வை – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வைக்க 4
வைக்காதே 1
வைக்கிறோமோ 1
வைக்கும் 3
வைக்கொணாதோ 1
வைகறை 3
வைகறையிலே 1
வைகறையின் 1
வைகு 1
வைகுந்தம் 1
வைசியர் 1
வைடூரியமும் 1
வைணவ 1
வைத்த 6
வைத்ததன் 2
வைத்ததனால் 1
வைத்ததனை 1
வைத்தது 1
வைத்ததே 1
வைத்ததொர் 1
வைத்தல் 3
வைத்தனர் 2
வைத்தனன் 1
வைத்தனனே 1
வைத்தனை 2
வைத்தாய் 3
வைத்தார் 1
வைத்தால் 3
வைத்தாலும் 1
வைத்தாள் 5
வைத்தான் 8
வைத்திட்டால் 1
வைத்திட்டேன் 1
வைத்திட 1
வைத்திடல் 2
வைத்திடு 1
வைத்திடுவேன் 1
வைத்தியனாய் 1
வைத்திருக்கிறது 1
வைத்திருத்தல் 1
வைத்திருந்தார் 1
வைத்திருந்தால் 1
வைத்து 18
வைத்தும் 1
வைத்துவிட்டுப்போன 1
வைத்தே 5
வைத்தேன் 1
வைதிக 2
வைதிகர் 1
வைதீக 1
வைதீகம் 2
வைப்பது 1
வைப்பவர் 1
வைப்பவரேனும் 1
வைப்பான் 2
வைப்பினும் 1
வைப்பேன் 2
வைப்போம் 5
வைய 6
வையக 2
வையகத்தார் 1
வையகத்தில் 4
வையகத்தின் 1
வையகத்தினர் 1
வையகத்தினை 1
வையகத்தீர் 1
வையகத்து 2
வையகத்துக்கு 1
வையகத்தே 1
வையகத்தை 1
வையகம் 9
வையகமாகிய 1
வையகமே 1
வையத்திடம் 1
வையத்தில் 2
வையத்தின் 1
வையத்து 2
வையத்தே 1
வையத்தேவி 1
வையத்தை 2
வையம் 25
வையம்தனையும் 1
வையமுமா 1
வையாதே 1
வையை 1
வைர 1
வைரவி 2
வைரவீ 1

வைக்க (4)

வந்து எதிர்த்துவிட்டாய் எதிரே வைக்க நிதியம் உண்டோ – பாஞ்சாலி:2 184/4
அருகு வைக்க தகுதியுள்ளானோ அவனை வெற்பிடை போக்குதி அண்ணே – பாஞ்சாலி:2 203/4
மிகுவதன் முன்பு சகுனியும் ஐய வேறு ஒரு தாயில் பிறந்தவர் வைக்க
தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/3,4
வையம் மிசை வைக்க திருவுளமோ மற்று எனையே – குயில்:8 1/44
மேல்

வைக்காதே (1)

எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – தோத்திர:68 28/3
மேல்

வைக்கிறோமோ (1)

கன்னம் வைக்கிறோமோ பல்லை காட்டி ஏய்க்கிறோமோ – பாஞ்சாலி:3 210/4
மேல்

வைக்கும் (3)

ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறு உண்டோ உயிர் – பாஞ்சாலி:1 89/3
வாள் வைக்கும் நல் விழி மங்கையோடே நீர் வந்து எங்கள் ஊரில் மறுவிருந்தாட – பாஞ்சாலி:1 124/2
நாள் வைக்கும் சோதிடரால் இது மட்டும் நாயகன் நும்மை அழைத்திடவில்லை – பாஞ்சாலி:1 124/3
மேல்

வைக்கொணாதோ (1)

மருமகன் வைக்கொணாதோ இதிலே வந்த குற்றம் ஏதோ – பாஞ்சாலி:2 186/4
மேல்

வைகறை (3)

மற்ற பொழுது கதை சொல்லி தூங்கி பின் வைகறை ஆகும் முன் பாடி விழிப்புற்று –வேதாந்த:3 3/2
அங்கு அவ் இரவு கழிந்திட வைகறை ஆதலும் மன்னர் – பாஞ்சாலி:1 153/5
வைகறை நன்று அதனை வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 3/17
மேல்

வைகறையிலே (1)

