 1
தெற்றென 1
தெறித்த 1
தெறித்தன 1
தெறு 2
தென் 56
தென்-பால் 2
தென்மதுரை 1
தென்றல் 3
தென்றலும் 1
தென்னர் 10
தென்னவர் 3
தென்னவன் 18
தென்னவன்-தன் 1
தென்னவன்-தன்னை 1
தென்னவன்-தனக்கு 1
தென்னவன்-தானும் 2
தென்னவனார் 2
தென்னவனும் 1
தென்னற்கு 1
தென்னன் 7
தென்னனும் 1
தென்னனை 1
தென்னனோடும் 1
தென்னாட்டு 2
தென்னாடு 1

தெங்கின் (1)

பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின்
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த – 4.மும்மை:4 4/1,2

மேல்


தெங்கு (4)

பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு – 4.மும்மை:5 27/3
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1
செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் – 6.வம்பறா:1 296/2
மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் – 6.வம்பறா:1 625/3,4

மேல்


தெங்கூர் (1)

உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3

மேல்


தெண் (16)

பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை – 0.பாயிரம்:1 6/3
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர் – 1.திருமலை:2 8/3
தெண் திரை வேலையில் மிதந்த திரு தோணி புர தாரை – 1.திருமலை:5 113/2
அடுத்த தெண் திரை பொன்னி நீர் ஆட என்று அகன்றார் – 2.தில்லை:7 15/4
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி – 4.மும்மை:5 20/2
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும் – 5.திருநின்ற:1 180/3
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு – 5.திருநின்ற:1 268/3
தெண் திரை கடல் பவழமும் பணிலமும் செழு மணி திரள் முத்தும் – 6.வம்பறா:1 146/3
பொங்கு தெண் திரை புனித நீர் நிவா கரை குட திசை மிசை போந்து – 6.வம்பறா:1 177/1
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/2
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி – 8.பொய்:4 10/2
சிலம்பு தெண் திரை கானலின் சேண் எலாம் – 9.கறை:4 3/4
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி – 10.கடல்:2 2/2

மேல்


தெப்ப (1)

தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும் – 5.திருநின்ற:1 128/2

மேல்


தெம் (4)

தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார் – 3.இலை:2 25/4
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய் – 3.இலை:3 55/2
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல – 8.பொய்:3 2/2
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால் – 10.கடல்:5 6/1

மேல்


தெய்வ (48)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
சிவம் முயன்று அடையும் தெய்வ கலை பல திருந்த ஓதி – 1.திருமலை:3 18/2
தெய்வ மணி புற்றுஉளாரை பாடி திளைத்து மகிழ்வொடும் செல்லா நின்றார் – 1.திருமலை:5 130/4
மான் இளம் பிணையோ தெய்வ வளர் இள முகையோ வாச – 1.திருமலை:5 134/1
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில் – 1.திருமலை:5 167/2
செம்மையால் தணிந்த சிந்தை தெய்வ வேதியர்கள் ஆனார் – 2.தில்லை:1 8/1
தேவரும் முனிவர்-தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வ
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற – 2.தில்லை:2 39/3,4
மருவிய தெய்வ கற்பின் மனைவியார் தமக்கும் தக்க – 2.தில்லை:3 34/2
தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து – 3.இலை:1 9/4
வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம் – 3.இலை:3 19/1,2
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள் – 3.இலை:3 52/1
தெய்வ தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம் – 4.மும்மை:1 3/4
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்தபடி மொழிந்தார் – 4.மும்மை:4 30/4
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/3,4
மேகம் இடை கிழித்து ஒழுகும் தெய்வ கங்கை மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் – 4.மும்மை:5 90/4
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்கும் தெய்வ உயர் இரவி மா கலிப்பும் அயன் ஊர்தி தேர் – 4.மும்மை:5 98/3
பம்பு இசையும் விமானத்துள் ஆடும் தெய்வ பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் – 4.மும்மை:5 98/4
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறை சிறுவர் – 4.மும்மை:6 24/4
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர் – 5.திருநின்ற:1 12/4
தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார் – 5.திருநின்ற:1 83/4
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை – 5.திருநின்ற:1 234/1
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர் – 5.திருநின்ற:1 286/4
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று – 5.திருநின்ற:1 317/3
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு – 5.திருநின்ற:4 38/3
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும் – 5.திருநின்ற:7 29/1
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார் – 6.வம்பறா:1 39/4
சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான – 6.வம்பறா:1 94/3
திங்கள் அணி மணி மாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறை கற்பின் மாதர் – 6.வம்பறா:1 260/1
சித்தம் மகிழ்வொடு சிறப்ப தாமும் தெய்வ திருத்தோணி அமர்ந்தாரை சென்று தாழ்ந்து – 6.வம்பறா:1 267/2
திண் பெரும் தெய்வ கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சி – 6.வம்பறா:1 322/3
முடிவு_இல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம்கொண்டு நேர் சென்று முன்னாள் – 6.வம்பறா:1 579/3
நின் நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வ தன்மை – 6.வம்பறா:1 693/2
மூல நெறி அறியாதே தங்கள் தெய்வ மொழி நவில் மந்திரம் கொண்டு முன்னும் பின்னும் – 6.வம்பறா:1 715/2
எய்திய தெய்வ சார்வால் இரு திறத்தீரும் தீரும் – 6.வம்பறா:1 749/3
தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/4
முன்ன மந்திரித்து தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார் – 6.வம்பறா:1 762/4
சிலை உடையவர் தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/3,4
செம் கனல் ஆகுதி புகையும் தெய்வ விரை மணம் பெருக – 6.வம்பறா:1 1177/4
திரு கழுத்து ஆரம் தெய்வ கண்டிகை மாலை சேர – 6.வம்பறா:1 1214/1
இவ்வகை நம்மை ஆளும் ஏர் வளர் தெய்வ கோலம் – 6.வம்பறா:1 1216/1
நல் பெரும் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வ
கற்பக பூம் கொம்பு அன்னார் தம்மையும் காப்பு சேர்த்து – 6.வம்பறா:1 1222/2,3
சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வ பெருமாள் திருவாரூர் – 6.வம்பறா:2 55/3
சீர் கொள் மரபில் வரும் செயலே அன்றி தெய்வ நிகழ் தன்மை – 6.வம்பறா:2 209/1
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 7.வார்கொண்ட:4 69/1
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே – 10.கடல்:1 11/4
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2
வரும் நாள் ஒன்றும் பிழையா தெய்வ பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும் தங்கள் – 12.மன்னிய:2 3/1
சேரர் பெருமாள்-தனை நினைந்து தெய்வ பெருமாள் கழல் வணங்கி – 13.வெள்ளானை:1 3/3

