பே – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சதனை 1
பேச்சில் 2
பேச்சின் 1
பேச்சினில் 2
பேச்சினிலே 4
பேச்சினும் 1
பேச்சு 7
பேச்சுக்கள் 1
பேச்சுக்கு 1
பேச்சுகள் 1
பேச்சும் 1
பேச்சை 2
பேச 2
பேசரும் 2
பேசல் 1
பேசலாம் 1
பேசலுற்றேன் 1
பேசவும் 1
பேசா 1
பேசாதே 1
பேசாய் 1
பேசி 16
பேசிக்கொண்டும் 1
பேசிடிலே 1
பேசிடும் 1
பேசிடும்படி 1
பேசிடுவார் 1
பேசிடுவீர் 1
பேசிப்பார் 1
பேசிய 3
பேசியது 2
பேசியதை 1
பேசிவைத்தது 1
பேசினர் 1
பேசினாய் 1
பேசினார் 1
பேசினால் 1
பேசீர் 1
பேசீரோ 1
பேசு 3
பேசுக 1
பேசுகவோ 1
பேசுகிறாய் 1
பேசுகின்றாய் 2
பேசுதல் 1
பேசுதி 1
பேசுபவன் 1
பேசுபொருள் 1
பேசும் 7
பேசுவதில் 1
பேசுவது 2
பேசுவதும் 1
பேசுவர் 2
பேசுவார் 1
பேசுவானோ 1
பேசுவோர் 3
பேசொணா 1
பேட்டை 1
பேடி 2
பேடிகள்தம்மை 1
பேடிகளை 1
பேடிமை 1
பேடிமையும் 1
பேடியர் 2
பேடே 1
பேடை 2
பேண 2
பேணல் 1
பேணாய் 1
பேணி 9
பேணிய 1
பேணியிருந்தாரடீ 1
பேணினர் 1
பேணினோர்க்கு 1
பேணுதல் 2
பேணும் 7
பேணுமவர் 1
பேணுமாயில் 1
பேணுமாறு 2
பேணுவன 1
பேணோம் 1
பேதகத்தை 1
பேதம் 2
பேதமற 1
பேதமிட்டு 1
பேதாய் 1
பேதுற்று 1
பேதை 9
பேதைகள் 1
பேதைப்படுத்தி 1
பேதைமை 5
பேதைமைக்கு 1
பேதைமைப்படுத்தும் 1
பேதையேன் 3
பேதையை 1
பேய் 19
பேய்கள் 9
பேய்களுக்கு 1
பேய்கொண்டு 1
பேய்தனை 1
பேய்தான் 2
பேய்வனமாம் 1
பேயவள் 1
பேயனும் 1
பேயா 1
பேயாம் 1
பேயாய் 1
பேயினை 3
பேயும் 3
பேயுரையாம் 1
பேயே 2
பேயை 7
பேர் 21
பேர்க்கும் 2
பேர்களும் 1
பேர்ந்து 1
பேர்ப்பான் 1
பேரடல் 1
பேரதிர்ச்சி 1
பேரரசரும் 1
பேரரசே 1
பேரருள் 4
பேரருளின் 1
பேரவை 1
பேரவைதன்னில் 1
பேரவையை 1
பேரழகு 2
பேரழகே 1
பேரழகை 1
பேரறத்தினை 1
பேரன்பு 1
பேராசை 1
பேராசைக்காரனடா 1
பேராவலின் 1
பேரிகை 4
பேரியல் 1
பேரிருள் 1
பேரிருளாம் 1
பேரின்ப 1
பேரின்பம் 2
பேரினள் 1
பேரு 1
பேருக்கு 1
பேருக்கும் 1
பேரும் 2
பேருயிரோடு 1
பேருரையாய் 1
பேருவகை 2
பேரொலி 4
பேரொளி 5
பேரொளிக்கே 1
பேரொளியிடை 1
பேற்றாலே 1
பேற்றினிலே 1
பேற்றினை 1
பேற்றை 3
பேறாம் 1
பேறு 1
பேறுகள் 1
பேறே 2

பேச்சதனை (1)

பெண்ணரசி கேள்விக்கு பாட்டன் சொன்ன பேச்சதனை நான் கொள்ளேன் பெண்டிர்தம்மை – பாஞ்சாலி:5 284/2
மேல்

பேச்சில் (2)

பட்டம் பெற்றோர்க்கு மதிப்பு என்பதும் இல்லை பரதேச பேச்சில் மயங்குபவர் இல்லை –தேசீய:36 3/1
கொச்சை பேச்சில் கைகொட்டி நகைப்போம் கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும் – தனி:14 1/3
மேல்

பேச்சின் (1)

பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
மேல்

பேச்சினில் (2)

பிறப்பினில் அன்னியர் பேச்சினில் அன்னியர் –தேசீய:32 1/186
மாய குயில் அதுதான் மானுடவர் பேச்சினில் ஓர் – குயில்:3 1/11
மேல்

பேச்சினிலே (4)

தந்தையர் நாடு என்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே –தேசீய:20 1/2
பின்னர் தெருவில் ஓர் சேவல் அதன் பேச்சினிலே சக்தி வேல் என்று கூவும் – தனி:2 2/4
பிழைக்கும் வழி சொல்லவேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் – கண்ணன்:1 3/1
வானர பேச்சினிலே மை குயில் பேசியதை – குயில்:5 1/53
மேல்

பேச்சினும் (1)

ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பல் மரத்து ஏறி இறங்கியும் என்னோடு ஒத்த சிறியர் இருப்பரால் – சுயசரிதை:1 4/1,2
மேல்

பேச்சு (7)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம் –தேசீய:31 2/1
சுதந்திரம் என்கிற பேச்சு எங்கள் தொழும்புகள் எல்லாம் வீணாய் போச்சு இது –தேசீய:35 2/1
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என் – கண்ணன்:6 1/53
பிள்ளை குயிலினது ஓர் பேச்சு அன்றி வேறு அற்றேன் – குயில்:3 1/54
பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சு தவறுவனோ – குயில்:9 1/55
பேச்சு இழந்தே அங்கு பிணமா கிடந்துவிட்டார் – குயில்:9 1/155
வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன – வசனகவிதை:4 1/21
மேல்