வானம் வெளிறும் முன்னே வைகறையிலே தனித்து – குயில்:6 1/10
மேல்

வைகறையின் (1)

வைகறையின் செம்மை இனிது – வசனகவிதை:2 3/1
மேல்

வைகு (1)

வைகு நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால் – பாஞ்சாலி:5 271/70
மேல்

வைகுந்தம் (1)

செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணியிருப்பார் –வேதாந்த:9 1/1
மேல்

வைசியர் (1)

கூழ் இவரே பிறர்க்கு அளிப்பர் நிலமுடை வைசியர் என்றே கொள்வாம்-மனோ – பிற்சேர்க்கை:10 2/4
மேல்

வைடூரியமும் (1)

ஒப்பில் வைடூரியமும் கொடுத்து ஒதுங்கி நின்றார் இவன் ஒருவனுக்கே – பாஞ்சாலி:1 27/4
மேல்

வைணவ (1)

சைவரோ வைணவ சமயத்தாரோ –தேசீய:24 1/101
மேல்

வைத்த (6)

கற்றை சடை மதி வைத்த துறவியை கைதொழுவாள் எங்கள் தாய் கையில் –தேசீய:9 7/1
ஆர வைத்த திலகம் என திகழ் ஐயன் நல் இசை பாலகங்காதரன் –தேசீய:46 3/2
வைத்த நினைவை அல்லால் பிற வாஞ்சை உண்டோ வயது அங்ஙனமே இருபத்திரண்டாம் – தோத்திர:64 4/3
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/2
என்று வைத்த பணயம்தன்னை இழிஞன் வென்றுவிட்டான் – பாஞ்சாலி:2 193/1
வில் வைத்த நுதல் விழியார் கண்டு மையலுற வடிவம் மேவினேமா – பிற்சேர்க்கை:19 1/2
மேல்

வைத்ததன் (2)

மெத்த வெளிச்சம் இன்றி ஒற்றை விளக்கை மேற்கு சுவர் அருகில் வைத்ததன் பின்னர் – கண்ணன்:11 4/3
வைத்ததன் நீரை பிறர் கொளாவகை வாரடை பாசியில் மூடியே – பாஞ்சாலி:1 69/4
மேல்

வைத்ததனால் (1)

வைத்ததனால் அன்னை மதிப்பு இழந்துபோயினளோ – பிற்சேர்க்கை:20 2/2
மேல்

வைத்ததனை (1)

முன் தனது பிதா தமிழில் உபநிடதத்தை மொழிபெயர்த்து வைத்ததனை திருத்த சொல்லி – சுயசரிதை:2 23/3
மேல்

வைத்தது (1)

ஓலம் தர கொணர்ந்தே வைத்தது ஒவ்வொன்றும் என் மனத்து உறைந்ததுவே – பாஞ்சாலி:1 30/4
மேல்

வைத்ததே (1)

மற்று இதனில் உன்னை ஒரு பந்தயமா வைத்ததே
குற்றம் என்று சொல்லுகிறாய் கோமகளே பண்டை யுக – பாஞ்சாலி:5 271/55,56
மேல்

வைத்ததொர் (1)

மா இரும் திறை கொணர்ந்தே அங்கு வைத்ததொர் வரிசையை மறந்திடவோ – பாஞ்சாலி:1 22/2
மேல்

வைத்தல் (3)

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் – தோத்திர:62 9/2
தில்லி துருக்கர் செய்த வழக்கமடி பெண்கள் திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்
வல்லி இடையினையும் ஓங்கி முன் நிற்கும் இந்த மார்பையும் மூடுவது சாத்திரம் கண்டாய் – கண்ணன்:18 1/1,2
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் வைத்தல் உன்னி தருமன் பணயம் என்று அங்கு – பாஞ்சாலி:3 229/3
மேல்

வைத்தனர் (2)

கேலிகள் கேட்கவும் உன்றன் சேயினை வைத்தனர் பாண்டவர் – பாஞ்சாலி:1 67/4
யார் வைத்தனர் மஹாசக்தி – வசனகவிதை:4 7/4
மேல்

வைத்தனன் (1)

தன்னை மறந்தவன் ஆதலால் தன்னை தான் பணயம் என வைத்தனன் பின்பு – பாஞ்சாலி:3 238/3
மேல்

வைத்தனனே (1)