மேல்


தெய்வங்கள் (2)

காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான் – 3.இலை:3 50/4
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள் – 3.இலை:3 51/4

மேல்


தெய்வத்து (1)

அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1

மேல்


தெய்வதம் (1)

இழுது செய்யினுள் இந்திர தெய்வதம்
தொழுது நாறு நடுவார் தொகுதியே – 1.திருமலை:2 12/2,3

மேல்


தெய்வம் (4)

அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் – 4.மும்மை:5 18/3
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு – 5.திருநின்ற:4 47/2
வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகை தம்பம் – 6.வம்பறா:1 856/3
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1

மேல்


தெரி (1)

கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/2

மேல்


தெரிக்க (2)

சென்றவர்கள் தேரர் குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் – 6.வம்பறா:1 913/1
நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா – 9.கறை:4 3/3

மேல்


தெரிக்கும் (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


தெரித்த (1)

செம் கண் ஏற்றவரே பொருள் என்று தாம் தெரித்த
பொங்கு இசை திருப்பதிகங்கள் முறையினை போற்றி – 6.வம்பறா:1 781/1,2

மேல்


தெரிந்த (2)

மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் – 6.வம்பறா:1 593/2
மெய் தெரிந்த தர்க்க வாதம் வெல்லலால் ஆவது அன்று வேறு – 6.வம்பறா:1 774/3

மேல்


தெரிந்தவாறு (1)

நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம் – 3.இலை:2 42/4

மேல்


தெரிந்து (25)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி – 1.திருமலை:2 25/1
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன் – 1.திருமலை:3 39/2
ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் – 2.தில்லை:1 7/1
இடை தெரிந்து அருள வேண்டும் துயில்கொள்ளும் இறைவன் என்றான் – 2.தில்லை:5 9/4
மூரல் முறுவல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும் – 2.தில்லை:6 2/3
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர் – 3.இலை:2 37/2
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார் – 3.இலை:3 64/4
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும் – 3.இலை:3 77/2
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார் – 3.இலை:3 112/4
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு – 3.இலை:3 125/1
வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா – 3.இலை:3 172/1
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையல் ஆகும் மலர் தெரிந்து – 4.மும்மை:2 8/4
பூத்த மலர்கள் தாம் தெரிந்து புனிதர் சடில திரு முடி மேல் – 4.மும்மை:6 33/2
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் – 5.திருநின்ற:1 37/3
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் – 5.திருநின்ற:1 82/4
உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் – 6.வம்பறா:1 446/2
சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/4
செங்கமல திரு மடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார் – 6.வம்பறா:1 877/4
ஏறு உயர்த்தார் திருமூலட்டானத்து உள் இடை தெரிந்து
மாறு_இல் திரு அத்த யாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார் – 6.வம்பறா:2 304/3,4
வேளாளர் குலத்து உதித்தார் மிக்க பொருள் தெரிந்து உணர்ந்து – 7.வார்கொண்ட:1 2/2
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு – 8.பொய்:2 14/3
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கி பொருள் மறைய – 9.கறை:2 1/2
திருவாரூர் பிறந்தார்கள் திருத்தொண்டு தெரிந்து உணர – 11.பத்தராய்:4 1/3
தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம் – 11.பத்தராய்:5 2/1

மேல்


தெரிந்தே (1)

சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் – 8.பொய்:4 14/3,4

மேல்


தெரிப்பீர் (1)

தேறிய தெய்வ தன்மை என்னிடை தெரிப்பீர் என்றான் – 6.வம்பறா:1 759/4

மேல்


தெரிய (7)

எ பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார் – 2.தில்லை:6 4/3
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/3,4
உரு தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளது ஆக – 6.வம்பறா:1 20/4
செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்-பால் – 6.வம்பறா:1 451/2
தெரிய உரைத்து அருள்செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார் – 6.வம்பறா:1 559/4
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/3

