தூ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 51
தூஉய் 1
தூக்கி 5
தூக்கிய 1
தூக்கியதே 1
தூக்கின் 2
தூக்கு 1
தூக்கும் 3
தூங்க 6
தூங்கானை 5
தூங்கி 1
தூங்கிட 2
தூங்கிய 2
தூங்கு 6
தூங்கும் 3
தூசின் 1
தூசு 3
தூசும் 1
தூசொடு 1
தூண் 1
தூண்டா 1
தூண்டிய 1
தூண்டு 3
தூண்டும் 1
தூணத்து 1
தூதர் 3
தூதராம் 1
தூதரை 1
தூதன் 1
தூதனாய் 1
தூதனாராய் 1
தூதா 1
தூதினில் 1
தூது 9
தூதுக்கு 1
தூநெறி 1
தூநெறியே 1
தூப 4
தூபங்கள் 2
தூபங்களுடன் 1
தூபம் 16
தூபமும் 1
தூபமோ 1
தூபியும் 1
தூமத்து 1
தூமம் 1
தூய் 3
தூய்மை 6
தூய்மையால் 1
தூய்மையின் 1
தூய்மையினால் 2
தூய்மையினாலும் 1
தூய்மையே 1
தூய 84
தூயவர் 2
தூயவர்க்கு 1
தூயோர் 3
தூயோன் 1
தூர் 1
தூர்த்த 1
தூர்த்தார் 3
தூர்த்து 1
தூர்ப்ப 2
தூர்ப்பதே 1
தூரத்திடை 1
தூரத்தே 5
தூரிய 4
தூரியங்கள் 2
தூரியம் 9
தூவாயா 1
தூவி 10
தூவியின் 1
தூற்றி 2
தூற்றில் 1
தூற்றும் 1
தூறி 1
தூறு 1
தூறும் 1

தூ (51)

தூ மறை மூதூர் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்ப – 1.திருமலை:5 13/2
வாச நெய் ஊட்டி மிக்க மலர் விரை அடுத்த தூ நீர் – 1.திருமலை:5 15/1
தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1
தூ மலர் பிணையல் மாலை துணர் இணர் கண்ணி கோதை – 1.திருமலை:5 18/1
சொல் தமிழ் பாடுக என்றார் தூ மறை பாடும் வாயார் – 1.திருமலை:5 70/4
சோதி மணி வேதிகைகள் தூ நறும் சாந்து அணி நீவி – 1.திருமலை:5 121/1
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
தூ நறும் சடை கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ – 2.தில்லை:7 17/3
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா – 2.தில்லை:7 36/2
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார் – 3.இலை:3 121/4
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு – 3.இலை:7 10/3
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் – 4.மும்மை:1 38/3
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர் – 4.மும்மை:5 9/3
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ நறும் புது மலர் கொய்தாள் – 4.மும்மை:5 59/4
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
தூ மரு நுண் துகள் அணிந்து துளி வரும் கண்ணீர் ததும்பி – 6.வம்பறா:1 9/3
தூ மருவு சோதி விரிய துகள் அடக்கி – 6.வம்பறா:1 29/3
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/3
தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார் – 6.வம்பறா:1 41/4
தூ மணி மாளிகையின்-கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத – 6.வம்பறா:1 99/1
தூ நறும் தமிழ் சொல் இருக்கு குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி – 6.வம்பறா:1 182/2
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் – 6.வம்பறா:1 244/2
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை – 6.வம்பறா:1 502/2
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூ மறை வீழிமிழலை-தன்னுள் – 6.வம்பறா:1 555/1
சொல்_அரசர் உடன் கூட பிள்ளையாரும் தூ மணி நீர் மறைக்காட்டு தொல்லை மூதூர் – 6.வம்பறா:1 578/1
தூ மணம் நல் உபகரணம் சமைப்பவர்-தம் தொழில் துவன்ற – 6.வம்பறா:1 1179/2
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
துகில் புனை விதான நீழல் தூ மலர் தவிசின் மீது – 6.வம்பறா:1 1231/2
உரிமையால் வெண் பால் தூ நீர் உடன் எடுத்து ஏத்திவந்தார் – 6.வம்பறா:1 1232/4
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1
தூ நாண் மலர் தாள் பணிவித்து தாமும் தொழுது சொல்லுவார் – 6.வம்பறா:2 38/4
தூ நாண் மென் மலர் கொன்றை சடையார் செய்ய துணை பாத மலர் கண்டு தொழுதேன் என்று – 6.வம்பறா:2 120/2
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
புண்டரிகத்து அவள் வனப்பை புறம் கண்ட தூ நலத்தை – 6.வம்பறா:2 267/3
துன்று சடை தூ வாயர்-தமை முன்னம் தொழ அணைந்தார் – 6.வம்பறா:2 302/4
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் – 6.வம்பறா:2 379/3
துன்னு சடை சங்கரனார் ஏற்ற தூ நீர் கங்கை – 6.வம்பறா:3 3/3
தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் – 7.வார்கொண்ட:2 2/1
தூ நல் சிறப்பின் அர்ச்சனை ஆம் கொண்டு புரிவார் தமக்கு ஒரு நாள் – 7.வார்கொண்ட:4 41/2
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/2
துவள் பதாகை நுழைந்து அணை தூ மதி – 9.கறை:4 4/2
எம்பெருமான் கழல் நினைந்து அங்கு இட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும் – 11.பத்தராய்:6 2/4
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1
தூ நலம் திகழ் சோதி வெள் ஆனையும் கொண்டு வன் தொண்டர்க்கு – 13.வெள்ளானை:1 32/2

