ஞா – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 5
ஞாட்பின் 1
ஞாட்பின்-கண் 1
ஞாண் 3
ஞாணொடு 1
ஞாயில் 2
ஞாயிற்றின் 1
ஞாயிறு 3
ஞாயிறும் 1
ஞாலத்தார் 1
ஞாலத்திடை 1
ஞாலத்தில் 1
ஞாலத்து 3
ஞாலத்துள் 1
ஞாலம் 38
ஞாலம்-தன்னுள் 1
ஞாலமும் 1
ஞாழல் 4
ஞாழலின் 1
ஞான 54
ஞானசம்பந்த 1
ஞானசம்பந்தர் 22
ஞானசம்பந்தரும் 2
ஞானசம்பந்தரை 1
ஞானசம்பந்தன் 3
ஞானசம்பர் 1
ஞானத்தின் 1
ஞானத்து 9
ஞானத்துடனாம் 1
ஞானபோனகர் 3
ஞானபோனகர்க்கு 1
ஞானம் 47
ஞானமும் 2
ஞானமே 2
ஞானியார்-பால் 1

ஞாங்கர் (5)

ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் – 3.இலை:5 5/2
ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து – 6.வம்பறா:1 608/3
நதிகள் எங்கும் மலர் பிறங்கல் ஞாங்கர் எங்கும் ஓங்குவன – 7.வார்கொண்ட:4 142/3
ஞாங்கர் நிறை விரை உறுப்பு வருக்கம் முதல் நலம் சிறப்ப – 7.வார்கொண்ட:4 162/3
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த – 8.பொய்:4 5/2,3

மேல்


ஞாட்பின் (1)

எடுத்து உடன்ற முனை ஞாட்பின் இரு படையில் பொரு படைஞர் – 9.கறை:3 4/1

மேல்


ஞாட்பின்-கண் (1)

நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண்
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர் – 3.இலை:2 26/2,3

மேல்


ஞாண் (3)

காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி – 3.இலை:3 21/2
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/3
குஞ்சி திருத்தி முகம் துடைத்து கொட்டை அரை_ஞாண் துகள் நீக்கி – 7.வார்கொண்ட:3 60/1

மேல்


ஞாணொடு (1)

புண்ணிய முதலே புனை மணி அரை_ஞாணொடு போதும் – 6.வம்பறா:1 93/1

மேல்


ஞாயில் (2)

ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி – 4.மும்மை:5 105/2
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/1,2

மேல்


ஞாயிற்றின் (1)

நாலாம் குலத்தில் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/1,2

மேல்


ஞாயிறு (3)

அங்கண் ஓர் ஒளி ஆயிரம் ஞாயிறு
பொங்கு பேர் ஒளி போன்று முன் தோன்றிட – 1.திருமலை:1 16/1,2
திகழ்ந்த ஞாயிறு துணை புணர் ஓரை உள் சேர்ந்து – 6.வம்பறா:1 384/2
மேலாம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் – 6.வம்பறா:2 207/2

மேல்


ஞாயிறும் (1)

திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் – 5.திருநின்ற:1 389/4

மேல்


ஞாலத்தார் (1)

நல் நெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் – 2.தில்லை:2 10/3

மேல்


ஞாலத்திடை (1)

இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மண_வினை செய்து – 6.வம்பறா:2 265/2

மேல்


ஞாலத்தில் (1)

ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க – 6.வம்பறா:1 859/3

மேல்


ஞாலத்து (3)

ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 277/4
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிட செய்து ஞாலத்து
எஞ்சலில் அடியார்க்கு என்றும் இடையறா அன்பால் வள்ளல் – 7.வார்கொண்ட:2 5/2,3
பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும் – 10.கடல்:4 2/2

மேல்


ஞாலத்துள் (1)

நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் – 5.திருநின்ற:1 269/3,4

மேல்


ஞாலம் (38)

