வெ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகாது 1
வெஃகி 1
வெட்சி 5
வெட்சியாரை 1
வெட்சியும் 1
வெட்சிஅரவம் 1
வெண் 7
வெண்குடையான் 1
வெண்கொண்டல் 1
வெண்கொண்டல்_அன்னாரை 1
வெண்துறை 1
வெண்துறையும் 1
வெண்பா 2
வெப்பு 1
வெம் 46
வெம்மை 1
வெய்து 2
வெய்ய 5
வெய்யோய் 2
வெய்யோர் 1
வெய்யோற்கு 2
வெய்யோன் 15
வெயர் 1
வெருவந்த 1
வெருவருநிலையே 1
வெருவரும் 1
வெருவி 1
வெல் 18
வெல்_கழலான் 1
வெல்ல 1
வெல்லும் 2
வெவ் 1
வெள் 14
வெள்வரகு 1
வெள்ளணி 1
வெள்ளத்து 1
வெள்ளம் 9
வெள்ளி 3
வெள்ளிநிலையே 1
வெள்ளில் 1
வெளிப்பட 1
வெளிப்படஇரத்தல் 1
வெளிப்படுத்தன்று 1
வெளிப்படுத்தாய் 1
வெற்பன் 2
வெற்பின் 1
வெறி 6
வெறியாட்டு 2
வெறியாடின்று 1
வென் 3
வென்ற 3
வென்றன்று 1
வென்றார் 1
வென்றாள் 1
வென்றான் 1
வென்றி 15
வென்றியும் 1
வென்றியொடு 1
வென்றியோடு 1
வென்று 9

வெஃகாது (1)

வியப்பு ஓவல்_இல்லா வியல் இடத்து வெஃகாது
உய போகல் எண்ணின் உறும் – புபொவெபாமா:12 11/3,4

மேல்

வெஃகி (1)

குலாவும் சிலையார் குறும்பு கொள வெஃகி
உலாவும் உழப்பு ஒழிக வேந்தன் கலாவும் – புபொவெபாமா:4 7/1,2

மேல்

வெட்சி (5)

வெட்சி வெட்சிஅரவம் விரிச்சி செலவு – புபொவெபாமா:1 1/1
வெட்சியும் வெட்சி துறையும் ஆகும் – புபொவெபாமா:1 1/9
வெட்சி என்பது இரு வகைத்து மன்னுறு – புபொவெபாமா:1 2/1
வெட்சி மலைய விரவார் மணி நிரை – புபொவெபாமா:1 9/3
வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி – புபொவெபாமா:19 1/1

மேல்

வெட்சியாரை (1)

வெட்சியாரை கண்ணுற்று வளைஇ – புபொவெபாமா:2 8/1

மேல்

வெட்சியும் (1)

வெட்சியும் வெட்சி துறையும் ஆகும் – புபொவெபாமா:1 1/9

மேல்

வெட்சிஅரவம் (1)

வெட்சி வெட்சிஅரவம் விரிச்சி செலவு – புபொவெபாமா:1 1/1

மேல்

வெண் (7)

கரும்_கண்ணி வெண் கட்டில் கால் – புபொவெபாமா:5 18/4
வெண் கோட்ட களிறு எறிந்து செம் களத்து வீழ்ந்தார்க்கு – புபொவெபாமா:7 22/1
வெண் கண்ணியும் கரும் கழலும் – புபொவெபாமா:8 4/1
கரும் கழல் வெண் குடையான் காவல் விரும்பான் – புபொவெபாமா:8 49/2
கரும் கழல் வெண் குடை காவலர்க்கு செவ் வாய் – புபொவெபாமா:9 47/1
கரு மழை கண் வெண் முறுவல் பேதை திரு முலை – புபொவெபாமா:14 15/2
அரும்பிய வெண் முத்து உகுப்ப கரும்பு உடை தோள் – புபொவெபாமா:15 9/2

மேல்

வெண்குடையான் (1)