மேல்


தூஉய் (1)

தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3

மேல்


தூக்கி (5)

தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/2
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல் – 3.இலை:7 21/2
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அ சொல்லையே காக்க – 4.மும்மை:5 3/3
பூ அணை தாமம் தூக்கி பூரணகும்பம் ஏந்தி – 6.வம்பறா:1 118/2
துணர் மலர் மாலை தூக்கி தொழுது எதிர்கொள்ள சென்றார் – 6.வம்பறா:2 399/4

மேல்


தூக்கிய (1)

தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/3

மேல்


தூக்கியதே (1)

தாம நீள் கண்ணி சேர்ந்த சலாகை தூக்கியதே போலும் – 6.வம்பறா:1 1104/3

மேல்


தூக்கின் (2)

தூக்கின் தமிழ்_மாலை பாடி தொழுது அங்கு உறைகின்ற நாளில் – 6.வம்பறா:1 275/4
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/3

மேல்


தூக்கு (1)

தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2

மேல்


தூக்கும் (3)

நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில் – 3.இலை:7 28/3
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும்
நீல மா மணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் – 6.வம்பறா:1 504/2,3
உற ஆர்த்து எடுத்து தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி – 12.மன்னிய:4 10/2

மேல்


தூங்க (6)

வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை – 3.இலை:3 3/2,3
போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை – 3.இலை:3 11/3,4
நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க – 3.இலை:3 20/4
கள் உண்டு களி தூங்க கறங்கு பறையும் கலிக்கும் – 4.மும்மை:4 10/4
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார் – 5.திருநின்ற:1 387/4
எண் திசையும் தனி நடப்ப ஏழ்_உலகும் குளிர் தூங்க
அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக – 6.வம்பறா:1 23/2,3

மேல்


தூங்கானை (5)

வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை – 5.திருநின்ற:1 149/3
நீடு திரு தூங்கானை மாடத்து நிலவுகின்ற – 5.திருநின்ற:1 152/1
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி – 5.திருநின்ற:1 154/1
ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனி பரஞ்சோதி – 6.வம்பறா:1 184/2
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு – 8.பொய்:5 2/3

மேல்


தூங்கி (1)

ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2

மேல்


தூங்கிட (2)

துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல் – 3.இலை:3 59/3
பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிட படியின் மீது – 6.வம்பறா:1 584/3

மேல்


தூங்கிய (2)

தூங்கிய மணியை கோட்டால் துளக்கியது என்று சொன்னார் – 1.திருமலை:3 29/4
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார் – 3.இலை:5 31/4

மேல்


தூங்கு (6)

மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் – 4.மும்மை:4 8/3
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/4
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால் – 5.திருநின்ற:1 153/3
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/2
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1

மேல்


தூங்கும் (3)

வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை – 3.இலை:1 13/3
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய் – 5.திருநின்ற:5 5/3
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை – 6.வம்பறா:1 344/1

மேல்


தூசின் (1)

எண்_இலா வண்ண தூசின் பொதி பரப்பு எங்கும் நண்ண – 6.வம்பறா:1 1201/4

மேல்


தூசு (3)