ஞாலம் ஓங்கிய நான்_மறை ஓதையும் – 1.திருமலை:2 18/3
ஞாலம் உய்ய நடம் மன்றுள் ஆடின – 1.திருமலை:5 192/1
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடி பதி மாறனார் – 2.தில்லை:4 1/4
நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார் – 2.தில்லை:4 8/4
ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நல் நெறியின் – 2.தில்லை:6 9/1
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன – 3.இலை:2 16/4
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள் – 3.இலை:7 19/4
மெய் வைத்த காலும் தரும் ஞாலம் அளந்த மேன்மை – 4.மும்மை:1 3/3
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் – 4.மும்மை:1 29/1
ஞாலம் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழி – 4.மும்மை:1 47/3
ஞாலம் அறிய பிழை புரிந்து நம்பர் அருளால் நான்_மறையின் – 4.மும்மை:6 58/1
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும் – 5.திருநின்ற:1 164/3
ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் – 5.திருநின்ற:1 257/4
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப – 5.திருநின்ற:1 262/2
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து – 5.திருநின்ற:1 291/3
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால் – 5.திருநின்ற:1 318/1
ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் – 5.திருநின்ற:4 63/4
ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார் – 5.திருநின்ற:6 4/2
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் – 5.திருநின்ற:6 29/2
ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் – 6.வம்பறா:1 30/3
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
ஞாலம் நின் புகழே ஆக வேண்டும் நான்_மறைகள் ஏத்தும் – 6.வம்பறா:1 740/3
ஞாலம் உய்ய வந்து அருளும் பிள்ளையாரை பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் – 6.வம்பறா:1 895/3
இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார் – 6.வம்பறா:1 993/4
ஞாலம் இருள் நீங்க வரும் புகலி வேந்தர் நடு இடை யாமத்தினிடை தொழுது உணர்ந்து – 6.வம்பறா:1 1009/3
மா இரு ஞாலம் உய்ய வழியினை அருளி செய்வார் – 6.வம்பறா:1 1247/4
ஞாலம் நிகழ் கோள் புலியார்-தம் நாட்டியத்தான் குடி நண்ண – 6.வம்பறா:2 33/2
ஞாலம் வியப்பு எய்த வரும் நல் கனக மிடை எடுத்து – 6.வம்பறா:2 136/1
ஞாலம் தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் – 6.வம்பறா:2 288/1
ஞாலம் உய்ய வரும் நம்பி நலம் கொள் விருப்பால் வலம்கொண்டு – 6.வம்பறா:2 312/2
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் – 6.வம்பறா:2 337/1
ஞாலம் ஆர் புகழின் மிக்கார் நான்_மறை குலத்தில் உள்ளார் – 7.வார்கொண்ட:2 3/2
மா இரு ஞாலம் போற்ற வரும் இவர்-பால் மனம் மகிழ்ந்தார் – 7.வார்கொண்ட:3 14/4
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்கு – 7.வார்கொண்ட:6 4/1
இம்பர் ஞாலம் களிகூர எய்தும் பெரும் பூசனை இயற்றி – 7.வார்கொண்ட:6 7/3
ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார் – 8.பொய்:3 7/2
நம்பிஆரூரை பயந்தார் ஞாலம் எல்லாம் குடி வாழ – 12.மன்னிய:6 1/4
ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தம்பிரான் தோழர் – 13.வெள்ளானை:1 1/2

மேல்


ஞாலம்-தன்னுள் (1)

மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு – 3.இலை:1 1/1

மேல்


ஞாலமும் (1)

நல் பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பு எல்லாம் – 6.வம்பறா:1 1108/3

மேல்


ஞாழல் (4)

சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் – 1.திருமலை:2 29/1
பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி – 1.திருமலை:5 93/2
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில் – 5.திருநின்ற:1 174/2
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும் – 8.பொய்:6 4/1

மேல்


ஞாழலின் (1)

தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது – 4.மும்மை:5 37/4

மேல்


ஞான (54)