மேல்


தெரியல் (2)

தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார் – 3.இலை:3 44/4
மட்டு அலர்ந்த பைம் தெரியல் வன் தொண்டர் மேல் கொண்ட மாதங்கத்தை – 13.வெள்ளானை:1 36/3

மேல்


தெரியலாம் (1)

தெரியலாம் நிலையால் தெரியார் என – 6.வம்பறா:1 825/2

மேல்


தெரியலார் (1)

கொங்கு அலர் தெரியலார் ஆம் குலச்சிறையாரை நோக்கி – 6.வம்பறா:1 645/2

மேல்


தெரியா (5)

ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின் – 3.இலை:3 133/3
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று – 5.திருநின்ற:5 29/3
மான முன் தெரியா வகை மன்னன்-மாட்டு அணைந்தார் – 6.வம்பறா:1 714/4
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம் – 8.பொய்:2 4/4
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள் – 8.பொய்:6 5/2

மேல்


தெரியாத (1)

கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார் – 2.தில்லை:4 8/2

மேல்


தெரியாது (1)

பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது – 10.கடல்:2 6/4

மேல்


தெரியாமே (1)

சித்த சோகம் தெரியாமே வந்து திரு தாள் இறைஞ்சினார் – 13.வெள்ளானை:1 7/4

மேல்


தெரியார் (2)

இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் – 6.வம்பறா:1 61/2
தெரியலாம் நிலையால் தெரியார் என – 6.வம்பறா:1 825/2

மேல்


தெரியாவகை (1)

பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண் பூ_மாரி – 6.வம்பறா:4 20/2

மேல்


தெரியின் (1)

திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/2

மேல்


தெரியும் (1)

தெரியும் வண்ணம் செஞ்சாலி செழும் போனகமும் கறி அமுதும் – 7.வார்கொண்ட:3 73/2

மேல்


தெரிவித்தார் (1)

தீங்கு நீங்குவீர் தொழும்-மின்கள் எனும் இசை பதிகமும் தெரிவித்தார் – 6.வம்பறா:1 184/4

மேல்


தெரிவு (5)

தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம் – 0.பாயிரம்:1 6/1
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/3
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் – 6.வம்பறா:1 69/3
தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4

மேல்


தெரிவு_அரிய (3)

சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம் – 5.திருநின்ற:1 144/3
தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவு_அரிய பொருள் ஆகும் – 6.வம்பறா:1 69/3

மேல்


தெரிவு_அரியார் (1)

தேடினார் இருவருக்கும் தெரிவு_அரியார் திரு மகனார் – 6.வம்பறா:1 996/4

மேல்


தெரிவு_அரும் (1)

தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம் – 0.பாயிரம்:1 6/1

மேல்


தெரிவுற (2)

தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து – 5.திருநின்ற:5 27/2
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து – 5.திருநின்ற:5 34/3

மேல்


தெரிவுறும் (1)

தெரிவுறும் அவர்க்கு மென்மை செழு முழந்தாளின் செவ்வி – 6.வம்பறா:1 1106/3

மேல்


தெரிவையார் (1)

தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4

மேல்


தெருட்சி (1)

முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே – 5.திருநின்ற:1 71/4

மேல்


தெருண்டு (1)

சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா – 5.திருநின்ற:1 75/2

மேல்


தெருமந்தார் (2)

தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
சிந்தை கலங்கி காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சி கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார் – 7.வார்கொண்ட:3 83/3,4

மேல்


தெருமந்து (2)

தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை – 5.திருநின்ற:1 206/1
தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி – 6.வம்பறா:1 731/3

மேல்


தெருமர (1)

சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில் – 3.இலை:3 90/4

மேல்


தெருமரும் (1)

செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/4

மேல்


தெருவில் (5)

செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் – 1.திருமலை:3 7/1
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
செம்பொன் நாண் அரையில் மின்ன தெருவில் தேர் உருட்டு நாளில் – 1.திருமலை:5 4/4
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3
அரிவையர் தெருவில் நடம் பயில் அணி கிளர் தளிர் அடி தங்கிய – 13.வெள்ளானை:1 24/1

மேல்


தெருவின் (2)

சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல – 3.இலை:1 13/2
வியன் நெடும் தெருவின் ஊடு மிக்க தொண்டர் ஆர்ப்பு எழ – 6.வம்பறா:1 991/1

மேல்


தெருவினூடு (1)

சீர் அணி தெருவினூடு திருமணம் செல்ல முத்தின் – 6.வம்பறா:1 1220/1

மேல்


தெருவு (4)

தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4
தெருவு நீங்கி கோயிலின் உள் புகுந்தார் சேரமான் தோழர் – 7.வார்கொண்ட:4 67/4
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு – 8.பொய்:6 5/4
தெருவு கழிய எதிர் வந்தார் சேரர் குலம் உய்ந்திட வந்தார் – 13.வெள்ளானை:1 18/4

மேல்


தெருவு_இல் (1)

தெருவு_இல் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார் – 7.வார்கொண்ட:3 21/4

மேல்


தெருவும் (4)

மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த – 4.மும்மை:5 89/1
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
தெருவும் விசும்பும் நிறைந்து விரை செழும் பூ_மாரி பொழிந்து அலைய – 6.வம்பறா:2 333/3
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண் – 8.பொய்:6 2/1

