மீ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 1
மீசையும் 1
மீட்குறலாம் 1
மீட்டலாம் 1
மீட்டிடலாம் 1
மீட்டினாய் 1
மீட்டு 3
மீட்டும் 14
மீண்டான் 1
மீண்டு 5
மீண்டும் 2
மீண்டுமே 1
மீத்திடும் 1
மீதி 2
மீதில் 16
மீதிலும் 2
மீதிலே 1
மீதினில் 5
மீதினிலே 6
மீது 69
மீதும் 6
மீதுறல் 1
மீதே 10
மீந்தன 1
மீள்வதுண்டு 1
மீள 2
மீளத்தான் 1
மீளமீளவும் 1
மீளவும் 5
மீளா 1
மீளாது 2
மீளும் 1
மீளுமாறு 1
மீற 1
மீறி 3
மீறினாய் 1
மீன் 8
மீன்கள் 5
மீன்களாக 1
மீன்களும் 1
மீன்களை 1
மீன்கொடியும் 1
மீனை 3
மீனையும் 2
மீனொடு 1
மீனோ 1

மீ (1)

மீ வளரும் செம்பொன் நாட்டினார் நின்றன் மேன்மையினால் அறம் நாட்டினார் ஐய – தோத்திர:5 4/2
மேல்

மீசையும் (1)

மீசையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் – குயில்:5 1/35
மேல்

மீட்குறலாம் (1)

இழந்த நல் இன்பங்கள் மீட்குறலாம் நீர் ஏகுதிர் கற்பனைநகரினுக்கே –வேதாந்த:25 9/2
மேல்

மீட்டலாம் (1)

துன்னும் அதிட்டமுடையவள் இவர் தோற்றது அனைத்தையும் மீட்டலாம் – பாஞ்சாலி:3 241/4
மேல்

மீட்டிடலாம் (1)

வெல்வதற்கு இடம் உண்டாம் ஆங்கு அவ் வெற்றியில் அனைத்தையும் மீட்டிடலாம் – பாஞ்சாலி:3 222/4
மேல்

மீட்டினாய் (1)

மிடிமை போதும் நமக்கு என்று இருந்தோரை மீட்டினாய் ஆசை ஊட்டினாய் –தேசீய:38 4/2
மேல்

மீட்டு (3)

சொல்லால் உளம் வருந்தேல் வைத்து தோற்றதை மீட்டு என்று சகுனி சொன்னான் – பாஞ்சாலி:3 223/4
மீட்டு நின் மேல் காதல்கொள்வான் மென் குயிலே என்று அந்த – குயில்:9 1/177
மடிய விதிப்பினும் மீட்டு நாம் வாழ்வோம் என்று – பிற்சேர்க்கை:26 1/61
மேல்

மீட்டும் (14)

மீட்டும் உரையாயோ அவர் விம்மி அழவும் திறம்கெட்டும் போயினர் –தேசீய:53 3/4
மீட்டும் உனக்கு உரைத்திடுவேன் ஆதி சக்தி வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி – தோத்திர:27 5/3
மீட்டும் அவள் வருவாள் கண்ட விந்தையிலே இன்பம் மேற்கொண்டு போம் அம்மா – தோத்திர:64 7/4
மீட்டும் எம்மிடை நின் வரவினால் விளைவதா – தனி:8 8/2
மீட்டும் ஓர் முறை இவன் மேவினன் என்ன – தனி:20 1/20
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் அஃதின்றி சென்றதையே மீட்டும் மீட்டும் – சுயசரிதை:2 32/4
முன்பு என் வினாவினை மீட்டும் போய் சொல்லி முற்றும் தெளிவுற கேட்டுவா – பாஞ்சாலி:4 258/4
பாகனை மீட்டும் சினத்துடன் அவன் பார்த்து இடி போல் உரைசெய்கின்றான் பின்னும் – பாஞ்சாலி:4 261/1
மீட்டும் எமை அடிமை செய்தாய் மேலும் பொறுத்திருந்தோம் – பாஞ்சாலி:5 279/2
வித்தை முடிந்தவுடன் மீட்டும் அறிவெய்தி நான் – குயில்:7 1/102
மீட்டும் நினைத்து அங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே – குயில்:8 1/7
தாலிதனை மீட்டும் அவர்தங்களிடமே கொடுத்து – குயில்:9 1/53
நம்மை வாழ்வுறச்செய்த மஹாசக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:3 8/11
மேல்