தாள் தாழ் தடக்கை தனி மதி வெண்குடையான்
வாள் தானை வெள்ளம் வரவு அஞ்சி மீட்டான் – புபொவெபாமா:3 35/1,2

மேல்

வெண்கொண்டல் (1)

வெண்கொண்டல்_அன்னாரை விட்டு – புபொவெபாமா:18 2/4

மேல்

வெண்கொண்டல்_அன்னாரை (1)

வெண்கொண்டல்_அன்னாரை விட்டு – புபொவெபாமா:18 2/4

மேல்

வெண்துறை (1)

வெண்துறை யாழ்ப்பாணர் விளம்பின்று – புபொவெபாமா:9 38/2

மேல்

வெண்துறையும் (1)

வெண்துறையும் செந்துறையும் வேற்றுமையாய் கண்டு அறிய – புபொவெபாமா:18 19/2

மேல்

வெண்பா (2)

வெண்பா மாலை என பெயர் நிறீஇ – புபொவெபாமா:0 5/11
மெய்யின் ஆர் தமிழ் வெண்பா மாலையுள் – புபொவெபாமா:18 1/13

மேல்

வெப்பு (1)

வெப்பு உடை தானை எம் வேந்து – புபொவெபாமா:7 3/4

மேல்

வெம் (46)

வெம் கள் மலிய விளிவது-கொல் வேற்றார் மேல் – புபொவெபாமா:1 33/3
வெம் கட்கு வீசும் விலையாகும் செம் கண் – புபொவெபாமா:1 35/2
வெம் முனை நிலை_உணர்த்தியோர்க்கு – புபொவெபாமா:1 36/1
எங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப வெம் கல் – புபொவெபாமா:2 7/2
அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி – புபொவெபாமா:2 9/3
வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம் – புபொவெபாமா:2 11/1
வெம் கள் மகிழ்ந்து விழவு அயர அம் குழைய – புபொவெபாமா:3 3/2
ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப – புபொவெபாமா:4 9/1
நுணங்கு அரில் வெம் முனை நோக்கி அணங்கிய – புபொவெபாமா:4 15/2
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/2
வெம் சின வேந்தன் வேற்றவர் பணிப்ப – புபொவெபாமா:4 18/1
விடலைக்கு வெம் கள் விடும் – புபொவெபாமா:4 43/4
விலாழி பரி தானை வெம் திறலார் சீறூர் – புபொவெபாமா:4 45/3
வெம் முரணான் மகள் வேண்ட – புபொவெபாமா:5 17/1
வெள் வாள் கரும் கழல் கால் வெம் சுடர் வேல் தண் அளியான் – புபொவெபாமா:6 11/1
விரை மார்பின் வில் நரல வெம் கணை தூவார் – புபொவெபாமா:6 29/3
புறத்தோன் வெம் சின பொலிவு உரைத்தன்று – புபொவெபாமா:6 46/2
வந்த வகை அறியா வாள் அமருள் வெம் திறல் – புபொவெபாமா:7 15/2
ஆர் கழல் மன்னன் அலங்கு உளை_மா வெம் சிலை – புபொவெபாமா:7 15/3
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம் – புபொவெபாமா:7 21/1
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும் – புபொவெபாமா:7 45/3
வெம் கண் முரசு அதிரும் வேல் அமருள் வில் உதைப்ப – புபொவெபாமா:7 47/1
தம் கணவன் தார் தம் முலை முகப்ப வெம் கணை சேர் – புபொவெபாமா:7 49/2
வெம் தொழில் கூற்றமும் நாணின்று வெம் களத்து – புபொவெபாமா:7 51/1
வெம் தொழில் கூற்றமும் நாணின்று வெம் களத்து – புபொவெபாமா:7 51/1
வெம் முரணான் உயிர் வேட்டன்று – புபொவெபாமா:7 52/2
அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரை காண்பான் – புபொவெபாமா:7 55/3
வெம் திறல் தண் அளி எம் வேந்து – புபொவெபாமா:8 7/4
வெம் சினம் வித்தி புகழ் விளைக்கும் செம் சுடர் வேல் – புபொவெபாமா:8 11/2
அம் சொல் விறலியரும் ஆடுபவே வெம் சமரில் – புபொவெபாமா:8 17/2
வெம் திறலான் வியன் பாசறை வேல் வயவர் விதிர்ப்பு எய்த – புபொவெபாமா:8 32/1
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை – புபொவெபாமா:8 37/3
வெம் திறல் எஃகம் இறை கொளீஇ முந்தை – புபொவெபாமா:8 43/2
வெம் கதிர் வேல் தண் தெரியல் வேந்தற்கு பொங்கும் – புபொவெபாமா:8 59/2
வெம் களத்து வேல் உயர்த்த வேந்து – புபொவெபாமா:9 23/4
ஈண்டி எருவை இறகு உளரும் வெம் களத்து – புபொவெபாமா:9 39/1
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து – புபொவெபாமா:9 49/3
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் இன் நிழல் வேல் – புபொவெபாமா:9 68/2
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் இன் நிழல் வேல் – புபொவெபாமா:9 68/2
விறல் படை மறவர் வெம் சமம் காணின் – புபொவெபாமா:10 6/1
வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து – புபொவெபாமா:11 3/3
வேந்து ஆர்ப்ப வெம் சமத்து வேல் அழுவம் தாங்கினான் – புபொவெபாமா:11 23/1
தவ பெரிய வெம் சமம் குறுகும் – புபொவெபாமா:11 24/1
வெம் துயர் பெருக வெளிப்பட இரந்தன்று – புபொவெபாமா:14 18/2
வெம் கள் களியால் விறலி விழாக்கொள்ளல் – புபொவெபாமா:17 25/3
தகருடன் யானை தணப்பு_இல் வெம் பூழொடு – புபொவெபாமா:18 1/8