தூசு உடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை – 4.மும்மை:5 114/2
துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி – 6.வம்பறா:1 636/3
சொன்னவர்க்கு எலாம் இருநிதி தூசு உடன் அளித்து – 6.வம்பறா:1 1052/2

மேல்


தூசும் (1)

பொன் ஆர் கிழியும் மணி பூணும் காசும் தூசும் பொழிந்து அளித்தார் – 13.வெள்ளானை:1 16/4

மேல்


தூசொடு (1)

சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே – 6.வம்பறா:1 1070/1

மேல்


தூண் (1)

மழபாடி வயிர மணி தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம்கொண்டு எய்தி – 6.வம்பறா:1 307/1

மேல்


தூண்டா (1)

தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி – 5.திருநின்ற:1 223/2

மேல்


தூண்டிய (1)

தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து – 5.திருநின்ற:1 118/2

மேல்


தூண்டு (3)

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
தூண்டு சோதி விளக்கு அனையார்-தம்-பால் கனவில் தோன்றினார் – 6.வம்பறா:2 237/4

மேல்


தூண்டும் (1)

தூண்டும் சோதி விளக்கு அனையார் அமைக்க துணைவர் சொல்லுதலும் – 7.வார்கொண்ட:4 72/2

மேல்


தூணத்து (1)

ஏறி மரகத தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம் கொள் பொன் கால் – 1.திருமலை:5 170/3

மேல்


தூதர் (3)

பொருவு_இல் அன்பர் விடும் தூதர் புனித வீதியினில் போத – 6.வம்பறா:2 333/4
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் – 6.வம்பறா:2 337/1
எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார் – 6.வம்பறா:2 367/4

மேல்


தூதராம் (1)

பரவையார்-தம்-பால் நம்பி தூதராம் பாங்கில் போன – 6.வம்பறா:2 350/1

மேல்


தூதரை (1)

தூதரை போக விட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் – 6.வம்பறா:2 347/1

மேல்


தூதன் (1)

துன்பம் ஒழி நீ யாம் உனக்கோர் தூதன் ஆகி இப்பொழுதே – 6.வம்பறா:2 329/3

மேல்


தூதனாய் (1)

தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் – 6.வம்பறா:2 396/3

மேல்


தூதனாராய் (1)

தொண்டனார்-தம் துயர் நீக்க தூதனாராய் எழுந்தருள – 6.வம்பறா:2 331/4

மேல்


தூதா (1)

மன்னும் உரிமை வன் தொண்டர் வாயில் தூதா வாயிலிடை – 6.வம்பறா:2 340/1

மேல்


தூதினில் (1)

தூதினில் ஏகி தொண்டரை ஆளும் தொழில் கண்டே – 6.வம்பறா:2 368/2

மேல்


தூது (9)

தொடர்ந்து கொண்ட வன் தொண்டர்க்கு தூது போய் – 1.திருமலை:3 6/3
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார் – 3.இலை:7 42/4
நாவலூர் மன்னர் நாதனை தூது விட்டு அதனுக்கு – 6.வம்பறா:2 8/1
தம் பிரானாரை தூது தையல்-பால் விட்டார் என்னும் – 6.வம்பறா:2 383/2
இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான்-தன்னை – 6.வம்பறா:2 387/2
நள்ளிருள் நாயனாரை தூது விட்டு அவர்க்கே நண்பாம் – 6.வம்பறா:2 409/1
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திரு நாள் – 7.வார்கொண்ட:6 9/2
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் – 9.கறை:4 5/2
கொம்பு அனார்-பால் ஒரு தூது செல்ல ஏவி கொண்டு அருளும் – 12.மன்னிய:6 1/2

மேல்


தூதுக்கு (1)

ஓர் இரவு எல்லாம் தூதுக்கு உழல்வராம் ஒருவர் என்று – 6.வம்பறா:2 385/4

மேல்


தூநெறி (1)

தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளி படுப்பாராய் – 2.தில்லை:7 9/2

மேல்


தூநெறியே (1)

துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் – 6.வம்பறா:1 944/3

மேல்


தூப (4)

நெய் தரும் கொழும் தூப தீபங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் – 4.மும்மை:5 60/2
துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி – 6.வம்பறா:1 460/3
நிரையோடு துமி தூப மணி தீபம் நித்தில பூம் – 6.வம்பறா:2 147/3
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார் – 7.வார்கொண்ட:3 71/4