மீண்டான் (1)

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார் மன்னன் என மீண்டான் என்றே –தேசீய:49 1/1
மேல்

மீண்டு (5)

மின்னென பாய்ந்து மீண்டு வந்து உற்றனன் –தேசீய:42 1/63
வேள்விக்கு நாங்கள் அனைவரும் வந்து மீண்டு பல தினம் ஆயினவேனும் – பாஞ்சாலி:1 124/1
முன்பு மாமன் வென்ற பொருளை முழுதும் மீண்டு அளிப்போம் – பாஞ்சாலி:3 225/2
மீண்டு அவர்க்கே ஈந்துவிட்டு விநயமுடன் – பாஞ்சாலி:4 252/72
நாணும் துயரும் நலிவுறுத்த நான் மீண்டு
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/5,6
மேல்

மீண்டும் (2)

மீண்டும் அவ் உதிர வாள் விண் வழி தூக்கி –தேசீய:42 1/64
மீண்டும் ஒரு விளக்கில் போய் மாண்டு விழும் அஃது ஒப்ப விருப்போடு ஏகி – பிற்சேர்க்கை:7 4/3
மேல்

மீண்டுமே (1)

இங்ஙனம் மீண்டுமே இயற்றி –தேசீய:42 1/76
மேல்

மீத்திடும் (1)

மீத்திடும் பொழுதினிலே நான் வேடிக்கை உற கண்டு நகைப்பதற்கே – கண்ணன்:2 9/2
மேல்

மீதி (2)

மீதி உயிர் இருக்கும்போதே அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி – தோத்திர:23 5/2
மீதி பொருள்கள் எவையுமே அதன் மேனியில் தோன்றிடும் வண்ணங்கள் வண்ண – கண்ணன்:7 8/3
மேல்

மீதில் (16)

ஏலு மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே –தேசீய:45 1/2
மந்தமாருதத்தில் வானில் மலையின் உச்சி மீதில்
சிந்தை எங்கு செல்லும் அங்கு உன் செம்மை தோன்றும் அன்றே – தோத்திர:31 2/3,4
தானம் வேள்வி தவம் கல்வி யாவும் தரணி மீதில் நிலைபெற செய்வேன் – தோத்திர:37 2/1
எங்கள் வேள்வி கூடம் மீதில் ஏறுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/1
மேவி பல கிளை மீதில் இங்கு விண்ணிடை அந்தி பொழுதினை கண்டே – தனி:2 1/2
தென்னைமர கிளை மீதில் அங்கு ஓர் செல்வ பசுங்கிளி கீச்சிட்டு பாயும் – தனி:2 2/1
சற்றும் நெஞ்சம் கவலுதல் இன்றி தரணி மீதில் மது உண்டு வாழ்வோம் – தனி:14 3/4
நம்பரும் திறலோடு ஒரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும் – சுயசரிதை:1 24/3
அதிக மோகம் அவன் உளம்கொண்டான் ஐவர் மீதில் இங்கு எம்மை வெறுப்பான் – பாஞ்சாலி:1 98/4
மங்களம் வாய்ந்த நல் அத்திபுரத்தே வையகம் மீதில் இணையற்றதாக – பாஞ்சாலி:1 123/2
நலமிலா விதி நம்மிடை வைத்தான் ஞால மீதில் அவன் பிறந்த அன்றே – பாஞ்சாலி:2 198/2
வையம் மீதில் உள்ளார் அவர்தம் வழியில் வந்தது உண்டோ – பாஞ்சாலி:3 211/2
காமனை கண் அழலாலே சுட்டு காலனை வென்றவன் பொன் அடி மீதில் – பாஞ்சாலி:5 303/4
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில்
நாண் இன்றி வந்திரு என்றான் இந்த நாய்மகனாம் துரியோதனன்தன்னை – பாஞ்சாலி:5 304/2,3
வாரிதி மீதில் எழுந்த இளம்கதிர் வந்தேமாதரமே வாழி நல் ஆரிய தேவியின் மந்திரம் வந்தேமாதரமே – பிற்சேர்க்கை:3 1/4
நதி ஏறு கொன்றை முடி மீதில் இந்து நகையாடும் செம்பொன் மணியே – பிற்சேர்க்கை:24 4/4
மேல்

