சு – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுட்ட 2
சுட்டி 4
சுட 1
சுடர் 100
சுடர்க்கு 1
சுடர 1
சுடராம் 1
சுடராய் 1
சுடருக்கு 1
சுடரும் 3
சுடரை 4
சுடு 1
சுண்ண 3
சுண்ணத்தால் 1
சுண்ணம் 8
சுண்ணமும் 3
சுண்ணமொடு 1
சுணங்கனை 1
சுத்த 2
சுத்தி 1
சுதை 4
சுதையும் 2
சுந்தர 8
சுபதேவன் 2
சும்மையும் 1
சுமத்தி 1
சுமந்த 1
சுமந்து 11
சுமந்தோர் 1
சுரங்கள் 1
சுரங்களும் 1
சுரத்தில் 1
சுரத்து 2
சுரத்தை 1
சுரந்து 7
சுரநதி 2
சுரபி 1
சுரபிகள் 1
சுரபியின் 1
சுரம் 5
சுரமகளிர் 1
சுரமும் 4
சுரமே 1
சுரர் 4
சுரர்கள் 2
சுரர்களும் 1
சுரி 5
சுரிகை 4
சுரிகை-தனை 2
சுரிகைப்படைசத்தி 1
சுரிகையால் 1
சுரிகையும் 3
சுரிகையை 1
சுருக்கி 1
சுருக்கும் 2
சுருக்கொண்டு 1
சுருங்க 1
சுருங்கவும் 1
சுருங்கி 1
சுருங்கிட 1
சுருங்குதல் 1
சுருங்கை 1
சுருண்டு 1
சுருதி 12
சுருதிகள் 1
சுருதிகளில் 1
சுருதிகளின் 1
சுருதியின் 3
சுருதியே 1
சுரும்பின் 2
சுரும்பு 31
சுரும்பும் 1
சுரும்பொடு 1
சுருள் 10
சுருளில் 1
சுருளின் 1
சுருளும் 1
சுரை 1
சுலவி 1
சுலவிய 1
சுலவிற்று 1
சுலவு 3
சுலவும் 1
சுவட்டு 2
சுவடு 1
சுவடும் 3
சுவல் 1
சுவை 13
சுவைகள் 1
சுவையால் 1
சுவையில் 2
சுவையின் 1
சுவையும் 2
சுழல் 2
சுழல்வன 2
சுழலிடை 1
சுழலும் 1
சுழி 2
சுழித்து 1
சுழியத்துடன் 1
சுழியம் 2
சுழியல் 2
சுழியில் 2
சுழியும் 1
சுழியை 1
சுழிவுற்று 1
சுழிவுறேல் 1
சுளித்து 1
சுளை 2
சுற்ற 2
சுற்றத்தார் 9
சுற்றத்தார்-பால் 1
சுற்றத்தார்க்கு 1
சுற்றத்தாரும் 9
சுற்றத்தாரை 2
சுற்றத்து 2
சுற்றத்தை 1
சுற்றத்தொடும் 4
சுற்றத்தோடு 1
சுற்றத்தோர் 1
சுற்றம் 26
சுற்றமுடன் 1
சுற்றமும் 5
சுற்றமொடும் 1
சுற்றாரும் 1
சுற்றி 5
சுற்றிட 1
சுற்றிய 4
சுற்றில் 1
சுற்றினில் 1
சுற்று 7
சுற்றும் 5
சுறவ 1
சுனை 2

சுட்ட (2)

ஏலா வகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த – 6.வம்பறா:1 842/3
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


சுட்டி (4)

ஐம் படை சதங்கை சாத்தி அணி மணி சுட்டி சாத்தி – 1.திருமலை:5 4/3
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி – 3.இலை:3 20/2
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1

மேல்


சுட (1)

உணர் கதுவி சுட வல்லவாறு போல தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான் – 6.வம்பறா:1 922/4

மேல்


சுடர் (100)

மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
மீது எழு பண்டை செம் சுடர் இன்று வெண் சுடர் ஆனது என்று அதன் கீழ் – 1.திருமலை:1 8/3
சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/3
சோதி மா மணி நீள் சுடர் முன்றில் சூழ் – 1.திருமலை:4 1/3
ஆடு தோகை புடை நாசிகள்-தோறும் அரணி தந்த சுடர் ஆகுதி-தோறும் – 1.திருமலை:5 101/1
சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி – 1.திருமலை:5 184/3
எரி சுடர் வாளில் கூறாய் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார் – 2.தில்லை:3 17/4
சோதி வெண் கொடிகள் ஆடும் சுடர் நெடு மறுகில் போகி – 2.தில்லை:5 8/3
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர் – 3.இலை:1 2/4
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி – 3.இலை:1 23/3
தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின் – 3.இலை:1 32/1
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன் – 3.இலை:1 43/1
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி – 3.இலை:2 23/3
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் – 3.இலை:2 33/1
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3
பொருப்பில் எழும் சுடர் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான் – 3.இலை:3 138/1
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள் – 3.இலை:3 140/2
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார் – 3.இலை:7 9/2
சூழும் வினையால் அரவம் சுடர் திங்களோடும் – 4.மும்மை:1 14/3
சூழ் பொன் சுடர் மா மணி மாநிலம் தோய முன்பு – 4.மும்மை:1 34/3
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை – 4.மும்மை:1 37/2
துன்னும் சுடர் வன்னி வளர்த்து துதைந்த நூல் சூழ் – 4.மும்மை:1 38/2
தோகையர்-தம் குழாம் அலைய தூக்கு முத்தின் சுடர் கோவை குளிர் நீர்மை துதைந்த வீதி – 4.மும்மை:5 90/2
அளவு_இல் சுடர் பிழம்பு ஆனார் தம்மை தேடி அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி – 4.மும்மை:5 91/3
தூ மணி பொன் புனை நாள துருத்தி வீசும் சுடர் விடு செம் குங்கும நீர் துவலை தோய்ந்த – 4.மும்மை:5 95/3
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை – 5.திருநின்ற:1 46/1
வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம் – 5.திருநின்ற:1 116/3
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி – 5.திருநின்ற:1 154/1
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி – 5.திருநின்ற:1 163/1
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் – 5.திருநின்ற:1 221/4
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி – 5.திருநின்ற:1 232/2
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன – 5.திருநின்ற:7 3/2
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி – 5.திருநின்ற:7 14/1
விரி சுடர் மா மணி பதணம் மீது எறிந்த திரை வரைகள் – 6.வம்பறா:1 4/2
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1
தூ மணி விளக்கொடு சுடர் குழைகள் மின்ன – 6.வம்பறா:1 36/3
தூய சுடர் தொட்டிலினும் தூங்கு மலர் சயனத்தும் – 6.வம்பறா:1 44/2
தூய முத்தின் சிவிகை சுடர் குடை – 6.வம்பறா:1 210/2
பொங்கு சுடர் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை-நின்றும் – 6.வம்பறா:1 316/2
விரி சுடர் மாளிகை வெஞ்ச மா கூடல் விடையவர்-தம் – 6.வம்பறா:1 338/3
வெள்ளி மால் வரையை நேர் விரி சுடர் கோயிலை – 6.வம்பறா:1 368/1
பொலம் கொள் நீள் சுடர் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார் – 6.வம்பறா:1 380/4
துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயில சுடர் வானில் – 6.வம்பறா:1 388/3
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளி படலை – 6.வம்பறா:1 502/2
கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் – 6.வம்பறா:1 504/2
பன் நெடும் சுடர் படலையின் பரப்பினை பார்த்து – 6.வம்பறா:1 509/3
தூய யானத்தின் மிசை எழுந்தருளுவீர் என்றலும் சுடர் திங்கள் – 6.வம்பறா:1 527/2
வெம் சுடர் பெரும் தீயினில் விழுத்திய ஏடு – 6.வம்பறா:1 788/2
தோன்று காட்சி சுடர் விட்டு உளன் என்பது – 6.வம்பறா:1 835/1
ஆதி சுடர் சோதியை அன்பின் அகத்துள் ஆக்கி – 6.வம்பறா:1 836/2
திருவேற்காடு அமர்ந்த செழும் சுடர் பொன் கோயில் சென்று அணைந்து பணிந்து திருப்பதிகம் பாடி – 6.வம்பறா:1 1030/1
அளவு_இல் அம் சுடர் கொழுந்து என அணையுறும் பருவத்து – 6.வம்பறா:1 1046/3
துங்க நீள் சுடர் கோபுரம் தொழுது புக்கு அருளி – 6.வம்பறா:1 1077/2
மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் – 6.வம்பறா:1 1147/2
துன்று சுடர் தாமங்கள் தூபங்கள் துதைவித்தார் – 6.வம்பறா:1 1175/4
பம்பு நீள் சுடர் மணி விளக்கு ஒளிர் தரும் பரப்பில் – 6.வம்பறா:1 1185/4
செம் சுடர் கதிர் பேரணி அணிந்தன திசைகள் – 6.வம்பறா:1 1190/4
கொண்ட வெண் நிற குரூஉ சுடர் கொண்டல்கள் என்ன – 6.வம்பறா:1 1195/3
நீழல் வெண் சுடர் நித்தில சிவிகை மேற்கொண்டார் – 6.வம்பறா:1 1197/4
தம் சுடர் விமானம் ஏறி தழைத்த ஆதரவினோடு – 6.வம்பறா:1 1204/3
விரி சுடர் பரட்டின் மீது விளங்கு பொன் சரட்டில் கோத்த – 6.வம்பறா:1 1210/3
தண் சுடர் பரிய முத்து தமனிய நாணில் கோத்த – 6.வம்பறா:1 1211/1
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/3
வெண் சுடர் தரள மாலை விரி சுடர் கொடுக்கின் மீது – 6.வம்பறா:1 1211/3
நளிர் கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம் சாத்தி – 6.வம்பறா:1 1212/4
நீள் ஒளி முழங்கை பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தி – 6.வம்பறா:1 1213/3
மேற்பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்ன – 6.வம்பறா:1 1215/2
பாற்படு முத்தின் பார பனி சுடர் திரணை சாத்தி – 6.வம்பறா:1 1215/3
நறை குல மலர் சூழ் மாலை நறும் சுடர் முளை பொன் பாண்டில் – 6.வம்பறா:1 1227/3
மூவுலகு ஒளியால் விம்ம முழு சுடர் தாணு ஆகி – 6.வம்பறா:1 1246/4
பாயின ஒளியால் நீடு பரம் சுடர் தொழுது போற்றி – 6.வம்பறா:1 1247/3
மேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப – 6.வம்பறா:2 34/3
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/3
தூ நாள் வெண் மதி அணிந்த சுடர் கொழுந்தை தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 173/3
ஒண் சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில் – 6.வம்பறா:2 360/4
வெய்ய சுடர் கதிரவனும் மேல் பாலை மலை அணைய – 6.வம்பறா:3 16/1
தூ மலர் சோலை-தோறும் சுடர் தொடு மாடம்-தோறும் – 7.வார்கொண்ட:2 2/1
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர் – 7.வார்கொண்ட:3 28/3
விரி சுடர் செம் பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்
திரு நுதல் மேல் திருநீற்று தனி பொட்டும் திகழ்ந்து இலங்க – 7.வார்கொண்ட:3 28/3,4
தக்க திரு கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க – 7.வார்கொண்ட:3 32/4
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
திரு இராமேச்சரத்து செழும் பவள சுடர் கொழுந்தை – 7.வார்கொண்ட:4 110/1
நிதிகள் எங்கும் முழவின் ஒலி நிலங்கள் எங்கும் பொலம் சுடர் பூ – 7.வார்கொண்ட:4 142/4
தூ நறும் கொன்றை முடியவர் சுடர் நெடும் கயிலை மால் வரை எய்தி – 7.வார்கொண்ட:5 6/3
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய் – 8.பொய்:2 2/2
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால் – 8.பொய்:2 5/3
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன் – 8.பொய்:2 32/3
காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த – 8.பொய்:4 2/3
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால் – 8.பொய்:4 15/2
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப – 8.பொய்:4 16/2
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால் – 8.பொய்:4 17/2
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என – 8.பொய்:6 14/3
உற ஆதி-தனை உணரும் ஒளி விளக்கு சுடர் ஏற்றி – 9.கறை:4 8/2
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி – 10.கடல்:3 4/4
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து – 10.கடல்:5 7/2

