பூ – முதல் சொற்கள், பாரதியார் கவிதைகள் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 4
பூக்கள் 1
பூங்குரல் 1
பூச்சி 2
பூச்சிகள் 4
பூச்சிதனை 1
பூச்சூட்டினேன் 1
பூச்சொரிந்தார் 1
பூசனை 2
பூசனைகள் 1
பூசி 2
பூஜித்தான் 1
பூசு 1
பூசை 2
பூஜை 1
பூசைக்கு 1
பூசைகள் 1
பூசையும் 1
பூட்டிவைப்போம் 1
பூட்டினவாய் 1
பூட்டுதல் 1
பூட்டுவீர் 1
பூட்டை 1
பூண் 5
பூண்கள் 2
பூண்ட 1
பூண்டது 1
பூண்டதே 1
பூண்டவர் 1
பூண்டனை 1
பூண்டிருப்பார் 1
பூண்டு 7
பூண்டேன் 1
பூண்போம் 1
பூணிட்ட 1
பூணு-மின் 1
பூணும் 6
பூணுவீர் 1
பூணூலாம் 1
பூணை 1
பூத்த 2
பூத்தனன் 1
பூத்தான் 2
பூத்திடும் 1
பூத்து 4
பூத 1
பூதங்கள் 4
பூதங்களிலும் 1
பூதங்களே 1
பூதத்து 1
பூதம் 6
பூதமும் 1
பூதல 1
பூதலத்தில் 1
பூதலத்தினை 1
பூதலத்து 1
பூதலத்தே 1
பூதலம் 2
பூதலமே 1
பூதேவி 1
பூந்தோட்டங்களும் 1
பூப்பள் 1
பூபா 1
பூபாலரே 1
பூபேந்தரனுக்கு 1
பூபேந்திர 1
பூம் 9
பூமகட்கு 2
பூமடந்தை 1
பூமண்டலத்தில் 1
பூமண்டலத்தே 1
பூமழை 1
பூமி 14
பூமிக்கு 1
பூமித்தாய் 2
பூமிதனில் 3
பூமிப்பந்தில் 1
பூமிப்பந்து 1
பூமிப்பெண் 1
பூமியதிர்ச்சி 1
பூமியாகிய 1
பூமியில் 11
பூமியிலே 6
பூமியின் 1
பூமியின்கண்ணே 1
பூமியினும் 1
பூமியினை 2
பூமியும் 1
பூமியை 1
பூரண 1
பூரணமா 1
பூரித்து 1
பூரிப்பு 1
பூரியர் 1
பூரியர்கள் 1
பூலோக 1
பூலோகத்தார் 1
பூவில் 2
பூவிலும் 1
பூவினில் 1
பூவினிலே 1
பூவும் 1
பூவை 3
பூவைதனை 1
பூழ்திசெய்திடடா 1
பூழிப்படுத்தியதாம் 1
பூனை 2
பூனைகள் 1

பூ (4)

மலர் மணி பூ திகழ் மரன் பல செறிந்தனை –தேசீய:18 2/2
பூ மணி தாளினையே கண்ணில் ஒற்றி புண்ணியம் எய்திடுவோம் – தோத்திர:65 4/2
கானத்து பொய்கையிலே தனி கமலம் என் பூ மிசை வீற்றிருப்பாள் – பாஞ்சாலி:5 295/3
பூ நிறை தருக்களிலும் மிக பொலிவுடை சோலையிலும் – பிற்சேர்க்கை:14 12/1
மேல்

பூக்கள் (1)

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் எங்கும் நீள கிடக்கும் இலை கடல்கள் மதி – கண்ணன்:12 2/1
மேல்

பூங்குரல் (1)

புட்களும் இனிய பூங்குரல் உடையன – வசனகவிதை:6 1/15
மேல்

பூச்சி (2)

பறக்கின்ற பூச்சி கொல்லுகின்ற புலி ஊர்கின்ற புழு – வசனகவிதை:4 15/9
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
மேல்

பூச்சிகள் (4)

விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள் – தோத்திர:1 32/4
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும் இதனிடை – சுயசரிதை:1 3/2
கலக மானிட பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும் இதற்கு நான் – சுயசரிதை:1 47/2
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும் தீமைகள் கொன்றிடுவான் – கண்ணன்:1 7/4
மேல்

பூச்சிதனை (1)

வேண்டுமென விளக்கில் விழும் சிறு பூச்சிதனை யாவர் விலக்க வல்லார் – பிற்சேர்க்கை:7 4/1
மேல்

பூச்சூட்டினேன் (1)

காளிக்கு பூச்சூட்டினேன் அதை – வசனகவிதை:3 6/13
மேல்

பூச்சொரிந்தார் (1)

தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம் ஜெய ஜெய பாரதசக்தி என்றே – பாஞ்சாலி:5 302/1
மேல்

பூசனை (2)

சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை அன்றாம் – தோத்திர:62 5/4
அன்னவன் தவ பூசனை தீர்ந்த பின் அருச்சனைப்படு தேமலர் கொண்டு யான் – சுயசரிதை:1 20/3
மேல்

பூசனைகள் (1)

பண்ணும் பூசனைகள் எல்லாம் வெறும் பாலைவனத்தில் இட்ட நீரோ உனக்கு – தோத்திர:32 1/3
மேல்

பூசி (2)

சாம்பரை பூசி மலை மிசை வாழும் சங்கரன் அன்பு தழலே சக்தி – தோத்திர:21 2/4
மேவி இரண்டும் கலந்து குழல் மீதினில் பூசி நறுநெய் குளித்தே – பாஞ்சாலி:5 307/3
மேல்

பூஜித்தான் (1)

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறி கோ கவிஞன் காளிதாசனும் பூஜித்தான்
மங்கைதனை காட்டினிலும் உடன்கொண்டு ஏகி மற்றவட்கா மதிமயங்கி பொன்மான் பின்னே – சுயசரிதை:2 51/1,2
மேல்

பூசு (1)

தந்திடும் நல் குங்குமத்தை பூசு – தோத்திர:26 4/4
மேல்

பூசை (2)

கோயில் பூசை செய்வோர் சிலையை கொண்டு விற்றல் போலும் – பாஞ்சாலி:3 219/1
பூசை புரிவோமடா உயிர் மாமனே பொங்கல் உனக்கு இடுவோம் – பாஞ்சாலி:4 250/2
மேல்

பூஜை (1)

சட்டம் மறந்தோர்க்கு பூஜை குறைவில்லை சர்க்காரிடம் சொல்லிப்பார்த்தும் பயன் இல்லை –தேசீய:36 3/2
மேல்

பூசைக்கு (1)

மதுர தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்கு உரியன பேசீர் – தோத்திர:62 10/3
மேல்

பூசைகள் (1)

சாத்திரங்கள் கிரியைகள் பூசைகள் சகுன மந்திரம் தாலி மணி எலாம் – சுயசரிதை:1 38/1
மேல்

பூசையும் (1)

பொய்த்த இந்திரசாலம் நிகர் பூசையும் கிரியையும் புலை நடையும் – பாஞ்சாலி:1 9/3
மேல்

பூட்டிவைப்போம் (1)

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் – பல்வகை:6 2/2
மேல்

பூட்டினவாய் (1)

மாடுகள் பூட்டினவாய் பல வகைப்படு தானியம் சுமந்தனவாய் – பாஞ்சாலி:1 35/2
மேல்

பூட்டுதல் (1)

ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

பூட்டுவீர் (1)

தெரியும் ஒளி விழியை நாட்டுவீர் நல்ல தீர பெரும் தொழிலில் பூட்டுவீர் – தனி:11 6/2
மேல்

பூட்டை (1)

பூட்டை திறப்பது கையாலே நல்ல மனம் திறப்பது மதியாலே –வேதாந்த:16 1/1
மேல்

பூண் (5)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர் மணி பூண்
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம் இவள் பார்வைக்கு நேர் பெரும் தீ – தோத்திர:18 1/1,2
பூண் இலகு திண் கதையும் கொண்டு நாங்கள் போர்செய்த காலம் எல்லாம் பண்டு – பல்வகை:9 2/2
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/3
சொன்னம் பூண் மணி முத்து இவை கண்டும் தோற்றம் கண்டும் மதிப்பினை கண்டும் – பாஞ்சாலி:1 41/2
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
மேல்

