கே – முதல் சொற்கள், பெரியபுராணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேச 1
கேட்க 13
கேட்கவும் 1
கேட்கவே 1
கேட்கும் 1
கேட்ட 37
கேட்டது 1
கேட்டருளி 1
கேட்டலும் 9
கேட்டலுமே 7
கேட்டவர் 3
கேட்டவர்-தாம் 1
கேட்டனம் 1
கேட்டார் 8
கேட்டாரும் 1
கேட்டான் 1
கேட்டு 105
கேட்டும் 1
கேட்டே 5
கேட்டோம் 1
கேட்ப 9
கேட்பது 1
கேட்பன 1
கேட்பார் 1
கேட்பிக்க 1
கேட்பித்த 1
கேட்பித்தார் 3
கேடு 4
கேடு_இல் 1
கேடும் 1
கேண்-மின் 2
கேண்மை 4
கேண்மையில் 1
கேண்மையினார் 3
கேண்மையினால் 1
கேண்மையும் 1
கேணி 2
கேதகை 1
கேதமும் 1
கேதனங்கள் 1
கேதார 1
கேதாரம் 1
கேரம் 1
கேரளனார் 1
கேழல் 2
கேள் 7
கேள்வர் 2
கேள்வன் 2
கேள்வன்-தானும் 1
கேள்வனார் 1
கேள்வி 2
கேளா 19
கேளாது 1
கேளாய் 1
கேளான் 1
கேளிர் 1
கேளிரே 1
கேளீர் 1
கேளும் 2
கேளுறும் 1

கேச (1)

மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன – 3.இலை:5 23/3

மேல்


கேட்க (13)

நன்று கேட்க விரும்பும் நசையினோம் – 1.திருமலை:1 20/3
வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே – 1.திருமலை:5 127/4
கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
கொண்டு உடன் மூழ்கீர் என்ன கூடாமை பாரோர் கேட்க
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் – 2.தில்லை:2 38/3,4
சொல் திறம் கேட்க வேண்டி சோர்கின்ற ஆவி தாங்கும் – 2.தில்லை:5 20/3
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன் – 3.இலை:5 37/4
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும் – 3.இலை:7 40/2,3
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி – 5.திருநின்ற:5 14/4
நாதன் மாட்சிமை கேட்க நவிலும்-கால் – 6.வம்பறா:1 832/2
வானமும் நிலமும் கேட்க அருள்செய்து இ மணத்தில் வந்தோர் – 6.வம்பறா:1 1248/3
அருகர்-தம்மை அரசனும் அங்கு அழைத்து கேட்க அதற்கு இசைந்தார் – 6.வம்பறா:4 18/1
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஓலம் என – 7.வார்கொண்ட:4 135/3
எப்புடையது என்று அங்கண் எய்தினார்-தம்மை கேட்க
செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார் – 12.மன்னிய:1 12/2,3

மேல்


கேட்கவும் (1)

சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர் ஆனார் – 6.வம்பறா:1 1038/4

மேல்


கேட்கவே (1)

இன்ன கேட்கவே ஏற்ற கோள் பலவும் – 6.வம்பறா:1 833/2

மேல்


கேட்கும் (1)

சங்கரனை சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் – 11.பத்தராய்:1 5/1

மேல்


கேட்ட (37)

ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து – 1.திருமலை:3 29/1
அ உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம் – 1.திருமலை:3 32/1
வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் – 1.திருமலை:5 60/1
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட
கன்று போல் கதறி நம்பி கர சரண் ஆதி அங்கம் – 1.திருமலை:5 68/1,2
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி – 2.தில்லை:2 7/2
வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற – 3.இலை:1 28/1
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு – 3.இலை:3 51/1
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி – 3.இலை:6 23/3
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு – 4.மும்மை:1 40/1
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும் – 4.மும்மை:4 29/1
அ சொல் கேட்ட அரு_மறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின் – 4.மும்மை:6 40/1
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி – 5.திருநின்ற:1 94/1
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி – 5.திருநின்ற:1 123/1
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு – 5.திருநின்ற:4 9/2
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான் – 5.திருநின்ற:4 29/1
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் – 5.திருநின்ற:4 41/1
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர் – 5.திருநின்ற:5 33/1
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து – 5.திருநின்ற:6 25/1
பிள்ளையார் எழுந்தருள கேட்ட செல்வ பிரமபுரத்து அரு_மறையோர் பெருகு காதல் – 6.வம்பறா:1 257/1
நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திரு வார்த்தை கேட்ட போதே – 6.வம்பறா:1 493/1
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க – 6.வம்பறா:1 606/1
கெழுவுறு பதி யாது என்று விருப்புடன் கேட்ட போது – 6.வம்பறா:1 753/4
ஆங்கு அவன் தான் உரைத்த மொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்தவனை நோக்கி – 6.வம்பறா:1 917/1
திரு சின்னம் பணிமாற கேட்ட நால் திசை உள்ளோர் – 6.வம்பறா:1 933/1
தெள்ளு நீதியின் முறை கேட்ட சீர் கிளை – 6.வம்பறா:1 1116/1
தாயாரோடு தந்தையார் பேச கேட்ட சங்கிலியார் – 6.வம்பறா:2 211/1
சங்கிலியார் கனவு உரைப்ப கேட்ட தாதியர் மொழிவார் – 6.வம்பறா:2 257/4
அண்ணலார் அருளி செய்ய கேட்ட ஆரூரர்-தாமும் – 6.வம்பறா:2 353/1
நாதர்-தம் அருளால் நண்ணும் சூலையும் அவர்-பால் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/1,2
அந்தம்_இல்லா அறிவு உடையார் உரைப்ப கேட்ட அறிவு இல்லார் – 6.வம்பறா:4 8/1
தம் பெருமான் திருத்தொண்டர் என கேட்ட தார் வேந்தன் – 7.வார்கொண்ட:3 8/1
அரியது இல்லை என கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற – 7.வார்கொண்ட:3 48/1
அதுவும் முனைவர் மொழிந்து அருள கேட்ட தொண்டர் அடியேனுக்கு – 7.வார்கொண்ட:3 52/1
கேட்ட பொழுதே கை தலை மேல் கொண்டு கிளர்ந்த பேர் அன்பால் – 7.வார்கொண்ட:4 30/1
ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர் – 7.வார்கொண்ட:4 159/1
மன்னவன் உரைப்ப கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கி – 12.மன்னிய:1 15/1
சாரல் வெள்ளியங்கயிலையில் கேட்ட மா சாத்தனார் தரித்து இந்த – 13.வெள்ளானை:1 52/2

மேல்


கேட்டது (1)

அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க – 3.இலை:1 39/2

மேல்


கேட்டருளி (1)

சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி – 3.இலை:5 35/2,3

மேல்


கேட்டலும் (9)

அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார் – 1.திருமலை:5 108/4
மற்று அவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த – 2.தில்லை:3 19/1
என்று இ உரை கேட்டலும் எல்லை_இல் கல்வியோரும் – 4.மும்மை:1 42/1
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன் – 5.திருநின்ற:1 103/1
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் – 5.திருநின்ற:4 27/1
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும் – 5.திருநின்ற:4 44/1
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் – 6.வம்பறா:1 423/1
மீனவன் செயல் கேட்டலும் வெய்து உயிர்த்து அழிந்து – 6.வம்பறா:1 714/2
மற்று அவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் – 6.வம்பறா:1 799/1

மேல்


கேட்டலுமே (7)

என்ற உரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம் – 1.திருமலை:5 172/1
இவ்வாறு கேட்டலுமே ஏனாதிநாதனார் – 3.இலை:2 32/1
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி – 3.இலை:3 45/1
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான் – 5.திருநின்ற:1 59/1
மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும் – 5.திருநின்ற:1 65/1
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர – 5.திருநின்ற:1 178/3
உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய் – 6.வம்பறா:1 138/3

