கை – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 206
கை-தன்னில் 1
கை_மலை 1
கை_மா 2
கை_மாவின் 1
கை_மாவை 1
கை_வரைகளும் 1
கை_விளி 1
கைக்கிளையால் 1
கைக்கு 1
கைக்குல 1
கைக்குலம் 1
கைக்கொடு 1
கைக்கொடுத்து 1
கைக்கொண்டார் 2
கைக்கொண்டு 4
கைக்கொள்-மின் 1
கைக்கொள்வார் 1
கைக்கொள்ளும் 1
கைகள் 18
கைகளால் 5
கைகளின் 3
கைகளினால் 1
கைகளும் 2
கைகளோ 1
கைகளோடும் 2
கைகொடு 1
கைகொண்டு 2
கைச்சினமும் 1
கைஞ்ஞீடிய 1
கைத்தல 1
கைத்தலத்திடை 1
கைத்தலத்து 1
கைத்தலம் 2
கைத்தலை 1
கைத்து 2
கைத்தொண்டு 1
கைத்தொழிலின் 1
கைதவ 1
கைதவம் 2
கைதவன் 1
கைதவன்-தன் 1
கைதவனும் 1
கைதை 6
கைதொழ 3
கைதொழுதார் 4
கைதொழுது 29
கைதொழுதே 2
கைதொழும் 3
கைதொழுவார் 3
கைந்நிரை 1
கைப்படுத்த 1
கைப்பற்றி 2
கைப்பிடிக்க 3
கைப்புக்க 1
கைப்பூம் 1
கைம் 8
கைம்மாறு 1
கைம்மிகு 1
கைம்மை 1
கைமிக்கு 1
கையர் 18
கையர்-தம் 1
கையர்கள் 1
கையராய் 1
கையரை 4
கையள் 1
கையறவாம் 1
கையறவால் 3
கையறவினுக்கும் 1
கையறவு 1
கையறு 1
கையன் 1
கையாம் 1
கையார் 3
கையால் 25
கையாளர் 1
கையான் 1
கையில் 32
கையிலும் 1
கையின் 2
கையினராய் 1
கையினால் 4
கையினில் 7
கையினுடன் 1
கையினை 2
கையும் 4
கையேற்கும் 1
கையை 6
கையொடும் 1
கையோடு 1
கைலை 2
கைவகுத்து 1
கைவந்துற 1
கைவரும் 1
கைவலான் 1
கைவளைந்து 1
கைவிட்டார் 3
கைவிட்டு 1
கைவிடுவான் 1
கைவினை 3
கைவினைஞர்-தமை 1
கைவைத்து 1

கை (206)

தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி – 0.பாயிரம்:1 3/3
மள்ளர் குரைத்த கை ஓசை போய் – 1.திருமலை:2 10/3
கை திருத்தொண்டு செய் கடப்பாட்டினார் – 1.திருமலை:4 5/3
முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2
துகில் கொடு குஞ்சி ஈரம் புலர்த்தி தன் தூய செம் கை
உகிர் நுதி முறையில் போக்கி ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான் – 1.திருமலை:5 16/3,4
தண்டு ஒரு கை கொண்டு கழல் தள்ளு நடை கொள்ள – 1.திருமலை:5 31/4
தந்தை-தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்து உண்டாகில் – 1.திருமலை:5 61/2
துன்றிய புளகம் ஆக தொழுத கை தலை மேல் ஆக – 1.திருமலை:5 68/3
கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் – 1.திருமலை:5 88/4
கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சி குவித்த செம் கை தலை மேல் கொண்டு புக்கார் – 1.திருமலை:5 103/4
கண்_நுதலை தொழும் அன்பே கை கொண்டு செல உய்ப்ப – 1.திருமலை:5 145/4
வரன் கை தீண்ட மலர் குல_மாதர் போல் – 1.திருமலை:5 161/2
கை கிடா குரங்கு கோழி சிவல் கவுதாரி பற்றி – 1.திருமலை:5 187/1
கொடி நெடும் கொற்ற வாயில் பணிந்து கை குவித்து புக்கார் – 1.திருமலை:5 190/2
மாலை தாழ் குழல் மா மலையாள் செம் கை
சீலம் ஆக வருட சிவந்தன – 1.திருமலை:5 192/3,4
அம் தளிர் செம் கை பற்றி அலை புனலில் மூழ்காதே – 2.தில்லை:2 30/2
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெரு வலி தட கை வாளின் – 2.தில்லை:3 30/2
அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் என குவித்த செம் கை
கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று – 2.தில்லை:5 11/3,4
கை தலத்து இருந்த வஞ்ச கவளிகை மடி மேல் வைத்து – 2.தில்லை:5 15/1
கை வடி நெடு வாள் ஏந்தி ஆள் உறா கானம் சேர – 2.தில்லை:5 19/3
கொடுத்த கோவணம் கை கொண்டு கோது_இலா அன்பர் – 2.தில்லை:7 15/1
தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர் – 3.இலை:1 24/4
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும் – 3.இலை:2 13/3
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார் – 3.இலை:2 14/4
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன – 3.இலை:2 18/1
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில் – 3.இலை:2 32/3
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு – 3.இலை:2 35/3
கை வாளுடன் பலகை நீக்க கருதி அது – 3.இலை:2 39/1
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி – 3.இலை:2 41/2
மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/4
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே – 3.இலை:3 12/4
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து – 3.இலை:3 43/3
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில் – 3.இலை:3 52/3
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே – 3.இலை:3 53/4
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார் – 3.இலை:3 56/4
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி – 3.இலை:3 60/4
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார் – 3.இலை:3 63/4
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன – 3.இலை:3 67/3
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே – 3.இலை:3 69/1
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான் – 3.இலை:3 73/2
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார் – 3.இலை:3 74/4
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார் – 3.இலை:3 75/4
வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன் – 3.இலை:3 76/1
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம் – 3.இலை:3 77/4
கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் – 3.இலை:3 87/2
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி – 3.இலை:3 91/2
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த – 3.இலை:3 108/1
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி – 3.இலை:3 122/2
சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை – 3.இலை:3 124/3
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில் – 3.இலை:3 134/4
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி – 3.இலை:3 141/3
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும் – 3.இலை:3 181/3
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர் – 3.இலை:3 183/2
காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார் – 3.இலை:4 9/3,4
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார் – 3.இலை:4 20/4
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய – 3.இலை:5 15/3,4
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும் – 3.இலை:5 24/1
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து – 3.இலை:6 12/2
பந்து ஆடிய மங்கையர் பங்கய செம் கை தாங்கும் – 4.மும்மை:1 6/2
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று – 4.மும்மை:1 20/2
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து – 4.மும்மை:1 23/3
கை வேறு கொள் ஈம அரும்_கடன் காலை முற்றி – 4.மும்மை:1 27/2
கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4
கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4
தாது சூழும் குழல் மலையாள் தளிர் கை சூழும் திருமேனி – 4.மும்மை:2 1/1
உள்ளுற புக்கு நின்று கை உச்சி மேல் குவித்து – 4.மும்மை:3 6/2
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட – 4.மும்மை:5 22/2
பரும் கை யானையை உரித்தவர் இருந்த அ பாசூர் – 4.மும்மை:5 32/3
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் – 4.மும்மை:5 48/4
அஞ்சு_எழுத்துமே ஆக ஆளுடைய அம்மை செம் மலர் கை குவித்து அருளி – 4.மும்மை:5 57/2
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டு கை ஏந்தி – 4.மும்மை:5 82/3
கை கொண்டு போய் ஒலித்து கொடுவாரும் கடிது என்றார் – 4.மும்மை:5 119/4
வந்து எழுந்து பிடித்தது அணி வளை தழும்பர் மலர் செம் கை – 4.மும்மை:5 125/4
கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கை தண்டு – 4.மும்மை:6 49/1
செம் கண் விடையார் திரு மலர் கை தீண்டப்பெற்ற சிறுவனார் – 4.மும்மை:6 55/1
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை – 5.திருநின்ற:1 9/4
கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண் – 5.திருநின்ற:1 61/3
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால் – 5.திருநின்ற:1 141/1
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார் – 5.திருநின்ற:1 169/4
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார் – 5.திருநின்ற:1 191/4
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால் – 5.திருநின்ற:1 260/3
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 297/4
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும் – 5.திருநின்ற:1 325/1
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி – 5.திருநின்ற:1 346/2
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து – 5.திருநின்ற:1 356/1
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய – 5.திருநின்ற:1 380/2
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன் – 5.திருநின்ற:1 413/3
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர – 5.திருநின்ற:1 420/2
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும் – 5.திருநின்ற:1 424/2
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு – 5.திருநின்ற:4 17/1
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட – 5.திருநின்ற:4 19/1
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை – 5.திருநின்ற:4 27/3
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் – 5.திருநின்ற:4 30/4
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான் – 5.திருநின்ற:4 31/1
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள் – 5.திருநின்ற:4 54/1
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும் – 5.திருநின்ற:5 40/1
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் – 5.திருநின்ற:5 43/4
தாதியர்-தம் கை பற்றி தளர் நடையின் அசைவு ஒழிந்து – 6.வம்பறா:1 51/1
கை சிறியது ஒருமாறு கொண்டு ஓச்ச கால் எடுத்தே – 6.வம்பறா:1 73/2
உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திரு கை விரல் சுட்டி – 6.வம்பறா:1 73/4
மாறு விழுந்த மலர் கை குவித்து மகிழ்ந்து ஆடி – 6.வம்பறா:1 85/2
கை நிறைந்த ஒத்து அறுத்து கலை பதிகம் கவுணியர் கோன் பாடும்-காலை – 6.வம்பறா:1 102/4
கை அதனால் ஒத்து அறுத்து பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த – 6.வம்பறா:1 103/1
ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செம் கை – 6.வம்பறா:1 122/4
சிந்தை ஆர்வமும் பெருகிட சென்னியில் சிறிய செம் கை ஏற – 6.வம்பறா:1 159/3
கை மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து – 6.வம்பறா:1 167/1
செம் கை யாழ் திருநீலகண்ட பெரும்பாணருடன் சேர – 6.வம்பறா:1 177/3
கண்ட பின் அவர் கை தலை மேல் குவித்து – 6.வம்பறா:1 202/1
கோல மேனியர் ஆய் கை மலர் குவித்து – 6.வம்பறா:1 208/3
மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர் கை மேல் குவித்தே – 6.வம்பறா:1 220/2
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4
கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும் – 6.வம்பறா:1 242/2
கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவார படையும் – 6.வம்பறா:1 270/2
செம் கை மான் மறியார் தம் திருமழபாடி புறத்து சேர செல்வார் – 6.வம்பறா:1 306/1
வள்ளலார் எழுக என மலர்வித்த திரு வாக்கால் மலர் கை சென்னி – 6.வம்பறா:1 315/3
கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2
கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
கரு சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி – 6.வம்பறா:1 391/3
கதிர் ஒளிய மணி காம்பு பரிசனங்கள் கை கொண்டார் – 6.வம்பறா:1 394/2
கை மலர் களத்து இறைவர்-தம் கோயில்கள் வணங்கி – 6.வம்பறா:1 417/2
பணை நெடும் கை மத_யானை உரித்தவர் தம் பதி பிறவும் பணிய செல்வார் – 6.வம்பறா:1 453/4
செம் கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திருநள்ளாறு – 6.வம்பறா:1 454/4
செய வந்த அந்தணனார் செம் கை மேல் குவித்து எழுந்து திரு முன் நின்றார் – 6.வம்பறா:1 461/4
செம் கண் அருவிகள் பொழிய திரு முன்பு பணிந்து எழுந்து செம் கை கூப்பி – 6.வம்பறா:1 470/2
கை கனலார் கணபதீச்சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்ட கண்டார் – 6.வம்பறா:1 485/4
செம் கை நிறை மலர் கொண்டு தூவி திரு இருக்கு குறள் பாடி ஏத்தி – 6.வம்பறா:1 500/3
கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்து – 6.வம்பறா:1 510/2
சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செம் கை கூப்பி – 6.வம்பறா:1 518/3
கை போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார் – 6.வம்பறா:1 542/4
கார் பட்ட வண் கை கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள்செய்கின்றார் – 6.வம்பறா:1 554/4
காதலொடும் தொழுது எடுத்துக்கொண்டு நின்று கை குவித்து பெரு மகிழ்ச்சி கலந்து பொங்க – 6.வம்பறா:1 566/1
கை வகை முறைமை தன்மை கழிய முன் கலங்கும் காலை – 6.வம்பறா:1 599/4
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்த கை வழுவி வீழ – 6.வம்பறா:1 633/1
ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றி போக – 6.வம்பறா:1 637/3
பரும் கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்ன – 6.வம்பறா:1 670/3
கொற்றவன் அமைச்சனாரும் கை தலை குவித்து நின்று – 6.வம்பறா:1 695/1
கருகிய மாசு உடை யாக்கை தீயோர் தங்கள் கை தூங்கு குண்டிகை நீர் தெளித்து காவாய் – 6.வம்பறா:1 716/1
மண்டிய கண் அருவி நீர் பாய மலர் கை குவித்து – 6.வம்பறா:1 729/2
கை இணை தலையின் மீது குவிய கண் மலர்ச்சி காட்ட – 6.வம்பறா:1 737/3
கண்ட அப்பொழுதே வேந்தன் கை எடுத்து எய்த நோக்கி – 6.வம்பறா:1 752/1
வன் தனி கை யானை மன்னன் முன்பு வம்-மின் என்றனர் – 6.வம்பறா:1 778/4
இரும் தவத்தோர் அவர் முன்னே இணை மலர் கை குவித்து அருளி – 6.வம்பறா:1 880/1
பொருப்புறு கை சிலையார் சேர் பதி பிறவும் தொழ போவார் – 6.வம்பறா:1 882/4
திண்ணிய பொன் சிலை தட கை இராமன் செய்த திரு இராமேசுரத்தை சென்று சேர்ந்தார் – 6.வம்பறா:1 887/4
பங்கய செம் கை குவித்து பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த – 6.வம்பறா:1 888/4
தாழ்ந்து நிலம் உற வணங்கி எழுந்து தலை கை குவித்து – 6.வம்பறா:1 937/2
கம்பவாணர் கோயில் வாயில் கண்டு கை குவித்து எடுத்து – 6.வம்பறா:1 993/1
பல முறையும் பணிந்து எழுந்து பங்கய செம் கை முகிழ்ப்ப – 6.வம்பறா:1 995/1
சூழ்ந்து வலம்கொண்டு இறைவர் திரு முன்பு எய்தி தொழுது தலை மேல் கொண்ட செம் கை போற்றி – 6.வம்பறா:1 1022/3
செவ்வி நாள்_முகை கவர் பொழுதினில் மலர் செம் கை
நவ்வி வாள் விழி நறு நுதல் செறி நெறி கூந்தல் – 6.வம்பறா:1 1057/2,3
செம் கை சென்னி மேல் குவிந்திட திரு முன்பு சேர்ந்தார் – 6.வம்பறா:1 1077/4
கோல் தொடி செம் கை தோற்றிட குடம் உடைந்து எழுவாள் – 6.வம்பறா:1 1090/3
கரி இளம் பிடி கை வென்று கதலி மென் தண்டு காட்ட – 6.வம்பறா:1 1106/2
காவலனார் பெரும் கருணை கை தந்தபடி போற்றி – 6.வம்பறா:1 1118/3
கண்ட பொழுதே கலந்த காதலால் கை தலை மேல் – 6.வம்பறா:1 1127/1
காண வரும் கை வண்ணம் கவின் ஓங்கும்படி எழுதி – 6.வம்பறா:1 1173/3
தாளுறு தட கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி – 6.வம்பறா:1 1213/2
முற்று மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செம் கை பற்ற – 6.வம்பறா:1 1222/1
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை – 6.வம்பறா:1 1236/1
நல் தவ கன்னியார் கை ஞானசம்பந்தர் செம் கை
பற்றுதற்கு உரிய பண்பில் பழுது_இல் நல் பொழுது நண்ண – 6.வம்பறா:1 1236/1,2
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
அருப்பு மென் முலையினார்-தம் அணி மலர் கை பிடித்து அங்கு – 6.வம்பறா:1 1241/1
தொடி சேர் தளிர் கை இவர் எனக்கு தூய மக்கள் என கொண்டபடியே – 6.வம்பறா:2 39/3
தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணை கை கமல முகை தலை மேல் – 6.வம்பறா:2 51/1
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதர கை குவித்து இறைஞ்சி – 6.வம்பறா:2 84/1
தொடை நிகழ் பதிகம் பாடி தொழுது கை சுமந்து நின்று – 6.வம்பறா:2 105/4
வன் தொண்டர் மச்சம் வெட்டி கை கொண்டு மணிமுத்தாற்றில் – 6.வம்பறா:2 109/2
சுற்று மாளிகை சூழ் வந்து தொழுது கை தலை மேல் கொள்வார் – 6.வம்பறா:2 112/4
எல்லை_இலா காதல் மிக எடுத்த மலர் கை குவித்து – 6.வம்பறா:2 124/3
காலம் இனி தாழாமே கை கொண்டு இங்கு இனிது அருந்தி – 6.வம்பறா:2 159/3
கண் ஆர்ந்த இன் அமுதை கை ஆர தொழுது இறைஞ்சி – 6.வம்பறா:2 165/1
மற்று அவரும் கை குவித்து மால் அயனுக்கு அறிவு_அரியீர் – 6.வம்பறா:2 252/1
பங்கய செம் கை தளிரால் பனி மலர் கொண்டு அருச்சித்து – 6.வம்பறா:2 287/1
முடியாது இருக்க வல்லரே முற்றும் அளித்தாள் பொன் தளிர் கை
தொடியார் தழும்பும் முலை சுவடும் உடையார் தொண்டர் தாம் காணும் – 6.வம்பறா:2 324/2,3
நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர் கை தலை குவிய – 6.வம்பறா:2 325/3
தண் தளிர் செம் கை பற்றிக்கொண்டு மாளிகை உள் சேர்ந்தார் – 6.வம்பறா:2 380/4
காலினோடு கை முறிய கல் மேல் இடறி வீழ்வார்கள் – 6.வம்பறா:4 23/2
தொன் நகரம் துகள் ஆக துளை_நெடும்_கை_வரை உகைத்து – 7.வார்கொண்ட:3 6/2
தயங்கு சுடர் வல திரு கை தமருகத்தின் ஒலி தழைப்ப – 7.வார்கொண்ட:3 34/3
எஞ்சல் இல்லா கோலம் செய்து எடுத்து கணவர் கை கொடுத்தார் – 7.வார்கொண்ட:3 60/4
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/2
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
ஆணை அரசும் அரசு உறுப்பும் கை கொண்டு அருளும் என இறைஞ்ச – 7.வார்கொண்ட:4 36/4
பருவ மழை செம் கை பற்றி கொண்டு பரமர் தாள் பணிய – 7.வார்கொண்ட:4 67/3
நீண்ட தட கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள – 7.வார்கொண்ட:4 75/3
கண்ணில் பொழிந்து மயிர் புளகம் கலக்க கை அஞ்சலி குவித்தார் – 7.வார்கொண்ட:4 136/4
சேரர் உடனே திருவமுது செய்த பின்பு கை கோட்டி – 7.வார்கொண்ட:4 153/1
தூய கை திருத்தொண்டினில் அவர்-தமை துறை-தொறும் பயில்விப்பார் – 7.வார்கொண்ட:5 2/4
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும் – 8.பொய்:2 6/1
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி – 8.பொய்:2 34/3
கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார் – 8.பொய்:2 38/2
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த – 8.பொய்:3 6/3
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார் – 8.பொய்:5 8/3,4
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி – 8.பொய்:5 10/2
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய – 8.பொய்:8 8/3
பனை நெடும் கை மத_யானை பஞ்சவனார் படை குடைந்து – 9.கறை:3 7/2
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி – 10.கடல்:1 6/3
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே – 10.கடல்:1 10/4
ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது – 10.கடல்:1 11/1
உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை – 10.கடல்:5 11/2
மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திரு குல_கொழுந்து வளை கை மானி – 12.மன்னிய:2 1/1
கும்ப யானை கை நிலத்தில் மோதி குலைந்து வீழ்ந்தது-ஆல் – 12.மன்னிய:4 5/4
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து – 12.மன்னிய:5 2/3