மேல்


தூபங்கள் (2)

பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து – 5.திருநின்ற:1 333/3
துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் – 6.வம்பறா:1 1175/4

மேல்


தூபங்களுடன் (1)

சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது – 6.வம்பறா:1 1148/2

மேல்


தூபம் (16)

அகில் விரை தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டு ஆடை சாத்தி – 1.திருமலை:5 16/1
நிறை குடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி – 1.திருமலை:5 24/1
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார் – 3.இலை:4 6/3,4
பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல – 3.இலை:4 7/2
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை – 5.திருநின்ற:1 4/4
தெள்ளு புனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர்கொள் சிறப்பில் செய்வார் – 6.வம்பறா:1 257/4
தூ நறும் பூரணகும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் – 6.வம்பறா:1 314/2
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி – 6.வம்பறா:1 540/1
அலர் வாச புனல் குடங்கள் அணி விளக்கு தூபம் உடன் – 6.வம்பறா:1 621/2
நிரைத்த நீர் பொன் குடங்கள் நிரை மணி விளக்கு தூபம்
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/2,3
அகில் நறும் தூபம் விம்ம அணி கிளர் மணியால் வேய்ந்த – 6.வம்பறா:1 1231/1
அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின் தூபம் கொடி எடுத்து – 6.வம்பறா:2 185/2
நெய் வளர் விளக்கு தூபம் நிறை குடம் நிரைத்து பின்னும் – 6.வம்பறா:2 378/4
பூ மலி மறுகில் இட்ட புகை அகில் தூபம் தாழ – 7.வார்கொண்ட:2 2/3
ஓம நல் வேள்வி சாலை ஆகுதி தூபம் ஓங்கும் – 7.வார்கொண்ட:2 2/4
வாச திரு மஞ்சனம் பள்ளி தாமம் சாந்தம் மணி தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம் முதலாயினவும் திரு அமுதும் – 7.வார்கொண்ட:4 24/1,2

மேல்


தூபமும் (1)

சோதி நீள் மணி தூபமும் தீபமும் – 4.மும்மை:5 104/2

மேல்


தூபமோ (1)

சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி – 1.திருமலை:2 27/2

மேல்


தூபியும் (1)

தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து – 12.மன்னிய:1 8/1

மேல்


தூமத்து (1)

உளம் கொள் மறை வேதியர்-தம் ஓம தூமத்து இரவும் – 6.வம்பறா:1 6/1

மேல்


தூமம் (1)

யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓம தூமம் உயர் வானில் அடுப்ப – 1.திருமலை:5 100/3

மேல்


தூய் (3)

தொல்லை மால் வரை பயந்த தூய் ஆள்-தன் திரு பாகன் – 1.திருமலை:5 199/1
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும் – 3.இலை:3 148/3
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி – 5.திருநின்ற:1 126/1

மேல்


தூய்மை (6)

துன்னிய யாவையும் தூய்மை செய்வது – 2.தில்லை:2 16/2
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் – 5.திருநின்ற:1 307/4
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார் – 5.திருநின்ற:7 5/2
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து – 5.திருநின்ற:7 25/1
மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே – 6.வம்பறா:1 858/4
கீழ் உற பறித்து போக்கி கிளர் ஒளி தூய்மை செய்தே – 6.வம்பறா:1 871/3

மேல்


தூய்மையால் (1)

நிரந்த நீற்று ஒளியால் நிறை தூய்மையால்
புரந்த அஞ்சு_எழுத்து ஓசை பொலிதலால் – 1.திருமலை:4 3/2,3

மேல்


தூய்மையின் (1)

துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் – 2.தில்லை:7 12/3

மேல்


தூய்மையினால் (2)

சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும் தெரிவு_அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து – 4.மும்மை:5 96/2
மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்-தம் – 6.வம்பறா:1 651/3

மேல்


தூய்மையினாலும் (1)

மெய் ஒளி தழைக்கும் தூய்மையினாலும் வெற்றி வெண்குடை அநபாயன் – 1.திருமலை:1 12/3

மேல்


தூய்மையே (1)

தோற்றும் மன் உயிர்கட்கு எலாம் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்து போய் – 1.திருமலை:5 162/1,2