மீதிலும் (2)

துயில் உடம்பின் மீதிலும் தீ தோன்றிவிட்டானே அம்மாவோ – தோத்திர:75 10/2
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
மேல்

மீதிலே (1)

ஆதி பரம்பொருள் நாரணன் தெளிவாகிய பாற்கடல் மீதிலே நல்ல – பாஞ்சாலி:1 81/1
மேல்

மீதினில் (5)

இ தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்கு தெரிந்திடல் வேண்டும் என்றே – தோத்திர:22 5/2
கொற்றவா நின் குவலயம் மீதினில்
வெற்றுவாழ்க்கை விரும்பி அழிகிலேம் – தோத்திர:45 8/3,4
வீழ்க இ கொடு நோய்தான் வையம் மீதினில் வறுமை ஓர் கொடுமை அன்றோ – தோத்திர:59 2/4
தந்தை போயினன் பாழ் மிடி சூழ்ந்தது தரணி மீதினில் அஞ்சல் என்பார் இலர் – சுயசரிதை:1 46/1
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
மேல்

மீதினிலே (6)

வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய் – தோத்திர:2 1/1
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே – தோத்திர:46 3/1
எழுவாய் கடல் மீதினிலே எழும் ஓர் இரவிக்கு இணையா உளம் மீதினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா துணையே அமரர் தொழு வானவனே – தோத்திர:46 3/1,2
ஆற்றங்கரைதனிலே தனியானதோர் மண்டபம் மீதினிலே தென்றல் – தோத்திர:64 3/1
இ தரை மீதினிலே இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி –வேதாந்த:9 2/1
மண்ணுலகின் மீதினிலே எக்காலும் அமரரை போல் மடிவில்லாமல் – தனி:23 1/1
மேல்

மீது (69)