பூண்கள் (2)

பொன்னும் நல்ல மணியும் சுடர்செய் பூண்கள் ஏந்தி வந்தாய் – தோத்திர:57 4/1
கண்ணை பறிக்கும் அழகுடையார் இளமங்கையர் பல காமரு பொன் மணி பூண்கள் அணிந்தவர்தம்மையே – பாஞ்சாலி:1 44/1
மேல்

பூண்ட (1)

பூண்ட பெருமை கெடாதவாறு எண்ணி பொங்குகின்றான் நலம் வேட்கின்றான் மைந்தன் – பாஞ்சாலி:1 68/3
மேல்

பூண்டது (1)

பொன் உயர் நாட்டை ஒற்றுமையுடைத்தாய் சுதந்திரம் பூண்டது ஆகி –தேசீய:50 10/3
மேல்

பூண்டதே (1)

என் இயன்று மற்று எங்ஙனம் வாய்ந்ததோ என்னிடத்து அவள் இங்கிதம் பூண்டதே – சுயசரிதை:1 14/4
மேல்

பூண்டவர் (1)

மெய் தவர் பலர் உண்டாம் வெறும் வேடங்கள் பூண்டவர் பலரும் உண்டாம் – பாஞ்சாலி:1 9/1
மேல்

பூண்டனை (1)

பெருகும் இன்பம் உடையை குறுநகை பெற்று ஒளிர்ந்தனை பல் பணி பூண்டனை
இரு நிலத்தின் வந்து எம் உயிர் தாங்குவை எங்கள் தாய் நின் பாதங்கள் இறைஞ்சுவாம் –தேசீய:19 6/3,4
மேல்

பூண்டிருப்பார் (1)

ஆயிரங்கள் ஆவார் செம்பொன் அணிகள் பூண்டிருப்பார்
தூ இழை பொனாடை சுற்றும் தொண்டர்தம்மை வைத்தான் – பாஞ்சாலி:2 191/3,4
மேல்

பூண்டு (7)

போருக்கு கோலம் பூண்டு புகுந்தவன் செருக்கு காட்டை –தேசீய:51 7/3
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம் கூட்டி வைத்து பல நலம் துய்த்தனை – தோத்திர:34 5/3
அந்த மரங்களை சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் –வேதாந்த:19 1/2
பாரான உடம்பினிலே மயிர்களை போல் பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே – சுயசரிதை:2 61/1
பூண் அணிந்து ஆயுதங்கள் பல பூண்டு பொற்சபையிடை போந்தனரால் – பாஞ்சாலி:2 162/3
ஸந்தோஷத்தை பூண்டு
தைர்யா ஹுக்கும் ஹுக்கும் – வசனகவிதை:6 3/8,9
செந்தண்மை பூண்டு ஒழுகும் திறத்தானே அறவோர்தம் சிறப்பு வாய்ந்த – பிற்சேர்க்கை:10 1/1
மேல்

பூண்டேன் (1)

அகத்தினிலே அவன் பாதமலரை பூண்டேன் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு – சுயசரிதை:2 43/4
மேல்

பூண்போம் (1)

பூண்போம் அமர பொறி – தோத்திர:66 1/4
மேல்

பூணிட்ட (1)

பூணிட்ட திருமணி தாம் பல புதுப்புது வகைகளில் பொலிவனவும் – பாஞ்சாலி:1 23/3
மேல்

பூணு-மின் (1)

சாதல் நேரினும் சத்தியம் பூணு-மின்
தீது அகற்று-மின் என்று திசை எலாம் – தோத்திர:45 1/2,3
மேல்

பூணும் (6)