மேல்

வெம்மை (1)

கூடிய வெம்மை குளிர்கொள்ள பாடி – புபொவெபாமா:10 21/2

மேல்

வெய்து (2)

வென் வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்ப தன் வேல் – புபொவெபாமா:4 5/2
ஓங்கல் அரணத்து ஒளி வளையார் வெய்து உயிர்ப்ப – புபொவெபாமா:6 33/3

மேல்

வெய்ய (5)

கையகத்து கொண்டான் கழல் விடலை வெய்ய
விடு சுடர் சிந்தி விரை அகலம் போழ்ந்த – புபொவெபாமா:7 33/2,3
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் வெய்ய
அடும் திறல் ஆழி அரவு அணையாய் என்றும் – புபொவெபாமா:9 7/2,3
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின் வெய்ய
பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று – புபொவெபாமா:12 9/2,3
பெய் வளையாட்கு பிறிது இல்லை வெய்ய
வளி மறையும் இன்றி வழக்கு ஒழியா வாயில் – புபொவெபாமா:13 9/2,3
வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளி நினையா – புபொவெபாமா:17 21/1

மேல்

வெய்யோய் (2)

கள் அவிழ் கண்ணி கழல் வெய்யோய் சென்று அறிந்து – புபொவெபாமா:1 15/3
கழி மகிழ் வென்றி கழல் வெய்யோய் ஈய – புபொவெபாமா:2 23/3

மேல்

வெய்யோர் (1)

இன வேங்கை அன்ன இகல் வெய்யோர் காவல் – புபொவெபாமா:4 7/3

மேல்

வெய்யோற்கு (2)

வில் நின்ற தானை விறல் வெய்யோற்கு அ மதிலின் – புபொவெபாமா:6 65/3
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆக என்று – புபொவெபாமா:10 25/3

மேல்

வெய்யோன் (15)