மேல்


தூய (84)

துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர் – 0.பாயிரம்:1 4/2
தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார் – 0.பாயிரம்:1 8/3
தூய மால் வரை சோதியில் மூழ்கி ஒன்று – 1.திருமலை:1 7/3
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/3
மா மணி அணிந்த தூய வளர் ஒளி இருள் கால் சீக்கும் – 1.திருமலை:5 18/3
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/3
தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரைசெய்வார் – 2.தில்லை:3 7/4
அ பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு – 2.தில்லை:4 27/3
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமை தலைநின்றார் – 2.தில்லை:6 3/3
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி – 2.தில்லை:7 19/1
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார் – 3.இலை:1 7/4
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த – 3.இலை:3 121/3
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி – 3.இலை:3 139/2
தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் – 3.இலை:3 146/4
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார் – 3.இலை:6 5/4
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை – 3.இலை:6 14/2
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த – 3.இலை:6 16/1
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி – 3.இலை:6 20/3
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம் – 3.இலை:6 22/4
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/2
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார் – 3.இலை:7 26/4
தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி – 4.மும்மை:3 4/3
தூய மா தவம் செய்தது தொண்டை நல் நாடு – 4.மும்மை:5 1/4
தூய வெண் துறை பரதவர் தொடுப்பன வலைகள் – 4.மும்மை:5 34/1
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ – 4.மும்மை:5 47/4
தொண்டை அம் கனி வாய் உமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் – 4.மும்மை:5 58/4
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4
தூய தீம்பால் மடி பெருகி சொரிய முலைகள் சொரிந்தன-ஆல் – 4.மும்மை:6 28/4
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை – 5.திருநின்ற:1 27/2
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும் – 5.திருநின்ற:1 140/1
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம் – 5.திருநின்ற:1 382/3
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி – 5.திருநின்ற:5 23/1
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த – 5.திருநின்ற:6 7/3
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே – 5.திருநின்ற:7 23/2
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண் – 5.திருநின்ற:7 26/4
தொண்டர் மனம் களி சிறப்ப தூய திருநீற்று நெறி – 6.வம்பறா:1 23/1
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் – 6.வம்பறா:1 40/3
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/2
தோணி வீற்றிருந்தார்-தம்மை தொழுது முன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூர – 6.வம்பறா:1 128/1,2
துங்க வெண்குடை தூய சிவிகையும் – 6.வம்பறா:1 201/2
தூய முத்தின் சிவிகை சுடர் குடை – 6.வம்பறா:1 210/2
தூய பதிக திருக்கடைக்காப்பு தொடுத்து அணிய – 6.வம்பறா:1 336/2
துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் – 6.வம்பறா:1 428/3
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/2
உன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார் – 6.வம்பறா:1 857/4
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து – 6.வம்பறா:1 1050/2
தூய தொண்டர்-தம் குழாத்தொடும் எதிர் வந்து தோன்ற – 6.வம்பறா:1 1073/4
துணிவினை அருள்செய்தார் தூய வாய்மையார் – 6.வம்பறா:1 1115/4
சிந்தை தூய அன்பர்களுடன் திருமணம் போத – 6.வம்பறா:1 1194/3
தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய
பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினது-ஆல் – 6.வம்பறா:2 5/3,4
தூய மணி பொன் தவிசில் எழுந்தருளி இருக்க தூ நீரால் – 6.வம்பறா:2 34/1
தோய்ந்த புகை நாவியின் நறு நெய் தூய பசும் கர்ப்பூரம் உடன் – 6.வம்பறா:2 35/3
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
தும்பை வெள் அடம்பு திங்கள் தூய நீறு அணிந்த சென்னி – 6.வம்பறா:2 100/2
தூய மணிமுத்தாற்றில் புக விட்டேம் துணைவர் அவர் – 6.வம்பறா:2 127/2
தொண்டர் எதிர்கொண்டு அணைய தொழுது போய் தூய நதி – 6.வம்பறா:2 172/2
தூய மனம் மகிழ்ந்து இருந்த தோழனார்-பால் அணைந்து – 6.வம்பறா:2 244/2
தூய பணி பொழுது ஆக தொழில் புரிவார் உடன் போத – 6.வம்பறா:2 255/2
தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப்பெறாது – 6.வம்பறா:4 12/2
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர் கண் பெற்று எழுந்தார் – 6.வம்பறா:4 20/1
தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து – 6.வம்பறா:5 4/1
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை – 6.வம்பறா:6 1/1
துன்னிய வேடம்-தன்னை துறவாதே தூய சிவம் – 7.வார்கொண்ட:1 6/3
தூய படைக்கல தொழிலும் துறை நிரம்ப பயின்று அவற்றால் – 7.வார்கொண்ட:3 3/2
துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார் – 7.வார்கொண்ட:3 13/4
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் – 7.வார்கொண்ட:3 14/1
துளங்கு ஒளி வெண் திரள் கோவை தூய வடம் அணிந்தது என – 7.வார்கொண்ட:3 30/2
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார்-தம் கழல் விளக்கி – 7.வார்கொண்ட:3 71/1
ஒக்க மகிழ்ச்சி களி சிறப்ப தூய விருந்தின் கடன் முடித்தார் – 7.வார்கொண்ட:4 76/4
தூய நீறு தங்கள் திரு முடியில் வாங்கி தொழுது அணிந்து – 7.வார்கொண்ட:4 78/2
தூய மதி வாழ் சடையார்-தம் பதிகள் பிறவும் தொழுது ஏத்தி – 7.வார்கொண்ட:4 140/3
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4
தூய காடவர்-தம் திறம் சொல்லுவாம் – 8.பொய்:7 7/4
தூய திரு விளக்கு எரித்தார் துளக்கு அறு மெய் தொண்டனார் – 9.கறை:1 5/4
தூய மா மரபின் முதல் தோன்றியே – 9.கறை:4 7/2
சொன்ன சொன்னபடி நிரம்ப கொடுத்து தூய போனகமும் – 9.கறை:5 4/2
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர் – 10.கடல்:1 5/3
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி – 10.கடல்:3 7/3
துன்னி உகைக்கும் குட கொங்கில் அணைந்து தூய மதிவான் நீர் – 13.வெள்ளானை:1 4/3
தூய மஞ்சன தொழிலினில் தொடங்கிட துணைவராம் வன் தொண்டர் – 13.வெள்ளானை:1 28/2