வெள்ளி பனிமலையின் மீது உலவுவோம் அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் –தேசீய:5 1/1
மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலம் மீது இது போல் பிறிது இலையே –தேசீய:6 1/1
தேசம் மீது தோன்றுவாய் வா வா வா –தேசீய:16 6/8
தமிழ சாதி தரணி மீது இராது –தேசீய:24 1/82
ஐயனே இவர் மீது அம்பையோ தொடுப்பேன் –தேசீய:32 1/143
ஆசை இங்கு எவர்க்கும் இயற்கையாம் அன்றோ அத்தகை அன்பின் மீது ஆணை –தேசீய:50 2/4
வலி இழந்திருக்கும் என் உயிர்க்கு அதன்கண் வளர்ந்திடும் ஆசை மீது ஆணை –தேசீய:50 5/1
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர் மாண்பதன் நினைவின் மீது ஆணை –தேசீய:50 5/2
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும் வீழ்ச்சியின் உணர்ச்சி மீது ஆணை –தேசீய:50 5/3
நின்றனுக்கு காப்பு உரைப்பார் நின் மீது செய்யும் நூல் – தோத்திர:1 1/3
சிரம் மீது நங்கள் கணபதி தாள் மலர் சேர்த்து எமக்கு – தோத்திர:1 14/3
மண் மீது உள்ள மக்கள் பறவைகள் – தோத்திர:1 32/3
விரைந்து உன் திருவுளம் என் மீது இரங்கிட வேண்டும் ஐயா – தோத்திர:1 34/1
பொறி வேலுடனே வளர்வாய் அடியார் புது வாழ்வுறவே புவி மீது அருள்வாய் – தோத்திர:2 5/2
ஆதி சக்தி தாயே என் மீது அருள்புரிந்து காப்பாய் – தோத்திர:31 1/4
காளி மீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும் – தோத்திர:31 7/1
தலத்தின் மீது மலையும் நதிகளும் சாரும் காடும் சுனைகளும் ஆயினை – தோத்திர:34 5/2
காலமாம் வனத்தில் அண்ட கோல மா மரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு ரீங்காரமிட்டு உலவும் ஒரு வண்டு தழல் – தோத்திர:38 1/1
நீதியாம் அரசு செய்வார் நிதிகள் பல கோடி துய்ப்பர் நீண்ட காலம் வாழ்வர் தரை மீது எந்த நெறியும் எய்துவர் நினைத்த போது அந்த – தோத்திர:38 3/3
மாரன் அம்புகள் என் மீது வாரிவாரி வீச நீ கண் – தோத்திர:53 2/1
தஞ்சம் என்று வணங்கிடும் தெய்வம் தரணி மீது அறிவாகிய தெய்வம் – தோத்திர:62 3/4
சித்தம் தளர்ந்ததுண்டோ கலை தேவியின் மீது விருப்பம் வளர்ந்து ஒரு – தோத்திர:64 4/1
கடலின் மீது கதிர்களை வீசி கடுகி வான் மிசை ஏறுதி ஐயா – தோத்திர:70 1/1
மீது எழும் அன்பின் விலை புன்னகையினள் வெண்ணிலாவே முத்தம் வேண்டி முன் காட்டும் முகத்தின் எழில் இங்கு வெண்ணிலாவே – தோத்திர:73 2/3
நின் ஒளியாகிய பாற்கடல் மீது இங்கு வெண்ணிலாவே நன்கு நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/1
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதினும் –வேதாந்த:1 2/7
வான் உலகு நீர் தருமேல் மண் மீது மரங்கள் வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கும் என்றே –வேதாந்த:19 2/2
திடமனத்தின் மதுக்கிண்ணம் மீது சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம் – பல்வகை:7 1/2
இவ்வளவான பொழுதில் அவள் ஏறி வந்தே உச்சி மாடத்தின் மீது
கொவ்வை இதழ் நகை வீச விழி கோணத்தை கொண்டு நிலவை பிடித்தான் – தனி:2 3/2,3
தினையின் மீது பனை நின்றாங்கு – தனி:8 1/1
சுற்று தேம் கமழ் மென் மலர் மாலை தோளின் மீது உரு பெண்கள் குலாவ – தனி:14 3/3
பாலரின் மீது படுதலுற்றனவே – தனி:24 1/28
தேயம் மீது எவரோ சொலும் சொல்லினை செம்மை என்று மனத்திடை கொள்வதாம் – சுயசரிதை:1 2/3
எனையர் பாலர் கடவுளர் மீது தாம் எண்ணில் பக்திகொண்டு இன் உயிர் வாட்டினோர் – சுயசரிதை:1 8/2
கன்னி மீது உறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடி என் சொல்லுகேன் – சுயசரிதை:1 14/1
பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின் – சுயசரிதை:1 49/2
நீராக கனலாக வானா காற்றா நிலமாக வடிவெடுத்தாள் நிலத்தின் மீது
போராக நோயாக மரணமாக போந்து இதனை அழித்திடுவாள் புணர்ச்சிகொண்டால் – சுயசரிதை:2 2/2,3
