சூ – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூகரமும் 1
சூட்டி 3
சூட்டிய 1
சூட்டின் 1
சூட்டினார் 1
சூட்டினான் 1
சூட்டு 1
சூட்டும் 2
சூட்டோம் 1
சூட 1
சூடி 11
சூடிய 7
சூடியை 1
சூடினார் 4
சூடு 4
சூடுகின்ற 1
சூடும் 8
சூடுவனவும் 1
சூடுவார் 1
சூத்திர 3
சூத்திரத்தை 1
சூத்திரமும் 1
சூத 7
சூதம் 3
சூதர் 2
சூதராம் 1
சூதால் 3
சூதினால் 1
சூதினில் 1
சூது 4
சூதும் 1
சூர் 2
சூர்_அரமகளிர் 1
சூராட்டி 1
சூரியர் 1
சூல் 2
சூல 9
சூலத்தர் 1
சூலபாணியனார் 1
சூலம் 4
சூலை 20
சூலை-தன்னை 2
சூலையினால் 1
சூலையினுக்கு 1
சூலையும் 2
சூழ் 173
சூழ்க 1
சூழ்ச்சி 2
சூழ்ச்சியால் 1
சூழ்ச்சியும் 1
சூழ்ந்த 42
சூழ்ந்தது 2
சூழ்ந்ததே 1
சூழ்ந்தார் 2
சூழ்ந்தால் 1
சூழ்ந்திட 2
சூழ்ந்து 51
சூழ்பு 1
சூழ்வ 2
சூழ்வது 1
சூழ்வன 6
சூழ்வார் 5
சூழ 55
சூழல் 13
சூழலில் 1
சூழும் 35
சூழும்-ஆல் 1
சூளாமணி 1
சூளாமணியார் 2
சூளாமணியாருடன் 1
சூளாமணியை 1
சூளி 1
சூளிகை 1
சூளுற 1
சூளுறவு 1
சூறை 1

சூகரமும் (1)

சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் – 6.வம்பறா:1 996/3

மேல்


சூட்டி (3)

விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த – 3.இலை:3 18/3
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான் – 3.இலை:3 109/3
நம்பன்-தன் அருளே வாழ்த்தி நல் எழில் விளங்க சூட்டி
அம் பொன் செய் தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார் – 6.வம்பறா:1 1223/3,4

மேல்


சூட்டிய (1)

சூட்டிய வளர் புலி சோழர் காவிரி – 1.திருமலை:2 1/3

மேல்


சூட்டின் (1)

அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் – 1.திருமலை:2 23/1

மேல்


சூட்டினார் (1)

துண்ட மதி சேர் சடை கொன்றை மாலை வாங்கி சூட்டினார் – 4.மும்மை:6 56/4

மேல்


சூட்டினான் (1)

சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான் – 5.திருநின்ற:1 195/4

மேல்


சூட்டு (1)

செம்பொன் செய் வாசி சூட்டு திரு மணி புனை பூண் செல்வ – 6.வம்பறா:1 1223/1

மேல்


சூட்டும் (2)

மன்னர் பெருமான் அநபாயன் வரும் தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அ ஊர் – 4.மும்மை:6 8/3,4
தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் – 6.வம்பறா:1 244/2

மேல்


சூட்டோம் (1)

தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றி சூட்டோம் முடி என்று – 7.வார்கொண்ட:6 4/3

மேல்


சூட (1)

பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட – 7.வார்கொண்ட:3 34/4

மேல்


சூடி (11)

பித்தா பிறை சூடி என பெரிதாம் திருப்பதிகம் – 1.திருமலை:5 74/3
அவன் மலர் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று – 2.தில்லை:3 27/2
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால் – 2.தில்லை:6 8/2,3
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும் – 3.இலை:1 57/2,3
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார் – 3.இலை:3 37/1,2
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/3,4
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து – 3.இலை:3 48/1
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய் – 5.திருநின்ற:1 410/1
சோதியார் அறிதல் அன்றி துணிவது என் அவர் தாள் சூடி
தீதினை நீக்கல் உற்றேன் சிறப்புலியாரை செப்பி – 7.வார்கொண்ட:1 18/3,4
மை தீர் நெறியின் முடி சூடி அருளும் மரபால் வந்தது என – 7.வார்கொண்ட:4 12/3
ஆழி வேந்தன் ஆம் வருணனுக்கு அளித்திட அவனும் அ அருள் சூடி
ஊழியில் தனி ஒருவர்-தம் திருவஞ்சைக்களத்தில் உய்த்து உணர்வித்தான் – 13.வெள்ளானை:1 51/3,4

மேல்


சூடிய (7)

அந்தி வான் மதி சூடிய அண்ணல் தாள் – 1.திருமலை:1 17/1
திங்கள் சூடிய முடி சிகரத்து உச்சியில் – 1.திருமலை:2 5/1
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவு_இலாதது ஓர் உளம் நிறை அருளால் – 2.தில்லை:3 3/1
தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திரு பிரமபுரம் சார செல்லும் போது – 6.வம்பறா:1 256/4
ஆறு சூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் – 6.வம்பறா:1 1042/1
திங்கள் சூடிய செல்வர் மேவும் திரு புறம் பயம் சேரவே – 6.வம்பறா:2 96/4
சூடிய அஞ்சலியினராய் தொழுது புறம் போந்து அன்பு – 6.வம்பறா:2 289/3

மேல்


சூடியை (1)

திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே – 5.திருநின்ற:6 32/3

மேல்


சூடினார் (4)

சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் – 6.வம்பறா:1 227/1
சூடினார் மெய் முகிழ்த்தார் சூகரமும் அன்னமுமாய் – 6.வம்பறா:1 996/3
ஆறு சூடினார் திருமகனார் அணைந்தார் என்று – 6.வம்பறா:1 1074/3
ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார் – 6.வம்பறா:1 1182/4

மேல்


சூடு (4)

சூடு தம் கரங்கள் அஞ்சலி கொண்டு தொழும்-தொறும் புறவிடை கொண்டு – 1.திருமலை:5 109/2
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/2
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/2
சூடு மதி கண்ணியார் துணை மலர் சேவடி பாடி – 6.வம்பறா:1 1000/2

மேல்


சூடுகின்ற (1)

சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அரு_மறை தொடர்ந்து ஏத்த – 6.வம்பறா:1 158/3

மேல்


சூடும் (8)

சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் – 4.மும்மை:1 43/2
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து – 5.திருநின்ற:1 282/3
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய் – 5.திருநின்ற:1 330/3
துறை அலை கங்கை சூடும் அரத்துறை – 6.வம்பறா:1 188/3
பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார் – 6.வம்பறா:1 302/4
சூடும் கர தலத்து அஞ்சலி கோலி தொழுது நின்றார் – 6.வம்பறா:1 341/4
திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்ய சிறப்பின் மிக்க – 6.வம்பறா:1 571/3
மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார்-தமை அமுது செய்வித்தல் – 6.வம்பறா:1 1087/1,2

மேல்


சூடுவனவும் (1)

உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக – 4.மும்மை:6 56/2

மேல்


சூடுவார் (1)

அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமை திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்து உளார் – 2.தில்லை:4 1/1,2

மேல்


சூத்திர (3)

நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல் குலம் செய் தவத்தினால் – 2.தில்லை:4 1/3
கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3
தொன்மை நீடிய சூத்திர தொல் குல – 9.கறை:4 6/2

மேல்


சூத்திரத்தை (1)

கண் கவர் கோவை பத்தி கதிர் கடி சூத்திரத்தை
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/2,3

மேல்


சூத்திரமும் (1)

ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும் – 3.இலை:5 24/1,2

மேல்


சூத (7)

சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் – 1.திருமலை:2 29/1
நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் – 1.திருமலை:5 93/1
தூங்கு தீம் கனி சூத நீள் வேலிய சோலை – 4.மும்மை:5 27/4
சூத மாதவியே புறம் சூழ்வன – 4.மும்மை:5 106/4
சூத நிகழ் மங்கல வினை துழனி பொங்க – 6.வம்பறா:1 35/3
சூத நல் வினை மங்கல தொழில் முறை தொடங்கி – 6.வம்பறா:1 1043/1
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/3

மேல்


சூதம் (3)

சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு – 5.திருநின்ற:1 315/2
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1
சூதம் பயிலும் பொழில் அம்பரில் தூய வாய்மை – 6.வம்பறா:6 1/1

மேல்


சூதர் (2)

பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒரு-பால் பாங்கர் – 1.திருமலை:3 21/1
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நால்_நிலத்தில் – 6.வம்பறா:5 9/4

மேல்


சூதராம் (1)

நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கி – 6.வம்பறா:5 12/3

மேல்


சூதால் (3)

தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நல் சூதால்
பொங்கும் பொருள் ஆக்கவும் அங்கு பொருவார் இன்மை இனில் போவார் – 6.வம்பறா:5 6/3,4
கற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர் – 6.வம்பறா:5 7/3
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி – 6.வம்பறா:5 9/3

மேல்


சூதினால் (1)

வல்லார்கள்-தமை வென்று சூதினால் வந்த பொருள் – 6.வம்பறா:5 12/1

மேல்


சூதினில் (1)

சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில் – 6.வம்பறா:5 10/1

மேல்


சூது (4)

உருளாய சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர் – 6.வம்பறா:5 8/3
முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ள – 6.வம்பறா:5 9/1
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கி – 6.வம்பறா:5 9/2
சூது ஆரும் துணை முலையார் மணி வாய்க்கு தோற்று இரவு – 7.வார்கொண்ட:4 120/3

மேல்


சூதும் (1)

தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும்
பங்கய முகையும் சாய்த்து பணைத்து எழுந்து அணியில் மிக்க – 1.திருமலை:5 21/2,3

மேல்


சூர் (2)

சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/2

மேல்


சூர்_அரமகளிர் (1)

துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட – 3.இலை:3 39/2

மேல்


சூராட்டி (1)

மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1

மேல்


சூரியர் (1)

வந்து சந்திர சூரியர் மீது வழி கொள்ளாத தன் மருங்கு போதலினால் – 4.மும்மை:5 74/2

மேல்


சூல் (2)

சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும் – 4.மும்மை:5 26/2

மேல்


சூல (9)

வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் – 5.திருநின்ற:1 300/4
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை – 5.திருநின்ற:1 350/1
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி – 6.வம்பறா:1 685/2
தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2
அடல் ஆர் சூல படையார்-தமை பாடி அடி வணங்கி – 6.வம்பறா:2 152/3
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண் – 7.வார்கொண்ட:3 43/2
துன்னார் முளைகள் தோள் வலியால் வென்று சூல படையார்-தம் – 7.வார்கொண்ட:6 1/1
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி – 8.பொய்:3 2/3

மேல்


சூலத்தர் (1)

வடி கொள் சூலத்தர் மன்னிய பொன் மதில் ஆரூர் – 6.வம்பறா:1 501/3

மேல்


சூலபாணியனார் (1)

தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும் – 5.திருநின்ற:4 55/2

மேல்


சூலம் (4)

சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த – 5.திருநின்ற:1 152/4
அ திருப்பதி அன்று போய் அணி கிளர் சூலம்
கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி – 6.வம்பறா:1 440/1,2
வயங்கு ஒலி மூ_இலை சூலம் மணி திரு தோள் மிசை பொலிய – 7.வார்கொண்ட:3 34/2
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடி சூலம் வெயில் எறிப்ப – 7.வார்கொண்ட:3 35/2

மேல்


சூலை (20)

அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி – 5.திருநின்ற:1 48/4
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை – 5.திருநின்ற:1 49/2
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால் – 5.திருநின்ற:1 49/4
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார் – 5.திருநின்ற:1 52/2,3
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு – 5.திருநின்ற:1 55/1
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை – 5.திருநின்ற:1 57/1
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர – 5.திருநின்ற:1 62/1
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது – 5.திருநின்ற:1 63/3
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான் – 5.திருநின்ற:1 71/1
தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய் – 5.திருநின்ற:1 80/1,2
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு – 5.திருநின்ற:1 83/2
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள் – 5.திருநின்ற:1 181/1
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று – 5.திருநின்ற:1 318/2
ஆதியார் ஏவும் சூலை அனல் செய் வேல் குடைவது என்ன – 6.வம்பறா:2 390/2
வந்து உனை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்க்கில் அன்றி – 6.வம்பறா:2 391/3
இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை
வம்பு என ஆண்டுகொண்டான் ஒருவனே தீர்ப்பான் வந்து – 6.வம்பறா:2 392/3,4
இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை
சென்று நீ தீர்ப்பாய் ஆக என்று அருள்செய சிந்தையோடு – 6.வம்பறா:2 394/2,3
திண்ணிய சூலை தீர்க்க வரும் திறம் செப்பிவிட்டார் – 6.வம்பறா:2 395/4
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் – 6.வம்பறா:2 396/3
ஊன வெம் சூலை நீங்கி உடன் இருப்பதனுக்கு என்றார் – 6.வம்பறா:2 401/4