சத்தியமும் நல் அருளும் பூணும் – தோத்திர:24 2/5
சக்தி விரதத்தை என்றும் பூணும் மதி – தோத்திர:24 40/3
பூணும் மைந்தர் எல்லாம் கண்ணன் பொறிகள் ஆவர் அன்றோ – தோத்திர:57 3/4
போந்த நிலைகள் பலவும் பராசக்தி பூணும் நிலையாமே உபசாந்த –வேதாந்த:10 6/1
பூணும் நல் அறத்தோடு இங்கு பெண்ணுரு போந்து நிற்பது தாய் சிவசக்தியாம் – பல்வகை:4 4/2
பூணும் வடம் நீ எனக்கு புது வயிரம் நான் உனக்கு – கண்ணன்:21 2/2
மேல்

பூணுவீர் (1)

போர்க்கோலம் பூணுவீர் வகுப்பீர் அணிகளை – பிற்சேர்க்கை:27 1/9
மேல்

பூணூலாம் (1)

பிள்ளைக்கு பூணூலாம் என்பான் நம்மை பிய்த்து பணம் கொடு என தின்பான் – பல்வகை:9 7/1
மேல்

பூணை (1)

ஆள் விற்று பொன் வாங்கியே செய்த பூணை ஓர் ஆந்தைக்கு பூட்டுதல் போல் – பாஞ்சாலி:4 245/3
மேல்

பூத்த (2)

பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் – சுயசரிதை:1 10/4
அரை பூத்த செந்தாமரை – பிற்சேர்க்கை:12 7/4
மேல்

பூத்தனன் (1)

வன்பு மொழி சொல கேட்டனன் அற மன்னவன் புன்னகை பூத்தனன் அட – பாஞ்சாலி:1 137/2
மேல்

பூத்தான் (2)

செம்மலர் வதனத்தில் சிறுநகை பூத்தான் – தோத்திர:68 22/3
சுற்றுமுற்றும் பார்த்து பின் முறுவல் பூத்தான் தூய திருக்கமல பத துணையை பார்த்தேன் – சுயசரிதை:2 26/2
மேல்

பூத்திடும் (1)

பொன் நிற பாஞ்சாலி மகிழ் பூத்திடும் சந்தனம் அகில் வகைகள் – பாஞ்சாலி:1 29/4
மேல்

பூத்து (4)

கடை சிறியேன் உளம் பூத்து காய்த்ததொரு காய்தான் –தேசீய:33 1/189
போற்றிய போதினிலே இளம் புன்னகை பூத்து மறைந்துவிட்டாள் அம்மா – தோத்திர:64 3/4
தினத்தினிலே புதிதாக பூத்து நிற்கும் செய்ய மணி தாமரை நேர் முகத்தாள் காதல் – சுயசரிதை:2 1/3
விதுரன் வரும் செய்தி தாம் செவியுற்றே வீறுடை ஐவர் உளம் மகிழ் பூத்து
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டுசென்றே – பாஞ்சாலி:1 119/1,2
மேல்

பூத (1)

கண்ணுக்கு தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூத தூள்களே காற்றடிக்கும் போது நம் மீது வந்து மோதுகின்றன – வசனகவிதை:4 12/6
மேல்

பூதங்கள் (4)

பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியை போற்றுகின்றோம் – தோத்திர:22 2/1
போரினில் யானை விழ கண்ட பல பூதங்கள் நாய் நரி காகங்கள் புலை – பாஞ்சாலி:3 237/1
சாமி தருமன் புவிக்கே என்று சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும் – பாஞ்சாலி:5 308/3
பூதங்கள் ஒத்து புதுமைதரல் விந்தை எனில் – குயில்:7 1/97
மேல்

பூதங்களிலும் (1)

ஸர்வ பூதங்களிலும் இருக்கிறான் – வசனகவிதை:6 2/9
மேல்

பூதங்களே (1)

புலவர்களே அறிவுப்பொருள்களே உயிர்களே பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர் – வசனகவிதை:2 11/1
மேல்

பூதத்து (1)

ஐம் பெரும் பூதத்து அகிலமே சமைத்த –தேசீய:42 1/135
மேல்

பூதம் (6)

பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய் – தோத்திர:30 1/3
வெடிபடும் அண்டத்து இடி பல தாளம்போட வெறும் வெளியில் இரத்த களியொடு பூதம் பாட பாட்டின் – தோத்திர:35 1/1
ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக பின்னர் அதுவும் சக்தி கதியில் மூழ்கிப்போக அங்கே – தோத்திர:35 2/1
வீட்டிலே பெண்டாட்டி மேல் பூதம் வந்தது என்பார் – கண்ணன்:4 1/5
கொல்ல பூதம் அனுப்பிடும் மாமனே கோல் உயர்த்து உலகு ஆண்டு களித்திட – கண்ணன்:5 4/1
எத்தனை கரிய பெரும்பெரும் பூதம்
நீல பொய்கையின் மிதந்திடும் தங்க – பாஞ்சாலி:1 152/11,12
மேல்

பூதமும் (1)

ஆகாசம் தீ கால் நீர் மண் அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய் – தோத்திர:43 1/1
மேல்

பூதல (1)

பொங்கி எழுந்து சுயோதனன் அங்கு பூதல மன்னர்க்கு சொல்லுவான் ஒளி – பாஞ்சாலி:3 239/1
மேல்

பூதலத்தில் (1)

புல்லினில் வயிர படை காணுங்கால் பூதலத்தில் பராசக்தி தோன்றுமே – தோத்திர:19 5/4
மேல்

பூதலத்தினை (1)

பூதலத்தினை ஆள்வதில் இன்பம் பொய்மை அல்ல இவ் இன்பங்கள் எல்லாம் – தனி:14 7/3
மேல்

பூதலத்து (1)

கன்று பூதலத்து உள் உறை வெம்மை காய்ந்து எழுந்து வெளிப்படல் போல – பாஞ்சாலி:1 38/4
மேல்

பூதலத்தே (1)

நாம் இ பூதலத்தே குறைவு எய்த நாளும் பாண்டவர் ஏறுகின்றாரால் – பாஞ்சாலி:1 103/2
மேல்

பூதலம் (2)

பூதலம் முற்றிடும் வரையும் அற போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும் –தேசீய:14 8/1
பொய் கருதாமல் அதன் வழி நிற்பவர் பூதலம் அஞ்சுவரோ –வேதாந்த:24 4/2
மேல்

பூதலமே (1)

போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் ஹே பூதலமே அந்த போதினில் என்றான் – பாஞ்சாலி:5 306/4
மேல்

பூதேவி (1)

பூதேவி தப பல ராதே ராதே – தோத்திர:60 1/4
மேல்

பூந்தோட்டங்களும் (1)

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்துவைப்போம் – வசனகவிதை:4 8/21
மேல்

பூப்பள் (1)

பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
மேல்

பூபா (1)

வாகு ஆர் தோள் வீரா தீரா மன்மத ரூபா வானவர் பூபா
பாகு ஆர் மொழி சீதையின் மென் தோள் பழகிய மார்பா பதமலர் சார்பா – தோத்திர:43 2/1,2
மேல்

பூபாலரே (1)

பூபாலரே என்று அ புண்ணியனும் கூறினான் – பாஞ்சாலி:4 252/78
மேல்

பூபேந்தரனுக்கு (1)

ஐயன் பூபேந்தரனுக்கு அடிமைக்காரன் –தேசீய:37 3/2
மேல்

பூபேந்திர (1)

பூபேந்திர பெயரோன் பாரதநாட்டிற்கு அடிமைபூண்டு வாழ்வோன் –தேசீய:44 1/4
மேல்

பூம் (9)