வாழி சிவத்தன்மை அதற்கு இலக்கா வைத்தனனே – பிற்சேர்க்கை:25 13/2
மேல்

வைத்தனை (2)

கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/4
நிலத்தின் கீழ் பல் உலோகங்கள் ஆயினை நீரின் கீழ் எண்ணிலா நிதி வைத்தனை
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/1,2
மேல்

வைத்தாய் (3)

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் – தோத்திர:9 0/1
ஏது கருதி வைத்தாய் அண்ணே யாரை பணயம்வைத்தாய் – பாஞ்சாலி:5 274/1
காதலினால் சாகும் கதியினிலே என்னை வைத்தாய்
எப்பொழுதும் நின்னை இனி பிரிவது ஆற்றகிலேன் – குயில்:5 1/68,69
மேல்

வைத்தார் (1)

சாற்றி பணயம் என தாயே உனை வைத்தார்
சொல்லவுமே நாவு துணியவில்லை தோற்றிட்டார் – பாஞ்சாலி:4 252/94,95
மேல்

வைத்தால் (3)

தத்து புனல் பாஞ்சாலம்தனில் வைத்தால் வாடுகிலேன் –தேசீய:48 20/2
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை – தோத்திர:48 4/1
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன் – பாஞ்சாலி:2 185/3
மேல்

வைத்தாலும் (1)

விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும் அதன் கதிர்கள் விரைந்து வந்து –தேசீய:47 1/1
மேல்

வைத்தாள் (5)

மாகாளி பராசக்தி உருசியநாட்டினில் கடைக்கண் வைத்தாள் அங்கே –தேசீய:52 1/1
நிறைவுற இன்பம் வைத்தாள் அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை – கண்ணன்:2 8/4
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள் – கண்ணன்:2 9/1
சாத்திரம் கோடி வைத்தாள் அவைதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்
மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/1,2
கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்
இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள் – வசனகவிதை:3 3/13,14
மேல்

வைத்தான் (8)

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
ஒளி சிறந்த மணியின் மாலை ஒன்றை அங்கு வைத்தான்
களி மிகுந்த பகைவன் எதிரே கன தனங்கள் சொன்னான் – பாஞ்சாலி:2 188/1,2
தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/4
நண்ணு பொன் கடாரம்தம்மில் நாலு கோடி வைத்தான்
கண்ணிழப்பவன் போல் அவையோர் கணம் அழிந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/3,4
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
மன்றில் உன்னை வைத்தான் எந்தை மதியை என் உரைப்பேன் – பாஞ்சாலி:3 208/4
தூண்டும் பணயம் என வைத்தான் இன்று தோற்றுவிட்டான் தருமேந்திரன் – பாஞ்சாலி:5 269/4
மன்பதையின் கால் சூழ வைத்தான் வலை திரளே – பிற்சேர்க்கை:25 15/2
மேல்

வைத்திட்டால் (1)

மின்னும் அமுதமும் போன்றவள் இவர் மேவிடு தேவியை வைத்திட்டால் அவள் – பாஞ்சாலி:3 241/3
மேல்

வைத்திட்டேன் (1)

பொய் வளர் சூதினில் வைத்திட்டேன் வென்று போ என்று உரைத்தனன் பொங்கியே – பாஞ்சாலி:3 236/4
மேல்

வைத்திட (1)

வல்லார் நினது இளைஞர் சூதில் வைத்திட தகுந்தவர் பணயம் என்றே – பாஞ்சாலி:3 223/3
மேல்

வைத்திடல் (2)

தந்திர தொழில் ஒன்று உணரும் சிறு வேந்தனை இவர் தரணி மன்னருள் முற்பட வைத்திடல் சாலுமோ – பாஞ்சாலி:1 48/2
கொடியவர் அவைக்களத்தில் அற கோமகன் வைத்திடல் குறித்துவிட்டான் – பாஞ்சாலி:4 244/4
மேல்

வைத்திடு (1)

நாடு இழக்கவில்லை தருமா நாட்டை வைத்திடு என்றான் – பாஞ்சாலி:2 195/4
மேல்

வைத்திடுவேன் (1)

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன் – கண்ணன்:4 1/16,17
மேல்

வைத்தியனாய் (1)

மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய் வைத்தியனாய்
ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி – கண்ணன்:4 1/49,50
மேல்

வைத்திருக்கிறது (1)