மேல்


தூயவர் (2)

தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார் – 5.திருநின்ற:1 206/4
இருமை மரபும் தூயவர் தாம் சேரர் நாட்டில் எய்திய பின் – 7.வார்கொண்ட:6 5/3

மேல்


தூயவர்க்கு (1)

துன்னிய மெய் அன்புடனே எழுந்த வினை தூயவர்க்கு
மன்னு மிகு பூசனையாம் அன்பு நெறி வழக்கினால் – 7.வார்கொண்ட:1 13/3,4

மேல்


தூயோர் (3)

தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் – 2.தில்லை:7 4/4
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செம் கண் மால் விடையார் செழும் பொன் மலை_வல்லி – 4.மும்மை:3 3/2,3
தொல்லை மாளிகை நிரை திரு வீதியை தொழுது அணைந்தனர் தூயோர் – 6.வம்பறா:1 156/4

மேல்


தூயோன் (1)

தொண்டரை விளக்க தூயோன் அருள்செய துயிலை நீங்கி – 12.மன்னிய:1 11/1

மேல்


தூர் (1)

தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான் – 5.திருநின்ற:1 298/4

மேல்


தூர்த்த (1)

தூய நீறு பொன் மேனியில் விளங்க தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய் – 2.தில்லை:3 4/3

மேல்


தூர்த்தார் (3)

பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார் – 3.இலை:1 49/4
எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி – 6.வம்பறா:1 259/3
நீடிய வாழ்த்தில் போற்றி நிமிர்ந்த பூ_மாரி தூர்த்தார்
ஆடு இயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் – 6.வம்பறா:1 848/2,3

மேல்


தூர்த்து (1)

தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும் – 3.இலை:4 14/2

மேல்


தூர்ப்ப (2)

அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி – 3.இலை:1 29/3,4
எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப – 6.வம்பறா:1 620/4

மேல்


தூர்ப்பதே (1)

தூர்ப்பதே எனை தொண்டு கொண்டு ஆண்டவர் – 1.திருமலை:5 165/2

மேல்


தூரத்திடை (1)

அணையல் உற்றவர் அருகு தூரத்திடை அகல – 6.வம்பறா:1 712/2

மேல்


தூரத்தே (5)