உரம் வெய்யோன் இனம் தழீஇ – புபொவெபாமா:1 26/1
பெரு வரை சீறுர் கருதி செரு வெய்யோன்
காஞ்சி மலைய கடைக்கணித்து நிற்பதோ – புபொவெபாமா:4 3/2,3
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/2
வெவ் வேல் வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் அ வேலே – புபொவெபாமா:4 47/2
பூக்கள் மலி தார் புகழ் வெய்யோன் கோயிலுள் – புபொவெபாமா:6 9/3
வேலை விறல் வெய்யோன் நோக்குதலும் மாலை – புபொவெபாமா:6 47/2
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர் – புபொவெபாமா:7 31/1
கழு மணி பைம் பூண் கழல் வெய்யோன் ஊரும் – புபொவெபாமா:7 35/3
கள் அவிழ் கண்ணி கழல் வெய்யோன் வாள் அமர் – புபொவெபாமா:7 53/3
வெய்யோன் கதிர் விரிய விண் மேல் ஒளி எல்லாம் – புபொவெபாமா:9 27/1
அறம் தரு செங்கோல் அருள் வெய்யோன்
பிறந்த நாள் சிறப்பு உரைத்தன்று – புபொவெபாமா:9 48/1,2
அடும் தடக்கை நோன் தாள் அமர் வெய்யோன் ஈயும் – புபொவெபாமா:9 60/3
கழல் வெய்யோன் கல் வாழ்த்தின்று – புபொவெபாமா:10 26/2
இல் என்றல் தேற்றா இகல் வெய்யோன் விண் படர – புபொவெபாமா:11 29/3
சென்று கழிந்தான் செரு வெய்யோன் என்றும் – புபொவெபாமா:11 31/2

மேல்

வெயர் (1)

வெயர் பொடிப்ப சினம் கடைஇ – புபொவெபாமா:7 26/1

மேல்

வெருவந்த (1)

வேலார் வெருவந்த தோற்றத்தார் காலன் – புபொவெபாமா:2 5/2

மேல்

வெருவருநிலையே (1)

தானைநிலையே வெருவருநிலையே
சிருங்காரநிலையே உவகைக்கலுழ்ச்சி – புபொவெபாமா:7 1/10,11

மேல்

வெருவரும் (1)

வெருவரும் வாள் அமர் விளிந்தோன் கண்டு – புபொவெபாமா:2 20/1

மேல்

வெருவி (1)

வெருவி மற வேந்தர் வெல் களிறு எல்லாம் – புபொவெபாமா:4 13/3

மேல்

வெல் (18)

வில் மேல் அசைஇய கை வெல்_கழலான் தன் மேல் – புபொவெபாமா:1 25/2
ஆள் கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்து அளித்தான் – புபொவெபாமா:4 9/3
வெருவி மற வேந்தர் வெல் களிறு எல்லாம் – புபொவெபாமா:4 13/3
விழு மதில் வெல் களிறு பாய கழி மகிழ்வு – புபொவெபாமா:6 3/2
கதிர் ஓடை வெல் களிறு பாய கலங்கி – புபொவெபாமா:6 9/1
வெல் பொறியும் நாடும் விழு பொருளும் தண்ணடையும் – புபொவெபாமா:7 5/1
ஆழி தேர் வெல் புரவி அண்ணல் மத யானை – புபொவெபாமா:7 11/3
எழு உறழ் திணி தோள் வேந்தன் வெல் தேர் – புபொவெபாமா:7 34/1
வெம் பரி மா ஊர்ந்தார்க்கும் வெல் களிற்றின் மேலார்க்கும் – புபொவெபாமா:7 45/3
பாடினார் வெல் புகழை பல் புலவர் கூடார் – புபொவெபாமா:8 3/2
வெல் நெறியே காட்டும் விளக்கு – புபொவெபாமா:9 25/4
வெல் புரவி பூண்ட விளங்கு மணி திண் தேர் – புபொவெபாமா:9 51/1
வேந்தன் உள் மகிழ வெல் புகழ் அறைந்தோர்க்கு – புபொவெபாமா:9 52/1
குஞ்சர வெல் படையான் கொள்ளானோ எஞ்சும் – புபொவெபாமா:9 64/2
விரும்பார் அமரிடை வெல் போர் வழுதி – புபொவெபாமா:10 4/1
வெல் கழல் வீக்குவர் வேல் இளையர் மல்கும் – புபொவெபாமா:10 7/2
விலங்குநர் ஈங்கு இல்லை வெல் வேலோய் சென்றீ – புபொவெபாமா:16 39/1
மேல் கொண்டு அவை செலீஇ வெல் வேலான் மேம்பட்டான் – புபொவெபாமா:18 14/3