மேல்


கை-தன்னில் (1)

பெருகு ஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர் கை-தன்னில்
மருவும் மங்கல நீர் வாச கரகம் முன் ஏந்தி வார்ப்பார் – 6.வம்பறா:1 1235/1,2

மேல்


கை_மலை (1)

கை_மலை ஈர் உரி போர்வை சாத்தும் கண்_நுதலாரை கழல் பணிந்து – 6.வம்பறா:1 344/2

மேல்


கை_மா (2)

மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும் – 3.இலை:3 6/4
பனை நெடும் கை_மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர் – 6.வம்பறா:1 235/4

மேல்


கை_மாவின் (1)

கை_மாவின் உரியானை கழல் பணிந்து பாடினார் – 1.திருமலை:5 88/4

மேல்


கை_மாவை (1)

கை_மாவை நறும் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் – 4.மும்மை:1 31/4

மேல்


கை_வரைகளும் (1)

கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம் – 3.இலை:3 87/2

மேல்


கை_விளி (1)

சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும் – 3.இலை:3 72/3

மேல்


கைக்கிளையால் (1)

காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார் – 6.வம்பறா:2 305/4

மேல்


கைக்கு (1)

கைக்கு அணி கொள் வளை சரியும் அரை கடி சூத்திர சரியும் – 7.வார்கொண்ட:3 32/3

மேல்


கைக்குல (1)

ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே – 5.திருநின்ற:1 113/4

மேல்


கைக்குலம் (1)

வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர் – 3.இலை:2 15/3

மேல்


கைக்கொடு (1)

கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய – 5.திருநின்ற:1 113/2

மேல்


கைக்கொடுத்து (1)

கொடி சேர் விடையார் திரு முகம் கைக்கொடுத்து வணங்க கொற்றவனார் – 7.வார்கொண்ட:4 31/2

மேல்


கைக்கொண்டார் (2)

கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4
ஆடும் அவர் திருவருளால் அப்படியே கைக்கொண்டார் – 7.வார்கொண்ட:4 171/4

மேல்


கைக்கொண்டு (4)

நண்பு உடை யாழ் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்த புக்கார்க்கு – 6.வம்பறா:1 448/3
கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி – 7.வார்கொண்ட:4 172/1
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து – 10.கடல்:4 5/2,3
ஆரணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த – 11.பத்தராய்:6 3/1

மேல்


கைக்கொள்-மின் (1)

என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின் – 3.இலை:3 45/3

மேல்


கைக்கொள்வார் (1)

கை வரை கைக்கொண்டார் மண் காவல் கைக்கொள்வார் என்று – 4.மும்மை:1 30/4

மேல்


கைக்கொள்ளும் (1)

கண்_நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் என காட்ட – 6.வம்பறா:1 77/2

மேல்


கைகள் (18)

கைகள் கூப்பி தொழுது எழுந்து அ திசை – 1.திருமலை:1 18/1
கைகள் அஞ்சலி கூப்பி கலங்கினான் – 1.திருமலை:1 28/1
கண்டனர் கைகள் ஆர தொழுதனர் கலந்த காதல் – 2.தில்லை:2 41/1
கூர வந்து எதிர்கொண்டு கைகள் குவித்து நின்று செவி புலத்து – 2.தில்லை:4 3/3
கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி – 3.இலை:4 29/3
கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக – 5.திருநின்ற:1 253/1
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம் – 5.திருநின்ற:1 294/3
கைகள் ஆயிரம் வாங்கி கரந்து போய் – 6.வம்பறா:1 192/3
செம் கைகள் சென்னி மேல் குவித்து சென்று புக்கு – 6.வம்பறா:1 247/3
கண்ட பொழுதே கைகள் தலை மேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்ப காதல் பொங்கி – 6.வம்பறா:1 259/1
விரவு மலர் கண் பனிப்ப கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மை – 6.வம்பறா:1 261/2
கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி – 6.வம்பறா:1 433/2
கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் – 6.வம்பறா:1 594/1
மேவிய கைகள் உச்சி மேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார் – 6.வம்பறா:1 1093/4
கண்டவர் கைகள் கூப்பி தொழுது பின் தொடர்வார் காணார் – 6.வம்பறா:2 103/1
கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகி வர – 6.வம்பறா:2 188/1
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமை பாகம் – 7.வார்கொண்ட:4 170/1
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் – 11.பத்தராய்:6 4/2

மேல்


கைகளால் (5)

காலினால் தடவி சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழி சார்ந்தன – 2.தில்லை:4 18/1,2
முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து – 6.வம்பறா:1 662/2
கரு நெடு கயல் கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் – 6.வம்பறா:1 1102/3
திருஞானசம்பந்தர் திரு கைகளால் ஒற்றி – 6.வம்பறா:2 154/1
கருகு முருட்டு கைகளால் கொட்டை வாங்கி கருத்தின் வழி – 6.வம்பறா:4 10/3

மேல்


கைகளின் (3)

காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர் – 3.இலை:2 15/4
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய – 3.இலை:2 16/1
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர் – 3.இலை:2 16/2

மேல்


கைகளினால் (1)

தாமரை செம் கைகளினால் சப்பாணி கொட்டினார் – 6.வம்பறா:1 46/4

மேல்


கைகளும் (2)

கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின் – 5.திருநின்ற:1 358/1
கைகளும் தலை மீது ஏற கண்ணில் ஆனந்த வெள்ளம் – 6.வம்பறா:1 865/1

மேல்


கைகளோ (1)

கைகளோ திளைத்த கண்களோ அந்த கரணமோ கலந்த அன்பு உந்த – 1.திருமலை:5 105/3

மேல்


கைகளோடும் (2)

ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்த செம் கைகளோடும்
தூ நறும் கொன்றையான் மூலட்டானம் சூழ் திரு மாளிகை வாயில் புக்கார் – 1.திருமலை:5 124/3,4
கோயில் உள் புகுவார் உச்சி குவித்த செம் கைகளோடும்
தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரை கண்டார் – 6.வம்பறா:1 584/1,2

மேல்


கைகொடு (1)

வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு
போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார் – 3.இலை:2 11/3,4

மேல்


கைகொண்டு (2)

பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச – 3.இலை:3 23/2
தந்த யாழினை தொழுது கைகொண்டு பெரும்பாணர் தலை மேல் கொண்டார் – 6.வம்பறா:1 452/4

மேல்


கைச்சினமும் (1)

உம்பர் பிரான் கைச்சினமும் பரவி தெங்கூர் ஓங்கு புகழ் திரு கொள்ளிக்காடும் போற்றி – 6.வம்பறா:1 574/3

மேல்


கைஞ்ஞீடிய (1)

கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் – 5.திருநின்ற:1 310/4

மேல்


கைத்தல (1)

கைத்தல படை வீரர் செம்பொன் பள்ளி கருதி – 6.வம்பறா:1 440/2

மேல்


கைத்தலத்திடை (1)

கைத்தலத்திடை கொண்டனர் கவுணியர் தலைவர் – 6.வம்பறா:1 783/4

மேல்


கைத்தலத்து (1)

வையம் எல்லாம் உய்ய வரு மறை சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே – 6.வம்பறா:1 103/4

மேல்


கைத்தலம் (2)

கைத்தலம் குவித்து தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம் – 6.வம்பறா:1 589/4
கைத்தலம் குவித்து கண்கள் ஆனந்த கலுழி நீர் பொழிதர கண்டார் – 6.வம்பறா:2 89/4

மேல்


கைத்தலை (1)

குணங்கள் ஏந்தியே பரவி அஞ்சலியால் குவித்த கைத்தலை மேற்கொண்டு நின்று – 6.வம்பறா:2 279/2

மேல்


கைத்து (2)

விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய – 3.இலை:1 34/3
கரும் குழல் கற்றை மேல் குவி கைத்து அருளி உடையார் – 6.வம்பறா:1 670/2

மேல்


கைத்தொண்டு (1)

விடையவர்க்கு கைத்தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து – 1.திருமலை:5 83/2

மேல்


கைத்தொழிலின் (1)

தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆக – 12.மன்னிய:3 3/3

மேல்


கைதவ (1)

என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அ கைதவ மறையோர் – 2.தில்லை:3 6/1

மேல்


கைதவம் (2)

ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி – 2.தில்லை:7 20/1
கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் – 6.வம்பறா:1 749/4

மேல்


கைதவன் (1)

கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண – 6.வம்பறா:1 785/2

மேல்


கைதவன்-தன் (1)

கைதவன்-தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் – 6.வம்பறா:1 774/2

மேல்


கைதவனும் (1)

கைதவம் பேசமாட்டேன் என்று கைதவனும் சொன்னான் – 6.வம்பறா:1 749/4

மேல்


கைதை (6)

போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் – 1.திருமலை:2 29/4
குன்று போலும் மணி மா மதில் சூழும் குண்டு அகழ் கமல வண்டு அலர் கைதை
துன்று நீறு புனை மேனிய ஆகி தூய நீறு புனை தொண்டர்கள் என்ன – 1.திருமலை:5 96/2,3
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் – 4.மும்மை:5 10/4
கழிக்கரை பொதி சோறு அவிழ்ப்பன மடல் கைதை – 4.மும்மை:5 36/4
தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார் – 6.வம்பறா:1 608/4
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும் – 8.பொய்:6 4/2,3

மேல்


கைதொழ (3)

கரு கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கைதொழ சென்றார் – 6.வம்பறா:1 292/4
உரு வேற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழ சென்று உற்ற போது – 6.வம்பறா:1 1030/3
கருத்தில் வரும் ஆதரவால் கைதொழ சென்று எய்தினார் – 6.வம்பறா:2 168/4

மேல்


கைதொழுதார் (4)

திரு உடைய தில்லை வாழ் அந்தணர்கள் கைதொழுதார்
பரவு_அரிய தொண்டர்களும் பணிந்து மனம் களி பயின்றார் – 4.மும்மை:4 34/1,2
காரணத்தின் வரும் இன்ப கண்ணீர் பொழிய கைதொழுதார் – 6.வம்பறா:1 976/4
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கைதொழுதார் – 7.வார்கொண்ட:3 49/4
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கைதொழுதார் – 7.வார்கொண்ட:4 18/4

மேல்


கைதொழுது (29)

கறை மறை மிடற்றினானை கைதொழுது உரைக்கல்உற்றார் – 2.தில்லை:2 22/4
கடை உடை காவலாளர் கைதொழுது ஏற நின்றே – 2.தில்லை:5 9/1
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை – 3.இலை:4 18/1
கைதொழுது நடமாடும் கழல் உன்னி அழல் புக்கார் – 4.மும்மை:4 32/1
கைதொழுது கந்தையினை தந்து அருளும் கழுவ என – 4.மும்மை:5 118/3
தான் நிறைந்த அன்பு உருக கைதொழுது தனி நின்றார் – 4.மும்மை:5 126/4
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது – 5.திருநின்ற:1 64/2,3
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி – 5.திருநின்ற:1 303/1,2
கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார் – 5.திருநின்ற:1 334/4
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார் – 5.திருநின்ற:1 336/4
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார் – 5.திருநின்ற:1 337/3,4
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார் – 5.திருநின்ற:1 404/4
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார் – 5.திருநின்ற:1 429/3
கைதொழுது சொல் பதிகம் பாடி கழுமலக்கோன் – 6.வம்பறா:1 166/2
சிரபுர_சிறுவர் கைதொழுது செந்தமிழ் – 6.வம்பறா:1 255/2
கைதொழுது ஏத்தி புறத்து அணைந்து காமர் பதி அதன்-கண் சில நாள் – 6.வம்பறா:1 347/1
பணிந்து எழுந்து கைதொழுது முன் பனி மலர் பீடத்து – 6.வம்பறா:1 428/1
கற்றவர் வாழ் கடல் நாகை காரோணத்து கண்_நுதலை கைதொழுது கலந்த ஓசை – 6.வம்பறா:1 466/3
கர கமலங்கள் பற்றியே எடுப்ப கைதொழுது அவரும் முன் நிற்ப – 6.வம்பறா:1 657/3
காலம் பெற்று இனிது இறைஞ்சி கைதொழுது புறம் போந்தார் – 6.வம்பறா:1 883/3
கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப்பேரும் கைதொழுது தமிழ் பாடி சுழியல் போற்றி – 6.வம்பறா:1 886/3
கண்ணால் பருகி கைதொழுது கலந்து போற்றும் காதலினால் – 6.வம்பறா:1 970/2
அரு_மறையோர் அவர் பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் – 6.வம்பறா:1 1158/1
கண்_நுதலார் விரும்பு கருப்பறியலூரை கைதொழுது நீங்கி போய் கயல்கள் பாயும் – 6.வம்பறா:2 118/1
கற்றை வார் சடையாரை கைதொழுது குளத்தில் இழிந்து – 6.வம்பறா:2 130/3
கரவு_இல் திருத்தொண்டர் தாம் கைதொழுது புறப்பட்டார் – 6.வம்பறா:2 298/4
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன் நின்று விம்மியே – 6.வம்பறா:2 307/1
ஒருவா நண்பு உள்ளுருக உடன் எழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார் பிரிவு ஆற்றார் பின் செல்வார் – 7.வார்கொண்ட:4 157/3,4
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த – 8.பொய்:2 34/1,2