மேல்


தெருவே (1)

சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார் – 3.இலை:1 21/4

மேல்


தெருள் (8)

தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின் – 0.பாயிரம்:1 9/2
தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/4
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின் – 5.திருநின்ற:1 20/2
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு – 5.திருநின்ற:1 90/3
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட – 5.திருநின்ற:1 130/3
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
தெருள் பொழி வண் தமிழ்நாட்டு செங்காட்டங்குடி சேர்ந்தார் – 7.வார்கொண்ட:3 35/4

மேல்


தெருளாது (1)

தீது அணைவு இல்லை ஏனும் என் மனம் தெருளாது இன்னம் – 6.வம்பறா:2 402/3

மேல்


தெருளும் (3)

தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார் – 5.திருநின்ற:5 16/4
தெருளும் மெய் கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை – 6.வம்பறா:1 224/1
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2

மேல்


தெருளுற (1)

தெருளுற எழுந்த வாக்கால் செழு மணிமுத்தாற்றில் இட்டி – 6.வம்பறா:2 108/3

மேல்


தெலுங்கு (1)

கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4

மேல்


தெவ் (1)

தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார் – 5.திருநின்ற:7 6/4

மேல்


தெவ்வர் (2)

கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
சேய புல தெவ்வர் எதிர் நெல்வேலி செரு களத்து – 9.கறை:3 3/2

மேல்


தெவ்விடத்து (1)

தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார் – 5.திருநின்ற:1 106/4

மேல்


தெவ்வுடன் (1)

சீலம் கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி – 4.மும்மை:1 47/2

மேல்


தெவிட்டி (1)

சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் – 1.திருமலை:1 15/2

மேல்


தெவிட்டும் (1)

சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம் – 5.திருநின்ற:1 238/2

மேல்


தெழித்து (1)

தெழித்து எழும் ஓசை மன்னன் செவி புலம் புக்க போது – 1.திருமலை:3 28/4

மேல்


தெள் (9)

தெள் நிலா மலர்ந்த வேணியாய் உன்-தன் திரு நடம் கும்பிடப்பெற்று – 1.திருமலை:5 107/1
தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க – 3.இலை:7 29/4
திருநீலகண்டத்து பெரும்பாணர் தெள் அமுதின் – 6.வம்பறா:1 131/1
தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்புற தொழுதார் – 6.வம்பறா:1 138/4
தெள் நிலா அணிவார் திரு கோழம்பம் சேர்ந்தார் – 6.வம்பறா:1 431/4
தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கி – 6.வம்பறா:1 458/2
தெள் நீர் முடியார் திருவண்ணாமலை சென்று சேர்வுற்றார் – 6.வம்பறா:1 970/4
தெள் நீர் முடியார் திருவொற்றியூரில் சேர்ந்து செல் கதியும் – 6.வம்பறா:2 218/2
தெள் நீர் முடியார் திருவஞ்சை களத்தில் திருத்தொண்டே புரிவார் – 7.வார்கொண்ட:4 7/4

மேல்


தெள்ளாற்று (1)

தெள்ளாற்று வேணியர்-தம் திரு வளர் கோபுரம் இறைஞ்சி செல்வ கோயில் – 6.வம்பறா:1 455/3

மேல்


தெள்ளி (1)

தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே – 7.வார்கொண்ட:3 4/2

மேல்


தெள்ளு (12)

தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம் – 3.இலை:5 21/3
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/2
தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடை செறிய – 4.மும்மை:3 6/1
தெள்ளு வாய்மையின் ஆகம திறன் எலாம் தெரிய – 4.மும்மை:5 50/3
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம் – 5.திருநின்ற:1 379/2
தெள்ளு நீர் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி – 6.வம்பறா:1 59/2
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
தெள்ளு நீர் விழி தெரிவையார் சென்று முன்பு எய்த – 6.வம்பறா:1 669/4
தெள்ளு நீர் தரள பத்தி சிவிகை மேல் ஏறி சென்றார் – 6.வம்பறா:1 800/2
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை – 6.வம்பறா:1 1116/1
தெள்ளு நீர் உலகத்து பேறு_இல்லார் தெருமந்தார் – 6.வம்பறா:1 1254/4
தெள்ளு தீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப – 6.வம்பறா:2 409/4

மேல்


தெள்ளும் (7)

தெள்ளும் ஓசை திருப்பதிகங்கள் பைம் – 1.திருமலை:3 8/3
வரும் மண_கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாச – 1.திருமலை:5 27/1
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து – 4.மும்மை:1 17/4
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேர மிசை – 4.மும்மை:6 22/3
தெள்ளும் இன் இசை திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி – 6.வம்பறா:1 439/3
உருகிய அன்புறு காதல் உள் அலைப்ப தெள்ளும் இசையுடனே கூட – 6.வம்பறா:1 472/3
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும் – 10.கடல்:3 1/3

மேல்


தெளி (3)

தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/2
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம் – 5.திருநின்ற:1 238/2
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து – 5.திருநின்ற:4 11/2

மேல்


தெளிக்க (1)

அருகனே அருகனே என்று என்று ஓதி அடல் வழுதி மேல் தெளிக்க அ நீர் பொங்கி – 6.வம்பறா:1 716/2

