ஆ முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 2
ஆக்கம் 1
ஆக்கி 1
ஆக 9
ஆகம் 4
ஆகி 6
ஆகிய 1
ஆகும் 24
ஆகோள் 2
ஆங்கண் 1
ஆங்கு 8
ஆங்கே 2
ஆஞ்சிக்காஞ்சி 1
ஆட்டி 1
ஆட்டு 2
ஆட 3
ஆடரங்கம் 1
ஆடல் 5
ஆடலொடு 1
ஆடவர் 3
ஆடவர்க்கு 1
ஆடவன் 2
ஆடி 3
ஆடிய 1
ஆடின்று 11
ஆடினார் 1
ஆடினாள் 1
ஆடு 6
ஆடுபவே 1
ஆடும் 10
ஆடுறு 1
ஆடையாளும் 1
ஆண் 2
ஆண்ட 1
ஆண்பால் 1
ஆண்பால்கிளவி 1
ஆண்மை 2
ஆண்மையை 1
ஆணை 1
ஆதல் 2
ஆதலால் 1
ஆதி 1
ஆம் 6
ஆம்-கொல் 3
ஆம்பல் 1
ஆமால் 1
ஆமை 2
ஆய் 10
ஆய்_இழை 4
ஆய்_இழையால் 1
ஆய்ந்த 2
ஆய்ந்து 13
ஆய்வது 1
ஆய 4
ஆயத்து 1
ஆயம் 4
ஆயனா 1
ஆயாது 1
ஆயிற்றே 1
ஆயினார் 1
ஆயினும் 1
ஆயும் 1
ஆர் 46
ஆர்_அமிர்தம் 1
ஆர்_அமுதம் 1
ஆர்_அமுது 1
ஆர்_உயிர் 1
ஆர்_உயிரும் 1
ஆர்_உயிரை 2
ஆர்க்கும் 4
ஆர்த்தன்று 1
ஆர்த்திட்டு 1
ஆர்த்து 5
ஆர்ந்தார் 1
ஆர்ந்தின்று 1
ஆர்ந்து 4
ஆர்ப்ப 8
ஆர்ப்பு 1
ஆர 3
ஆரம் 2
ஆராய்ந்த 1
ஆர்எயில் 1
ஆரே 1
ஆலிப்ப 1
ஆலின 1
ஆலும் 1
ஆவது-கொல் 1
ஆழ் 2
ஆழ்ந்த 1
ஆழ்ந்து 1
ஆழ 1
ஆழி 7
ஆழியவன் 1
ஆழும் 1
ஆள் 11
ஆள்வினை 1
ஆள்வினைவேள்வி 1
ஆளி 1
ஆளெறிபிள்ளை 1
ஆற்ற 1
ஆற்றல் 2
ஆற்றலும் 1
ஆற்றா 3
ஆற்றாமை 1
ஆற்றார் 1
ஆற்றார்க்கு 1
ஆற்றால் 1
ஆற்றாள் 2
ஆற்றிடை 1
ஆற்றின் 2
ஆற்றின்று 1
ஆற்றுப்படுத்தன்று 5
ஆற்றேன் 1
ஆறா 1
ஆறி 1
ஆறிய 2
ஆறில் 1
ஆறினார் 1
ஆறு 4
ஆறுமேல் 1
ஆறே 1
ஆன் 4
ஆன்_நிரை 1
ஆனந்தப்பையுள் 1
ஆனந்தம்மே 1
ஆனா 3
ஆனாது 2
ஆனார் 1
ஆனாள் 1

ஆ (2)

சென்று இகல் முனை ஆ தந்தன்று – புபொவெபாமா:1 3/2
கன்றோடும் ஆ தழீஇயன்று – புபொவெபாமா:1 20/2

மேல்

ஆக்கம் (1)

ஆக்கம் அவன்-கண் அகலாவால் வீக்கம் – புபொவெபாமா:6 13/2

மேல்

ஆக்கி (1)

அவை எல்லாம் ஆக்கி அணங்கு – புபொவெபாமா:18 16/4

மேல்

ஆக (9)

வாளொடு வைகுவேன் யான் ஆக நாளும் – புபொவெபாமா:2 23/2
பௌவம் பணை முழங்க பற்றார் மண் பாழ் ஆக
வௌவிய வஞ்சி வலம் புனைய செவ் வேல் – புபொவெபாமா:3 5/1,2
மருப்பு தோள் ஆக மதர் விடையின் சீறி – புபொவெபாமா:7 29/1
தோளொடு வீழ்ந்த தொடி கை துடுப்பு ஆக
மூளை அம் சோற்றை முகந்து – புபொவெபாமா:8 13/3,4
பெரு நல்லான் உழையீர் ஆக என – புபொவெபாமா:9 59/1
யாமம் நீடு ஆக என்ன யாழ்_மொழியார் கைதொழூம் – புபொவெபாமா:9 102/3
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆக என்று – புபொவெபாமா:10 25/3
கரும் தடம் கண் வண்டு ஆக செவ் வாய் தளிரா – புபொவெபாமா:14 3/1
எல் ஆக நெஞ்சம் எதிர் – புபொவெபாமா:16 9/4

மேல்

ஆகம் (4)

புல வாள் நெடுந்தகை பூம் பொழில் ஆகம்
கலவாமல் காத்த கணை – புபொவெபாமா:7 47/3,4
பூம் புனல் ஆகம் கெழீஇயினான் போர் அடு தோள் – புபொவெபாமா:9 72/3
அரி கொண்ட கண் சிவப்ப அல்லின் என் ஆகம்
புரி கொண்ட நூல் வடுவா புல்லி வரி வண்டு – புபொவெபாமா:9 98/1,2
குவைஇ இணைந்த குவி முலை ஆகம்
கவைஇ கவலை இலம் – புபொவெபாமா:13 3/3,4

மேல்

ஆகி (6)