மேல்


கேட்டவர் (3)

அந்தணாளரும் ஆங்கு அது கேட்டவர்
பந்த மானுட பால்படு தென் திசை – 1.திருமலை:1 30/1,2
மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல்-தன்னை – 1.திருமலை:5 9/1
என்றான் இறையோன் அது கேட்டவர் எம்மருங்கும் – 1.திருமலை:5 38/1

மேல்


கேட்டவர்-தாம் (1)

அந்த மாற்றம் கேட்டவர்-தாம் அயர்வும் பயமும் அதிசயமும் – 6.வம்பறா:2 214/1

மேல்


கேட்டனம் (1)

பெரிதும் சொல கேட்டனம் என்றனர் பிள்ளையார்-தாம் – 6.வம்பறா:1 839/4

மேல்


கேட்டார் (8)

நின்றவர் தம்மை கேட்டார் தேடியும் காணார் மாயை – 2.தில்லை:2 21/3
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் – 5.திருநின்ற:1 31/4
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார் – 5.திருநின்ற:1 177/4
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே – 5.திருநின்ற:4 40/4
நல் நிலை கன்னிநாட்டு நல்_வினை பயத்தால் கேட்டார் – 6.வம்பறா:1 605/4
கிளருறும் ஓகை கூறி வந்தவர் மொழிய கேட்டார் – 6.வம்பறா:1 643/4
இசை விளங்கும் தமிழ் விரகர் திருக்காளத்தி திருமலை இ மலைகளில் யாது என்று கேட்டார் – 6.வம்பறா:1 1019/4
கண்ணுற முன் கண்டு கேட்டார் போல கருதினார் – 6.வம்பறா:2 271/4

மேல்


கேட்டாரும் (1)

கேட்டாரும் கங்குல் புலர் காலை தீயோனும் – 3.இலை:2 31/1

மேல்


கேட்டான் (1)

பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான் – 5.திருநின்ற:4 26/4

மேல்


கேட்டு (105)