மேல்


தெளிகின்ற (1)

உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அ அன்பின் உள்ளே மன்னும் – 6.வம்பறா:1 1023/1

மேல்


தெளிகின்றார் (1)

சிந்தையினில் வந்த செயல் ஆராய்ந்து தெளிகின்றார் – 6.வம்பறா:3 22/4

மேல்


தெளித்த (2)

செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம் – 1.திருமலை:3 7/1
பொருப்புறு மாடத்து உள்ளும் புறத்துளும் தெளித்த பின்னர் – 6.வம்பறா:1 1234/2

மேல்


தெளித்தனர் (2)

தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் – 6.வம்பறா:1 246/2
அருப்புறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத்தோடும் – 6.வம்பறா:1 1234/4

மேல்


தெளித்தார் (1)

வீதிகள் நுண் துகள் அடங்க விரை பனி நீர் மிக தெளித்தார் – 1.திருமலை:5 121/4

மேல்


தெளித்து (6)

உறை மலி கலவை சாந்தின் உறு புனல் தெளித்து வீதி – 1.திருமலை:5 24/3
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் – 5.திருநின்ற:5 20/4
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1
சேய மலர் சேவடி விளக்கி தெளித்து கொண்ட செழும் புனலால் – 6.வம்பறா:2 34/2
தாங்கி சீத விரை பனி நீர் தெளித்து தைவந்து அது நீங்க – 6.வம்பறா:2 212/3
ஆய புனித புனல் தங்கள் தலை மேல் ஆர தெளித்து இன்பம் – 7.வார்கொண்ட:3 71/2

மேல்


தெளிந்த (6)

உழுத சால் மிக ஊறி தெளிந்த சேறு – 1.திருமலை:2 12/1
மது மலர் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார் – 2.தில்லை:3 8/4
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் – 4.மும்மை:6 18/3
சித்த விகற்பம் களைந்து தெளிந்த சிவ யோகத்தில் – 6.வம்பறா:3 20/2
சிந்தை மதிநூல் தேர் அமைச்சர் சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி – 7.வார்கொண்ட:4 11/2
ஆடும் கழலே என தெளிந்த அறிவால் எடுத்த திரு பாதம் – 7.வார்கொண்ட:4 23/3

மேல்


தெளிந்தார் (3)

செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார் – 4.மும்மை:6 15/4
தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார் – 5.திருநின்ற:1 83/4
அடங்கலும் என்பது தெளிந்தார் ஆதலினால் மா தவர்-தாம் – 7.வார்கொண்ட:1 12/4

மேல்


தெளிந்தாராய் (1)

சேண் ஆரும் தழல் பிழம்பாய் தோன்றிது தெளிந்தாராய் – 7.வார்கொண்ட:1 8/4

மேல்


தெளிந்து (11)

செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் என தெளிந்து
தம்மானை அறியாத சாதியார் உளரே என்று – 1.திருமலை:5 88/1,2
எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் – 4.மும்மை:6 31/3
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 383/3,4
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4
செப்பியது இ கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார் – 6.வம்பறா:1 449/4
அருகர் இத்திறம் புரிந்தமை தெளிந்து சென்று அணைவார் – 6.வம்பறா:1 701/4
திரு மடப்புறம் மருங்கு தீது_இன்மையில் தெளிந்து
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/2,3
சிந்தையினில் அது தெளிந்து புத்தர் சண்பை திரு மறையோர் சேவடி கீழ் சென்று தாழ்ந்தார் – 6.வம்பறா:1 925/4
சிந்தை வெம் துயருறும் சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ளோர் – 6.வம்பறா:1 1063/1,2
திரு பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார் – 6.வம்பறா:1 1241/4
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட ஈறு_இல் சிவ – 7.வார்கொண்ட:1 4/3

மேல்


தெளிந்து_இலர்-ஆல் (1)

சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல் – 5.திருநின்ற:1 395/4

மேல்


தெளிபவர் (1)

செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க – 4.மும்மை:1 30/2

மேல்


தெளிய (8)

எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் – 1.திருமலை:5 54/4
தேசு உடை எழுத்தே ஆகில் தெளிய பார்த்து அறி-மின் என்றார் – 1.திருமலை:5 60/4
மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை – 1.திருமலை:5 62/2
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார் – 5.திருநின்ற:3 8/4
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத – 5.திருநின்ற:5 14/2,3
சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் – 6.வம்பறா:1 266/2
சால மிக்கு உயர் திருத்தொண்டின் உண்மை திறம்-தன்னையே தெளிய நாடி – 6.வம்பறா:1 523/3
சித்தம் தெளிய சிவன் அஞ்சு_எழுத்து ஓதும் வாய்மை – 6.வம்பறா:6 3/3

மேல்


தெளியாதார் (1)

சென்னியில் வைத்து என் சொல்லுவார் என்றே தெளியாதார் – 6.வம்பறா:2 371/4

மேல்


தெளியாதார்-தமை (1)

தெருமந்து தெளியாதார்-தமை நோக்கி சிறப்பு அருளி – 6.வம்பறா:1 731/3

மேல்


தெளியாது (1)

செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே – 5.திருநின்ற:7 10/3

மேல்


தெளியான் (1)

ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான் – 5.திருநின்ற:4 29/1,2

மேல்


தெளியும் (2)

செவ்விது என் செங்கோல் என்னும் தெருமரும் தெளியும் தேறான் – 1.திருமலை:3 32/4
சிந்தை சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் – 4.மும்மை:1 39/2

மேல்


தெளிவ (1)

தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் – 6.வம்பறா:1 32/2

மேல்


தெளிவார் (2)

தெளிவார் அமுதே சிவதா சிவதா – 3.இலை:1 16/4
சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார் – 6.வம்பறா:1 1065/4

மேல்


தெளிவித்தே (1)

சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயில தம் – 7.வார்கொண்ட:3 22/3

மேல்


தெளிவு (4)

தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே – 1.திருமலை:2 8/4
சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா – 3.இலை:6 5/2
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி – 5.திருநின்ற:1 101/2
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா – 5.திருநின்ற:1 166/3

மேல்


தெளிவும் (1)

செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் – 8.பொய்:1 1/1

மேல்


தெளிவுற (1)

தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி – 5.திருநின்ற:6 10/3

மேல்


தெளிவுறா (1)

தேடிய அயனும் மாலும் தெளிவுறா ஐந்து_எழுத்தும் – 1.திருமலை:5 71/1

மேல்


தெளிவுறும் (1)

தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம் – 3.இலை:3 100/2

மேல்


தெளிவுஉற்றனர் (1)

சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர் – 5.திருநின்ற:1 114/4

மேல்


தெற்றி (5)

போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடை ஓர் தெற்றி
சீதள தரள பந்தர் செழும் தவிசி இழிந்து தங்கள் – 1.திருமலை:5 183/2,3
அரசர் குல பெரும் தெருவும் தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண் – 4.மும்மை:5 100/1
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும் – 5.திருநின்ற:1 138/2
செல்வ மனைகள் அலங்கரித்து தெற்றி ஆடல் முழவு அதிர – 6.வம்பறா:2 185/3
தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி
நெடும் கோ நகர்கள் ஆடல் அரங்கு நிரந்த மணி தாமம் கமுக – 7.வார்கொண்ட:4 144/2,3

மேல்


தெற்றி-தொறும் (1)

செம் கயல் கண் முற்றுழையார் தெற்றி-தொறும் நடம் பயில – 1.திருமலை:5 122/2

மேல்


தெற்றிகள் (4)

கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் – 1.திருமலை:3 4/2,3
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று – 5.திருநின்ற:1 113/3
தழை மலர் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் – 6.வம்பறா:1 505/1
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் – 8.பொய்:4 2/2

மேல்


தெற்றினார் (2)

தெற்றினார் புரம் எரித்தவர் தரு திரு சின்னம் – 6.வம்பறா:1 222/2
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் – 12.மன்னிய:5 3/4

மேல்


தெற்று (1)

தெற்று என தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப – 6.வம்பறா:1 761/4

மேல்


தெற்றென (1)

தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார் – 3.இலை:4 15/4

மேல்


தெறித்த (1)

இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1

மேல்


தெறித்தன (1)

கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் – 6.வம்பறா:1 629/3

மேல்


தெறு (2)

பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/3
சிலையினர் விசையின் மிசை தெறு
கொலை மத கரி கொலை உற்றவே – 8.பொய்:2 21/3,4

மேல்


தென் (56)

