யோ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


யோக (2)

பச்சை மணி கிளியே பாவி எனக்கே யோக
பிச்சை அருளியதாய் பேருரையாய் இ சகத்தில் –தேசீய:13 1/1,2
செப்புறு நல் அஷ்டாங்க யோக சித்தி சேர்ந்தவன் என்று உனை புகழ்வார் சிலர் என் முன்னே – சுயசரிதை:2 24/3
மேல்

யோகத்திலே (2)

யோகத்திலே பல போகத்திலே –தேசீய:4 6/2
யோகத்திலே நிகரற்றவள் உண்மையும் ஒன்று என நன்று அறிவாள் உயர் –தேசீய:9 8/1
மேல்

யோகத்து (1)

யோகத்து இருத்திவிடு அல்லால் என்றன் ஊனை சிதைத்துவிடு – தோத்திர:14 1/3
மேல்

யோகம் (6)

யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
நன்று செய் தவம் யோகம் சிவஞானமும் பக்தியும் நணுகிடவே – பாஞ்சாலி:1 2/2
மாதேவன் யோகம் மதிமயக்கம் ஆகிவிட – பாஞ்சாலி:4 252/14
இலைகள் அவனுடைய அழகிலே யோகம் எய்தியிருக்கின்றன – வசனகவிதை:2 10/21
வெப்பம் தவம் தண்மை யோகம்
வெப்பம் ஆண் தண்மை பெண் – வசனகவிதை:2 11/17,18
ஊருக்கு உழைத்திடல் யோகம் நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் – பிற்சேர்க்கை:8 17/1
மேல்

யோகம்தான் (1)

யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
மேல்

யோகமே (1)

யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன் யோகமே தவம் தவமே யோகம் என உரைத்தாள் – தனி:9 2/1
மேல்

யோகி (4)

துன்பமுறும் உயிர்க்கு எல்லாம் தாயை போலே சுரக்கும் அருள் உடைய பிரான் துணிந்த யோகி
அன்பினுக்கு கடலையும்தான் விழுங்க வல்லான் அன்பினையே தெய்வம் என்பான் அன்பே ஆவான் – சுயசரிதை:2 38/2,3
அன்னவன் மா யோகி என்றும் பரமஞானத்து அனுபூதி உடையன் என்றும் அறிந்துகொண்டேன் – சுயசரிதை:2 39/3
வென்றான் உள் ஆசை எலாம் யோகி ஆகி வீட்டுமனும் ஒன்று உரையாது இருக்கின்றானே – பாஞ்சாலி:3 216/4
ஒக்க திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி – பிற்சேர்க்கை:8 16/2
மேல்

யோகியர் (1)

யான் எனது இன்றி இருக்கும் நல் யோகியர்
ஞான மா மகுட நடு திகழ் மணியாய் – தோத்திர:10 1/14,15
மேல்

யோஜனை (2)

மணல் மணல் மணல் பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல் – வசனகவிதை:4 4/2
கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் சிதறிக்கிடக்கும் – வசனகவிதை:4 13/17
மேல்

யோசனை (3)

மண்டலத்தை அணுவணுவாக்கினால் வருவது எத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே நினை காளி என்று ஏத்துவேன் – தோத்திர:34 1/3,4
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ – பல்வகை:6 4/1
எண்ணில் பல கோடி யோசனை எல்லை – தனி:8 2/1
மேல்

யோசனைப்படும் (1)

இன்று எனக்கிடையே எண்ணில் யோசனைப்படும்
குன்றமும் வனமும் கொழு திரை புனலும் – பிற்சேர்க்கை:15 1/3,4
மேல்

யோவான் (1)

இன் அமுதிற்கு அது நேர் ஆகும் நம்மை யோவான் விடுவிக்க வருமளவும் –வேதாந்த:25 5/1
மேல்