ஒருதான் ஆகி ஆள் எறிந்தன்று – புபொவெபாமா:2 14/2
ஒருதான் ஆகி இகல் மிகுத்தன்று – புபொவெபாமா:6 26/2
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் நோனா – புபொவெபாமா:7 35/2
சுடு சுடர் தான் ஆகி சொல்லவே வீழ்ந்த – புபொவெபாமா:8 19/3
வீளை கடும் கணையால் வேறு ஆகி விண் படர்ந்த – புபொவெபாமா:10 17/3
புகை அழல் வேலோன் புணர்ப்பு ஆகி நின்றாள் – புபொவெபாமா:11 17/3

மேல்

ஆகிய (1)

அமர்-கண் முடியும் அறு வகை ஆகிய
கொடிநிலை கந்தழி வள்ளி குணம் சால் – புபொவெபாமா:9 1/21,22

மேல்

ஆகும் (24)

வெட்சியும் வெட்சி துறையும் ஆகும் – புபொவெபாமா:1 1/9
மறுத்து உரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:3 50/2
எடுத்துரைப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 10/2
புண் கிழித்து முடியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 30/2
இன் உயிர் நீப்பினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:4 46/2
நொச்சி திணையும் துறையும் ஆகும் – புபொவெபாமா:5 1/7
இன்று நாம் வைகல் இழிவு ஆகும் வென்று ஒளிரும் – புபொவெபாமா:6 25/2
மிளை கடத்தலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 28/2
ஆடலொடு அடையினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 30/2
அரு முரணான் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 42/2
ஆற்றின் உணரின் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 10/2
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
அ துறைக்கு உரித்து ஆகும் – புபொவெபாமா:8 50/2
இயல்பே மொழியினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 14/2
துன்னினன் என்றலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 22/2
சுடரொடு பொருவினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:9 26/2
ஆங்கு எண்ணினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:10 22/2
அவற்கு இரங்கினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:11 24/2
காவல் கூறினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 18/2
பெரு வளம் ஏத்தினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:13 20/2
ஆண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:14 1/5
ஆகும் மற்று இவள் அகல் இடத்து அணங்கே – புபொவெபாமா:14 7/4
பெண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:15 1/5
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும்
கைக்கிளை பெருந்திணை ஆம் இ இரண்டும் – புபொவெபாமா:19 1/5,6

மேல்

ஆகோள் (2)

வேயே புறத்திறை ஊர்கொலை ஆகோள்
பூசன்மாற்றே புகழ் சுரத்துஉய்த்தல் – புபொவெபாமா:1 1/2,3
அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார் – புபொவெபாமா:1 43/3

மேல்

ஆங்கண் (1)

நறும் பூம் சாரல் ஆங்கண்
குறும் சுனை மலர்ந்தன தடம் பெரும் கண்ணே – புபொவெபாமா:14 13/3,4

மேல்

ஆங்கு (8)

ஆர்_உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அஃதால் – புபொவெபாமா:8 61/3
ஆங்கு அவாறு எண் பகுதி பொருளும் – புபொவெபாமா:9 1/32
ஆங்கு எண்ணினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:10 22/2
பால்முல்லையொடு கற்புமுல்லை என்று ஆங்கு
இரு_நால் முல்லையும் பொதுவியல் பால – புபொவெபாமா:13 1/4,5
ஆங்கு அவர் கூறிய பருவம் அன்று என – புபொவெபாமா:17 14/1
ஆங்கு அ நிலைமை யாய் அறியாமை – புபொவெபாமா:17 20/2
ஆங்கு அவன் மூப்பு அவர்க்கு அரும் களி தரும் என – புபொவெபாமா:17 28/1
விளிந்து ஆங்கு ஒழியினும் விட்டு அகலார்-தம்மை – புபொவெபாமா:17 35/3

மேல்

ஆங்கே (2)

முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே
உயங்கினாள் ஓங்கிற்று உயிர் – புபொவெபாமா:4 27/3,4
தாங்காள் வரை மார்பின் தார் பரிந்து ஆங்கே
அடும் படர் மூழ்கி அமை மென் தோள் வாட – புபொவெபாமா:16 17/2,3

மேல்

ஆஞ்சிக்காஞ்சி (1)

ஆஞ்சிக்காஞ்சி மகட்பால்காஞ்சி – புபொவெபாமா:4 1/10

மேல்

ஆட்டி (1)

நயத்தக மண்ணி நறு விரை கொண்டு ஆட்டி
கயத்து-அகத்து உய்த்திட்டார் கல் – புபொவெபாமா:10 21/3,4

மேல்

ஆட்டு (2)

அடி இரட்டித்திட்டு ஆடும் ஆட்டு – புபொவெபாமா:2 17/4
அழல் வேல் திரித்து ஆட்டு அமர்ந்தன்று – புபொவெபாமா:7 30/2

மேல்

ஆட (3)

அவிழ் மலர் கோதையர் ஆட ஒருபால் – புபொவெபாமா:3 37/1
ஆனா வயவர் முன் ஆட அமர்க்களத்து – புபொவெபாமா:7 35/1
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமே – புபொவெபாமா:7 37/3

மேல்

ஆடரங்கம் (1)

அணி கொள் வன முலையார் ஆடரங்கம் ஏறி – புபொவெபாமா:6 7/3

மேல்

ஆடல் (5)

தோல் ஏந்தி ஆடல் தொடர்ந்து – புபொவெபாமா:6 31/4
ஆடல் அமர்ந்தான் அமர் வெய்யோன் வீழ் குடர் – புபொவெபாமா:7 31/1
ஆடல் அமர்ந்தான் அடி அடைந்தார் என் பெறார் – புபொவெபாமா:9 88/1
ஆடல் அமர்ந்தாற்கு அரிதால் உமையாளை – புபொவெபாமா:9 96/3
இவர் தரு சூதிடை ஆடல் பாடல் – புபொவெபாமா:18 1/10

மேல்

ஆடலொடு (1)

ஆடலொடு அடையினும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 30/2

மேல்

ஆடவர் (3)