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான் பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் – சுயசரிதை:2 6/2
வடகோடு இங்கு உயர்ந்து என்னே சாய்ந்தால் என்னே வான் பிறைக்கு தென்கோடு பார் மீது இங்கே – சுயசரிதை:2 10/1
பொறுமை இன்றி போர்செய்து பரதநாட்டை போர்க்களத்தே அழித்துவிட்டு புவியின் மீது
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/3,4
வறுமையையும் கலியினையும் நிறுத்திவிட்டு மலை மீது சென்றான் பின் வானம் சென்றான் – சுயசரிதை:2 12/4
நாசத்தை அழித்துவிட்டான் யமனை கொன்றான் ஞானகங்கைதனை முடி மீது ஏந்திநின்றான் – சுயசரிதை:2 21/3
மற்றொரு நாள் பழம் கந்தை அழுக்குமூட்டை வளமுறவே கட்டி அவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கமல பாத கருணை முனி சுமந்துகொண்டு என் எதிரே வந்தான் – சுயசரிதை:2 30/1,2
செறியுடைய பழவினையாம் இருளை செற்று தீயினை போல் மண் மீது திரிவார் மேலோர் – சுயசரிதை:2 35/3
துங்கமுறு பக்தர் பலர் புவி மீது உள்ளார் தோழரே எந்நாளும் எனக்கு பார் மேல் – சுயசரிதை:2 41/2
தீர்ப்பான சுருதி வழிதன்னில் சேர்ந்தான் சிவனடியார் இவன் மீது கருணை கொண்டார் – சுயசரிதை:2 42/4
சோரரை போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவை மிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார் – சுயசரிதை:2 55/2
அது அன்றி பிறிதில்லை ஆதலாலே அவனியின் மீது எது வரினும் அசைவுறாமல் – சுயசரிதை:2 60/3
இதனை எலாம் அவ் விழியற்ற தந்தையின்பால் சென்றே சொல்லி இங்கு இவர் மீது அவனும் பகை எய்திட செய்குவாய் – பாஞ்சாலி:1 43/3
மிதம் மிகும் அன்பு அவர் மீது கொண்டான் அவன் கேட்கவே அந்த வேள்வி கண்டு என் உயிர் புண்படும் செய்தி விளம்புவாய் – பாஞ்சாலி:1 43/4
விதி செயும் விளைவினுக்கே இங்கு வேறு செய்வார் புவி மீது உளரோ – பாஞ்சாலி:1 107/1
பொன் அங்க மணி மடவார் மாடம் மீது புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச – பாஞ்சாலி:1 117/3
மதியினும் விதிதான் பெரிது அன்றோ வையம் மீது உளவாகும் அவற்றுள் – பாஞ்சாலி:2 182/1
மீது சென்று மலையிடை தேனில் மிக்க மோகத்தினால் ஒரு வேடன் – பாஞ்சாலி:2 199/3
ஈயத்தை பொன் என்று காட்டுவார் மன்னர் இ புவி மீது உளராம் அன்றோ – பாஞ்சாலி:3 234/4
வானரர் போல் சாதி ஒன்று மண்ணுலகின் மீது உளதோ – குயில்:5 1/47
வஞ்சகி என்று எண்ணி மதி மருண்டு நின் மீது
வெம் சினம்தான் எய்தி நினை விட்டுவிட நிச்சயிப்பான் – குயில்:9 1/207,208
இவை தமது தந்தை மீது காதல் செலுத்துகின்றன – வசனகவிதை:2 10/13
கந்தன் வள்ளியம்மை மீது கையை போட வருகிறது வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது – வசனகவிதை:4 1/26
அவ் வனத்தின் வழியே ஒட்டைகளின் மீது ஏறி ஒரு வியாபார கூட்டத்தார் போகிறார்கள் – வசனகவிதை:4 4/4
காற்று நம் மீது வீசுக – வசனகவிதை:4 8/8
காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது – வசனகவிதை:4 12/2
கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
அவள் நமது தலை மீது கடல் கவிழ்ந்துவிடாதபடி ஆதரிக்கிறாள் – வசனகவிதை:5 1/5
ஆரியம் என்ற பெரும் பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ் அன்பு எனும் மென் கொடி வாடிய காலை அதற்கு உயிர் தந்திடுவான் – பிற்சேர்க்கை:3 1/1
நிலம் மீது நின் போல் ஓர் வள்ளலை யாம் கண்டிலமே நிலவை அன்றி – பிற்சேர்க்கை:11 5/3
முனிவர் விடுத்த முயலகன் மீது ஏறி – பிற்சேர்க்கை:12 9/3
மீது அலம்பிநிற்கும் ஒரு வெள்ளை சிறு தோணி – பிற்சேர்க்கை:25 3/2
ஏற்றிடுவாய் என்னை இரும் கடலே நின் மீது
தோற்றிடாது ஏறி போய் வானுலகு துய்ப்பேன் யான் – பிற்சேர்க்கை:25 20/1,2
மேல்