வேதியன் அதனை கேட்டு வெண்ணெய் நல் ஊரிலே நீ – 1.திருமலை:5 49/1
தன்னை ஆளுடைய நாதன் தான் அருள்செய்ய கேட்டு
சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப்பாடி நாடர் – 1.திருமலை:5 198/1,2
அரும் தவ தொண்டர்-தாமும் அந்தணர் மொழிய கேட்டு
திருந்திய மனைவியாரை தீண்டாமை செப்பமாட்டார் – 2.தில்லை:2 36/1,2
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும்-பால் ஒன்று வேண்டி – 2.தில்லை:3 6/3
என்ன அ உரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் – 2.தில்லை:3 7/1
யாணர் வெண் கிழி கோவணம் ஈவது கேட்டு
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன் – 2.தில்லை:7 11/3,4
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து – 3.இலை:2 12/3
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம் – 3.இலை:3 29/3,4
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு
கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர் – 3.இலை:3 132/2,3
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார் – 3.இலை:4 10/3,4
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க – 3.இலை:4 24/1
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு – 3.இலை:5 35/4
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை – 3.இலை:7 38/1
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு – 4.மும்மை:1 23/1
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் – 4.மும்மை:5 50/4
மறையோர் மொழிய கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது – 4.மும்மை:6 43/1
நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு – 5.திருநின்ற:1 57/3
புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய் – 5.திருநின்ற:1 79/4
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து – 5.திருநின்ற:1 88/1
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை – 5.திருநின்ற:1 95/1
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும் – 5.திருநின்ற:1 108/1
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும் – 5.திருநின்ற:1 181/2
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண – 5.திருநின்ற:1 201/4
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும் – 5.திருநின்ற:1 232/3
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார் – 5.திருநின்ற:1 233/1,2
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார் – 5.திருநின்ற:1 266/4
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் – 5.திருநின்ற:1 279/4
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி – 5.திருநின்ற:1 294/4
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என – 5.திருநின்ற:1 392/3
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து – 5.திருநின்ற:1 393/1,2
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் – 5.திருநின்ற:1 399/4
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் – 5.திருநின்ற:4 41/2,3
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால் – 5.திருநின்ற:5 3/2
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று – 5.திருநின்ற:5 8/1
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார் – 5.திருநின்ற:5 9/4
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார் – 5.திருநின்ற:5 11/4
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு – 5.திருநின்ற:5 30/4
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர் – 5.திருநின்ற:6 24/4
பானல் வயல் திரு நன்னி பள்ளி என தாதையர் பணிப்ப கேட்டு
ஞான போனகர் தொழுது நல் தமிழ் சொல் தொடை மாலை நவிலல்உற்றார் – 6.வம்பறா:1 114/3,4
வரும் தியான பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார் – 6.வம்பறா:1 265/4
செந்தமிழ் ஞானசம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சுதற்காக – 6.வம்பறா:1 268/3
வாக்கின் பெரு விறல் மன்னர் வந்து அணைந்தார் என கேட்டு
பூ கமழ் வாச தடம் சூழ் புகலி பெருந்தகையாரும் – 6.வம்பறா:1 269/1,2
அணி கிளர் தாரவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அ நிலையின் நின்றே – 6.வம்பறா:1 318/1
அண்டர் பிரான்-தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி – 6.வம்பறா:1 352/4
அனைய நினைவு_அரியோன் செயலை அடியாரை கேட்டு மகிழ்ந்த தன்மை – 6.வம்பறா:1 353/2
கிளைஞரும் மற்று அது கேட்டு கெழுவு திருப்பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை – 6.வம்பறா:1 445/1
மறையவனார் எழுந்தருளும்படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் – 6.வம்பறா:1 460/2
பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்தருளும் பெருமை கேட்டு
திரு மருவு செங்காட்டங்குடி-நின்றும் சிறுத்தொண்டர் ஓடி சென்று அங்கு – 6.வம்பறா:1 468/2,3
பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் – 6.வம்பறா:1 539/3
வீழிமிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா – 6.வம்பறா:1 551/3
திருஞானசம்பந்தர் அதனை கேட்டு சிந்திப்பார் சிவபெருமான் நமக்கு தந்த – 6.வம்பறா:1 569/1
சேர எழுந்தருளிய அ பேறு கேட்டு திறை மறைக்காட்டு அகன் பதியோர் சிறப்பில் பொங்கி – 6.வம்பறா:1 576/2
பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்-தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டு
சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை – 6.வம்பறா:1 577/2,3
ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பை – 6.வம்பறா:1 580/3
புகலி காவலர் தாம் கேட்டு பொருவு_இலா அருள் முன் கூர – 6.வம்பறா:1 611/1
சிரபுரத்து பிள்ளையார் அருளி செய்த திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு – 6.வம்பறா:1 617/1
சிரபுர செல்வர் அவர் உரை கேட்டு திரு முக தாமரை மலர்ந்து – 6.வம்பறா:1 657/1
இங்கு எழுந்தருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி – 6.வம்பறா:1 660/1
என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி – 6.வம்பறா:1 684/1
கண்டு முட்டு அடிகள்மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் – 6.வம்பறா:1 692/2
மன்னவன் உரைப்ப கேட்டு மங்கையர்க்கரசியார்-தாம் – 6.வம்பறா:1 693/1
குரவ ஓதியார் குலச்சிறையாருடன் கேட்டு
சிவபுர பிள்ளையாரை இ தீயவர் நாட்டு – 6.வம்பறா:1 708/2,3
மொழிந்து அருள அது கேட்டு முன் இறைஞ்சி முகம் மலர்வார் – 6.வம்பறா:1 735/1
மன்னவன் மாற்றம் கேட்டு வடிவு போல் மனத்து மாசு – 6.வம்பறா:1 762/1
தோற்கவும் ஆசை நீங்கா துணிவிலார் சொல்ல கேட்டு இ – 6.வம்பறா:1 795/1
அங்கு அது கேட்டு நின்ற அமணரும் அவர் மேல் சென்று – 6.வம்பறா:1 798/1
செப்புதலும் அது கேட்டு திரு மடத்தை சென்று எய்த – 6.வம்பறா:1 878/1
அத்தன்மை கேட்டு அருளி சண்பை வந்த அடல் ஏறு திரு உள்ளத்து அழகு இது என்று – 6.வம்பறா:1 912/1
சொன்ன உரை கேட்டு அருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு – 6.வம்பறா:1 919/1
அ உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்றி அணைந்துடன் அ முத்தி எனும் அதுவும் பாழாம் – 6.வம்பறா:1 921/1
வந்து அருளும் பெரு வார்த்தை வாகீசர் கேட்டு அருளி – 6.வம்பறா:1 931/2
அ வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின் மேல் இழிந்து அருளி – 6.வம்பறா:1 936/1
மன்னு புகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார் – 6.வம்பறா:1 944/4
அ நாடு போற்றுவித்தார் வந்து அணையும் வார்த்தை கேட்டு
எ நாள் பணிவது என ஏற்று எழுந்த மா மறையோர் – 6.வம்பறா:1 951/2,3
ஊனம்_இல் புகழ் அடியார்-பால் கேட்டு உவந்து உளராய் – 6.வம்பறா:1 1037/4
இரும் தமிழ் ஆகரர் அணைந்தார் என கேட்டு வந்து அணைந்தார் – 6.வம்பறா:1 1142/4
மற்றவர்-தம் மொழி கேட்டு மா தவத்தின் கொழுந்து அனையார் – 6.வம்பறா:1 1157/1
தக்க புகழ் நம்பாண்டார் நம்பி-தாம் அது கேட்டு
செக்கர் சடை முடியார்-தம் திரு பாதம் தொழுது எழுவார் – 6.வம்பறா:1 1163/3,4
மங்கல நீள் மண_வினை நாள் கேட்டு மிக மகிழ்வு எய்தி – 6.வம்பறா:1 1176/2
இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்று இது என்ன கேட்டு
பனி மதி முடியார் அன்றே பரிந்து உமக்கு அளித்தார் நெல் என்று – 6.வம்பறா:2 18/2,3
வன் தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு – 6.வம்பறா:2 160/1
திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் என கேட்டு
பெரு நாம பதியோரும் தொண்டர்களும் பெரு வாழ்வு – 6.வம்பறா:2 169/1,2
தாதையாரும் அது கேட்டு தன்மை விளம்ப தகாமையினால் – 6.வம்பறா:2 215/1
மாதராரை பெற்றார் மற்று அதனை கேட்டு மனம் மருண்டார் – 6.வம்பறா:2 215/4
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அமர்ந்து இருந்தார் காதலினால் – 6.வம்பறா:2 267/4
மற்ற மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன் தொண்டர் – 6.வம்பறா:2 318/1
நாதரும் அதனை கேட்டு நங்கை நீ நம்பி செய்த – 6.வம்பறா:2 344/1
நம்பர்-தாம் அதனை கேட்டு நகையும் உள் கொண்டு மெய்ம்மை – 6.வம்பறா:2 346/1
இம்பரின் மிக்க வார்த்தை ஏயர்கோனார்-தாம் கேட்டு
வெம்பினார் அதிசயித்தார் வெருவினார் விளம்பல் உற்றார் – 6.வம்பறா:2 383/3,4
பேறு இது பெற்றார் கேட்டு பிழை உடன்படுவர் ஆகி – 6.வம்பறா:2 388/2
முந்துற ஒழியாது என்று மொழிந்து அருள்செய்ய கேட்டு – 6.வம்பறா:2 391/4
கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு
தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் – 6.வம்பறா:2 396/2,3
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் – 6.வம்பறா:4 7/1
அருகர் அது கேட்டு உன் தெய்வத்து அருளால் கண் நீ பெற்றாயேல் – 6.வம்பறா:4 10/1
இட வகையில் தனி புகுதோம் என்று அருள அது கேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனை – 7.வார்கொண்ட:3 38/2,3
நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் – 7.வார்கொண்ட:4 44/4
ஆடும் பெருமான் பாடல் கேட்டு அருளி தாழ்த்தபடி தமக்கு – 7.வார்கொண்ட:4 60/1
முறை புரியும் முதல் வேந்தர் மூவர்களும் கேட்டு அஞ்சி – 7.வார்கொண்ட:4 104/2
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி – 8.பொய்:2 38/1
அரசனும் அதனை கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னே – 12.மன்னிய:1 16/1
பரிவினால் பாட கேட்டு பரமனார் அருளினாலே – 12.மன்னிய:5 5/4
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டு பாட கேட்டு அங்கண் – 12.மன்னிய:5 8/3
ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ் பெரும்பாணர்க்கு – 12.மன்னிய:5 11/1
இ தன்மையினை கேட்டு அருளி இரங்கும் திரு உள்ளத்தினராம் – 13.வெள்ளானை:1 7/1
வெம் வாய் முதலை விழுங்கும் மடு எங்கே என்று வினவி கேட்டு
அ ஆழ் பொய்கை கரையில் எழுந்தருளி அவனை அன்று கவர் – 13.வெள்ளானை:1 10/2,3