ஞான மா முனிவர் போற்ற நலம் மிகு சிவலோகத்தில் – 2.தில்லை:3 35/2
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள – 3.இலை:3 184/3
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடி கீழ் – 4.மும்மை:2 5/3
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ் – 5.திருநின்ற:1 1/2
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான
வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க – 5.திருநின்ற:1 184/1,2
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே – 5.திருநின்ற:1 185/4
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி – 5.திருநின்ற:1 204/3
காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால் – 5.திருநின்ற:1 250/2
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள் – 5.திருநின்ற:1 269/3
மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு – 5.திருநின்ற:1 283/3
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார் – 5.திருநின்ற:1 289/4
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் – 5.திருநின்ற:1 299/4
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார் – 5.திருநின்ற:1 334/3
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும் – 5.திருநின்ற:1 349/3
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர் – 5.திருநின்ற:1 400/2
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி – 5.திருநின்ற:1 427/3
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் – 5.திருநின்ற:7 27/3
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞான திரு மொழியால் – 6.வம்பறா:1 74/4
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞான
பொறை அணி முகிலே புகலியர் புகலே பொரு பொன்னி – 6.வம்பறா:1 92/1,2
சென்று அணைந்த தாதையர் சிவபாதஇருதயர் தாம் தெய்வ ஞான
கன்றினை முன் புக்கு எடுத்து பியலின் மேல் கொண்டு களிகூர்ந்து செல்ல – 6.வம்பறா:1 94/3,4
கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞான கொண்டலார்-தாம் – 6.வம்பறா:1 108/4
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/4
ஞான போனகர் மகிழ்ந்தார் நான்_மறையோர் அதிசயித்தார் – 6.வம்பறா:1 135/4
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
போத ஞான புகலி புனிதரை – 6.வம்பறா:1 209/1
அரு ஞான செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து – 6.வம்பறா:1 411/3
நம் மல துயர் தீர்க்க வந்து அருளிய ஞான
செம்மலார் திருவாவடுதுறையினை சேர்ந்தார் – 6.வம்பறா:1 417/3,4
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞான பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் – 6.வம்பறா:1 562/3
நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி – 6.வம்பறா:1 645/3
ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப – 6.வம்பறா:1 652/4
ஞான போனகர் எதிர்தொழுது எழுந்த நல் தவத்து – 6.வம்பறா:1 672/1
ஞான ஆர் அமுதம் உண்டார் நல் தவ திருவை நோக்கி – 6.வம்பறா:1 760/1
மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும் – 6.வம்பறா:1 854/1
புத்தர் இனம் புடைசூழ புத்தநந்தி பொருவு_இல் ஞான புனிதர் திரு முன்பு ஊதும் – 6.வம்பறா:1 907/1
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞான கடல் அமுதம் அனையவர்-தம் காதல் அன்பர் – 6.வம்பறா:1 921/2
தூக்கின் தமிழ் விரகர் சொல்_இறந்த ஞான மறை – 6.வம்பறா:1 941/3
வள்ளத்தில் ஞான ஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பல முறையும் வணங்குகின்றார் – 6.வம்பறா:1 1023/4
ஞான போனகம் நுகர்ந்ததும் நால் நிலம் உய்ய – 6.வம்பறா:1 1037/2
ஞான போனகர் பின் சமண் பாட்டினை நவில்வார் – 6.வம்பறா:1 1089/4
மேவிய ஞான தலைவர் விரிஞ்சன் முதல் எவ்வுயிர்க்கும் – 6.வம்பறா:1 1118/2
எல்லை_இல் ஞான தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் – 6.வம்பறா:1 1136/1
திரு வளர் ஞான தலைவர் திருமணம் செய்து அருளுதற்கு – 6.வம்பறா:1 1155/3
நாட்டு மறை முறை ஒழுக்கம் ஞான போனகருக்கும் – 6.வம்பறா:1 1156/1
ஞான போனகருக்கு நல் தவத்தின் ஒழுக்கத்தால் – 6.வம்பறா:1 1166/1
ஓங்கிய ஞான வெள்ளம் உள் நிறைந்து எழுவது என்ன – 6.வம்பறா:1 1228/2
நந்து நம்பாண்டார் நம்பி ஞான போனகர் பொன் பாதம் – 6.வம்பறா:1 1233/2
ஞான மெய் நெறி-தான் யார்க்கும் நமச்சிவாய அ சொலாம் என்று – 6.வம்பறா:1 1248/1
நலம் சிறந்த ஞான யோக கிரியா சரியை எலாம் – 6.வம்பறா:3 28/1
செறியும் ஞான போனகர் வந்து அருளும் புகலி சென்று இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 61/3
ஞான பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன் – 7.வார்கொண்ட:4 113/3
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள் – 10.கடல்:3 3/2
ஞான சார்வாம் வெண் நாவல் உடனே கூட நலம் சிறக்க – 12.மன்னிய:4 13/3

மேல்


ஞானசம்பந்த (1)

பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர் – 5.திருநின்ற:1 234/2

மேல்


ஞானசம்பந்தர் (22)