அங்கு அவர் மாய அவர் உடல் பூம் துகள் ஆர்ந்ததும் இ நாடே இதை –தேசீய:3 3/4
குளிர் பூம் தென்றலும் கொழும் பொழில் பசுமையும் –தேசீய:19 1/2
கண் இரண்டும் இமையாமல் செம் நிறத்து மெல் இதழ் பூம் கமல தெய்வ – தோத்திர:44 1/1
கற்பகமாம் பூம் தருவே ராதே ராதே – தோத்திர:60 4/2
இந்த புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறு மலர் பூம் செடி கூட்டமும் –வேதாந்த:19 1/1
பூம் பொழில் குயில்களின் இன் குரல் போன்ற – தனி:13 1/8
கள்ளை கடல் அமுதை நிகர் கண்டதொர் பூம் தமிழ் கவி சொலவே – பாஞ்சாலி:1 3/3
மாலை போது ஆதலுமே மன்னன் சேனை வழியிடை ஓர் பூம் பொழிலின் அமர்ந்த காலை – பாஞ்சாலி:1 147/1
சேம மணி பூம் தட நாட்டில் சிறிய புழுக்கள் தோன்றி வெறும் – பிற்சேர்க்கை:4 2/2
மேல்

பூமகட்கு (2)

பூமகட்கு மனம் துடித்தே இவள் புன்மை போக்குவல் என்ற விரதமே –தேசீய:46 1/4
மை வரை தோளன் பெரும் புகழாளன் மா மகள் பூமகட்கு ஓர் மணவாளன் – பாஞ்சாலி:1 122/2
மேல்

பூமடந்தை (1)

போற்றும் இராமன் என முன்பு உதித்தனை அங்கு பொன் மிதிலைக்கு அரசன் பூமடந்தை நான் – கண்ணன்:19 4/3
மேல்

பூமண்டலத்தில் (1)

பூமண்டலத்தில் அன்பும் பொறையும் – தோத்திர:1 32/9
மேல்

பூமண்டலத்தே (1)

பொய்யும் மெய்யும் சிவனடா பூமண்டலத்தே பயம் இல்லை – பிற்சேர்க்கை:21 2/2
மேல்

பூமழை (1)

கோலிய பூமழை பெய்திட தோரணம் கொஞ்ச நகர் எழில் கூடியது அன்றே – பாஞ்சாலி:2 157/4
மேல்

பூமி (14)

பூமி பந்தின் கீழ்ப்புறத்து உள்ள –தேசீய:24 1/33
பாரத பூமி பழம் பெரும் பூமி –தேசீய:32 1/24
பாரத பூமி பழம் பெரும் பூமி
நீர் அதன் புதல்வர் இ நினைவு அகற்றாதீர் –தேசீய:32 1/24,25
ஊனம் ஒன்று அறியா ஞான மெய் பூமி
வானவர் விழையும் மாட்சியார் தேயம் –தேசீய:32 1/38,39
பொறுத்தார் அன்றே பூமி ஆள்வார் – தோத்திர:1 28/2
எங்கள் ஆரிய பூமி எனும் பயிர் – தோத்திர:45 3/1
பூமி இழந்திடேல் – பல்வகை:1 2/70
பொய் அறியா ஞானகுரு சிதம்பரேசன் பூமி விநாயகன் குள்ளச்சாமி அங்கே – சுயசரிதை:2 29/4
நீதி முறை வழுவாமலே எந்தநேரமும் பூமி தொழில் செய்து கலை – கண்ணன்:7 10/2
பூமி தெய்வம் விழுங்கிடும் கண்டாய் புரவலர் பகை காய்கிலர்தம்மை – பாஞ்சாலி:1 103/1
பூமி இழந்து பொருள் இழந்து தம்பியரை – பாஞ்சாலி:4 252/92
பூமி அரசர் எல்லாம் கண்டே போற்ற விளங்குகிறான் – பாஞ்சாலி:5 275/1
பூமி சந்திரன் செவ்வாய் புதன் சனி வெள்ளி வியாழன் – வசனகவிதை:2 10/2
நித்தியமாம் இவ் உலகில் கடல் நீரில் சிறு துளி போலும் இ பூமி – பிற்சேர்க்கை:8 21/2
மேல்

பூமிக்கு (1)

பூமிக்கு எனை அனுப்பினான் அந்த புது மண்டலத்தில் என் தம்பிகள் உண்டு – கண்ணன்:3 1/1
மேல்

பூமித்தாய் (2)