மைந்து உடை ஆடவர் செய் தொழில் கூறலும் – புபொவெபாமா:3 12/1
பெரும் சோறு ஆடவர் பெறு முறை வகுத்தன்று – புபொவெபாமா:3 46/2
தொடி அணி தோள் ஆடவர் தும்பை புனைய – புபொவெபாமா:10 5/1

மேல்

ஆடவர்க்கு (1)

அடல் வேல் ஆடவர்க்கு அன்றியும் அ இல் – புபொவெபாமா:8 42/1

மேல்

ஆடவன் (2)

வென் வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:3 48/2
வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:4 4/2

மேல்

ஆடி (3)

ஆடி அசையா அடி இரண்டும் பாடி – புபொவெபாமா:9 86/2
அழுதார் கண் நீர் விடுத்த ஆறு ஆடி கூகை – புபொவெபாமா:12 13/3
கல் அருவி ஆடி கரும் களிறு கார் அதிரும் – புபொவெபாமா:14 11/1

மேல்

ஆடிய (1)

ஆடிய சாந்தின் அணி தொடர்ந்து வாடிய – புபொவெபாமா:16 23/2

மேல்

ஆடின்று (11)

புண் மகிழ்ந்து புகன்று ஆடின்று – புபொவெபாமா:2 16/2
வேல் திரித்து விரும்பி ஆடின்று – புபொவெபாமா:2 18/2
முழு வலி வயவர் முன் ஆடின்று – புபொவெபாமா:7 34/2
பெருந்தகை தேரின் பின் ஆடின்று – புபொவெபாமா:7 36/2
பின்னும் முன்னும் பேய் ஆடின்று – புபொவெபாமா:7 38/2
ஒலி கழலான் உடன் ஆடின்று – புபொவெபாமா:7 42/2
முன் தேர்க்-கண் அணங்கு ஆடின்று – புபொவெபாமா:8 14/2
மொய் வளை விறலியர் வயவரொடு ஆடின்று – புபொவெபாமா:8 16/2
வேல் முருகற்கு வெறி ஆடின்று – புபொவெபாமா:9 81/2
தோழி நீங்காள் தூதிடை ஆடின்று – புபொவெபாமா:17 6/2
வேங்கை அம் சிலம்பற்கு வெறி ஆடின்று – புபொவெபாமா:17 20/3

மேல்

ஆடினார் (1)

காய்ந்து அடு துப்பின் கழல் மறவர் ஆடினார்
வேந்தொடு வெள் வாள் விதிர்த்து – புபொவெபாமா:7 43/3,4

மேல்

ஆடினாள் (1)

ஐயம் நனி நீங்க ஆடினாள் மையல் – புபொவெபாமா:17 21/2

மேல்

ஆடு (6)

ஆடு அரவம் பூண்டான் அழல் உண சீறிய – புபொவெபாமா:5 3/1
ஆடு இயல் அவிர் சடையான் – புபொவெபாமா:6 16/1
அம் தழை அல்குலும் ஆடு அமை மென் தோளும் – புபொவெபாமா:6 59/1
ஆடு அரிமா_அன்னான் கிடப்ப அகத்து உவகை – புபொவெபாமா:7 51/3
ஆடு அமை தோளி விரிச்சியும் சொகினமும் – புபொவெபாமா:11 22/1
மல் ஆடு தோளான் அளி அவாய் மால் இருள்-கண் – புபொவெபாமா:15 23/1

மேல்

ஆடுபவே (1)

அம் சொல் விறலியரும் ஆடுபவே வெம் சமரில் – புபொவெபாமா:8 17/2

மேல்

ஆடும் (10)

வேல் முருகற்கு ஆடும் வெறி – புபொவெபாமா:1 45/4
அடி இரட்டித்திட்டு ஆடும் ஆட்டு – புபொவெபாமா:2 17/4
பிணி கொள் பேய் ஆடும் பெயர்த்து – புபொவெபாமா:6 7/4
கணம் கொள் பேய் ஆடும் களித்து – புபொவெபாமா:7 39/4
புல வாய புன் தலை பேய் ஆடும் கலவா – புபொவெபாமா:8 15/2
சூலமொடு ஆடும் சுடர் சடையான் காதலற்கு – புபொவெபாமா:9 82/3
வேலனொடு ஆடும் வெறி – புபொவெபாமா:9 82/4
வாரான்-கொல் ஆடும் வலம் – புபொவெபாமா:16 11/4
வியன் மனையுள் ஆடும் வெறி – புபொவெபாமா:17 21/4
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும்
தொடு கழல் மன்னன் துடி – புபொவெபாமா:18 18/3,4

மேல்

ஆடுறு (1)

அறாஅ நிலை சாடி ஆடுறு தேறல் – புபொவெபாமா:1 7/1

மேல்

ஆடையாளும் (1)

புனல் ஆடையாளும் புனை குடை கீழ் வைக – புபொவெபாமா:8 59/3

மேல்

ஆண் (2)

ஏறு ஆண் குடி எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:8 44/2
ஆண் தக நின்ற அமர் வெய்யோற்கு ஆக என்று – புபொவெபாமா:10 25/3

மேல்

ஆண்ட (1)

ஓங்கிய சிறப்பின் உலகம் முழுது ஆண்ட
வாங்கு வில் தடக்கை வானவர் மருமான் – புபொவெபாமா:0 5/7,8

மேல்

ஆண்பால் (1)

ஆண்பால் கூற்று கைக்கிளை ஆகும் – புபொவெபாமா:14 1/5

மேல்

ஆண்பால்கிளவி (1)

ஆண்பால்கிளவி பெண்பால்கிளவி – புபொவெபாமா:17 1/4

மேல்

ஆண்மை (2)

தன் ஆண்மை எடுத்துரைத்தன்று – புபொவெபாமா:3 24/2
அவன் என்று உலகு ஏத்தும் ஆண்மை இவன் அன்றி – புபொவெபாமா:6 51/2

மேல்

ஆண்மையை (1)

நல் ஆண்மையை நலம் மிகுத்தன்று – புபொவெபாமா:8 46/2

மேல்

ஆணை (1)