மேல்


சுடர்க்கு (1)

இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி – 3.இலை:3 23/3

மேல்


சுடர (1)

தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரை கோவணம் சுடர
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் – 4.மும்மை:6 25/2,3

மேல்


சுடராம் (1)

ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம்
பாரார் பெருமை திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார் – 6.வம்பறா:2 190/3,4

மேல்


சுடராய் (1)

வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி – 6.வம்பறா:1 563/1

மேல்


சுடருக்கு (1)

பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும் – 3.இலை:3 130/3

மேல்


சுடரும் (3)

தொக்க பெருவன் புலக்கான் அடைந்து போகி சூல கபால கரத்து சுடரும் மேனி – 6.வம்பறா:1 1014/2
சோதி மணி மாளிகையின்-கண் சுடரும் பசும்பொன் கால் அமளி – 7.வார்கொண்ட:4 71/1
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை – 8.பொய்:2 4/3

மேல்


சுடரை (4)

திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல் – 5.திருநின்ற:1 406/1
செம் மணி வாரி அருவி தூங்கும் சிராப்பள்ளி மேய செழும் சுடரை
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/1,2
திரு ஏகம்பத்து அமர்ந்த செழும் சுடரை சேவடியில் – 6.வம்பறா:1 999/1
செல்வம் மல்கு திரு பனம்காட்டூரில் செம்பொன் செழும் சுடரை
அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்பு பொழி கண்ணீர் – 6.வம்பறா:2 194/1,2

மேல்


சுடு (1)

பயிலும் சுடு மண் பலகை பல கொணர்வித்து உயரம் பண்ணி தேன் – 6.வம்பறா:2 49/2

மேல்


சுண்ண (3)

சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை – 5.திருநின்ற:1 115/3
தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய் தொழுது ஏத்த – 6.வம்பறா:1 508/3
சுண்ண நிறை பொன் குடம் தீபம் எடுத்து தொழ எழுங்கால் – 6.வம்பறா:2 200/4

மேல்


சுண்ணத்தால் (1)

தூ நறும் பசும் கர்ப்பூர சுண்ணத்தால் வண்ண போது இல் – 1.திருமலை:5 17/1

மேல்


சுண்ணம் (8)

நறை மலர் அறுகு சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி – 1.திருமலை:5 24/2
கோது_இல் பொரி பொன் சுண்ணம் குளிர் தரள மணி பரப்பி – 1.திருமலை:5 121/2
நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி – 6.வம்பறா:1 540/2
புயல் பொழிந்ததாம் என பூவினொடு பொன் சுண்ணம்
இயலும் ஆறு வாழ்த்து எடுத்து இரு மருங்கும் வீசினார் – 6.வம்பறா:1 991/3,4
துங்க நறும் கர்ப்பூர சுண்ணம் இடிப்போர் நெருங்க – 6.வம்பறா:1 1180/3
தூ மலர் செம்பொன் சுண்ணம் தொகு நவ மணியும் வீச – 6.வம்பறா:1 1224/2
பல் மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது – 6.வம்பறா:1 1226/3
காமர் பொன் சுண்ணம் வீசி கமழ் நறும் சாந்து நீவி – 6.வம்பறா:2 379/2

மேல்


சுண்ணமும் (3)

பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும் – 5.திருநின்ற:1 139/3
தோடு மலி நறு மலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவி நிற்பர் – 6.வம்பறா:1 96/3
பூவும் பொரியும் சுண்ணமும் முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார் – 6.வம்பறா:1 974/4

மேல்


சுண்ணமொடு (1)

சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி – 6.வம்பறா:1 37/1

மேல்


சுணங்கனை (1)

ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் – 0.பாயிரம்:1 6/4

மேல்


சுத்த (2)

சுத்த யோகிகள் சூழ இருந்துழி – 1.திருமலை:1 15/4
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீர் அணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உற பிடித்து ஓம நெருப்பில் இட்டு – 11.பத்தராய்:6 3/1,2

மேல்


சுத்தி (1)

இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வர தெறித்த பின்னர் – 11.பத்தராய்:6 5/1

மேல்


சுதை (4)

இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல இலங்கு சுதை தவள மாளிகை நீள் கோட்டு – 4.மும்மை:5 96/1
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார் – 5.திருநின்ற:6 13/4
வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குஉற வெண் சுதை ஒழுக்கும் – 6.வம்பறா:1 10/2
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் – 6.வம்பறா:1 12/1

மேல்


சுதையும் (2)

திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி – 5.திருநின்ற:5 39/2
தூபியும் நட்டு மிக்க சுதையும் நல் வினையும் செய்து – 12.மன்னிய:1 8/1

மேல்


சுந்தர (8)

சுந்தர திருத்தொண்டத்தொகை தமிழ் – 1.திருமலை:4 11/3
சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி – 1.திருமலை:5 184/3
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண – 3.இலை:7 27/4
சுந்தர தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க – 4.மும்மை:4 36/3
சுந்தர பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் – 6.வம்பறா:1 98/3
சுந்தர ஆர் அணங்கின் உடன் தோணியில் வீற்றிருந்தாரை – 6.வம்பறா:1 1154/3
தோள் வளை தரள பைம் பூண் சுந்தர தோள் மேல் சாத்தி – 6.வம்பறா:1 1213/4
சுந்தர பலகை முன் நீர் இடும் என தொண்டர் இட்டார் – 12.மன்னிய:5 6/3

மேல்


சுபதேவன் (2)

தொன்மை தரு சோழர் குலத்து அரசனாம் சுபதேவன்
தன்னுடைய பெருந்தேவி கமலவதி உடன் சார்ந்து – 12.மன்னிய:4 7/1,2
தேவி புதல்வர் பெற்று இறக்க செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும் புதல்வன்-தன்னை வளர்த்து அங்கு மணி மகுடம் – 12.மன்னிய:4 11/1,2