மேல்


கேட்டும் (1)

புகலியில் வந்த ஞான புங்கவர் அதனை கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு – 6.வம்பறா:1 854/1,2

மேல்


கேட்டே (5)

என்று அவன் கூற கேட்டே யான் அவற்கு உறுதி கூற – 2.தில்லை:5 10/1
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே
எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என – 3.இலை:5 17/2,3
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க – 5.திருநின்ற:1 286/2,3
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை – 5.திருநின்ற:4 54/2,3
வாழி மா தவர் வணிகர் செய் திறம் சொல கேட்டே
ஆழி சூழ் மயிலாபுரி திரு நகர் அணைந்தார் – 6.வம்பறா:1 1075/3,4

மேல்


கேட்டோம் (1)

பேச இன்று உன்னை கேட்டோம் பித்தனோ மறையோய் என்றார் – 1.திருமலை:5 40/4

மேல்


கேட்ப (9)

தெருள் பெறு சவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான் – 1.திருமலை:5 58/4
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெரும் தொண்டர் கேட்ப
இறையில் இங்கு எய்த புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து – 2.தில்லை:2 22/2,3
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான் – 2.தில்லை:4 26/3,4
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப – 3.இலை:1 47/4
எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் – 6.வம்பறா:1 595/2
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்ப
கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் – 6.வம்பறா:1 1053/1,2
ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார் – 6.வம்பறா:4 15/4
வனிதையாரும் கணவரும் முன் வணங்கி கேட்ப மற்று அவர்-தாம் – 7.வார்கொண்ட:3 72/3
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப – 8.பொய்:2 9/2,3

மேல்


கேட்பது (1)

பேயனேன் பொறுக்க ஒண்ணா பிழையினை செவியால் கேட்பது
ஆயின பின்னும் மாயாது இருந்தது என் ஆவி என்பார் – 6.வம்பறா:2 384/3,4

மேல்


கேட்பன (1)

கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள் – 1.திருமலை:3 8/4

மேல்


கேட்பார் (1)

ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் அளவு_இல் இன்ப ஆனந்தம் – 7.வார்கொண்ட:4 58/1

மேல்


கேட்பிக்க (1)

தம்பிரானார்க்கு எதிர்நின்று தமிழ் சொல்_மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும் ஒருவர் அதற்கு பரிசில் என – 7.வார்கொண்ட:4 57/1,2

மேல்


கேட்பித்த (1)

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திரு உலா புறம் கொண்டு – 13.வெள்ளானை:1 48/1

மேல்


கேட்பித்தார் (3)

இம்பர் நீட எழுந்த ஒலி-தாமும் எதிரே கேட்பித்தார் – 7.வார்கொண்ட:4 57/4
நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்க கேட்பித்தார்
தா_இல் பெருமை சேரலனார் தம்பிரானார் தாம் கொண்டார் – 7.வார்கொண்ட:4 69/3,4
அருளும் ஈசரும் சொல்லுக என்றனர் அன்பரும் கேட்பித்தார் – 13.வெள்ளானை:1 47/4