மேல்


சூலை-தன்னை (2)

வாடுறும் சூலை-தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால் – 6.வம்பறா:2 389/4
பற்றி நின்று என்னை நீங்கா பாதக சூலை-தன்னை
உற்ற இ வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள்-தன்னால் – 6.வம்பறா:2 397/2,3

மேல்


சூலையினால் (1)

அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த – 5.திருநின்ற:5 16/3

மேல்


சூலையினுக்கு (1)

இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார் – 5.திருநின்ற:1 73/4

மேல்


சூலையும் (2)

நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட – 6.வம்பறா:2 396/1
செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே – 6.வம்பறா:2 397/4

மேல்


சூழ் (173)

பனி விசும்பில் அமரர் பணிந்து சூழ்
அனித கோடி அணி முடி மாலையும் – 1.திருமலை:1 5/1,2
கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
சூத பாடலங்கள் எங்கும் சூழ் வழை ஞாழல் எங்கும் – 1.திருமலை:2 29/1
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/4
தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும் – 1.திருமலை:2 33/4
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ்
மூது எயில் திரு வாயில் முன் ஆயது – 1.திருமலை:4 1/3,4
ஆலும் மறை சூழ் கயிலையின் கண் அருள்செய்த – 1.திருமலை:5 28/1
கண்ணிடை கரந்த கதிர் வெண் படம் என சூழ்
புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்த – 1.திருமலை:5 29/1,2
வரி வளர் பூம் சோலை சூழ் மடத்தின்-கண் வன் தொண்டர் – 1.திருமலை:5 84/1
நாக சூத வகுளம் சரளம் சூழ் நாளிகேரம் இவங்கம் நரந்தம் – 1.திருமலை:5 93/1
திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் – 1.திருமலை:5 104/4
பெருக்கு ஓதம் சூழ் புறவ பெரும் பதியை வணங்கி போய் – 1.திருமலை:5 114/3
கான் ஆர்க்கும் மலர் தடம் சூழ் காவிரியின் கரை அணைந்தார் – 1.திருமலை:5 115/4
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/4
கோதை சூழ் அளக பார குழை கொடி ஆட மீது – 2.தில்லை:5 8/2
பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் – 2.தில்லை:6 6/1
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன – 3.இலை:2 18/3
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ்
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி – 3.இலை:3 61/3,4
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின் – 3.இலை:3 100/1
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு – 3.இலை:3 132/2
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம் – 3.இலை:5 10/1
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி – 3.இலை:7 4/3
ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள் – 3.இலை:7 19/3
கான கடி சூழ் வடுக கருநாடர் காவல் – 4.மும்மை:1 11/1
கந்த பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான் – 4.மும்மை:1 12/4
திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆலவாயின் – 4.மும்மை:1 32/3
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு – 4.மும்மை:1 34/3
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/2
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர் – 4.மும்மை:1 38/2,3
முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதி – 4.மும்மை:1 49/3
நனை மருவும் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில் – 4.மும்மை:4 3/1
வாளை போத்து எழும் பழனம் சூழ் தில்லை மருங்கு அணைவார் – 4.மும்மை:4 22/4
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலை புக்கார் – 4.மும்மை:4 24/2
அரு_மறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க – 4.மும்மை:4 34/3
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் – 4.மும்மை:5 12/4
பேறு வேறு சூழ் இமையவர் அரம்பையர் பிறந்து – 4.மும்மை:5 13/1
ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும் – 4.மும்மை:5 13/3
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ – 4.மும்மை:5 14/4
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம் – 4.மும்மை:5 20/1
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் – 4.மும்மை:5 32/4
தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது – 4.மும்மை:5 37/4
மெய் தரும் புகழ் திரு மயிலாபுரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலா – 4.மும்மை:5 40/1,2
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/3
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
ஞாயில் எங்கணும் சூழ் முகில் நாள் மதி – 4.மும்மை:5 105/2
தோய் இல் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குல குழாம் – 4.மும்மை:5 105/3,4
ஓது கிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் – 4.மும்மை:6 3/2
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கி உள தொடங்கு சடங்கு முடித்து ஏறும் – 4.மும்மை:6 6/3
மடையில் கழுநீர் செழு நீர் சூழ் வயலில் சாலி கதிர் கற்றை – 4.மும்மை:6 7/1
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் – 4.மும்மை:6 27/2
மூள அமர்ந்த நய பாடு முதிர்ந்த பற்று முற்ற சூழ்
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் – 4.மும்மை:6 36/3,4
தொடுத்த இதழி சூழ் சடையார் துணை தாள் நிழல் கீழ் விழுந்தவரை – 4.மும்மை:6 54/1
சொல்லார் மறைகள் துதி செய்ய சூழ் பல்லியங்கள் எழ சைவ – 4.மும்மை:6 57/3
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய – 5.திருநின்ற:1 9/1
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி – 5.திருநின்ற:1 91/3
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் – 5.திருநின்ற:1 107/4
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை – 5.திருநின்ற:1 144/2
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ்
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் – 5.திருநின்ற:1 157/3,4
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும் – 5.திருநின்ற:1 159/3
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார் – 5.திருநின்ற:1 161/4
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும் – 5.திருநின்ற:1 170/2
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து – 5.திருநின்ற:1 224/1
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி – 5.திருநின்ற:1 240/2
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள் – 5.திருநின்ற:1 263/2
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின் – 5.திருநின்ற:1 264/1
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார் – 5.திருநின்ற:1 315/4
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 5.திருநின்ற:1 317/4
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி – 5.திருநின்ற:1 410/2
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே – 5.திருநின்ற:1 412/3
பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி – 5.திருநின்ற:1 413/1
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன – 5.திருநின்ற:4 39/2
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் – 5.திருநின்ற:4 66/3
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை – 5.திருநின்ற:5 45/3
காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு – 5.திருநின்ற:6 1/2
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி – 5.திருநின்ற:6 10/2
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல் – 5.திருநின்ற:7 6/2
வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்கும்-ஆல் – 6.வம்பறா:1 4/4
தொடு குடுமி நாசி-தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் – 6.வம்பறா:1 12/2
செழும் தரள பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் – 6.வம்பறா:1 112/1
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்-தம் திருச்சாய்க்காட்டு – 6.வம்பறா:1 121/3
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/3
நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆர் அமுது உண்டார் – 6.வம்பறா:1 147/4
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்வி – 6.வம்பறா:1 152/1
நெருங்கு தில்லை சூழ் நெடு மதில் தென் திரு வாயில் நேர் அணித்து ஆக – 6.வம்பறா:1 153/4
பூம் கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்-கண் – 6.வம்பறா:1 169/4
நெருங்கு சோலை சூழ் இ பதி அடியேன் பதி என நெடிது இன்புற்று – 6.வம்பறா:1 178/3
மொய் கொள் மா மணி கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று – 6.வம்பறா:1 181/1
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் – 6.வம்பறா:1 216/1
சொல் தொடை பாடி அங்கு அகன்று சூழ் மதில் – 6.வம்பறா:1 251/3
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/2
பொங்கர் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்து உள்ள தானங்கள் எல்லாம் போற்றி – 6.வம்பறா:1 323/3
துளி தலை மேல் அறுகு பனி தொடுத்து அசைய சூழ் பனியால் – 6.வம்பறா:1 329/3
தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ்
பழுது_இல் சீர் திரு வெண்ணி பதியினில் – 6.வம்பறா:1 358/3,4
மொய் தரும் சோலை சூழ் முளரி முள் அடவி போய் – 6.வம்பறா:1 361/1
மன்றல் அம் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் – 6.வம்பறா:1 366/1
இலங்கு நீர் பொன்னி சூழ் திரு பதியினில் இருந்து – 6.வம்பறா:1 383/2
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 420/2
ஆதி மா மறை விதியினால் ஆறு சூழ் வேணி – 6.வம்பறா:1 429/1
திரை தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் – 6.வம்பறா:1 436/1
வாவி சூழ் திரு மயிலாடுதுறையினில் வந்தார் – 6.வம்பறா:1 437/4
கொடி மதில் சூழ் தருமபுரம் குறுகினார் குண்டர் சாக்கியர்-தம் கொள்கை – 6.வம்பறா:1 443/3
பங்கய பாசடை தடம் சூழ் பழன நாட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி – 6.வம்பறா:1 454/1
பொன்னி வளம் தரு நாட்டு புறம்பணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றி – 6.வம்பறா:1 459/2
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர் நல்ல – 6.வம்பறா:1 480/1
புண்டரிக தடம் சூழ் பழன பூம்புகலூர் தொழ போதுகின்றார் – 6.வம்பறா:1 487/4
பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார் – 6.வம்பறா:1 493/4
துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின் – 6.வம்பறா:1 498/1
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் – 6.வம்பறா:1 504/1
பிரச மென் மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் – 6.வம்பறா:1 506/2
மாடு சூழ் திரு மாளிகை வலம்கொண்டு வணங்கி – 6.வம்பறா:1 510/1
மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து – 6.வம்பறா:1 512/3
ஏழ் இசை சூழ் மறை எய்த ஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டு புக்கார் – 6.வம்பறா:1 551/4
கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4
சூழ் இருள் குழுக்கள் போல தொடை மயில் பீலியோடு – 6.வம்பறா:1 601/3
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி – 6.வம்பறா:1 622/1
கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடி குழகர்-தமை – 6.வம்பறா:1 622/3
ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி – 6.வம்பறா:1 661/3
மாடு சூழ் வலம்கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார் – 6.வம்பறா:1 664/4
பூ அலர் பொழில் சூழ் சண்பை புரவலர் போதுகின்றார் – 6.வம்பறா:1 736/4
பொன் தட மதில் சூழ் சண்பை புரவலர் வரவு கூற – 6.வம்பறா:1 746/2
பொன்னி வளம் தரு நாட்டு புனல் பழன புறம் பணை சூழ்
கன்னி மதில் கழுமலம் நாம் கருதும் ஊர் என சிறந்த – 6.வம்பறா:1 754/1,2
அன்பு சூழ் சண்பை ஆண்தகையார் அவர் – 6.வம்பறா:1 827/4
அலரும் விரை சூழ் பொழில் காழியுள் ஆதி ஞானம் – 6.வம்பறா:1 845/1
மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ் மணி நீள் வாயில் – 6.வம்பறா:1 888/2
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ்
விண் பின் ஆக முன் ஓங்கும் வியன் பொன் புரிசை வலம்கொண்டு – 6.வம்பறா:1 975/2,3
மாது_ஓர்_பாகர்-தாம் மன்னும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் – 6.வம்பறா:1 985/4
தென் திசையில் கயிலை எனும் திருக்காளத்தி போற்றி இனிது அமர்கின்றார் திரை சூழ் வேலை – 6.வம்பறா:1 1028/1
காரின் மல்கிய சோலை சூழ் கழுமல தலைவர் – 6.வம்பறா:1 1065/2
காயல் சூழ் கரை கடல் மயிலாபுரி நோக்கி – 6.வம்பறா:1 1073/3
சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி – 6.வம்பறா:1 1075/2
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/4
பாங்கு சூழ் தொண்டர் ஆனோர் அரகர என்ன பார் மேல் – 6.வம்பறா:1 1092/3
வாமமே கலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோம வல்லி – 6.வம்பறா:1 1104/4
கார் கெழு சோலை சூழ் காழி மன்னவர் – 6.வம்பறா:1 1112/2
வம்பு அணிந்த நீள் மாலை சூழ் மருங்குற அமைத்த – 6.வம்பறா:1 1185/2
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர்-பால் கோல – 6.வம்பறா:1 1200/1
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் – 6.வம்பறா:2 2/1
வாவி சூழ் தில்லை மூதூர் வழி கொள்வான் வணங்கி போந்தார் – 6.வம்பறா:2 110/4
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
இன்று இங்கு எய்தப்பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார் – 6.வம்பறா:2 184/4
சந்த விரை சூழ் புயம் சேர்ந்த பரிசு தெரிய சாற்றுவாம் – 6.வம்பறா:2 206/4
தண் ஆர் தடம் சூழ் அ நகரில் தங்கி புரிவீர் தவம் என்று – 6.வம்பறா:2 218/4
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4
சீத மலர் பூ மண்டபத்து திரை சூழ் ஒரு-பால் சென்று இருந்து – 6.வம்பறா:2 222/4
பங்கய பூம் தடம் பணை சூழ் பழையனூர் உழை எய்தி – 6.வம்பறா:2 282/2
அற்புத கூத்து ஆடுகின்ற அம்பலம் சூழ் திரு வீதி – 6.வம்பறா:3 6/3
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து குளம் சூழ் கரைபடுத்து – 6.வம்பறா:4 24/3
ஆலை சூழ் பூக வேலி அ திரு ஆக்கூர்-தன்னில் – 7.வார்கொண்ட:2 3/1
சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான் – 7.வார்கொண்ட:4 4/2,3
நீரின் மலிந்த கடல் அகழி நெடு மால் வரையின் கொடி மதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம்-அதனில் செங்கோல் பொறையன் எனும் – 7.வார்கொண்ட:4 10/1,2
நம்பும் உரிமையவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம்கொள்வார் – 7.வார்கொண்ட:4 17/3
கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2
செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் – 7.வார்கொண்ட:4 172/4
நிலை மலிந்த மணி மாடம் நீள் மறுகு நான்_மறை சூழ்
கலை மலிந்த புகழ் காழி கணநாதர் திறம் உரைப்பாம் – 7.வார்கொண்ட:4 175/3,4
காதல் பெருமை தொண்டின் நிலை கடல் சூழ் வையம் காத்து அளித்து – 7.வார்கொண்ட:6 8/1
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி – 8.பொய்:2 12/1,2
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப – 8.பொய்:2 17/2
கடி சூழ் அரண கணவாய் நிரவி – 8.பொய்:2 27/2
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர் – 8.பொய்:2 31/2
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த – 8.பொய்:4 2/2,3
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் – 8.பொய்:4 10/3
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண் – 8.பொய்:8 4/1
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார் – 8.பொய்:8 7/4
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி – 9.கறை:2 4/1
பொன் மதில் சூழ் புகலி காவலர் அடி கீழ் புனிதராம் – 9.கறை:3 10/1
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என – 10.கடல்:3 2/3
கூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கி – 12.மன்னிய:1 8/2
பாய கங்கை சூழ் நெடும் சடை பரமரை பண்டு தாம் பிரிந்து எய்தும் – 13.வெள்ளானை:1 28/3
தேன் அலம்பு தண் சோலை சூழ் மகோதையில் திருவஞ்சைக்களம் சேர – 13.வெள்ளானை:1 32/3
நார வேலை சூழ் உலகினில் விளங்கிட நாட்டினர் நலத்தாலே – 13.வெள்ளானை:1 52/4