மேல்


சும்மையும் (1)

சோலை வாய் வண்டு இரைத்து எழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்_மறை ஓதையும் – 1.திருமலை:2 18/2,3

மேல்


சுமத்தி (1)

நிரையே ஆளில் சுமத்தி நெடு நிலை மாளிகை போக்கி – 6.வம்பறா:2 138/2

மேல்


சுமந்த (1)

தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி – 3.இலை:3 124/1

மேல்


சுமந்து (11)

பொற்பு உடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
வில் குவளை பவள மலர் மதி பூத்த விரை கொடியோ – 1.திருமலை:5 140/2,3
மேல் எடுத்து சுமந்து ஒல்லை மீண்டனர் – 2.தில்லை:4 18/4
எல்லை_இல் பொருள் சுமந்து அவர் இடஇட கொண்டே – 2.தில்லை:7 38/3
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார் – 3.இலை:3 70/4
துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக – 3.இலை:6 14/3
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர் – 5.திருநின்ற:1 3/2
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை – 5.திருநின்ற:1 13/1
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி – 5.திருநின்ற:4 1/3
மலை வளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி மலர் பிறங்கல் வண்டு இரைப்ப சுமந்து பொங்கி – 6.வம்பறா:1 897/1
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று – 6.வம்பறா:2 105/4
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2

மேல்


சுமந்தோர் (1)

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் வண்ணான் முன்னே வர கண்டார் – 7.வார்கொண்ட:4 17/4

மேல்


சுரங்கள் (1)

அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று – 5.திருநின்ற:1 352/1

மேல்


சுரங்களும் (1)

ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அரு_வரை சுரங்களும் பிறவும் – 6.வம்பறா:2 92/1

மேல்


சுரத்தில் (1)

வெருவுற வேடுவர் பறிக்கும் வெம் சுரத்தில் எத்துக்கு இங்கு – 7.வார்கொண்ட:4 170/3

மேல்


சுரத்து (2)

வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி – 5.திருநின்ற:1 365/4
சென்னி இள மதி அணிந்தார் மருவு திரு இடை சுரத்து
மன்னும் திருத்தொண்டர் குழாம் எதிர்கொள்ள வந்து அருளி – 6.வம்பறா:1 1126/1,2

மேல்


சுரத்தை (1)

செம் கண் விடை கொடியார் தம் இடை சுரத்தை சேர்வுற்றார் – 6.வம்பறா:1 1125/4

மேல்


சுரந்து (7)

உய்யவே சுரந்து அளித்து ஊட்டும் நீரது – 1.திருமலை:2 3/4
மடி சுரந்து பொழி தீம் பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டு – 1.திருமலை:3 48/3
கணைத்து சுரந்து முலை கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் – 4.மும்மை:6 30/4
திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார் – 6.வம்பறா:1 42/4
போதம் முலை சுரந்து அளித்த புண்ணிய தாயாரையும் முன் வணங்கி போற்றி – 6.வம்பறா:1 100/3
முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட – 6.வம்பறா:1 222/3
தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழி-காலை – 6.வம்பறா:1 328/2

மேல்


சுரநதி (2)

துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர் – 4.மும்மை:6 22/2
சூழ்ந்த தொண்டரோடு அ பதி அமர்பவர் சுரநதி முடி மீது – 6.வம்பறா:1 531/2

மேல்


சுரபி (1)

கொள்ளும் சின மால் விடை தேவர் குலம் அன்றோ இ சுரபி குலம் – 4.மும்மை:6 22/4

மேல்


சுரபிகள் (1)

தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமை சுரபிகள் தாம் – 4.மும்மை:6 20/4

மேல்


சுரபியின் (1)

துங்க மாதவன் சுரபியின் திரு முலை சொரி பால் – 4.மும்மை:5 21/1

மேல்


சுரம் (5)

மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார் – 5.திருநின்ற:1 353/4
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார் – 5.திருநின்ற:1 355/4
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார் – 5.திருநின்ற:1 357/1
கார் அமண் வெம் சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர்-தம் தலைவர்-தாமும் – 6.வம்பறா:1 576/1
இருந்த இடை சுரம் மேவும் இவர் வண்ணம் என்னே என்று – 6.வம்பறா:1 1128/1

மேல்


சுரமகளிர் (1)

சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து – 3.இலை:7 33/1

மேல்


சுரமும் (4)

ஆறு சூழ் சடை அண்ணலார் திரு விடை சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி – 4.மும்மை:5 13/3,4
துன்று முரம்பும் கான்ஆறும் உறும் கல் சுரமும் பல கடந்து – 7.வார்கொண்ட:4 51/3
கார் ஊரும் மலை நாடு கடந்து அருளி கல் சுரமும்
நீர் ஊரும் கான் யாறும் நெடும் கானும் பல கழிய – 7.வார்கொண்ட:4 164/2,3
துன்று மணி நீர் கான்ஆறும் உறு கல் சுரமும் கடந்து அருளி – 13.வெள்ளானை:1 15/3

மேல்


சுரமே (1)

ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே – 8.பொய்:2 29/4

மேல்


சுரர் (4)

சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார் – 6.வம்பறா:1 255/4
தொழுது புறம்பு அணைந்து அங்கு-நின்று ஏகி சுரர் பணிவுற்று – 6.வம்பறா:1 342/1
தொழுது பல முறை போற்றி சுரர் குருவுக்கு இளைய முனி – 6.வம்பறா:1 1006/1
சொல் நாம நெறி போற்றி சுரர் நகர் கோன்-தனை கொண்ட – 9.கறை:3 2/3

மேல்


சுரர்கள் (2)

தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை – 4.மும்மை:5 84/1
தொல்லை மறை விதி சடங்கு மறையோர் செய்ய தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற – 6.வம்பறா:1 263/4

மேல்


சுரர்களும் (1)

பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால் – 3.இலை:1 5/2

மேல்


சுரி (5)