பேச்சுக்கள் (1)

பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
மேல்

பேச்சுக்கு (1)

பேச்சுக்கு இடம் ஏதடி நீ பெண் குலத்தின் வெற்றியடி – தனி:15 2/1
மேல்

பேச்சுகள் (1)

பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
மேல்

பேச்சும் (1)

பித்துப்பிடித்தது போல் பகல் பேச்சும் இரவில் கனவும் அவளிடை – தோத்திர:64 4/2
மேல்

பேச்சை (2)

பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
வாதித்து பேச்சை வளர்த்து ஓர் பயனும் இல்லை – குயில்:7 1/42
மேல்

பேச (2)

பேசா பொருளை பேச நான் துணிந்தேன் – தோத்திர:1 32/1
பேச முடியா பெரும் காதல் கொண்டு விட்டேன் – குயில்:5 1/66
மேல்

பேசரும் (2)

பெண்டிர்தமக்கு எல்லாம் கண்ணன் பேசரும் தெய்வமடீ – கண்ணன்:15 2/4
பெரியதொர் பொருள் ஆவாய் கண்ணா பேசரும் பழமறை பொருள் ஆளாவாய் – பாஞ்சாலி:5 293/4
மேல்

பேசல் (1)

பழமை பழமை என்று பாவனை பேசல் அன்றி –தேசீய:40 14/1
மேல்

பேசலாம் (1)

இவளிடம் சில வ்யவஹாரங்கள் தீர்க்கவேண்டி இருக்கிறது தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன் – வசனகவிதை:4 1/43
மேல்

பேசலுற்றேன் (1)

அப்போது நான் குள்ளச்சாமி கையை அன்புடனே பற்றி இது பேசலுற்றேன்
அப்பனே தேசிகனே ஞானி என்பார் அவனியிலே சிலர் நின்னை பித்தன் என்பார் – சுயசரிதை:2 24/1,2
மேல்

பேசவும் (1)

பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/4
மேல்

பேசா (1)

பேசா பொருளை பேச நான் துணிந்தேன் – தோத்திர:1 32/1
மேல்

பேசாதே (1)

வெற்றுரை பேசாதே அடிமை வீரியம் அறிவாயோ –தேசீய:34 5/2
மேல்

பேசாய் (1)

பீழை உனக்கு எய்தியது என் பேசாய் என கேட்டேன் – குயில்:3 1/10
மேல்

பேசி (16)

என பல பேசி இறைஞ்சிடப்படுவதாய் –தேசீய:24 1/1
தாம் எத்தையோ வந்தே என்று துதிக்கிறார் தரமற்ற வார்த்தைகள் பேசி குதிக்கிறார் –தேசீய:36 4/2
பேசி பயன் என்னடீ –தேசீய:40 4/3
பேசி நின்ற பெரும் பிரதிக்கினை –தேசீய:50 15/1
தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் – தோத்திர:32 4/1
பெட்டையினோடு இன்பம் பேசி களிப்புற்று பீடையிலாததோர் கூடுகட்டிக்கொண்டு –வேதாந்த:3 2/1
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசி களிப்பொடு நாம் பாட – பல்வகை:6 0/1
ஏதுரைகள் பேசி இருக்கின்றீர் என்றிடவே – தனி:1 24/1
பாதி பேசி மறைந்து பின் தோன்றி தன் பங்கய கையில் மை கொணர்ந்தே ஒரு – சுயசரிதை:1 19/3
பாதி நடு கலவியிலே காதல் பேசி பகல் எல்லாம் இரவு எல்லாம் குருவி போலே – சுயசரிதை:2 53/3
பெற்றுவரும் நன்மை எல்லாம் பேசி முடியாது – கண்ணன்:4 1/44
கேலிகள் பேசி கிளறியும் இன்னும் – கண்ணன்:6 1/62
தாடியும் கண்டு வணங்கியே பல சங்கதி பேசி வருகையில் – கண்ணன்:7 2/4
ஆளுக்கு இசைந்தபடி பேசி தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான் – கண்ணன்:9 10/2
மதுர மொழியில் குசலங்கள் பேசி மன்னனொடும் திருமாளிகை சேர்ந்தார் – பாஞ்சாலி:1 119/4
சிங்கம் என திகழ் வீரர் புலவர் சேவகர் யாரொடும் செய்திகள் பேசி
பொங்கு திருவின் நகர்வலம் வந்து போழ்து கழிந்து இரவாகிய பின்னர் – பாஞ்சாலி:1 121/3,4
மேல்

பேசிக்கொண்டும் (1)

வேடிக்கை பேச்சு பேசிக்கொண்டும் ரஸப்போக்கிலே இருந்தன – வசனகவிதை:4 1/21
மேல்

பேசிடிலே (1)

பெய்வாள் சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னை பேசிடிலே – தோத்திர:1 31/4
மேல்

பேசிடும் (1)

வாதுகள் பேசிடும் மாந்தர் குரலும் மதலை அழும் குரலும் – தனி:3 6/2
மேல்

பேசிடும்படி (1)

பெரியோன் வேதமுனி அன்று பேசிடும்படி திகழ் தோள்வலியோன் – பாஞ்சாலி:1 16/3
மேல்

பேசிடுவார் (1)

தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
உள்வீட்டு செய்தி எல்லாம் ஊர் அம்பலத்து உரைப்பார் – கண்ணன்:4 1/8,9
மேல்

பேசிடுவீர் (1)

வாயினில் வந்தது எல்லாம் சகியே வளர்த்து பேசிடுவீர்
நோயினை போல் அஞ்சினேன் சகியே நுங்கள் உறவை எல்லாம் – கண்ணன்:10 2/3,4
மேல்

பேசிப்பார் (1)

பேசிப்பார் மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை – வசனகவிதை:4 1/13
மேல்

பேசிய (3)

முதுமை காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை மாறிட கேடு விளைந்ததாம் – பல்வகை:4 6/4
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய பண்டை நண்பர்கள் கைநெகிழ்த்து ஏகினர் – சுயசரிதை:1 39/3
பித்தன் என்று உலகினர் பேசிய பேச்சு என் – கண்ணன்:6 1/53
மேல்