ஆணை கொண்டு அடிப்பட இருந்தன்று – புபொவெபாமா:6 62/2

மேல்

ஆதல் (2)

தமருள் தலை ஆதல் தார் தாங்கி நிற்றல் – புபொவெபாமா:3 13/1
விண் வேண்டின் வேறு ஆதல் மங்கலம் வேந்தர்க்கு – புபொவெபாமா:9 21/1

மேல்

ஆதலால் (1)

அங்கையுள் நெல்லி அதன் பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடை_நிழல் கீழ் தங்கி – புபொவெபாமா:2 27/1,2

மேல்

ஆதி (1)

ஆதி வணிகர்க்கு அரசு – புபொவெபாமா:8 21/4

மேல்

ஆம் (6)

வஞ்சியும் வஞ்சி துறையும் ஆம் – புபொவெபாமா:3 1/13
கிளியொடு நேர் ஆம் கிளவியார் வாள் கண் – புபொவெபாமா:6 43/3
இழுது ஆர் வேல் தானை இகலின் பழுது ஆம்
செயிர் காவல் பூண்டு ஒழுகும் செங்கோலார் செல்வம் – புபொவெபாமா:7 7/2,3
ஆம் இனி மூப்பும் அகன்றது இளமையும் – புபொவெபாமா:8 67/1
கைக்கிளை பெருந்திணை ஆம் இ இரண்டும் – புபொவெபாமா:19 1/6
அகப்புறம் ஆம் என அறைந்தனர் புலவர் – புபொவெபாமா:19 1/7

மேல்

ஆம்-கொல் (3)

ஆம்-கொல் அரிய அமர் – புபொவெபாமா:6 33/4
எழில் வாய்ந்த தோளி எவன் ஆம்-கொல் கானல் – புபொவெபாமா:17 11/3
வரும் பருவம் அன்று-கொல் ஆம்-கொல் சுரும்பு இமிரும் – புபொவெபாமா:17 13/2

மேல்

ஆம்பல் (1)

ஆம்பல் நுடங்கும் அணி வளையும் ஏகின – புபொவெபாமா:17 11/1

மேல்

ஆமால் (1)

வீடு உணர்ந்தோர்க்கும் வியப்பு ஆமால் இ நின்ற – புபொவெபாமா:3 39/1

மேல்

ஆமை (2)

பகடு வாழ்க என்று பனி வயலுள் ஆமை
அகடு போல் அம் கண் தடாரி துகள் துடைத்து – புபொவெபாமா:8 65/1,2
வெள்ளி முளைத்த விடியல் வயல் ஆமை
அள் அகட்டு அன்ன அரிக்கிணை வள்ளியோன் – புபொவெபாமா:9 37/1,2

மேல்

ஆய் (10)

பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய்
புடை தேன் இமிர் கண்ணி பூம் கண் புதல்வர் – புபொவெபாமா:3 17/2,3
ஆய் கழலான் கட்டூர் அகத்து – புபொவெபாமா:3 37/4
ஐயவி சிந்தி நறை புகைத்து ஆய் மலர் தூய் – புபொவெபாமா:4 39/1
ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
இ மூவுலகில் இருள் கடியும் ஆய் கதிர் போல் – புபொவெபாமா:8 27/1
அரி பாய் உண்கண் ஆய்_இழை புணர்ந்தோன் – புபொவெபாமா:13 14/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை – புபொவெபாமா:14 12/1
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை – புபொவெபாமா:14 13/1
அம் சொல் பெரும் பணை தோள் ஆய் இழையாய் தாம் நொடியும் – புபொவெபாமா:17 23/1
அறியேன் அடி உறை ஆய்_இழையால் பெற்றேன் – புபொவெபாமா:17 33/3

மேல்

ஆய்_இழை (4)

ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2
அரி பாய் உண்கண் ஆய்_இழை புணர்ந்தோன் – புபொவெபாமா:13 14/1
அழி படர் எவ்வம் கூர ஆய்_இழை
பழி தீர் நல் நலம் பாராட்டின்று – புபொவெபாமா:14 12/1,2
அம் மென் கிளவி கிளி பயில ஆய்_இழை
கொம்மை வரி முலை கோங்கு அரும்ப இ மலை – புபொவெபாமா:14 13/1,2

மேல்

ஆய்_இழையால் (1)

அறியேன் அடி உறை ஆய்_இழையால் பெற்றேன் – புபொவெபாமா:17 33/3

மேல்

ஆய்ந்த (2)

அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழி தேர் மன்னன் – புபொவெபாமா:3 9/1
ஆய்ந்த புலவர் அது என மொழிப – புபொவெபாமா:11 14/2

மேல்

ஆய்ந்து (13)

ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினை – புபொவெபாமா:1 17/3
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினை – புபொவெபாமா:1 17/3
ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும் – புபொவெபாமா:1 31/1
கிளை ஆய்ந்து பண்ணிய கேள்வி யாழ்ப்பாணும் – புபொவெபாமா:7 37/1
வளையா வயவரும் பின்னர் கொளை ஆய்ந்து
அசை விளங்கும் பாடலொடு ஆட வருமே – புபொவெபாமா:7 37/2,3
அளியும் என்று இவை ஆய்ந்து உரைத்தன்று – புபொவெபாமா:9 2/2
ஒன்றில் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால் – புபொவெபாமா:9 74/1
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த – புபொவெபாமா:12 7/1
வள்வு ஆய்ந்து பண்ணுக திண் தேர் வடி கண்ணாள் – புபொவெபாமா:17 7/1
காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து
நிறம் கண்டு வித்தகர் நேர்விட்ட கோழி – புபொவெபாமா:18 7/2,3
புலவரால் ஆய்ந்து அமைத்த பூழ் – புபொவெபாமா:18 10/4
அளக திரு நுதலாள் ஆய்ந்து புழகத்து – புபொவெபாமா:18 17/2
அ நரம்பும் அ சுவையும் ஆய்ந்து – புபொவெபாமா:18 19/4

மேல்

ஆய்வது (1)