பூமித்தாய் உயிரோடு இருக்கிறாள் – வசனகவிதை:4 5/5
அவள் தீராத உயிருடையவள் பூமித்தாய்
எனவே அவள் திருமேனியில் உள்ள ஒவ்வொன்றும் உயிர்கொண்டதேயாம் – வசனகவிதை:4 13/13,14
மேல்

பூமிதனில் (3)

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை –தேசீய:22 2/2
சக்தி அருள் பூமிதனில் காட்டு – தோத்திர:26 6/2
பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிக பீழை இருக்குதடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 7/1
மேல்

பூமிப்பந்தில் (1)

விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல்நீர் அந்த சுழற்சியிலே தலைகீழாக கவிழ்ந்து – வசனகவிதை:5 1/2
மேல்

பூமிப்பந்து (1)

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது – வசனகவிதை:4 13/12
மேல்

பூமிப்பெண் (1)

பூமிப்பெண் விடாய் தீர்கிறாள் குளிர்ச்சி பெறுகின்றாள் – வசனகவிதை:2 11/14
மேல்

பூமியதிர்ச்சி (1)

பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று – பாஞ்சாலி:5 308/2
மேல்

பூமியாகிய (1)

பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே – வசனகவிதை:2 12/4
மேல்

பூமியில் (11)

ஆரிய பூமியில் நாரியரும் நர –தேசீய:2 2/1
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் பரிபூரணனுக்கே –தேசீய:31 5/3
பூமியில் இல்லாத புதுமையை கண்டோம் –தேசீய:36 0/2
இ நான்கே இ பூமியில் எவர்க்கும் – தோத்திர:1 8/10
நாடி இ சிறு பூமியில் காணும் நின் நலங்கள் ஏத்திட நல் அருள்செய்கவே – தோத்திர:34 2/4
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நல் நெஞ்சே பூமியில் கண்டோமே –வேதாந்த:23 1/1
தேவர்கள் வாழ்ந்த சீர் வளர் பூமியில்
மேவிய அரக்கர் விளங்குதல் போல – தனி:20 1/9,10
அன்னிய மன்னர் மக்கள் பூமியில் உண்டாம் என்னும் அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம் – கண்ணன்:13 2/2
அவளுடைய மூச்சே பூமியில் உள்ள காற்று – வசனகவிதை:4 5/6
இந்த பூமியில் உள்ள எண்ணற்ற உயிர்கள் எண்ணற்ற உலகங்களில் உள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் – வசனகவிதை:4 15/10
மேல்

பூமியிலே (6)

வறிஞராய் பூமியிலே வாழ்வீர் குறி கண்டு – தோத்திர:66 3/2
பூமியிலே கண்டம் ஐந்து மதங்கள் கோடி புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் – சுயசரிதை:2 65/1
பூமியிலே வழங்கிவரும் மதத்துக்கு எல்லாம் பொருளினை நாம் இங்கு எடுத்து புகல கேளாய் – சுயசரிதை:2 66/1
பூமியிலே நீ கடவுள் இல்லை என்று புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை – சுயசரிதை:2 66/3
பூமியிலே மாடு போல் பொற்பு உடைய சாதி உண்டோ – குயில்:7 1/18
பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினை கண்டு – குயில்:9 1/164
மேல்

பூமியின் (1)

இன்பமும் துன்பமும் பூமியின் மிசை யார்க்கும் வருவது கண்டனம் எனில் – பாஞ்சாலி:4 258/1
மேல்

பூமியின்கண்ணே (1)

பொய்ந்நூல் பெருகின பூமியின்கண்ணே
வேதம் கெட்டு வெறுங்கதை மலிந்தது – வசனகவிதை:7 0/58,59
மேல்

பூமியினும் (1)

பூமியினும் பொறை மிக்கு உடையாள் பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் எனில் –தேசீய:9 6/1
மேல்

பூமியினை (2)