பேசியது (2)

ஆற்றங்கரையதனில் முன்னம் ஒருநாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியது எல்லாம் – கண்ணன்:13 5/1
பேடை குயில் இதனை பேசியது வானரரே – குயில்:5 1/21
மேல்

பேசியதை (1)

வானர பேச்சினிலே மை குயில் பேசியதை
யான் அறிந்துகொண்டுவிட்டேன் யாதோ ஒரு திறத்தால் – குயில்:5 1/53,54
மேல்

பேசிவைத்தது (1)

உபதேசம் நீர் பேசிவைத்தது எல்லாம் மோசம் –தேசீய:35 3/2
மேல்

பேசினர் (1)

பிரமமே யான் என பேசினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/14
மேல்

பேசினாய் (1)

ஏழைப்பட்டு இங்கு இறத்தல் இழிவு என்றே ஏசினாய் வீரம் பேசினாய் –தேசீய:38 3/2
மேல்

பேசினார் (1)

தாமரைக்கண்ணன் யுதிட்டிரன் சொல்லை தட்டி பணிவொடு பேசினார் தவ – பாஞ்சாலி:1 136/3
மேல்

பேசினால் (1)

கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா – வசனகவிதை:4 1/12
மேல்

பேசீர் (1)

மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர்
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இ பெரும் தொழில் நாட்டுவம் வாரீர் – தோத்திர:62 10/3,4
மேல்

பேசீரோ (1)

இரு விழி பார்க்க வாய் பேசீரோ தாத்தனே நீதி இது தகுமோ என்றான் – பாஞ்சாலி:5 286/4
மேல்

பேசு (3)

ஓம் சக்தி செய்யும் புதுமைகள் பேசு நல்ல – தோத்திர:26 4/1
நேர்பட பேசு
நைய புடை – பல்வகை:1 2/61,62
வெடிப்புற பேசு
வேதம் புதுமைசெய் – பல்வகை:1 2/107,108
மேல்

பேசுக (1)

பிரமமே யான் என பேசுவர் பேசுக
பிரமமே யான் என பேசினர் பெரியோர் – பிற்சேர்க்கை:16 1/13,14
மேல்

பேசுகவோ (1)

ஓசை வளர் முரசம் ஓதுவாய் பேசுகவோ
சத்தியமே செய்க தருமமே என்று ஒலிசெய் –தேசீய:13 8/2,3
மேல்

பேசுகிறாய் (1)

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ – கண்ணன்:16 3/1
மேல்

பேசுகின்றாய் (2)

சாத்திரம் பேசுகின்றாய் என தழல்படு விழியொடு சகுனி சொல்வான் – பாஞ்சாலி:2 175/1
தெய்வ தவத்தியை சீர்குலைய பேசுகின்றாய்
நின்னுடைய நன்மைக்கு இ நீதி எலாம் சொல்லுகிறேன் – பாஞ்சாலி:4 252/52,53
மேல்

பேசுதல் (1)

ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று – வசனகவிதை:2 12/23
மேல்

பேசுதி (1)

பிரித்துப்பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன பேசுதி என்றாள் – கண்ணன்:17 3/4
மேல்

பேசுபவன் (1)

பின்வரு மொழிகள் பேசுபவன் குரவன் கோன் –தேசீய:42 1/65
மேல்

பேசுபொருள் (1)

பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு – கண்ணன்:21 5/2
மேல்

பேசும் (7)

காசி நகர் புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் –தேசீய:5 7/1
சக்தி சக்தி சக்தி என்று பேசும் மனம் – தோத்திர:24 15/3
சக்தி என்று வீணைதனில் பேசும் சித்தம் – தோத்திர:24 27/3
மாதர் தீம் குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் – தோத்திர:62 2/1
பிள்ளைக்கனி அமுதே கண்ணம்மா பேசும் பொன் சித்திரமே – கண்ணன்:8 2/1
பேசும் இடைப்பொருளின் பின்னே மதி போக்கி – குயில்:6 1/26
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டு கயிறும் பேசும் அதில் ஸந்தேகமே இல்லை – வசனகவிதை:4 1/16
மேல்

பேசுவதில் (1)

பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
மேல்

பேசுவது (2)

பித்தரே அனைத்து உயிரும் கடவுள் என்று பேசுவது மெய்யானால் பெண்டிர் என்றும் – சுயசரிதை:2 17/3
பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் தம்முள் பன்னி உபசரணை பேசுவது உண்டோ – கண்ணன்:19 3/2
மேல்

பேசுவதும் (1)

என்று பல பேசுவதும் என் உயிரை புண் செயவே – குயில்:5 1/71
மேல்

பேசுவர் (2)

சதிகள் செய்வர் பொய் சாத்திரம் பேசுவர் சாதகங்கள் புரட்டுவர் பொய்மை சேர் – சுயசரிதை:1 13/2
பிரமமே யான் என பேசுவர் பேசுக – பிற்சேர்க்கை:16 1/13
மேல்

பேசுவார் (1)

பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
மேல்

பேசுவானோ (1)

அவள் இகழ்ந்திடாளோ அந்த ஆயன் பேசுவானோ
கவலை தீர்த்துவைப்போம் மேலே களி நடக்குக என்றான் – பாஞ்சாலி:3 226/1,2
மேல்

பேசுவோர் (3)

பேசுவோர் வார்த்தை தாதா சொல்லிவிட்டார் பின்வரவு அறியாமல் சுதந்திரம் தொட்டார் –தேசீய:36 2/2
தட்டி பேசுவோர் உண்டோ சிறைக்குள்ளே தள்ளுவேன் பழி கொள்ளுவேன் –தேசீய:38 7/2
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர்
கருதும் இவ்வகை மாக்கள் பயின்றிடும் கலை பயில்க என என்னை விடுத்தனன் – சுயசரிதை:1 22/2,3
மேல்

பேசொணா (1)

பிரிந்து மற்று அகன்றனை பேசொணா நின் அருள் – தனி:13 1/30
மேல்

பேட்டை (1)

இனிது இ குயில் பேட்டை என்றும் பிரியாமல் – குயில்:1 1/28
மேல்

பேடி (2)

பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார் பேடி கல்வி பயின்று உழல் பித்தர்கள் – சுயசரிதை:1 26/3
பேடி மகன் ஒரு பாகன்பால் சொன்ன பேச்சுக்கள் வேண்டிலன் கேட்கவே – பாஞ்சாலி:5 270/4
மேல்

பேடிகள்தம்மை (1)

அடிமை பேடிகள்தம்மை மனிதர்கள் ஆக்கினாய் புன்மை போக்கினாய் –தேசீய:38 4/1
மேல்

பேடிகளை (1)

சக்தி அற்ற பேடிகளை ஏசு – தோத்திர:26 4/2
மேல்

பேடிமை (1)

பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல் –தேசீய:32 1/172
மேல்

பேடிமையும் (1)

அச்சமும் பேடிமையும் அடிமை சிறுமதியும் –தேசீய:40 10/1
மேல்

பேடியர் (2)

பேடியர் ஞான பிதற்றல் சொல்லாதே – தோத்திர:68 24/3
பெரிது என கொடு தம் உயிர் விற்றிடும் பேடியர் பிறர்க்கு இச்சகம் பேசுவோர் – சுயசரிதை:1 22/2
மேல்

பேடே (1)

பேடே திரவியமே பேரின்ப பாட்டுடையாய் – குயில்:3 1/8
மேல்

பேடை (2)

பேடை குயில் ஒன்று பெண் புறவு ஓர் வான் கிளையில் – குயில்:1 1/12
பேடை குயில் இதனை பேசியது வானரரே – குயில்:5 1/21
மேல்

பேண (2)

முற்றும் பேண முற்பட்டு நின்றார் –தேசீய:12 5/24
பிள்ளை பருவத்திலே எனை பேண வந்தாள் அருள்பூண வந்தாள் – பாஞ்சாலி:1 3/4
மேல்

பேணல் (1)

பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மேல்

பேணாய் (1)

பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
மேல்

பேணி (9)

புல் அடிமை தொழில் பேணி பண்டு போயின நாட்களுக்கு இனி மனம் நாணி –தேசீய:1 6/1
தன்னலம் பேணி இழி தொழில் கற்போம் தாய்த்திருநாடு எனில் இனி கையை விரியோம் –தேசீய:6 3/2
பெருமையை நன்கு அறிந்தவனை தெய்வம் என நெஞ்சினுளே பெட்பில் பேணி
வரு மனிதர் எண்ணற்றார் இவரை எலாம் ஓட்டி எவர் வாழ்வது இங்கே –தேசீய:47 2/3,4
பேணி வையம் எல்லாம் நன்மை பெருகவைக்கும் விரதம் – தோத்திர:57 3/3
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் – பல்வகை:3 9/1
நாண் இலகு வில்லினொடு தூணி நல்ல நாதம் மிகு சங்கொலியும் பேணி
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/1,2
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன் – தனி:13 1/15
பீடுறு மக்களை ஓர் முறை இங்கே பேணி அழைத்து விருந்துகள் ஆற்ற – பாஞ்சாலி:1 112/3
பேணி வந்தார் பின் நாளில் இஃது பெயர்ந்துபோய் – பாஞ்சாலி:5 271/60
மேல்

பேணிய (1)

பேணிய பெரும் தவத்தாள் நிலம் பெயரளவும் பெயர் பெயராதாள் – பாஞ்சாலி:1 6/2
மேல்

பேணியிருந்தாரடீ (1)

பேணியிருந்தாரடீ –தேசீய:40 8/3
மேல்

பேணினர் (1)

பேற்றினை பெறுவேம் எனல் பேணினர் –தேசீய:29 7/4
மேல்

பேணினோர்க்கு (1)

பெண் இரண்டு விழிகளையும் நோக்கிடுவாய் கோவிந்தா பேணினோர்க்கு
நண்ணு இரண்டு பொன் பாதம் அளித்து அருள்வாய் சராசரத்து நாதா நாளும் – தோத்திர:44 1/2,3
மேல்

பேணுதல் (2)

பேரறத்தினை பேணுதல் வேலியே –தேசீய:29 9/1
பிச்சை வாங்கி பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ –தேசீய:34 3/2
மேல்

பேணும் (7)

பெண்மை காண் மரியா மக்தலேநா பேணும் நல் அறம் யேசு கிறிஸ்து – தோத்திர:77 3/3
பேணும் நற்குடி பெண்ணின் குணங்களாம் பெண்மை தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ – பல்வகை:4 4/4
பேணும் ஒரு காதலினை வேண்டி அன்றோ பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார் – சுயசரிதை:2 56/3
பேசுபொருள் நீ எனக்கு பேணும் மொழி நான் உனக்கு – கண்ணன்:21 5/2
பேணும் பெரும் கனல் ஒத்தாள் எங்கள் பெண்டு திரௌபதியை தொடை மீதில் – பாஞ்சாலி:5 304/2
பேணும் மனை வந்தேன் பிரக்கினை போய் வீழ்ந்துவிட்டேன் – குயில்:6 1/6
பின்னும் ஸ்மிருதிகள் செய்தார் அவை பேணும் மனிதர் உலகினில் இல்லை – பிற்சேர்க்கை:8 11/1
மேல்

பேணுமவர் (1)

பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
மேல்

பேணுமாயில் (1)

பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரம்தான் பேணுமாயில் பிறகு ஒரு தாழ்வு இல்லை – பல்வகை:5 4/1
மேல்

பேணுமாறு (2)

பெயர்வற எங்கள் நாட்டினர் மனத்தில் பேணுமாறு இயற்றிட கடவேன் –தேசீய:50 12/3
பின் வழி மக்கள் பேணுமாறு அளிக்கும் – பிற்சேர்க்கை:28 1/2
மேல்

பேணுவன (1)

பேணுவன யாவும் பிறப்பது அந்த வெள்ளத்தே –வேதாந்த:11 2/2
மேல்

பேணோம் (1)

கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்டை கதை பேணோம்
கடமை அறிவோம் தொழில் அறியோம் கட்டு என்பதனை வெட்டு என்போம் –வேதாந்த:18 1/1,2
மேல்