சிந்தியா உணர்ந்து அ முனி தென் திசை – 1.திருமலை:1 17/2
மா தவம் செய்த தென் திசை வாழ்ந்திட – 1.திருமலை:1 25/1
மாதர் மேல் மனம் வைத்தனை தென் புவி – 1.திருமலை:1 27/2
பந்த மானுட பால்படு தென் திசை – 1.திருமலை:1 30/2
தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை – 1.திருமலை:1 36/1
தென் திசையில் கங்கை எனும் திரு கெடிலம் திளைத்து ஆடி – 1.திருமலை:5 89/4
பொங்கு நதி தென் கரை போய் போர் வலி தோள் மாவலி-தன் – 1.திருமலை:5 90/2
தென் திரு வாயில் கடந்து முன் போந்து சேண் படும் திரு எல்லை இறைஞ்சி – 1.திருமலை:5 110/3
தென் நாவலூர் ஆளி திருவாரூர் சென்று அணைந்தார் – 1.திருமலை:5 117/4
தென் நாவலூர் மன்னன் தேவர் பிரான் திருவருளால் – 1.திருமலை:5 181/1
தென் தமிழ் பயனாய் உள்ள திருத்தொண்டத்தொகை முன் பாட – 2.தில்லை:1 9/2
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம் – 3.இலை:3 74/1
சேனை கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான் – 4.மும்மை:1 11/4
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்து – 4.மும்மை:4 31/1
தேவ தேவனும் அது திருவுள்ளம் செய்து தென் திசை மிக்க செய் தவத்தால் – 4.மும்மை:5 53/1
வாய்ந்த மண்ணி தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய – 4.மும்மை:6 1/2
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று – 5.திருநின்ற:1 213/3
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர் – 5.திருநின்ற:1 216/1
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும் – 5.திருநின்ற:1 235/1
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே – 5.திருநின்ற:1 236/3
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை – 5.திருநின்ற:1 239/1
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு – 5.திருநின்ற:1 264/4
பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய் – 5.திருநின்ற:1 402/2
தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த – 5.திருநின்ற:1 408/1
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும் – 5.திருநின்ற:4 61/1
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற – 6.வம்பறா:1 24/1
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசை திரு வாயில் – 6.வம்பறா:1 156/1
தெண் திரை நீர் தடம் பொன்னி தென் கரையாம் கொங்கின்இடை – 6.வம்பறா:1 324/2
மல்கு திரை பொன்னி தென் கரை தானம் பல பணிவார் – 6.வம்பறா:1 339/4
நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி – 6.வம்பறா:1 403/3
சிரபுர வேந்தரும் சிந்தையின்-கண் தென் திருவாரூர் வணங்குதற்கு – 6.வம்பறா:1 496/2
சிவன் மகிழும் தானங்கள் வணங்க போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 572/4
பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திரு கோபுரத்துள் இருந்து தென் நாடு – 6.வம்பறா:1 615/2
திருந்திய சீர் புனல் நாட்டு தென் மேல்-பால் திசை நோக்கி – 6.வம்பறா:1 625/2
சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார் – 6.வம்பறா:1 628/4
தென் தமிழ்நாடு செய்த செய் தவ கொழுந்து போல்வார் – 6.வம்பறா:1 750/2
தென் தமிழ் விளங்க வந்த திரு கழுமலத்தான் வந்தான் – 6.வம்பறா:1 810/1
காவிரியின் தென் கரை போய் கண்_நுதலார் மகிழ்ந்த இடம் – 6.வம்பறா:1 930/2
தென் நாட்டு அமண் மாசு அறுத்தார்-தம் செய்கை கண்டு திகைத்த அமணர் – 6.வம்பறா:1 982/1
செப்ப_அரிய புகழ் பாலி திரு நதியின் தென் கரை போய் – 6.வம்பறா:1 1002/2
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
தென் புகலி அந்தணரும் தில்லை வாழ் அந்தணர் முன் – 6.வம்பறா:1 1144/1
தீர்த்த பொன்னி தென் கரை மேல் திகழும் பதிகள் பல பணிந்து – 6.வம்பறா:2 64/3
கொங்கினில் பொன்னி தென் கரை கறையூர் கொடு முடி கோயில் முன் குறுகி – 6.வம்பறா:2 86/1
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
தென் நாவலூர் மன்னர் திரு தில்லை வந்து அடைந்தார் – 6.வம்பறா:2 166/4
தென் கரை போய் சிவன் மகிழ்ந்த கோயில் பல சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 130/2
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம் – 8.பொய்:8 3/1
பெருக்கு வட வெள் ஆற்று தென் கரை-பால் பிறங்கு பொழில் – 9.கறை:1 1/2
தென் நாடு சிவம் பெருக செங்கோல் உய்த்து அறம் அளித்து – 9.கறை:3 2/2
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி – 10.கடல்:1 3/3
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன – 11.பத்தராய்:2 2/1
தென் ஆரூரர் எழுந்தருளா நின்றார் என்று சேரர் பிரார்க்கு – 13.வெள்ளானை:1 16/2
தேன் அலம்பு தண் கொன்றையார் திரு மலை தென் திசை திரு வாயில் – 13.வெள்ளானை:1 39/4

மேல்


தென்-பால் (2)

பேரருளாளர் எய்தப்பெற்ற மாளிகை-தான் தென்-பால்
சீர் வளர் கயிலை வெள்ளி திருமலை போன்றது அன்றே – 6.வம்பறா:2 362/3,4
செழும் தண் பழன பதி-அதன் உள் அமர்ந்து தென்-பால் திரை கடல் நஞ்சு – 7.வார்கொண்ட:4 88/2

மேல்


தென்மதுரை (1)

தென்மதுரை மாறனார் செங்கமல கழல் வணங்கி – 9.கறை:3 10/2

மேல்


தென்றல் (3)

மலர் அமளி துயில் ஆற்றாள் வரும் தென்றல் மருங்கு ஆற்றாள் மங்குல் வானில் – 1.திருமலை:5 174/1
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று – 5.திருநின்ற:1 98/2
கொங்கு அணைந்து குளிர் சாரலிடை வளர்ந்த கொழும் தென்றல்
அங்கு அணைய திருவாரூர் அணி வீதி அழகர் அவர் – 6.வம்பறா:2 270/2,3

மேல்


தென்றலும் (1)

தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட – 6.வம்பறா:2 376/4

மேல்


தென்னர் (10)

தென்னர் நாடு திருநீறு போற்றவும் – 5.திருநின்ற:2 10/2
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர்
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் ஏவ – 6.வம்பறா:1 610/1,2
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் – 6.வம்பறா:1 761/2
துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் – 6.வம்பறா:1 762/2
என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் – 6.வம்பறா:1 776/1
நீடு சீர் தென்னர் கோனும் நேரியன் பாவையாரும் – 6.வம்பறா:1 869/1
மங்கையர்க்கரசியார்-தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார்-தாமும் கூட – 6.வம்பறா:1 894/2
செங்கமல திரு மடந்தை கன்னிநாடாள் தென்னர் குல பழி தீர்த்த தெய்வ பாவை – 12.மன்னிய:2 1/2
தேசு உடைய பாடல் பெறும் தவத்தினாரை செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் – 12.மன்னிய:2 2/2
திரு நாடு போல் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற்றி – 12.மன்னிய:2 3/2