தூரத்தே திரு கூட்டம் பல முறையால் தொழுது அன்பு – 1.திருமலை:5 201/1
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ – 3.இலை:3 169/3
தொல்லை வள பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் – 6.வம்பறா:1 1146/2
நண்ணியது தூரத்தே கண்டு நணுக பெறா – 6.வம்பறா:1 1255/2
சொல் மலர் மாலைகள் சாத்தி தூரத்தே தொழுது அமர்ந்தார் – 7.வார்கொண்ட:4 109/4

மேல்


தூரிய (4)

தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1
தூ மறையின் ஒலி பெருக தூரிய மங்கலம் முழங்க – 6.வம்பறா:1 406/3
தூரிய பூ_மகள் என ஒரு பெண் கொடி உதித்தாள் – 6.வம்பறா:1 1040/4
மங்கல தூரிய நாதம் மறுகு-தொறும் நின்று இயம்ப – 6.வம்பறா:1 1177/1

மேல்


தூரியங்கள் (2)

நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்க – 1.திருமலை:5 23/1
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே – 6.வம்பறா:1 649/1

மேல்


தூரியம் (9)

மங்கல கீதம் பாட மழை நிகர் தூரியம் முழங்க – 1.திருமலை:5 122/1
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான் – 3.இலை:5 12/2
மங்கல தூரியம் துவைப்பார் மறை சாமம் பாடுவார் மருங்கு வேதி – 6.வம்பறா:1 97/1
மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதி – 6.வம்பறா:1 109/3
மங்கல தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதி சடையார் கோயில் – 6.வம்பறா:1 316/1
மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் – 6.வம்பறா:1 620/2
பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனை மங்கல தூரியம் ஒலிப்ப – 6.வம்பறா:2 186/3
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப – 8.பொய்:2 40/2
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி – 8.பொய்:6 3/3

மேல்


தூவாயா (1)

துங்க இசை திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே – 6.வம்பறா:2 303/2

மேல்


தூவி (10)

பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் – 5.திருநின்ற:1 139/3
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/3
மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி
தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி – 6.வம்பறா:1 150/3,4
பூரணகும்பங்கள் நிறை கரகம் ஏந்தி புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி
வார் அணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரை – 6.வம்பறா:1 258/2,3
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
வம்பு உலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை – 6.வம்பறா:1 530/3
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி
மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப – 6.வம்பறா:1 540/2,3
ஏடு உலாம் மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் – 6.வம்பறா:2 98/3
பானல் விழியார் சாமரை முன் பணிமாற பல் மலர் தூவி
மான அரசர் போற்றிட வீற்றிருந்தார் மன்னர் பெருமானார் – 7.வார்கொண்ட:4 21/3,4
தூ நறு மலர் தரளம் பொரி தூவி முன் இரு புடையின்-கணும் – 13.வெள்ளானை:1 25/1

மேல்


தூவியின் (1)

பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/3

மேல்


தூற்றி (2)

வை தெரிந்து அகற்றி ஆற்றி மழை பெயல் மான தூற்றி
செய்ய பொன் குன்றும் வேறு நவமணி சிலம்பும் என்ன – 1.திருமலை:2 25/1,2
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன் – 6.வம்பறா:1 792/2

மேல்


தூற்றில் (1)

துன்னும் யானையை தூற்றில் வாழ் முயல் முன் துரக்க எய்திய தொலைவு_இல் ஊக்கத்தால் – 4.மும்மை:5 77/2

மேல்


தூற்றும் (1)

களவு கொண்டது அளவு என களவு அலர் தூற்றும்
அளவு கண்டு அவர் குழல் நிறம் கனியும் அ களவை – 4.மும்மை:5 17/2,3

மேல்


தூறி (1)

தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


தூறு (1)

வழி ஈது என்று தூறு அடைவார் மாண்டோம் என்பார் மதி கெட்டீர் – 6.வம்பறா:4 22/2

மேல்


தூறும் (1)

மான வரி சிலை வேட்டை ஆடும் கானும் வான மறை நிலை பெரிய மரமும் தூறும்
ஏனை இமையோர்-தாமும் இறைஞ்சி ஏத்தி எய்தவரும் பெருமைய ஆம் எண்_இலாத – 6.வம்பறா:1 1017/2,3

மேல்