பொருத்தமுறும் தணிகையினால் புலமை சேரும் பொறுத்தவரே பூமியினை ஆள்வார் என்னும் – சுயசரிதை:2 11/3
ஆள வந்தான் பூமியினை அவனி வேந்தர் அனைவருக்கும் மேலானோன் அன்பு வேந்தன் – சுயசரிதை:2 57/2
மேல்

பூமியும் (1)

மாதர் பூமியும் நின் மிசை காதல் மண்டினாள் இதில் ஐயம் ஒன்று இல்லை – தோத்திர:70 3/2
மேல்

பூமியை (1)

பூமியை காக்கும் தொழிலிலே எந்தப்போதும் செலுத்திடும் சிந்தையும் – கண்ணன்:7 4/4
மேல்

பூரண (1)

பூரண ஞானம் பொலிந்த நல் நாடு புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு –தேசீய:6 2/3
மேல்

பூரணமா (1)

பூரணமா ஞான புகழ் விளக்கை நாட்டுவித்த –தேசீய:13 1/3
மேல்

பூரித்து (1)

பொங்கும் உவகையின் மார்புற கட்டி பூரித்து விம்மி தழுவினான் – பாஞ்சாலி:1 57/4
மேல்

பூரிப்பு (1)

பூரிப்பு கொண்டாய் புளகம் நீ எய்திவிட்டாய் – குயில்:9 1/108
மேல்

பூரியர் (1)

பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை –தேசீய:32 1/169
மேல்

பூரியர்கள் (1)

பூரியர்கள் வாழும் புலைத்தேசம் ஆயினதே – பிற்சேர்க்கை:5 3/2
மேல்

பூலோக (1)

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி – தோத்திர:16 0/1
மேல்

பூலோகத்தார் (1)

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண் முன்னே – தோத்திர:1 39/3
மேல்

பூவில் (2)

வெள்ளை தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் – தோத்திர:62 1/1
பூவில் உதிர்வதும் உண்டு பிஞ்சை பூச்சி அரித்து கெடுவதும் உண்டு – பிற்சேர்க்கை:8 2/1
மேல்

பூவிலும் (1)

பொன்னிலும் மணிகளிலும் நறும் பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் – தோத்திர:59 5/1
மேல்

பூவினில் (1)

தாமரை பூவினில் வந்தான் மறை சாற்றிய தேவன் திருக்கழல் ஆணை – பாஞ்சாலி:5 303/2
மேல்

பூவினிலே (1)

தாமரை பூவினிலே சுருதியை தனி இருந்து உரைப்பாள் – தோத்திர:65 4/1
மேல்

பூவும் (1)

தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையம் முழுதும் இல்லை தோழி – கண்ணன்:14 5/1,2
மேல்

பூவை (3)

பொன்னை என் உயிர்தன்னை அணுகலும் பூவை புன்னகை நல் மலர் பூப்பள் காண் – சுயசரிதை:1 20/4
பூண் இயல் மார்பகத்தாள் ஐவர் பூவை திரௌபதி புகழ் கதையை – பாஞ்சாலி:1 6/3
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி – குயில்:6 1/40
மேல்

பூவைதனை (1)

பொய்த்தொழிலோன் மைதிலியாம் பூவைதனை புன் காவல் – பிற்சேர்க்கை:20 2/1
மேல்

பூழ்திசெய்திடடா (1)

புல்லியர் கூட்டத்தை பூழ்திசெய்திடடா – தோத்திர:68 23/3
மேல்

பூழிப்படுத்தியதாம் (1)

பூமியதிர்ச்சி உண்டாச்சு விண்ணை பூழிப்படுத்தியதாம் சுழற்காற்று – பாஞ்சாலி:5 308/2
மேல்

பூனை (2)

வெள்ளை நிறத்து ஒரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் – பல்வகை:3 14/1
பிள்ளைகள் பெற்று அந்த பூனை அவை பேருக்கு ஒரு நிறம் ஆகும் – பல்வகை:3 14/2
மேல்

பூனைகள் (1)

எப்போதும் கைகட்டுவார் இவர் யாரிடத்தும் பூனைகள் போல் ஏங்கி நடப்பார் –தேசீய:15 3/4
மேல்