பேதகத்தை (1)

பிச்சை சிறுக்கி செய்த பேதகத்தை பார்த்தாயோ – குயில்:9 1/127
மேல்

பேதம் (2)

பேதம் இன்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து அன்பு பிரிந்துவிட்டால் – சுயசரிதை:2 54/3
பேதம் விளைவித்து பின் இங்கே வந்திடுவேன் – குயில்:9 1/52
மேல்

பேதமற (1)

பிறந்தது மறக்குலத்தில் அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் – கண்ணன்:3 4/1
மேல்

பேதமிட்டு (1)

பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
மேல்

பேதாய் (1)

ஐயர் உரைப்பார் அடி பேதாய் இ பிறவி – குயில்:9 1/184
மேல்

பேதுற்று (1)

பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
மேல்

பேதை (9)

என்று அந்த பேதை உரைத்தான் ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ –தேசீய:21 11/1
இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே எதற்கும் இனி உளைவதிலே பயன் ஒன்று இல்லை – தோத்திர:27 1/1
பேதை உலகை பேதைமைப்படுத்தும் – தனி:12 1/5
பேதை மா சத்தியின் பெண்ணே வாழ்க – தனி:12 1/21
பேதை நீயும் முகம் மலர்வு எய்தி பெட்பும் மிக்குற வீற்றிருக்கின்றாய் – பாஞ்சாலி:2 199/2
பெருகு சீர்த்தி அ கங்கையின்மைந்தன் பேதை நானும் மதிப்பு இழந்து ஏக – பாஞ்சாலி:2 203/2
பேதை நான் அங்கு பெரிய மயல் கொண்டதையும் – குயில்:7 1/112
பீடையுறு புள் வடிவம் பேதை உனக்கு எய்தியது – குயில்:9 1/171
பேதை கதைகள் பிதற்றுவர் இ நாட்டினிலே – பிற்சேர்க்கை:5 5/2
மேல்

பேதைகள் (1)

பேதைகள் போல் உயிரை கிளியே –தேசீய:40 8/2
மேல்

பேதைப்படுத்தி (1)

பேதைப்படுத்தி பிறப்பை மறப்புறுத்தி – குயில்:9 1/195
மேல்

பேதைமை (5)

பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர் – பல்வகை:3 10/2
செந்திருவை கண்டு வெம்பியே உளம் தேம்புதல் பேதைமை என்கிறான் மன்னர் – பாஞ்சாலி:1 88/3
தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக்கொள்வதை காட்டிலும் பெரிய பேதைமை வேறு இல்லை – வசனகவிதை:6 3/21
தும்பம்தான் ஓர் பேதைமை அன்றோ – வசனகவிதை:7 3/3
பாழில் இவர் கடைக்குலத்தார் என்பது பேதைமை அன்றோ பார்க்கும் காலை – பிற்சேர்க்கை:10 2/3
மேல்

பேதைமைக்கு (1)

பேதைமைக்கு மாற்று இல்லை எங்கள் முத்துமாரி அம்மா எங்கள் முத்துமாரி – தோத்திர:40 2/6
மேல்

பேதைமைப்படுத்தும் (1)

பேதை உலகை பேதைமைப்படுத்தும்
வெறும் கதை திரளை வெள்ளறிவு உடைய – தனி:12 1/5,6
மேல்

பேதையேன் (3)

பேதையேன் அவ் வலைப்பின்னலின் வீழ்ந்து – கண்ணன்:6 1/12
விதி வழி நன்கு உணர்ந்திடினும் பேதையேன் யான் வெள்ளை மனம் உடைமையினால் மகனே நின்றன் – பாஞ்சாலி:3 217/1
மேலை செயல் அறியா வெள் அறிவில் பேதையேன்
தட்டுத்தடுமாறி சார்பு அனைத்தும் தேடியுமே – குயில்:5 1/78,79
மேல்

பேதையை (1)

பெண்கள் இனத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டது உண்டோ – கண்ணன்:14 4/2
மேல்

பேய் (19)

அந்த அரசியலை இவர் அஞ்சுதரு பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார் –தேசீய:15 2/4
பேய் தகை கொண்டோர் பெருமையும் வன்மையும் –தேசீய:32 1/43
தான் எனும் பேய் கெடவே பல சஞ்சல குரங்குகள் தலைப்படவே – தோத்திர:61 4/1
நல் நகரதனிடை வாழ்ந்திடுவோம் நம்மை நலித்திடும் பேய் அங்கு வாராதே –வேதாந்த:25 5/2
அண்டம் குலுங்குது தம்பி தலை ஆயிரம் தூக்கிய சேடனும் பேய் போல் – தனி:4 3/1
பிள்ளையை நாசம் புரியவே ஒரு பேய் என நீ வந்து தோன்றினாய் பெரு – பாஞ்சாலி:1 71/3
பெரிதா துயர் கொணர்ந்தாய் கொடும் பேய் என பிள்ளைகள் பெற்றுவிட்டேன் – பாஞ்சாலி:1 92/2
பேச்சின் இடையில் சகுனி சொல் கேட்டே பேய் எனும் பிள்ளை கருத்தினில் கொண்ட – பாஞ்சாலி:1 113/1
உள்ளத்தை அச்சம் உலையுறுத்த பேய் கண்ட – பாஞ்சாலி:4 252/111
தெவ்வர் இவன்றனை அஞ்சுவார் தன்னை சேர்ந்தவர் பேய் என்று ஒதுங்குவார் – பாஞ்சாலி:5 264/4
பேய் அரசுசெய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் – பாஞ்சாலி:5 271/81
எண்ணுதலும் செய்யேன் இருபது பேய் கொண்டவன் போல் – குயில்:4 1/2
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே பேய் இரண்டும் – குயில்:9 1/203
பேய் உண்டு மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/4
பேய் இல்லை மந்திரம் உண்டு – வசனகவிதை:3 3/5
பேய் போல வீசி அதனை மடித்துவிடாதே – வசனகவிதை:4 6/7
காலனுக்கு தூதனாகிய மனக்குறை என்னும் பேய் எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது – வசனகவிதை:6 3/38
மெய் உரைப்பேன் பேய் மனமே மேலும் கீழும் பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 1/2
விரிந்த பெரும் புறங்கள் மேல் எறிந்து உன் பேய் அலைகளை – பிற்சேர்க்கை:25 2/1
மேல்