மேல்

வெல்_கழலான் (1)

வில் மேல் அசைஇய கை வெல்_கழலான் தன் மேல் – புபொவெபாமா:1 25/2

மேல்

வெல்ல (1)

வெல்ல பெருகும் படையாற்கு வேந்தர் மேல் – புபொவெபாமா:3 49/3

மேல்

வெல்லும் (2)

சொல்லும் பல உள சொன்ன பின் வெல்லும்
நலம் வர நாடி நடுங்காது நூல்-கண் – புபொவெபாமா:18 10/2,3
ஒலி மணி திண் தேர்_உடையாரை வெல்லும்
கலி மணி திண் தேரால் காளை கலி_மா – புபொவெபாமா:18 15/1,2

மேல்

வெவ் (1)

வெவ் வேல் வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் அ வேலே – புபொவெபாமா:4 47/2

மேல்

வெள் (14)

கரும் தலையும் வெள் நிணமும் செம் தடியும் ஈரா – புபொவெபாமா:4 29/1
வெள் வாள் கரும் கழல் கால் வெம் சுடர் வேல் தண் அளியான் – புபொவெபாமா:6 11/1
கரும் கழல் மறவரொடு வெள் வளை விறலியர் – புபொவெபாமா:7 36/1
வேந்தொடு வெள் வாள் விதிர்த்து – புபொவெபாமா:7 43/4
வெள் வாள் வேந்தன் வேண்டியது ஈயவும் – புபொவெபாமா:8 54/1
வெள் வாள் அமருள் செஞ்சோறு அல்லது – புபொவெபாமா:8 60/1
கொள்வார் நடுவண் கொடை ஓம்பான் வெள் வாள் – புபொவெபாமா:9 15/2
வெம் முரண் வேந்தரும் வெள் வளையார் தோள் விழைந்து – புபொவெபாமா:9 49/3
விடன் ஏந்தும் வேலோற்கும் வெள் வளையினாட்கும் – புபொவெபாமா:11 19/3
வெள் வளை நல்காள் விடும் என் உயிரே – புபொவெபாமா:14 19/4
வெள் வளை விறலிதோழிக்குவிளம்பல் – புபொவெபாமா:17 1/9
வெள் வளை நெகிழவும் எம் உள்ளாத – புபொவெபாமா:17 18/1
கரிய பெரும் தடம் கண் வெள் வளைக்கையாளை – புபொவெபாமா:17 35/1
வெள் எயிற்று செவ் வாய் வரி உண்கணாள் வளர்த்த – புபொவெபாமா:18 13/3

மேல்

வெள்வரகு (1)

வெள்வரகு கொள் வித்திடினும் விளியாதால் – புபொவெபாமா:6 53/3

மேல்

வெள்ளணி (1)

கரும் பகடும் செம்பொன்னும் வெள்ளணி நாள் பெற்றார் – புபொவெபாமா:9 49/1

மேல்

வெள்ளத்து (1)

எள்ள துணிந்த இருள் மாலை வெள்ளத்து
தண் தார் அகலம் தழூஉ புணையா நீ நல்கின் – புபொவெபாமா:17 9/2,3

மேல்

வெள்ளம் (9)

ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி – புபொவெபாமா:2 23/1
ஒளிறு வாள் வெள்ளம் உழக்கி களிறு எறிந்து – புபொவெபாமா:3 27/2
வாள் தானை வெள்ளம் வரவு அஞ்சி மீட்டான் – புபொவெபாமா:3 35/2
பெரும் படை வெள்ளம் நெரிதரவும் பேரா – புபொவெபாமா:3 39/3
செரு மலி வெம் களத்து செம் குருதி வெள்ளம்
அரு முரண் ஆழி தொடர வரும் அரோ – புபொவெபாமா:7 21/1,2
ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி – புபொவெபாமா:7 27/3
வாள் வெள்ளம் தன் மேல் வர – புபொவெபாமா:7 27/4
வெள்ளம் போல் தானை வியந்து விரவாரை – புபொவெபாமா:8 25/1
தாழ் புயல் வெள்ளம் தரும் அரோ சூழ் புரவி – புபொவெபாமா:9 33/2

மேல்

வெள்ளி (3)

உயர் வெள்ளி நிலை உரைத்தன்று – புபொவெபாமா:9 32/2
சூழ் கதிர் வான் விளக்கும் வெள்ளி சுடர் விரிய – புபொவெபாமா:9 33/1
வெள்ளி முளைத்த விடியல் வயல் ஆமை – புபொவெபாமா:9 37/1

மேல்

வெள்ளிநிலையே (1)

வேள்விநிலையொடு வெள்ளிநிலையே
நாடுவாழ்த்தொடு கிணையதுநிலையே – புபொவெபாமா:9 1/7,8

மேல்

வெள்ளில் (1)

வெள்ளில் விளைவு உதிரும் வேய் ஓங்கும் வெம் சுரத்து – புபொவெபாமா:11 3/3

மேல்

வெளிப்பட (1)

வெம் துயர் பெருக வெளிப்பட இரந்தன்று – புபொவெபாமா:14 18/2

மேல்

வெளிப்படஇரத்தல் (1)

வெளிப்படஇரத்தல் என இ ஒன்பதும் – புபொவெபாமா:14 1/4

மேல்

வெளிப்படுத்தன்று (1)

வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று – புபொவெபாமா:4 12/2

மேல்

வெளிப்படுத்தாய் (1)

உய்ய உருவம் வெளிப்படுத்தாய் வெய்ய – புபொவெபாமா:9 7/2

மேல்

வெற்பன் (2)

கோடு உயர் வெற்பன் கூப்பிய கையொடு – புபொவெபாமா:16 34/1
வெய்ய நெடிது உயிரா வெற்பன் அளி நினையா – புபொவெபாமா:17 21/1

மேல்

வெற்பின் (1)

கோடு உயர் வெற்பின் நிலம் கண்டு இரை கருதும் – புபொவெபாமா:6 41/1

மேல்

வெறி (6)

வேல் முருகற்கு ஆடும் வெறி – புபொவெபாமா:1 45/4
வேல் முருகற்கு வெறி ஆடின்று – புபொவெபாமா:9 81/2
வேலனொடு ஆடும் வெறி – புபொவெபாமா:9 82/4
வெறி கொள் அறை அருவி வேங்கடத்து செல்லின் – புபொவெபாமா:9 84/1
வேங்கை அம் சிலம்பற்கு வெறி ஆடின்று – புபொவெபாமா:17 20/3
வியன் மனையுள் ஆடும் வெறி – புபொவெபாமா:17 21/4

மேல்

வெறியாட்டு (2)

கொற்றவைநிலையே வெறியாட்டு உளப்பட – புபொவெபாமா:1 1/7
தேம் கமழ் கூந்தல் தெரிவை வெறியாட்டு
அரிவைக்கு அவள் துணை பாண்வரவுரைத்தல் – புபொவெபாமா:17 1/5,6

மேல்

வெறியாடின்று (1)

வேலனொடு வெறியாடின்று – புபொவெபாமா:1 44/2

மேல்

வென் (3)

வென் வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:3 48/2
வென் வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்ப தன் வேல் – புபொவெபாமா:4 5/2
வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென் வேல் – புபொவெபாமா:9 35/3

மேல்

வென்ற (3)