ஐ_ஐந்தும் ஆய்வது அறிவு – புபொவெபாமா:8 67/4

மேல்

ஆய (4)

மெய் ஆய பொருள் நயந்தன்று – புபொவெபாமா:8 66/2
மங்கலம் ஆய நுகர்ந்தான் மற மன்னர் – புபொவெபாமா:9 23/3
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த – புபொவெபாமா:12 7/1
ஆய வகையும் அறிந்து – புபொவெபாமா:18 17/4

மேல்

ஆயத்து (1)

பற்றார்-தம் முனை படு மணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று – புபொவெபாமா:1 14/1,2

மேல்

ஆயம் (4)

விடை ஆயம் கொள்க என்றான் வேந்து – புபொவெபாமா:1 5/4
கொள்ளை கொள ஆயம் தலைக்கொண்டார் எள்ளி – புபொவெபாமா:2 15/2
நகை அமர் ஆயம் நடுங்க நடுங்கான் – புபொவெபாமா:4 31/1
பூம்_குழை ஆயம் புலர்க என்னும் நீங்கா – புபொவெபாமா:4 45/2

மேல்

ஆயனா (1)

ஆயனா எண்ணல் அவன் அருளால் காய – புபொவெபாமா:9 80/2

மேல்

ஆயாது (1)

ஆயாது அறிவு அயர்ந்து அல்லாந்து அகல் இடத்து – புபொவெபாமா:12 5/1

மேல்

ஆயிற்றே (1)

கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று – புபொவெபாமா:4 47/4

மேல்

ஆயினார் (1)

ஏயினார் ஏய இகல் மறவர் ஆயினார்
ஒன்றியவர் அற ஊர் புலத்து தார் தாங்கி – புபொவெபாமா:5 5/2,3

மேல்

ஆயினும் (1)

மண் கொண்ட வேல் மற மன்னரே ஆயினும்
வெண்கொண்டல்_அன்னாரை விட்டு – புபொவெபாமா:18 2/3,4

மேல்

ஆயும் (1)

ஆயும் அடு திறலாற்கு அன்பு இலார் இல் போலும் – புபொவெபாமா:4 33/1

மேல்

ஆர் (46)

தவள தாமரை தாது ஆர் கோயில் – புபொவெபாமா:0 4/1
அடிபடுத்து ஆர் அதர் செல்வான் துடி படுத்து – புபொவெபாமா:1 9/2
வண்டு ஆர் கமழ் கண்ணி வாழ்க என்று கண்டாள் – புபொவெபாமா:1 29/2
அழுங்கல் நீர் வையகத்து ஆர்_உயிரை கூற்றம் – புபொவெபாமா:2 3/1
தார் ஆர் கரந்தை தலை மலைந்து தாம் கோடல் – புபொவெபாமா:2 3/3
கால் ஆர் கழலார் கடும் சிலையார் கைக்கொண்ட – புபொவெபாமா:2 5/1
பருந்து ஆர் படை அமருள் பல்லார் புகழ – புபொவெபாமா:3 25/3
கண் ஆர் சிலையார் கவர்ந்தார் கழல் வேந்தன் – புபொவெபாமா:3 31/3
அகத்தன ஆர் கழல் நோன் தாள் அரணின் – புபொவெபாமா:5 14/1
கொடி நுடங்கு ஆர் எயில் கொள கருதின்று – புபொவெபாமா:6 2/2
பேணார் பிறை தொடும் பேம் மதில் பூண் ஆர்
அணி கொள் வன முலையார் ஆடரங்கம் ஏறி – புபொவெபாமா:6 7/2,3
மடை ஆர் மணி பூண் அடையாதார் மார்பில் – புபொவெபாமா:6 15/3
ஓவார் விலங்கி உடலவும் பூ ஆர்
அகழி பரந்து ஒழுகும் செம் குருதி சேற்று – புபொவெபாமா:6 35/2,3
நெறி ஆர் நெடு மதிலுள் நேரார் மறியாம் – புபொவெபாமா:6 43/2
இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான் – புபொவெபாமா:6 55/3
பருந்து ஆர் செரு மலைய பாடி பெயராது – புபொவெபாமா:6 63/3
கழுது ஆர் பறந்தலை கண்ணுற்று தம்முள் – புபொவெபாமா:7 7/1
இழுது ஆர் வேல் தானை இகலின் பழுது ஆம் – புபொவெபாமா:7 7/2
மின் ஆர் சினம் சொரி வேல் மீளி கடல் தானை – புபொவெபாமா:7 11/1
ஆர் கழல் மன்னன் அலங்கு உளை_மா வெம் சிலை – புபொவெபாமா:7 15/3
கட்டு ஆர் கமழ் தெரியல் காவலன் காமர் தேர் – புபொவெபாமா:7 21/3
வான் ஆர் மின் ஆகி வழி நுடங்கும் நோனா – புபொவெபாமா:7 35/2
அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரை காண்பான் – புபொவெபாமா:7 55/3
வழுவான் வழி நின்று வண்டு ஆர் வயலுள் – புபொவெபாமா:8 23/3
ஆர்_உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அஃதால் – புபொவெபாமா:8 61/3
உறை ஆர் விசும்பின் உவாமதி போல் – புபொவெபாமா:8 63/1
அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் துன்னும் – புபொவெபாமா:9 3/2
காயல் ஓங்கு எஃகு இமைக்கும் கண் ஆர் கொடி மதில் – புபொவெபாமா:9 5/3
மேலார் இறை அமருள் மின் ஆர் சினம் சொரியும் – புபொவெபாமா:9 17/1
ஆர் எயில் மன்னன் மட மகள் அம் பணை தோள் – புபொவெபாமா:9 45/3
வேம்பு ஆர் தெரியல் எம் வேந்து – புபொவெபாமா:9 72/4
சுரும்பு ஆர் முடி மிசை பூ புகழ்ந்தன்று – புபொவெபாமா:10 4/2
அலங்கல் அமர் அழுவத்து ஆர் – புபொவெபாமா:10 7/4
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர்
விழுக்கினால் வேய்ந்த விறல் வேலோர் கல்லை – புபொவெபாமா:10 23/2,3
மூது அரில் நிவந்த முது கழை ஆர் இடை – புபொவெபாமா:11 4/1
சாந்து ஆர் அகலத்து தாழ் வடு புண் தாம் தணியா – புபொவெபாமா:11 23/2
அன்னா அலம்வரும் என் ஆர்_உயிரும் என்னாம்-கொல் – புபொவெபாமா:11 25/2
இணர் ஆர் கோதை என் நெஞ்சத்து இருந்தும் – புபொவெபாமா:14 8/1
இணர் ஆர் நறும் கோதை எல் வளையாள் கூட்டம் – புபொவெபாமா:14 17/1
தார் ஆர் மார்பன் தமியேன் உயிர் தளர – புபொவெபாமா:16 11/3
போது ஆர் கூந்தல் பொலம் தொடி அரிவை – புபொவெபாமா:17 10/1
பேணிய பிறர் முயக்கு ஆர்_அமுது அவற்கு என – புபொவெபாமா:17 26/1
அதிரும் புனல் ஊரற்கு ஆர்_அமிர்தம் அன்றோ – புபொவெபாமா:17 27/3
வண்டு ஆர் வயல் ஊரன் வைகினமை உண்டால் – புபொவெபாமா:17 33/2
மெய்யின் ஆர் தமிழ் வெண்பா மாலையுள் – புபொவெபாமா:18 1/13
காய்ந்தும் வாய் கொண்டும் கடும் சொல் ஆர் ஆய்ந்து – புபொவெபாமா:18 7/2