பேய்கள் (9)

வஞ்சனை பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார் –தேசீய:15 1/3
சாத்திரங்கள் ஒன்றும் காணார் பொய் சாத்திர பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே –தேசீய:15 5/1
வாகான தோள் புடைத்தார் வான் அமரர் பேய்கள் எல்லாம் வருந்தி கண்ணீர் –தேசீய:52 1/3
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/4
பங்கமுற்றே பேய்கள் ஓட பாயுதே தீ தீ இ நேரம் – தோத்திர:75 1/2
ஒன்பது வாயில் குடிலினை சுற்றி ஒரு சில பேய்கள் வந்தே – கண்ணன்:22 9/1
மானுடராம் பேய்கள் வயிற்றுக்கு சோறிடவும் – குயில்:7 1/45
நின்று துயருறுத்தல் நீதியோ பேய்கள் எனை – குயில்:9 1/194
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி – குயில்:9 1/219
மேல்

பேய்களுக்கு (1)

பேய்களுக்கு அஞ்சேல் – பல்வகை:1 2/72
மேல்

பேய்கொண்டு (1)

தக்கத் ததிங்கிட தித்தோம் அண்டம் சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை அடிக்குது காற்று தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட – தனி:4 1/3,4
மேல்

பேய்தனை (1)

பயம் எனும் பேய்தனை அடித்தோம் பொய்ம்மை பாம்பை பிளந்து உயிரை குடித்தோம் –வேதாந்த:2 1/1
மேல்

பேய்தான் (2)

ஊழாம் பேய்தான் ஓஹோஹோ என்று அலைய வெறித்து உறுமி திரிவாய் செரு வெம் கூத்தே புரிவாய் – தோத்திர:35 3/2
சக்தி பேய்தான் தலையொடு தலைகள் முட்டி சட்ட சடசட சட்டென்று உடைபடு தாளம் கொட்டி அங்கே – தோத்திர:35 4/1
மேல்

பேய்வனமாம் (1)

முழுதும் ஒரு பேய்வனமாம் சிவேரியிலே ஆவி கெட முடிவது உண்டு –தேசீய:52 3/4
மேல்

பேயவள் (1)

பேயவள் காண் எங்கள் அன்னை பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை –தேசீய:10 1/1
மேல்

பேயனும் (1)

பிச்சேறியவனை போல் அந்த பேயனும் துகிலினை உரிகையிலே – பாஞ்சாலி:5 292/3
மேல்

பேயா (1)

மாடன் குரங்கன் இருவருமே வன் பேயா
காடு மலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார் – குயில்:9 1/187,188
மேல்

பேயாம் (1)

இவை எலாம் அறிவிலாமை என்பதோர் இருளில் பேயாம்
நவமுறு ஞானபாநு நண்ணுக தொலைக பேய்கள் – தோத்திர:71 2/3,4
மேல்

பேயாய் (1)

பேயாய் உழலும் சிறுமனமே பேணாய் என் சொல் இன்று முதல் –வேதாந்த:21 1/1
மேல்

பேயினை (3)

மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன் மார வெம் பேயினை அஞ்சேன் – தோத்திர:33 1/2
பேயினை வேதம் உணர்த்தல் போல் கண்ணன் பெற்றி உனக்கு எவர் பேசுவார் – பாஞ்சாலி:1 83/4
நீள் விட்ட பொன் மாளிகை கட்டி பேயினை நேர்ந்து குடியேற்றல் போல் – பாஞ்சாலி:4 245/2
மேல்

பேயும் (3)

பெண் என்று சொல்லிடிலோ ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே நினது –தேசீய:53 2/1
பேயும் பிசாசும் திருடரும் என்றன் பெயரினை கேட்டளவில் – கண்ணன்:22 10/1
பேயும் இரங்காதோ பேய்கள் இரக்கம் இன்றி – குயில்:9 1/219
மேல்

பேயுரையாம் (1)

பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் –வேதாந்த:9 1/2
மேல்

பேயே (2)

சீச்சி பேயே சிறிது போழ்தேனும் – கண்ணன்:6 1/124
பெயர் பல காட்டும் ஒரு கொடும் பேயே
உரு பல காட்டும் ஒரு புலை பாம்பே – வசனகவிதை:7 0/41,42
மேல்

பேயை (7)

துன்பம் என்னும் கடலை கடக்கும் தோணி அவன் பெயர் சோர்வு என்னும் பேயை ஓட்டும் சூழ்ச்சி அவன் பெயர் –தேசீய:45 3/1
கண் இலா பேயை எள்ளுவேன் இனி எக்காலுமே அமைதியில் இருப்பேன் – தோத்திர:33 2/3
எண்ணியே ஓம் சக்தி எனும் புண்ணிய முனிவர் நித்தம் எய்துவார் மெய்ஞ்ஞானம் எனும் தீயை எரித்து எற்றுவார் இ நான் எனும் பொய் பேயை – தோத்திர:38 2/4
தாமச பேயை கண்டு தாக்கி மடித்திடலாகும் எந்நேரமும் –வேதாந்த:15 2/2
ஐயம் எனும் பேயை எலாம் ஞானம் எனும் வாளாலே அறுத்துத்தள்ளி – தனி:23 2/4
பேயை கொலையை பிண குவையை கண்டு உவப்பாள் – பாஞ்சாலி:4 252/18
அச்ச பேயை கொல்லும் படையாம் – வசனகவிதை:7 4/1
மேல்

பேர் (21)