சுரி வளை சொரிந்த முத்தின் சுடர் பெரும் பொருப்பு உயர்ப்பார் – 1.திருமலை:2 23/3
துணிவு கொண்டு ஆர்ப்ப மஞ்சு சுரி குழற்கு அழிய விண்ணும் – 1.திருமலை:5 138/3
சொல்லும் அ புனம் காப்பவும் சுரி குழல் தோகை – 4.மும்மை:5 11/4
துங்க வெண் திரை சுரி வளை ஆர்ப்பொடு சூழ்ந்து – 6.வம்பறா:1 1192/3
சுரி வளை நிரைகள் முரன்றன துணைவர்கள் இருவரும் வந்து அணி – 13.வெள்ளானை:1 24/3

மேல்


சுரிகை (4)

வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர் – 3.இலை:2 22/2
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு – 3.இலை:3 54/3
சொல் சூதால் மறுத்தாரை சுரிகை உருவி குத்தி – 6.வம்பறா:5 9/3
பைம்பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் – 7.வார்கொண்ட:4 63/3

மேல்


சுரிகை-தனை (2)

இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி – 3.இலை:3 144/2
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி – 3.இலை:5 30/1

மேல்


சுரிகைப்படைசத்தி (1)

சுரிகைப்படைசத்தி கழுக்கடை வேல் – 8.பொய்:2 26/2

மேல்


சுரிகையால் (1)

முதிரும் அன்பினில் உருவிய சுரிகையால் முறைமுறை உடல் வீழ்ந்தார் – 13.வெள்ளானை:1 37/4

மேல்


சுரிகையும் (3)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க – 2.தில்லை:3 14/1
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4

மேல்


சுரிகையை (1)

மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி – 3.இலை:3 91/3

மேல்


சுருக்கி (1)

நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல் – 3.இலை:7 17/1,2

மேல்


சுருக்கும் (2)

இண்டை சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும் – 4.மும்மை:2 9/2
திரள் பெற சுருக்கும் செச்சை மாலையோ தெரியின் வேறு – 6.வம்பறா:1 1102/2

மேல்


சுருக்கொண்டு (1)

கொணரினும் சுருக்கொண்டு அவை நுண் துகள் ஆக – 6.வம்பறா:1 712/4

மேல்


சுருங்க (1)

வான முறை வழங்காமல் மா நிலத்து வளம் சுருங்க
போனக நெல் படி நிரம்ப எடுப்பதற்கு போதாமை – 6.வம்பறா:2 12/2,3

மேல்


சுருங்கவும் (1)

இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி – 2.தில்லை:4 7/1

மேல்


சுருங்கி (1)

மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும் – 5.திருநின்ற:1 255/2

மேல்


சுருங்கிட (1)

சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு – 3.இலை:3 132/2

மேல்


சுருங்குதல் (1)

மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் – 2.தில்லை:4 7/2

மேல்


சுருங்கை (1)

சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி – 4.மும்மை:5 25/4

மேல்


சுருண்டு (1)

தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி – 7.வார்கொண்ட:3 26/3

மேல்


சுருதி (12)

தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து – 3.இலை:7 14/2
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலரும் திருவாயில் – 4.மும்மை:2 8/2
தூய அன்பொடு தொடர்பினில் இடையறா சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அ தொழில் தலை நின்றார் – 4.மும்மை:3 4/3,4
துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி – 6.வம்பறா:1 83/4
தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசை துறை உள்ளோர் துதித்து மண் மேல் – 6.வம்பறா:1 105/2
சொல் தமிழ்_மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே – 6.வம்பறா:1 141/3
துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் – 6.வம்பறா:1 246/3
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரை – 6.வம்பறா:1 265/1
மா தவம் சுருதி செய்த மா மறைக்காட்டில் விட்டார் – 6.வம்பறா:1 607/4
சூல பாணி-பால் ஞானம் பெற்றான் என்று சுருதி
பாலன் அன்பர்-தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை – 6.வம்பறா:1 685/2,3
துஞ்ச வருவார் என்றே எடுத்த ஓசை சுருதி முறை வழுவாமல் தொடுத்த பாடல் – 6.வம்பறா:1 1010/1
தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி
மண்டு மா மறை குலம் எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே – 6.வம்பறா:1 1188/3,4

மேல்


சுருதிகள் (1)

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை – 6.வம்பறா:1 217/1

மேல்


சுருதிகளில் (1)

தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை – 5.திருநின்ற:1 419/2

மேல்


சுருதிகளின் (1)

தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்ப சுருதிகளின் பெரும் துழனி – 6.வம்பறா:1 395/1

மேல்


சுருதியின் (3)

துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து – 6.வம்பறா:1 92/3
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே – 6.வம்பறா:1 222/1
தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்து பொங்கி – 6.வம்பறா:1 1218/3

மேல்


சுருதியே (1)

தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம் – 5.திருநின்ற:6 11/1

மேல்


சுரும்பின் (2)

காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின்
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/1,2
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2

மேல்


சுரும்பு (31)