மீதும் (6)

வானம் எங்கும் பரிதியின் சோதி மலைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/1
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும் – தனி:10 1/2
தானை நீர் கடல் மீதிலும் ஆங்கே தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/2,3
கானகத்திலும் பற்பல ஆற்றின் கரைகள் மீதும் பரிதியின் சோதி – தனி:10 1/3
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
இலைகளின் மீதும் நீரலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராணரஸத்தை எங்களுக்கு கொண்டு கொடு – வசனகவிதை:4 6/3
மேல்

மீதுறல் (1)

மன்னு பொருள்கள் அனைத்திலும் நிற்பவன் வெண்ணிலாவே அந்த மாயன் அ பாற்கடல் மீதுறல் கண்டனன் வெண்ணிலாவே – தோத்திர:73 3/2
மேல்

மீதே (10)

எத்தனை உண்டு புவி மீதே அவை யாவும் படைத்த தமிழ்நாடு –தேசீய:20 4/2
கால பெரும் களத்தின் மீதே எங்கள் காளி நடம் உலக கூட்டம் – தோத்திர:23 2/2
குன்றத்தின் மீதே அந்த – தோத்திர:68 3/1
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 3/2
குன்றத்தின் மீதே அந்த – தோத்திர:68 9/1
குன்றத்தின் மீதே தனி – தோத்திர:68 9/2
காதல் கொண்டனை போலும் மண் மீதே கண் பிறழ்வு இன்றி நோக்குகின்றாயே – தோத்திர:70 3/1
நிலவுற இ சங்கத்தார் பல்லூழி வாழ்ந்து ஒளிர்க நிலத்தின் மீதே – தனி:23 7/4
பொந்திலே உள்ளாராம் வனத்தில் எங்கோ புதர்களிலே இருப்பாராம் பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலை போலே சற்றே அங்கங்கே தென்படுகின்றாராம் – சுயசரிதை:2 5/1,2
யாரடி இங்கு இவை போல புவியின் மீதே எண்ணரிய பொருள் கொடுத்தும் இயற்ற வல்லார் – பாஞ்சாலி:1 148/3
மேல்

மீந்தன (1)

வீழ்ந்தன சிலவாம் மரங்கள் மீந்தன பலவாம் – தனி:6 4/1
மேல்

மீள்வதுண்டு (1)

மீள்வதுண்டு உலகிற்கு என்றே வேதங்கள் விதிக்கும் என்பர் –தேசீய:51 8/2
மேல்

மீள (2)

கேள்வியுண்டு உடனே மீள கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் –தேசீய:51 8/4
மீள விழியில் மிதந்த கவிதை எலாம் – குயில்:9 1/234
மேல்

மீளத்தான் (1)

மீளத்தான் இதை தெளிவா விரித்து சொல்வேன் விண் மட்டும் கடவுள் அன்று மண்ணும் அஃதே – சுயசரிதை:2 16/4
மேல்

மீளமீளவும் (1)

தொட்டதை மீளமீளவும் தொடுவாய் –வேதாந்த:22 1/6
மேல்

மீளவும் (5)

விழிகளை துடைத்து மீளவும் நோக்கினர் –தேசீய:42 1/95
வெருவுற மாய்வார் பலர் கடலில் நாம் மீளவும் நம் ஊர் திரும்பும் முன்னே –வேதாந்த:25 2/2
மீளவும் அங்கு ஒரு பகலில் வந்தான் என்றன் மனையிடத்தே கோவிந்த வீர ஞானி – சுயசரிதை:2 57/1
அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான் – வசனகவிதை:2 11/9
விழுங்குதல் வேண்டுவீர் மீளவும் மறப்பீர் – வசனகவிதை:7 0/33
மேல்

மீளா (1)

மீளா அடிமை இல்லை எல்லோரும் வேந்தர் என திரிவோம் – பிற்சேர்க்கை:14 3/2
மேல்

மீளாது (2)

சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து –வேதாந்த:20 1/1
சென்றது இனி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து – சுயசரிதை:2 32/1
மேல்

மீளும் (1)

நீ அழித்தது எல்லாம் பின்னும் நின்னிடத்து மீளும்
ஓய்வடைந்திடாதே தருமா ஊக்கம் எய்துக என்றான் – பாஞ்சாலி:3 218/3,4
மேல்

மீளுமாறு (1)

மீளுமாறு உணர்ந்துகொள் – பல்வகை:1 2/78
மேல்

மீற (1)

மீற எனை தான் புரிந்த விந்தை சிறு குயிலை – குயில்:4 1/25
மேல்

மீறி (3)