கண் ஒத்த பேர் உரைத்தக்கால் –தேசீய:12 2/4
பேர் இமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும் –தேசீய:13 2/3
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
அன்பு எனும் தேன் ஊறி ததும்பும் புது மலர் அவன் பேர் ஆண்மை என்னும் பொருளை காட்டும் அறிகுறி அவன் பேர் –தேசீய:45 3/2
இரணியன் போல் அரசாண்டான் கொடுங்கோலன் ஜார் எனும் பேர் இசைந்த பாவி –தேசீய:52 2/1
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் – தோத்திர:18 1/4
சக்தி சக்தி என்றால் சக்திதாசன் என்றே பேர் ஆகும் – தோத்திர:25 9/2
நீயே சரணம் என்று கூவி என்றன் நெஞ்சில் பேர் உறுதிகொண்டு அடி – தோத்திர:32 2/1
பேர் உயர் முனிவர் முன்னே கல்வி பெரும் கடல் பருகிய சூதன் என்பான் – தோத்திர:42 1/3
தொக்க பேர் அண்டங்கள் கொண்ட தொகைக்கு இல்லை இல்லை என்று சொல்லுகின்ற – தோத்திர:42 6/2
வாயினிலே அமுது ஊறுதே கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போழ்திலே உயிர் – தோத்திர:52 2/3
வண்மை பேர் உயிர் யேசு கிறிஸ்து வான மேனியில் அங்கு விளங்கும் – தோத்திர:77 3/2
கறுத்த மாரியின் பேர் சொன்னால் காலனும் அஞ்சுமடா –வேதாந்த:17 2/2
திருத்தணிகை என்பது இங்கு பொறுமையின் பேர் செந்தமிழ் கண்டீர் பகுதி தணி எனும் சொல் – சுயசரிதை:2 11/2
பேர் உயர்ந்த ஏஹோவா அல்லா நாமம் பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும் – சுயசரிதை:2 64/4
பேர் அறமும் பெரும் தொழிலும் பிறங்கும் நாடு பெண்கள் எல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு – பாஞ்சாலி:1 118/1
தருமத்தை அப்போது வெல்ல காண்போம் தனு உண்டு காண்டீவம் அதன் பேர் என்றான் – பாஞ்சாலி:5 283/4
ஓலிடும் நும் பேர் ஒலியோடு ஒன்றுபட கத்துவேன் – குயில்:7 1/52
மாமன் மகன் ஒருவன் மாடன் எனும் பேர் கொண்டான் – குயில்:9 1/23
பெண் ஒருத்தி அங்கு நின்றாள் பேர் உவகை கொண்டு தான் – குயில்:9 1/229
உண்மையின் பேர் தெய்வம் என்போம் அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் என கண்டோம் – பிற்சேர்க்கை:8 6/1
மேல்

பேர்க்கும் (2)

தான் விரும்பில் மா மலையை பேர்க்கும் – தோத்திர:24 17/5
வலி உண்டு தீமையை பேர்க்கும்
விதி உண்டு தொழிலுக்கு விளைவு உண்டு குறைவு இல்லை – தோத்திர:67 2/2,3
மேல்

பேர்களும் (1)

தேசத்தில் எண்ணற்ற பேர்களும் கெட்டார் செய்யும் தொழில் முறை யாவரும் விட்டார் –தேசீய:36 2/1
மேல்

பேர்ந்து (1)

பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும் – தோத்திர:1 15/2
மேல்

பேர்ப்பான் (1)

தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை – தோத்திர:50 6/1
மேல்

பேரடல் (1)

சோதிக்குள் ஊர்ந்திடுவாய் கண்ணா சுடர் பொருளே பேரடல் பொருளே – பாஞ்சாலி:5 296/4
மேல்

பேரதிர்ச்சி (1)

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி உண்டாம் கொடும் கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் – சுயசரிதை:2 14/1
மேல்

பேரரசரும் (1)

தர்மமே உருவமா தழைத்த பேரரசரும்
நிர்மல முனிவரும் நிறைந்த நல் நாடு –தேசீய:32 1/20,21
மேல்

பேரரசே (1)

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா – கண்ணன்:21 2/4
மேல்

பேரருள் (4)

பெற்றார் யாவரும் பேரருள் பெற்றார் –தேசீய:42 1/176
பேரருள் கடவுள் திருவடி ஆணை பிறப்பு அளித்து எமை எலாம் புரக்கும் –தேசீய:50 1/1
வந்தனம் அடி பேரருள் அன்னாய் வைரவீ திறல் சாமுண்டி காளி – தோத்திர:36 1/2
பேரருள் சுடர் வாள்கொண்டு அசோகனார் பிழைபடாது புவித்தலம் காத்ததும் – சுயசரிதை:1 25/3
மேல்

பேரருளின் (1)

பொறிகளின் மீது தனி அரசாணை பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் நிலைத்திடல் என்று இவை அருளாய் – சுயசரிதை:1 49/2,3
மேல்

பேரவை (1)

கோயிலுள் இருந்து பேரவை முனர் கொணர்ந்தான் –தேசீய:42 1/93
மேல்

பேரவைதன்னில் (1)

பேதுற்று நிற்பது கண்டனன் மற்றும் பேரவைதன்னில் ஒருவரும் இவன் – பாஞ்சாலி:4 260/3
மேல்

பேரவையை (1)

பின்னர் எனை தோற்றாரா என்றே நும் பேரவையை
மின்னல்கொடியார் வினவிவர தாம் பணித்தார் – பாஞ்சாலி:4 252/117,118
மேல்

பேரழகு (2)

நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து – தோத்திர:1 33/3,4
பேரழகு கொண்ட பெரும் தவத்து நாயகியை – பாஞ்சாலி:5 271/23
மேல்

பேரழகே (1)

எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொன் சுடரே – கண்ணன்:21 7/3
மேல்

பேரழகை (1)

வடிவுறு பேரழகை இன்ப வளத்தினை சூதினில் பணயம் என்றே – பாஞ்சாலி:4 244/3
மேல்

பேரறத்தினை (1)

பேரறத்தினை பேணுதல் வேலியே –தேசீய:29 9/1
மேல்

பேரன்பு (1)

பேரன்பு செய்தாரில் யாவரே பெரும் துயரம் பிழைத்துநின்றார் –தேசீய:47 3/1
மேல்

பேராசை (1)

பேராசை கொண்டு பிழை செயல்கள் செய்கின்றீர் – பாஞ்சாலி:4 252/69
மேல்

பேராசைக்காரனடா (1)