சுரும்பு அல்ல குடை நீல துகள் அல்ல பகல் எல்லாம் – 1.திருமலை:2 15/2
சுரும்பு எழ அகிலால் இட்ட தூபமோ யூப வேள்வி – 1.திருமலை:2 27/2
துணர் மலர் கோதை தாம சுரும்பு அணை தோளினானை – 1.திருமலை:5 12/2
மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறை சுரும்பு அறை புரத்தின் மருங்கேம் – 1.திருமலை:5 96/1
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க – 3.இலை:1 28/2
சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள் – 3.இலை:3 9/4
தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி – 3.இலை:3 11/2
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும் – 3.இலை:3 14/3
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற – 3.இலை:7 1/2
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி – 3.இலை:7 6/2
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின் – 3.இலை:7 17/3
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4
பிரச மென் சுரும்பு அறைந்திட கரு வரால் பிறழும் – 4.மும்மை:3 5/2
அங்கண் வான் மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண் முலை கொடிச்சியர் குழல் மூழ்கி போகா – 4.மும்மை:5 12/1,2
சொல்லும் எல்லையின் புறத்தன துணர் சுரும்பு அலைக்கும் – 4.மும்மை:5 16/1
விழிக்கு நெய்தலின் விரை மலர் கண் சுரும்பு உண்ண – 4.மும்மை:5 36/3
தண் காஞ்சி மென் சினை பூம் கொம்பர் ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து – 4.மும்மை:5 86/1
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம் பாளை – 4.மும்மை:6 7/2
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை – 5.திருநின்ற:1 7/3
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம் – 5.திருநின்ற:7 2/3
தேம் மரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடும்-ஆல் – 6.வம்பறா:1 9/4
சுரும்பு ஆர் கமல மலர் துணை பாதம் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 132/2
உலவி முன் பணிந்து எதிர்கொள கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப – 6.வம்பறா:1 149/2
பாங்கு அணி சுரும்பு மொய்த்த பனி மலர் அளக பந்தி – 6.வம்பறா:1 1096/1
அம் சிறை சுரும்பு அறை பொழில் சண்பை ஆண்தகையார் – 6.வம்பறா:1 1190/1
அயிலும் சுரும்பு ஆர் மலர் சிகழி முடி மேல் அணியா உத்தரிய – 6.வம்பறா:2 49/3
கோவா முத்தும் சுரும்பு ஏறா கொழு மென் முகையும் அனையாரை – 6.வம்பறா:2 227/1
பிறை கொள் அருகு நறை இதழி பிணையல் சுரும்பு தொடர உடன் – 6.வம்பறா:2 335/3
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்ப – 7.வார்கொண்ட:3 27/3
தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் – 9.கறை:4 5/2
சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல்உறுகின்றோம் – 12.மன்னிய:5 12/4

மேல்


சுரும்பும் (1)

யாழின் மொழியின் குழல் இன் இசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் – 4.மும்மை:1 4/3,4

மேல்


சுரும்பொடு (1)

தோடு சூழ்வன சுரும்பொடு தமனிய தசும்பு – 6.வம்பறா:1 503/2

மேல்


சுருள் (10)

மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரிய – 1.திருமலை:2 13/1
சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் – 1.திருமலை:2 21/3
சுருள் பெறு மடியை நீக்கி விரித்தனன் தொன்மை நோக்கி – 1.திருமலை:5 58/3
என்று இன்னனவே பலவும் புகலும் இருள் ஆர் அளக சுருள் ஓதியையும் – 1.திருமலை:5 178/1
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க – 3.இலை:3 57/1
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ – 3.இலை:5 13/2
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை – 3.இலை:5 15/3
சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார் – 5.திருநின்ற:1 20/4
உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலைய செந்நின்று – 6.வம்பறா:1 50/2
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேக சுருள் போல் – 7.வார்கொண்ட:3 26/2

மேல்


சுருளில் (1)

வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி – 3.இலை:7 16/1

மேல்


சுருளின் (1)

காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி – 3.இலை:7 15/4

மேல்


சுருளும் (1)

சுருளும் மயிர் நுதல் சுட்டி துணை காதின் மணி குதம்பை – 7.வார்கொண்ட:3 21/1

மேல்


சுரை (1)

பற்றிய பைம் கொடி சுரை மேல் படர்ந்த பழம் கூரை உடை – 4.மும்மை:4 6/3

மேல்


சுலவி (1)

சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர – 5.திருநின்ற:1 62/1

மேல்


சுலவிய (1)

துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல் – 3.இலை:3 90/3

மேல்


சுலவிற்று (1)

இன்று களிற்றின் கரம் சுலவிற்று என்று மீள இழைத்ததனை – 12.மன்னிய:4 4/3

மேல்


சுலவு (3)

படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம் – 3.இலை:5 5/1
சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை – 6.வம்பறா:1 183/3

மேல்


சுலவும் (1)

சோலை எழும் மென் சுரும்பின் ஒலி துரக செருக்கால் சுலவும் ஒலி – 7.வார்கொண்ட:4 2/2

மேல்


சுவட்டு (2)

குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும் குழம்பு அடுத்த செம் பஞ்சின் சுவட்டு கோலம் – 4.மும்மை:5 97/3
மூலம் தான் அறிவு_அரியார் கண் அளித்து முலை சுவட்டு
கோலம் தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து – 6.வம்பறா:2 288/2,3

மேல்


சுவடு (1)

மாது மெய் பயன் கொடுப்பவே கொண்டு வளை தழும்புடன் முலை சுவடு அணிந்தார் – 4.மும்மை:5 66/4

மேல்


சுவடும் (3)

நகில் உழுத சுவடும் வளை தழும்பும் பூண்ட நாயகனார் நான்கு முகற்கு படைக்க நல்கும் – 4.மும்மை:5 93/3
மா மலையாள் முலை சுவடும் வளை தழும்பும் அணிந்த மதி – 6.வம்பறா:2 290/1
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/3

மேல்


சுவல் (1)

சுவல் ஓடுவார் அலைய போவார் பின்பு ஒரு சூழல் – 4.மும்மை:4 18/3

மேல்


சுவை (13)

உண்டி நாலு விதத்தில் ஆறு சுவை திறத்தினில் ஒப்பு இலா – 2.தில்லை:4 4/3
அதிக நன்மையின் அறு சுவை திரு அமுது ஆக்கி – 2.தில்லை:7 18/3
வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து – 3.இலை:3 118/2
தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார் – 3.இலை:3 146/4
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன் – 3.இலை:3 150/3
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி – 5.திருநின்ற:4 21/3
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் – 5.திருநின்ற:4 24/2
உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான் – 5.திருநின்ற:4 26/2
உண்ப மாதுரிய சுவை உலகு உளோர் விரும்ப – 6.வம்பறா:1 385/4
துன்னு நஞ்சு ஒரு-பால் ஆகும் சுவை அமுது ஒரு-பால் ஆகும் – 6.வம்பறா:1 768/3
எண்ணிய நாவே இன் சுவை பெருக இடையறாது இயம்பும் என்றும் இதனை – 6.வம்பறா:2 87/2
சங்கரனார் திருவருள் போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து – 6.வம்பறா:2 162/1
தூய திரு அமுது கனி கன்னல் அறு சுவை கறி நெய் – 7.வார்கொண்ட:3 14/1