மேல்


கைதொழுதே (2)

ஒப்பு_அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகி கைதொழுதே
செப்ப_அரிய திரு எல்லை வலம்கொண்டு செல்கின்றார் – 4.மும்மை:4 25/3,4
கார் விரவு கோபுரத்தை கைதொழுதே உள் புகுந்து – 6.வம்பறா:2 306/2

மேல்


கைதொழும் (3)

கருவரைப்பில் புகாதவர் கைதொழும்
ஒருவரை தொழுது உள்ளம் உவந்து போய் – 6.வம்பறா:1 185/1,2
கை தலத்தவர் பதி பிறவும் கைதொழும்
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார் – 6.வம்பறா:1 242/2,3
காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலே – 6.வம்பறா:1 607/1

மேல்


கைதொழுவார் (3)

கடும்_கை_வரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப்பள்ளி பதி கைதொழுவார் – 6.வம்பறா:1 349/4
முன்றில் வலம்கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழுவார்
கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்ப கண்_நுதலாரை முன் போற்றி செய்து – 6.வம்பறா:1 350/2,3
கலை மாலை மதி சடையார் இடம் பலவும் கைதொழுவார் – 6.வம்பறா:1 621/4

மேல்


கைந்நிரை (1)

காணும் ஆசையில் குவித்த கைந்நிரை எடுத்தனர் – 6.வம்பறா:1 990/4

மேல்


கைப்படுத்த (1)

கைப்படுத்த சீலத்து கவுணியர் கோத்திரம் விளங்க – 6.வம்பறா:1 15/2

மேல்


கைப்பற்றி (2)

தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார் – 2.தில்லை:2 32/3,4
காதலியை கைப்பற்றி கொண்டு வலம் செய்து அருளி – 6.வம்பறா:1 1253/1

மேல்


கைப்பிடிக்க (3)

கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற – 3.இலை:5 20/1
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம் – 3.இலை:5 34/3
காதலியை காழி நாடு உடைய பிரான் கைப்பிடிக்க
போதும் அவர் பெருந்தன்மை என பொருந்த எண்ணினார் – 6.வம்பறா:1 1161/3,4

மேல்


கைப்புக்க (1)

தரையில் புடைப்ப கைப்புக்க சிலம்பி-தானும் உயிர் நீங்க – 12.மன்னிய:4 6/1

மேல்


கைப்பூம் (1)

கைப்பூம் புனலும் முகந்து ஆட்டி கமழ் பூம் கொத்தும் அணிந்து இறைஞ்சி – 12.மன்னிய:4 2/3

மேல்


கைம் (8)

கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரிய கைம் மலர் உச்சி மேல் குவித்து – 1.திருமலை:5 107/3
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில் – 3.இலை:3 107/2
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார் – 3.இலை:6 2/3
கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட – 5.திருநின்ற:1 6/1
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு – 5.திருநின்ற:1 181/3
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் – 5.திருநின்ற:1 350/4
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று – 5.திருநின்ற:4 25/4
கண் மலர்கள் நீர் ததும்ப கைம் மலர்களால் பிசைந்து – 6.வம்பறா:1 62/1

மேல்


கைம்மாறு (1)

புவி கைம்மாறு இன்றி போற்ற வந்து அருளினார் போந்தார் – 6.வம்பறா:1 232/4

மேல்


கைம்மிகு (1)

காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரை இகப்ப – 6.வம்பறா:1 550/2

மேல்


கைம்மை (1)

புனலிடை கழுவி தக்க புனித பாத்திரத்து கைம்மை
வினையினால் வேறுவேறு கறி அமுது ஆக்கி பண்டை – 2.தில்லை:4 22/2,3

மேல்


கைமிக்கு (1)

தம்மையும் அறியா வண்ணம் கைமிக்கு தழைத்து பொங்கி – 6.வம்பறா:1 644/3

மேல்


கையர் (18)

வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார் – 3.இலை:3 68/2
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று – 3.இலை:4 25/1
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து – 4.மும்மை:1 14/1
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி – 5.திருநின்ற:1 52/1
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம் – 5.திருநின்ற:1 141/2
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற – 5.திருநின்ற:5 45/1
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர்-தம் பொய் மிகுந்த – 6.வம்பறா:1 18/1
போதம் இலா சமண் கையர் புத்தர் வழி பழி ஆக்கும் – 6.வம்பறா:1 79/3
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்-பால் – 6.வம்பறா:1 301/1
அரசர் அருளி செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை – 6.வம்பறா:1 616/1
காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர்
மாவலாய் உன்-தன் மதுரையில் சைவ வேதியர் தாம் – 6.வம்பறா:1 683/2,3
நையும் உள்ளத்தராய் அமண் கையர் தாம் நணுகி – 6.வம்பறா:1 707/2
கரு முருட்டு அமண் கையர் செய் தீங்கு இது கடைக்கால் – 6.வம்பறா:1 709/3
மால் பெருக்கும் சமண் கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டு அழிந்து வந்த நோயின் – 6.வம்பறா:1 715/1
பீலி சேர் சமண் கையர் பிள்ளையார்-தமை சூழ்வார் – 6.வம்பறா:1 756/2
உறி உடை கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்தி – 6.வம்பறா:1 766/1
என்று அமண் கையர் கூற ஏறு சீர் புகலி வேந்தர் – 6.வம்பறா:1 797/1
பம்பு சடை திரு முனிவர் கபால கையர் பல வேட சைவர் குல வேடர் மற்றும் – 6.வம்பறா:1 1018/3