பேராசைக்காரனடா பார்ப்பான் ஆனால் பெரிய துரை என்னில் உடல் வேர்ப்பான் – பல்வகை:9 6/1
மேல்

பேராவலின் (1)

அற்றதால் மறுகும் என் உயிர்க்கு அதனில் ஆர்ந்த பேராவலின் ஆணை –தேசீய:50 4/3
மேல்

பேரிகை (4)

ஜய பேரிகை கொட்டடா கொட்டடா –வேதாந்த:2 0/1
ஜய பேரிகை கொட்டடா –வேதாந்த:2 0/2
தோற்றி நின்றனை பாரதநாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ – பல்வகை:4 1/3,4
பேரிகை கொட்டி திசைகள் அதிர நின் பெயர் முழக்கிடுவேன் – கண்ணன்:22 3/2
மேல்

பேரியல் (1)

பேரியல் செல்வங்களும் இசை பெருமையும் எய்திட விரும்புதியேல் – பாஞ்சாலி:1 93/3
மேல்

பேரிருள் (1)

அலைவுறுத்து நும் பேரிருள் வீழ்ந்து நான் அழிந்திடாது ஒருவாறு பிழைத்ததே – சுயசரிதை:1 29/4
மேல்

பேரிருளாம் (1)

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வதை – பல்வகை:4 7/3
மேல்

பேரின்ப (1)

பேடே திரவியமே பேரின்ப பாட்டுடையாய் – குயில்:3 1/8
மேல்

பேரின்பம் (2)

பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால் பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான் – சுயசரிதை:2 28/4
பேசவும் தோன்றுதில்லை உயிர் மாமனே பேரின்பம் கூட்டிவிட்டாய் – பாஞ்சாலி:4 250/4
மேல்

பேரினள் (1)

தீர்க்க திறம் தரு பேரினள் பாரததேவி மலர் திருவாய் –தேசீய:8 8/2
மேல்

பேரு (1)

பின்னை துயர்களில் என் பேரு மறந்திட்டாரோ –தேசீய:48 18/2
மேல்

பேருக்கு (1)

பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
மேல்

பேருக்கும் (1)

அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய் – பல்வகை:3 28/1
மேல்

பேரும் (2)

அன்பு என்று கொட்டு முரசே மக்கள் அத்தனை பேரும் நிகராம் – பல்வகை:3 20/1
பேதமிட்டு கலகமிட்டு வேலி கட்டி பின் அதற்கு காவல் என்று பேரும் இட்டு – சுயசரிதை:2 62/2
மேல்

பேருயிரோடு (1)

சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது – வசனகவிதை:4 5/9
மேல்

பேருரையாய் (1)

பிச்சை அருளியதாய் பேருரையாய் இ சகத்தில் –தேசீய:13 1/2
மேல்

பேருவகை (2)

சொப்பனநாடு என்ற சுடர்நாடு அங்கு சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை –வேதாந்த:25 1/2
பம்பலுற பெற்றனனேல் இதற்கு என்-கொல் பேருவகை படைக்கின்றீரே – தனி:21 1/4
மேல்

பேரொலி (4)

முன்னை காலத்தின் நின்று எழும் பேரொலி முறைமுறை பல ஊழியின் ஊடுற்றே – பல்வகை:10 3/3
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
பின்னை இங்கு வந்து எய்திய பேரொலி போல மந்திர வேதத்தின் பேரொலி – பல்வகை:10 3/4
யான் அகத்தே பேரொலி கீழ் உள்ளது அறிகுவனால் – பிற்சேர்க்கை:25 11/2
மேல்

பேரொளி (5)

பருதியின் பேரொளி வானிடை கண்டோம் பார் மிசை நின் ஒளி காணுதற்கு அளந்தோம் –தேசீய:11 3/1
மின்னுகின்ற பேரொளி காண் காலம் கொன்ற விருந்து காண் கடவுளுக்கு ஓர் வெற்றி காணே –தேசீய:12 4/4
ஆள்வதும் பேரொளி ஞாயிறே அனைய – தோத்திர:1 28/11
பிணி இருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய் – தோத்திர:10 1/13
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே பானுவே பொன் செய் பேரொளி திரளே – தோத்திர:69 1/3
மேல்

பேரொளிக்கே (1)

ஞாயிறு என்ற கோளம் தரும் ஓர் நல்ல பேரொளிக்கே
தேயம் ஈது ஓர் உவமை எவரே தேடி ஓத வல்லார் – தோத்திர:31 6/1,2
மேல்

பேரொளியிடை (1)

கருதிடற்கரிய பிரம நல் நிலையை கண்டு பேரொளியிடை களித்தோன் – தனி:18 1/2
மேல்

பேற்றாலே (1)

பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
மேல்

பேற்றினிலே (1)

காற்றினிலே மலை பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி –தேசீய:4 7/2,3
மேல்

பேற்றினை (1)

பேற்றினை பெறுவேம் எனல் பேணினர் –தேசீய:29 7/4
மேல்

பேற்றை (3)

பேர்ந்து பரமசிவானந்தர் பேற்றை நாடி நாள்தோறும் – தோத்திர:1 15/2
பேற்றாலே குரு வந்தான் இவன்பால் ஞான பேற்றை எல்லாம் பெறுவோம் யாம் என்று எனுள்ளே – சுயசரிதை:2 58/4
பேச்சை வளர்த்து பயன் என்றும் இல்லை என் மாமனே அவர் பேற்றை அழிக்க உபாயம் சொல்வாய் என்றன் மாமனே – பாஞ்சாலி:1 52/3
மேல்

பேறாம் (1)

அமிர்தம் என்று அறி-மின் அரும் பேறாம் இது –தேசீய:42 1/175
மேல்

பேறு (1)

யாவர் மொழியும் எளிது உணரும் பேறு பெற்றேன் – குயில்:3 1/26
மேல்

பேறுகள் (1)

ஆயிரம் கால முயற்சியால் பெறலாவர் இ பேறுகள் ஞானியர் இவை – பாஞ்சாலி:1 83/1
மேல்

பேறே (2)

பெற்றதன் பேறே செவி – தோத்திர:68 18/1
பெற்றதன் பேறே அந்த – தோத்திர:68 18/2
மேல்