மேல்

ஆர்_அமிர்தம் (1)

அதிரும் புனல் ஊரற்கு ஆர்_அமிர்தம் அன்றோ – புபொவெபாமா:17 27/3

மேல்

ஆர்_அமுதம் (1)

அன்ன_நடையினார்க்கு ஆர்_அமுதம் துன்னும் – புபொவெபாமா:9 3/2

மேல்

ஆர்_அமுது (1)

பேணிய பிறர் முயக்கு ஆர்_அமுது அவற்கு என – புபொவெபாமா:17 26/1

மேல்

ஆர்_உயிர் (1)

ஆர்_உயிர் என்னும் அவி வேட்டார் ஆங்கு அஃதால் – புபொவெபாமா:8 61/3

மேல்

ஆர்_உயிரும் (1)

அன்னா அலம்வரும் என் ஆர்_உயிரும் என்னாம்-கொல் – புபொவெபாமா:11 25/2

மேல்

ஆர்_உயிரை (2)

அழுங்கல் நீர் வையகத்து ஆர்_உயிரை கூற்றம் – புபொவெபாமா:2 3/1
அணங்கிய வெம் களத்து ஆர்_உயிரை காண்பான் – புபொவெபாமா:7 55/3

மேல்

ஆர்க்கும் (4)

கார் கருதி வார் முரசம் ஆர்க்கும் கடல் தானை – புபொவெபாமா:6 19/3
அணிவரும் பூம் சிலம்பு ஆர்க்கும் அடி மேல் – புபொவெபாமா:16 35/1
கொண்டான் பதாகை மற மல்லன் வண்டு ஆர்க்கும்
மாலை துயலும் அருவிய மா மலை – புபொவெபாமா:18 4/2,3
தத்து நீர் ஆர்க்கும் கடல் வேலி தாயர் போல் – புபொவெபாமா:18 5/3

மேல்

ஆர்த்தன்று (1)

அலை கடல் தானை அரசு அட்டு ஆர்த்தன்று – புபொவெபாமா:8 2/2

மேல்

ஆர்த்திட்டு (1)

ஆர்த்திட்டு அமருள் அடையாரை அ முனையில் – புபொவெபாமா:4 51/3

மேல்

ஆர்த்து (5)

வென்று ஆர்த்து விரல் மறவர் – புபொவெபாமா:1 20/1
வில்லார் குறும்பிடை வேறுவேறு ஆர்த்து எழுந்த – புபொவெபாமா:4 13/1
அரண் அகத்து பாய்ந்து இழிந்தார் ஆர்த்து – புபொவெபாமா:6 41/4
அடல் வேந்தன் அட்டு ஆர்த்து அரசு – புபொவெபாமா:8 3/4
நுடங்கு அருவி ஆர்த்து இழியும் நோக்கு_அரும் சாரல் – புபொவெபாமா:16 11/1

மேல்

ஆர்ந்தார் (1)

ஆர்ந்தார் முறையால் அவி – புபொவெபாமா:9 31/4

மேல்

ஆர்ந்தின்று (1)

கொடிதே காண் ஆர்ந்தின்று கூற்று – புபொவெபாமா:7 57/4

மேல்

ஆர்ந்து (4)

கணன் ஆர்ந்து உவப்ப கடுங்கண் மறவர் – புபொவெபாமா:10 23/1
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர் – புபொவெபாமா:10 23/2
கழுது ஆர்ந்து இர வழங்கும் காடு – புபொவெபாமா:12 13/4
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும் – புபொவெபாமா:13 7/3

மேல்

ஆர்ப்ப (8)

தொலைவு_இலார் வீழ தொடு கழல் ஆர்ப்ப
கொலை விலார் கொண்டார் குறும்பு – புபொவெபாமா:1 19/3,4
எங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப வெம் கல் – புபொவெபாமா:2 7/2
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டு ஆர்ப்ப
குஞ்சி மலைத்தான் எம் கோ – புபொவெபாமா:3 3/3,4
இயவர் புகழ எறி முரசு ஆர்ப்ப
குய வரி வேங்கை அனைய வயவர் – புபொவெபாமா:3 47/1,2
வளை ஞரல வயிர் ஆர்ப்ப
மிளை கடத்தலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:6 28/1,2
அடுகளம் ஆர்ப்ப அமர் ஓட்டி தந்த – புபொவெபாமா:9 11/3
வேந்து ஆர்ப்ப வெம் சமத்து வேல் அழுவம் தாங்கினான் – புபொவெபாமா:11 23/1
படு களி வண்டு ஆர்ப்ப பயில்_வளை நின்று ஆடும் – புபொவெபாமா:18 18/3