மேல்


சூழ்க (1)

சூழ்க என்றது தொல் உயிர் யாவையும் – 6.வம்பறா:1 823/3

மேல்


சூழ்ச்சி (2)

சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர் – 5.திருநின்ற:1 122/3
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே – 5.திருநின்ற:5 13/3

மேல்


சூழ்ச்சியால் (1)

சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால்
மன்னும் தம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் – 6.வம்பறா:1 777/2,3

மேல்


சூழ்ச்சியும் (1)

சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் – 6.வம்பறா:1 680/2

மேல்


சூழ்ந்த (42)

சூழ்ந்த பல் வேறு இடத்தது அ தொல் நகர் – 1.திருமலை:3 11/4
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை – 1.திருமலை:5 16/2,3
தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றி சூதும் – 1.திருமலை:5 21/2
அண்ணல் ஆடு திரு அம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி – 1.திருமலை:5 102/4
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார் – 1.திருமலை:5 163/4
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு – 3.இலை:3 1/4
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர் – 3.இலை:3 2/2
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும் – 3.இலை:3 2/4
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி – 3.இலை:3 25/3,4
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல் – 3.இலை:5 11/3
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திரு பரப்பையும் உடைய அ திரை கடல் வரைப்பு – 4.மும்மை:5 39/3,4
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ – 4.மும்மை:5 86/3
துங்க அமரர் துதி செய்ய சூழ்ந்த ஒளியில் தோன்றினார் – 4.மும்மை:6 55/4
புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார் – 5.திருநின்ற:1 155/4
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும் – 5.திருநின்ற:1 176/2,3
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும் – 5.திருநின்ற:1 200/1
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார் – 5.திருநின்ற:1 216/4
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும் – 5.திருநின்ற:1 319/3
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் – 6.வம்பறா:1 130/1
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3
பூ கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து – 6.வம்பறா:1 275/2
ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை_இல் இன்பமுற்றார் – 6.வம்பறா:1 346/4
செம் கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திரு கண்டியூர் தொழ சென்று அணைந்தார் – 6.வம்பறா:1 351/4
கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார் – 6.வம்பறா:1 408/4
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவு_இல் திருத்தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப – 6.வம்பறா:1 483/1
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த
கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர் கோபுரத்தை தாழ்ந்து இறைஞ்சி குறுகி புக்கு – 6.வம்பறா:1 579/1,2
பல் மணி முரசம் சூழ்ந்த பல்லியம் இயம்ப பின்னே – 6.வம்பறா:1 811/1
சேறு அணிந்த வயல் பழன கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்து அருளும் செல்வர் செம் கண் – 6.வம்பறா:1 885/3
அ நகரில் இனிது அமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்-தம் கோயில் தாழ்ந்து – 6.வம்பறா:1 893/1
பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார்-தமை சூழ்ந்த
நெருகின் இடையவர் காணா வகை நிலத்து பணிந்து உள்ளம் – 6.வம்பறா:1 933/2,3
சூழ்ந்த இசை திருப்பதிக சொல்_மாலை வினா உரையால் – 6.வம்பறா:1 1123/3
கோதை சூழ்ந்த குழலாரை குறங்கின் வைத்து கொண்டு இருந்து – 6.வம்பறா:2 40/1
தேன் ஆரும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர்கொள்பாடியினை எய்த செல்வார் – 6.வம்பறா:2 120/4
சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை காஞ்சி நகர் – 6.வம்பறா:2 189/3
அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர் – 6.வம்பறா:2 292/4
முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப – 6.வம்பறா:2 376/1
தூ மலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்த தாமும் – 6.வம்பறா:2 379/3
சேனை வீரர் புடை பரந்து செல்வது அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வ போலும் காட்சி மேவினது-ஆல் – 7.வார்கொண்ட:4 48/3,4
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு – 8.பொய்:2 6/4
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில் – 8.பொய்:5 1/3
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4