மேல்


கையர்-தம் (1)

மன்னும் அ கோயில் சேர் மான் மறி கையர்-தம்
பொன் அடி தலம் உற புரிவொடும் தொழுது எழுந்து – 6.வம்பறா:1 364/1,2

மேல்


கையர்கள் (1)

யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1

மேல்


கையராய் (1)

இடும் பலி பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் – 2.தில்லை:2 12/3,4

மேல்


கையரை (4)

கொல்லை மான் மறி கையரை கோயில் புக்கு இறைஞ்சி – 6.வம்பறா:1 438/3
மறி உற்ற கையரை தோணி மேல் முன் வணங்கும்படி அங்கு கண்டு வாழ்ந்து – 6.வம்பறா:1 556/3
தொடுத்த பீலி முன் தூக்கிய கையரை நோக்கி – 6.வம்பறா:1 790/3
மாய வல்ல அமண் கையரை வாதில் வென்றதுவும் – 6.வம்பறா:1 1050/3

மேல்


கையள் (1)

கலவ மயில் என எழுந்து கரும் குழலின் பரம் ஆற்றா கையள் ஆகி – 1.திருமலை:5 174/3

மேல்


கையறவாம் (1)

சட்ட நான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவள் எதிரே கொடுத்து அருளும் எனும் திருப்பாட்டு – 6.வம்பறா:2 133/2,3

மேல்


கையறவால் (3)

எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே – 5.திருநின்ற:1 224/4
ஆன கவலை கையறவால் அழியும் நாளில் ஆரூரர் – 6.வம்பறா:2 316/1
கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார் – 8.பொய்:6 13/4

மேல்


கையறவினுக்கும் (1)

இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர் கையறவினுக்கும்
பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பலப்பல நனைவார் – 6.வம்பறா:2 276/3,4

மேல்


கையறவு (1)

கண் துயில் எய்தார் வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று – 6.வம்பறா:2 360/1

மேல்


கையறு (1)

கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார் – 6.வம்பறா:1 638/4

மேல்


கையன் (1)

மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண் கையன் வந்தான் – 6.வம்பறா:1 810/2

மேல்


கையாம் (1)

தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று – 10.கடல்:1 10/2

மேல்


கையார் (3)

மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் – 6.வம்பறா:1 312/1
மறி வண் கையார் அருளேயோ மலர் கண் துயில் வந்து எய்தியது-ஆல் – 6.வம்பறா:2 48/4
காரால் நிகர்க்க அரிய கொடை கையார் கழறிற்றறிவார்-தாம் – 7.வார்கொண்ட:4 56/4

மேல்


கையால் (25)

நிறைத்த செம் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறை படும் அளவில் தத்தா நமர் என தடுத்து வீழ்ந்தார் – 2.தில்லை:5 16/3,4
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று – 3.இலை:1 15/3
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார் – 3.இலை:1 42/4
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார் – 3.இலை:3 113/4
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/3
மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு – 3.இலை:6 15/2,3
உள் நிலாவிய பதைப்புறு காதலுடன் திரு கையால் தடுத்தும் நில்லாமை – 4.மும்மை:5 63/3
முலை குவட்டொடு வளை கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிட தழுவ – 4.மும்மை:5 64/2
காலால் இடறி சிந்தினான் கையால் கடமை தலை நின்றான் – 4.மும்மை:6 50/4
அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால்
துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார் – 5.திருநின்ற:1 43/3,4
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை – 5.திருநின்ற:1 182/3
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில் – 5.திருநின்ற:3 5/2
மங்கை செம் கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று – 6.வம்பறா:1 154/2
தூ மருவும் மலர் கையால் தொழுது வலம்கொண்டு அணைந்து – 6.வம்பறா:1 409/3
இன் அருள் பெரும் சிறப்பொடும் திரு கையால் எடுத்தார் – 6.வம்பறா:1 671/4
இருவரையும் திரு கையால் எடுத்து அருளி தேற்றிடவும் – 6.வம்பறா:1 731/2
திருவளர் நீறு கொண்டு திரு கையால் தடவ தென்னன் – 6.வம்பறா:1 765/1
திரு முகம் கருணை காட்ட திரு கையால் நீறு காட்டி – 6.வம்பறா:1 770/1
நீற்று வண் கையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் – 6.வம்பறா:1 782/2
நிலவும் திரு ஏடு திரு கையால் நீட்டி இட்டார் – 6.வம்பறா:1 845/4
ஆரும் இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அம் கையால் தொழுது ஏத்தி – 6.வம்பறா:1 955/3
அயன் கபாலம் தரித்த இட திரு கையால் அணைத்த – 7.வார்கொண்ட:3 34/1
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க காதலனும் – 7.வார்கொண்ட:3 63/2
கண்கள் பொழிந்த காதல் நீர் வழிய கையால் தொழுது அணைய – 7.வார்கொண்ட:4 38/2
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல் – 8.பொய்:5 7/1

மேல்


கையாளர் (1)

தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர்
இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள்-தன்னோடும் – 6.வம்பறா:1 1242/2,3

மேல்


கையான் (1)

பால் முறை முந்நூல் மின்ன பவித்திரம் சிறந்த கையான் – 1.திருமலை:5 17/4

மேல்


கையில் (32)