அதற்குள்ளே கை கால் வாய் வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது
யார் வைத்தனர் மஹாசக்தி – வசனகவிதை:4 7/3,4
மேல்

வைத்திருத்தல் (1)

வலம்கொண்ட மன்னரொடு பார்ப்பார்தம்மை வைத்திருத்தல் சிறிதேனும் தகாது கண்டாய் – பாஞ்சாலி:3 215/2
மேல்

வைத்திருந்தார் (1)

சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார்
இற்றை நாள் –தேசீய:12 5/9,10
மேல்

வைத்திருந்தால் (1)

வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் – கண்ணன்:4 1/2
மேல்

வைத்து (18)

வேலின் மிசை ஆணை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தைசெய்வாய் என்று – தோத்திர:4 3/2
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
யாழ்ப்பாணத்து ஐயனை என்னிடம் கொணர்ந்தான் இணை அடியை நந்திபிரான் முதுகில் வைத்து
காழ்ப்பான கயிலை மிசை வாழ்வான் பார் மேல் கனத்த புகழ் குவளையூர் கண்ணன் என்பான் – சுயசரிதை:2 42/1,2
விலை ஆர் தோல் வகையும் கொண்டு மேலும் பொன் வைத்து அங்கு வணங்கி நின்றார் – பாஞ்சாலி:1 28/4
மந்திரம் தேர்ந்ததொர் மாமன் அடிக்கண் வைத்து வணங்கி வனப்புற நின்றான் – பாஞ்சாலி:1 120/4
வென்றி மிக்க படைகள் பின்னர் வேந்தன் வைத்து இழந்தான் – பாஞ்சாலி:2 193/2
வண்ணம் உள்ள பரிகள்தம்மை வைத்து இழந்துவிட்டான் – பாஞ்சாலி:2 194/2
வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் – பாஞ்சாலி:3 219/2
தேயம் வைத்து இழந்தான் சிச்சீ சிறியர் செய்கை செய்தான் – பாஞ்சாலி:3 219/4
சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
தகுவர் என்று இந்த சிறுவரை வைத்து தாயத்திலே இழந்திட்டனை – பாஞ்சாலி:3 230/4
தோற்று தமது சுதந்திரமும் வைத்து இழந்தார் – பாஞ்சாலி:4 252/93
என்னை முதல் வைத்து இழந்த பின்பு தன்னை என் – பாஞ்சாலி:4 252/115
கொண்டு ஓர் வனத்திடையே வைத்து பின் கூட்டம் உற – பாஞ்சாலி:5 271/76
கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம் – பாஞ்சாலி:5 281/2
ஏற தெரியாமல் ஏணி வைத்து சென்றாலும் – குயில்:5 1/39
முன்பு வைத்து நோக்கிய பின் மூண்டு வரும் இன்ப வெறி – குயில்:9 1/224
மேல்

வைத்தும் (1)

நகுலனை வைத்தும் இழந்திட்டான் அங்கு நள்ளிருட்கண் ஒரு சிற்றொளி வந்து – பாஞ்சாலி:3 230/1
மேல்

வைத்துவிட்டுப்போன (1)

சிவன் என்னும் வேடன் சக்தி என்னும் குறத்தியை உலகம் என்னும் புனம் காக்கச்சொல்லி வைத்துவிட்டுப்போன விளக்கே – வசனகவிதை:2 12/6
மேல்

வைத்தே (5)

மண் எனும் தன் மடியில் வைத்தே பல மாயமுறும் கதை சொல்லி மனம் களிப்பாள் – கண்ணன்:2 1/4
சூல் வகை தடி வகையும் பல தொனி செயும் பறைகளும் கொணர்ந்து வைத்தே
பால் வளர் மன்னவர்தாம் அங்கு பணிந்ததை என் உளம் மறந்திடுமோ – பாஞ்சாலி:1 24/3,4
ஆயிரம் குடம் பொன் வைத்தே ஆடுவோம் இது என்றான் – பாஞ்சாலி:2 189/1
முன்னர் நாங்கள் பணையம் வைத்தே முறையில் வெல்லுகின்றோம் – பாஞ்சாலி:3 210/2
தம்பிமாரை வைத்தே ஆடி தருமன் வென்றுவிட்டால் – பாஞ்சாலி:3 225/1
மேல்

வைத்தேன் (1)

அங்கு ஒரு காட்டில் ஓர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல் – தனி:7 1/2,3
மேல்