மேல்


கேடு (4)

கேட்க விரும்பி வன் தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே – 1.திருமலை:5 128/1
கீளொடு கோவணம் சாத்தி கேடு இலா – 2.தில்லை:2 11/1
கேடு இலா பெரியோய் என்-பால் வைத்தது கெடுதலாலே – 2.தில்லை:2 25/1
கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2

மேல்


கேடு_இல் (1)

கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2

மேல்


கேடும் (1)

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் – 1.திருமலை:4 8/1

மேல்


கேண்-மின் (2)

இந்த மொழி கேண்-மின் எதிர் யாவர்களும் என்றான் – 1.திருமலை:5 33/3
ஆவது இது கேண்-மின் மறையோர் என் அடியான் இ – 1.திருமலை:5 37/1

மேல்


கேண்மை (4)

வாள் நிலாவு பூண் வயவர்கள் மைத்துன கேண்மை
பேண நீடிய முறையது பெரும் தொண்டைநாடு – 4.மும்மை:5 4/3,4
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் – 5.திருநின்ற:1 187/4
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் – 5.திருநின்ற:1 243/3,4
மற்று அவர்-தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் – 6.வம்பறா:1 466/1

மேல்


கேண்மையில் (1)

தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி – 5.திருநின்ற:1 212/3

மேல்


கேண்மையினார் (3)

கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் – 5.திருநின்ற:1 45/2
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும் – 5.திருநின்ற:1 203/1,2
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார்
அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது – 6.வம்பறா:1 17/1,2

மேல்


கேண்மையினால் (1)

உற்றது ஒரு கேண்மையினால் உடன் சில நாள் உறைவதற்கு – 6.வம்பறா:3 2/3

மேல்


கேண்மையும் (1)

தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும் – 5.திருநின்ற:6 34/2

மேல்


கேணி (2)

வடு வகிர் கண் மங்கையர் குளிப்பன மணல் கேணி – 4.மும்மை:5 35/4
பாங்கு மூன்று_உலகத்தில் உள்ளோரும் பரவு தீர்த்தமாம் பைம் புனல் கேணி
வாங்கு தெண் திரை வேலை மேகலை சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய் – 4.மும்மை:5 73/2,3

மேல்


கேதகை (1)

முள்ளிடை புற வெள் இதழ் கேதகை முகிழ் விரி மணம் சூழ – 6.வம்பறா:1 145/2

மேல்


கேதமும் (1)

கேதமும் வருத்த மீண்டும் வன் தொண்டர் வரவும் கேட்டு – 6.வம்பறா:2 396/2

மேல்


கேதனங்கள் (1)

நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும் – 1.திருமலை:2 33/3

மேல்


கேதார (1)

வட மாதிரத்து பருப்பதமும் திரு கேதார மலையும் முதல் – 6.வம்பறா:2 198/1

மேல்


கேதாரம் (1)

மன்னு திரு கேதாரம் வழிபட்டு மா முனிவர் – 6.வம்பறா:3 3/1

மேல்


கேரம் (1)

நாளி கேரம் செருந்தி நறு மலர் நரந்தம் எங்கும் – 1.திருமலை:2 28/1

மேல்


கேரளனார் (1)

கரவு_இல் ஈகை கேரளனார் தங்கள் கடல் சூழ் மலை நாட்டு – 7.வார்கொண்ட:4 127/2

மேல்


கேழல் (2)

நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல் – 3.இலை:3 89/4
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு – 3.இலை:3 99/1

மேல்


கேள் (7)

நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று – 3.இலை:3 156/4
தீங்கு-தன்னை கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் – 4.மும்மை:6 41/4
காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் – 6.வம்பறா:1 691/2
மானின் நேர் விழியினாய் கேள் மற்று எனை பாலன் என்று – 6.வம்பறா:1 760/2
சாரும் தவத்து சங்கிலி கேள் சால என்-பால் அன்பு உடையான் – 6.வம்பறா:2 239/1
மன்ன கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்த குளம் கல்ல – 6.வம்பறா:4 16/1
கேள் ஆகி பல் உயிர்க்கும் அருள் உடையாராய் கெழுமி – 7.வார்கொண்ட:1 2/3

மேல்


கேள்வர் (2)

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை-பால் அணைந்து நண்ண – 2.தில்லை:2 5/1
கெழு நீர்மையினில் அருள் பெற்று போந்து பரவையார் கேள்வர்
முழு நீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார் – 6.வம்பறா:2 70/3,4

மேல்


கேள்வன் (2)

வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் – 5.திருநின்ற:3 3/3
பயிலை செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுற – 5.திருநின்ற:3 11/1

மேல்


கேள்வன்-தானும் (1)

மறையவன் ஆகி நின்ற மலை_மகள்_கேள்வன்-தானும் – 2.தில்லை:2 22/1

மேல்


கேள்வனார் (1)

பற்றும் துயில் நீங்கிட பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையார் அருளாலே வேம் மண்கல்லே விரி சுடர் செம் – 6.வம்பறா:2 50/2,3

மேல்


கேள்வி (2)

முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி
தொல் நெறி அமைச்சன் மன்னன் தாள் இணை தொழுது சொல்வான் – 1.திருமலை:3 30/3,4
நூல் அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் – 1.திருமலை:5 14/3

மேல்


கேளா (19)

மன்னவன் அதனை கேளா வருந்திய பசுவை நோக்கி – 1.திருமலை:3 30/1
என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆன் கனைப்பு கேட்ட – 1.திருமலை:5 68/1
அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர் கேளா நம்பிஆரூரர் தாமோ – 1.திருமலை:5 98/1
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா – 2.தில்லை:3 16/3
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன் – 2.தில்லை:3 30/1
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி – 3.இலை:1 20/2
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா
கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி – 3.இலை:1 27/1,2
அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா – 3.இலை:2 10/4
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை – 3.இலை:4 18/1
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி – 3.இலை:5 30/1
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை – 5.திருநின்ற:1 236/1
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே – 5.திருநின்ற:1 397/1
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை – 5.திருநின்ற:4 48/2,3
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய் – 5.திருநின்ற:5 13/1
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம் – 5.திருநின்ற:5 35/1
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல் – 5.திருநின்ற:7 12/3,4
எ உயிர்க்கும் அவன் கேளா மெல்_இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான் – 6.வம்பறா:1 313/4
மந்த உணர்வும் விழி குருடும் கேளா செவியும் மற்று உமக்கே – 6.வம்பறா:4 8/3
ஆடல் சிலம்பின் ஒலி கேளா உடைவாள் அகற்றி அங்கை மலர் – 7.வார்கொண்ட:4 43/1

மேல்


கேளாது (1)

மான பூசை முடிவின் கண் கேளாது ஒழிய மதிமயங்கி – 7.வார்கொண்ட:4 41/4

மேல்


கேளாய் (1)

சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ என்ன – 6.வம்பறா:4 8/2

மேல்


கேளான் (1)

அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க – 3.இலை:1 28/3,4

மேல்


கேளிர் (1)

கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வுறு நாள் – 6.வம்பறா:1 21/4

மேல்


கேளிரே (1)

கேளிரே ஆகி கெட்டேன் என விரைந்து எழுந்து கையில் – 6.வம்பறா:2 404/3

மேல்


கேளீர் (1)

எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்னும் – 1.திருமலை:5 123/3

மேல்


கேளும் (2)

கேளும் துணையும் முதல் கேடு_இல் பதங்கள் எல்லாம் – 4.மும்மை:1 9/2
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார் – 5.திருநின்ற:3 6/4

மேல்


கேளுறும் (1)

கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார் – 5.திருநின்ற:1 45/2

மேல்