வெம் தழல் போல சினம்கொண்டே தன்னை மீறி பல சொல் விளம்பினான் இவன் – பாஞ்சாலி:1 62/2
வென்றி பெறும் திருவடியாய் நினது சொல்லை மீறி ஒரு செயல் உண்டோ ஆண்டான் ஆணை – பாஞ்சாலி:1 143/3
பீடையை நோக்கினன் வீமனும் கரை மீறி எழுந்தது வெம் சினம் துயர் – பாஞ்சாலி:5 272/3
மேல்

மீறினாய் (1)

கோழைப்பட்ட ஜனங்களுக்கு உண்மைகள் கூறினாய் சட்டம் மீறினாய்
ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/1,2
மேல்

மீன் (8)

விண்ணில் தெரிகின்ற மீன் எலாம் நான் வெட்டவெளியின் விரிவு எலாம் நான் –வேதாந்த:13 2/1
மணி சிறு மீன் மிசை வளர்வால் ஒளிதர – தனி:8 1/2
மது நமக்கு மதியும் நாளும் மது நமக்கு வான மீன் மது நமக்கு மண்ணும் நீரும் மது நமக்கு மலை எலாம் – தனி:14 12/2
கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின் கார் கொள் வானில் ஓர் மீன் நிலை தேர்ந்திலார் – சுயசரிதை:1 23/1
சுறவுகள் மீன் வகைகள் என தோழர்கள் பலரும் இங்கு எனக்கு அளித்தாள் – கண்ணன்:2 8/3
சேற்றிலே தாமரையும் சீழ் உடைய மீன் வயிற்றில் – குயில்:7 1/37
மீன் ஆடு கொடி உயர்ந்த மதவேளை நிகர்த்த உரு மேவிநின்றாய் – பிற்சேர்க்கை:11 7/1
மீன் உணர்ந்திடும்-கொல் வியன் கடல் பெருமை – பிற்சேர்க்கை:16 1/4
மேல்

மீன்கள் (5)

விண் புல்லு மீன்கள் என அவன் அன்னார் எவ்வயினும் மிகுக-மன்னோ –தேசீய:43 5/4
மீன்கள் செய்யும் ஒளியை செய்தாள் வீசி நிற்கும் வளியை செய்தாள் – தோத்திர:28 3/1
காவி வளர் தடங்களிலே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனை கண்டேன் – சுயசரிதை:2 40/4
வானத்து மீன்கள் உண்டு சிறு மணிகளை போல் மின்னி நிறைந்திருக்கும் – கண்ணன்:2 4/1
வானத்து மீன்கள் எல்லாம் ஓயாது சுழன்றுகொண்டே தான் இருக்கின்றன – வசனகவிதை:4 13/18
மேல்

மீன்களாக (1)

அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாக தோன்றும் விழிகளின் நாயகமே – வசனகவிதை:2 12/3
மேல்

மீன்களும் (1)

தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே – தோத்திர:1 24/11,12
மேல்

மீன்களை (1)

ஞாயிற்றை திங்களை வானத்து வீடுகளை மீன்களை
ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம் – வசனகவிதை:2 13/22,23
மேல்

மீன்கொடியும் (1)

தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புற கண்டவர் தாய்நாடு –தேசீய:20 8/2
மேல்

மீனை (3)

மந்திரம் கற்போம் வினை தந்திரம் கற்போம் வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் –தேசீய:5 11/1
விண்ணில் சுடர்கின்ற மீனை எல்லாம் பண்ணியதோர் – தோத்திர:17 4/2
மீனை நாடி வளைத்திட தூண்டிலை வீசல் ஒக்கும் எனலை மறக்கிலேன் – சுயசரிதை:1 48/3
மேல்

மீனையும் (2)

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்து ஆங்கே – தனி:3 1/1
உம்பர் வானத்து கோளையும் மீனையும் ஓர்ந்து அளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும் – சுயசரிதை:1 24/2
மேல்

மீனொடு (1)

சீர இரும் சுடர் மீனொடு வானத்து திங்களையும் சமைத்தே – தனி:3 2/3
மேல்

மீனோ (1)

வானுறு மீனோ மாளிகை விளக்கோ –தேசீய:24 1/15
மேல்