முரசு அதிர வென்ற தேர் முன் – புபொவெபாமா:8 15/4
காரினை வென்ற கவி_கையான் கை வளம் – புபொவெபாமா:9 58/3
குஞ்சரம் வென்ற கொலை வேழம் துஞ்சாது – புபொவெபாமா:18 9/2

மேல்

வென்றன்று (1)

அரண் அகத்தோரை அமர் வென்றன்று – புபொவெபாமா:6 44/2

மேல்

வென்றார் (1)

அகத்தாரை வென்றார் அமர் – புபொவெபாமா:6 45/4

மேல்

வென்றாள் (1)

பாய வகையால் பணிதம் பல வென்றாள்
ஆய வகையும் அறிந்து – புபொவெபாமா:18 17/3,4

மேல்

வென்றான் (1)

வேந்தனை வென்றான் விறல் முருகன் ஏந்தும் – புபொவெபாமா:9 43/2

மேல்

வென்றி (15)

வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பு இன்றியும் – புபொவெபாமா:1 3/1
தடக்கையாய் வென்றி தரும் – புபொவெபாமா:1 11/4
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில் – புபொவெபாமா:1 31/3
கழி மகிழ் வென்றி கழல் வெய்யோய் ஈய – புபொவெபாமா:2 23/3
நீள் தோளான் வென்றி கொள்க என நிறை மண்டை வலன் உயரி – புபொவெபாமா:3 10/1
பல் இசை வென்றி படை கடலான் சென்று இறுப்ப – புபொவெபாமா:3 51/3
வெம் முனை வென்றி விறல் வெய்யோன் தம் முனை – புபொவெபாமா:4 17/2
வென்றி அமரர் விருந்து – புபொவெபாமா:5 5/4
நகப்படா வென்றி நலம் மிகு தாராற்கு – புபொவெபாமா:6 13/3
வீய போர் செய்தாலும் வென்றி அரிது அரோ – புபொவெபாமா:6 23/3
வென்றி விளையா விழு மதிலோர் என்றும் – புபொவெபாமா:6 63/2
ஆள் அமர் வென்றி அடுகளத்து தோள் பெயரா – புபொவெபாமா:7 43/2
ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்கு – புபொவெபாமா:10 16/1
வில் கொண்ட வென்றி விறல் மறவர் எல்லோரும் – புபொவெபாமா:10 29/3
வென்றி பதாகை எடுத்தானாம் மன்றில் – புபொவெபாமா:17 5/2

மேல்

வென்றியும் (1)

நீள் நெறி உழவன் நிலன் உழு வென்றியும்
இகல் புரி ஏறொடு கோழியும் எதிர்வன் – புபொவெபாமா:18 1/6,7

மேல்

வென்றியொடு (1)

பிடி என்கின்ற பெரும் பெயர் வென்றியொடு
உடையன பிறவும் உளப்பட தொகைஇ – புபொவெபாமா:18 1/11,12

மேல்

வென்றியோடு (1)

வென்றியோடு புகழ் விளைக்கும் என – புபொவெபாமா:6 24/1

மேல்

வென்று (9)

வென்று ஆர்த்து விரல் மறவர் – புபொவெபாமா:1 20/1
வென்று களம் கொள்ளா வேல் உயர்ப்பின் என்றும் – புபொவெபாமா:4 19/2
இன்று நாம் வைகல் இழிவு ஆகும் வென்று ஒளிரும் – புபொவெபாமா:6 25/2
வென்று ஏந்திய விறல் படையோன் – புபொவெபாமா:8 14/1
வென்று அன்றி மீளா விறல் வேந்தர் வெம் பகை – புபொவெபாமா:8 37/3
வேலான் விறல் முனை வென்று அடக்கி கோலால் – புபொவெபாமா:9 17/2
ஒன்ற உயிர் களிப்ப ஓம்பலால் வென்று அமருள் – புபொவெபாமா:9 54/2
வென்று களம் கொண்ட வேல் வேந்தே சென்று உலாம் – புபொவெபாமா:9 74/2
ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி – புபொவெபாமா:9 74/3

மேல்