மற்றவர்க்கு எல்லாம் தலைமை ஆம் பணியும் மலர் கையில் சுரிகையும் பிரம்பும் – 1.திருமலை:1 11/3
கையில் மான் மழுவர் கங்கை சூழ் சடையில் கதிர் இளம் பிறை நறும் கண்ணி – 1.திருமலை:1 12/1
வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி – 1.திருமலை:5 47/3
இருள் மறை மிடற்றோன் கையில் ஓலை கண்டு அவையோர் ஏவ – 1.திருமலை:5 58/1
கையில் மன்னிய பவித்திர மரகத கதிரும் – 2.தில்லை:7 7/4
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார் – 2.தில்லை:7 14/4
உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர் – 2.தில்லை:7 31/1
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு – 3.இலை:1 10/2
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல் – 3.இலை:1 21/3
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும் – 3.இலை:3 17/1
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை – 3.இலை:3 122/1
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி – 3.இலை:3 127/3
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ – 3.இலை:3 170/2
சீலம் திகழும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் திரு கையில்
கோல மழுவால் ஏறு உண்டு குற்றம் நீங்கி சுற்றம் உடன் – 4.மும்மை:6 58/2,3
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே – 5.திருநின்ற:1 77/4
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம் – 5.திருநின்ற:1 120/1
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி – 5.திருநின்ற:1 256/3
கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும் – 5.திருநின்ற:7 10/1
கண் மலர் நீர் துடைத்து அருளி கையில் பொன் கிண்ணம் அளித்து – 6.வம்பறா:1 68/3
காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திரு தாள கருவி கண்டு – 6.வம்பறா:1 104/1
மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப – 6.வம்பறா:1 601/4
ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில்
கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய – 6.வம்பறா:1 632/2,3
கையில் ஏட்டினை கைதவன் பேரவை காண – 6.வம்பறா:1 785/2
கையில் ஏட்டினை கதுவு செம் தீயினில் இடுவார் – 6.வம்பறா:1 787/2
கடுகிய புனலை கண்டும் அவாவினால் கையில் ஏடு – 6.வம்பறா:1 814/3
பற்றிய கையில் ஏந்தி பண்பினால் யார்க்கும் காட்ட – 6.வம்பறா:1 852/3
அ நாடு அதனை விட்டு அகல்வார் சிலர் தம் கையில் குண்டிகைகள் – 6.வம்பறா:1 982/2
சார்பு ஒழிப்பவர் திரு கையில் காப்பு நாண் சாத்த – 6.வம்பறா:1 1187/4
கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில்
வாளினை பிடித்துக்கொள்ள வன் தொண்டர் வணங்கி வீழ்ந்தார் – 6.வம்பறா:2 404/3,4
மருவு திரு கண்ட நாண் மார்பினில் ஐம்படை கையில்
பொருவு_இல் வயிர சரிகள் பொன் அரை_ஞாண் புனை சதங்கை – 7.வார்கொண்ட:3 21/2,3
மறைத்து நீக்க சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு – 7.வார்கொண்ட:3 65/2
கரம் முன் அணைத்து கணவனார் கையில் கெடுப்ப களிகூர்ந்தார் – 7.வார்கொண்ட:3 82/3

மேல்


கையிலும் (1)

வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர் – 3.இலை:2 17/1

மேல்


கையின் (2)

குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும் – 3.இலை:4 3/1
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர – 5.திருநின்ற:1 420/3

மேல்


கையினராய் (1)

தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 346/4

மேல்


கையினால் (4)

கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று – 5.திருநின்ற:1 224/3
கையினால் எரி இட உடன் படும் எல்லி கரப்ப – 6.வம்பறா:1 707/3
கையினால் பிசைந்து தூற்றி பார்ப்பது கண்ட மன்னன் – 6.வம்பறா:1 792/2
கோல் தொடி தளிர் கையினால் முகை மலர் கொய்ய – 6.வம்பறா:1 1055/4

மேல்


கையினில் (7)

கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்கு தோடும் – 1.திருமலை:5 185/1
கையினில் படை கரந்த புத்தக கவளி ஏந்தி – 2.தில்லை:5 7/2
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு – 2.தில்லை:7 32/3
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை – 3.இலை:1 9/3
சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும் – 3.இலை:7 18/1
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற – 5.திருநின்ற:5 25/1
செம் கையினில் பொன் செண்டும் திரு முடியில் சுழியம் உடன் – 7.வார்கொண்ட:4 112/3

மேல்


கையினுடன் (1)

ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன்
ஆன காதல் உடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர் – 6.வம்பறா:2 203/3,4

மேல்


கையினை (2)

கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து – 3.இலை:1 25/1
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி – 10.கடல்:1 13/2

மேல்


கையும் (4)

வரம் பெறும் காதல் மனத்துடன் தெய்வ மது மலர் இரு கையும் ஏந்தி – 1.திருமலை:1 9/2
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும் – 3.இலை:1 46/4
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என் – 3.இலை:6 18/3
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே – 5.திருநின்ற:1 167/1

மேல்


கையேற்கும் (1)

முகந்து தர இரு மருங்கும் முளரி மலர் கையேற்கும்
அகல் பணை நீர் நல் நாட்டு மேற்காநாட்டு ஆதனூர் – 4.மும்மை:4 1/3,4

மேல்


கையை (6)

தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக – 3.இலை:3 183/3
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில் – 3.இலை:3 185/2,3
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர் – 3.இலை:6 18/2
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது – 3.இலை:6 19/1
தம் திரு கையை பற்றும் தாமரை செம் கையாளர் – 6.வம்பறா:1 1242/2
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார் – 8.பொய்:6 15/3

மேல்


கையொடும் (1)

செம் கையொடும் சென்று திரு வாயில் உள் புக்கார் – 6.வம்பறா:1 172/4

மேல்


கையோடு (1)

குலம் நிறைந்த திரு வாயில் குவித்த மலர் செம் கையோடு
தலம்உற முன் தாழ்ந்து எய்தி தமனிய மாளிகை மருங்கு – 6.வம்பறா:1 1138/2,3

மேல்


கைலை (2)

காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண – 5.திருநின்ற:4 53/3
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின் – 5.திருநின்ற:4 55/3

மேல்


கைவகுத்து (1)

கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார் – 8.பொய்:2 18/2

மேல்


கைவந்துற (1)

காவல் மன்னர்க்கு உரியனவும் எல்லாம் கைவந்துற பெற்றார் – 7.வார்கொண்ட:4 14/4

மேல்


கைவரும் (1)

சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார் – 6.வம்பறா:1 773/4

மேல்


கைவலான் (1)

முகில் நுழை மதியம் போல கைவலான் முன் கை சூழ்ந்த – 1.திருமலை:5 16/2

மேல்


கைவளைந்து (1)

காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே – 3.இலை:3 72/4

மேல்


கைவிட்டார் (3)

காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார் – 3.இலை:3 153/4
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு – 5.திருநின்ற:1 55/1
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த – 5.திருநின்ற:1 57/2

மேல்


கைவிட்டு (1)

என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும் – 5.திருநின்ற:1 33/3

மேல்


கைவிடுவான் (1)

பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
என்னும் இசை திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார் – 6.வம்பறா:2 273/3,4

மேல்


கைவினை (3)

கைவினை மள்ளர் வானம் கரக்க ஆக்கிய நெல் குன்று-ஆல் – 1.திருமலை:2 25/3
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற – 3.இலை:3 34/3
கைவினை மறையோர் செய்ய கடி கொள் செங்கமல தாதின் – 6.வம்பறா:1 1216/2

மேல்


கைவினைஞர்-தமை (1)

கைக்கொண்டு கொடுபோம் அ கைவினைஞர்-தமை ஏவி – 7.வார்கொண்ட:4 172/1

மேல்


கைவைத்து (1)

கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார் – 5.திருநின்ற:7 29/4

மேல்