மேல்

ஆர்ப்பு (1)

ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு – புபொவெபாமா:5 7/4

மேல்

ஆர (3)

அடு திறல் அணங்கு ஆர
விடு திறலான் களம் வேட்டன்று – புபொவெபாமா:8 12/1,2
பிடித்தாடி அன்ன பிறழ் பல் பேய் ஆர
கொடி தானை மன்னன் கொடுத்தான் முடி தலை – புபொவெபாமா:8 13/1,2
பிணை ஆர மார்பம் பிணைய துணையாய் – புபொவெபாமா:16 13/2

மேல்

ஆரம் (2)

தாழ் ஆரம் மார்பினான் தாமரை கண் சேந்தனவால் – புபொவெபாமா:3 17/1
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான் – புபொவெபாமா:3 23/1

மேல்

ஆராய்ந்த (1)

ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று – புபொவெபாமா:1 14/2

மேல்

ஆர்எயில் (1)

காந்தள் புறத்திறை ஆர்எயில் உழிஞையொடு – புபொவெபாமா:6 1/5

மேல்

ஆரே (1)

சீர் சால் போந்தை வேம்பொடு ஆரே
உன்னநிலையே ஏழகநிலையே – புபொவெபாமா:10 1/1,2

மேல்

ஆலிப்ப (1)

ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப
ஐ இலை எஃகம் அவை பலவும் மொய்யிடை – புபொவெபாமா:4 9/1,2

மேல்

ஆலின (1)

பொறி மயில் ஆலின பொங்கர் எழிலி – புபொவெபாமா:17 15/1

மேல்

ஆலும் (1)

மா மயிலும் ஆலும் மலை – புபொவெபாமா:17 13/4

மேல்

ஆவது-கொல் (1)

குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் கருதி – புபொவெபாமா:4 21/2

மேல்

ஆழ் (2)

வாள் வாய்த்த வடு ஆழ் யாக்கை – புபொவெபாமா:7 50/1
ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி – புபொவெபாமா:9 74/3

மேல்

ஆழ்ந்த (1)

தபுதாரத்து ஆழ்ந்த தனி நிலைமை கேளா – புபொவெபாமா:11 7/3

மேல்

ஆழ்ந்து (1)

ஆழ்ந்து படு கிடங்கோடு அரு மிளை காத்து – புபொவெபாமா:5 8/1

மேல்

ஆழ (1)

ஆழ விடுமோ அலரொடு வைகினும் – புபொவெபாமா:16 33/1

மேல்

ஆழி (7)

அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழி தேர் மன்னன் – புபொவெபாமா:3 9/1
புல் ஆழி தலைக்கொண்ட புண் – புபொவெபாமா:4 45/4
சுடர் ஆழி நின்று எரிய சோ – புபொவெபாமா:6 15/4
ஆழி தேர் வெல் புரவி அண்ணல் மத யானை – புபொவெபாமா:7 11/3
அரு முரண் ஆழி தொடர வரும் அரோ – புபொவெபாமா:7 21/2
அடும் திறல் ஆழி அரவு அணையாய் என்றும் – புபொவெபாமா:9 7/3
ஆழி சூழ் வையத்து அகம் மலிய வாழி – புபொவெபாமா:13 21/2

மேல்

ஆழியவன் (1)

அருள் ஈயும் ஆழியவன் – புபொவெபாமா:9 84/4

மேல்

ஆழும் (1)

ஐயம் ஒழியாது ஆழும் என் நெஞ்சே – புபொவெபாமா:14 5/4

மேல்

ஆள் (11)

சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3
ஒருதான் ஆகி ஆள் எறிந்தன்று – புபொவெபாமா:2 14/2
பிள்ளை கடுப்ப பிணம் கறங்க ஆள் எறிந்து – புபொவெபாமா:2 15/1
ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி – புபொவெபாமா:2 23/1
அணங்கு அஞர் செய்து ஆள் எறிதல் நோக்கி வணங்கா – புபொவெபாமா:2 25/2
ஆள் திரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு – புபொவெபாமா:3 29/3
ஆள் கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்து அளித்தான் – புபொவெபாமா:4 9/3
ஆள் வெள்ளம் போகவும் போகான் கை வேல் ஊன்றி – புபொவெபாமா:7 27/3
ஆள் அமர் வென்றி அடுகளத்து தோள் பெயரா – புபொவெபாமா:7 43/2
அடு முரண் அகற்றும் ஆள் உகும் ஞாட்பில் – புபொவெபாமா:10 14/1
கோள் புலி அன்ன குரிசில் கல் ஆள் கடிந்து – புபொவெபாமா:10 29/2

மேல்

ஆள்வினை (1)

ஆள்வினை வேள்வி அவன் – புபொவெபாமா:9 54/4

மேல்

ஆள்வினைவேள்வி (1)

பரிசில்விடையே ஆள்வினைவேள்வி
பாணாற்றுப்படையே கூத்தராற்றுப்படையே – புபொவெபாமா:9 1/14,15

மேல்

ஆளி (1)

ஆளி மணி கொடி பைங்கிளி பாய் கலை – புபொவெபாமா:1 43/1

மேல்

ஆளெறிபிள்ளை (1)

ஆளெறிபிள்ளை பிள்ளைத்தெளிவே – புபொவெபாமா:2 1/4

மேல்

ஆற்ற (1)

அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று – புபொவெபாமா:4 34/2

மேல்

ஆற்றல் (2)

தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று – புபொவெபாமா:4 12/1,2
அணி_இழை மெலிவின் ஆற்றல் கூறின்று – புபொவெபாமா:15 10/2

மேல்

ஆற்றலும் (1)

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் – புபொவெபாமா:9 2/1

மேல்

ஆற்றா (3)