மேல்


சுவைகள் (1)

ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி – 3.இலை:4 33/3

மேல்


சுவையால் (1)

தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி – 5.திருநின்ற:5 23/1

மேல்


சுவையில் (2)

மன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்ன – 7.வார்கொண்ட:3 74/2
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும் – 8.பொய்:5 5/2

மேல்


சுவையின் (1)

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்து – 6.வம்பறா:5 4/1

மேல்


சுவையும் (2)

பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இன் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும் – 4.மும்மை:6 9/1,2
தக்க வகையால் அறு சுவையும் தாம் வேண்டியவாறு இனிது அருந்த – 7.வார்கொண்ட:4 76/3

மேல்


சுழல் (2)

நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர் – 3.இலை:3 85/3
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார் – 3.இலை:7 20/4

மேல்


சுழல்வன (2)

படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில் – 3.இலை:2 23/2
சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக – 6.வம்பறா:3 12/2

மேல்


சுழலிடை (1)

அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன் – 3.இலை:3 91/1

மேல்


சுழலும் (1)

கூர் உகிர் மெல் அடி அலகின் குறும் பார்ப்பு குழு சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள் உகிர் நாய் துள்ளு பறழ் – 4.மும்மை:4 7/1,2

மேல்


சுழி (2)

மாலின் உந்தி சுழி மலர்-தன் மேல் வரும் – 1.திருமலை:2 4/1
சுழி கானல் வேணியர்-தம் பதி பலவும் பரவி போய் தோகைமார்-தம் – 6.வம்பறா:1 467/2

மேல்


சுழித்து (1)

வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி – 6.வம்பறா:1 1193/4

மேல்


சுழியத்துடன் (1)

பரு சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார் – 7.வார்கொண்ட:4 111/4

மேல்


சுழியம் (2)

சுந்தர சுழியம் சாத்தி சுடர் மணி கலன்கள் சாத்தி – 1.திருமலை:5 184/3
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3

மேல்


சுழியல் (2)

கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி – 6.வம்பறா:1 886/3
புண்டரிக புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கி போய் – 7.வார்கொண்ட:4 114/2

மேல்


சுழியில் (2)

சுழியில் தரளம் திரை சொரியும் துறை நீர் பொன்னி கடந்து ஏறி – 7.வார்கொண்ட:4 62/2
கரு சுழியில் வீழாமை காப்பாரை கடல் விடத்தின் – 7.வார்கொண்ட:4 111/2

மேல்


சுழியும் (1)

இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர் – 7.வார்கொண்ட:4 111/3

மேல்


சுழியை (1)

சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி – 5.திருநின்ற:1 215/3

மேல்


சுழிவுற்று (1)

ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர – 5.திருநின்ற:6 31/1,2

மேல்


சுழிவுறேல் (1)

துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார் – 6.வம்பறா:1 693/4

மேல்


சுளித்து (1)

அளி குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலர – 6.வம்பறா:1 329/1

மேல்


சுளை (2)

வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய் – 5.திருநின்ற:1 329/3
வருக்கை நெடும் சுளை பொழி தேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் – 9.கறை:1 1/3

மேல்


சுற்ற (2)

மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று – 3.இலை:2 8/2,3
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ – 5.திருநின்ற:1 41/3

மேல்


சுற்றத்தார் (9)

மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து – 3.இலை:2 12/3
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள் – 3.இலை:2 33/1
வரும் அவர்-தம் சுற்றத்தார் வந்து எதிர்கொண்டு அடி வணங்கி வாழ்த்த கண்டு – 6.வம்பறா:1 444/2
சுற்றத்தார் என வந்து தோன்றி என்-பால் துயரம் எலாம் நீங்க அருள்செய்தீர் என்ன – 6.வம்பறா:1 481/2
துறை வாழ சுற்றத்தார் தமக்கு அருளி உடன் படலும் – 6.வம்பறா:1 1159/2
மன்னு பெரும் சுற்றத்தார் எல்லாரும் வந்து ஈண்டி – 6.வம்பறா:1 1172/1
பெற்ற தாதை சுற்றத்தார் பிறை சேர் முடியார் விதியாலே – 6.வம்பறா:2 219/1
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில் – 10.கடல்:5 5/2
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் – 10.கடல்:5 9/2

மேல்


சுற்றத்தார்-பால் (1)

அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப – 5.திருநின்ற:4 46/2

மேல்


சுற்றத்தார்க்கு (1)

பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம் – 10.கடல்:5 7/3

மேல்


சுற்றத்தாரும் (9)

எல்லை_இல் சுற்றத்தாரும் இது என்னாம் என்று செல்ல – 1.திருமலை:5 50/3
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் – 2.தில்லை:3 13/1
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால் – 2.தில்லை:3 13/1,2
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அ சுற்றத்தாரும்
சார்ந்து அவர்-தம் முன் செல்லார் தையலை கொண்டு பெற்றம் – 2.தில்லை:3 20/1,2
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார் – 2.தில்லை:3 35/4
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு – 5.திருநின்ற:4 41/1,2
காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும்
தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார் – 5.திருநின்ற:4 42/3,4
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார் – 5.திருநின்ற:4 48/1
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் – 5.திருநின்ற:4 51/4

மேல்


சுற்றத்தாரை (2)

பரிபவ பட்டு வந்த படர் பெரும் சுற்றத்தாரை
ஒருவரும் எதிர்நில்லாமே ஓடி போய் பிழையும் அன்றேல் – 2.தில்லை:3 17/2,3
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து – 3.இலை:3 55/1

மேல்


சுற்றத்து (2)

நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார் – 5.திருநின்ற:6 25/3,4
சூழ வரும் பெரும் சுற்றத்து தோகையரும் தாதியரும் – 6.வம்பறா:1 48/1

மேல்


சுற்றத்தை (1)

பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி – 3.இலை:4 9/2

மேல்


சுற்றத்தொடும் (4)

தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம் – 3.இலை:2 9/1
செப்ப_அரிய ஆர்வம் மிகு பெரும் சுற்றத்தொடும் சென்றே – 6.வம்பறா:1 1164/3
துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லை பதியோர் இசைவினால் – 6.வம்பறா:2 220/2
ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சி போனார் எயில் சூழ் தம் பதியில் – 6.வம்பறா:2 221/4

மேல்


சுற்றத்தோடு (1)

மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள் – 3.இலை:4 8/4

மேல்


சுற்றத்தோர் (1)

மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன் – 5.திருநின்ற:5 20/1,2

மேல்


சுற்றம் (26)

பரவினர் காப்பு போற்றி பயில் பெரும் சுற்றம் திங்கள் – 1.திருமலை:5 133/1
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி – 2.தில்லை:3 25/2
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப – 3.இலை:5 19/2
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப – 3.இலை:5 20/3
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வு உற்றது மற்று அவன் அன்ன மாலை – 4.மும்மை:1 26/2,3
சுற்றம் விரும்பிய கிழமை தொழில் உழவர் கிளை துவன்றி – 4.மும்மை:4 6/2
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கை தொழிலாள் உலகில் துணை புதல்வர் – 4.மும்மை:6 11/2
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/3
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து – 5.திருநின்ற:1 28/2
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான் – 5.திருநின்ற:4 9/4
களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள் – 5.திருநின்ற:4 11/4
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார் – 5.திருநின்ற:5 19/4
தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்த தானும் மனம் தளர்வு கொள்வான் – 6.வம்பறா:1 311/4
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப – 6.வம்பறா:1 1053/1
சூழும் நெடும் சுற்றம் உடன் தோணிபுரம் தொழுது அணைந்தார் – 6.வம்பறா:1 1153/4
சுற்றம் உறும் பெரும் பாச தொடர்ச்சி விடும் நிலைமையராய் – 6.வம்பறா:1 1157/2
வருவாரும் பெரும் சுற்றம் மகிழ் சிறப்ப மகள்_பேச – 6.வம்பறா:1 1162/3
சுற்றம் முன் சூழ்ந்து போற்ற கொண்டு முன் துன்னினார்கள் – 6.வம்பறா:1 1236/4
சுற்றம் அணைந்து துதி செய்ய தொழுது தம்பிரான் அன்பர் – 6.வம்பறா:2 202/3
அங்கு அவளும் மக்களுடன் அரும் சுற்றம் இல்லாதாள் – 6.வம்பறா:3 18/1
சுற்றம் இயல்பினுக்கு எய்தார் என்று உரைப்ப துயர் எய்தி – 6.வம்பறா:3 21/3
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகம் மலர அளித்தவர்-தாம் – 7.வார்கொண்ட:3 20/1
விரி பொன் சுடர் மாளிகை புக்கு மேவும் உரிமை சுற்றம் எலாம் – 7.வார்கொண்ட:4 32/3
மருவும் உரிமை பெரும் சுற்றம் வரம்பு_இல் பணிகள் வாகனங்கள் – 7.வார்கொண்ட:4 83/3
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார் – 8.பொய்:2 11/4
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய் – 10.கடல்:5 6/4

மேல்


சுற்றமுடன் (1)

சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி – 5.திருநின்ற:1 202/2

மேல்


சுற்றமும் (5)

காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார் – 2.தில்லை:3 10/4
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர் – 2.தில்லை:7 4/4
கரை_இல் சுற்றமும் தாமும் முன் கலங்கினார் கலுழ்ந்தார் – 6.வம்பறா:1 1059/4
ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறி – 6.வம்பறா:1 1062/3
வணிகரும் சுற்றமும் மயங்கி பிள்ளையார் – 6.வம்பறா:1 1115/1

மேல்


சுற்றமொடும் (1)

பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் – 5.திருநின்ற:1 29/4

மேல்


சுற்றாரும் (1)

சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்ட தொகு நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு – 11.பத்தராய்:7 2/2

மேல்


சுற்றி (5)

சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து – 3.இலை:2 29/2
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல் – 3.இலை:3 24/1,2
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி – 3.இலை:3 37/1
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற – 5.திருநின்ற:5 25/1
சுற்றி மிக கதறுவன சுழல்வன மோப்பன ஆக – 6.வம்பறா:3 12/2

மேல்


சுற்றிட (1)

ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா – 5.திருநின்ற:1 111/3

மேல்


சுற்றிய (4)

சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடை நம்பி – 1.திருமலை:5 139/2
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா – 5.திருநின்ற:1 111/2
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல் – 5.திருநின்ற:1 352/3
சுற்றிய அ குலத்து உள்ளார் தொடர்ந்தார்க்கு தொடர்வு இன்மை – 6.வம்பறா:3 24/1

மேல்


சுற்றில் (1)

கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி – 6.வம்பறா:1 391/3

மேல்


சுற்றினில் (1)

திரு மடப்புற சுற்றினில் தீய பாதகத்தோர் – 6.வம்பறா:1 701/1

மேல்


சுற்று (7)

சுற்று நீர் வயல் செல்ல தொடங்குவார் – 2.தில்லை:4 14/4
துங்க நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார் – 4.மும்மை:6 32/4
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிட – 6.வம்பறா:1 193/2
சுற்று மா மறை சுருதியின் பெருகு ஒலி நடுவே – 6.வம்பறா:1 222/1
சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய – 6.வம்பறா:1 534/2
சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் – 6.வம்பறா:1 761/2
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4

மேல்


சுற்றும் (5)

சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திட – 1.திருமலை:3 15/2
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய ஆகும் முழு பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகர்_இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை – 4.மும்மை:5 93/1,2
சுற்றும் அரும் தவரோடும் கோயில் எய்தி சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார் – 6.வம்பறா:1 484/4
சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணை மலர் கண் – 6.வம்பறா:2 50/1
சுற்றும் படை வீரர் துணித்தனரே – 8.பொய்:2 28/4

மேல்


சுறவ (1)

சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழி சூழல் – 4.மும்மை:5 7/4

மேல்


சுனை (2)

மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை – 3.இலை:3 56/3
வம்பு உலாம் மலர் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின் – 4.மும்மை:5 14/2

மேல்