வைதிக (2)

பின் ஒரு சார்பினர் வைதிக பெயரோடு –தேசீய:24 1/94
என்று நம் முன்னோர் ஏந்திய வைதிக
காலத்தவரோ கருத்திலாதவர்தாம் –தேசீய:24 1/103,104
மேல்

வைதிகர் (1)

மஞ்சன நீர் தவ வேதவியாசன் பொழிந்ததும் பல வைதிகர் கூடி நல் மந்திர வாழ்த்து மொழிந்ததும் – பாஞ்சாலி:1 51/1
மேல்

வைதீக (1)

அதற்கு கந்தன் அட போடா வைதீக மனுஷன் உன் முன்னேகூட லஜ்ஜையா என்னடி வள்ளி – வசனகவிதை:4 1/30
மேல்

வைதீகம் (2)

அட போடா வைதீகம் வேடிக்கைதானே பார்த்துக்கொண்டிருக்கிறாய் இன்னும் சிறிது நேரம் நின்றுகொண்டிரு – வசனகவிதை:4 1/42
என்னை கண்டவுடன் எங்கடா போயிருந்தாய் வைதீகம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டாயே என்றது – வசனகவிதை:4 1/58
மேல்

வைப்பது (1)

ஒருவன் ஆட பணயம் வேறே ஒருவன் வைப்பது உண்டோ – பாஞ்சாலி:2 186/1
மேல்

வைப்பவர் (1)

வேள்வி பொருளினையே புலை நாயின் முன் மென்றிட வைப்பவர் போல் – பாஞ்சாலி:4 245/1
மேல்

வைப்பவரேனும் (1)

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும்
பொய் அகல தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர் – பிற்சேர்க்கை:8 14/1,2
மேல்

வைப்பான் (2)

தேன் ஒத்த பண்டங்கள் கொண்டு என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்
மான் ஒத்த பெண்ணடி என்பான் சற்று மனம் மகிழும் நேரத்திலே கிள்ளிவிடுவான் – கண்ணன்:9 3/1,2
குழலிலே சூட்டுவேன் என்பான் என்னை குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான் – கண்ணன்:9 4/2
மேல்

வைப்பினும் (1)

ஏழ் கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசை கொண்டு வாழியவே –தேசீய:23 2/1
மேல்

வைப்பேன் (2)

இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்
முல்லை போன்ற முறுவல் காட்டி மோக வாதை நீக்கி – தோத்திர:57 5/2,3
ஒரு மடங்கு வைத்தால் எதிரே ஒன்பதாக வைப்பேன்
பெருமை சொல்ல வேண்டா ஐயா பின் அடக்குக என்றான் – பாஞ்சாலி:2 185/3,4
மேல்

வைப்போம் (5)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம் –தேசீய:5 9/1
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்வி சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் –தேசீய:5 9/1,2
கணபதி தாளை கருத்திடை வைப்போம்
குணமதில் பலவாம் கூற கேளீர் – தோத்திர:1 4/8,9
கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்தி பெண்ணை கட்டிக்கொடுக்கும் வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம் – பல்வகை:6 5/1,2
பரவு நாட்டை எல்லாம் எதிரே பணயமாக வைப்போம் – பாஞ்சாலி:3 224/4
மேல்

வைய (6)

சென்றிடும் காட்டு வெள்ளம் போல் வைய சேர்க்கை அனைத்தையும் கொன்று நடப்பான் –தேசீய:21 5/2
வைய வாழ்வுதன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே –தேசீய:30 4/2
வைய தலைமை எனக்கு அருள்வாய் அன்னை வாழி நின்னது அருள் வாழி – தோத்திர:32 10/4
வைய தலைமைகொள் – பல்வகை:1 2/109
காட்டும் வைய பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவீரே – பல்வகை:8 3/2
வாராய் நிலவே வைய திருவே – வசனகவிதை:7 1/1
மேல்

வையக (2)

வஞ்சனை இன்றி பகை இன்றி சூது இன்றி வையக மாந்தர் எல்லாம் – தோத்திர:18 1/3
அவற்றுள் இன்னும் சிறியவை இங்ஙனம் இவ் வையக முழுதிலும் உயிர்களை பொதிந்துவைத்திருக்கிறது – வசனகவிதை:4 15/15
மேல்

வையகத்தார் (1)