மேல்


சூழ்ந்தது (2)

பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் – 4.மும்மை:5 31/4
துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மணமேற்குடி – 5.திருநின்ற:2 1/3,4

மேல்


சூழ்ந்ததே (1)

இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/3

மேல்


சூழ்ந்தார் (2)

ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார் – 3.இலை:3 37/4
அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்த யாமம் பணி மடங்கி – 6.வம்பறா:2 322/1

மேல்


சூழ்ந்தால் (1)

வண் காஞ்சி அல்குல் மலை_வல்லி காக்க வளர் கருணை கடல் உலகம் சூழ்ந்தால் மானும் – 4.மும்மை:5 86/4

மேல்


சூழ்ந்திட (2)

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திட
சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட – 1.திருமலை:3 15/1,2
சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட
செற்றம் நீக்கிய செம்மையின் மெய் மனு – 1.திருமலை:3 15/2,3

மேல்


சூழ்ந்து (51)

துங்க மா தவர் சூழ்ந்து இருந்தார் எலாம் – 1.திருமலை:1 16/3
ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்து சூழ்ந்து
பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்ல – 1.திருமலை:5 65/2,3
மன் பெரும் திரு மா மறை வண்டு சூழ்ந்து
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை – 1.திருமலை:5 191/1,2
காரின் மேவிய களி அளி மலர் பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து – 2.தில்லை:7 1/2,3
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் – 3.இலை:1 5/2
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர் – 3.இலை:2 1/3,4
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே – 3.இலை:2 10/3
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான் – 3.இலை:3 101/3,4
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய – 3.இலை:5 34/1
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட – 3.இலை:6 1/2
திங்கள் குடை கீழ் உரிமை செயல் சூழ்ந்து செய்வார் – 4.மும்மை:1 37/4
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற – 4.மும்மை:1 48/1
கழி புனல் கடல் ஓதம் முன் சூழ்ந்து கொண்டு அணிய – 4.மும்மை:5 36/1
துன்னு பல் உயிர் வானவர் முதலா சூழ்ந்து உடன் செல காஞ்சியில் அணைய – 4.மும்மை:5 55/1
துங்க அமரர் திரு முனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத – 4.மும்மை:6 19/3
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு – 5.திருநின்ற:1 39/3
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண் – 5.திருநின்ற:1 61/2,3
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி – 5.திருநின்ற:1 91/2,3
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை – 5.திருநின்ற:1 92/1,2
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில் – 5.திருநின்ற:1 117/3
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே – 5.திருநின்ற:1 139/4
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி – 5.திருநின்ற:1 202/2
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி – 5.திருநின்ற:1 322/2,3
துப்புரவு இல்லார் துணிவு துகளாக சூழ்ந்து எழுந்தார் – 6.வம்பறா:1 71/4
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத்தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து
தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே – 6.வம்பறா:1 95/1,2
அங்கு அவர்-தம் தோளின் மிசை எழுந்தருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் – 6.வம்பறா:1 106/3
போதுவார்-தம்மை சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் – 6.வம்பறா:1 116/3
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 119/1
பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற – 6.வம்பறா:1 164/3
பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புற முன்றில் – 6.வம்பறா:1 175/4
தொண்டரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து – 6.வம்பறா:1 202/3
துங்க நீள் விமானத்தை சூழ்ந்து வந்து முன் – 6.வம்பறா:1 236/3
தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் – 6.வம்பறா:1 239/2
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல்_இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை – 6.வம்பறா:1 259/2
துங்க நிலை கோபுரத்தை இறைஞ்சி புக்கு சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் – 6.வம்பறா:1 260/3
கொள்ளாற்றில் எதிர்கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணைய குறுகி கங்கை – 6.வம்பறா:1 455/2
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து
மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் – 6.வம்பறா:1 662/2,3
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
துள்ளி எழும் அநேகராய் சூழ்ந்து பதறி கதற – 6.வம்பறா:1 757/3
சூழ்ந்து மிடைந்த கருணையும் தொண்டர் எல்லாம் அது கண்டு – 6.வம்பறா:1 937/1
தொண்டர் சூழ்ந்து உடன் புறப்பட தொடர்ந்து எழும் தாதையார்க்கு உரை செய்வார் – 6.வம்பறா:1 960/4
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப – 6.வம்பறா:1 1053/1
பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூம் துகில் சூழ்ந்து
பன்னு தூவியின் பஞ்சணை விரை பள்ளி அதன் மேல் – 6.வம்பறா:1 1067/2,3
மாடு சூழ்ந்து காண்பதற்கு வந்து எய்தியே மலிய – 6.வம்பறா:1 1084/3
மணி கிளர் காஞ்சி சூழ்ந்து வனப்பு உடை அல்குல் ஆகி – 6.வம்பறா:1 1105/3
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து
பொங்கு பேர் ஒலி முழக்குடன் எழுந்தது புணரி – 6.வம்பறா:1 1192/3,4
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4
வண்டு உலா மலர் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண் பாக்கம் – 6.வம்பறா:2 278/3
செறிவுறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல – 6.வம்பறா:2 361/3

மேல்


சூழ்பு (1)

சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் – 5.திருநின்ற:3 1/1

மேல்


சூழ்வ (2)

வரும் கரு முகிலோ சூழ்வ மாடமும் காவும் எங்கும் – 1.திருமலை:2 27/4
புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் – 6.வம்பறா:1 4/3

மேல்


சூழ்வது (1)

பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என – 7.வார்கொண்ட:3 31/2

மேல்


சூழ்வன (6)

சூத மாதவியே புறம் சூழ்வன – 4.மும்மை:5 106/4
தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு – 6.வம்பறா:1 503/2
இஞ்சி சூழ்வன எந்திர பந்தி சூழ் ஞாயில் – 6.வம்பறா:2 2/1
மஞ்சு சூழ்வன வரை என உயர் மணி மாடம் – 6.வம்பறா:2 2/2
நஞ்சு சூழ்வன நயனியர் நளின மெல் அடி செம் – 6.வம்பறா:2 2/3
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு – 6.வம்பறா:2 2/4