தாவு_இல் தனி சிவ ஞானசம்பந்தர் ஆயினார் – 6.வம்பறா:1 69/4
இசை வளர் ஞானசம்பந்தர் எய்தினார் – 6.வம்பறா:1 240/3
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக – 6.வம்பறா:1 268/3
ஞாலத்து உயர் காழியாரை பாடினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 277/4
எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்-தம் கோயில் – 6.வம்பறா:1 296/4
நல் தமிழ்_மாலை புனைந்து அருளி ஞானசம்பந்தர் புலன்கள் ஐந்தும் – 6.வம்பறா:1 343/3
பெரு ஞானசம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார் – 6.வம்பறா:1 411/4
நச்சி இன் தமிழ் பாடிய ஞானசம்பந்தர்
இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் – 6.வம்பறா:1 426/1,2
மெய்த்திரு ஞானசம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே – 6.வம்பறா:1 495/1
நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்தி – 6.வம்பறா:1 552/2
ஞானசம்பந்தர் தம்-பால் நன்மை அல்லாது செய்யும் – 6.வம்பறா:1 696/3
ஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரமும் செல்ல – 6.வம்பறா:1 721/2
ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என்றான் – 6.வம்பறா:1 772/4
ஞானசம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார் – 6.வம்பறா:1 802/2
முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர் – 6.வம்பறா:1 824/4
ஞானசம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்க – 6.வம்பறா:1 859/3
நல் நெறி அமைச்சனாரும் ஞானசம்பந்தர் செய்ய – 6.வம்பறா:1 864/2
ஞானசம்பந்தர் பாதம் நாள்-தொறும் பணிந்து போற்ற – 6.வம்பறா:1 872/2
நாவின் வாய்மையில் போற்றினார் ஞானசம்பந்தர் – 6.வம்பறா:1 1078/4
புரந்த ஞானசம்பந்தர் தாம் புன் நெறி சமய – 6.வம்பறா:1 1189/2
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை – 6.வம்பறா:1 1236/1
வாழி ஞானசம்பந்தர் வந்து அருளிய வளப்பினது அளப்பு_இல்லா – 7.வார்கொண்ட:5 1/2

மேல்


ஞானசம்பந்தரும் (2)

ஞானசம்பந்தரும் நாயனார் சடை – 6.வம்பறா:1 244/1
வென்றி ஞானசம்பந்தரும் விருப்பொடு வணங்கி – 6.வம்பறா:1 430/3

மேல்


ஞானசம்பந்தரை (1)

கோது_இலாதவர் ஞானசம்பந்தரை எதிர்கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 155/4

மேல்


ஞானசம்பந்தன் (3)

ஞானசம்பந்தன் நம்-பால் அணைகின்றான் – 6.வம்பறா:1 197/1
உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத – 6.வம்பறா:1 221/4
தாரணி உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என்று – 6.வம்பறா:1 1220/4

மேல்


ஞானசம்பர் (1)

திரு மலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார் – 6.வம்பறா:1 127/4

மேல்


ஞானத்தின் (1)

ஞானத்தின் திரு உருவை நான்_மறையின் தனி துணையை – 6.வம்பறா:1 728/1

மேல்


ஞானத்து (9)

உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை – 5.திருநின்ற:4 52/1
அங்கு எதிர்நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 88/4
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து
ஆழிய கடலே அதனிடை அமுதே அடியார் முன் – 6.வம்பறா:1 91/1,2
உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனி கூத்தும் – 6.வம்பறா:1 160/2
வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பு_இல் ஞானத்து அமுது உண்ட – 6.வம்பறா:1 268/2
அரும் தமிழ்_மாலை புனைந்தார் அளவு_இல் ஞானத்து அமுது உண்டார் – 6.வம்பறா:1 295/4
அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார் – 6.வம்பறா:1 648/4
உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேரின்ப முத்தி பெற்றான் – 6.வம்பறா:1 915/3
அம் பொன் மலை_கொடி முலையாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1018/1

மேல்


ஞானத்துடனாம் (1)

தாங்கிய ஞானத்துடனாம் அந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டன வேல் தலைவன்-தானும் – 6.வம்பறா:1 917/2

மேல்


ஞானபோனகர் (3)

ஞானபோனகர் நம்பர்-தம் கோயிலை நண்ணி அங்கு உள் புக்கு – 6.வம்பறா:1 182/3
நாடு உய்ய புகலி வரு ஞானபோனகர் வந்து நண்ணினார் என்று – 6.வம்பறா:1 300/2
ஞானபோனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் – 6.வம்பறா:1 382/1

மேல்


ஞானபோனகர்க்கு (1)

நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும் – 5.திருநின்ற:1 293/3

மேல்


ஞானம் (47)

ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி – 3.இலை:5 28/1
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம்பொன் வள்ளத்தில் – 4.மும்மை:2 11/2
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த – 5.திருநின்ற:1 177/3
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த – 5.திருநின்ற:1 183/1
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள் – 5.திருநின்ற:1 241/3
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை – 5.திருநின்ற:1 271/3
நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் – 6.வம்பறா:1 47/3
ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த – 6.வம்பறா:1 65/3
பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/2,3
உவமை இலா கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ்ஞானம் – 6.வம்பறா:1 70/3
நாதர் கழல் தம் முடி மேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 113/4
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட – 6.வம்பறா:1 117/1
ஒப்பு_அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார் – 6.வம்பறா:1 126/4
மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவி போற்றி – 6.வம்பறா:1 130/2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம்
குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வர கண்டு – 6.வம்பறா:1 150/1,2
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்தருளும் அ நலம் கண்டு – 6.வம்பறா:1 151/1
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு – 6.வம்பறா:1 468/2
ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார் – 6.வம்பறா:1 489/4
அரசர் அருளி செய்த வாய்மை அப்பொழுதே அருள் ஞானம் உண்ட – 6.வம்பறா:1 496/1
படி இல் ஞானம் உண்டு அருளிய பிள்ளையை பணிதற்கு – 6.வம்பறா:1 501/1
வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை – 6.வம்பறா:1 643/3
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி – 6.வம்பறா:1 685/2
மேய வேணியர்-பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கில் – 6.வம்பறா:1 720/3
ஞானம் உண்டவர் இட்ட ஏடு இசைத்த நாழிகையில் – 6.வம்பறா:1 789/2
நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லார் என்பார் – 6.வம்பறா:1 807/3
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 843/4
ஞானம் ஈசன்-பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 843/4
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம்
மலரும் திருவாக்கு உடை வள்ளலார் உள்ள வண்ணம் – 6.வம்பறா:1 845/1,2
மலை_மகள் குழைத்த ஞானம் உண்டவர்-தம்-பால் வந்தார் – 6.வம்பறா:1 851/4
நண்பு உடை ஞானம் உண்டார் மடத்து தீ நாடி இட்ட – 6.வம்பறா:1 855/3
ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப்பரங்குன்றை நண்ணினாரே – 6.வம்பறா:1 884/4
ஒப்பு_அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகு உய்ய ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 891/4
நம்பர்-அவர்-தமை வணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல் தொண்டருடன் இழிந்து – 6.வம்பறா:1 899/3
நின்ற உரு வேதனையே குறிப்பு செய்கை நேர் நின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் – 6.வம்பறா:1 916/3
சென்னி மதி அணிந்தவர்-தம் திருவேற்காடு சென்று அணைந்தார் திரு ஞானம் உண்ட செல்வர் – 6.வம்பறா:1 1029/4
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகு உய்ய உலவாத ஞானம் உண்டார் – 6.வம்பறா:1 1032/4
தூய ஞானம் உண்டு அருளிய தோன்றலார் அணைந்து – 6.வம்பறா:1 1050/2
பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில் – 6.வம்பறா:1 1235/1
உள்ளுணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை – 6.வம்பறா:2 409/3
ஞானம் முதல் நான்கு மலர் நல் திருமந்திர மாலை – 6.வம்பறா:3 26/2
நல் ஞானம் அடைவதற்கு பல வழியும் நாடுவார் – 7.வார்கொண்ட:1 3/2
ஞானம் உண்டவர் புண்டரீக கழல் அருச்சனை நலம் பெற்று – 7.வார்கொண்ட:5 6/2
நாரணற்கும் நான்_முகற்கும் அறிய ஒண்ணா நாதனை எம்பெருமானை ஞானம் ஆன – 11.பத்தராய்:5 3/1
பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம்பொன் திரு முடி மேல் – 12.மன்னிய:4 3/2
யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் – 12.மன்னிய:5 10/2
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1

மேல்


ஞானமும் (2)

பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு – 6.வம்பறா:1 224/3
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி – 6.வம்பறா:1 498/2

மேல்


ஞானமே (2)

ஞானமே முதலாம் நான்கும் நவை அற தெரிந்து மிக்கார் – 2.தில்லை:1 7/1
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/3

மேல்


ஞானியார்-பால் (1)

ஏதம் இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்-பால்
தீது அகன்று உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் – 1.திருமலை:5 3/3,4

மேல்