வையகத்தார் வியப்பு எய்தவே புவி மன்னவர் சேர்ந்த சபைதனில் மிக – பாஞ்சாலி:1 67/2
மேல்

வையகத்தில் (4)

எய்த விரும்பியதை எய்தலாம் வையகத்தில்
அன்பில் சிறந்த தவம் இல்லை அன்புடையார் – தோத்திர:1 37/2,3
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே வையகத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய் – தோத்திர:27 1/3
மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்கும் இனி கவலை வேண்டா – சுயசரிதை:2 9/1
மை இலகு விழியாளின் காதல் ஒன்றே வையகத்தில் வாழும் நெறி என்று காட்டி – சுயசரிதை:2 29/2
மேல்

வையகத்தின் (1)

வையகத்தின் உயிரையே காற்று என்கிறோம் – வசனகவிதை:4 13/20
மேல்

வையகத்தினர் (1)

வாய் இனிக்க வரும் தமிழ் வார்த்தைகள் வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திட – பிற்சேர்க்கை:9 1/3
மேல்

வையகத்தினை (1)

மந்திரங்களை சோதனைசெய்தால் வையகத்தினை ஆள்வது தெய்வம் – பிற்சேர்க்கை:1 1/1
மேல்

வையகத்தீர் (1)

போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணீர் –தேசீய:52 1/4
மேல்

வையகத்து (2)

வையகத்து அரசும் வானக ஆட்சியும் –தேசீய:32 1/144
மாதர் இன்பம் முதலிய எல்லாம் வையகத்து சிவன் வைத்த என்றே – தனி:14 10/2
மேல்

வையகத்துக்கு (1)

வையகத்துக்கு இல்லை மனமே நினக்கு நலம் – தோத்திர:17 3/1
மேல்

வையகத்தே (1)

வையகத்தே சடவஸ்து இல்லை மண்ணும் கல்லும் சடம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/1
மேல்

வையகத்தை (1)

தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர் தாரணியில் பலர் உள்ளார் தருக்கி வீழ்வார் – சுயசரிதை:2 44/3
மேல்

வையகம் (9)

வரும் கதி கண்டு பகை தொழில் மறந்து வையகம் வாழ்க நல் அறத்தே –தேசீய:41 5/4
வருவது ஞானத்தாலே வையகம் முழுவதும் எங்கள் – தோத்திர:71 1/3
வெற்றி ஐந்து புலன் மிசை கொள்வோம் வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும் – தனி:14 4/1
மோனத்து இருக்குதடீ இந்த வையகம் மூழ்கி துயிலினிலே – கண்ணன்:20 2/3
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
வையகம் காத்திடுவாய் கண்ணா மணிவண்ணா என்றன் மன சுடரே – பாஞ்சாலி:5 299/1
எனவே இவ் வையகம் உயிருடையது – வசனகவிதை:4 13/19
வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும் – பிற்சேர்க்கை:8 14/1
வையகம் எங்கும் உளது உயர்வான பொருள் எல்லாம் – பிற்சேர்க்கை:14 7/1
மேல்

வையகமாகிய (1)

ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிர ஒளியாகிய நீர் பாய்ச்சுகிறது – வசனகவிதை:3 2/2
மேல்

வையகமே (1)

சூழ் கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே
தொல்லை வினை தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே –தேசீய:23 3/1,2
மேல்

வையத்திடம் (1)

கடமைதான் ஏது கரிமுகனே வையத்திடம்
நீ அருள்செய்தாய் எங்கள் உடைமைகளும் – தோத்திர:1 21/1,2
மேல்

வையத்தில் (2)

மாற்று பொன் ஒத்த நின் மேனியும் இந்த வையத்தில் யான் உள்ள மட்டிலும் எனை – தோத்திர:52 1/3
இடம் பெரிது உண்டு வையத்தில் இதில் ஏதுக்கு சண்டைகள் செய்வீர் – பல்வகை:3 21/2
மேல்

வையத்தின் (1)

மிக்கதொர் வியப்பு உடைத்தாம் இந்த வியன் பெரு வையத்தின் காட்சி கண்டீர் – தோத்திர:42 7/3
மேல்

வையத்து (2)

வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம் –தேசீய:41 1/1
ஓலமிட்டு புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் – தனி:2 5/2
மேல்

வையத்தே (1)