மேல்


சூழ்வார் (5)

துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார் – 2.தில்லை:3 13/4
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார் – 5.திருநின்ற:5 28/4
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார்
ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணி தாம் – 6.வம்பறா:1 756/2,3
தொடர்ந்த செய்வினை தனித்தனி தொழிலராய் சூழ்வார் – 6.வம்பறா:1 1060/4
மருவீர் உரிவை புனைந்தவர்-தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் – 6.வம்பறா:2 336/2

மேல்


சூழ (55)

சுத்த யோகிகள் சூழ இருந்துழி – 1.திருமலை:1 15/4
மங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழ
கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவு தோளான் – 1.திருமலை:3 20/2,3
பொங்கிய தானை சூழ தேர் மிசை பொலிந்து போந்தான் – 1.திருமலை:3 20/4
அளவு_இல் தேர் தானை சூழ அரசு உலாம் தெருவில் போங்கால் – 1.திருமலை:3 31/2
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ – 1.திருமலை:5 137/1
பாங்கியர் மருங்கு சூழ படர் ஒளி மறுகு சூழ
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ – 1.திருமலை:5 137/1,2
தேன் கமழ் குழலின் வாசம் திசை எலாம் சென்று சூழ
ஓங்கு பூங்கோயில் உள்ளார் ஒருவரை அன்பினோடும் – 1.திருமலை:5 137/2,3
சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி – 1.திருமலை:5 139/2
மிக்க பூம் பிடகை கொள்வோர் விரை அடைப்பையோர் சூழ
மை கரும் கண்ணினார்கள் மறுக நீள் மறுகில் வந்தார் – 1.திருமலை:5 187/3,4
நலம் கிளர் நீழல் சூழ நான்_மறை முனிவரோடும் – 1.திருமலை:5 188/3
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ
பூ அலர் தார் கோவலனார் நிரை காக்க புறம் போந்தார் – 3.இலை:7 18/3,4
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம்கொண்டார் – 4.மும்மை:4 31/4
அந்தம்_இல் சீர் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு அன்றி அடை களங்கம் அறுப்பர் என்று அறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மா கடலும் போலும் மலர் கிடங்கு-மாதோ – 4.மும்மை:5 87/3,4
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு – 5.திருநின்ற:1 223/3
தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் – 5.திருநின்ற:4 42/4
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் – 5.திருநின்ற:5 18/4
செப்பும் ஒலி வளர் பூக செழும் சோலை புறம் சூழ
ஒப்பு_இல் நகர் ஓங்குதலால் உக கடை நாள் அன்றியே – 6.வம்பறா:1 3/2,3
சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும் – 6.வம்பறா:1 48/1
துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ – 6.வம்பறா:1 87/4
திரு பெருகு பெரும் கோயில் சூழ வலம்கொண்டு அருளி திரு முன் நின்றே – 6.வம்பறா:1 107/1
பத்தராம் அடியார் சூழ பரமர் கோயிலை சூழ் வந்து – 6.வம்பறா:1 125/3
முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ
புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து – 6.வம்பறா:1 145/2,3
பல்கு தொண்டர்-தம் குழாத்தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழ
செல் கதி பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தர கண்டு – 6.வம்பறா:1 147/1,2
எல்லை நீங்கி உள் புகுந்து இரு மருங்கும் நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ
மல்லல் ஆவண மறுகிடை கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கை – 6.வம்பறா:1 156/2,3
வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ
ஈறு_இல் புகழ் சண்பை ஆளியார்-தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச – 6.வம்பறா:1 348/2,3
தன்னில் எழுந்தருளினார் சைவ சிகாமணியார் மெய் தவத்தோர் சூழ – 6.வம்பறா:1 459/4
வைத்து அன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்தருளி வந்தார் – 6.வம்பறா:1 478/4
ஞான வித்தகர் மெய் தவர் சூழ அ நகரார் – 6.வம்பறா:1 508/2
பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழா திருத்தொண்டர் சூழ
உரவு தமிழ்_தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரசரோடும் – 6.வம்பறா:1 561/2,3
தம் பரிசனங்கள் சூழ தனி தடையோடும் சென்று – 6.வம்பறா:1 647/3
துன்னு மெய் தொண்டர் சூழ வந்து அருளும் அப்பொழுது – 6.வம்பறா:1 674/4
மின் இடை மடவார் சூழ வேல் படை அமைச்சனாரும் – 6.வம்பறா:1 725/3
மேதகு கோலத்தோடும் விருப்புறு தொண்டர் சூழ
மூது எயில் கபாடம் நீடு முதல் திரு வாயில் சார்ந்தார் – 6.வம்பறா:1 741/3,4
மலர் தலை உலகின் மிக்கார் வந்து அதிசயத்து சூழ
இலகு வேல் தென்னன் மேனி வலம் இடம் எய்தி நீடும் – 6.வம்பறா:1 767/2,3
தெருள் உடை தொண்டர் சூழ திருத்தொண்டின் உண்மை நோக்கி – 6.வம்பறா:1 870/3
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ – 6.வம்பறா:1 892/3
கருதி அருளி காழி நகர் சூழ வந்தார் கண்_நுதலான் திருத்தொண்டர் பலரும் சூழ
மதி நிலவு குலவேந்தன் போற்றி செல்ல மந்திரியார் மதி மணமேற்குடியில் வந்தார் – 6.வம்பறா:1 892/3,4
ஆற்றவும் அங்கு அருள் பெற்று போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ
நால் திசையும் பரவும் திருநள்ளாறு எய்தி நாடு உடை நாயகர் கோயில் நண்ணினாரே – 6.வம்பறா:1 901/3,4
செற்றம் மிகு உள்ளத்து புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர் குழாம் சூழ சென்று – 6.வம்பறா:1 906/3
நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் – 6.வம்பறா:1 975/2
அம் பொன் மாளிகை புறத்தில் அன்பரோடு சூழ வந்து – 6.வம்பறா:1 993/3
திருத்தொண்டர் பலர் சூழ திருவில்கோலமும் பணிந்து – 6.வம்பறா:1 1005/1
மிக்க பெரும் காதலுடன் தொண்டர் சூழ மென் புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் – 6.வம்பறா:1 1014/1
நீற்றின் அணி கோலத்து தொண்டர் சூழ நெடிது மகிழ்ந்து அ பதியில் நிலவுகின்றார் – 6.வம்பறா:1 1027/4
பழகிய அன்பர் சூழ படர் ஒளி மறுகில் எய்தி – 6.வம்பறா:1 1217/2
இகல் இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை – 6.வம்பறா:1 1231/4
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கி சூழ
அலகு_இல் மெய்ஞ்ஞான தொல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் – 6.வம்பறா:1 1243/1,2
பார் நிலவு கிளை சூழ பன்னிகளோடு உடன் புக்கார் – 6.வம்பறா:1 1250/4
தொழு நீர்மையினில் துதித்து ஏத்தி தொண்டர் சூழ உறையும் நாள் – 6.வம்பறா:2 61/4
அணைந்து திரு கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து – 6.வம்பறா:2 73/1
மெய் தவர் சூழ வலம்கொண்டு முன்பு மேவுவார் தம் எதிர் விளங்க – 6.வம்பறா:2 89/2
கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ
ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலா பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்த – 6.வம்பறா:2 117/1,2
ஈட்டிய தவத்தோர் சூழ அங்கு-நின்று ஏகி அன்பு – 6.வம்பறா:2 122/3
எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார் தாம் – 6.வம்பறா:2 363/2
சேவித்து அணையும் பரிசனங்கள் சூழ திருவாரூர் இறைஞ்சி – 7.வார்கொண்ட:4 84/1