மேல் வரும் படை வரல் மிகவும் ஆற்றா
வேல் வல் ஆடவன் விறல் மிகுத்தன்று – புபொவெபாமா:4 4/1,2
பிடிக்கலும் ஆற்றா பெருந்தகை ஏவ – புபொவெபாமா:4 5/3
பெய் தார் அகலம் பிரிதல் ஆற்றா
கொய் தழை அல்குல் கூட்டத்து குழைந்தன்று – புபொவெபாமா:16 28/1,2

மேல்

ஆற்றாமை (1)

ஆற்றாமை நனி பெருகவும் அயில் வேலோன் அளி துறந்தன்று – புபொவெபாமா:8 30/2

மேல்

ஆற்றார் (1)

ஆற்றார் ஒழிய கூற்று என சினைஇ – புபொவெபாமா:2 6/1

மேல்

ஆற்றார்க்கு (1)

ஆற்றின் உணரின் அருள் அறமாம் ஆற்றார்க்கு
போற்றார் வழங்கின் பொருள் பொருளாம் மாற்றி – புபொவெபாமா:12 3/1,2

மேல்

ஆற்றால் (1)

அழிபு அடல் ஆற்றால் அறிமுறை என்று எட்டின் – புபொவெபாமா:8 39/3

மேல்

ஆற்றாள் (2)

புலவி ஆற்றாள் புலம்பிற்றன்று – புபொவெபாமா:16 16/2
நிற்றல் ஆற்றாள் நெடிது உயிர்த்து அலமரும் – புபொவெபாமா:16 18/1

மேல்

ஆற்றிடை (1)

நிலவு வேல் நெடுந்தகை நீள் கழை ஆற்றிடை
செலவு முன் வலித்து செலவு அழுங்கின்று – புபொவெபாமா:17 2/1,2

மேல்

ஆற்றின் (2)

ஆற்றின் உணரின் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 10/2
ஆற்றின் உணரின் அருள் அறமாம் ஆற்றார்க்கு – புபொவெபாமா:12 3/1

மேல்

ஆற்றின்று (1)

பிறை நுதல் மடந்தை பிரிவிடை ஆற்றின்று – புபொவெபாமா:16 6/2

மேல்

ஆற்றுப்படுத்தன்று (5)

பாணனை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 55/2
கூத்தரை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 57/2
பொருநனை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 59/2
விறலியை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 61/2
பெரும் புலவனை ஆற்றுப்படுத்தன்று – புபொவெபாமா:9 83/2

மேல்

ஆற்றேன் (1)

அழுதழுது வைகலும் ஆற்றேன் தொழுது இரப்பல் – புபொவெபாமா:16 3/2

மேல்

ஆறா (1)

ஒட்டார் படை இடந்த ஆறா புண் ஏந்து அகலம் – புபொவெபாமா:4 37/3

மேல்

ஆறி (1)

முதியம் என்று ஆறி முரண் – புபொவெபாமா:3 21/4

மேல்

ஆறிய (2)

அரும் திறை அளப்ப ஆறிய சினத்தொடு – புபொவெபாமா:3 20/1
ஆறுமேல் ஆறிய பின் அன்றி தம் கை கொள்ளார் – புபொவெபாமா:8 25/3

மேல்

ஆறில் (1)

ஆறில் ஒன்று ஆனாது அளித்து உண்டு மாறு இன்றி – புபொவெபாமா:8 51/2

மேல்

ஆறினார் (1)

ஆறினார் அன்றி அரவும் உடும்பும் போல் – புபொவெபாமா:6 39/3

மேல்

ஆறு (4)

குருதி ஆறு ஆவது-கொல் குன்றூர் கருதி – புபொவெபாமா:4 21/2
ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி – புபொவெபாமா:9 74/3
ஊடல் உணர்த்துவது ஓர் ஆறு – புபொவெபாமா:9 96/4
அழுதார் கண் நீர் விடுத்த ஆறு ஆடி கூகை – புபொவெபாமா:12 13/3

மேல்

ஆறுமேல் (1)

ஆறுமேல் ஆறிய பின் அன்றி தம் கை கொள்ளார் – புபொவெபாமா:8 25/3

மேல்

ஆறே (1)

தன் கண்டனென் யான் கண்ட ஆறே – புபொவெபாமா:15 3/4

மேல்

ஆன் (4)

மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1
கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு – புபொவெபாமா:1 39/3
அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே – புபொவெபாமா:2 7/3
அரு முனை வெம் சுரத்து ஆன் பூசற்கு ஓடி – புபொவெபாமா:2 9/3

மேல்

ஆன்_நிரை (1)

மொய் அணல் ஆன்_நிரை முன் செல்ல பின் செல்லும் – புபொவெபாமா:1 27/1

மேல்

ஆனந்தப்பையுள் (1)

ஆனந்தம்மே ஆனந்தப்பையுள்
கையறுநிலை உளப்பட பதினொன்றும் – புபொவெபாமா:11 1/5,6

மேல்

ஆனந்தம்மே (1)

ஆனந்தம்மே ஆனந்தப்பையுள் – புபொவெபாமா:11 1/5

மேல்

ஆனா (3)

கொலை ஆனா கூற்றம் கொடிதே கொழுநன் – புபொவெபாமா:4 27/1
ஆனா வயவர் முன் ஆட அமர்க்களத்து – புபொவெபாமா:7 35/1
ஆனா வென்றி அமரில் வீழ்ந்தோற்கு – புபொவெபாமா:10 16/1

மேல்

ஆனாது (2)

ஆறில் ஒன்று ஆனாது அளித்து உண்டு மாறு இன்றி – புபொவெபாமா:8 51/2
அவள் பயந்தோரை ஆனாது புகழ்ந்தன்று – புபொவெபாமா:14 10/2

மேல்

ஆனார் (1)

ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு – புபொவெபாமா:5 7/4

மேல்

ஆனாள் (1)

தலை ஆனாள் தையலாள் கண்டே முலையால் – புபொவெபாமா:4 27/2

மேல்