மேல்


தென்னவர் (3)

தென்னவர் தேவியாரும் திரு மணி சிவிகை மீது – 6.வம்பறா:1 745/1
தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின் கண் இடும் ஏடு பச்சை ஆகி – 6.வம்பறா:1 903/1
தென்னவர் கோன் மகளாரை திருவேட்டு முன்னரே – 7.வார்கொண்ட:4 92/1

மேல்


தென்னவன் (18)

தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு – 5.திருநின்ற:1 391/3
தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ் – 5.திருநின்ற:2 8/2
செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டிநாட்டு – 6.வம்பறா:1 599/2
வரி சிலை தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் – 6.வம்பறா:1 603/1
செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார் – 6.வம்பறா:1 635/4
குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் என கூற – 6.வம்பறா:1 656/4
தென்னவன் பெருந்தேவியார் சிவ கன்றின் செய்ய – 6.வம்பறா:1 671/1
தேவியார்-தம்மை நோக்கி தென்னவன் கூறுகின்றான் – 6.வம்பறா:1 691/1
இவர் நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னவன் ஆன – 6.வம்பறா:1 697/1
தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 754/4
தீதுற பொறாது தென்னவன் சிரபுரத்தவரை பார்த்தான் – 6.வம்பறா:1 763/4
தென்னவன் நோக்கம் கண்டு திரு கழுமலத்தார் செல்வர் – 6.வம்பறா:1 764/1
செறி மயில் பீலி தீய தென்னவன் வெப்பு உறு தீ தம்மை – 6.வம்பறா:1 766/2
தென்னவன் நகை உட்கொண்டு செப்பிய மாற்றம் தேரார் – 6.வம்பறா:1 794/1
தென்னவன் வெப்பு தீர்ந்து செழு மணி கோயில் நீங்கி – 6.வம்பறா:1 801/1
தென்னவன் மாறன்-தானும் சிரபுரத்து தலைவர் தீண்டி – 6.வம்பறா:1 819/1
பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மை-ஆல் – 6.வம்பறா:1 820/4
தென்னவன் பணிந்து நின்று திரு ஆலவாயில் மேவும் – 6.வம்பறா:1 867/1

மேல்


தென்னவன்-தன் (1)

தே மருவு நறும் பைம் தார் தென்னவன்-தன் திரு மதுரை – 6.வம்பறா:1 876/2

மேல்


தென்னவன்-தன்னை (1)

தென்னவன்-தன்னை நோக்கி திரு மேனி எளியர் போலும் – 6.வம்பறா:1 758/1

மேல்


தென்னவன்-தனக்கு (1)

தென்னவன்-தனக்கு நீறு சிரபுர செல்வர் ஈந்தார் – 6.வம்பறா:1 857/1

மேல்


தென்னவன்-தானும் (2)

தென்னவன்-தானும் முன் செய் தீ_வினை பயத்தினாலே – 6.வம்பறா:1 600/1
தென்னவன்-தானும் எங்கள் செம்பியன் மகளார்-தாமும் – 6.வம்பறா:1 864/1

மேல்


தென்னவனார் (2)

சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே – 5.திருநின்ற:1 405/2
தேன் நிலவு பொழில் மதுரை புறத்து போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை – 6.வம்பறா:1 884/1

மேல்


தென்னவனும் (1)

சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத – 6.வம்பறா:1 883/4

மேல்


தென்னற்கு (1)

தென்னற்கு உயிரோடு நீறு அளித்து செங்கமலத்து – 6.வம்பறா:1 944/1

மேல்


தென்னன் (7)

சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம் – 5.திருநின்ற:1 284/2
ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன்
மன்றல் அம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் – 6.வம்பறா:1 686/2,3
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன்
பொருவு_அரு வெப்பு நீங்கி பொய்கையின் குளிர்ந்தது அப்பால் – 6.வம்பறா:1 765/1,2
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/3
மான சீர் தென்னன் நாடு வாழ வந்து அணைந்தார் என்பார் – 6.வம்பறா:1 802/4
நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார் – 6.வம்பறா:1 808/3
செம்பியன் செங்கோல் என்ன தென்னன் கூன் நிமிர்ந்தது அன்றே – 6.வம்பறா:1 847/4

மேல்


தென்னனும் (1)

தென்னனும் தேவியாரும் உடன் செல திரண்டு செல்லும் – 6.வம்பறா:1 811/2

மேல்


தென்னனை (1)

விரிந்த வெம் தழல் வெம்மை போய் தென்னனை மேவி – 6.வம்பறா:1 706/3

மேல்


தென்னனோடும் (1)

செம் கண் மால் வழிபட்ட கோயில் நண்ணி திரு முன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும்
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/1,2

மேல்


தென்னாட்டு (2)

தென்னாட்டு அமண் மாசு அறுத்து திருநீறே – 6.வம்பறா:1 951/1
தென்னாட்டு வேண்டுவன செய்து அமைப்பார்-தமை விடுத்தார் – 7.வார்கொண்ட:4 105/4

மேல்


தென்னாடு (1)

செழும் தரள சிவிகையின் மேல் தென்னாடு செய் தவத்தால் – 6.வம்பறா:1 735/3

மேல்