வையத்தே சடம் இல்லை மண்ணும் கல்லும் தெய்வம் – பிற்சேர்க்கை:21 6/1
மேல்

வையத்தேவி (1)

மனத்தினிலே நின்று இதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மா சக்தி வையத்தேவி
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/2,3
மேல்

வையத்தை (2)

வையத்தை காப்பவள் அன்னை சிவசக்தி வண்மை எலாம் – தோத்திர:1 26/2
பாட்டு திறத்தாலே இவ் வையத்தை பாலித்திட வேணும் – தோத்திர:12 3/4
மேல்

வையம் (25)

வையம் எலாம் காக்கும் மஹாசக்தி நல் அருளை – தோத்திர:17 2/3
கூட்டி மானுட சாதியை ஒன்று என கொண்டு வையம் முழுதும் பயனுற – தோத்திர:19 2/2
வையம் முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்திதன் புகழ் வாழ்த்துகின்றோம் – தோத்திர:22 1/1
மாறுதல் இன்றி பராசக்திதன் புகழ் வையம் மிசை நித்தம் பாடுகின்றோம் – தோத்திர:22 6/1
வையம் இங்கு அனைத்தும் ஆக்கியும் காத்தும் மாய்த்துமே மகிழ்ந்திடு தாயை – தோத்திர:33 4/3
வையம் தழைக்கவைப்பேனே அமர யுகம் – தோத்திர:56 1/11
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம் – தோத்திர:57 3/3
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
மாதா பராசக்தி வையம் எலாம் நீ நிறைந்தாய் – தோத்திர:63 1/1
அன்னை அவள் வையம் எலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி – தோத்திர:63 3/3
வையம் எலாம் தெய்வ வலி அன்றி வேறு இல்லை – தோத்திர:66 2/3
வாழ்க வையம் வாழ்க வேதம் வாழ்க தீ தீ தீ இ நேரம் – தோத்திர:75 20/2
வருத்தம் அழிய வறுமை ஒழிய வையம் முழுதும் வண்மை பொழிய –வேதாந்த:4 2/4
சாதி கொடுமைகள் வேண்டாம் அன்புதன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்று இங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புற செய்வோம் – பல்வகை:3 8/1,2
பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
ஆணும் பெண்ணும் நிகர் என கொள்வதால் அறிவில் ஓங்கி இவ் வையம் தழைக்குமாம் – பல்வகை:4 4/1
மாற்றி வையம் புதுமையுறச்செய்து மனிதர்தம்மை அமர்கள் ஆக்கவே – பல்வகை:4 10/2
மன்னர் அறம்புரிந்தால் வையம் எல்லாம் மாண்புபெறும் – தனி:1 25/2
வானம் சினந்தது வையம் நடுங்குது வாழி பராசக்தி காத்திடவே – தனி:5 2/1
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/2
ஆண்டகைக்கு இஃது தகும் அன்றோ இல்லையாம் எனில் வையம் நகும் அன்றோ – பாஞ்சாலி:1 68/4
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
வையம் இஃது பொறுத்திடுமோ மேல் வான் பொறுத்திடுமோ பழி மக்காள் – பாஞ்சாலி:2 196/3
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
வையம் மிசை வைக்க திருவுளமோ மற்று எனையே – குயில்:8 1/44
மேல்

வையம்தனையும் (1)

வையம்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே – தோத்திர:1 3/2
மேல்

வையமுமா (1)

சாயை போல் இந்திர மா சாலம் போல் வையமுமா
மிஞ்சி நின்றோம் ஆங்கு மறுநாள் விடிந்தவுடன் – குயில்:4 1/13,14
மேல்

வையாதே (1)

கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா – பல்வகை:2 1/2
மேல்

வையை (1)

காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை நதி என –தேசீய:20 3/1
மேல்

வைர (1)

மார்பில் அணிவதற்கே உன்னை போல் வைர மணிகள் உண்டோ – கண்ணன்:8 10/1
மேல்

வைரவி (2)

மாறுபட பல வேறு வடிவொடு தோன்றுவாள் எங்கள் வைரவி பெற்ற பெரும் கனலே வடிவேலவா – தோத்திர:3 3/4
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை வைரவி கங்காளி மனோன்மணி மாமாயி – சுயசரிதை:2 3/1
மேல்

வைரவீ (1)

வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
மேல்