மேல்


சூழல் (13)

பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி – 3.இலை:3 144/1,2
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார் – 3.இலை:5 11/3,4
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச – 3.இலை:7 2/1,2
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள் – 3.இலை:7 11/4
சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்து குளம் தொட்டார் – 4.மும்மை:4 18/3,4
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4
தாய முன் துறை சூழல் சூழ் ஞாழலின் தாது – 4.மும்மை:5 37/4
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல் – 5.திருநின்ற:1 356/3
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் – 5.திருநின்ற:4 31/3
கிடை எங்கும் கலை சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் – 6.வம்பறா:1 13/3
துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற – 6.வம்பறா:1 1095/4
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல்
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர் – 10.கடல்:2 2/3,4
தண் தலை சூழல் சூழ்ந்த நின்ற ஊர் வந்து சார்ந்தான் – 12.மன்னிய:1 11/4

மேல்


சூழலில் (1)

துன்னினான் நந்தனவன சூழலில் – 1.திருமலை:1 22/4

மேல்


சூழும் (35)

மேல் வலம்கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே – 1.திருமலை:2 24/4
தாம் மலங்குகள் தடம் பணை சூழும் தண் மருங்கு தொழுவார்கள்-தம் மும்மை – 1.திருமலை:5 92/3
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை – 1.திருமலை:5 96/2
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும் – 3.இலை:1 3/1
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/1,2
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும் – 3.இலை:1 3/2
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/2,3
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும் – 3.இலை:1 3/3
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ – 3.இலை:1 3/3,4
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ – 3.இலை:1 3/4
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில் – 3.இலை:7 23/3
சூழும் இதழ் பங்கயமாக அ தோட்டின் மேலாள் – 4.மும்மை:1 4/1
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் – 4.மும்மை:1 14/3
சூழும் படை மன்னவன் தோள் இணை காவல் இன்றி – 4.மும்மை:1 28/3
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி – 4.மும்மை:2 1/2
சோதி சூழும் மணி மௌலி சோழர் பொன்னி திரு நாட்டு – 4.மும்மை:2 1/3
போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர் – 4.மும்மை:2 1/4
போது சூழும் தடம் சோலை பொய்கை சூழும் பூம்புகலூர் – 4.மும்மை:2 1/4
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு – 5.திருநின்ற:1 186/1
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி – 5.திருநின்ற:1 221/1
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் – 5.திருநின்ற:1 237/4
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி – 5.திருநின்ற:1 394/2
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை – 6.வம்பறா:1 206/1
மஞ்சு அணி மா மதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி – 6.வம்பறா:1 293/2
கடியாரும் மலர் சோலை மருங்கு சூழும் கவின் மருகன் பெருமானே காவாய் என்றும் – 6.வம்பறா:1 476/4
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் – 6.வம்பறா:1 651/1
சூழும் ஆகிய பரசமயத்திடை தொண்டு – 6.வம்பறா:1 673/3
சூழும் பெரு வேலி ஆனீர் என தொழுதார் – 6.வம்பறா:1 942/4
சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது – 6.வம்பறா:1 1148/2
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல – 6.வம்பறா:1 1197/2
சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம்கொண்டு – 6.வம்பறா:2 187/3
ஆழி சூழும் திரு தோணி அமர்ந்த அம்மான் அருளாலே – 12.மன்னிய:5 10/1

மேல்


சூழும்-ஆல் (1)

தோரணங்களில் தாமமும் சூழும்-ஆல் – 1.திருமலை:3 10/4

மேல்


சூளாமணி (1)

பூசுரர் சூளாமணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் – 12.மன்னிய:2 2/1

மேல்


சூளாமணியார் (2)

அந்தணர் சூளாமணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார் – 6.வம்பறா:1 547/4
அந்தணர் சூளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக – 6.வம்பறா:1 931/1

மேல்


சூளாமணியாருடன் (1)

மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வர வந்தார் – 6.வம்பறா:1 177/4

மேல்


சூளாமணியை (1)

வைதிக சூளாமணியை மா தவத்தோர் பெரு வாழ்வை – 6.வம்பறா:1 873/2

மேல்


சூளி (1)

தொடும் கோபுரங்கள் மாளிகைகள் சூளி குளிர் சாலைகள் தெற்றி – 7.வார்கொண்ட:4 144/2

மேல்


சூளிகை (1)

மாட மாளிகை சூளிகை மண்டபம் – 1.திருமலை:3 4/1

மேல்


சூளுற (1)

நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூளுற கடவன் – 6.வம்பறா:2 251/2

மேல்


சூளுறவு (1)

மை விரவு கண்ணார்-பால் சூளுறவு மறுத்து அதனால் – 6.வம்பறா:2 275/2

மேல்


சூறை (1)

சூறை மாருதம் ஒத்து எதிர் – 8.பொய்:2 22/1

மேல்